Tuesday, June 3, 2008

தசாவதாரம் - திரை விமர்சனம்.

·

தசாவதாரம் அபிசியலாக ரிலீசாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பார்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். நான் யாரிடம், என்ன கொடுத்து வைத்தேன் என்று தெரியாது, ஆனால் எங்கள் டாக்டர் (மேலதிகாரி), இந்த படம் பார்க்க ஏற்பாடு செய்து தந்த அந்த சமூக சேவகருக்கு நிறைய கொடுத்திருக்கிறார். படத்தின் பாக்ஸ் வந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு ரகசிய காட்சிக்கு ஏற்பாடு செய்து, சுமார் இருநூறு பேர்கள் வரை அழைப்பு விடுத்து, முக்கால் படத்தை திரையிட்டு $220,000 பணத்தை தன் டிரஷ்ட்டுக்கு சேர்த்திருக்கிறார். கமலகாசன் இங்குதான் எங்கோ "மர்ம யோகி" படப்பிடிப்பில் இருப்பதால் கமல்ஹாசனின் ஒப்புதல் இதற்கு பெறப்பட்டிருக்க கூடும். சமூக சேவகரும் தங்கள் "டோனர்" களுக்கு மட்டுமே திரையிடுவதாக வாக்களித்திருக்கிறார் என்று அறிகிறேன்.

முதலில் இதற்கு ஏன் தசாவதாரம் என்று பெயர் வைத்தார்கள் என்று விளங்கவில்லை. மொத்தம் எட்டு வேடாங்களில்தான் கமல் வருகிறார். நாங்கள் பார்க்க முடியாமல் போன அந்த 13 நிமிட படத்தில் (டைம் ஸ்டாம்ப் மற்றும் சீக்கிங் எல்லாம் திரையில் வந்தது) புதிதாக இரு வேடங்கள் அறிமுகப்படுத்த பட்டிருக்கும் வாய்ப்பு குறைவு. வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஒருமுறை (கண்டிப்பாக) பார்க்கும் போது குழப்பம் நீங்கும் என நம்புகிறேன். அந்த எட்டு வேடங்கள் பின்வருமாறு.
1. வைணவ பிராமணர். பெயர் நம்பிராஜன் (ரங்கா?..). மல்யுத்தம், வாள் சண்டை இவருக்கு தெரிகிறது. காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு. அசின் நம்பிராஜரின் மனைவி.
2. நாசா -வில் ப்ரோபெசனராக பணிபுரியும் ஆண்த்ரோபோலாஜி மாணவன்(ஸ்ரீனிவாஸ் சாமிநாதன்) தற்காலம்.
3. தனது மற்றும் தன் முறைப்பெண்ணின் (அசின்-காயத்ரி.(அவர் வைத்துக்கொள்கிற பெயர் கலைவாணி)) பாட்டி. தற்காலம்.
4. சுனாமி தாக்கிய பகுதிகளை பார்வையிட ஐ.நா. தூதுவராக வரும் ஒரு அமெரிக்க மாநிலத்தின் முன்னாள் கவர்னர் வில்சன் ஜியோபிரி.
5. சட்டவிரோதமாக ஆட்களை கலை நிகழ்ச்சி ட்ரூப் வாயிலாக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்லும் பஞ்சாபி பாடகர். ஹர்ஷ்விர் சிங்.
6. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் நடத்தும் ரகசிய ஆராய்ச்சிக்கு தனிவோருவராக எதிர்ப்பு தெரிவித்து போராடும் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் மற்றும் லெட்டர் பேட் கட்சி தலைவர். அகல்டீப் சிங். பாடகரின் சகோதரர்.
7. 800 வருட வரலாற்றை தெரிந்து வைத்திருக்கும் சித்தர். (பெயர் இல்லை.)
8. டூரிஸ்ட் கைட். இது கேரக்டர் அல்ல. அந்த இடது சாரி தலைவர் தாம் ஒரு கைட் போல வேடமிட்டு வெள்ளைக்கார ஆய்வாளர்களை வேவு பார்க்கிறார்.

பழங்குடி கறுப்பர் போன்ற ஒரு கேரக்டர் படத்தில் இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்த்திருந்தது. ஆனால் படத்தில் அப்படி ஏதும் இல்லை.
அவ்வையார் வேடம் இல்லை. ஆளவந்தான் போன்ற பயில்வான் வேடமும் இல்லை.

சரி கதைக்கு போவோம். சோழர்களால் கொல்லப்படும் வைனவர்களில் வீர சைவர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு போரே செய்பவர் நம்பிராஜன். வாட்போர் மற்றும் மற்போர் புரிந்து பிறகு சிறை பட்டு, உத்திராட்சம் அணிய மறுத்து, நமச்சிவாய என சொல்ல மறுத்து என பல மறுப்புகளுக்குப் பின் ரங்கராஜன் சிலையுடன் கடலில் வீசப்படுகிறார். பதினொரு நாட்களுக்கு பின் ஏற்படும் ஒரு சுனாமியில் அச்சிலையை கடற்கரை ஓரத்தில் பார்க்கும் மக்கள் மன்னனுக்கு தெரிவிக்க, அச்சிலையை கைபற்றிவர வீரர்களுக்கு உத்தரவிடுகிறான் மன்னன். இப்போது முன்பிருந்த இடத்தில் சிலை இல்லை. அசினும் (நம்பி ராஜரின் மனைவி) ஊரில் இருந்து மாயமாய் மறைகிறார்.

ஆக்சுவலி, கதை தற்காலத்தில் தொடங்குகிறது. கமல் தன் விடுமுறைக்கு சென்னை வந்திருக்கும் போது பேரழிவை தோற்றுவிக்கும் ஒரு சுனாமி வந்து போக, 12 ம் நூற்றாண்டு சுனாமி பற்றி கமல் பாட்டி சொல்கிறார். சுமார் இருபத்தைந்து தலைமுறைகளுக்கு முன் தங்கள் பரம்பரையில் வந்த மூதாதையர் தான் நம்பிராஜர் என்கிறார் கமலின்(மாணவன்) பாட்டி. கமலின் முறைப்பெண் அசின்(காயத்ரி). இருவருக்கும் அவர்தான் பாட்டி. பலமுறை இந்த கதையை கேட்டிருக்கும் கமல் இம்முறை சீரியஸாக எடுத்துக்கொண்டு விடுமுறைக்குப்பின் அமெரிக்கா செல்கிறார். அசின் கம்யூனிஷம் மற்றும் திராவிடம் எல்லாம் பேசுகிறார். சாமி கும்பிடுகிறார். விரதம் இருக்கிறார். அறை குறையாக படித்து விட்டு வரலாறு தெரியாமல், ஒரு வித பிரமையில் இருந்துகொண்டு அசின் பினாத்துவதாக மாமன் கமல் பரிகாசம் செய்கிறார் (கமல் என்ன சொல்ல வருகிறார்?).

பாட்டி கமலின் முதல் மகள் பஞ்சாப் காரரை மணந்து கொண்டவர். அவர் தனது கணவருடன் இரு மகன்களையும்(பிற்காலத்தில் பாடகர், அரசியல்வாதி) விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு இம்மிகிரன்ட்டாக சென்றிருக்கிறார். அங்கு பிறக்கும் கமல் கவர்ணராகிறார். பாட்டி கமலின் ஒரே மகன் மாணவன் கமலின் தந்தை. பாட்டி கமலின் மற்றொரு மகளின் மகள் அசின்(காயத்ரி). பாட்டி கமலின் பிள்ளைகள் யாவரும் படத்தில் வசனம் வாயிலாகவே விளக்கப்படுகிறார்கள்.

அமெரிக்க சென்றதும் தமிழக கடற்கரையை நாம் ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும் என நாசா -வின் ஓசன் சயன்ஸ் துறையில் ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேசன் தருகிறார் கமல். அறை மில்லியன் டாலர் கிராண்ட் அளிக்கின்ற நாசா அதன் குழுவில் தமிழரான நிலநடுக்க நிபுணர்(Seismologist) சொக்கலிங்கத்தை (நாகேஷ்) யும், ஆந்திரர் மற்றும் ஒசனோ கிராபி நிபுணர் எஸ்.பி.பி. -யையும் இன்னும் சில வெள்ளைக்காரர்களையும் நியமிக்கிறது. இந்திய குழுவுடன் இணைந்து பணியாற்ற மறுக்கும் இந்த குழுவுக்கு இந்திய அரசு அனுமதி மறுக்கிறது.

மறைமுகமாக அனுமதி பெறும் அக்குழு முதல் கட்ட சோதனை அறிக்கையை கொடுக்கிறது. சுனாமி ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் பல மீட்டர் விட்டத்தில் ராட்சத காற்று குமிழ்கள் ஏற்படும் என அறிக்கையில் குறிப்பிடுகிறது. இதனிடையே இக்குழுவுக்கு எதிராக பல வழிகளில் அந்த அரசியல் வாதி கமல் போராடுகிறார். வெற்று பிடிவாதத்திற்கு அவர் போராடுவதுபோல் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

சுனாமி பேரழிவை பார்வையிட வரும் கவர்னர் வில்சன் முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார், எதிர்கட்சி தலைவர் ஒருவரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். (சுவரில் ஜெயலலிதா படம் மாட்டியிருக்கிறது). இதற்கிடையே தமிழக கடற்கரை ஓரங்களில் குவியல் குவியல் -களாக 10 முதல் 20 கி.மீ. இடைவெளிகளில் அரிய
கடல் வாழ் உயிரிகள் இறந்து மிதப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
ராட்சத நீர்க்குமிழிக்குள் சிக்கி இவை சுவாசிக்க முடியாமல் இறந்து போயிருக்க கூடும் என அரசு சந்தேகிக்கிறது. இதனால் மீண்டும் சுனாமி அபாய அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. அதன் பின் என்ன ஆகின்றது என வெள்ளிக்கிழமைதான் தெரியவரும். நாங்கள் பார்க்க முடியாமல் போன அந்த 13 நிமிட படத்தில் மீண்டும் ஒரு சுனாமி வரக்கூடும்.

படத்தின் முதல் ஹைலைட்டே சுனாமி தான். ரெண்டாவது மல்லிகா ஷெராவத் சுனாமி. சென்சார் சும்மா லுல்லுவாய்க்கு தான் போல. அமெரிக்க ஸ்ட்ரிப் கிளப்புகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்கள். மூன்றாவது சுனாமி நகைச்சுவை சுனாமி. அகல்டீப் சிங் கமல் தமிழக கடற்கரை ஓரங்களில் செய்யும் வேவு வேலைகள் சரியான காமெடி. மனிதர் ரொம்ப சீரியஸாக செய்வார். பேச்சு நம்ம சு.சாமி -யை நினைவு படுத்துகிறது. (அதனால் தான் காமெடியா இருக்கா?)
பாடகர் கமல் எப்போதும் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் பாட்டை மட்டும் தமிழில் பாடுகிறார். சித்தர் கமல் பேசும் தத்துவங்கள் தமிழ் தெரிந்த எவரையும் ஈர்க்கும். உதடுகள் மட்டும் அசைய அவர் பேசும் தத்துவங்களால் அசின் மெய்மறந்து போகிறார். அசினுக்கு தமிழ் பித்து இருப்பது போல் காட்டப்படுகிறது. பாட்டி கமல் நன்றாகத்தான் இருக்கிறார். பாடும் போது மட்டும் ஏன் டி. பி வந்தவர் போல் இருமுகிறார். அமெரிக்காவில் பிறந்தவர் போலவும், அமெரிக்க அரசியல் வாதிகளின் மேனரிசத்தொடும் கமல் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. நிச்சயம் பல ஆண்டுகளுக்கு பயிற்சியில் இருந்திருக்க வேண்டும். இந்த கமலை பார்த்தால்(பேச்சு) ஜார்ஜ் புஷ் -ஐ விட கிளிண்டன் ஞாபகம் வருகிறது.

மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் ஒரு தசாவதாரம் விமர்சனத்துடன் சந்திப்போம்.

தசாவதாரம்: ஒரு போது மன்னிப்பு.

34 comments:

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 5:41 PM  

america -vil veru engu thirai idappattadhu -nnra vibaram viraivil!

SP.VR. SUBBIAH said...
June 3, 2008 at 7:42 PM  

விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 7:48 PM  

////SP.VR. SUBBIAH said...
விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!////

வாருங்கள் நண்பரே! தங்கள் முதல் வரவு நல்வரவாகுக!

Sridhar V said...
June 3, 2008 at 9:06 PM  

உங்கள் பார்வையில் படம் எப்படி என்று சொல்லவில்லையே?

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பேட்டி அளித்த பொழுது '8 வேடம்தான் தெரிய வேண்டும். மற்ற 2 வேடங்கள் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்ப வேண்டும்' என்று சொன்னார்கள். கண்டுபிடிக்க முடியாத வண்ணமா இருக்கிறது?

ஜோ/Joe said...
June 3, 2008 at 9:14 PM  

பொய் சொன்னா பொருந்த சொல்ல வேணாமா? படம் வெளிவர இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 9:22 PM  

/////உங்கள் பார்வையில் படம் எப்படி என்று சொல்லவில்லையே?//////
நிச்சயம் வெள்ளிவிழா. அபூர்வ சகோதரர்கள் போன்றதொரு வெற்றி கிடைக்கும்.
பட்டினப்பாக்கத்தில் நான் கண்ட அந்த 2004 சுனாமி போன்ற திகில் ஏற்பட்டது.

/////மற்ற 2 வேடங்கள் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்ப வேண்டும்' என்று ///////
உன்னிப்பாக கவனிக்கிறேன் வெள்ளிக்கிழமையன்று.

வருகைக்கு நன்றி ஸ்ரீதர் நாராயணன் அவர்களே!

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 9:38 PM  

//////படம் வெளிவர இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. /////
அதனால் என்ன, ஜோ? இந்த திரையிடலுக்கும் அபிசியல் ரிலீஸ் தேதிக்கும் தொடர்பில்லை. இது சமூக சேவைக்காக!. கமல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும் தானே!
நன்றி மீண்டும் வருக!.

பினாத்தல் சுரேஷ் said...
June 3, 2008 at 10:23 PM  

நிஜமாகவே இதுதான் கதை என்றால் என் எதிர்பார்ப்பு வீணாகாது என்றே தோன்றுகிறது.. பார்ப்போம்..

நன்றி மோகன் கந்தசாமி.

tekvijay said...
June 3, 2008 at 10:37 PM  

ur creativity is good! nagesh, wo is shown as a muslim in trailer is chokkalingam as per u! there is other characters like jayapradha, rekha, tourist guide ect. p.vasu is a villain. what they r doing?? u didnt mention even about one car chase. u didnt post about chaos theory, bio wepons research ect. its clear u are bluffing.

the normal kamal is a scientist and not a student! fighter kamal shud be present in the movie but u say no such!

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 10:39 PM  

உங்கள் பதிவை பார்த்தேன் திரு பினாத்தல் சுரேஷ்,

//////1. பத்து வேடத்துக்கும் சொல்லிக்கொள்ளும்படியான முக்கியத்துவம்.

2. பத்து வேடங்களும் கமலே ஏற்கவேண்டிய வலுவான காரணம் (ரங்கராஜோட பாட்டி கிருஷ்ணவேணி என்பதுபோல)

3. கிரேஸி ப்ராண்ட் நகைச்சுவை

4. புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியாமல் என்னைப்போன்றவர்களுக்கும் புரியும் அளவுக்கு நுணுக்கமான காட்சி அமைப்பு

5. அப்பா போரடிக்குது என்று என் பெண்ணை எழுப்பவைக்காத திரைக்கதை
/////
காட்சி அமைப்பு எனக்கு புரிந்து விட்டது. அனைவருக்கும் புரியும்.
வருகைக்கு நன்றி!.

முரளிகண்ணன் said...
June 3, 2008 at 10:55 PM  

ஏங்க இது உண்மைதானா? இல்ல உங்க வலைப்பதிவு தலைப்பைப் பார்த்தா சந்தேகமா இருக்கு

cheena (சீனா) said...
June 3, 2008 at 11:07 PM  

நன்றி நண்பரே

பிரீவியுவிற்கு - பார்ப்பதற்கு முன் ஒரு முன்னுரை இருந்தால் நலமாயிருக்கும் - கமல் படங்களுக்கு

தகவலுக்கு நன்றி

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 11:43 PM  

திரு Silicon Sillu அவர்களே!,
--->நான் மீண்டும் ட்ரைலர் பார்த்தேன். கொஞ்சம் விஞ்ஞானி லுக் -காக குறுந்தாடி. முஸ்லீம் போன்று தோன்றுகிறது என நினைக்கிறேன். ஆனால் அவர் படத்தில் சொக்க லிங்கம் தான்.
---->ஜெயப்ரதா, ஹர்ஷ்விர் சிங் -இன் மனைவி மற்றும் முஜ்ரா டான்சர். பெரும்பாலும் இந்தியிலே பேசுவதால் இவர்கள் வரும் காட்சி சற்று போர். ஆனால் வாளிப்பான பஞ்சாபி பெண்கள் சூழ அவர் எப்போதும் தோன்றுவதால் சலிப்பில்லை. அனுராதா சிங் (ஜெயப்ரதா அடிக்கடி அறை வாங்குகிறார்)
----> ரேகா குப்பம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர். சுனாமியின் போது அவர் படும் மன வேதனை, அழகாக நடித்திருக்கிறார்.
---->பி. வாசு. ஒரு இடது சாரி அனுதாபி. வில்லன் அல்ல. இவரும் அரசியல் வாதி கமலும் எமேர்ஜன்சி கால நண்பர்கள். கமலின் வேவு தகவல்களை பத்திரிக்கைக்கு தருபவர்.
----> சிவாஜியில் வரும் அந்த புரோக்கர் நடிகர் (பாஸ்கர்?) தன் சுனாமி அனுபவத்தை பத்திரிகைக்கு கூறும் ஒரு புலம் பெயர் தமிழர்.
----->சேசிங் சீக்யுவன்ஸ் எதுவும் இல்லை. அசினின் நண்பர்களிடம்(ரோட் சைடு ரோமியோஸ்) இருந்து தப்பிக்க மாடி ரயிலை நிறுத்த முயன்று வம்பில் மாட்டும் கமல் மற்றும் அசின் சாவின் விளிம்பு வரை சென்று வருவர். நல்ல நகைச்சுவையாக இருக்கும்.
---->கரகாட்டக்காரன் படத்தில் வரும் வில்லன் (கமலின் திரைத்துறை நண்பர் என நினைக்கிறேன்) நிறைவாய் நடித்துள்ளார்.
----->பிலிப்பைன்ஸ் அனுபவங்கள் தான் கராத்தே மற்றும் "Bohol dance" காட்சிகளாக நாம் பார்ப்பது.
---->கமல் சயின்டிஸ்ட் அல்ல. probationer in NASA. பயோ டேரரிசம் பற்றிய படம் அல்ல இது. கார்பன் டேட்டிங் -க்குக்காக கதிரியக்க சோதனை செய்ய வேண்டி சில ஆர்க்கியலாகிச்ட்டுகளுடன் இவரும் செல்வார். பயோ டேர்ரரிசம் பற்றிய சொல்லாடல்கள் "அகல்டீப் சிங் கமல் வெளியிடும் வேவு தகவல்கள்". அவை உண்மை அல்ல.

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 11:49 PM  

/////தலைப்பைப் பார்த்தா சந்தேகமா இருக்கு/////
இல்ல இல்ல, சந்தேகப்படாதிங்க.!
நன்றி முரளிகண்ணன், மீண்டும் வருக!

மோகன் கந்தசாமி said...
June 3, 2008 at 11:55 PM  

/////பிரீவியுவிற்கு - பார்ப்பதற்கு முன் ஒரு முன்னுரை இருந்தால் நலமாயிருக்கும் - கமல் படங்களுக்கு//////
ஆமாம். அவரது விருமாண்டி படம் எனக்கு இரண்டாம் முறைதான் புரிந்தது. தசாவதாரம் ஒருவையில் நேர்கோட்டில் தான் செல்கிறது. சில பிளாஷ் பேக் -க்குகள் தவிர. மொத்தம் மூன்று பிளாஷ் பேக்க்குகள்

நன்றி சீனா! மீண்டும் வருக.

Karthikeyan KR said...
June 4, 2008 at 5:22 AM  

Mohan,

the story is abt bio-weapons..
ur story is no way near the original.. its really funny.. better luck next time..

Unknown said...
June 4, 2008 at 7:28 AM  

யோவ் மோகன், சும்மா ரீல் விடாதே. அப்புறம் படம் ரிலீஸ் ஆனதும் கதை வேற மாதிரி இருந்துது பின்னூட்டத்திலியே மொத்திடுவேன்
என் பதிவுல என் விமர்சனத்தையும் படி

Unknown said...
June 4, 2008 at 8:15 AM  

The character name of the Probationer Kamal - ஸ்ரீனிவாஸ் சாமிநாதன் - is interesting. The first part is Iyengar's name and the second part is Iyer's name.

12th century happeningsoda effecto?

Unknown said...
June 4, 2008 at 9:04 AM  

Mohan,
You've not mentioned anything about how the songs are picturized and their sequences in the movie?

Have all the songs been played fully or butchered in between?

Which song is your pic?

Is "Ulaganaayaganae.." being played while the credits scroll in the end?

Please clarify

Athisha said...
June 4, 2008 at 9:04 AM  

//
பாட்டி கமலின் முதல் மகள் பஞ்சாப் காரரை மணந்து கொண்டவர். அவர் தனது கணவருடன் இரு மகன்களையும்(பிற்காலத்தில் பாடகர், அரசியல்வாதி) விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு இம்மிகிரன்ட்டாக சென்றிருக்கிறார். அங்கு பிறக்கும் கமல் கவர்ணராகிறார். பாட்டி கமலின் ஒரே மகன் மாணவன் கமலின் தந்தை. பாட்டி கமலின் மற்றொரு மகளின் மகள் அசின்(காயத்ரி). பாட்டி கமலின் பிள்ளைகள் யாவரும் படத்தில் வசனம் வாயிலாகவே விளக்கப்படுகிறார்கள்.

//


ஸ்ஸ்ஸ்ஸப்பா இதுக்கே கண்ண கட்டுதே

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 10:51 AM  

//the story is abt bio-weapons..
//
////the story is abt bio-weapons.. /////
நானும் பத்திரிக்கைகளில் தசாவதாரம் செய்திகளை படிப்பவன் தான். பயோ வெப்பன்ஸ் பற்றி படத்தில் வருவது சில மணித்துளிகளே. அவையும் வெறும் அறிக்கையாக பத்திரிக்கைகளில் கொடுக்கப்படுகின்றது. நாம் படத்தை பற்றி கேள்விப்பட்டதும் திரையில் பார்ப்பதும் பல இடங்களில் வேறுவேறாக இருக்கின்றன.
நன்றி மீண்டும் வருக கார்த்திகேயன்.

Nee Naan Sivam said...
June 4, 2008 at 10:56 AM  
This comment has been removed by the author.
மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 10:59 AM  

/////யோவ் மோகன், சும்மா ரீல் விடாதே. அப்புறம் படம் ரிலீஸ் ஆனதும் கதை வேற மாதிரி இருந்துது பின்னூட்டத்திலியே மொத்திடுவேன்
என் பதிவுல என் விமர்சனத்தையும் படி////
ரீல் இல்ல ஜெய். ரிலீசுக்குப் பின் மீண்டும் வருக. உங்கள் பதிவை படித்தேன். அப்போ இன்னும் ஒரு வேடம் என்னன்னு கஸ் பண்ணி அதையும் சொல்லிடுங்க.

கிரி said...
June 4, 2008 at 11:30 AM  

////அதிஷா said...
பாட்டி கமலின் முதல் மகள் பஞ்சாப் காரரை மணந்து கொண்டவர். அவர் தனது கணவருடன் இரு மகன்களையும்(பிற்காலத்தில் பாடகர், அரசியல்வாதி) விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு இம்மிகிரன்ட்டாக சென்றிருக்கிறார். அங்கு பிறக்கும் கமல் கவர்ணராகிறார். பாட்டி கமலின் ஒரே மகன் மாணவன் கமலின் தந்தை. பாட்டி கமலின் மற்றொரு மகளின் மகள் அசின்(காயத்ரி). பாட்டி கமலின் பிள்ளைகள் யாவரும் படத்தில் வசனம் வாயிலாகவே விளக்கப்படுகிறார்கள்.

//

//ஸ்ஸ்ஸ்ஸப்பா இதுக்கே கண்ண கட்டுதே//

ஹா ஹா ஹா ..சத்யமா எனக்கும் புரியல

ஏதாகினும் படம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள். இது "A" வகுப்பு படமா இல்லை அனைத்து வகுப்பினரும் (B&C) பார்க்கும் படமா?

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 11:35 AM  

////The first part is Iyengar's name and the second part is Iyer's name. ////
கந்தசாமி முழுத்தமிழ் பெயர். மோகன் என்பது வடஇந்திய பெயர்(லார்ட் கிரிஷ்ணா).
கமல் பெயர் வைப்பதில் கோட்டை விட்டிருக்க மாட்டார். படத்தில் அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும். உன்னிப்பாக கவனிப்போம் அடுத்தமுறை.

////Have all the songs been played fully or butchered in between?////
டைட்டில் கார்டில் தொடங்கி பிறகு ஒரு 4-5 நிமிடத்திற்கு கமலின் எட்டு வேடங்களையும் விளக்குகிறார்கள். கூடவே கே.எஸ்.ரவிக்குமார் மீசையுடன் பெண்வேடமிட்டு வருகிறார்.(காமேடியாம்). பின் அனைவரையும் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கிறார். இது படத்தின் ஆக்சுவல் வேர்சனில் இருக்காது என நினைக்கிறேன். எதோ கமல் பற்றி தெரியாத ஆடியன்சுக்கு விளக்குவது போல் இருக்கிறது. "உலக நாயகனே" பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

///Is "Ulaganaayaganae.." being played while the credits scroll in the end?////
இருக்கலாம். முழுசா படம் பார்த்தால்தான் தெரியும்.

எனக்கு பிடித்தது முகுந்தா, முகுந்தா பாடல் தான். வழக்கமாக வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்கள் தத்தியாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் சினிமாவில். ஆனால் அசின் அறிவாளி.

நன்றி வாசன். மீண்டும் வருக.

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 11:43 AM  

மன்னிக்க வேண்டுகிறேன் Subhalakshmi's/Vinodh,
தவறுதலாக உங்கள் பின்னூட்டம் அழிந்துவிட்டது.

Subhalakshmi's has left a new comment on your post "தசாவதாரம் - திரை விமர்சனம்.":

Mohan,

It was a pleasure reading your review. It was hard to beleive but would give you a benefit of doubt. How do you Rate the Movie to Past. Can you rate the mavie to earlier Tamil/Indian/Kamal Movies.

This would give a feel of your experience

Thanks

Vinodh


Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 12:14 PM  

///////ஸ்ஸ்ஸ்ஸப்பா இதுக்கே கண்ண கட்டுதே///////
அடடே! அப்போ சரியாக விளக்குகிறேன்.
என்பது வயது கமல் பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகள், இளைய மகள், இடையில் மகன். மூத்தமகள் ஒரு பஞ்சாபியை திருமணம் செய்து டெல்லி செல்கிறார். பாட்டி கமல் குடும்பத்துடன் தொடர்பும் முறிகிறது. இவர்களுக்கு மூன்று மகன்கள்.
பாட்டி கமலின் இளைய மகள் வழி பேத்தி அசின்.
பாட்டி கமலின் மகன் வழி பேரன் மாணவன் கமல்.

படம் பார்க்கும் போது கண்ண கட்டாது. தெளிவாகவே இருக்கிறது.

படம் தமிழில் A சென்டர். நகர்புற கதை. ஹிந்தியில் C சென்டர். பஞ்சாபி கிராமங்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.(பெரும்பாலும் ஹிந்தி). தெலுங்கில் A, B, & C. சென்டர். ஏனெனில் அமெரிக்க சம்பந்தப்படங்கள் தெலுங்கில் எல்லா சென்டர்களிலும் ஓடும். அவ்வளவு அமெரிக்க மோகம் அங்கு.

நன்றி மீண்டும் வருக அதிஷா, கிரி.

Sridhar V said...
June 4, 2008 at 2:44 PM  

இன்னமும் நிறைய பேரு நம்பலை போலருக்கு உங்க விமர்சனத்தை.

நல்ல அருமையான கதை என்றே சொல்ல வேண்டும். ஹே ராமுக்கு அடுத்தபடியாக மீண்டும் ஒரு 'இந்திய'ப் படம் எடுக்க முயற்சித்திருக்கிறார்ப் போல. நல்லபடியாக வந்திருக்கிறது என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. :-)

Sridhar V said...
June 4, 2008 at 4:51 PM  

//The first part is Iyengar's name and the second part is Iyer's name. //

இது ஒரு முக்கியமான விசயம். சாமிநாதன் என்று வைணவர்களில் பெயர் வைக்க மாட்டார்கள்.

Harry Potter 7-ம் பொத்தக வெளியீட்டுக்கு முன்னால் ஒரு 'மாதிரி' புத்தகம் வந்தது. கிட்டத்தட்ட ஒரு 370 பக்கங்களுக்கு சுவாரசியமாகவே எழுதியிருந்தார்கள். :-)

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 10:12 PM  

////How do you Rate the Movie to Past. Can you rate the mavie to earlier Tamil/Indian/Kamal Movies.///
I would like to compare this epic with other Kamal movies, not with anybody else's or any other regional ones. One of the greatest periodical classics of all the time, Hey Ram, pops in mind if you head on to appreciate Dasavatharam's perfection in filming. If your mind boggles on its grandiose sets, no doubt you have realized pompous Vikram on its release in eighties. Anbe sivam's experience helped Kamal for characterizing Siddhar in Dasavadaram. Generic Aboorva sagotharargal draws a parallel with this. Michael Madana Kama Rajan, Avvai Shanmugi, Dasavadaram and the line continues. Nayagan, what else?, would explain you the journey all the way up to Dasavadaram.

Thanks Subhalakshmi, please come again

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 10:22 PM  

/////இது ஒரு முக்கியமான விசயம். சாமிநாதன் என்று வைணவர்களில் பெயர் வைக்க மாட்டார்கள். /////
படம் ரிலீசானதும் குழப்பம் நீங்கும் என நம்புவோம்.

Harry Potter 7-ம் பொத்தக வெளியீட்டுக்கு முன்னால் ஒரு 'மாதிரி' புத்தகம் வந்தது. கிட்டத்தட்ட ஒரு 370 பக்கங்களுக்கு சுவாரசியமாகவே எழுதியிருந்தார்கள். :-)
/////
தகவல்களுக்கு நன்றி ஸ்ரீதர். பார்த்ததை பார்த்தபடி எழுதவே எனக்கு பொறுமை இருப்பதில்லை. கற்பனைகளுடன் சுவாரசியமாய் எழுத எங்கே போவது கிட்னிக்கு. நிற்க, தங்கள் பின்னூட்டங்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நன்றி மீண்டும் வருக.

Unknown said...
June 12, 2008 at 5:50 AM  

Mohan,
Recommend this story for Dasavatharam part 2.
You've cheated everyone with a dubakoor story

Anonymous said...
June 14, 2008 at 9:28 PM  

என்னைய்யா கேனைத்தனமான பதிவுபோட்டிருக்கிறாய் நீ எழுதிய கதைக்கும் நிஜக்கதைக்கும் சம்பந்தமே இல்லை.

chummasuman said...
June 15, 2008 at 5:27 PM  

:-)



கிடங்கு