Thursday, June 5, 2008

கற்பு - வாரத்துக்கு ரெண்டு கிலோ.

·

அலங்காரம்



சட்டமடித்து சுவரில் மாட்டலாம்.
டீப்பாயின் மேல்விரித்து பூச்சாடி வைக்கலாம்.
வாசலில் கோலமிட்டு நடுவில் நிறுத்தலாம்.
என்வீட்டு கற்பை பார்!, எல்லோருக்கும் காட்டலாம்.
இதழ்களிலே கற்பலங்கார டிப்ஸ் தரலாம்.
அலங்கார நிபுணர்களின் ஆலோசனைப் பெறலாம்.
கற்பில்லா வீடுகளை பரிகாசம் செய்யலாம்.
தேவையின்றேல் கைத்துடைத்து குப்பையிலே வீசலாம்.



நுகர்பொருள்



வாரத்துக்கு ரெண்டுகிலோ எங்கத்தி மூல.
பற்றாகுற பட்ஜெட்டில் தினத்திக்கி தொல்ல.
கைக்காசு போட்டாலும் நானெங்கு வாங்க.
கட்டுனவன் மனசுவச்சா தானிங்கு எல்லாம்.
கடைத்தெருவு கற்பெல்லாம் சுகாதாரக் கேடு?
எவர்க்கென்ன தெரியும்நான் படுகின்ற பாடு

6 comments:

மோகன் கந்தசாமி said...
June 5, 2008 at 4:46 PM  

கவித....கவித...

Divya said...
June 5, 2008 at 7:46 PM  

என்ன கருத்து சொல்ல வரீங்க இந்த பதிவில்........புரியலீங்க,

விளக்கம் ப்ளீஸ்???

மோகன் கந்தசாமி said...
June 5, 2008 at 7:54 PM  

///என்ன கருத்து சொல்ல வரீங்க இந்த பதிவில்........புரியலீங்க////
முதல் கவிதையில்(?), "கற்பு ஒரு அலங்காரப் வஸ்த்துவேயன்றி அதில் வேறு பயனில்லை" என சொல்ல வருகிறேன்.

மோகன் கந்தசாமி said...
June 5, 2008 at 8:00 PM  

இரண்டாவதில், நான் சொல்ல வருவதென்னவென்றால், "காதலை கட்டினவனிடம் இருந்து மட்டுமே பெறவேண்டிய சூழலில், கணவன் கடமை தவறும்போது அதர் ஆப்சன் அற்றவளாகிறாள் பெண்" என்பதாகும்.
நன்றி திவ்யா மீண்டும் வருக.

Divya said...
June 5, 2008 at 8:41 PM  

விளக்கங்களுக்கு நன்றி மோஹன்!

மோகன் கந்தசாமி said...
June 5, 2008 at 8:49 PM  

////விளக்கங்களுக்கு நன்றி மோஹன்!////
ஆகா! நம்ம எழுதறதும் கவிதைதான் போலருக்கே...அப்போ எழுதி வச்சிருக்க "தபு சங்கர்" வகை கவிதைகளை பதிவிட்டிடறேன், விரைவில்..



கிடங்கு