Saturday, September 6, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50: லொடுக்கு சுந்தரிகள் - ஒரு பார்வை, வெட்டி ஆபிசர்.

·

லையுலக தோழர் தோழிகளே, பதிவர் திருமதி ராப் எழுதும் இப்பதிவு ஒரு முழுமையான கும்மிப்பதிவு. பதிவின் பின்னூட்டங்களுக்கு பதிவாசிரியர் பதிலளிப்பார். இப்பதிவைத்தொடர்ந்து எழுத்தாளர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் எழுதிய இரு கவிதைகளை வெளியிடவுள்ளேன். அடுத்து புதுகை அப்துல்லாவின் ஆராய்ச்சி கட்டுரை வரவிருக்கின்றது. வழக்கம் போல் ச்சும்மா ட்டமாஷ் வலைப்பூவிற்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

லொடுக்கு சுந்தரிகள்! நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட இவர்களைப் பற்றிய ஒரு சரியான ஆராய்ச்சிக் கட்டுரை இதுவரை வந்ததுண்டா எனத்தெரியவில்லை, இந்தப் பதிவு அதற்கான ஒரு சிறிய முயற்சிதான்.

லொடுக்கு சுந்தரிகள் என்பவர்கள் யார்? அல்லக்கைகளின் பெண்பால் தான் லொடுக்கு சுந்தரிகள் எனப் பலர் தவறாக எண்ணியுள்ளனர். உண்மை அதுவா என்றால், இல்லை. அல்லக்கைகள் பெரும்பான்மையாக காதல் பட விருச்சிககாந்த் போல இருப்பார்கள், மீதி கொஞ்சமே கொஞ்சம் அல்லக்கைகள்தான் சுப்பிரமணியபுரம் கஞ்சாகருப்பு போல வாழ்வியல் ரசனையோடு இருப்பார்கள். அது மட்டுமன்றி இவர்கள் எல்லா இடங்களிலும் பராக்குப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி, கல்லூரி, வேலைப் பார்க்குமிடம், சில மணித்துளிகள் பயணம் செய்யும் பொதுப் போக்குவரத்து ஊர்திகளான பஸ், இரயில், ஐந்து பத்து நிமிடங்களே லிப்ட் கேட்டு பயணிக்கும் இரண்டு சக்கர வாகனம், அவ்வளவு ஏன் தங்களுடய அடையாளங்களை காமிக்கும் அவசியமில்லாத இந்த வலையுலகு என நீக்கமற அனைத்து இடங்களிலும் அல்லக்கைகளாக இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள். அல்லக்கைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் அல்லக்கைகளாக இருப்பதிலேயே பிறவிப்பயனை அடைகிறார்கள்.


ஆனால் லொடுக்கு சுந்தரிகளின் வாழ்க்கையோ இது எல்லாவற்றையும் தாண்டி புனிதமானது. இவர்களை நீங்கள் அதிகமாக பார்க்கும் காலகட்டம் அவர்களின் பனிரெண்டு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான். வெகு சிலரே இதில் விதிவிலக்கானவர்களாகும். இவர்களுடைய பொற்காலம் என்பது கல்லூரிக்காலம் எனலாம். லொடுக்கு சுந்தரிகள் எத்துனை நாட்களானாலும் தனியாக இயங்கும் ஆற்றல் படைத்தவர்கள், இருந்தும் அவர்கள் ஏன் லொடுக்கு சுந்தரி அவதாரமெடுத்தார்கள் என்ற உங்களின் ஐயம் புரிகிறது, அதற்குரிய பதில் என்னவென்றால், அவர்கள் சுயம்பு கிடையாது. அவர்களை உருவாக்கியது இந்த சமுதாயம்தான்.

இதைப் பற்றி ஒரு லொடுக்கு சுந்தரியிடம் விவாதிக்கும்போது அவர் ஆத்திரத்தோடு கூறிய வார்த்தைகள் என்னவென்றால், "ரோசரியில் +2 படிச்ச ஒரே காரணத்துக்காக பிஎஸ்பிபி கல்லூரியில் படிச்ச என்னை மாமின்னு கூப்பிடறதை மாத்திக்கச்சொல் நான் மாத்திக்கறேன், ஊர் உலகத்தில் கிடைக்கற டிசைனர் டிரஸ்ஸையும் ஆக்சசரீசையும் பொறுக்கிப் போட்டுக்கிட்டு வந்தாலும், ஒரே இத்துப்போன காட்டன் சல்வாரையும், சாக்குப்பயையும் மாட்டிக்கிட்டு வந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா டிரெண்டை மாத்திக்கிட்டிருக்காங்களே அவங்களை மாத்திக்கச்சொல், நான் மாத்திக்கறேன், இதெல்லாத்துக்கும் மேலா வருஷக்கணக்கா பிராக்கெட் போட்டு, நண்பா நண்பான்னு உருகி, அவனோட இத்துப்போன அறுவ டைமிங் சென்ஸை பொறுத்துக்கிட்டு, தண்ணியடிக்க, பெட்ரோல் போடன்னு காசையும் வாராவாரம் தண்டம் அழுதுன்னு நாங்க என்னென்னமோ செஞ்சாலும், எங்கள விட்டே வேறொருத்திக்கு(பொதுவாக தல)காதல் தூது போகச் சொல்றாங்களே சில பாடிசூடா பசங்க, அவங்களை மாத்திக்கச்சொல்லு நான் மாத்திக்கறேன்". இவர்களின் வலி உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கறேன்.

இவர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டே இன்றைய சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் பிழைத்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனினும் நிஜ வாழ்வில் இவர்கள் சத்தம்போட்டோ, வாய்விட்டோ சபதமெடுத்து காமடி செய்வதில்லை, இவர்களின் பாணி சைலண்டாக சூனியம் வைப்பதாகும். இந்த சைலண்டாக சூனியம் வைக்கும் கலை ஒரு உன்னத கலையாகும். இதனை, கொச்சைத்தமிழில் 'கூட இருந்தே குழிப்பறிப்பது' எனவும் கூறலாம்.

இவர்களின் தல உருவாக மிக மிக அல்ப காரணி போதும். எப்படியென்றால், கொஞ்சம் பார்க்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் தான்தோன்றித்தனமான கேரக்டர், உலகத்தில் தன்னை விட புத்திசாலி யாரும் இல்லை என்ற மிதப்பில் இருக்கும் தன்மை, விதண்டாவாதம் மற்றும் எதிர்கருத்துடயவர்களை பரமவைரியாகக் கருதும் குணம் என்ற சில குவாலிபிகேஷன் உள்ள சிலரை முதலில் லொடுக்கு சுந்தரிகள் தேர்வு செய்வார்கள். பின்பு 'தல'யாக அவரை ஏற்றுக்கொள்ளலாமா என கள ஆய்வு மேற்கொள்ளுவர். பொதுவாக இதில் வெற்றியே கிட்டும் எனலாம். பின்னர் லொடுக்கு சுந்தரிகளின் தொண்டினை அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது. 'டெடிகேஷன்' என்ற சொல்லுக்கு இவர்களின் தொண்டு ஒரு வாழ்வியல் உதாரணமாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் அல்லக்கைகளுக்கு அரசியல் உலகில் சிறந்த உதாரணம் என்றால் திரு. ஆற்காடு வீராசாமியும்(லொடுக்கு சுந்தரிகளுக்கே சவால் விடும் ரசனயானக் கலைஞர்), லொடுக்கு சுந்தரிகளுக்கு சிறந்த உதாரணம் திருமதி. சசிகலா(விதிவிலக்காக இருப்பினும், மிக மிகச் சிறப்பாக செயல்படுபவர்) அவர்களுமாகும். இவர்களிருவரும் எப்படி தங்கள் 'தல'யை விட அதிக அதிகாரம் பெற்று, அவர்களையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்களோ, அதுப்போலவே, இளம் அல்லக்கைகள் சிலரும், இளம் லொடுக்கு சுந்தரிகள் பலரும் அவரவர்களுடைய 'தல'யின் காதல் வாழ்க்கையை டீல் செய்கிறார்கள். இதனை ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால், சாமி வரங்கொடுத்தாலும் பூசாரியான இவர்களின் ஒத்துழைப்பில்லாமல் ஒன்றும் நடக்காது.

சரி இந்தத் 'தல'கள் திடீரென்று போதி மரத்தின் கீழ் உட்காரும் விபத்து ஏற்படுமானால் லொடுக்கு சுந்தரிகள் மற்றும் அல்லக்கைகளின் கதி என்னவாகும் என்ற கேள்வியும் ஐயப்பாடும் நியாயமானதே. இதை சிந்திக்கும் காலக்கட்டத்திற்கு அவர்களும் தங்களை தயார்படுத்திக்கொண்டுள்ளனர் எனக் கூறலாம். இதனை சிரமமில்லாமல் விளக்கவேண்டுமென்றால், ஒரு சிறு உதாரணம், ஜெயலலிதா அவர்கள்தான் மாயாவதியின் தயவில் லொடுக்கு சுந்தரியாக வாழ விரும்ப மாட்டார், முடியவும் முடியாது(ஒரு உரையில் இரு கத்திகள் உறங்குவது போல) , ஆனால் சசிகலா அவர்கள் இராசாத்தி அம்மாவிற்கோ, கனிமொழிக்கோ ஒரு லொடுக்கு சுந்தரியாக வாழ்வாங்கு வாழ இயலும். இருப்பவர்க்கு ஒரு வீடு, இல்லாதவர்க்கு பல வீடு!

சரி சினிமாவிலாவது இவர்களின் வாழ்க்கையை சரியாக கூறியுள்ளார்களா என்றால், இல்லை. எப்பொழுதுப் பார்த்தாலும் கதாநாயகனும் நாயகியும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள் போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி, லொடுக்கு சுந்தரிகளின் சமுதாயத்தை புறக்கணிக்கின்றனர் அல்லது இழுவுப்படுத்துகின்றனர் எனலாம். அவர்களின் இந்தக் குமுறல் திரைத்துறையினருக்கு இனியாவது போய் சேர்ந்து, இவர்களின் வரலாற்றை முழுமையாக பதிய முயற்சி எடுக்க வேண்டும் என இந்த ஆய்வுக் கட்டுரையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக ஒரு டிஸ்கி: நீங்கள் கேட்கலாம், உனக்கேன் இந்த அக்கறை ஊரில் எந்த 'தலைக்கும்', 'லொடுக்கு சுந்தரிக்கும்' இல்லாத அக்கறை என்று, உங்களுக்கெல்லாம் என பதில், "நானே பாதிக்கப்பட்டேன், நேரிடையாக பாதிக்கப்பட்டேன், இந்த தலைகளின் அட்டகாசத்திலிருந்தும், லொடுக்கு சுந்தரிகளின் ஆப்பிலிருந்தும் தப்பித்து ஓடினேன் ஓடினேன் கல்யாணம் ஆகும்வரை ஓடிக்கொண்டே இருந்தேன், இதன் காரணமாக தலயாக சிலக்காலமும், லொடுக்கு சுந்தரியாக சிலக் காலமும் அந்நியனாக மாறி மாறி நடிக்கும் கொடுமைக்குத் தள்ளப்பட்டதால், அவர்களின் வலி எனக்கு முழுமையாகத் தெரியும். அதிலிருந்து சிறு பகுதியையே இதில் பதிந்துள்ளேன்".

211 comments:

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 4:31 AM  

///அவனோட இத்துப்போன அறுவ டைமிங் சென்ஸை பொறுத்துக்கிட்டு, ///

இப்ப புரியுது, கல்லூரியே உங்கள் வருகையில் ஏன் கதிகலங்கியது என்று. ஒருத்தனையும் பாக்கி வைக்காம காலாய்ச்ச இப்படித்தான் போல! :-))))

முரளிகண்ணன் said...
September 6, 2008 at 4:40 AM  

நீங்க எந்த கேட்டகிரி?

விஜய் ஆனந்த் said...
September 6, 2008 at 7:11 AM  

:-)))...

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 8:09 AM  

ராப்! மோகன் நான் எழுதப்போற கட்டுரைய ஆராய்ச்சிக் கட்டுரைன்னு தப்பா போட்டுட்டாரு.

உண்மையிலேயே இதுதான் உலகின் மிகச்சிறந்த ஆரய்ச்சி கட்டுரை :)))

rapp said...
September 6, 2008 at 8:42 AM  

//இப்ப புரியுது, கல்லூரியே உங்கள் வருகையில் ஏன் கதிகலங்கியது என்று. ஒருத்தனையும் பாக்கி வைக்காம காலாய்ச்ச இப்படித்தான் போல! :-))))
//

ஹா ஹா ஹா, நைஸ் ட்ரை மோகன். இதுக்கு பதில் சொன்னா, நான் கல்லூரியில லொடுக்கு சுந்தரியா இருந்தேன்னு நானே என் வாயால வாக்குமூலம் கொடுத்த மாதிரி ஆகுறதுக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................................

rapp said...
September 6, 2008 at 8:44 AM  

முரளிக்கண்ணன், நான்தான் தெளிவா சொல்லிருக்கேனே, இரண்டு வகை வாழ்க்கையையும் வாழ்ந்திட்டுத் தான் இந்தப் பதிவை உணர்வுபூர்வமா எழுதறேன்னு:):):)

rapp said...
September 6, 2008 at 8:45 AM  

வாங்க விஜய் ஆனந்த், உங்களைப் பத்தி கூட புகழ்ந்து எழுதி இருக்கேனே, நீங்க இப்டி ஒரு சின்ன சிரிப்போட நிறுத்திட்டீங்களே:):):)

rapp said...
September 6, 2008 at 8:52 AM  

//உண்மையிலேயே இதுதான் உலகின் மிகச்சிறந்த ஆரய்ச்சி கட்டுரை//
நியாயமான பேச்சண்ணே, இதுல அநியாயம் என்னன்னா, மோகன் என்கிட்டே கன்பர்ம் பண்ணிக்காமயே, என் பதிவை படிக்கறதுக்கு முந்தியே, கும்மிப் பதிவுன்னு முடிவுப்பண்ணிட்டாருண்ணே. இந்த மாதிரி இந்த சமூகமே, லொடுக்கு சுந்தரிகளுக்கு எதிரா செயல்படுதுங்கறதைத்தான் இங்க, அவங்க சார்பா குமுறி இருக்கேன் :):):)

சின்னப் பையன் said...
September 6, 2008 at 9:11 AM  

அவ்வ்வ்...... :-)))))))

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:11 AM  

உங்களைப் பத்தி கூட புகழ்ந்து எழுதி இருக்கேனே,/

ஆஹா ஓருமார்க்கமாத்தான் இருக்க‌

வெண்பூ said...
September 6, 2008 at 9:16 AM  

//கொஞ்சம் பார்க்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் தான்தோன்றித்தனமான கேரக்டர், உலகத்தில் தன்னை விட புத்திசாலி யாரும் இல்லை என்ற மிதப்பில் இருக்கும் தன்மை, விதண்டாவாதம் மற்றும் எதிர்கருத்துடயவர்களை பரமவைரியாகக் கருதும் குணம் //

தற்புகழ்ச்சி அதிகமா தெரியுது :)

*****

ஃபோட்டோல்லாம் சூப்பர். அதிலும் அந்த நாலு ஃபாரின் லொடுக்கு சுந்தரிங்க கலக்கல்..

Sanjai Gandhi said...
September 6, 2008 at 9:30 AM  

Photos ellam chumma gujala keethu thala :))

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:31 AM  

ஃபோட்டோல்லாம் சூப்பர். அதிலும் அந்த நாலு ஃபாரின் லொடுக்கு சுந்தரிங்க கலக்கல்..
//

நாகரீகம் கருதி நான் சொல்லாம இருந்தேன் ஹி..ஹி..ஹீ

rapp said...
September 6, 2008 at 9:36 AM  

ச்சின்னப்பையன், நீங்க சொன்னா மாதிரி, நான் உங்க பேரை, வெளிப்படையா எழுதலையே, எப்ப என்னோட கமிஷன அனுப்பபோறீங்க?

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:39 AM  

எப்ப என்னோட கமிஷன அனுப்பபோறீங்க?
//

தலக்கி எல்லார்கிட்டயும் நல்ல பேரு இருக்கே எப்படின்னு யோசிச்சேன். இப்படித்தானா!!!! சரி! சரி!

rapp said...
September 6, 2008 at 9:40 AM  

//தற்புகழ்ச்சி அதிகமா தெரியுது :)//
அதுசரிங்க சகலகலா சம்பந்தி, எங்களப் பத்தி இருக்கட்டும், விருச்சிககாந்த் பத்தி ஒன்னும் சொல்லலியே:):):)


//
ஃபோட்டோல்லாம் சூப்பர். அதிலும் அந்த நாலு ஃபாரின் லொடுக்கு சுந்தரிங்க கலக்கல்..//

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே(எழுத்து மட்டும்தான் என்னுது, மீதி அனைத்தும் மோகனோட கலாரசனையின் வெளிப்பாடு :):):) )

rapp said...
September 6, 2008 at 9:42 AM  

//Photos ellam chumma gujala keethu thala :))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............சஞ்சய், அப்போ பதிவு மொக்கையா(ஹி ஹி இப்படில்லாம் கேட்டாலாவது, யாராச்சும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்களான்னுதான்) :):):)

rapp said...
September 6, 2008 at 9:43 AM  

//நாகரீகம் கருதி நான் சொல்லாம இருந்தேன் ஹி..ஹி..ஹீ
//

அண்ணே, நாகரிகம்னா என்னண்ணே? அது எங்கக் கிடைக்கும்? கிலோ என்ன விலை? :):):)

rapp said...
September 6, 2008 at 9:44 AM  

//தலக்கி எல்லார்கிட்டயும் நல்ல பேரு இருக்கே எப்படின்னு யோசிச்சேன். இப்படித்தானா!!!! சரி! சரி!
//

அண்ணே, என்னமோ நீங்க அவர்கிட்டயிருந்து கமிஷனே வாங்காத மாதிரி ஆக்ட் கொடுக்கறீங்க:):):)

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:45 AM  

இன்னும் ஐந்து நிமிடங்களில் அண்ணன் தாமிரா இங்கு கும்மி அடிக்க வருகிறார் பராக்!பராக்!

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:47 AM  

என்னம்மா பொண்ணு நீயி...இப்படியா அண்ணன போட்டுகுடுக்குறது :))

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:49 AM  

மன்னிக்கவும் இன்னும் 15 நிமிடங்களில் வருவார்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 9:50 AM  

அண்ணே, நாகரிகம்னா என்னண்ணே? அது எங்கக் கிடைக்கும்? கிலோ என்ன விலை? :):):)
//

நா அப்பீட்டு ஹி..ஹி..ஹி..

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 9:56 AM  

கலக நாயகன் ரித்தீஷ் அவர்களே!,

ச்சின்னப்பையன் ஏதோ உள்ளடி வேலை செய்து உள்ளார். ராப் கமிஷனை பெற்றுக்கொண்டு விஷயங்களை மறைக்கிறார். புதுகை கமிஷனே வாங்காத மாதிரி ஆக்ட்
கொடுக்கிறார். ரித்தீஷ் மன்ற நிர்வாகிகள் மூவரும் கூட்டு சதி செய்துள்ளது நிரூபணமாகிறது.

எனவே நிர்வாகிகளை உடனடியாக மாற்றுங்கள்.

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:02 AM  

ரித்தீஷ் மன்ற நிர்வாகிகள் மூவரும் கூட்டு சதி செய்துள்ளது நிரூபணமாகிறது.

எனவே நிர்வாகிகளை உடனடியாக மாற்றுங்கள்.
//

ஹய்யோ!ஹைய்யோ! நாங்க அவருகிட்டயே வாங்க வேண்டியத வாங்கிட்டுத்தான் அவர் புகழைப் பரப்புறோம்.( அதாவது அவரோட அன்பை..ஹி..ஹி..ஹி..)

Thamira said...
September 6, 2008 at 10:08 AM  

புதுகை.. ஏன் இப்பிடி.? என்னை ஒரு அமைச்சர் ரேஞ்சுக்கு ஒசத்தி, 5 நிமிசத்துல வந்துருவார், 10 நிமிசத்துல வந்துருவார், இதோ வந்தேவிட்டார்ன்னு.. பயங்கர பில்டப் குடுத்துவெச்சிருக்கீங்க.. கவுத்துரப்போறாங்க..

Thamira said...
September 6, 2008 at 10:10 AM  

ஸாரி புதுகை, உங்களின் இந்த கூட்டுச்சதியை மோக‌னிடம் நான் சொல்லவில்லை. (உங்களை மொத்த ராப்பும், ச்சின்னப்பையனும் தேடிக்கொண்டிருக்கிறார்களாம், என்னிடம் சொன்னதுக்கு, பாத்து ஜாக்கிரதை.!)

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:10 AM  

நீங்க ஆவலுடன்( ஓழுங்காப் படிங்கப்பா அவல் இல்ல) எதிர்பார்த்த அண்ணன் தாமிரா இதோ வந்துவிட்டார்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:12 AM  

என்னிடம் சொன்னதுக்கு, பாத்து ஜாக்கிரதை.!)
//
அடச்சேய் இந்த கலிகாலத்துல யாரையுமே நம்ப முடியலப்பா

Thamira said...
September 6, 2008 at 10:12 AM  

நான் யாருக்கும் ஒன்றல்லது இரண்டு பின்னூட்டங்களே இடுவது வழக்கம். கும்மியடிப்பதென்றால் என்ன என்று அப்துலிடம் கேட்டிருந்தேன். ட்ரெய்னிங் தருகிறேன் மோகன் தளத்துக்கு வாருங்கள் என்றார், என்ன ஆளைக்காணவில்லை?

வெண்பூ said...
September 6, 2008 at 10:14 AM  

கும்மியா??? அதுவும் நம்ம ராப் பதிவுலன்னா நான் இல்லாம எப்படின்றேன்..

Thamira said...
September 6, 2008 at 10:14 AM  

கும்மியடிக்க ட்ரெய்னிங் எடுத்துக்கொண்டிருப்பதால் பதிவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என 'ராப்' கோபித்துக்கொள்ளவேண்டாம்.! (அந்த படங்களை இணைத்த மோகனுக்கு ஸ்பெஷல் நன்றிகள், கர்ச்சீப்பை எங்க காணோம்)

வெண்பூ said...
September 6, 2008 at 10:15 AM  

//தாமிரா said...
நான் யாருக்கும் ஒன்றல்லது இரண்டு பின்னூட்டங்களே இடுவது வழக்கம். கும்மியடிப்பதென்றால் என்ன என்று அப்துலிடம் கேட்டிருந்தேன். ட்ரெய்னிங் தருகிறேன் மோகன் தளத்துக்கு வாருங்கள் என்றார், என்ன ஆளைக்காணவில்லை?
//

அவரு வேற எங்க போயிட போறாரு??? வாங்க நாம ரெண்டு பேரும் ஆரம்பிப்போம்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:15 AM  

கும்மியடிப்பதென்றால் என்ன என்று அப்துலிடம் கேட்டிருந்தேன். ட்ரெய்னிங் தருகிறேன் மோகன் தளத்துக்கு வாருங்கள் என்றார்
//

யாரு? உங்களுக்கு நா சொல்லிக்குடுக்கனுமா?செலக்ட்டிவ் அம்னீஷியா வந்தாலே இத மட்டும் மறக்காத ஆளு நீங்க..உங்களுக்கு நானு... அட கஷ்டகாலமே!

Thamira said...
September 6, 2008 at 10:16 AM  

வந்துட்டீங்களா.. வாங்க வாங்க, கூட வெண்பூவுமா, சந்தோஷம்ங்க.!

வெண்பூ said...
September 6, 2008 at 10:16 AM  

//rapp said...
அண்ணே, நாகரிகம்னா என்னண்ணே? அது எங்கக் கிடைக்கும்? கிலோ என்ன விலை? :):):)
//

மேல கீழ முன்னால பின்னால சைடில எல்லா பக்கமும் ரிப்பீட்டுகிறேன்....

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:17 AM  

வெண்பூ! கழுத கெட்டா கும்மி...நா இங்க தான் இருக்கே. தாமிரா காலையில மாட்டுன கூலிங் கிளாச இன்னும் கழட்டல போல‌

வெண்பூ said...
September 6, 2008 at 10:18 AM  

//rapp said...
//Photos ellam chumma gujala keethu thala :))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............சஞ்சய், அப்போ பதிவு மொக்கையா(ஹி ஹி இப்படில்லாம் கேட்டாலாவது, யாராச்சும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்களான்னுதான்) :):):)
//

இப்படியெல்லாம் பப்ளிக்ல கேக்ககூடாது. அப்புறம் யாராவது உண்மைய சொல்லிடப் போறாங்க... :)

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:19 AM  

இப்படியெல்லாம் பப்ளிக்ல கேக்ககூடாது. அப்புறம் யாராவது உண்மைய சொல்லிடப் போறாங்க... :)

//

சொல்லாட்டினா மட்டும் தெரியாதாக்கும்

வெண்பூ said...
September 6, 2008 at 10:19 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வெண்பூ! கழுத கெட்டா கும்மி...நா இங்க தான் இருக்கே. தாமிரா காலையில மாட்டுன கூலிங் கிளாச இன்னும் கழட்டல போல‌
//

கூலிங் கிளாஸ் போடுற எல்லாரும் ஜே.கே.ரித்தீஷ் ஆகமுடியாது தாமிரா...

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:19 AM  

கூலிங் கிளாஸ் போடுற எல்லாரும் ஜே.கே.ரித்தீஷ் ஆகமுடியாது தாமிரா...
//
அது

வெண்பூ said...
September 6, 2008 at 10:20 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
கும்மியடிப்பதென்றால் என்ன என்று அப்துலிடம் கேட்டிருந்தேன். ட்ரெய்னிங் தருகிறேன் மோகன் தளத்துக்கு வாருங்கள் என்றார்
//

சரி சரி... பால பாடத்தை ஆரம்பிப்போம். கும்மிக்கு முதல் விசயம் பதிவ படிச்சிருக்கக்கூடாது. படிச்சிருந்தாலும் அத ரெஃபர் பண்ணி எதுவும் பின்னூட்டமிடக்கூடாது...

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:20 AM  

தாமிரா பதிவ படிக்க போய்ட்டாரு போல‌

Thamira said...
September 6, 2008 at 10:22 AM  

//கூலிங் கிளாஸ் போடுற எல்லாரும் ஜே.கே.ரித்தீஷ் ஆகமுடியாது தாமிரா...// அவ்வ்வ்வ்... (அன்னிக்கு போட்டோ எடுக்கும் போதுதான் கூலிங்கிளாஸையே கண்ணால பார்த்த பார்ட்டி நானு..)

வெண்பூ said...
September 6, 2008 at 10:22 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
நீங்க ஆவலுடன்( ஓழுங்காப் படிங்கப்பா அவல் இல்ல) எதிர்பார்த்த அண்ணன் தாமிரா இதோ வந்துவிட்டார்
//

எங்க வந்த மாதிரியே தெரியலயே. இன்ட்ரோ மட்டும் குடுத்துட்டு காணாம போயிட்டாரு..

Thamira said...
September 6, 2008 at 10:23 AM  

பாடத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி..

கொஞ்சம் காதைக்குடுங்க அப்துல், ஒரு ரகசியம் சொல்லணும்.. கடமை அழைக்குது, 10 நிமிசம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு போனது எங்க தெரியுமா? கேண்டீனுக்கு..(அதுவும் கடமைதான் இல்லியா?) 7.30க்குள்ள போகலின்னா மூடிருவானுங்க..

வெண்பூ said...
September 6, 2008 at 10:24 AM  

//தாமிரா said...
//கூலிங் கிளாஸ் போடுற எல்லாரும் ஜே.கே.ரித்தீஷ் ஆகமுடியாது தாமிரா...// அவ்வ்வ்வ்... (அன்னிக்கு போட்டோ எடுக்கும் போதுதான் கூலிங்கிளாஸையே கண்ணால பார்த்த பார்ட்டி நானு..)
//

விடுங்க... போட்டோ எடுக்குறப்ப ஒரு பத்து பதினஞ்சி வயசு கொறச்சி காமிக்கிறதுக்கு கூலிங்கிளாஸ்தான் கரெக்ட். நீங்க கூட பாருங்களேன் 30 வயசு மாதிரிதான் தெரியுறீங்க :)

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:24 AM  

அன்னிக்கு போட்டோ எடுக்கும் போதுதான் கூலிங்கிளாஸையே கண்ணால பார்த்த பார்ட்டி நானு..)
//

சரி போட்டோ எடுத்து முடிச்சவுடன அத கடன் வாங்கின ஆளுகிட்ட திருப்பி குடுக்கலன்னு ஊருக்கு ஓரு வதந்தி உலவுதே

Thamira said...
September 6, 2008 at 10:25 AM  

யோவ்.. நீங்க சொல்லிக்குடுக்கிறீங்க.. நான் கத்துக்குறேன், ஸ்பீடு ஸ்லோவாத்தான் இருக்கும்.. இன்னாபா நீங்க வாத்யாரு.?

வெண்பூ said...
September 6, 2008 at 10:25 AM  

//தாமிரா said...
பாடத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி..

கொஞ்சம் காதைக்குடுங்க அப்துல், ஒரு ரகசியம் சொல்லணும்.. கடமை அழைக்குது, 10 நிமிசம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு போனது எங்க தெரியுமா? கேண்டீனுக்கு..(அதுவும் கடமைதான் இல்லியா?) 7.30க்குள்ள போகலின்னா மூடிருவானுங்க..
//

நாங்க எல்லாம் வேறொரு வேலைக்கி போறதுக்குதான் கடமை அழைக்குதுன்னு சொல்லுவோம். நீங்க என்னடான்னா அப்படியே அதுக்கு எதிரா ஒரு விசயத்துக்கு....

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:25 AM  

10 நிமிசம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு போனது எங்க தெரியுமா? கேண்டீனுக்கு..(அதுவும் கடமைதான் இல்லியா?) 7

//

ஓஹோ! அப்ப வடை பெறப்போனேன்னு சொல்லுங்க‌

வெண்பூ said...
September 6, 2008 at 10:25 AM  

ஹை... நாந்தான் 50

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:26 AM  

யோவ் தாமிரா சைக்கிள் கேப்பில 50 போட்டீயேபா

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:27 AM  

51 venpoo

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:29 AM  

நாங்க எல்லாம் வேறொரு வேலைக்கி போறதுக்குதான் கடமை அழைக்குதுன்னு சொல்லுவோம். நீங்க என்னடான்னா அப்படியே அதுக்கு எதிரா ஒரு விசயத்துக்கு....
//

அண்ணே அது கடமையா கடனா?

வெண்பூ said...
September 6, 2008 at 10:29 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஓஹோ! அப்ப வடை பெறப்போனேன்னு சொல்லுங்க‌
//


ஆஹா... தாமிரா வடை பெற போறாரா?? வேணாம்னு கெஞ்சணும். ஆனா மோகன் கந்தசாமி வேற கோச்சுக்குவாரே?

Thamira said...
September 6, 2008 at 10:29 AM  

//நீங்க கூட பாருங்களேன் 30 வயசு மாதிரிதான் தெரியுறீங்க :)// அவ்வ்வ்.. நிஜமா எனக்கு 24 தாம்ப்பா..!

//நீங்க என்னடான்னா அப்படியே அதுக்கு எதிரா ஒரு விசயத்துக்கு....// யோவ் எப்ப எதப்பத்தி பேசுறதுனு விவஸ்தையே கிடையாதா?

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:30 AM  

ஆனா மோகன் கந்தசாமி வேற கோச்சுக்குவாரே?
//

அது மோகன் கந்தசாமி இல்ல ஜோசப் பால்ராஜ்

வெண்பூ said...
September 6, 2008 at 10:30 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
51 venpoo
//

இதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கிறேன். நாந்தான் 50. :)

Thamira said...
September 6, 2008 at 10:30 AM  

அப்படியே அதுக்கு எதிரா ஒரு விசயத்துக்கு....//
அண்ணே அது கடமையா கடனா?//
சரியான கேள்வி.!

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:31 AM  

அவ்வ்வ்.. நிஜமா எனக்கு 24 தாம்ப்பா..!

//


ஆமா!ஆமா!இருபது வருசத்துக்கு முன்னாடி

வெண்பூ said...
September 6, 2008 at 10:32 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஆனா மோகன் கந்தசாமி வேற கோச்சுக்குவாரே?
//

அது மோகன் கந்தசாமி இல்ல ஜோசப் பால்ராஜ்
//

ஹி.ஹி... அதனாலதான் நான் தேடுனப்ப அந்த போஸ்ட் கெடக்கிலயா????

Thamira said...
September 6, 2008 at 10:33 AM  

கேண்டீன்ல என்னன்னு கேட்கவேயில்லையே.. வடையில்லை.! பொங்கல்.! ராத்திரிக்கும் பொங்கல் போடுற ஒரே கேண்டீன் எங்களோடது.. நான் எங்கெல்லாம் இருக்கிறோனோ அங்கெல்லாம் ஒரே பொங்கல்.. சே!

வெண்பூ said...
September 6, 2008 at 10:33 AM  

//தாமிரா said...
யோவ் எப்ப எதப்பத்தி பேசுறதுனு விவஸ்தையே கிடையாதா?
//

இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோச்சுகுறீங்க? நீங்க வடை சாப்புட்டு இருக்குறப்ப ஆய் போறதபத்தி பேசிட்டேனோ???

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:33 AM  

இதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கிறேன். நாந்தான் 50. :)
//

சாரிண்ணே! நா கணக்குல கொஞ்சம் வீக்கு(கணக்குல மட்டுமா)

Thamira said...
September 6, 2008 at 10:34 AM  

'ராப்' எங்கே காணோம்? ஓடிட்டாங்களா? அட்லீஸ்ட் கடைக்காரரைக்கூட காணோமே..

வெண்பூ said...
September 6, 2008 at 10:35 AM  

//தாமிரா said...
ராத்திரிக்கும் பொங்கல் போடுற ஒரே கேண்டீன் எங்களோடது.. நான் எங்கெல்லாம் இருக்கிறோனோ அங்கெல்லாம் ஒரே பொங்கல்.. சே!
//

அதுவாவது கெடக்குதே!!! நானெல்லாம் பாருங்க என் தங்கமணி சுடற தோசையை சாப்பிடணும்.. உங்கள நெனச்சி பொறாம பொறாமயா இருக்கு :)

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:35 AM  

நான் எங்கெல்லாம் இருக்கிறோனோ அங்கெல்லாம் ஒரே பொங்கல்.. சே!
//

அப்போ உங்கள பொங்கல் ஆசான் அப்படின்னு சொல்லலாமா கேப்டன்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:36 AM  

உங்கள நெனச்சி பொறாம பொறாமயா இருக்கு :)
//

சேம் பிளட்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:37 AM  

70

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:37 AM  

71

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:37 AM  

72

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:37 AM  

73

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:37 AM  

75

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:38 AM  

ஹையா 75 வெண்பூ இல்ல :))

வெண்பூ said...
September 6, 2008 at 10:39 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
நான் எங்கெல்லாம் இருக்கிறோனோ அங்கெல்லாம் ஒரே பொங்கல்.. சே!
//

அப்போ உங்கள பொங்கல் ஆசான் அப்படின்னு சொல்லலாமா கேப்டன்
//

பொங்க முதலாளி (எங்க முதலாளி)
பொங்கல் அண்ணா (எங்கள் அண்ணா)
பொங்க தின்ன ராசா (எங்க சின்ன ராசா)

Thamira said...
September 6, 2008 at 10:39 AM  

//அதுவாவது கெடக்குதே!!! நானெல்லாம் பாருங்க என் தங்கமணி சுடற தோசையை சாப்பிடணும்.. // தங்கத்தை எதுக்கு ஞாபகப் 'படுத்துறீங்க'.. நானே நாலு நாளா ஊருக்குப்போயிட்டாளேனு பிரிவு(?) சோகத்துல இருக்கேன் (ஐய்ய்யா!).

வெண்பூ said...
September 6, 2008 at 10:39 AM  

ஓகே... 10 நிமிசம் பிரேக். தோசை சாப்பிட்டு முடுச்சிட்டு வரேன்..

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:40 AM  

'ராப்' எங்கே காணோம்?
//

அதான?

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:42 AM  

ஓ.கே ஓரு 10 நிமிட பிரேக். தம்ம போட்டு வரேன்

Thamira said...
September 6, 2008 at 10:43 AM  

//பொங்க முதலாளி (எங்க முதலாளி)
பொங்கல் அண்ணா (எங்கள் அண்ணா)
பொங்க தின்ன ராசா (எங்க சின்ன ராசா)// (ஜூப்பருங்க..) நானே இன்னிக்கு "ஊட்டிக்கு போலாம் வர்றீங்களா"ன்னு ஒரு பதிவு போடறதா ஐடியா வச்சிருந்து அதை கேன்சல் பண்ணிட்டு ட்ரெய்னிங் எடுத்துகினுருக்கேன், சொம்மா நக்கல் பண்ணவேணாம். ஜாக்கிரத..

Thamira said...
September 6, 2008 at 10:45 AM  

திடும்னு.. பிரேக் உட்டா எப்பிடி? ........ரோஜா..ரோஜா......(ரிங் டோன்), தங்ஸ் கூப்பிடுது. நானு 5 நிமிஷம் பிரேக்.!

Anonymous said...
September 6, 2008 at 10:51 AM  

அடுத்தது நம்ம ஆட்சிதான், ராப் -க்கு கலைமாமணி பட்டம் கொடுத்திடலாம்.

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:51 AM  

........ரோஜா..ரோஜா......(ரிங் டோன்), தங்ஸ் கூப்பிடுது.
//

அன்புள்ள ரமாவுக்கு

நான் என் சம்பள பணத்தில் பில் கட்டும் போனில் இருந்து உன்னை அழைத்து பேசுகிறேன்.ஆனால் நீயோ உங்க அப்பா வாங்கி குடுத்த செல்போனில் இருந்து மிஸ்டு கால் குடுக்கிறாய்..

Anonymous said...
September 6, 2008 at 10:52 AM  

ada.. seekiram 100 podungappu.. :)

Anonymous said...
September 6, 2008 at 10:53 AM  

87

Anonymous said...
September 6, 2008 at 10:55 AM  

அடுத்த பிரதமரே நாந்தான்...பத்மபூஷனே குடுத்துருவோம்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 10:58 AM  

தாமிரா 5 நிமிஷத்துக்கு மேல பேசுறதப் பார்த்தா அண்ணி மாதிரி இல்லையே? டவுட்டா இருக்கே

Anonymous said...
September 6, 2008 at 11:00 AM  

அனானி முன்னேற்ற கழகத்தின் சார்பா ராப் அக்காவுக்கு ஓரு ஓ போட்டுக்குறோம்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:01 AM  

யோவ் வெண்பூ ஓரே ஓரு தோசையை எவ்வளவு நேரமா திங்கிற? ச்சின்னப்புள்ளத்தனமால்ல‌ இருக்கு....

Thamira said...
September 6, 2008 at 11:02 AM  

சரி.. சரி.. வந்துட்டேன். இன்னிக்கு ஆளில்லையே, தனியா ஒரு கோட்டர் வாங்கிட்டு போயி ஒரு நைன்டி ஊத்திக்கலாம்னு பாத்தா.. உட மாட்டீங்களே.. (பிராக்டீஸ் குறஞ்சு போயிட்டதால கோட்டர் முழுசும் முடியல..)

வெண்பூ said...
September 6, 2008 at 11:02 AM  

இருக்கீங்களாப்பு.... நம்ம ப்ரேக் ஓவர்... கும்மி கன்டின்யூ

வெண்பூ said...
September 6, 2008 at 11:03 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
யோவ் வெண்பூ ஓரே ஓரு தோசையை எவ்வளவு நேரமா திங்கிற? ச்சின்னப்புள்ளத்தனமால்ல‌ இருக்கு....
//

நான் தனி ஆளு இல்ல.. 630 பேரோட.. ச்சீ.. மூணு பேர் இருக்குற குடும்பத் தலைவன். அதனால தின்னுட்டு அப்புறம் தோசை சுட்டுட்டு... :)

Anonymous said...
September 6, 2008 at 11:04 AM  

அது போலி அனானி முன்னேற்ற கழகம். எங்க ஓர்ஜினல் அனானி முன்னேற்றக்கழகத்தின் சார்பா ராப் அக்காவுக்கு ஓரு ஓ போட்டுக்குறோம்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:04 AM  

96

Anonymous said...
September 6, 2008 at 11:04 AM  

தரமான சர்வீசுக்கு எங்கள் சேவையை நாடவும். லொடுக்கு சுந்தரிகளும், அல்லக்கை பாண்டியன்களும் குறைந்த சம்பளத்தில் சேவைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

ஆமா, தெரியாமத்தான் கேட்குறேன், லொடுக்கு சுந்தரிகளை கட்டி மேய்க்கறவனுக்கு / மேய்க்கறளுக்கு என்னா பேரு?

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:04 AM  

99

Anonymous said...
September 6, 2008 at 11:04 AM  

98

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:04 AM  

100

Anonymous said...
September 6, 2008 at 11:04 AM  

100

வெண்பூ said...
September 6, 2008 at 11:05 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
தாமிரா 5 நிமிஷத்துக்கு மேல பேசுறதப் பார்த்தா அண்ணி மாதிரி இல்லையே? டவுட்டா இருக்கே
//

அட அவரே அண்ணி ஊருக்கு போயிட்டாங்கன்னு வீக் எண்ட்ல எதாவது ரெடி பண்ணிட்டு இருப்பாரு.. அவரப் போயி. :)

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:05 AM  

ஹையா நான் தான் 100

வெண்பூ said...
September 6, 2008 at 11:05 AM  

//Anonymous said...
98
//

இதுதான் 100...யாருப்பா அது...

Anonymous said...
September 6, 2008 at 11:06 AM  

//அட அவரே அண்ணி ஊருக்கு போயிட்டாங்கன்னு வீக் எண்ட்ல எதாவது ரெடி பண்ணிட்டு இருப்பாரு.. அவரப் போயி. :)//

தெளிவாச் சொல்லுங்கப்பா. வேற அர்த்தம் வருதுல்ல. இல்ல அதுதான் அர்த்தமா?

Anonymous said...
September 6, 2008 at 11:06 AM  

அனானி போட்டது தான் 100, அப்துல்லா போட்டது போங்கு.

வெண்பூ said...
September 6, 2008 at 11:07 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஹையா நான் தான் 100
//

மறுபடியும் கணக்குல வீக்கு, மன்த், இயர், டிகேடு, செஞ்சுரி, மில்லினியம் எல்லாமே,

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:08 AM  

வெண்பூ said...
//Anonymous said...
98
//

இதுதான் 100...யாருப்பா அது...
//


இந்த வாட்டி நான் கணக்குல வீக் இல்ல...நல்லா எண்ணிப் பார்த்துட்டேன். நான் தான் 100

வெண்பூ said...
September 6, 2008 at 11:08 AM  

//வடகரை வேலன் said...
//அட அவரே அண்ணி ஊருக்கு போயிட்டாங்கன்னு வீக் எண்ட்ல எதாவது ரெடி பண்ணிட்டு இருப்பாரு.. அவரப் போயி. :)//

தெளிவாச் சொல்லுங்கப்பா. வேற அர்த்தம் வருதுல்ல. இல்ல அதுதான் அர்த்தமா?
//

ஹி..ஹி.. தாமிரா சொல்லுவாரு அது கரெக்டா இல்ல இன்னும் கரெக்ட் ஆகுலயான்னு..

வெண்பூ said...
September 6, 2008 at 11:10 AM  

//இந்த வாட்டி நான் கணக்குல வீக் இல்ல...நல்லா எண்ணிப் பார்த்துட்டேன். நான் தான் 100//

இது 109. அப்படியே ரிவர்ஸ்ல எண்ணி பாருங்க தெரியும்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:10 AM  

ஹி..ஹி.. தாமிரா சொல்லுவாரு அது கரெக்டா இல்ல இன்னும் கரெக்ட் ஆகுலயான்னு..
//

அவரு தெரமைக்கெல்லாம்ம்ம்ம்ம்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:11 AM  

அனானி போட்டது தான் 100, அப்துல்லா போட்டது போங்கு.

//

அட போங்கப்பா

வெண்பூ said...
September 6, 2008 at 11:13 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அவரு தெரமைக்கெல்லாம்ம்ம்ம்ம்
//

ஆனா அவர பாத்தா அப்படி தெரியலயே...ம்ம்ம்ம்ம்

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:13 AM  

தாமிராண்ணே இன்னுமா மிக்ஸிங் முடியல?

Anonymous said...
September 6, 2008 at 11:14 AM  

///தெளிவாச் சொல்லுங்கப்பா. வேற அர்த்தம் வருதுல்ல. இல்ல அதுதான் அர்த்தமா?////

வேலரு! ஞாபகப் படுத்தி உடுரீறு போலருக்கு!

Anonymous said...
September 6, 2008 at 11:15 AM  

//தாமிராண்ணே இன்னுமா மிக்ஸிங் முடியல?//

கரக்ட் பண்றாரு போல

வெண்பூ said...
September 6, 2008 at 11:15 AM  

//
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
தாமிராண்ணே இன்னுமா மிக்ஸிங் முடியல?
//

வாங்குனதே ஒரு குவாட்டரு. அதுலயும் நைன்ட்டிதான் அடிக்க போறாரு. அதுக்கு எதுக்கு இவ்ளோ நேரமா மிக்ஸிங்???

வெண்பூ said...
September 6, 2008 at 11:16 AM  

//வடகரை வேலன் said...
//தாமிராண்ணே இன்னுமா மிக்ஸிங் முடியல?//

கரக்ட் பண்றாரு போல
//

அப்படி உள்ளாற வரணும்.. கேள்விய மாத்துங்கப்பா

தாமிராண்ணே! இன்னுமா கரெக்ட் ஆகல?

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:18 AM  

மோந்ததுக்கே மயங்கிட்டானா தலைவன்

Thamira said...
September 6, 2008 at 11:19 AM  

புது பேண்டை என்ன பண்ணுனிங்க..
ஹார்லிக்ஸை கலந்தீங்கன்னா பாட்டில மூடிவைங்க..
பனியன்லாம் துவைச்சுப்போட்டீங்களா..
பால் இன்னும் மூணு நாளைக்கு வேணாண்ணு சொல்லிடுங்க..
படுக்குறதுக்கு முன்னாடியாவது வீட்டை பெருக்கிடுங்க..
ஆ.:பீஸ் போறதுக்கு முன்னாடி ஜன்னல மூடிட்டு போங்க..

சரிம்மா..
சரிம்மா..
சரிம்மா..

புதுகை.அப்துல்லா said...
September 6, 2008 at 11:19 AM  

சரி!இத்தோடு நான் வடை பெறுகிறேன். வ்வர்ட்டா....

வெண்பூ said...
September 6, 2008 at 11:20 AM  

//மோந்ததுக்கே மயங்கிட்டானா தலைவன் //

வயசாயிடுச்சில்ல... அதுனாலயா இருக்கும்..

ஒண்ணு ஏற்கனவே மட்டையாயிட்டாரு இல்லன்னா வாந்தி எடுத்துட்டு இருக்காரு அதுவும் இல்லன்னா
.
.
.
.
.
.
.
.
..
.
வால்பையனுக்கு போன் பண்ணி மிக்சிங்ல டவுட் கேட்டுகிட்டு இருக்காரு

Anonymous said...
September 6, 2008 at 11:20 AM  

ரகசியங்களை வெளியிட்ட ராப் -க்கு pspp லொடுக்கு சுந்தரிகள் கடும் கண்டனம். சாலை மறியல் அறிவிப்பு.

rapp said...
September 6, 2008 at 11:21 AM  

குத்துங்க குத்துங்க கும்மியக் குத்துங்க :):):)

வெண்பூ said...
September 6, 2008 at 11:21 AM  

ஓகே..நானும் வடை பெறுகிறேன். பாக்கலாம்... கும்மிக்கு உதவிய எல்லார்க்கும் நன்றி....

rapp said...
September 6, 2008 at 11:22 AM  

எனக்கு சசிகலா மட்டும்தான் பதில் போட்டிருக்காங்க, ஆற்காட்டாரை காணோம்:(:(:(

Anonymous said...
September 6, 2008 at 11:22 AM  

//வால்பையனுக்கு போன் பண்ணி மிக்சிங்ல டவுட் கேட்டுகிட்டு இருக்காரு//

வால் இப்ப இத விட்டுட்டு தற்காலிக நல்லவனா மாறீட்டார்னு சொன்னாங்க.

rapp said...
September 6, 2008 at 11:22 AM  

ஹை, நான்தான் 125 :):):)

Thamira said...
September 6, 2008 at 11:24 AM  

திருப்பயும் போன் வந்துடுச்சுப்பா.. அதுக்குள்ள என்னா கலவரம்..? 90 லிருந்து 120ஐ தாண்டி ஓடிட்டிருக்குதே.. இடையில வேலன் வேறயா? நான் இன்னும் ஆ.:பீஸுலதான் இருக்கிறேன்னு தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன். நைன்டிலாம் பத்து மணிக்கு மேலதான். அதுக்குள்ள கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னா விளங்கிடும் போலருக்கே.. கும்மின்னா எல்லாத்துக்கும் பதில் சொல்லவேண்டாம் இல்லையா..?

rapp said...
September 6, 2008 at 11:25 AM  

எல்லாரும் கெளம்பிட்டீங்களா?

Anonymous said...
September 6, 2008 at 11:25 AM  

ராப் என்ன ஆச்சு உங்க வேலை முயற்சி?

Anonymous said...
September 6, 2008 at 11:26 AM  

கும்மின்னா நமக்குப் பிடிச்சதுக்குப் பதில் சொல்லீட்டு மத்தத சாய்ஸ்ல விட்டுறலாம்.

Anonymous said...
September 6, 2008 at 11:26 AM  

என்ன ராப், கும்மி ஓஞ்ச துக்கு அப்பறம் வர்றீங்க!

Thamira said...
September 6, 2008 at 11:27 AM  

அடப்பாவிகளா.. பதில டைப் பண்றதுக்குள்ள ஓடிட்டாங்களே.. அப்ப நானும் கிளம்பிடவா.. (யாருகிட்ட உத்தரவு கேக்கிறேன்னே புரில..) டாஸ்மாக்க மூடிருவான்.

rapp said...
September 6, 2008 at 11:30 AM  

//ராப் என்ன ஆச்சு உங்க வேலை முயற்சி?//

எல்லாரும் அதையும் காமடியா எடுத்துக்கிட்டாங்க போலருக்குங்க வேலன் :):):)

Anonymous said...
September 6, 2008 at 11:31 AM  

ஆற்காட்டார் இங்க ஜால்ரா வாசிச்சிக்கிட்டு இருக்கார். சீக்கிரம் வந்து கும்மியில் ஐக்கியமாவார்.

rapp said...
September 6, 2008 at 11:36 AM  

இன்னைக்கு அனானி கும்மிய யாரு போடறா? சூப்பரா இருக்கு:):):)

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 11:36 AM  

கும்மிக்கு நன்றி நண்பர்களே! தொடரட்டும் உங்கள் சேவை

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 11:38 AM  

அனானிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஸ்பிலிட் பர்சனாளிட்டியும் இல்ல. நான் காமெடியும் பண்ணல.

ரவி said...
September 6, 2008 at 12:48 PM  

ரஜினி அரசியல் கட்சி போனியாகுமா ? லட்சுமிராய்க்கும் டோனிக்கு கல்யானமாகுமா ? என்பது போல இன்னும் பத்து கொமண்டு போடுவோம் தோழர்.

ரவி said...
September 6, 2008 at 12:48 PM  

அய்யய்யோ தோழர், முந்தைய கொமண்டை அனானியாக போட்டுவிடவும்...

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:45 PM  

ஜெய் ஹிந்த்!

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:47 PM  

பாரத சமுதாயம் வாழ்கவே..

வாழ்க.. வாழ்க..

பாரத சமுதாயம் வாழ்கவே!

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:48 PM  

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:49 PM  

//நீங்க எந்த கேட்டகிரி?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:49 PM  

//உண்மையிலேயே இதுதான் உலகின் மிகச்சிறந்த ஆரய்ச்சி கட்டுரை //

இதுக்கும் ரிப்பீட்டேஏஏ

வெண்பூ said...
September 6, 2008 at 1:49 PM  

//என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா? //

ஃபோட்டோல‌ இருக்குற‌ பொண்ணுங்க‌ ட்ரெஸ்ஸ‌ பாத்த‌தும் இப்ப‌டி ஒரு ட‌வுட்டா????

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:51 PM  

//மீதி அனைத்தும் மோகனோட கலாரசனையின் வெளிப்பாடு ://


யாருங்க அந்தக் கலா?

வெண்பூ said...
September 6, 2008 at 1:51 PM  

பரிசல், உங்களை இரவு நெடுநேரம் இணையத்தில் பார்க்கிறேன். நீ என்ன செய்கிறாய் என்று கேட்காதீர்கள். (காரணம் இருக்கிறது... சொல்லமாட்டேன்)

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:51 PM  

150 நீயா.. நானா?

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:52 PM  

அடப்பாவி...

காத்திருந்தவன்..

வேணாம் திட்டுவாங்க..

150 அடிக்கறதுக்குன்னே வந்தீங்களா பார்ட்னர்?

வெண்பூ said...
September 6, 2008 at 1:53 PM  

150 நாந்தான்.. எனக்கே தெரியாம நடந்தது இது..

//150 Comments - Show Original Post
//

இதுதான் ப்ரூஃப்...

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:54 PM  

லக்கிலுக் ரசிச்சு ரசிச்சு எழுதின தற்கால அரசியலைக் குறித்த பதிவுக்கு 19 கமெண்ட். (அதுலயும் ஆறு கடைக்காரர் போட்டது)

ராப்-புக்கு 153 கமெண்ட்!

வாழ்க வெட்டியாபீசர்..! (சீனியராய்ட்டீங்க மேடம்!)

வெண்பூ said...
September 6, 2008 at 1:55 PM  

//அடப்பாவி...

காத்திருந்தவன்..

வேணாம் திட்டுவாங்க..

150 அடிக்கறதுக்குன்னே வந்தீங்களா பார்ட்னர்? //

நானே ஃபில் பண்ணிடறேன்... காத்திருந்தவன் கக்கூஸ்ல நேத்து வந்தவன் ** போன மாதிரி.... அதானே???

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:55 PM  

//பரிசல், உங்களை இரவு நெடுநேரம் இணையத்தில் பார்க்கிறேன். நீ என்ன செய்கிறாய் என்று கேட்காதீர்கள். (காரணம் இருக்கிறது... சொல்லமாட்டேன்)//

பாவம்யா அவரு...

பரிசல்காரன் said...
September 6, 2008 at 1:57 PM  

ஓக்கே.. பார்ட்னர்.. தூக்கம் வருது. கிளம்பறேன்!

வெண்பூ said...
September 6, 2008 at 1:58 PM  

சரி... கார்க்கி வேற உங்களுக்காக காத்துட்டு இருக்காரு... அங்கியும் போய் ஒரு கும்மி போட்டுடுங்க.. நான் கிளம்புறேன். தூக்கம் வருது. குட் நைட்...

விஜய் ஆனந்த் said...
September 6, 2008 at 2:13 PM  

வட போச்சே...

யாருமே எங்கிட்ட சொல்லலியே...

வேகமா வந்து அட்டென்டன்ஸ் போட்டனே...

rapp said...
September 6, 2008 at 2:16 PM  

கும்மியுலக நண்பர்களே, என்னை மன்னிச்சுக்கங்க. இந்த வீக்கெண்டுன்னாலே இதான் பிரச்சினை, எனக்கும் என் ரங்கமணிக்கும் லேப்டாப்புக்காக ஒரு யுத்தமே நடக்கும். என் 'ஆராய்ச்சிக் கட்டுரையை' மோகன் கரெக்டா இன்னைக்குப் போட்டுட்டார். அதான் சரியா கும்மியடிக்க முடியல. அடுத்த கும்மிப்பதிவுல நான் வழக்கம்போல என் கடமைய ஆத்துறேன். ரொம்ப ரொம்ப சாரி:):):)

Anonymous said...
September 6, 2008 at 2:50 PM  

மொத்ததுல Mean Girls படத்துல வாரமாதிரி Plastic Girls !!!
சரிதானே????
:))))

rapp said...
September 6, 2008 at 4:29 PM  

கும்மியிலக் கலந்துக்கிட்ட மோகன், முரளிக்கண்ணன், அப்துல்லா அண்ணா, வெண்பூ, விஜய் ஆனந்த், சஞ்சய், தாமிரா, செந்தழல் இரவி, வடகரை வேலன், பரிசல்காரன், hisubash எல்லாருக்கும் நன்றியோ நன்றி:):):)

rapp said...
September 6, 2008 at 4:38 PM  

//லக்கிலுக் ரசிச்சு ரசிச்சு எழுதின தற்கால அரசியலைக் குறித்த பதிவுக்கு 19 கமெண்ட். (அதுலயும் ஆறு கடைக்காரர் போட்டது)

ராப்-புக்கு 153 கமெண்ட்!

வாழ்க வெட்டியாபீசர்..! (சீனியராய்ட்டீங்க மேடம்!)

//
முதல்ல, லக்கி அவர்கள் போட்டது கும்மிப் பதிவுங்கறீங்களா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................பாவம்ங்க அவரு.
இல்லை இது அவர் போட்ட அரசியல் கட்டுரை மாதிரி சமூகக் கட்டுரைங்கறீங்களா?
:):):)


ஹை, அப்ப நீங்க நேத்தைக்கு வாங்கின என்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டத்துக்கு என்ன அர்த்தம்? நீங்க பாலா சாரை விட, லக்கி அவர்களை விட சீனியர் பதிவர்னு அர்த்தமா:):):)
நான் போய் ஒவ்வொருத்தர்க்கிட்டையும் எந்தப் பதிவ போட்டாலும் வந்து பாருங்கன்னு கேக்குறேன், அதனால வராங்க, ஜாலியா நாலு பின்னூட்டம் போடறாங்க. வர்ற பின்னூட்டத்துக்கும், பதிவுக்கும், பதிவருக்கும் முடிச்சுப்போடற ஆளா நீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................அப்போ பதிவுலகத்துக்கு அம்புட்டு ஜூனியரா நீங்க?:):):)

rapp said...
September 6, 2008 at 4:56 PM  

//ஆமா, தெரியாமத்தான் கேட்குறேன், லொடுக்கு சுந்தரிகளை கட்டி மேய்க்கறவனுக்கு / மேய்க்கறளுக்கு என்னா பேரு?//

இது தெரியாதா உங்களுக்கு, மேய்க்கிற புருஷன் பேரு கூஜா, மேய்க்கிற பொண்டாட்டி பேர் குடும்ப இஸ்திரி :):):)

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:20 PM  

முரளிகண்ணன்,

///நீங்க எந்த கேட்டகிரி?///
அவர் லொடுக்கு சுந்தரிகளின் எட்டப்பி கேட்டகிரி, :-)))))))))))))

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:21 PM  

விஜய் ஆனந்த்,

/// வட போச்சே...
யாருமே எங்கிட்ட சொல்லலியே..
வேகமா வந்து அட்டென்டன்ஸ் போட்டனே../////

விடுங்க பாஸ், உங்களுக்கு ஒரு தனி கும்மி விருந்து படைச்சு பாயாசத்தோடு
பரிமாரிடலாம்.

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:21 PM  

புதுகை.எம்.எம்.அப்துல்லா,

கும்மி வாத்தியார் ஆயிட்டிங்க போலருக்கு, சொல்லவே இல்ல, :-)))

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:22 PM  

ச்சின்னப் பையன்,

கும்மிக்கு முன்னுரை எழுதிட்டு அதோட தல எஸ்கேப்பான கும்மிக்குட்டிகளை யார் வழிநடத்துறது? :-)))

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:23 PM  

வெண்பூ,

///ஃபோட்டோல்லாம் சூப்பர். அதிலும் அந்த நாலு ஃபாரின் லொடுக்கு சுந்தரிங்க கலக்கல்..////

ஜொள்ளு ரொம்ப ஓவரா விட்டா கைவசம் இருக்க ஆப்பிரிக்க லொடுக்கு சுந்தரிங்க படத்த போட்டுருவேன். :-)))))))

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:23 PM  

சஞ்சய்,
indian girls இமேஜ் சர்ச் பண்ணா இதவிட குஜாலா வருது தல, இருக்கறதிலே சுமாரானத எடுத்து போட்டுட்டேன்.

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:24 PM  

தாமிரா,

லேட்டா வந்தாலும் மேடையில நீண்ட கும்மி உரைய ஆத்திட்டின்களே! பேஷ்!

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:24 PM  

வடகரை வேலன்,

///ராப் என்ன ஆச்சு உங்க வேலை முயற்சி?///

அதபத்தி ஏன் பேசறிங்க? எல்லாரும் வேலை செஞ்சா கும்மி யாரு அடிக்கறது? :-))))))))))

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:25 PM  

செந்தழல் ரவி,

///இன்னும் பத்து கொமண்டு போடுவோம் தோழர்.///
///முந்தைய கொமண்டை அனானியாக போட்டுவிடவும்...////

ரெண்டு கமென்ட் -லையும் கொமண்டு டைப்பி இருக்குறீங்க! இதுதான் உங்க கொண்டையா! :-)))))))))) தமாஷு தமாஷு

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:25 PM  

பரிசல்காரன்,

///என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?///

வெள்ளக்காரன் போயிட்டு கம்ப்பனி ஆரம்பிக்கறேன் -ன்னு சொல்லி.
ரெண்டாவது வாட்டியும் வந்துட்டான். :-))))))

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:26 PM  

சுபாஷ்,

///மொத்ததுல Mean Girls படத்துல வாரமாதிரி Plastic Girls !!!
சரிதானே????////

அக்தே அக்தே!!!

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 8:27 PM  

ராப்,
பட்டய கெளப்புறீங்க போங்க!
:))))

Sundar சுந்தர் said...
September 6, 2008 at 10:57 PM  

நல்லா புரிய வச்சிட்டீங்க. இப்டி ஒரு வர்க்கம் உள்ளதே தெரியாமல் போன குறை நீக்கிவிட்டீர்கள். நன்றி!

ரவி said...
September 6, 2008 at 11:49 PM  

///////அவனோட இத்துப்போன அறுவ டைமிங் சென்ஸை பொறுத்துக்கிட்டு

இந்த பதிவிலேயே எனக்கு புடிச்ச ஒரே லைன் இது தான். இதையும் கொப்பி செய்து மோகன் கந்தசாமி கொமண்டு போட்டூவிட்டார். நான் என்ன செய்வது இப்போ ?

ரவி said...
September 6, 2008 at 11:50 PM  

அது எப்படிடா நேத்து ரெண்டு கமெண்டு போட்ட பதிவையே உன்னால இப்ப புதுசா பாக்க முடியுது என்கிறீங்களா ?

எனக்கு கல்லாணமாச்சு...

rapp said...
September 7, 2008 at 3:52 AM  

me the 180th :):):)

rapp said...
September 7, 2008 at 3:53 AM  

//
எனக்கு கல்லாணமாச்சு...//
அப்போ நீங்க கூஜா இரவியா:):):)

rapp said...
September 7, 2008 at 3:54 AM  

//இந்த பதிவிலேயே எனக்கு புடிச்ச ஒரே லைன் இது தான். //
மத்ததெல்லாம் மலரும் நினைவுகளைக் கெளப்புதுங்களா இரவி:):):)

rapp said...
September 7, 2008 at 4:03 AM  

//நல்லா புரிய வச்சிட்டீங்க. இப்டி ஒரு வர்க்கம் உள்ளதே தெரியாமல் போன குறை நீக்கிவிட்டீர்கள்.//
அப்போ நீங்க இவ்ளோ நாள் கோமாவுல இருந்தீங்களா (ஜாலியா சொன்னேன் கோச்சுக்காதீங்க):):):)

rapp said...
September 7, 2008 at 4:17 AM  

//புதுகை.எம்.எம்.அப்துல்லா,

கும்மி வாத்தியார் ஆயிட்டிங்க போலருக்கு, சொல்லவே இல்ல, :-)))//

மோகன் அண்ணன் அந்த புரோமொஷன வாங்கி ரொம்ப நாள் ஆச்சு:):):)

//ச்சின்னப் பையன்,

கும்மிக்கு முன்னுரை எழுதிட்டு அதோட தல எஸ்கேப்பான கும்மிக்குட்டிகளை யார் வழிநடத்துறது? :-)))//
ஆமாம்ல மோகன், பார்த்தீங்களா அவரோட பொறுப்பில்லாத்தனத்த :):):)

//தாமிரா,

லேட்டா வந்தாலும் மேடையில நீண்ட கும்மி உரைய ஆத்திட்டின்களே! பேஷ்!//
சரியா சொன்னீங்க :):):)

//வெள்ளக்காரன் போயிட்டு கம்ப்பனி ஆரம்பிக்கறேன் -ன்னு சொல்லி.
ரெண்டாவது வாட்டியும் வந்துட்டான். :-))))))//

சூப்பர்:):):)

Thamira said...
September 7, 2008 at 4:58 AM  

//கும்மிக்குட்டிகளை யார் வழிந‌டத்துறது// இது சூப்பருங்க.. கும்மியடிச்ச இடம் எப்பிடி கிடக்குதுனு பாக்க வந்தேன், அப்புறம் பரிசல் வந்து கும்மி கொட்டிட்டு போயிருக்கார் போலருக்கே.. அடுத்த கும்மிக்காவது விஜயை மறக்காம கூப்புட்றணும்.

Thamira said...
September 7, 2008 at 4:59 AM  

200 போடலாம் யாராவது வர்றீங்களாப்பா..

வெண்பூ said...
September 7, 2008 at 5:00 AM  

இன்னா தாமிரா!! நேத்து ஒரே குஜாலா??? டாஸ்மாக்கு மூடுறதுக்குள்ள கரிகிட்டா போயி சேந்துகினியா????

வெண்பூ said...
September 7, 2008 at 5:02 AM  

// தாமிரா said...
200 போடலாம் யாராவது வர்றீங்களாப்பா..
//

ஒன்னாலதான் ஒரு குவாட்டர் அடிக்கமுடியாம நைன்ட்டி அடிச்சிகினி கீறியே! நீ எப்படிப்பா 200 அடிப்ப??? ஒரு டவுட்டு அதுதான்..

வெண்பூ said...
September 7, 2008 at 5:03 AM  

//rapp said...
//புதுகை.எம்.எம்.அப்துல்லா,

கும்மி வாத்தியார் ஆயிட்டிங்க போலருக்கு, சொல்லவே இல்ல, :-)))//

மோகன் அண்ணன் அந்த புரோமொஷன வாங்கி ரொம்ப நாள் ஆச்சு:):):)
//

கமா கரெக்டா போடணும் ராப். யாரு ப்ரோமொசன் வாங்குனது? மோகன் அண்ணனா? இல்லை அண்ணனா?

வெண்பூ said...
September 7, 2008 at 5:06 AM  

//rapp said...
//ராப் என்ன ஆச்சு உங்க வேலை முயற்சி?//

எல்லாரும் அதையும் காமடியா எடுத்துக்கிட்டாங்க போலருக்குங்க வேலன் :):):)
//

கண்டிப்பாக இல்லை ராப். எனக்கு தெரிந்து நமது மொக்கை + கும்மி பதிவர்களில் பாரிஸில் இருப்பது நீங்கள் ஒருவர்தான். அதனால் தான் உதவ முடியாத நிலையில் இருக்கிறோம். :(

நீங்கள் ஃப்ரீ லான்சராக முயற்சி செய்யலாமே! elance.com வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

வெண்பூ said...
September 7, 2008 at 5:09 AM  

//rapp said...
கும்மியுலக நண்பர்களே, என்னை மன்னிச்சுக்கங்க. இந்த வீக்கெண்டுன்னாலே இதான் பிரச்சினை, எனக்கும் என் ரங்கமணிக்கும் லேப்டாப்புக்காக ஒரு யுத்தமே நடக்கும்.
//

சேம் பிளட். இங்க ஆதர்ஷ் கூடவும் நடக்கும். அவருக்கு விதவிதமா கார் பாக்கணும் (அது நான் லேப்டாப் ஓபன் பண்ண உடனே அவருக்கு ஞாபகம் வந்துடும்)

//
என் 'ஆராய்ச்சிக் கட்டுரையை' மோகன் கரெக்டா இன்னைக்குப் போட்டுட்டார். அதான் சரியா கும்மியடிக்க முடியல. அடுத்த கும்மிப்பதிவுல நான் வழக்கம்போல என் கடமைய ஆத்துறேன். ரொம்ப ரொம்ப சாரி:):):)
//

ஆத்துங்க!! ஆத்துங்க!! நல்லா ஆத்துங்க..

வெண்பூ said...
September 7, 2008 at 5:10 AM  

தனியா கும்முறதுக்கு போரடிக்குது. அதனால வர்ட்டா... யாராவது 200 அடிங்கப்பா. இன்னும் 8தான் பாக்கி.

*** வெறுமனே நெம்பர் போடுறதுன்னா நானே போட்டுடுவேன். ****

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:44 PM  

வெண்பூ said...
தனியா கும்முறதுக்கு போரடிக்குது. அதனால வர்ட்டா... யாராவது 200 அடிங்கப்பா. இன்னும் 8தான் பாக்கி.

*** வெறுமனே நெம்பர் போடுறதுன்னா நானே போட்டுடுவேன். ****

//

சரி நம்பர் போடல

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:44 PM  

நம்பர் போடாமலேயே 200 போடுறேன்

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:56 PM  

எப்படின்னு சந்தேகமா இருக்கா வெண்பூ?

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:57 PM  

சந்தேகமேபடாதீங்க!!!

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:57 PM  

சந்தேகமேபடாதீங்க!!!

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:57 PM  

நம்புய்யா கண்டிப்பா நம்பர் போட மாட்டேன்

மோகன் கந்தசாமி said...
September 7, 2008 at 1:57 PM  

100

மோகன் கந்தசாமி said...
September 7, 2008 at 1:57 PM  

200

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:58 PM  

ஹையா மோகன் இடையில வந்தாலும் நாந்தான் 200

புதுகை.அப்துல்லா said...
September 7, 2008 at 1:58 PM  

நான் போட்ட 199 தான் 200



கிடங்கு