Friday, June 20, 2008

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி. (பாகம் - 2)

·

"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பேட்டியின் முதல் பாகம் இங்கே. பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.


ந்தியாவின் மற்ற பகுதிகளை விட இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் முன்னேற்றம் விரைவாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இல்லை? அல்லது இருக்கிறதா?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிச்சயமாக அதிகம். இவ்விஷயத்தில் தமிழகத்தோடு ஒப்பிடும் அளவுக்கு மகாராஷ்டிரா மட்டுமே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கிறது.

ம்யூநிஷ்ட்டுகளும் பகுத்தறிவாளர்களும் இணையும் அந்த ஆதிக்க எதிர்ப்பு என்ற புள்ளியை பற்றி விளக்குங்கள்.

ந்தப் புள்ளியில் சரியாக இணைகிறார்கள் என்ற தெளிவு எனக்கில்லை. நானெல்லாம் கூட பிறக்கும் போதே அமெரிக்கா ஒழிக என்று சொல்லிக் கொண்டு தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆதிக்க எதிர்ப்பு தான் கம்யூனிஸம் என்றால் திராவிட இயக்கத்தார் அனைவருமே கம்யூனிஸ்ட்டுகள் தான்

ருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் பற்றி உங்கள் அறிதலை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ந்த கேள்வியை வாசிக்கும்போது எனக்கு வாசிப்பு பத்தாது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்தாவது இந்த கேள்விக்கு என்ன பொருள் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

ப்போதெல்லாம் சென்னைவாசிகள் மெட்ராஸ் பாசையில் பேசுவதில்லை. எல்லோரும் வடிவேல் பாசையில் பிதற்றுகிறார்கள். தங்கள் சுய அடையாளத்தை இழக்கும் இப்போக்கு ஆபத்தானதா?

ல்லோரும் நினைக்கும் மெட்ராஸ் பாஷை என்பதே மிகைப்படுத்தப்பட்டு சினிமாவிலும், ஊடகங்களிலும் சொல்லப்படும் ஒரு பாஷை. அதுமாதிரி பாஷை பேசுபவர்களை மெட்ராஸில் காண்பது அரிதிலும் அரிது. என்ன மெட்ராஸ்காரன் என்ன பேசினாலும் முன்னாடி 'ஓத்தா' போட்டு பேசுவான். அது தான் ஒரிஜினல் மெட்ராஸ் பாஷை.

சென்னை மற்றும் பெங்களூரை அரசியல் தாண்டி ஒப்பிடுங்களேன்!

பெங்களூர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே நன்கு முன்னேறிய நகரம் என்பதாக சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக அறிய முடிகிறது. சென்னை கடந்த பண்ணிரண்டு ஆண்டுகளாக தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. இரு நகரங்களுக்கும் பொதுவான அம்சம் போக்குவரத்து நெரிசல் என்பதாக அறிந்திருக்கிறேன். பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக தெரிகிறது. சென்னை இந்த விஷயத்தில் கொஞ்சம் சுமார் தான்.

முன்னேற்றம் என்பது எது? IT பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை கிடைப்பதா? அல்லது 12 -ம் வகுப்பு படித்தவர்க்கும் வேலை கிடைப்பதா? பெங்களூர் பற்றி சுஜாதா அப்படி என்னதான் சொன்னார்?

முன்னேற்றம் என்பது எல்லாத்தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வதாக தான் பொதுக்கருத்து இருக்கிறது. பெங்களூரில் மக்களின் வாழ்க்கைத்தரம் இப்போது சென்னை மக்களுக்கு இருக்கும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிவிட்டதாக சுஜாதா சொல்லியிருந்தார்.

சென்னை பைலட் தியேட்டரில் உலக சினிமா ஏதும் பார்த்ததுண்டா?

டைசியாக 'இண்டியானா ஜோன்ஸும், கபால முத்திரையும்' பார்த்தேன். அது உலக சினிமாவா என்று தெரியாது. உலக சினிமா என்பதற்கு எது அளவுகோல்?

டிகை ஷகீலா உங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் வாசலை இடித்து கட்டுவது குறித்து பரிசீலிப்பீர்களா?

கீலாவுக்காக என் வீட்டுக்கு எதிரில் புதியதாக ஜோதிமஹால் கட்டுவேன். கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒரு இடைசெறுகல் : இப்போது ஜோதி தியேட்டரில் 'மிஸ் ஷகிலா' என்ற உலக சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது

ங்கள் முழுப்பெயர், பணி, ஊர், குடும்பத்தினர், எதிர் வீட்டு பிகர் பற்றி வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

ன்னுடைய முழுப்பெயர் 'சிறுணை இல.மோகன கிருஷ்ணகுமார்', என்னுடைய பணி விளம்பர ஆலோசகர், ஊர் மடிப்பாக்கம், உலகமே என் குடும்பம் தான், கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெண்டு ஃபிகர் குடிவந்திருக்கிறது. ஒரு ஃபிகர் திராவிட ஃபிகர் லுக்கிலும், அவளுடைய தங்கை ஆரிய ஃபிகர் லுக்கிலும் இருக்கிறாள்கள். இன்னும் பெயர் இத்யாதி விவரங்கள் விசாரிக்கவில்லை.

ங்கள் படிப்பு மற்றும் தனித்திறமைகள்?


ரசியல் இளங்கலைப் பட்டம், இதைப் படிப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது :-) ஃபிகர் மடிப்பதும் தனித்திறமையில் சேருமென்றால் சுமாரான பர்சனாலிட்டியை வைத்தே நான் ஐந்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க ஃபிகர்களை மடக்கியதை என் திறமை மூலமாக சாதித்ததாக சொல்லலாம்.

திவுலகிலும் பொதுவிலும் உங்கள் நெருங்கிய நண்பர் இருவர், தூரத்து எதிரிகள் இருவர் பற்றி குறிப்பிடுங்கள்.

திர்கருத்து கொண்டவர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களே. உச்சநீதி, உயர்நீதி என்று நீதியை தரம் பிரித்து வைத்திருப்பது போல நெருங்கிய, தூரத்து என்று நண்பர்களை தரம் பிரிக்க விரும்பவில்லை

ச்சும்மா ட்டமாஷ் வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?


நாமெல்லாம் இலக்கியம் படைக்க இங்கே வரவில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த இன்னொரு வலைப்பூ.

புதிதாக பதிவெழுத வருவோர்க்கு உங்கள் அறிவுரை என்ன?.


திவெழுதுவதை விட அதிகமாக படிக்கவும். அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், சாரு நிவேதிதா, ஜி.கவுதம், பா.ராகவன், பத்ரி, டாக்டர் ப்ரூனோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அய்யனார் போன்றவர்களின் வலைப்பூக்களை தவறாது வாசிக்கவும். புதிய வார்த்தைகள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வாக்கியங்களை எளிமையாக அமைக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் எதை வாசித்தாலும் உங்களுக்கென்று இருக்கும் இயல்பினை இழந்துவிட வேண்டாம். உங்கள் இயல்பு தான் உங்கள் முகவரி


ராபிட் ரவுண்ட்

ழகிரி? ஸ்டாலின்?

ரசியலுக்கு முன்னவர். ஆட்சிக்கு பின்னவர்.


கிலா? நமீதா?

பீப்பாய், அண்டா!!


ண்மைத்தமிழன்? டோண்டு?

பிளேடு பக்கிரி, இண்டர்நேஷனல் மாஃபியா!


சுண்டை கஞ்சி? பதிவர் கூட்டம்?

ப்பு, பிளேடு!!


ரங்கிமலை ஜோதி? ராயப்பேட்டை பைலட்?

கீலா, ஷரன் ஸ்டோன்!



தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

17 comments:

சரவணகுமரன் said...
June 20, 2008 at 2:50 AM  

கேள்விகளும் சூப்பர்... பதில்களும் சூப்பர்...

இதுவல்லவோ கேள்வி-பதில்.

ரவி said...
June 20, 2008 at 2:57 AM  

எக்ஸலண்ட் அகெய்ண் !!!!!!!

முகவை மைந்தன் said...
June 20, 2008 at 3:00 AM  

//மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கிறது.//

வன்மையாக மறுக்கிறேன். உபியில் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் அடையாளத்தை உரக்கச் சொல்லி, முற்பட்டோரையும் இசைத்து தனிப் பெரும்பான்மையோடு முதல்வராக முடிகிறது.

இங்கே இன்னும் ஊறுகாயாகத் தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

லக்கி உங்கள் இடுகைகளை விட, இந்த கேள்வி பதில் அட்டகாசம். இன்னும் எத்தனைப் பேர் இப்படி கிளம்பப் போறாங்களோ?

மோகன் கந்தசாமி said...
June 20, 2008 at 3:07 AM  

நன்றி நண்பர்களே!
பாராட்டை நான் பெற்றுக்கொள்கிறேன், விமர்சனங்களை லக்கி -க்கு தள்ளி விடுகிறேன். (ஹி ஹி ச்சும்மா ட்டமாஷு -க்கு சொன்னேன்)
லக்கி மீண்டும் தன்னை நிரூபித்து விட்டார்! அதிரடி ஆக்ரோச மன்னன் என்று.

லக்கிலுக் said...
June 20, 2008 at 3:10 AM  

மோகன்!

எந்த காலத்தில் நான் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன், அப்படியே அடிச்சி ஆடிக்கிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான். வந்த பாதையை திரும்பிப் பார்த்தோம்னா நம்மளை தாண்டி பத்து பேரு ஓடிடுவான்...

நல்ல வேளையாக நீங்கள் எடுத்த பேட்டி நன்றாக ரீச் ஆகியிருக்கிறது. உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும் மோகன்!

VIKNESHWARAN ADAKKALAM said...
June 20, 2008 at 3:50 AM  

சூப்பர்..

rapp said...
June 20, 2008 at 4:03 AM  

//வன்மையாக மறுக்கிறேன். உபியில் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் அடையாளத்தை உரக்கச் சொல்லி, முற்பட்டோரையும் இசைத்து தனிப் பெரும்பான்மையோடு முதல்வராக முடிகிறது.இங்கே இன்னும் ஊறுகாயாகத் தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை//
இது பரவலா இருக்கிற தவறான கருத்துன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா அங்க மாயாவதி உயர்சாதியினை சேர்ந்த மக்களுடன் கூட்டு சேர்ந்தே இந்த வெற்றியை பெற்றார். இதை நான் தவறென்று கூறவில்லை. ஏனென்றால் பதவிக்கு வரும் பொருட்டு சிலத் தியாகங்களை செய்தால் தவறில்லை என்பது என் கருத்து(அறுபத்தேழில் அண்ணா ராஜிஜியுடன் அமைத்த கூட்டு கூட ஒரு வகையில் இப்படிப்பட்டதுதான்) வந்த பின் தாழ்த்தப்பட்டோருக்கு துரோகம் இழைக்காமல் இருப்பதுதான் மிக மிக முக்கியம். அவ்வகையில் மாயாவதி பரவாயில்லைதான். அதன் பொருட்டே மந்திரிசபையில் கூட உயர்சாதியினைச் சேர்ந்தவர்களுக்கு கணிசமான அளவில் மந்திரிப் பதவியும் அளித்தார். மேலும் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஒரு பாராட்டத்தக்க புரட்சி அமைதியான வகையில் மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்றால் மக்கள்தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் விஷயம்தான். ஆனால் அதுவே உ.பியில் நிலைமை கட்டுக்குள் இல்லை. அங்குள்ள மலைப்பான மக்கள்தொகையில், (அது எல்லா மக்களுக்கும் பொருந்தும்) எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் சின்ன முன்னேற்றமும் நம் மாநிலத்தில் உள்ள அளவான மக்கள்தொகையால் பெரிதாக நம் கண்ணுக்குத் தோன்றும். தேசிய அளவில் நாம் பார்க்கும்போது அவர்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்குக் காரணம் பொதுவாக வடஇந்தியர்களிடம் நிலவும் மாநில மற்றும் மொழி மற்றும் தென்னிந்தியர்களை தாழ்த்திப் பார்க்கும் மனப்பாங்குதான்.

சென்ஷி said...
June 20, 2008 at 10:00 AM  

சூப்பர் பதில்கள்.. லக்கியா... கொக்கா..

பின்னூட்டத்திற்கு தேவையில்லாத குறிப்பு: எதிர் வீட்டு பிகர் மேட்டரை பற்றிய பதிவை எதிர்பார்க்கின்றேன்.

வால்பையன் said...
June 20, 2008 at 10:54 AM  

//பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக தெரிகிறது. சென்னை இந்த விஷயத்தில் கொஞ்சம் சுமார் தான்.//

வேறு எதுவும் கிடைக்கலையா!
சென்னை அழகான பெண்கள் சார்பாக ஆட்டோ வரும் ஜாக்கிரதை
(இதுக்கு ஆள் பலம் போதாதப்பா)

வால்பையன்

வால்பையன் said...
June 20, 2008 at 10:59 AM  

//கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெண்டு ஃபிகர் குடிவந்திருக்கிறது.//

அநேகமா இனிமே பதிவுகள் இத பத்தி தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்

//நான் ஐந்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க ஃபிகர்களை மடக்கியதை என் திறமை மூலமாக சாதித்ததாக சொல்லலாம்//

இந்த திறமைகளை சொல்லி தருவதற்கு ஏதேனும் உத்தேசம் உண்டா

வால்பையன்

பரிசல்காரன் said...
June 20, 2008 at 12:03 PM  



க்

ல்
கே
ள்
வி

ள்


க்

ல்

தி
ல்

ள்!

பரிசல்காரன் said...
June 20, 2008 at 12:06 PM  

//அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், சாரு நிவேதிதா, ஜி.கவுதம், பா.ராகவன், பத்ரி, டாக்டர் ப்ரூனோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அய்யனார் //

ரொம்பவும் வெக்கமாக இருக்கிறது. நீங்கள் கூறிய பதிவர்களில்.. பைத்தியக்காரன் வலைப்பூ மட்டுமே படித்திருக்கிறேன்.. சாரு நிவேதிதா, எஸ்.ரா - புத்தகங்களால் என் அலமாரியை நிறைத்திருக்ககிறார்கள்..

எல்லோரின் அறிமுகத்துக்கும் நன்றி!

மோகன் கந்தசாமி said...
June 20, 2008 at 1:40 PM  

நன்றி சரவணகுமரன்,
நன்றி செந்தழல்!
நன்றி முகவை மைந்தன்,
நன்றி VIKNESHWARAN
நன்றி rapp
நன்றி வால்பையன்
நன்றி பரிசல்காரன்
நன்றி சென்ஷி
நன்றி லக்கிலுக்
நன்றி மோகன்!..ஓ! சாரி இது என்பேரா, உணர்ச்சிவசப்பட்டுட்டேன்,

Boston Bala said...
June 20, 2008 at 3:51 PM  

நல்ல கேள்விகள்; இயல்பான பதில்கள்... நன்றி

சாலிசம்பர் said...
June 21, 2008 at 12:14 PM  

அட்டகாசமான கேள்விகள், அசத்தலான பதில்கள்.

உ.தமிழன் - பிளேடு பக்கிரி
டோண்டு - இண்டர்நேஷனல் மாபியா
நினைச்சுப் பாக்கவே ஒரே சிரிப்பா இருக்கு.

மோகன் கந்தசாமி said...
June 23, 2008 at 2:47 AM  

நன்றி பாலா!
லிங்க் -கிற்கு ஒரு நன்றி.

மோகன் கந்தசாமி said...
June 23, 2008 at 2:53 AM  

///உ.தமிழன் - பிளேடு பக்கிரி///
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஜாலி ஜம்பர். பின்னூட்ட சுனாமி பற்றி அவர் தம்பி வலைச் சுனாமியின் கருத்து.
////டோண்டு - இண்டர்நேஷனல் மாபியா////
சிரிப்பை அடக்கிவிட்டு நினைத்துப் பார்க்கலாம் என்றால் சிரிப்பு அடங்கவே மாட்டேங்குது எனக்கு.

நன்றி ஜாலி ஜம்பர்



கிடங்கு