Wednesday, July 9, 2008

எமர்ஜென்சி பதிவு: டியர் செந்தழல் ரவி....

·

டியர் செந்தழல் ரவி,

////அந்த பதிவு ஒரு தனிநபருக்கானதல்ல...ஒரு கான்ஸெப்ட் / தத்துவத்தை கேள்விகேட்கும் முயற்சியே...////

மிகத்தேவையான ஒரு முயற்சி இது. அம்முயற்சியை நீங்கள் மேற்கொண்ட இடம் .......... எவர் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தால் விவாதத்தை அருமையாக, சுவாரசியமாக எடுத்துசென்றிருக்கலாம். பெயர் குறிப்பிட்டு விவாதம் செய்தால் அதை ஸ்போர்டிவ் எடுத்துக்கொள்ள சுப்பையா சார் என்ன வாலண்டினா தமிழரசி போல் புதிய பதிவரா? நையாண்டியுடன் நீங்கள் கேட்ட நல்ல கேள்விகளுக்கு வெறும் கனல் மட்டும் பதிலாய் வந்தது ஆச்சர்யம் இல்லை. பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம்.

ஒரு ஓரமாக நாம் விவாதம் செய்வோம். ஜோசியம் உண்மையா உடான்ஸா என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு பகுத்தறிவதில் உதவுவோம். அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்லப்படும் ஆருடங்களுக்கு இயல்பாகவே காரணங்களை மேனுபாக்ச்சர் செய்துகொள்ளும் மனித மனம் நம்மை பகுத்தறிய விடுவதில்லை என்பதை விவாதிப்போம், ஜோசியத்தை முழுமையாக நம்புபவர்கள் பற்றிய கவலையை விடுத்து.

உங்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன். (ஆளுணர பாத்து ஆதரவு கடிதம் கூட கொடுத்துட்டேன்)

நன்றி,
மோகன் கந்தசாமி

டிஸ்கி: ஆகஸ்ட் எட்டுக்கு பிறகு தரும் ஆதரவிற்கு எந்த பயனுமில்லை. அதனால நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே அதரவு தரவே இப்பதிவு.

செந்தழல் ரவி கேள்விகள்
SP.VR. SUBBIAH பதில்கள்

ஆதரவு தருவோர் ஸ்மைலி பின்னூட்டமாவது இடவும்.

111 comments:

புதுகை.அப்துல்லா said...
July 9, 2008 at 2:01 AM  

:)
:)
:)
:)
:)
:)
:)
:)
:)
ஒன்னு என்ன ஒன்பது ஸ்மைலி போட்டாச்சு

Anonymous said...
July 9, 2008 at 2:05 AM  

:)

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...
July 9, 2008 at 2:06 AM  

:)

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 2:07 AM  

நன்றி புதுகை,
நன்றி அனானி,
நன்றி பாரி அரசு.

Anonymous said...
July 9, 2008 at 2:11 AM  

எமெர்ஜென்ஸி பதிவுக்கும், எக்ஸலண்ட் எணர்ஜிக்கும் நன்றி...!!!!

நானும் ஒரு ஸ்மைலி போடலமா ?

:)

(இந்த ஸ்மைலியை தெற்கு பார்த்து உட்கார்ந்து போட்டேன்)

புதுகை.அப்துல்லா said...
July 9, 2008 at 2:20 AM  

வாலண்டினா தமிழரசி போல//

மோகன் இன்னுமா அந்த பாதிப்பில் இருந்து மீளல?

லக்கிலுக் said...
July 9, 2008 at 2:24 AM  

///பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம். ////

அடி பின்னுறேள்ளே அய்யா! அமர்க்களம் போங்கோ!!

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 2:29 AM  

ரவி,

///(இந்த ஸ்மைலியை தெற்கு பார்த்து உட்கார்ந்து போட்டேன்)////
எனக்கு இஷ்ட திசை வடக்கு. எனவே வடக்கு பார்த்து அமர்ந்து ஒரு ஸ்மைலி போடவும்.

Anonymous said...
July 9, 2008 at 2:32 AM  

என்ன ? ///யாரையும் யாரும் கெடுக்க முடியாது. எல்லாம் அவர் .... அவர் விதி படித்தான் நடக்கும்,///

அடப்பாவி மக்கா !!!

கும்பகோணத்தில் 81 குழந்தைகள் கருகினார்களே ? அவர்கள் அனைவரும் ஒரே லக்கினத்தில் பிறந்தவர்களா ?

செஞ்சோலையில் அத்தனை குழந்தைகள் சிங்கள வெறியர்களின் குண்டுக்கு இரையானார்களே ? அவர்களின் பிறந்த தேதியும் நேரமும் ஒன்றா ?

சுனாமி, சீனாவில் பூகம்பம், மியான்மரில் புயல் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் மடித்தார்களே ? அவர்களின் பிறந்த தேதியும் நேரமும் ஒன்றா ?

அவர்களது நேரம் சரியில்லையா ?

என்னுடைய கேள்விகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்...

@ திவா//

மண்டபத்தில் யாரும் எழுதிக்கொடுக்கவில்லை, நானே தான் எழுதினேன்...

@ அம்பி //

உங்கள் வகுப்பு வேஸ்டா போனதுக்கு மன்னிக்கவும்....இந்த தவறை எங்காவது "அய்யரை" வைத்து பரிகாரம் செய்து நிவர்த்தி செய்துகொள்கிறேன்...

@ டாக்டர் புருனோ

தெற்கு பக்கம் உக்கார்ந்து படிவத்தை நிரப்பிவிட்டேன் என்று அப்ளிக்கேஷன் பார்மில் எழுதவேண்டுமா என்பதையும் சொல்லிவிட்டால் நல்லது...உங்களது லாஜிக் வியக்கவைக்கிறது...

@ இன்னொரு நன்பர்

இங்கே வந்து கேள்விகேட்பவர்கள் கடவுள் நம்பிக்கையோடுதான் வரவேண்டுமா என்ன ? வாத்தியார் சுப்பையா அவர்கள் என் நன்பர். அவரிடம் கேள்விகேட்கும் உரிமை எனக்கு உண்டு...

கடைசீயாக வாத்தியார் அவர்களுக்கு...

சோதிடத்தின் அறிவியலை பற்றி சொல்கிறீர்களே ?

சோதிடத்தின் மூலமாக மக்களிடம் எவ்வளவு மூட நம்பிக்கைகள் புகுத்தப்பட்டிருக்கு ?

உதாரனத்து ஒரு காமெடி

பல்லிவிழும் பலன்

பல்லி மேல போவும்போது தெரியாம கால் ஸ்லிப் ஆகி மேல உழுந்துட்டா, அதுக்கு ஒரு பரிகாரம்...

தெருவில் போகும்போது "முண்டச்சி" எதிரில் வந்துட்டா, வீட்டுக்கு போயி தண்ணி குடிச்சுட்டு தான் போவாராம் நம்ம ஆசாமி..

பூனை குறுக்கால போயிட்டா வேறு பாதையில தான் போவாராம் நம்ம கோயிந்து ( அது எலிய புடிக்க ஓடுது)

எனர்ஜி ட்ரீட்மெண்டாம்...ஒரு கம்பிய சுத்தி ட்ரீட்மெண்ட் தரார் ஒரு சேலம் டாக்டர்.

நேமாலஜியாம்....பெயரை மாத்திக்கிட்டா எப்படி முன்னேற முடியும் ? புள்ளகுட்டிய படிக்க வைங்கப்பாம்...

ஜெம்மாலஜியாம்...ராஜஸ்தான்ல முப்பது ரூவாய்க்கு நாப்பது கல்லு வாங்கி அதை ஒன்று நானூறு ஐநூறுன்னு விக்கிறாங்க...

வாத்தியார் அவர்களே...ஒரு சம்பவம் சொல்கிறேன்...

சோதிட புத்தகத்தை கரைத்து குடித்த ஒரு சோதிடர்...எங்களூரில்...உலகமெங்குமிருந்து அவரை பார்க்க வருகிறார்கள்...

2005 இறுதியில் என்னுடைய ஜாதகத்தினை கொண்டுபோய் கொடுத்தேன்...

வெளிநாடு செல்ல ஏங்கும், இந்த ஜாதகக்காரருக்கு விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்...என்னுடைய பாஸ்போட்டை எடுத்து நீட்டி, போனவாரம்தான்யா ஆஸ்திரேலியாவுல இருந்து வந்தேன் டோமரு என்றேன்...

இதுபோல எந்த ஒரு சோதிடரையும் / சோதிடத்தையும் பொய் என நிரூபிக்க என்னால் முடியும்...

சவால்...!!!!!

என்னுடைய கடந்தகாலத்தையோ, எதிர்காலத்தையோ, நிகழ்காலத்தையோ, சரியாக கணிக்கும் சோதிடருக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்...என்னுடைய சொந்த பணத்தில் இருந்து...!!!!!

பிறந்தபோது எழுதிய என்னுடய ஜாதக புத்தகமோ, வேறு எந்த தகவலோ, தனிப்பட்ட முறையில் தரத்தயார்...

சவாலை ஏற்றுக்கொள்ள என்னுடைய அன்புக்கு உரிய வாத்தியார் தயாரா ?

அப்படி நான் தோற்றால், பரிசு பணத்தை தருவதோடு, வகுப்பறைக்கும் தவறாமல் வருகிறேன், சோதிட கலை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறேன்...!!!!!

Anonymous said...
July 9, 2008 at 2:34 AM  

இந்த பின்னூட்டம் வகுப்பறை பதிவில் போட்டது...

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 2:39 AM  

புதுகை,
///வாலண்டினா தமிழரசி போல//
வாலண்டினா தமிழரசி பதிவுகளில் இருக்கும் கப்பு ஓரளவு மறைக்கப்படுவதே அவரது சகிப்புத்தன்மையால்தான். [அதனால போன போகுதுன்னு பாராட்டலாம். :-)]

மோகன் இன்னுமா அந்த பாதிப்பில் இருந்து மீளல?///
எப்படி முடியும், புதுகை?

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 2:48 AM  

////வாத்தியாரே, ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல :-)))))
இங்கே பின்னூட்டம் போட்டதாலே ரவிக்கு மண்டபத்துலே எழுதி கொடுத்தது நான் தான்னு சொல்லிடப் போறீங்க.
சும்மா யதேச்சையா தான் எட்டிப் பார்த்தேன் :-)))))/////

யோவ் லுங்கியில பக் ...சாரி லக்கிலுக்,
அங்க ஏனோ தானோ பின்னூட்டம் போட்டுட்டு இங்க என்னய்யா பெரியார் புராணம் வேண்டியிருக்கு?
:-))))))))

rapp said...
July 9, 2008 at 2:51 AM  

ஆஹா, நான் எப்படி இதை தவற விட்டேன். ரொம்ப நன்றி மோகன். நானும் என்னோட பயங்கர ஆதரவை தெரிவிச்சிக்கறேன். இன்னும் கூடவா ஜோசிய பிரதாபங்களை பெருமையா பேசிக்கறாங்க? எத்தனையோ தடவ அது சுத்த பிராடுன்னு நிரூபிச்சி நிரூபிச்சி இப்பல்லாம் போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி

Anonymous said...
July 9, 2008 at 2:51 AM  

நிர்வாணப் பூஜை: சாமியாருக்கு பெண்கள் அடி உதை!
புதன்கிழமை, ஜூலை 9, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற



ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் பெண்ணை நிர்வாணப் பூஜை உட்படுத்திய கேரள சாமியாரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி சரமாரியாக அடித்து உதைத்தனர்.

வீரப்பன் சத்திரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தவர் கோபாலன் (48).
சில காலமாக தொழில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் ஹோட்டலை மூடிவிட்டார்.

மாற்று தொழில் செய்ய ஈரோட்டு ரெங்கம்பாளையத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த கிரி அய்யர் என்ற ஜோதிடரை சந்திக்க போபாலனும், அவரது மனைவி தேவியும் சென்றனர்.

அவர்களது ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர், தேவியின் ஜாதகத்தில் மட்டும் கடும் தோஷம் உள்ளதால் அதை நீக்க பரிகார பூசை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு கோபாலனும் அவரது மனைவி தேவியும் சம்மதம் தெரிவித்து உறவினர்களுடன் நேற்று மதியம் ஜோதிடர் அலுவலகம் சென்றனர்.

கோபாலனையும், அவரது உறவினர்களையும் ஜோதிட அறைக்கு வெளியே அனுப்பி விட்டு, தேவியை தனிமையில் வைத்து அவரது ஆடைகளைக் களையுமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் தேவி. பின்னர் பூஜை என்ற பெயரில் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துள்ளார். உச்சகட்டமாக கற்பழிப்புக்கும் முயன்றுள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த தேவி தன்னை காப்பற்றி கொள்ள ஜோதிடரை நோக்கி சேர், நாற்காலிகளை கொண்டு தாக்கி தப்பி வெளியே ஓடி வந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவரும், உறவினர்களும் ஜோதிடரின் செக்ஸ் லீலைகளை கேட்டு ஆவேசம் அடைந்து அவரை நையப்புடைத்தனர்.

தேவியின் உறவுக்காரப் பெண்கள் ஜோதிடரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். கம்பியாலும் தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பெண்களின் பிடி பிளஸ் அடியில் சிக்கிய ஜோதிடரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:00 AM  

ரவி,
உங்கள் பின்னூட்டத்தை அப்பதிவில் பார்த்தேன். அங்கு எனது பின்னூட்டத்தை இட முடியாததற்கு வருந்துகிறேன். ஆகஸ்ட் எட்டு வரை பெரிய விவாதத்தில் என்னால் பங்கு பெற முடியாது. இருப்பினும் அந்த அபத்தத்தை பார்த்து சும்மா நகைத்து விட்டு நகர்ந்து விடவும் முடியவில்லை, ஆகவே இப்பதிவு.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:06 AM  

////கேரளாவைச் சேர்ந்த கிரி அய்யர் என்ற ஜோதிடரை சந்திக்க போபாலனும், அவரது மனைவி தேவியும் சென்றனர்.////

இல்லையே, கிரி -க்கு சொந்தவூரு கோபிசெட்டி பாளையம் ஆச்சே! லாஜிக் இடிக்குதே,
:-))))))))))))))))))))))

Great said...
July 9, 2008 at 3:18 AM  

சோசியம் அறிவியலாம்.
ஆனா அந்த சோசிய அறிவியல்படி சந்திரன் ஒரு கோளாம். இது எப்படி?

புருனோ Bruno said...
July 9, 2008 at 3:21 AM  

செந்தழல் ரவி,

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.

உதாரணம் :
சரியான தகவல் - பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்

கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்

ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.

அப்ப நம்பிக்கை -

உதாரணம்

நம்பிக்கை 1 - பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 - பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 - பெட்ரோல் விலை கூடும்

நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது

படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)

அது போல்
கைரேகை மேல் சிலருக்கு நம்பிக்கை
வான் ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை
கிளி ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை

இதற்கு அவர்களால் ஆதாரம் தர முடியாது

(நம்பிக்கை குறித்து வேறு உதாரணங்களும் தர முடியும் – ஆனால் தவிர்த்திருக்கிறேன்)

--

புருனோ Bruno said...
July 9, 2008 at 3:22 AM  

ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் -> தெற்கு (அல்லது எந்த திசை என்றாலும் பரவாயில்லை) ராசி என்று நம்புகிறவர் தெற்கு பார்த்து உட்கார்ந்து கொண்டு விண்ணப்பம் நிரப்பலாம்

ராசி குறித்து நம்பிக்கை யில்லாதவர் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் உட்கார்ந்து கொண்டு விண்ணப்பம் நிரப்பலாம்

-
முக்கியமான விஷயம்

ராசி பக்கம் பார்த்து உட்காருவதாலேயே மட்டும் வேலை கிடைக்காது

பொறியாளர் வேலைக்கு சட்டம் படித்த ஒருவர் எந்த பக்கம் பார்த்து உட்கார்ந்து எந்த லக்கினத்தில், எந்த ஓரையில் விண்ணப்பம் போட்டாலும் வேலை கிடைக்காது

புருனோ Bruno said...
July 9, 2008 at 3:29 AM  

//எனர்ஜி ட்ரீட்மெண்டாம்...ஒரு கம்பிய சுத்தி ட்ரீட்மெண்ட் தரார் ஒரு சேலம் டாக்டர்.//

ஹா ஹா ஹா... அது சரி, இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்

//நேமாலஜியாம்....பெயரை மாத்திக்கிட்டா எப்படி முன்னேற முடியும் ? புள்ளகுட்டிய படிக்க வைங்கப்பாம்...//

பேரை மாத்திக்கிட காசு கொடுத்தா அவர் முன்னேறுவார். ... அவ்வளவு தான்

//ஜெம்மாலஜியாம்...ராஜஸ்தான்ல முப்பது ரூவாய்க்கு நாப்பது கல்லு வாங்கி அதை ஒன்று நானூறு ஐநூறுன்னு விக்கிறாங்க...//

முப்பது ரூபாயா. 3 ரூபாய் கூட வராது :) :)

நீங்கள் ராசிக்கல் அணிவதால் பணம் வரும், அதை விற்றவருக்கு :) :)

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:30 AM  

அடடே ராப்,
உங்க பின்னூட்டத்த கவணிக்கவே இல்லையே! சாரி.

நன்றி, ஆனா ஸ்மைலி போட்டாத்தான் உங்க ஒட்டு செல்லும்.

Subramanian said...
July 9, 2008 at 3:39 AM  

//பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம்.//

லூசுப்பய பெரியாரல்ல என்று சுட்டுவது யாரை நண்பரே?

வால்பையன் said...
July 9, 2008 at 3:40 AM  

//ஆதரவு தருவோர் ஸ்மைலி பின்னூட்டமாவது இடவும்.//

ஆதரவு தரவில்லைஎன்றால் என்ன போடவேண்டுமென்று சொல்லலையே

:((

வால்பையன்

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:41 AM  

கிரேட்,
MSc Astrology -ன்னு ஒரு டிசிப்ப்ளின் யுனிவர்சிட்டியில ஆரம்பிக்கறதா இருந்தாங்க பி.ஜே.பி ஆட்சியில. லெப்ட் பார்ட்டி எல்லாம் சேர்ந்து குறுக்க பூந்து கெடுத்துட்டாங்க.
இல்லன்ன மூன் என்ன ஜுபிட்டார் சாட்டிலைட் டைட்டனை -யும் ஒன்பதுல ஒரு கட்டத்துல ஒண்டு குடுத்தனம் வச்சிருக்கலாம். மிஸ் ஆயிடுச்சு.

rapp said...
July 9, 2008 at 3:52 AM  

:)
:)
:)
:)
:)

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 4:03 AM  

அடுத்தவர் நம்பிக்கை பற்றி கருத்து சொல்ல தேவை இல்லைதான். அதெல்லாம் சமூக சீர்திருத்த வாதிகள் அவ்வப்பொழுது கேள்வி கேட்டு அவர்கள் கடமையை கழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சினையே விளைவுகளைப் பற்றிதானே?
விளைவுகள் எவ்வாறு இருக்கின்றன? பெண்கள் கைம்பெண்ணாய் விரட்டப்படுவதும், கற்பு பறிபோவதும், முதிர்கன்னியாகி அவஸ்த்தை படுவதும், உழைப்பின்றி உண்ணும் கூட்டம் உருவாவதும் என விளைவுகள் கொடூரமாகத்தான் இருக்கின்றன. ஆனால் இவ்விளைவுகளுக்கு மருந்த்திட்டு நோயின் தோற்று வாயை களைய முடியாது. எனவே பிரச்சினையின் நடுவே சென்று டிட்டோநெட் செய்வதுதான் சரி

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 4:08 AM  

///பொறியாளர் வேலைக்கு சட்டம் படித்த ஒருவர் எந்த பக்கம் பார்த்து உட்கார்ந்து எந்த லக்கினத்தில், எந்த ஓரையில் விண்ணப்பம் போட்டாலும் வேலை கிடைக்காது////
ஆனால் தகுதியான பொறியாளருக்கு அவர் நின்று கொண்டு விண்ணப்பம் நிரப்பினாலும் வேலை கிடைக்கும். ராசி பக்கம் பார்த்து உட்காரத்தேவையில்லை.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 4:17 AM  

சர்தார் ஜி,

////லூசுப்பய பெரியாரல்ல என்று சுட்டுவது யாரை நண்பரே?///
லூசுப்பய ராமசாமி நாயக்கரைத்தான் நண்பரே!
ஜாதகம் பார்த்து நல்லபடியா அரசியல் நடத்தியிருந்தா காங்கிரஸ் ஆட்சியில ப்ரைம் மினிஸ்டர் ஆகியிருக்கலாம் அல்லவா? பொன்னான வாய்ப்பை தவற விட்டுட்டு மூத்திர சட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு, சாவுற காலத்திலையும் தொண்ட கிழிய கத்திகிட்டு...லூசுதான் இப்படி பண்ணும்.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 4:19 AM  

////ஆதரவு தரவில்லைஎன்றால் என்ன போடவேண்டுமென்று சொல்லலையே////
அடடடடடடா! அறந்த வாலா இருப்பீரு போலருக்கே!

Anonymous said...
July 9, 2008 at 4:28 AM  

I'm a believer of astrology. My questions is on four fronts. Answers to these questions would help me to consolidate my belief.

1. Is the discipline of astrology comprehensive and complete? Which means there is no room for future correction, addition, deletion at all?

2. If this science depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?

3. Could some one explain why only the nine planets and 27 stars are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?

4. How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person.

Anonymous said...
July 9, 2008 at 4:36 AM  
This comment has been removed by a blog administrator.
மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 4:43 AM  

நண்பர் உண்மைத்தமிழனுக்கு ஒரு எதிரி சமீப காலமாக வலைப்பூக்களில் கொலை வெறியுடன் உலாவி வருகிறார். அவர் என் வலைப்பூவிலும் ஆசிட் வீச்சை நிகழ்த்தி வருகிறார். வேண்டாம்ப்பா இதெல்லாம்.

Anonymous said...
July 9, 2008 at 4:56 AM  

///பொறியாளர் வேலைக்கு சட்டம் படித்த ஒருவர் எந்த பக்கம் பார்த்து உட்கார்ந்து எந்த லக்கினத்தில், எந்த ஓரையில் விண்ணப்பம் போட்டாலும் வேலை கிடைக்காது
///

டாக்டர் புருனோ அவர்களே !!!

சட்டம் படித்துவிட்டு பொறியாளர் வேலைக்கு அப்ளை செய்யும் அந்த லூசுக்கு (அந்த அளவுக்கு கேனையன் இருப்பானா என்ன ) யாரும் வேலை கொடுக்கக்கூடாது என்பதே எனது விருப்பம் :))))

Anonymous said...
July 9, 2008 at 5:10 AM  

(அது என்ன சார், டி.நகர் கடையில 5000 பேர் சாவுற மேட்டருக்கு மூனு ஸ்மைலி ? )

///அது போல்
கைரேகை மேல் சிலருக்கு நம்பிக்கை
வான் ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை
கிளி ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை

இதற்கு அவர்களால் ஆதாரம் தர முடியாது////

ஆதாரம் கூட இல்லாத ஒன்றை நம்பி பணத்தையும், பொருளையும் வீணாக்காதீர்கள் பதர்களே என்றுதானே சொல்கிறேன்...

டாக்டர் அவர்களே...அப்படியோ குன்ஸாக எஸ்கேப் ஆகிறீர்கள் பார்த்தீர்களா ?

ஆதாரம் இல்லாத ஒன்று தவறாகவும் இருக்கலாம், சரியாகவும் இருக்கலாம் அல்லவா ?

சரி என்பது 50 சதவீதம், தவறு என்பது 50 சதவீதம் என்று கொண்டால்,

நூற்றுக்கு அய்ம்பது சதவீதம் தவறுசெய்பவர்களுக்கு மட்டும் புத்தி சொல்லி திருத்துவோம்...

தவறான நம்பிக்கையை வைத்திருத்தல் தவறுதானே ?

அந்த தவறை செய்யவிடாமல் தடுக்கலாம் வாருங்கள்...

நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உங்கள் ப்ரொபஷன் ஆகிய மருத்துவர் தொழிலை எடுத்துக்கொள்வோம்...

உங்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்களுக்கு நீங்கள் படித்த அறிவை கொண்டு செய்வீர்களா அல்லது குடந்தை நாடி சோதிடரிடம் போனால் கேன்ஸர் குணமாகும்,கும்மிடிப்பூண்டி குணசேகர சோதிடரிடம் போனால் நெஞ்சுசளி குணமாகும் என்று அட்வைஸ் செய்வீர்களா ?

பல்வேறு மூட நம்பிக்கைகள் பல்வேறு காலகட்டங்களில் தர்க்கவாதிகளால் உடைக்கப்பட்டு ( அந்த நேரத்தில் அவர்களுக்கு பெரிய ஆதரவில்லை என்றாலும்) பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது...

ஈர்ப்பு விசையை சொன்ன கலீலியோவை பைசா கோபுரத்தில் இருந்து வீசச்செய்த அதே மூடநம்பிக்கை...

வேப்பமரத்தில் பேய் என்ற மூடநம்பிக்கை, மீத்தேன் வாயுவை கொள்ளிவாய் பிசாசு என்ற அதே மூட நம்பிக்கை...

ஏன் நீங்கள் பார்க்கும் மருத்துவத்தொழிலில் ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகள்...

உலகம் உருண்டை என்று கூட நம்பாத மூடநம்பிக்கை...

அவற்றை எல்லாம் அறிவியல் ஓவர் கம் செய்து வரவில்லையா ?

அதைப்போல இதையும் ஓவர்கம் செய்து வந்துவிடும்...

ஆனால்...

மனுதர்மத்தை பின்பற்றும் பழமைவாதிகள்....குலக்கல்வி முறையை கொண்டுவர விரும்பிய பழமைவாதிக்கூட்டம்...சமுதாயத்தை / மக்களை சாதியை கொண்டு பிரித்த கூட்டம்...

இன்னும் இருக்கத்தான் செய்கிறது...

அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் களையமுடியும்..

இன்றைக்கு ஐய்ம்பது ஆண்டுகள் கழித்து, கடவுளை கும்பிடுபவரே குறைவாகத்தான் இருக்கப்போகிறார்கள்...

அப்போது சோதிடத்தை நம்பி வயிறு வளர்த்து நிற்கும் கூட்டம் காணாமல் போய்விடும் என்பது என் கருத்து...

அப்போது நீங்களோ நானோ இருக்கப்போவதில்லை...தன்னை நம்பும் தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கப்போகிறது :))

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:18 AM  

//ஆனால் தகுதியான பொறியாளருக்கு அவர் நின்று கொண்டு விண்ணப்பம் நிரப்பினாலும் வேலை கிடைக்கும். ராசி பக்கம் பார்த்து உட்காரத்தேவையில்லை.//

உண்மைதான். ஏன் நின்று கொண்டே கூட விண்ணப்பிக்கலாம்

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:25 AM  

(அது என்ன சார், டி.நகர் கடையில 5000 பேர் சாவுற மேட்டருக்கு மூனு ஸ்மைலி ? )

நான் எழுதியது இது தான்

நம்பிக்கை 2 : அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் (டி.நகரில் உள்ள) கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் 5000 பேர் வரை மரணமடைய வாய்ப்பு உள்ளது :( :( :(

ஸ்மைலி என்ற பெயர் இருப்பதால் அது சிரிப்பதற்கு மட்டும் அல்ல. திரும்ப பாருங்கள். திரும்பி இருப்பது புரியும்.

எதையும் காமாலைக்கண் கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும் :) :) :)

இந்த ஸ்மைலி சிரிப்பதற்காக

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:37 AM  

//ஆதாரம் கூட இல்லாத ஒன்றை நம்பி பணத்தையும், பொருளையும் வீணாக்காதீர்கள் பதர்களே என்றுதானே சொல்கிறேன்...//
சரி

//டாக்டர் அவர்களே...அப்படியோ குன்ஸாக எஸ்கேப் ஆகிறீர்கள் பார்த்தீர்களா ?//
இது தவறான தகவல் எனவே கண்டிக்கத்தக்கது. தகவல், கருத்து, நம்பிக்கை குறித்து நான் விளக்கியுள்ளேன்.

//ஆதாரம் இல்லாத ஒன்று தவறாகவும் இருக்கலாம், சரியாகவும் இருக்கலாம் அல்லவா ?
சரி என்பது 50 சதவீதம், தவறு என்பது 50 சதவீதம் என்று கொண்டால்,
நூற்றுக்கு அய்ம்பது சதவீதம் தவறுசெய்பவர்களுக்கு மட்டும் புத்தி சொல்லி திருத்துவோம்...//
சரி

//தவறான நம்பிக்கையை வைத்திருத்தல் தவறுதானே ?//
அது தவறு என்று நிருபிக்கப்பட்ட பின் தவறான நம்பிக்கையை வைத்திருத்தல் தவறுதான்

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:38 AM  

//அந்த தவறை செய்யவிடாமல் தடுக்கலாம் வாருங்கள்...//
அது தவறு என்று நிருபிக்கப்பட்ட பின் அந்த தவறை செய்யவிடாமல் தடுக்கலாம் வாருங்கள்...
ஒரு வேளை அது சரி என்று ஆகிவிட்டால் நீங்கள் ஒரு சரியான காரியத்தை அல்லவா தடுக்கிறீர்கள். புரிகிறதா

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:39 AM  

//உங்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்களுக்கு நீங்கள் படித்த அறிவை கொண்டு செய்வீர்களா அல்லது குடந்தை நாடி சோதிடரிடம் போனால் கேன்ஸர் குணமாகும்,
கும்மிடிப்பூண்டி குணசேகர சோதிடரிடம் போனால் நெஞ்சுசளி குணமாகும் என்று அட்வைஸ் செய்வீர்களா ?//

நான் மருத்துவ அறிவு கொண்டு சிகிச்சை அளிப்பேன். அவர்கள் குடந்தை ஜோதிடரிடம் போவதும் போகாததும் அவர்களின் விருப்பம்

அவர்கள் பச்சை சட்டை போடுவது, வெள்ளை துண்டு போதுவதும் அவர்களின் விருப்பம். அதில் நான் ஒரு மருத்துவராக தலையிட முடியாது.

உங்களிடம் (மென்பொருள் நிறுவனத்தில்) வரும் வாடிக்கையாளர்களின் சட்டை நிறம் குறித்தோ, அவர்கள் செல்லும் ஜோதிடர் குறித்தோ கருத்து கூற உங்களுக்கு உரிமை இருக்கா ??

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:40 AM  

//பல்வேறு மூட நம்பிக்கைகள் பல்வேறு காலகட்டங்களில் தர்க்கவாதிகளால் உடைக்கப்பட்டு ( அந்த நேரத்தில் அவர்களுக்கு பெரிய ஆதரவில்லை என்றாலும்) பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது...//
உண்மைதான்

//ஈர்ப்பு விசையை சொன்ன கலீலியோவை பைசா கோபுரத்தில் இருந்து வீசச்செய்த அதே மூடநம்பிக்கை...//
ஈர்ர்பு விசை சொன்னது கலிலீயோவா.... ஆவ்வ்வ்வ்வ்வ்

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:46 AM  

//ஏன் நீங்கள் பார்க்கும் மருத்துவத்தொழிலில் ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகள்...//
அதில் சில நிராகரிக்கப்பட்டன. சில சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன

//உலகம் உருண்டை என்று கூட நம்பாத மூடநம்பிக்கை...
அவற்றை எல்லாம் அறிவியல் ஓவர் கம் செய்து வரவில்லையா ?
அதைப்போல இதையும் ஓவர்கம் செய்து வந்துவிடும்...//
வந்த பின் ஏற்றுக்கொள்ளலாம். எது சரி, எது தவறென்று

ஒரு சரியாக தகவலை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரி. உதாரணமாக யாராவது உலகம் தட்டை என்று கூறினால், அதை எதிர்க்கலாம். உலகம் உருண்டை என்பது தகவல். அது நிருபிக்கப்பட்ட ஒரு விஷயம்.

அறிவியலின் மூலம் உறுதியாக முடிவு தெரியாத வரையில் (ஜோதிடம்) அது நம்பிக்கை சார்ந்த விஷயம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு.

நீங்கள் (ஜோதிடம் பொய் என்று) நிருபிக்காதவரையில் அது நம்பிக்கைதானே. எப்படி உங்களை ராகு காலம் பார்க்க சொல்ல மற்றவர்களுக்கு உரிமை யில்லையோ அதே போல் மற்றவர் விஷயத்தில் தலையிடும் உரிமையும் உங்களுக்கு இல்லைதானே

தகவலை அடுத்தவர் மீது திணிக்கலாம். ஆனால் நம்பிக்கையை திணிக்க முடியாது

உங்கள் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பது ஏன்.

மத விழா போது குஜராத்தில் யாரும் புலால் உண்ணக்கூடாது என்ற ஒரு மத நம்பிக்கையைஅடுத்த அனைத்து மதத்தினர் மீது திணிக்கும் மோடிக்கும் உங்களுக்கும் என்ன வேறு பாடு... யோசித்து பாருங்கள்

புருனோ Bruno said...
July 9, 2008 at 6:50 AM  

//மனுதர்மத்தை பின்பற்றும் பழமைவாதிகள்....குலக்கல்வி முறையை கொண்டுவர விரும்பிய பழமைவாதிக்கூட்டம்...சமுதாயத்தை / மக்களை சாதியை கொண்டு பிரித்த கூட்டம்...
இன்னும் இருக்கத்தான் செய்கிறது...//

இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம். புரியல.

//இன்றைக்கு ஐய்ம்பது ஆண்டுகள் கழித்து, கடவுளை கும்பிடுபவரே குறைவாகத்தான் இருக்கப்போகிறார்கள்...//
அது உங்கள் நம்பிக்கை - புரிகிறதா.
50 ஆண்டுகள் கழித்து அனைவரும் ராமரை மட்டும் கும்பீடுவார்கள் என்று ராம கோபாலனும், இயேசுவை மட்டும் கும்பிடுவார்கள் என்று மிஷினெரிகளும், நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அது அவரவர் நம்பிக்கை

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 7:47 AM  

டாக்டர் புருனோ,
ஜோசியம் பொய் என்பது இன்னும் நிரூபிக்கப் படவில்லையா? கடவுள் இல்லை என்று நிரூபிக்கப் படவில்லையா?
இல்லை என்றுதான் சொல்வீர்கள். சரி இவை எல்லாம் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு விட்டனவா? நாம் இருவருமே இல்லை என்றுதான் சொல்வோம். நிரூபணமாகாத ஒன்றை எதற்கு இப்படி வலிந்து பரப்பவேண்டும்?. சரி பரப்பட்டும், கேட்டால் தனியொருவர் நம்பிக்கை, தனி நபர் சுதந்திரம் என்பீர்கள். ஆனால் இவற்றினால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? திருமணமாகாமல் வீட்டில் கிடக்கும் பெண்ணை, அதற்கு காரணம் அவளது செவ்வாய் தோஷம் என்று நம்பவைத்து வதைப்பதற்கு பதிலாக அந்த "தனி நபர் நம்பிக்கை" நாசமாய்ப்போனால் தான் என்ன?
பகுத்தறிவாளர்கள் கடவுளை மறுத்தது எதற்கு? அதன் பக்க விளைவுகள் மோசமாக இருப்பதால். தனி நபர் நம்பிக்கை தனி நபரை மட்டும் பாதித்தால் பரவாயில்லை, அவர் எக்கேடும் கெட்டுப்போகட்டும். ஆனால் அவரை சூழ்ந்தவரையும் பாதிக்கிறதே!. அதனால் தான் கடவுள் கான்சப்ட்டையே எதிர்க்கிறோம் பகுத்தறிவாளர்கள்.
ஜோதிடம் பல கேடுகளை செய்துவருகிறது. நன்மைதான் தருகிறது என்று சொல்பவர்கள் ஒரு மாயையில் இருக்கிறார்கள். ஒரு ஜோதிடர் சகலவிதமான கணித தேற்றங்களையும் பயன்படுத்தி இறுதியில் என்ன சொல்லுகிறார்? பொதுவாய் சில விஷயங்களை மொட்டையாய் அவிழ்த்து விடுகிறார். அவற்றில் சிலதை மட்டும் பொறுக்கினால் நமக்கு சாதகமாய் காரணம் கற்பித்துக் கொள்ளலாம். வேறு சிலதை பொறுக்கினால் மற்றொருவருக்கும் பொருத்திக்கொள்ளலாம். இவ்வாறாக கடந்த காலத்தை நம் ஜாதகம் சொல்லிவிட்டது என்று நம்மை நாமே ஏமாற்றிகொள்ளலாம். எதிர்காலத்தை பொறுத்தவரை, ஜோதிடர் எதுசொன்னாலும் ஏற்றுகொள்ளவேண்டியதுதான். ஏற்றுகொண்டால் ஜோதிடருக்கு கூலி லாபம், ஏற்றுகொள்ளாவிட்டால் பரிகாரம் என்ற பெயரில் ரெட்டை லாபம் அவருக்குத்தான். இதனால் கஸ்டமருக்கு என்ன நஷ்டம்? முதலில் பணம் நட்டம். பிறகு குறிப்பாக சொல்ல வேண்டுமானால், காதல் திருமணத்திற்கு தடை விதிப்பது, விதியை நொந்து வீழ்ந்து கிடப்பது, இயல்பான திட்டங்களை குழப்பி எதிகாலத்தை சூனியமாக்குவது, சாதியத்தை கட்டிக்காப்பது, ஒருவர் தவறுக்கு மற்றவரின் ஜாதகத்தை காரணம் காட்டி அவரையும் வெறுப்பது இதுபோன்ற சமூகக்குற்றங்களும் அதன் வாயிலாக "டோமஸ்ட்டிக் வயலன்ஸ்" -லும் பெருகுகின்றன. இவையெல்லாம் இல்லாவிட்டால் தனி நபர் நம்பிக்கை பற்றி எவர் கேள்வி எழுப்புவர்?

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 7:55 AM  

//////மனுதர்மத்தை பின்பற்றும் பழமைவாதிகள்....குலக்கல்வி முறையை கொண்டுவர விரும்பிய பழமைவாதிக்கூட்டம்...சமுதாயத்தை / மக்களை சாதியை கொண்டு பிரித்த கூட்டம்...
இன்னும் இருக்கத்தான் செய்கிறது...//
இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம். புரியல.///

சம்பந்தம் இல்லையா? Joshyam is one among the many projects spearheaded by those பழமைவாதிக்கூட்டம். அவ்விஷச்செடியின் மற்ற கனிகள் விஷத்தையே தப்பாமல் தரும்போது இக்கனி மட்டும் அமிர்தம் தரக்கூடுமா?

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 8:01 AM  

////அது தவறு என்று நிருபிக்கப்பட்ட பின் அந்த தவறை செய்யவிடாமல் தடுக்கலாம் வாருங்கள்.../////

அதுவரை அது செய்யும் டேமேஜ் -களை அனுமதிக்கலாமா? நிருபிக்கப்பட்ட பின் டேமேஜ் கண்ட்ரோல் செய்து கொள்வோமா? என்ன லாஜிக் இது? இந்த சப்பை கட்டுகளால் பயன் என்ன? பெனிபிட் ஆப் டவுட் யாருக்கு தரவேண்டும்? டேமேஜ் செய்பவனுக்கா? அல்லது டேமேஜ் கண்ட்ரோல் செய்பவனுக்கா?

Unknown said...
July 9, 2008 at 8:09 AM  

:):):):):):):)
:):):):):):):):).............

Anonymous said...
July 9, 2008 at 8:16 AM  

நன்பர் புருனோ...

ராணிமுத்து காலண்டரில் என்ன போட்டிருக்கிறது ? "இன்று மழை பொழியும்" என்று தானே ?

:))))))

புருனோ Bruno said...
July 9, 2008 at 9:59 AM  

//அதுவரை அது செய்யும் டேமேஜ் -களை அனுமதிக்கலாமா? நிருபிக்கப்பட்ட பின் டேமேஜ் கண்ட்ரோல் செய்து கொள்வோமா? என்ன லாஜிக் இது? இந்த சப்பை கட்டுகளால் பயன் என்ன? பெனிபிட் ஆப் டவுட் யாருக்கு தரவேண்டும்? டேமேஜ் செய்பவனுக்கா? அல்லது டேமேஜ் கண்ட்ரோல் செய்பவனுக்கா?//

ஜோதிடத்தால் பாதகம் என்ற உங்களின் நம்பிக்கையில் அடிப்படையில் இதை எழுதியிருக்கிறீர்கள்.

அதற்கு பதில் ஜோதிடத்தால் சாதகம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால்

அதுவரை கிடைக்கும் சாதகங்களை அனுமதிக்காமல் இருக்கலாமா ? நிருபிக்கப்பட்ட பின் இந்த சாதகங்களை பெற்றுக்கொள்ள முடியுமா ? என்ன லாஜிக் இது? இந்த சப்பை கட்டுகளால் பயன் என்ன? பெனிபிட் ஆப் டவுட் யாருக்கு தரவேண்டும்? சாதகங்களை செய்பவனுக்கா ? அல்லது சாதகங்களை குறைப்பவனுக்கா ?

யோசித்து பாருங்கள்.... புரியும்.

--

உங்கள் வரிகள் சரி என்றால் நான் இங்கு கூறியிருப்பதும் சரி தான்

--

எனது நோக்கம் நீங்கள் ஜோதிடத்தை நம்ப வேண்டும் என்பதல்ல.

--

ஆனால் ஜோதிடத்தை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு, வழக்கமாக தெளிவாக பதில் மற்றும் மறுமொழி எழுதும் நீங்கள் ஏன் தடுமாறுகிறீர்கள் :) :) :) :) :)

--

பெண்கள் திருமணமாகதற்கு காரணம் பணம் தான். ஜோதிடம் அல்ல

--

எந்த ஒரு தொழிலதிபரின் மகளோ அல்லது உயரதிகாரியின் மகளோ முதிர்கன்னியாக இருக்கிறார்களா ??

வரதட்சனை என்பதால் நிகழும் தீங்குகளை ஜோதிடத்திற்கு ஏன் திருப்புகிறீர்கள்

புருனோ Bruno said...
July 9, 2008 at 10:02 AM  

//சம்பந்தம் இல்லையா? Joshyam is one among the many projects spearheaded by those பழமைவாதிக்கூட்டம். அவ்விஷச்செடியின் மற்ற கனிகள் விஷத்தையே தப்பாமல் தரும்போது இக்கனி மட்டும் அமிர்தம் தரக்கூடுமா?//

நண்பரே,

எப்பொருள் யார் வாய் கேட்பினும், மெய்பொருள் தானே காண வேண்டும்

--

புருனோ Bruno said...
July 9, 2008 at 10:10 AM  

//ஜோசியம் பொய் என்பது இன்னும் நிரூபிக்கப் படவில்லையா? //

ஜோதிடம் உண்மை என்று நிருபிக்கப்படவில்லை.

//கடவுள் இல்லை என்று நிரூபிக்கப் படவில்லையா?//

கடவுள் இருக்கிறார் என்று
நிருபிக்கப்படவில்லை.

தற்சமயம் இவை நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்

//சரி இவை எல்லாம் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு விட்டனவா? //

இல்லை

//நிரூபணமாகாத ஒன்றை எதற்கு இப்படி வலிந்து பரப்பவேண்டும்?.//

ஜோதிடம் பொய் என்று நிருபணமாக வில்லை. நிரூபணமாகாத ஒன்றை எதற்கு இப்படி வலிந்து பரப்பவேண்டும்? :) :) :)

//திருமணமாகாமல் வீட்டில் கிடக்கும் பெண்ணை, அதற்கு காரணம் அவளது செவ்வாய் தோஷம் என்று நம்பவைத்து வதைப்பதற்கு பதிலாக அந்த "தனி நபர் நம்பிக்கை" நாசமாய்ப்போனால் தான் என்ன?//

திருமணமாகாமல் பெண்கள் வீட்டிலிருப்பதற்கும் செவ்வாய் தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை நண்பரே.

பெண்கள் திருமணமாகாமல் இருப்பதற்கு காரணம் வரதட்சனை.

செவ்வாய் தோஷம் என்பது ஆணுக்கும் இருப்பதாக தான் ஜோதிடம் கூறுகிறது, அப்படி இருக்க பெண்கள் மட்டும் திருமணமாகாமல் இருப்பதற்கு நீங்கள் ஏன் ஜோதிடத்தை குற்றம் சாட்டுகிறீர்கள் என்பது தான் புரியவில்லை

Anonymous said...
July 9, 2008 at 10:16 AM  

மோகன், உங்கள் பதில்களை ரசித்தேன்....பிறகு வருகிறேன்

புருனோ Bruno said...
July 9, 2008 at 10:21 AM  

//ராணிமுத்து காலண்டரில் என்ன போட்டிருக்கிறது ? "இன்று மழை பொழியும்" என்று தானே ?
//

நான் பார்க்க வில்லை

Anonymous said...
July 9, 2008 at 12:07 PM  

//ஜோதிடம் உண்மை என்று நிருபிக்கப்படவில்லை.///

அப்போ உண்மை என்று நிரூபிக்கப்படாத ஒன்று பொய்தானே ?

அப்போ ஒரு பொய்யை காட்டி ஏன் பாமர மக்களின் வயிற்றில் அடிக்கவேணும் ?

இயேசு அழைக்கிறார் கூட்டங்களில் குருடர் பார்க்கிறார், முடவர் நடக்கிறார் என்றால் மருத்துவத்தொழில் எப்படி நடக்கும் திரு.புருனோ அவர்களே ?

எல்லோரும் இயேசு அழைக்கிறார் கூட்டத்துக்கே முண்டியடித்து போய் "அற்புத சுகத்தினை" பெற்றுவிடலாமே ?

பொய்யை, புரட்டு வாதத்தை அந்த அளவிலேயே ஒழிக்க கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள் முன்னுக்கு வரவேண்டும்...

அதைவிடுத்து, போலியான சோதிடம், சாதகம் போன்றவைகளுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், பழமைவாதத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் கசட்டு எண்ணம் வேண்டாமே ??

மீண்டும் சொல்கிறேன்...நான் பெரிதும் மதிக்கும் வாத்தியாரையோ, அல்லது அங்கே ஜிங் ஜங்கும் நன்பர்களையோ நான் குறைசொல்லவில்லை...

உங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை கேள்விகேட்க எனக்கு உரிமை இல்லை...

தமிழ்மணத்தில் எழுதி, அடுத்த தலைமுறைக்கும் இதனை பாடமாக நடத்தி, அவர்கள் மனதிலும் " ஓ...ஒருவேளை சோதிடம் என்பது உண்மையாக இருக்குமோ" என்ற கசட்டு எண்ணத்தை விதைக்கும் வகையில் இருந்த அந்த சோதிட வகுப்பைத்தான் என்னுடைய கேள்வியில் வைத்தேன்...

வாத்தியார் ஐயா சொன்னமாதிரி, தனிமடல் கூட அனுப்பி இருக்கலாம் தான்...ஆனால் அவர் வகுப்பறையை தனிமடலிலா நடத்துகிறார் ? தமிழ்மணத்தில் அல்லவா நடத்துகிறார் ? அதனால்தான் பகிரங்க கேள்வி எழுப்பினேன்...

சோதிடத்தை உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு பரிசு தரேன், சவாலை ஏத்துக்கோங்கப்பான்னா ? ஒரு பய...மூச்...!!!..

புருனோ Bruno said...
July 9, 2008 at 12:30 PM  

//அப்போ உண்மை என்று நிரூபிக்கப்படாத ஒன்று பொய்தானே ?//

அப்படி கூற முடியாது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.

உதாரணமாக, dropsy நோய்க்கு foxglove என்ற செடி நல்ல மருந்து என்ற நம்பிக்கை 18ஆம் நூற்றாண்டில் இருந்தது. அன்று அது உண்மை என்று நிருபிக்கப்படவில்லை.

ஆனால் இன்று foxglove செடியில் உள்ள digitalis என்ற வேதிப்பொருள் cardiac failureக்கு சிறந்த மருந்து என்று நிருபிக்கப்பட்டுள்ளது

--

இது ஒரு உதாரணம் தான். இது போல் விஞ்ஞானத்தில் பல உதாரணங்களை கூற முடியும்.

புருனோ Bruno said...
July 9, 2008 at 12:34 PM  

//இயேசு அழைக்கிறார் கூட்டங்களில் குருடர் பார்க்கிறார், முடவர் நடக்கிறார் என்றால் மருத்துவத்தொழில் எப்படி நடக்கும் திரு.புருனோ அவர்களே ?

எல்லோரும் இயேசு அழைக்கிறார் கூட்டத்துக்கே முண்டியடித்து போய் "அற்புத சுகத்தினை" பெற்றுவிடலாமே ?//

அமரர் தினகரன் அவர்கள் முட்டு நோய்க்கு தனியார் மருத்துவமனையில் தானே சிகிச்சை எடுத்தார் :) :) :)

//பொய்யை, புரட்டு வாதத்தை அந்த அளவிலேயே ஒழிக்க கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள் முன்னுக்கு வரவேண்டும்...//

இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஜெம்மாலஜி, எனர்ஜி வைத்தியம், நாடி ஜோதிடம் என்ற இந்த (புரட்டு) லிஸ்டில் வான்ஜோதிடம், கைரேகை ஆகியவை சேருமா என்பது தான் கேள்வி
--

Anonymous said...
July 9, 2008 at 1:25 PM  

மோகன்,

//பெயர் குறிப்பிட்டு விவாதம் செய்தால் அதை ஸ்போர்டிவ் எடுத்துக்கொள்ள சுப்பையா சார் என்ன வாலண்டினா தமிழரசி போல் புதிய பதிவரா? நையாண்டியுடன் நீங்கள் கேட்ட நல்ல கேள்விகளுக்கு வெறும் கனல் மட்டும் பதிலாய் வந்தது ஆச்சர்யம் இல்லை//
பிரச்சினை இதுதான். இவர்களை எதுவும் கேள்வி கேட்கக் கூடாது. எதை கேட்டாலும் கேட்ட கேள்விக்கு பதில் என்று அதை அனுகாமல் பெர்ஸனலாக எடுத்துக்கொண்டு கனலைக் கக்குகிறார்கள். அப்படியே பதில் சொல்ல விருப்பம் இல்லையென்றால் அதை சொல்லி இருக்கலாம். கேள்வி கேட்டவன் அடுத்த முறை வாயையும் பொச்சையும் மூடிக்கொண்டு போக வேண்டும் என்ற கொள்கையுடன் எவ்வளவு மூர்க்கமாக காயப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்வார்கள். இது அந்த ஒருவரை மட்டுமல்ல. அந்த வயதில் இருக்கும் தமிழ் நாட்டினரில் பெரும்பான்மையானவர்களிடம் இருக்கும் ஒரு பிரச்சினை.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 2:33 PM  

////ஜோதிடத்தால் பாதகம் என்ற உங்களின் நம்பிக்கையில் அடிப்படையில் இதை எழுதியிருக்கிறீர்கள்/////
சோதிடத்தால் நன்மை உண்டு என்றா சொல்கிறீர்கள்?. அது ஒரு வெற்று நம்பிக்கையைத் தருகிறது என்பதைத்தவிர கஸ்டமருக்கு எந்த புரயோஜனமும் இல்லை. சமூகத்தில் குழப்பம் தான் விளைகிறது. இதற்கும் ஒரு சப்பை கட்டு இருக்கக்கூடும். ஐந்து ரூபாயில் யார் நம்பிக்கை தருவார்கள் என்று. "என் நம்பிக்கை", "உன் கருத்து" என்ற சொல்லாடல்களில் எதையும் மறுத்து ஒரு பதில் தரமுடியும். அதுவா எனக்கு வேண்டும்?

////உங்கள் வரிகள் சரி என்றால் நான் இங்கு கூறியிருப்பதும் சரி தான்////
உங்களிடமிருந்து ஏதோ ஒரு பதில் வேண்டுவதா என் நோக்கம்? நான் மறுப்பதற்கு காரணங்களை காட்டுவது போல் ஏற்பதற்கு காரணங்கள் காட்டாவிடில் உங்கள் வாதத்தில் ஏதும் வலுவில்லை. "என் வாதம் வலுவற்றது என்பது உங்கள் கருத்து, உங்கள் வாதம் வலுவற்றது என்பது என் கருத்து" என்ற இன்னொரு சப்பை கட்டு பதில் வேண்டாம்.

///உங்கள் வரிகள் சரி என்றால் நான் இங்கு கூறியிருப்பதும் சரி தான்///
சரி என்றால் காரணங்கள் தாருங்கள், குறைந்தபட்சம் உங்கள் பாய்ன்ட் ஆப் வியூவ் -ல் இருந்து. பொத்தாம் பொதுவாய் சாதகம் இருக்கிறது என்று போகிற போக்கில் பதிலை எறிந்து விட்டு செல்ல வேண்டாம்.

////பெண்கள் திருமணமாகதற்கு காரணம் பணம் தான். ஜோதிடம் அல்ல////
ஜோதிடத்தால் தோல்வியடைந்த அல்லது தடைப்பட்ட திருமணங்களை உங்களுக்கு தெரியாதென்றால் சிறிது காலம் மக்களுடன் இயைந்து விட்டு வரலாம். ஜோதிடத்தால் தகுதியற்ற ஒருவனுக்கு மனைவியாகி இன்று கண்களை கசக்கிக்கொண்டு நிற்கும் ஒரு பெண்ணுடன் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அன்று மாப்பிளையாய் வரவிருந்தவரை பற்றி நன்கு விசாரித்து பிறகு நான் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் "ஜாதகம் முழுமையாக பொருந்தி வருகிறது" என்று கூறி நிராகரிக்கப்பட்டன. இன்று பிரச்சினைக்கு தீர்வு என்று எந்த ஜோதிடரிடமும் போகாமல் என்னிடம் வந்தால் நான் என்ன செய்வது? தினமும் எனக்கு மன உளைச்சல் தான் மிஞ்சுகிறது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யத்தயார். என்னால் வேறு ஒரு மாப்பிள்ளையை எளிதில் கொண்டுவர முடியுமா? முக்கியத்தருனங்களில் ஜாதகம் என்ற பெயரில் தவறான முடிவை எடுத்து விட்டு இப்போது அவஸ்த்தை படுவது யார்? ஜாதகத்தை என்றைக்குமே நம்ம்பாத நானும்தான். இது யாரால்?

/////எந்த ஒரு தொழிலதிபரின் மகளோ அல்லது உயரதிகாரியின் மகளோ முதிர்கன்னியாக இருக்கிறார்களா ??/////
நண்பரே தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அவ்வளவாக இல்லை என்று கருத வேண்டியதாயிருக்கிறது. எனக்கு நேரடி அனுபவமே இருக்கிறது. நான் மேற்குறிப்பிட்ட பிரச்சினை எனக்கு வரும்வரை "எவரும் எக்கேடும் கேட்டு போகட்டும்" என்றுதான் இருந்தேன். இப்போது பிரச்சினை என்னை நேரடியாக அடையும்போது கொலைவெறிதான் வருகிறது.

/////வரதட்சனை என்பதால் நிகழும் தீங்குகளை ஜோதிடத்திற்கு ஏன் திருப்புகிறீர்கள்/////
வரதட்சினை என்ற பெயரில் நிறைய செலவு செய்து விட்டேன். ஆனாலும் தீங்கு ஜோதிடம் என்ற பெயரில் தான் வந்துள்ளது. இன்று என் திருமணத்திற்கு வரதட்சினை வேண்டாம், ஜோதிடம் பார்க்காதீர்கள் என்றால் எல்லோரும் மலங்க மலங்க விழிக்கின்றனர் மதிகெட்ட மூடர்கள்.
இப்போது நான் அனுபவிக்கும் மன வேதனைகளுக்கு நான் முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம் என்று எவரேனும் சொல்லக்கூடும். அந்த மாதிரி ஆளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன், கொலை வெறியுடன்.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 2:55 PM  

////எப்பொருள் யார் வாய் கேட்பினும், மெய்பொருள் தானே காண வேண்டும்////
நான் மெய்பொருள் கண்டாகிவிட்டது. இன்னமும் மெய்ப்பொருள் காணாமல் பிரச்சினையை தள்ளி போட்டுக்கொண்டு போவோர் தான் அதை இனி செய்யவேண்டும்.

/////ஜோதிடம் பொய் என்று நிருபணமாக வில்லை. நிரூபணமாகாத ஒன்றை எதற்கு இப்படி வலிந்து பரப்பவேண்டும்? :) :) :)/////
சரி நான் வலிந்து பரப்பவில்லை என்றே வைத்துக்கொள்வோம். பிறகு ஜாதகத்தால் ஏற்படும் கேடுகளை எவ்வாறு போக்குவது? "ஜாதகத்தை நம்புங்கள், ஆனால் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்" -என்றா?

////செவ்வாய் தோஷம் என்பது ஆணுக்கும் இருப்பதாக தான் ஜோதிடம் கூறுகிறது, அப்படி இருக்க பெண்கள் மட்டும் திருமணமாகாமல் இருப்பதற்கு நீங்கள் ஏன் ஜோதிடத்தை குற்றம் சாட்டுகிறீர்கள் என்பது தான் புரியவில்லை////
ஆணுக்கு இருக்கும் செவ்வாய்தோஷம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அவனுக்கு தகுதிக்குறைவில்லாத ஒரு பெண் கிடைப்பதிலும் பெரிதாக பிரச்சினையில்லை. ஆனால் பெண்ணுக்கு அப்படியா? அப்படியே கிடைத்தாலும் பிற்காலத்தில் இயல்பாக ஏற்படும் சிறு பிரச்சினைகளுக்கு அவளது செவ்வாய் தோஷம் காரணம் காட்டப்படும். ஆகவே ஜாதகத்தின் புரட்டுகளை அம்ம்பலப்படுத்தாமல் சமூகத்தின் இந்த குரூர மனம் மாறுமா?

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:00 PM  

///ஆனால் இன்று foxglove செடியில் உள்ள digitalis என்ற வேதிப்பொருள் cardiac failureக்கு சிறந்த மருந்து என்று நிருபிக்கப்பட்டுள்ளது///
விஞ்ஞானம் அம்பலப்படுத்திய புரட்டுகளின் எண்ணிக்கையையும் அவற்றினால் ஏற்பட்ட தீங்குகளையும் பார்க்கின் நீங்கள் குறிப்பிடுவது ஜுஜுபி.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:11 PM  

ரவி,
////அப்போ ஒரு பொய்யை காட்டி ஏன் பாமர மக்களின் வயிற்றில் அடிக்கவேணும் ?////
நாம் வாதிடுவதே இதைப்போன்ற பக்கவிளைவுகளின் மூலத்தை தாக்கவே. எதிர் வாதம் செய்வோர் கருத்து சுதந்திரம் என்ற வலி நிவாரண தைலத்தை தேய்த்து பிரச்சினைகளை பைப்பாஸ் செய்யவே! அவர்கள் வாதத்தில் ஏதேனும் சமூக சிரத்தை இருந்தால் அறிய ஆவல்.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

rapp said...
July 9, 2008 at 3:11 PM  

/////எந்த ஒரு தொழிலதிபரின் மகளோ அல்லது உயரதிகாரியின் மகளோ முதிர்கன்னியாக இருக்கிறார்களா ??/////
சார், இந்த ஜாதக விஷயத்தை அவங்கவங்க தன் மனசோட, தன் நம்பிக்கையோட நிறுத்திக்கறதில்லை, அடுத்தவங்க மேலையும் திணிக்கிறார்கள். எங்க தாத்தா வட ஆற்காடு மாவட்டத்திலயே பெரும்புள்ளி. நல்ல சொத்து பத்தும் இருந்தது. அவருக்கு ஜோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. எங்க பெரியம்மா(அவங்க அரசு வேலையும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்) கல்யாண விஷயத்தை அவர் கையில் எடுத்ததும்தான் சோதனை ஆரம்பிச்சது. அவங்க ஜாதகத்தில் நாக தோஷம் இருக்கற காரணத்தை காட்டி, ஒருத்தரும் கல்யாணம் பண்ண முன்வரல. எங்க தாத்தா ஜாதிஎல்லாம் எதுவா இருந்தாலும் பரவாயில்லை, பையன் நல்ல வேலயிலிருந்தா போதும்னு பார்த்தார். அப்பவும் கிடைக்கல.இதனால் அவங்களுக்கு பின்னிருந்த அத்தனை சகோதர சகோதரிகளோட திருமண ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்டுச்சி. கடசீல அவங்களோட முப்பத்திநாலு வயசுல, எதையுமே பத்தி கவலைப்படாத எங்க பெரியப்பா கிடைச்சார்.அவங்க கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷத்துக்கும் மேலயே சேர்ந்து நல்லா இருந்தாங்க. இதுல வேடிக்கை என்னன்னா அவர் சென்ற வருடம் வரை நல்லாத்தான் இருந்தார், ஆனா எங்க பெரியம்மாதான் அவருக்கு முன்னயே காலமாகிட்டாங்க.
அவ்வளவு ஏன் இன்னமும் கூட எங்க சொந்தக்காரர்களில் சிலரின் பிள்ளைகள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். பேய் இருக்கா இல்லையானு கூட இருவேறு கருத்துக்கள் இருக்கு, ஆனா பேய் இல்லைன்னு சொல்லி வளர்க்கறதுதான் அந்தக் குறிப்பிட்ட மனிதரால் மத்தவங்களுக்கு தொல்லை ஏற்படாம இருக்க ஒரே வழி. இல்லைனா அவர் தானும் பயந்து மத்தவங்களுக்கும் தொல்லை கொடுப்பாரு. இந்த ஒரேக் காரணத்தால்தான் எனக்கு இந்த ஜாதக ஜோசியத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை பார்த்து அலர்ஜி. ஏன்னா அவங்க பிற நம்பிக்கை சார்ந்தவர்கள் மாதிரி தன்னோட நிறுத்திக்காம மத்தவங்க வாழ்க்கையிலும் குறுக்கிடுகிறார்கள்

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 3:22 PM  

நண்பர் அனானிமஸ்,
//என்ற கொள்கையுடன் எவ்வளவு மூர்க்கமாக காயப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்வார்கள்.////
பிரச்சினையே இதுதான். பழமைவாத கும்மிகளை எவரும் எங்கும் எப்படியும் அடித்துக்கொள்ளலாம். ஆனால் பொதுவில் அடிக்கும் கும்மிகளை பற்றி நையாண்டி கேள்விகள் எழுப்பினால் வெற்று அனல் மட்டும் பதில் வருவது நியாமில்லை. கூடவே தரவுகளுடன் பதில் வந்தால் அனல் என்ன அக்கிணியையே கக்கினாலும் ஏற்புடையதே!

Anonymous said...
July 9, 2008 at 4:29 PM  

//சோதிடத்தை உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு பரிசு தரேன், சவாலை ஏத்துக்கோங்கப்பான்னா ? ஒரு பய...மூச்...!!!..//

யோவ், நான் ஏத்துக்குறேன், நீ உன் ஜாதகக்கட்டோட மலேசியா வரத்தயாரா?

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 5:24 PM  

நன்றி ராப்,
நீங்கள் குறிப்பிடுவது போல் அனுபவம் எனக்கு ஏற்பட்டால்தான் ஜாதக நம்பிக்கையை விட்டோழிப்பேன் என்பது போல் பலர் நடந்துகொண்டு பல ஊறுகளை விளைவித்து வருகின்றனர். தொடர்ந்து அவ்வாறே நடந்து கொண்டு இருக்கிறவன் உசிரை எடுத்துக்கொண்டு திரிகிறார்கள்.

நான் மற்றொரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அமெரிக்கா வந்த புதிதில் ஒரு இந்திய நண்பர் அவரது சிறிய நிறுவனம் ஒன்றில் மென்பொருள் மேம்பாட்டு பணி ஒன்றை முடித்துதருமாறு கேட்டுக்கொண்டார். எனது ஓய்வு நேரத்தில் முடித்துத்தர உறுதியளித்திருந்தேன். இந்தியாவிலிருக்கும் அவரது மற்றொரு ஊழியரை விட மிக நல்ல தரத்தில் மேம்படுத்தி கொடுத்தேன். கணிப்பொறி அறிவியலை அதுவரை முறையாக கற்காத எனக்கு மிகப்பெருமையாக இருந்தது. பணம் பற்றி கவலைப் படவில்லை. இறுதி நாளில் என்னிடம் வந்த நண்பர், என் மனைவி கனவில் நேற்று வந்த பாபா, இந்தியர் எவரையும் பணிக்கு அமர்த்தினால் நட்டம் வரும் என்று சொன்னதாக கூறினார். அதற்கு ஏன் கவலைப்படுகிறீர்கள், நீங்கள் என்னை பணிக்கு அமர்த்தவில்லையே, உதவிதானே செய்கிறேன் கவலையை விடுங்கள் என்றேன். எனக்கு கூலிதர வேண்டியிருக்குமோ என்ற பயந்து அப்படிச்சொன்னாரா அல்லது அவரது மனைவி அஜீரண கோளாறினால் நாடு ராத்திரியில் "பாபா பாபா" என்று உளறியதை இப்படி புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. இந்தியன் ஒருவனால் தயாரிக்கப்பட்டு டேப்லாய் செய்யப்பட்ட மென்பொருளை டிஸ்மான்டில் செய்யச்சொல்லி பாபா சொன்னால் அப்படியே செய்து விடுவாரா இவர்? காரிய பயித்தியம் என்பார்களே அதை அன்றுதான் அபிசியலாக சந்தித்தேன். இதை மட்டும் அவர் ஒரு வெள்ளைக்காரனிடம் சொல்லியிருந்தால் அவன் வாயால் சிரித்திருக்க மாட்டான்.

புருனோ Bruno said...
July 9, 2008 at 9:14 PM  

செந்தழல் ரவி, ராப், மோகன்,

நீங்கள் பொறுமையாக விரிவாக உங்கள் கருத்துகளை பகிர்ந்ததற்கு நன்றி

அதில் சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளன.

//ஜோதிடத்தால் தோல்வியடைந்த அல்லது தடைப்பட்ட திருமணங்களை உங்களுக்கு தெரியாதென்றால் சிறிது காலம் மக்களுடன் இயைந்து விட்டு வரலாம்.//

//நண்பரே தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அவ்வளவாக இல்லை என்று கருத வேண்டியதாயிருக்கிறது. எனக்கு நேரடி அனுபவமே இருக்கிறது.//

உண்மைதான்.

உங்களுக்கு பல கசப்பான (மட்டும் ) அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதால் ஜோதிடத்தை எதிர்க்கிறீர்கள்.

உங்கள் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன்.

//பேய் இருக்கா இல்லையானு கூட இருவேறு கருத்துக்கள் இருக்கு, ஆனா பேய் இல்லைன்னு சொல்லி வளர்க்கறதுதான் அந்தக் குறிப்பிட்ட மனிதரால் மத்தவங்களுக்கு தொல்லை ஏற்படாம இருக்க ஒரே வழி.//

:)

Kasi Arumugam said...
July 9, 2008 at 9:50 PM  

அருமையான விவாதம். பல கோணங்களில் விவாதிப்பது எப்படி என்று அறிந்துகொண்டேன். பங்கேற்ற அனைவருக்கும், குறிப்பாக: மோகன் கந்தசாமி, செந்தழல் ரவி, புரூனோ, பாராட்டுக்கள்.

சோதிடம் 'எதிர்க்கப்பட வேண்டிய ஒரு புரட்டு' என்பது என் கட்சியும்.

மோகன் கந்தசாமி said...
July 9, 2008 at 11:18 PM  

தமிழகத்தின் தலைவன்,
உங்கள் பின்னூட்ட ஆதரவிற்கு நன்றி.

திரு காசி,
உங்கள் முதல் பின்னூட்டத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

நண்பர்கள் புதுகை அப்துல்லா, பாரி. அரசு, லக்கிலுக், கிரேட், திண்டுக்கல் சர்தார், வால்பையன், விடாது கருப்பு மற்றும் அனானிகள் ஆகியோருக்கு நன்றி.

டாக்டர் புருனோ, தோழர் ராப், நண்பர் செந்தழல் ரவி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

நண்பர் அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்கு தற்போது பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

மோகன் கந்தசாமி.

Anonymous said...
July 10, 2008 at 1:15 AM  

உதாரனத்து ஒரு காமெடி

பல்லிவிழும் பலன்

பல்லி மேல போவும்போது தெரியாம கால் ஸ்லிப் ஆகி மேல உழுந்துட்டா, அதுக்கு ஒரு பரிகாரம்...

ஆமாய்யா
பட்டாம் பூச்சி சிறகடித்தால் புயல் அடிக்கும் அப்படின்ன்னு ஒரு விஞ்ஞானம் சொன்னா அது சரி

பட்டாம் பூச்சிக்கும் புயலுக்கும் என்ன சம்பந்தமோ ம் அதுபோல தான் பல்லிக்கும் காலுக்கும்

அது முட்டாத்தனம்ன்னா, பட்டாம் பூச்சி விளைவும் முட்டாத்தனம் தான்.

எவனோ ஒருவன்் கணக்குப்போட்டு கண்டுகொண்டான் ஒரு சிறிய இறக்கையின் அதிர்வு்க்கும் புயலுக்கும் தொடர்பு உண்டு என்று.
அது போல் இதையும் ஆராந்து பார் அதை விட்டுவிட்டு அது பீலா உடான்ஸ் கும்மி அடிக்காதே

Anonymous said...
July 10, 2008 at 4:16 AM  

Any thoughts from anyone?
Questions were posed already.

1. Is the discipline of astrology comprehensive and complete? Which means there is no room for future correction, addition, deletion at all?

2. If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?

3. Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?

4. How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person.

Anonymous said...
July 10, 2008 at 4:34 AM  

செவ்வாய் தோசமெல்லாம் நடுத்தர குடும்பத்து பெண்களுக்குத்தான். அதே தோசம் உள்ள ஆண்களுக்கு திருமணம் ஆகிவிடுகிறதே. பிரச்சனை சோதிடத்தில் இல்லை. அதை பெரிதாக்கும் சமூகத்திடம் தான். 500 பவுன் போடுவதாக பெண்ணின் பெற்றோர்கள் சொல்லிவிட்டால் தோசமெல்லாம் காணாமல் போய்விடும். பெண்ணடிமைத்தனத்திற்கு இதையும் ஒரு சாக்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். வாத்தியாரைக் குறைச் சொல்வதை குறைத்துக் கொண்டு சற்று சிந்தித்து பாருங்கள். சோதிடத்தால் எவ்வளவு மோசமான பலன் சொல்லப்பட்டாலும் ஒரு ஆண் தப்பித்துக் கொள்கிறான், பெண்ணானவள் பலியிடப்படுகிறாள் என்றால் பொதுமக்களின் மோசமான சிந்தனைதான் இந்த இழிவுக்கு காரணமேயன்றி ஜோதிடமோ, சுப்பையா வாத்தியார் போன்ற ஜோதிட அறிஞர்களோ அல்ல. எவனோ கூமுட்டை ஜோதிடன் சொல்வதற்கெல்லாம் சுப்பையா வாத்தியாரைக் கேள்வி கேட்பது சகிக்கவில்லை.

Anonymous said...
July 10, 2008 at 8:57 AM  

:)

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 3:48 AM  

நண்பர் அனானி!

உங்கள் கேள்விகளுக்கு ஜாதகத்தை நம்பும் எவரேனும் பதிலளிக்கக்கூடும் என காத்திருந்தேன். பிறகு நானே முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியதால் பதிலளிக்க முனைந்துள்ளேன்.

///1. Is the discipline of astrology comprehensive and complete?

நிச்சயமாக இல்லை. ஏனெனில் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூட முடியாத ஒன்று விரிவானதாகவும் முழுமையானதாகவும் இருக்க முடியாது.

ஜாதகம் என்பது கோள்களின் இருப்பிடங்களை சங்கேதங்களால் குறியிட்டு வைக்கப்பட்ட ஒரு சுவடி. ஒரு குழந்தை பிறந்ததும் அது முதல் மூச்சை விடும்போது கோள்கள் இருந்த நிலையை குறித்து வைக்கின்றனர். கோள்கள் இடம் மாறும்போது நமது நடவடிக்கைகளும் தக்கபடி மாறுகின்றன என்பது ஜாதகம் கணிப்பதன் அடிப்படை ஆகும்.

ஒரு தெளிவில்லாதா, ஆதாரம் இல்லாத ஒன்று பிரசங்கப்படுத்தப்படும் பொழுது சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நம்மை கேள்விகேட்க தூண்டுகின்றன. நம் கேள்விகள்: 1) பயன்படுத்தப்படும் கோள்களின் அறிவியல் முழுமையானதா? 2) அவை தமது ஆற்றல் மூலம் நம் வளி மண்டலத்தை பாதித்து அதன் ஊடாக மனிதர்களின் சுவாசத்தை கட்டுப்படுத்துகின்றனவா அல்லது வேறு வகையிலா? 3) சுவாசம் வளர்சிதை மாற்றத்தை ஓரளவுக்கு நிர்ணயித்தாலும் நம் வாழ்வு முழுக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியுமா? 4) அவ்வாறு கட்டுப்படுத்தினால், கோள்களின் நகர்வுகள் ஒரே மாதிரியான விளைவுகளைத்தானே அனைவரிடத்திலும் ஏற்படுத்தமுடியும்? 5) வெவ்வேறான விளைவுகள் என்றால் முதல் சுவாசத்தில் கோள்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்றும் தொடர வேண்டுமல்லவா? எனில் சுவாசித்தலின் வகைகளை விளக்கமுடியுமா?

இவை மிக மிக அடிப்படையான கேள்விகள். இவற்றிற்கே பதிலளிக்க முடியாத நிலையில் கிளைக்கேள்விகளுக்கு ஜாதகம் விடையளிக்கும் என கருத இடமில்லை.

///Which means there is no room for future correction, addition, deletion at all?///

கிளைக்கேள்விகள்: 1) பரிகாரங்கள் எவ்வாறு கோள்களின் நிலைகளை மாற்றி நம் நடவடிக்கைகளை சரிசெய்யும்? 2) ஒரே கணத்தில் பிறந்த பலரில் ஒருவர் பரிகாரம் செய்தால் மற்றனைவரின் குறைபாடுகளும் நிவர்த்தியாகிவிடுமா? 3) பரிகாரம் மற்றும் விதி இவற்றிடையேயான தொடர்பு அல்லது முரண் என்ன? 4) "உறுதியாக நம்புவதற்கு ஒத்திசைவாக காரணங்களை தேடுவது" என்ற சந்தேகத்தின் அறிவியலுக்கும் ஜோதிட கணிப்புகளுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு மறுப்பது?

இது போன்ற கேள்விகளே நிலுவையில் இருக்க நீங்கள் கேட்கும் இந்த கேள்வி என்றும் விடைதெரியாத கேள்வியாகத்தான் இருக்க முடியும்.

////2. If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?////
///3. Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?////

கோள்களும் விண்மீன்களும் எவ்வளவு இருந்தாலும் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுவதாக சொல்கிறார்கள். கோள்களின் தேர்வு எந்த அடிப்படையானது என்ற தகவல் இல்லை. ஆற்றல் தான் ஜோதிடத்தின் அடிப்படை எனில் கணக்கில் எடுக்கப்படாத கோள்களின் ஆற்றல் புறக்கணிக்கத்தக்கதா என்ற கேள்வி வருகிறது. பூமிக்கு வெகு அருகில் உள்ள கோள்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்றால் அவற்றின் உண்மையான சுழற்சிகளுக்கும் ஜோதிடத்தில் நிர்ணயிக்கும் சுழற்சிகளுக்கும் சிறிது கூட சம்பந்தமே இல்லையே ஏன்?

///4. How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person.////
ஹா ஹா ஹா ஹா

உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் முயன்றேன் என்றாலும் என்னால் எதிர்கேள்விகளையும் சிரிப்பையும் தான் பதிலாக தரமுடிந்தது. சோதிட நிபுணர்கள் எவரேனும் பதில் தரக்கூடும். ஆனால் அவை முழுமையானதாகவும் விரிவானதாகவும் இறுதியானதாகவும் இருக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 4:23 AM  

நண்பர் ராஜா!
தனிப்பட்ட ஒருவரை கேள்வி கேட்கும் முயற்சியாக நண்பர் செந்தழல் ரவி இவ்விவாதத்தை தொடங்கவில்லை. ஜோதிடத்தைத்தான் அவர் கேள்விகேட்டார். நண்பர் என்ற வகையில் திரு. சுப்பையா அவர்களுக்கு ஒரு கார்பன் காப்பி அனுப்பினார் என்பதுபோல் அவரது பதிவை புரிந்துகொள்ளவேண்டும். எனது பதிவில் சுப்பையா அவர்களை குறிப்பிட்டது குறை கூற அல்ல. நையாண்டி கேள்விகள் சரியான பதில் தர உகந்ததல்ல என்ற தோற்றத்தில் தகுந்த தரவுகள் இன்றி ஆக்ரோஷ பதில்கள் வந்தன என்ற வருத்தத்தை வெளிப்படுத்தவே. என்னை பொறுத்தவரை எவ்வகை விவாதமும் ஏற்புடையதே! நையாண்டி, அடாவடி, நக்கல், தலைகனம், பண்பாடு, விஷயச்செரிவு, மொக்கை என எவ்வடிவத்தில் இருப்பினும் எனக்கு சம்மதம் தான்.

பெண்ணடிமைத்தனம் தான் சமூகப்பிரச்சினைக்கு காரணம் என்று கூறி நீங்கள் ஜோஷியத்தை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் ஜாதகத்தின் அடிப்படையையும் அதன் பயன்களையும் விளக்கித்தான் வாதம் செய்யவேண்டும். திருமணத்தின் போது மிகமுக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டியவை பெண்/ஆண் பற்றிய தகவல்கள்தான். அவற்றை ஒதுக்கிவிட்டு நாம் ஜோதிடத்திற்கு முன்னுரிமை கொடுப்பது எவ்வளவு கேடுகளை விளைவிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இதற்கும் சமூகத்தை குறை கூறிவிட முடியும். ஆனால் ஜோதிடம் இல்லாதுபோனால் இதற்கு அவசியமே இருக்காதல்லவா? இவ்வகை ஊறு விளைவிக்கும்போது ஜோதிடம் தரும் வேறு எந்த பலனை காட்டி இக்கேடுகளை நியாயப்படுத்த முடியும்? பலனை பட்டியலிடுங்கள் பார்ப்போம். பலனின் அளவிற்கும் தீங்கின் கொடுமைக்கும் ஒப்பீட்டு மதிப்பெண் தரலாம் வாருங்கள்! அதுவரை அவசரமின்றி ஜோதிடத்தின் அடிப்படையை கேள்விகேட்காமல் பொறுமையாக இருக்க நான் தயார்.

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 4:25 AM  

//// Anonymous said...
:)
July 10, 2008 8:57 AM////
ஆதரவுக்கு நன்றி அனானி.

தருமி said...
July 11, 2008 at 9:03 AM  

:)
:)
:)

தருமி said...
July 11, 2008 at 10:27 AM  

ப்ரூனோ,
// உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு.
… கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை // என்று கூறியிருக்கிறீர்கள். இருந்தும், மன்னிக்கணும், இந்தக் கருத்தையே முதலில் எதிர்க்க வேண்டியதுள்ளது. எப்படி கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் எதிர்க்க வேண்டியதில்லை என்கிறீர்கள் என்பதற்கான அடிப்படையே புரியவில்லை.

மதநம்பிக்கைகள் புனிதமானவை அந்த நம்பிக்கையாளர்களுக்கு. ஆயினும் அதில் எதிர்க் கருத்துகளையோ, கேள்விகளையோ எழுப்புவது தவறென்று யாரும் கூறுவதில்லை என்று நம்புகிறேன். கேள்விகளுக்குப் பதில் தரமுடியாத நேரங்களில் நம்பிக்கையாளர்களிடமிருந்து கிளம்பும் கோபமான எதிர்ப்புகளில்கூட எப்படி நீ கேள்விகள் கேட்கலாமென என்ற கேள்வி அல்லது குற்றச்சாட்டு பிறப்பதில்லையே.

கருத்துகளையும் கேள்விக்குள்ளாக வேண்டியதில்லை என்கிறீர்களே; எப்படி? நான் பிரம்மாவின் இந்த இடத்திலிருந்து பிறந்ததாலும், நீ பிறந்தது இன்னொரு இடமாயிருப்பதாலும் நான் உன்னை விட உயர்ந்தவன் என்று ஒருவன் உங்களைப் பார்த்துச் சொன்னால், அது அவனது நம்பிக்கை அல்லது கருத்து என்று ஒதுங்கியா போகிறீர்கள். இந்துமதக் கொள்கைகளில் முழு நம்பிக்கை கொண்ட என் நண்பன் ஒருவன் இப்படி வேறு வேறு சாதிகளில் நாம் பிறக்கவைக்கப்பட்டதும், அதனால் நமக்குள் சாதி உயர்வு தாழ்வுகள் இருப்பதும் கடவுளின் ஆஞ்ஞை என்றான். இது அவனது நம்பிக்கையால் பிறந்த ஆழமான அசைக்க முடியாத கருத்து. அது அவனது கருத்து; இதில் நாம் சொல்ல என்ன இருக்கிறது என்றா ஒதுங்கிப் போகவேண்டும் என்பீர்கள்?
உங்களுக்கு (நமக்கு) இடப்பங்கீட்டில் ஒரு கருத்திருக்கிறது. எதிர் கருத்துக்களோடு வந்தவர்களை எவ்வளவு அழகாக பொறுமையாக ஆழமான கருத்துக்களோடு எதிர்கொண்டீர்கள். அங்கே உங்களுக்குப் பேச ஆதாரங்கள் இருந்தனால் அப்படியும், இங்கு இல்லை என்பதினாலா இந்தக் கருத்துக்களை இந்தப் பின்னூட்டங்களில் வைத்துள்ளீர்கள்?

// ஜோதிடத்தால் பாதகம் என்ற உங்களின் நம்பிக்கையில் அடிப்படையில் இதை எழுதியிருக்கிறீர்கள்.//
ஜோதிடத்தால் பாதகம் இல்லை என்றா நினைக்கிறீர்கள்? வேறொன்றும்கூட வேண்டாம். நீயா நானா நிகழ்ச்சியில் xxx (அந்த மீசைக்காரர்…? டக்குன்னு பெயர் வரமாட்டேங்குதே! ) சொன்ன ஒரு கருத்து மட்டுமே கூட போதும் இந்த ஜோதிட விஷயங்களை எதிர்ப்பதற்கு. நல்ல நாள், நல்ல நேரம், நவமி, அஷ்டமி, கிருத்திகை, சூலம்,எமகண்டம் என்று பல பெயரில் எவ்வளவு manhours-களை, உழைக்கும் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்றார். மாதத்தில் 40%-ஆவது இது மாதிரி நாளும் கோளும் பார்த்து வீணாக்குகிறோமே – இந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த ஆதாரமற்ற நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டாமா?

அதே நீயா நானா நிகழ்ச்சியில் சில ஜோதிடக்காரர்களை வைத்து நேரே சில கேள்விகளை (challenges) வைக்க, அதில் வந்திருந்த ஒரு “பெரிய” ஜோதிட பூஷணம் ஒரு முறையல்ல 4 முறையும் தவறான முடிவுகளைச் சொன்னார். என்ன, இந்த மாதிரி நடக்கும்போது ஜோதிட நம்பிக்கையாளர்களுக்குக் கை கொடுக்கும் தாரக மந்திரமொன்று உண்டு: அவர் கணித்தது சரியில்லை; அதற்காக ஜோதிடத்தையே குறை கூறலாமா.. blah… blah… !! இன்னும் இந்த நொண்டிச் சாக்கை எத்தனைக் காலம்தான் நாமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமோ தெரியவில்லை.

ப்ரூனோ, அது என்ன நீங்களே // ஜெம்மாலஜி, எனர்ஜி வைத்தியம், நாடி ஜோதிடம் என்ற இந்த (புரட்டு) லிஸ்டில் வான்ஜோதிடம், கைரேகை ஆகியவை சேருமா என்பது தான் கேள்வி // என்று சொல்லி உங்களுக்குப் பிடித்த வான்ஜோதிடம், கைரேகை இரண்டை மட்டும் தரம் பிரித்துவிட்டு மற்றவற்றை “
புரட்டு” என்று ஒரு போடு போட்டுவிட்டீர்கள்? ஏன் டாக்டர், அவைகளும் சிலரது நம்பிக்கைகள் / கருத்துக்கள்தானே! ஏனிப்படி ஒரு ஓரவஞ்சனை உங்களுக்கு :)

மோகன் கந்தசாமி,
நீண்ட பின்னூட்டத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

எல்லோருக்கும்: இந்த இடத்தில் ஒரு சின்ன விளம்பரம்: இந்த ஜோதிடம் பற்றிய என் 13 பதிவுகளைக் காண உங்களை இங்கு அழைக்கிறேன்.

தருமி said...
July 11, 2008 at 11:12 AM  

முந்திய பதிவில் நான் கொடுத்த தொடுப்பு வேலை செய்யவில்லை. ஏதோ தவறிழைத்துவிட்டேன் போலும். ஆகவே மீண்டும் அந்த தொடுப்பு:

http://dharumi.blogspot.com/2006/01/115-1.html

இங்கதான் ..

manikandan said...
July 11, 2008 at 11:41 AM  

மோகன்,

இவ்வளவு நேரம் கழித்து வருவதற்கு மன்னிக்கவும்.

உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அது சரியானதா என்று நீங்கள் சிந்தித்தோ முயன்றோ பார்த்தது உண்டா ?

இது நான் சிறிது காலத்திற்கு முன் படித்தது.

Varieties of consciousness are more diverse and contradictory than what we want to acknowledge.

எனது வாழ்வில் Telepathy (மனங்களுக்கு இடையே ஏற்படும் சம்பாஷனைகள்) மற்றும் precognition (முன்பே சொல்லும் ஆற்றல்) சில சமயம் அப்படியே பலித்தது உண்டு.

நேரடி அனுபவத்தை தடுப்பது நமது எதிர்பார்ப்பும், scientific theories என்பதும் என் கருத்து.

ஐன்ஸ்டீன் ஒருமுறை பின்வருவனவற்றை கூறி இருக்கிறார் :-

Trouble with theories is that they explain not only what is observed, but what can be observed.

ஜோதிடத்தை எதிர்ப்பதற்கு scientific theories மேற்கோள் காட்டாதீர்கள்.

ஆனால் நமது நாட்டில் ஜோதிடத்தை வைத்து நடக்கும் அட்டூழியங்களை மேற்கோள் காட்டுங்கள். நான் அதை வரவேற்கிறேன். அமோதிக்கவும் செய்கிறேன்.

ஹிரோஷிமா நாகசாகியில் நடந்த அநியாத்திற்கு nuclear energy கண்டுபிடித்தவனை குறை சொல்வீர்களா அல்லது அதன் உபயோகத்தை திசை மாற்றிய மனித சமுதாயத்தை குறை சொல்வீர்களா ?

சற்றே சிந்தித்து நேரடி அனுபவத்தை நோக்கி செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படி செய்ய முனையும்போது யாராவது தங்களிடம் விடை இருக்கிறது என்று சொன்னால் நம்பாதீர்கள். அனுபவம் உங்களுக்கு நீங்கள் தான் தரமுடியும் / பெறமுடியும். அனுபவம் கிட்டாவிட்டால் வேறுவிதமாக முயற்சித்து பாருங்கள். அது சரிவரவில்லை என்று தோன்றினால் வெளியே வந்துவிடுங்கள்.

இதை நான் முதலில் படித்து பின்னர் பயிற்சித்து பார்த்து இருக்கிறேன். இதுவரை நான் எதிர்பார்த்த நிலை கிட்டியது அல்ல.

manikandan said...
July 11, 2008 at 11:57 AM  

ஒரு சுனாமியோ, பூகம்பமோ நடந்த இடத்தில் ஆயிரம் பிணங்களுக்கு இடையே ஒரு பெண்ணின் தொடையை பார்த்தால் உங்கள் காம்பின் நீளம் அதிகரிக்குமா ? (கமலுக்கும் அசினுக்கும் காதல் வரலாம். அது வேறு)

அதுபோலத்தான் ஒரு ஜோசியக்காரனை கூப்பிட்டு உங்களுடைய பரிசோதனை கூடத்தில் நிரூபிக்க சொல்வதும்.

state of mind என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். அதை பொருத்தது தான் உங்கள் வாழ்வில் கிடைக்கும் அனுபவங்கள்.

தருமி said...
July 11, 2008 at 12:10 PM  

அவனும் அவளும் கொடுத்துள்ள இரு பின்னூட்டங்களுமே புரியவில்லையே...
பல பெரியா ஆட்களின் கூற்றை மேற்கோள் காட்டிவிட்டு அதே மூச்சில் //ஜோதிடத்தை எதிர்ப்பதற்கு scientific theories மேற்கோள் காட்டாதீர்கள்.// என்கிறாரே..?

//அதுபோலத்தான் ஒரு ஜோசியக்காரனை கூப்பிட்டு உங்களுடைய பரிசோதனை கூடத்தில் நிரூபிக்க சொல்வதும்.//
இதில் அந்த "அதுபோலத்தான்" என்பது எப்படி என்பது புரியவில்லை. அதோடு astronomy ஆளுககிட்ட நிரூபணம் கேட்கலாம்; ஆனால் astrology ஆளுககிட்ட கேட்கக்கூடாதென்பது என்ன லாஜிக்?

வால்பையன் said...
July 11, 2008 at 12:12 PM  

ஜோதிட நம்பிக்கையுள்ள அன்பு நண்பர்களுக்கு என்னுடைய கேள்விகளை இங்கே கேட்டுள்ளேன், என் ஐயத்தை தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்

வால்பையன்

தீரன் said...
July 11, 2008 at 12:13 PM  

:) :) :) :)

manikandan said...
July 11, 2008 at 12:15 PM  

தருமி,

மறுபடியும் படித்து புரிந்துகொள்ள முயன்று பாருங்கள். இல்லையேல் திங்கள் அன்று நான் உங்களுக்கு சொல்ல வருவதை சற்று எளிதாக சொல்ல முயற்சி செய்கிறேன்.

நான் நான்கு வரிகளுக்கு மேல் எழுத ஆரம்பித்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன.

அதனால் மன்னியுங்கள். (புரியவில்லை என்றால்)

தருமி said...
July 11, 2008 at 12:18 PM  

அவனும் அவளும்,

காத்திருக்கிறேன்..........

Anonymous said...
July 11, 2008 at 12:28 PM  

//பெண்ணடிமைத்தனம் தான் சமூகப்பிரச்சினைக்கு காரணம் என்று கூறி நீங்கள் ஜோஷியத்தை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் ஜாதகத்தின் அடிப்படையையும் அதன் பயன்களையும் விளக்கித்தான் வாதம் செய்யவேண்டும். திருமணத்தின் போது மிகமுக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டியவை பெண்/ஆண் பற்றிய தகவல்கள்தான். அவற்றை ஒதுக்கிவிட்டு நாம் ஜோதிடத்திற்கு முன்னுரிமை கொடுப்பது எவ்வளவு கேடுகளை விளைவிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இதற்கும் சமூகத்தை குறை கூறிவிட முடியும். ஆனால் ஜோதிடம் இல்லாதுபோனால் இதற்கு அவசியமே இருக்காதல்லவா? இவ்வகை ஊறு விளைவிக்கும்போது ஜோதிடம் தரும் வேறு எந்த பலனை காட்டி இக்கேடுகளை நியாயப்படுத்த முடியும்? பலனை பட்டியலிடுங்கள் பார்ப்போம். பலனின் அளவிற்கும் தீங்கின் கொடுமைக்கும் ஒப்பீட்டு மதிப்பெண் தரலாம் வாருங்கள்! அதுவரை அவசரமின்றி ஜோதிடத்தின் அடிப்படையை கேள்விகேட்காமல் பொறுமையாக இருக்க நான் தயார்.//

திரு மோகன் கந்தசாமி,

நான் ஜோதிடம் மிகச்சரியானதென்றோ, சமூகத்திற்கு அவசியமானதென்றோ சொல்லவில்லை. அதில் நம்பிக்கை உடையவர்கள் அதைப்பற்றி பேசுகிறார்கள். நம்பிக்கை உடையவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி சில ஜோசியக்காரர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அதே சோதிடத்தை கலையாக பயன்படுத்தி மனக்கஷ்டம் உடையவர்கள் வந்து நின்றால் ஆறுதல் அளிக்கும் சோதிடர்களும் உள்ளார்கள். சோதிடத்தின் வழி சொல்லப்படும் எதிர்கால பலன் பார்க்கவருபவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் அளவுக்கு இருந்தால், அதைச் சொல்லாமல் இருக்க முடியாது, கொஞ்சம் ஆறுதல் அளிக்கவேண்டும் என்பதற்காக சிலபரிகாரங்களைச் செய்யச் சொல்லுவார்கள்.

இன்றைய செல்போன் கேமராவையே எடுத்துக் கொள்ளுங்கள், அதை வைத்து தேவையான போது நல்லதை படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள், நீங்கள் தவறானவர்களையும், அதனால் பாதிக்கப்படும் பெண்களையும் நினைத்து கேமாரா செல்போன் கண்டுபிடிப்பே தவறு என்கிறீர்கள். இது அறிவுபூர்வமானதா ?

ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன் உண்மையா பொய்யா என்று தெரியாது, ஆனால் நம்பிக்கையுடன் எண்ணி வந்த காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்வதற்கு அது உத்வேகம் கொடுக்கிறது. சில காரியங்களுக்கு முன்பு கவுன்சிலிங்க் போவது போன்றும், வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்வது போன்றது தான் இதுவும். நீங்கள் பாதகம் என்று சொல்லும் போது போலிச்சாமியார்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். போலிச் சாமியார்களையும், கோவிலில் கொள்ளை அடிக்கும் கும்பலையும் எண்ணி இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் கோவில்கள். அதனால் கோவில்களையே இடித்துவிடலாம் என்று சொல்வது தான் அறிவுரையா ? நிவாரணமா ? ஒரு மருத்துவர் நோயை குணப்படுத்த மருந்து கொடுக்கலாம், முடியாது போனால் அந்த பகுதியை வெட்டி எடுக்கலாம், அதைவிடுத்து ஒரு மருத்துவர் நீ தற்கொலை செய்து கொள்' அதுவே சரியான தீர்வு என்று சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...
July 11, 2008 at 12:45 PM  

ஆரம்பிச்சுடாங்கப்பா...! அடங்கமாட்டாங்க போலிருக்கே! :))

வால்பையன் said...
July 11, 2008 at 12:52 PM  

ஒருவன் மன்னனிடம் துணி விற்க போனானாம்
மன்னா இது மந்திர துணி, இது சாதாரண மனிதர்கள் கண்ணுக்கு தெரியாது
அதி புத்திசாலிகள் கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்றானாம்.
சொல்லிவிட்டு வெறும் கையை துணியை எடுப்பது போல் பாவனை காட்டி
நன்றாக இருக்கிறதா பாருங்கள் என்றானாம்.

தன்னை அதி புத்திசாலியாக காட்டி கொள்ள விடும்பிய மன்னன்
ஆகா அருமை என்றானாம், நிறைய பணம் வாங்கி கொண்டு மன்னன் துணியை அவுத்து விட்டு அந்த உடையை போடுவது போல் பாவனை காட்டினானாம்.

அம்மணமாய் நின்ற மன்னன் சபையில் தன்னை காட்டி எப்படியிருக்கிறது என்று கேட்க
தம்மை முட்டாளாய் காட்டி கொள்ள விரும்பாத மந்திரிகள் ஆகா பிரமாதம் என்றார்களாம். அப்படியே வெளியே சென்ற மன்னனின் முட்டாள் தனத்தை ஒரு சிறுவன் சிரித்து வெளி காட்டினானாம்.
(சக வலைப்பதிவர் எழுதிய கதையிது அவருக்கு நன்றி)

ஜோதிடம் என்பது ஒரு மன உளவியல் ரீதியாக நிம்மதி தருவதற்காக நாடி செல்வது.
கஷ்டமான காலத்தில் சில நம்பிக்கையான வார்த்தைகள் எங்கள் வாழ்கையை தொடர உதவியாக இருக்கும் என்று சொன்னால், ஜோதிட மறுப்பாளர்களான நாங்கள் ஒத்து கொள்கிறோம். பிரச்சினையின் ஆணி வேறை தேட முடியாத சிலருக்கு அது ஒரு கவுன்சிலிங்க்காக இருக்கும் என்று.

ஆனால் மேலே சொன்ன கதை போல் புத்திசாலிகளுக்கு தான் ஜோதிடம் புரியும் முட்டாள்களுக்கு புரியாது என்று சொன்னால் எங்களால் எப்படி ஒத்து கொள்ள முடியும். எங்கள் கேள்விகளுக்கு ஆதார பூர்வமான பதில்கள் சொன்னால் நாங்கள் ஏனப்பா இந்த வேலையை செய்கிறோம்.

எனது கேள்விகளை மேலே என்னுடைய பின்னூட்டத்தில் தொடுப்பு கொடுத்திருக்கிறேன்

வால்பையன்

King... said...
July 11, 2008 at 1:32 PM  

///பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம். ///

!!!!!!!!!

:)

King... said...
July 11, 2008 at 1:33 PM  

பதிவை சும்மா படிச்சா இத்தனை பின்னூட்டம் தேவையிலலை போல தெரியும் ஆனா...!

ரவி said...
July 11, 2008 at 1:38 PM  

///ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன் உண்மையா பொய்யா என்று தெரியாது, ஆனால் நம்பிக்கையுடன் எண்ணி வந்த காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்வதற்கு அது உத்வேகம் கொடுக்கிறது.///

ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான் வாங்கடே !!!!!!!!1

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 4:57 PM  

/////எப்படி கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் எதிர்க்க வேண்டியதில்லை என்கிறீர்கள் என்பதற்கான அடிப்படையே புரியவில்லை. ////
எனக்கும் புரியவில்லை. இதேபோன்ற காரணம்தான் சேது சமுத்திர திட்டத்திற்கும் சொல்லப்பட்டது.

///இந்துமதக் கொள்கைகளில் முழு நம்பிக்கை கொண்ட என் நண்பன் ஒருவன் இப்படி வேறு வேறு சாதிகளில் நாம் பிறக்கவைக்கப்பட்டதும், அதனால் நமக்குள் சாதி உயர்வு தாழ்வுகள் இருப்பதும் கடவுளின் ஆஞ்ஞை என்றான்.///
அய்யய்யோ! இன்னமுமா இவ்வகை பத்தாம் பசலிகள் தமிழ்நாட்டில் உலவுகிறார்கள்.

///அங்கே உங்களுக்குப் பேச ஆதாரங்கள் இருந்தனால் அப்படியும், இங்கு இல்லை என்பதினாலா இந்தக் கருத்துக்களை இந்தப் பின்னூட்டங்களில் வைத்துள்ளீர்கள்?///
அப்படித்தான் என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு பொறுத்தவரை டாக்டர் புருனோ ஒரு ஆதாரக்களஞ்சியம். சந்தேகமில்லை.

///நல்ல நாள், நல்ல நேரம், நவமி, அஷ்டமி, கிருத்திகை, சூலம்,எமகண்டம் என்று பல பெயரில் எவ்வளவு manhours-களை, உழைக்கும் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்றார்.//
மிகச்சரி

////இந்த மாதிரி நடக்கும்போது ஜோதிட நம்பிக்கையாளர்களுக்குக் கை கொடுக்கும் தாரக மந்திரமொன்று உண்டு: அவர் கணித்தது சரியில்லை; அதற்காக ஜோதிடத்தையே குறை கூறலாமா.. blah… blah… !! இன்னும் இந்த நொண்டிச் சாக்கை எத்தனைக் காலம்தான் நாமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமோ தெரியவில்லை.////

இப்படி சொல்பவர்களை அப்படியே ஒரே அமுக்காக அமுக்கி உட்காரவைத்து அவரை கணிக்கச் சொல்லிவிடவேண்டும். யாருக்குத்தெரியும் அவரை விட இவர் கணிப்பு இன்னும் அபத்தமாகக்கூட இருக்கலாம்.

///அவைகளும் சிலரது நம்பிக்கைகள் / கருத்துக்கள்தானே! ஏனிப்படி ஒரு ஓரவஞ்சனை உங்களுக்கு :)///
:-)))

////நீண்ட பின்னூட்டத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன்.////
நிச்சயமாக இல்லை.

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 5:02 PM  

நண்பர் "அவனும் அவளும்",
தருமி அவர்களைப் போல உங்கள் அடுத்த பின்னூட்டத்திற்கு சற்று காத்திருக்க விழைகிறேன்.

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 5:07 PM  

////ஜோதிட நம்பிக்கையுள்ள அன்பு நண்பர்களுக்கு என்னுடைய கேள்விகளை இங்கே கேட்டுள்ளேன், என் ஐயத்தை தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள் ////
ஜோதிடர் மாநாட்டில் கேட்டால் கூட தீர்க்கமுடியாத அய்யங்களுக்கு தீர்வு வேண்டுமா? என்ன இது விளையாட்டு வால்பையன்!

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 5:10 PM  

பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி தீரன்.

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 5:53 PM  

////ஆரம்பிச்சுடாங்கப்பா...! அடங்கமாட்டாங்க போலிருக்கே! :))////
கொடியசைத்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு இப்போது ஆட்டத்தை பாதியில் நிறுத்தச்சொன்னால் எப்படி பாரி.அரசு? சாமி உங்கள் கண்ண குத்தத்தான் போகிறது, போங்க! :-)))

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 5:57 PM  

நண்பர் ராஜா!,
சிரத்தை எடுத்து நீங்கள் அளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் தருமி அவர்கள் பின்னூட்டத்தில் இருக்கிறது. நான் அதை வழிமொழிகின்றேன்.

///செல்போன் கேமராவையே எடுத்துக் கொள்ளுங்கள், அதை வைத்து தேவையான போது நல்லதை படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்///
செல்போனால் உள்ள பயன்களை பட்டியலிடமுடியும். ஜாதகத்தின் பயன்கள் என்ன? தருமி அவர்கள் சொன்னதைப்போல பிரச்சினையின் ஆணிவேரை தேடமுடியாதவர்களுக்கு கவுன்சிலிங் தருவதை தவிர (நன்றி: வால்பையன்). அதுவும் பலனளிக்காத கவுன்சலிங். வெற்று நம்பிக்கை தந்து ஏமாற்றும் கவுன்சலிங்.

////நீங்கள் பாதகம் என்று சொல்லும் போது போலிச்சாமியார்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். போலிச் சாமியார்களையும், கோவிலில் கொள்ளை அடிக்கும் கும்பலையும் எண்ணி இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் கோவில்கள். அதனால் கோவில்களையே இடித்துவிடலாம் என்று சொல்வது தான் அறிவுரையா ? நிவாரணமா ?////

அதையும் சொல்லியாகிவிட்டது. அப்பவும் திருந்தியபாட்டைக் காணோம்

////ஒரு மருத்துவர் நோயை குணப்படுத்த மருந்து கொடுக்கலாம், முடியாது போனால் அந்த பகுதியை வெட்டி எடுக்கலாம், அதைவிடுத்து ஒரு மருத்துவர் நீ தற்கொலை செய்து கொள்' அதுவே சரியான தீர்வு என்று சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?////

மருத்துவர் ஏன் பாதிக்கப்பட்டவரை தற்கொலை செய்யச்சொல்ல வேண்டும்? நோய்க்கான கூறு என்ன வென்று தெளிவாக தெரிந்து விட்ட பிறகு அதை நீக்கிவிட்டால் போதும். நாங்கள் ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவரை சாகவாச் சொல்கிறோம்? பாதிப்பிற்கு காரணமான ஜோதிட நோய்க்கூறை போக்குவோம் என்கிறோம்.

நோய் - ஜோஷியம்

நோயால் பாதிக்கப்பட்டவர் - ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவர்.

நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு - ஜோதிடத்தால் அவருக்கு ஏற்பட்ட நட்டம்

மருத்துவர் - பகுத்தறிவுவாதி

உறுப்பை வெட்டிஎடுத்தல் - நட்டத்திற்கு தற்காலிக தீர்வு

நோய்க்கூறை அழிப்பது - ஜோஷியத்தை ஒழிப்பது

மருத்துவர் நோயாளியை சாகச்சொல்லவில்லை - பகுத்தறிவாளர் பாதிக்கப்பட்டவரை சாகச்சொல்லவில்லை.

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 6:05 PM  

////ஆனால் மேலே சொன்ன கதை போல் புத்திசாலிகளுக்கு தான் ஜோதிடம் புரியும் முட்டாள்களுக்கு புரியாது என்று சொன்னால் எங்களால் எப்படி ஒத்து கொள்ள முடியும். எங்கள் கேள்விகளுக்கு ஆதார பூர்வமான பதில்கள் சொன்னால் நாங்கள் ஏனப்பா இந்த வேலையை செய்கிறோம்.////
அதுதானே! வேறு வேலை இல்லையா எங்களுக்கு?

///எனது கேள்விகளை மேலே என்னுடைய பின்னூட்டத்தில் தொடுப்பு கொடுத்திருக்கிறேன்///
தொடுப்புக்கு நன்றி வால்பையன்.

மோகன் கந்தசாமி said...
July 11, 2008 at 6:08 PM  

வாருங்கள் திரு கிங்,
யாழ்ப்பாண சேதி ஏதும் உண்டோ!

Anonymous said...
July 11, 2008 at 6:11 PM  

/////ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான் வாங்கடே !!!!!!!!///
ஆல் பிரசன்ட்!

தருமி said...
July 12, 2008 at 1:09 AM  

இப்பதிவைப் படித்த பின் 'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதுமாதிரி சோதிடம் பற்றிய என் பழைய பதிவுகளைச் சிறிது மேய்ந்தேன். அதில் கீழ்வரும் பகுதி (6-ம் பதிவு)எனக்கே பிடித்தது. ஆக்வே அதை இங்கே மீள்பதிவிடுகிறேன். சுயதம்பட்டம் காரணமல்ல.

//ஜோஸ்யமும், ஜாதகமும் பல ஆண்டுகளாக நம் வாழ்க்கையோடு இணைந்தே இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் அவைகளின் வேகமும், தாக்கமும் மிக அதிகமாகத் தென்படுகின்றன. அதுவும் வேதனைக்குரிய விஷயமாக எனக்குப் படுவது: என் போன்ற வயசான ‘கேஸ்’கள் இந்த விஷயங்களில் ஆர்வம் காண்பித்தாலாவது பரவாயில்லை எனக் கொள்ளலாம்; ஏதோ போற காலத்திலயாவது, தன்னால் இனி ஏதும் பிரமாதமாக சாதிக்க முடியாது என்ற சுய நம்பிக்கை இழந்த காலத்தில், ஒரு பற்றுக்கோடு போல் இவைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள் எனலாம். அதோடு வாழ்க்கையின் இப்பகுதியில் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கக்கூடிய நேரம்; ஏதாவது ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்ற நப்பாசைகள் இருக்கும். அந்த கிரகம் சரியான ‘வீட்டுக்குள்’ வந்து உட்கார்ந்து விடாதா, இந்தக் ‘கல்’ என் பாரத்தை நீக்கி விடாதா, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டின் முன்பக்கத்தையே இடித்து மாற்றினாலாவது பிள்ளைகள் வாழ்வு சிறக்காதா என்பது போன்ற ஆதங்கங்கள் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் மிக அதிகமான இளைஞர்களே இந்த ‘நோயில்’ விழுந்து, கவலைக்குரிய நிலையில் நம் சமுதாயத்தையே நிறுத்திவிட்டார்கள். தன்னம்பிக்கை இல்லாத போது குறி, நல்ல நாள், நல்ல பெயர், ராசிக்கல் என்று மனிதமனம் போகும். வாழ்க்கைக்குள் நுழையும் முன்பே இளைஞர்கள் இதில் காலை விட்டால், அவர்கள் தன்னம்பிக்கை எங்கே போயிற்று? இப்போதே இப்படி என்றால் நாடி நரம்பு தளரும் வயதில் இவர்கள் எதையெல்லாம் நம்பி எதனெதன் பின்னே போவார்கள்?//

Anonymous said...
July 12, 2008 at 1:40 AM  

:)
:)
:)
:)
:)
:)
:)
:)
:)

Anonymous said...
July 12, 2008 at 11:50 AM  

//நண்பர் ராஜா!,
சிரத்தை எடுத்து நீங்கள் அளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் தருமி அவர்கள் பின்னூட்டத்தில் இருக்கிறது. நான் அதை வழிமொழிகின்றேன்.

அதையும் சொல்லியாகிவிட்டது. அப்பவும் திருந்தியபாட்டைக் காணோம்

மருத்துவர் ஏன் பாதிக்கப்பட்டவரை தற்கொலை செய்யச்சொல்ல வேண்டும்? நோய்க்கான கூறு என்ன வென்று தெளிவாக தெரிந்து விட்ட பிறகு அதை நீக்கிவிட்டால் போதும். நாங்கள் ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவரை சாகவாச் சொல்கிறோம்? பாதிப்பிற்கு காரணமான ஜோதிட நோய்க்கூறை போக்குவோம் என்கிறோம்.

நோய் - ஜோஷியம்

நோயால் பாதிக்கப்பட்டவர் - ஜோதிடத்தால் பாதிக்கப்பட்டவர்.

நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு - ஜோதிடத்தால் அவருக்கு ஏற்பட்ட நட்டம்

மருத்துவர் - பகுத்தறிவுவாதி

உறுப்பை வெட்டிஎடுத்தல் - நட்டத்திற்கு தற்காலிக தீர்வு

நோய்க்கூறை அழிப்பது - ஜோஷியத்தை ஒழிப்பது

மருத்துவர் நோயாளியை சாகச்சொல்லவில்லை - பகுத்தறிவாளர் பாதிக்கப்பட்டவரை சாகச்சொல்லவில்லை.//

திரு மோகன் கந்தசாமி,

இதற்கு பிறகு எதுவும் பின்னூட்டம் இடும் எண்ணம் எதுவும் இல்லை. மாட்டியிருக்கிறான் நொங்கு எடுப்போம் என்று மறுமொழியிடாமல் பொறுப்பாக மதித்து மறுமொழியிட்டதற்கு நன்றி.

ஐயா, ஜோஸ்யம் எந்த காலத்திலும் தொழிலாக இருந்தது இல்லை. இன்றைக்கு அறிவியல் வளர்ந்துள்ளதால் அதை வைத்து ஜோஸ்யத்தை ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். இந்த அறிவியல் முன்னேற்றம் எதுவுமே இல்லாத காலத்தில் நட்சத்திரங்களை வைத்து சூரிய சந்திர கிரஹணங்களை எல்லாம் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் பாம்பு பஞ்சாகத்தில் அச்சு பிசகாமல் சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம் என்று வரும் தெளிவாக சொல்லுகிறார்கள் நூறு சதவிகிதம் அவை அறிவியல் கணக்கிடுகளுடன் ஒத்துப் போகிறது. இன்றைக்கு இருக்கும் கிழமைகளே கோள்களின் அடிப்படையில் இருப்பது தானே ? விஞ்ஞான யுகத்திலும் அதுதானே பின்பற்றப்படுகிறது.

ஒரு பிஸ்னஸ் தொடங்கும் முன்பு வெற்றியாகும், இல்லை என்று பிராபபிலிட்டி எல்லாம் பார்த்து செய்தாலும் சில சமயங்களில் பிஸ்னஸ் படுத்துவிடுகிறது. ஒருகாரியத்தை தொடங்கும் முன் முன்யோசனை செய்கிறோம், எல்லாம் சரியாக இருக்கும் என்று நினைத்தே தான் செய்கிறோம் பெயிலியர் ஆகிவிடுகிறதே. கணக்கு ப்ராபலிட்டி தியரி எல்லாம் இருந்தும் இந்த காலத்திலும் படித்த ஒருவரால் இதைச் செய்தால் இது நடக்கும், துணிந்து செய் என்று சொல்லவே முடியாது, அறிவுறுத்தலாம். விஞ்ஞான யுகத்தில் நமக்கு எவ்வளவு கணக்கிடு திறன் இருந்தும் நம் காரியம் நூறு சதவிகிதம் வெற்றியடையாமலேயே போய்விடுகிறது. மறுக்கிறீர்களா ?

இதுபோன்ற எந்தவித கணக்கியலும் இல்லாத பழங் காலத்தில் ஜோஸிய கணிதம் ஒன்றே எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு ஓரளவு உதவி இருக்கிறது. தருமி சார் சொல்லி இருக்கிறார் பாருங்கள் 20 ஆண்டுக்கு முன்பு இவ்வளவு சோதிட நம்பிக்கைகள் இருந்தது இல்லை என்று ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூன்றாண்டு வரையில் ஜோஸ்யம் தொழிலாக இருந்ததே இல்லை. அதை ஒரு கலையாக கற்றுக் கொண்டு நாடிவருபர்களுக்கு கூறுவார்கள். ஜோஸ்யம் பார்பவர்களுக்கு
ஜோஸ்யம் சோறுபோடவில்லை. எல்லா சாதிக்காரர்களிலும் படித்தவர்கள் ஜோதிட கலையைக் கற்று வைத்திருந்தினர். ஜோஸ்யத்தினால் ஒருவன் சம்பாதித்தால் அவன் தரித்திரம் ஆவான் என்ற நம்பிக்கை நல்ல ஜோஸ்யர்களிடம் இன்றும் உண்டு. அவர்கள் காசு வாங்குவதில்லை.
இன்று போலி ஜோஸ்யர்கள் மலிந்துவிட்டதால் உங்களுக்கு ஜோஸ்யமே பொய் என்று சொல்லத் தோன்றுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பன் ஜாடையில் மகன் இல்லை என்றால் அம்மா சொன்னால் தான் அந்த மகனுக்கு அவன் அப்பன், அம்மா சொல்லும் வார்த்தையில் அடிப்படியிலேயே ஒருவருடைய அப்பா யார் என்பதே தெரியும். முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் தான் இவனுக்கு அப்பா இவன் என்ற நிலை இருந்தது. தற்பொழுது டி.என்.ஏ சோதனையில் தாய் சொல்லாமலேயே மகனுக்கு அப்பா யார் என்பதை சொல்லிவிட முடியும்.

ஜோஸ்யமும் அதுபோன்ற நம்பிக்கைதான். அறிவியல் வளர்ந்து ஜோஸ்யம் உண்மை என்று சொல்லிவிட்டால் அப்பொழுது என்ன செய்வீர்கள். வாஸ்துபடி வீடு கட்டிக் கொள்வீர்களா ?
சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் ஜோஸ்யம் என்பது முக்காலத்தைப் பற்றிய கணக்கு, பாசிபிலிட்டியுடன் கூடிய ப்ராபலிட்டி தியரி. விஞ்ஞான யுகத்தில் ப்ராபலிட்டி தியரி வெறும் கணக்கியலுக்காக பயன்படுகிறது. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கையுடையவர்கள் அது வாழ்வியலுக்கு பயன்படுகிறது என்கிறார்கள்.

அறிவியல் கோட்பாடுகள் சரி என்று நம்புகிறீர்கள், நாளைக்கே வேறொரு கோட்பாடு வந்து நேற்று வரை நம்பியது தவறு என்று சொல்லிவிடும். ஜோய்ஸம் போல் அறிவியலும் வெறும் நம்பிக்கைதான். ஒரே ஓர் வேறுபாடு அறிவியலில் செயல்முறை விளக்கம் இருக்கும். ஜோஸ்யத்தில் அது கோள்களின் நிலையை வைத்து சொல்லப்படும் கணக்கு மட்டுமே. முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை அற்றவர்களிடம் எவ்வளவு தான் விளக்கினாலும் தாம் சொல்வதே சரி என்ற முடிவில் இருப்பதால், இதுபற்றி மேலும் மேலும் பின்னூட்டமிடுவது தேவையற்றது என்றே நினைக்கிறேன். உங்களை நம்புங்கள் என்று சொல்வதற்காக நான் பின்னூட்டம் இடவில்லை. யாரும் அறிவற்றவர்கள் இல்லை, அடுத்த தரப்பு நியாயம் என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே பின்னூட்டம் இட்டேன்.

Anonymous said...
July 14, 2008 at 2:01 AM  

:)

Muthu
Chepauk
Chennai

மோகன் கந்தசாமி said...
July 14, 2008 at 5:08 AM  

வாருங்கள் முத்து,
ஆதரவுக்கு நன்றி,

manikandan said...
July 14, 2008 at 5:43 AM  

மோகன், தருமி

ஜோதிடத்தால் சமூகத்திற்கு நன்மையா, கெடுதலா என்று பார்த்தால், கெடுதலே அதிகம் என்பது என் கருத்து. நமது நாட்டில் உள்ள பெண்களுக்கு ஜோதிடத்தால் பல கொடுமைகள் இழைக்கபடுகின்றன. சில ஆண்களும் பாதிக்கபடுகின்றனர். ஆதலால் தங்களின் பதிவை உள்ள நோக்கத்தையும்/உணர்வையும் நான் வரவேற்கவே செய்கிறேன்.

ஆனால் தங்களின் பதிவில் ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை சான்றதாகவே இருக்கிறது. அதற்கு பதில் தேடுவது தேவையற்ற ஒன்று என்பதே என் கருத்து. அதன் பதில் ஜோதிடத்தினால் நமது சமூகத்திற்கு ஏற்படும் தீமையை குறைக்க எந்த வகையிலும் உதவாது.

நீங்கள் உண்மையா/பொய்யா என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்து விட முயன்றால், நேரடி அனுபவத்தை நாட வேண்டும். எந்த ஒரு நிகழ்வுக்கும் காரணத்தை கண்டுபிடிக்கும் மனப்பான்மையை சற்று தள்ளிவைத்து, அனுபவத்தை மற்றுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே எனது முதல் பின்னூட்டத்தின் சாராம்சம்.

ஜோதிடம் பொய் என்பது உங்கள் நிச்சயமான மனநிலை. அப்படி இருக்கும் உங்களிடம் ஒரு ஜோதிடனால் எப்படி தனது செயலை புரிய வைக்கமுடியும். அதை எடுத்துகாட்டவே எனது இரண்டாவது பின்னூட்டம்.

தங்களின் மற்றும் ஒரு பதிவையும் படித்தேன். அதில் தங்களுக்கு நிகழ்ந்த நாடி ஜோதிட அனுபவத்தை படித்தேன். இதை தான் நான் காரணம் தேடுவது என்று கூறினேன். உங்களிடம் ஒரு ஜோசியன் வந்து "ஐயா, நீங்க நேத்திக்கு மதியம் வீட்ல, கழிப்பறைல ஒரு கரப்பான்பூச்சிய கொன்னீங்க அப்படின்னு சரியா சொன்னா, வீட்ல போய் "video camera" ஏதாவது பொருத்தி இருக்கானு தேடுவீங்க. அப்படி தான் இருக்கிறது உங்களின் மனநிலை.

மோகன் கந்தசாமி said...
July 15, 2008 at 12:30 AM  

///ஜோதிடத்தால் சமூகத்திற்கு நன்மையா, கெடுதலா என்று பார்த்தால், கெடுதலே அதிகம் என்பது என் கருத்து////
இந்த ஒன்றுக்காகத்தான் இப்படி மாங்கு மாங்குன்னு விவாதம் பண்றேன் சார்.
நன்றி "அவனும் அவளும்"

Anonymous said...
July 16, 2008 at 8:21 AM  

வெளியில ஒரே கலவரமாயிருக்கு போல...

இன்னுமா இந்த பதிவை தேடி ஸ்மைலி போடுறாங்க :)))))))))))))))))))))))))))))

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 5:20 PM  

///வெளியில ஒரே கலவரமாயிருக்கு போல...////

ஆமாம் ரவி, நானும் கலவரத்துல பொய் ரெண்டு வீசிட்டு வந்திட்டேன். அதில்லாம தனியா ஒரு பெட்ரோல் பாம் செஞ்சி குருட்டாம்போக்குல வீசியிருக்கேன் (புதிய பதிவு) :-))))

Anonymous said...
July 16, 2008 at 10:25 PM  

:)
:)
:)
:)
:)
:)
:)
:)
:)
ஒன்னு என்ன ஒன்பது ஸ்மைலி போட்டாச்சு

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 11:33 PM  

நன்றி அனானி

Anonymous said...
July 19, 2008 at 12:28 PM  

//

விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்! (32)

ம SP.VR. SUBBIAH
//
இவங்க ஜாதகத்த நம்புறாங்களா இல்ல............. ???????????????????????????...............

ஜாதகப்படி சாவறவன் எதப் போட்டாலும் சாவத்தானே போறான்.


யப்பா ஸ்டூடன்ஸ்(இளிச்சவாய்ஸ்) பாத்துக்கோங்கப்பா.!!!!!!!!!!!!!!!