Sunday, November 30, 2008

ஓ! இதுதான் பதிவர் சந்திப்பா?

·

விஸ்பரிங் மலையையும் போண்டமாக் ஆற்றையும் கடந்து, ஒரு பெயர் தெரியாத ஏரியை சுற்றிக்கொண்டு, இரண்டு டர்ன்பைக், பல டவுன்ஷிப் சாலைகள் மற்றும் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய தொடர்வண்டி சேவை ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு, காரிலும், நடந்தும் சென்று, பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட மோகன் கந்தசாமிக்கு அக்கூட்டத்தில் கிடைத்தது என்ன? லட்டு கொடுத்து லவடா வாங்கின கதை எவர்க்கேனும் தெரியுமா?

அது பற்றி நான் யோசிக்கத் தொடங்கும் முன், நண்பர் குருவிற்கு நன்றி சொல்வது உசிதம். மனிதர் மிகத்தெளிவாய் பேசுகிறார். சுயமரியாதை என்னும் வஸ்து என்னுள் துளிர்விட்டு ஒரு கட்டியாக வளர்ந்துவிட்ட பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நான் எந்த நண்பர் அல்லது உறவினர் வீட்டிலும் இரவு தங்கியதில்லை. குருவை சந்தித்துவிட்டு, பிறகு நூவார்க் சென்று, ரட்கர்ஸ் ஆய்வுச்சாலையில் தங்குவது என்ற எனது எண்ணத்தை நான் ஏன் சங்கடமின்றி மாற்றிக்கொண்டேன்? நண்பர் குருவின் நட்பு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்ததே காரணம்! நெஞ்சத்தகநக நட்பவர்தம் நட்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

நாசரேத் நகரின் மீதான பற்றினால் நசரேயன் என்னும் பெயரில் பதிவுகள் எழுதும் பதிவர் நசரேயன் தனது நண்பரும் வருங்கால பதிவருமான சுதனுடன் சந்திப்பில் கலந்துகொண்டார். முதல் சந்திப்பிலேயே நெருங்கிப் பழகும் நட்புக்கொள்கை கொண்டவர் போல் தெரியும் இவரிடமிருந்து இனி எனக்கு பண்பு கடத்தல் ஏற்படலாம். இவருக்கு போலி டோண்டு பற்றி எதுவும் தெரியவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்!

அடுத்து நான் ஜ்யோவ்ராம் சுந்தரை பேட்டி காணப்போகிறேன் என்று சொன்னபோது ச்சின்னப்பையன் முகத்தில் என்ன ரியாஸ்சன் வந்தது என நான் கவனிக்கத் தவறிவிட்டேன். எனது பேட்டிக் கொள்கை என்ன என்று அவர் விசாரித்தபோது பரவசமாக இருந்தது. பாரிஸிலிருந்து பதிவெழுதும் பள்ளி மாணவி[:-)))] ராப், சந்த்திப்பில் நான் கலந்து கொள்வது குறித்து விசாரித்ததாக சொன்னார். சர்வதேச சதிவலை ஏதும் பின்னப்படுகிறதா?

மாதவிப்பந்தலுக்கு மோகன் கந்தசாமி அர்த்தம் சொல்ல முயற்சித்தால் அதில் என்ன ஆச்சர்யம் என்று தெரியவில்லை. மாதவிப்பந்தலின் நிர்வாகி கே.ஆர்.எஸ். தன் பதிவுகள் போலவே மென்மையாக இருக்கிறார்[:-)))]. குறைந்த பட்சம், இவருக்கு ஏகவசனத்தில் கூட பேசத்தெரியாது போலிருக்கு. என் பதிவுகள் குறித்து ஆப் த ரெக்கார்ட் -ஆக விமர்சனம் செய்வதாக கூறி என் வேண்டுகோளை ஏற்றார். இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதா?

'சகலகலாவல்லவன்' வலைப்பூ நிர்வாகிக்கும் மருதநாயகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக அவரே சொன்னார் [பத்த வச்சாச்சு!, இந்த திரி பத்தி எரிஞ்சா குளிர் காயலாம், :-)))]. தட்ஸ் தமிழிலில் தான் இருந்ததாக அவர் சொன்னபோது குதிரைக்கார(ஸ்பானிஷ்கார) வெய்ட்டர் கூட அவரை திரும்பி பார்த்தான். அவரது சமீபத்திய பதிவில் வெறும் காழ்ப்பு மட்டும் தான் உள்ளது என்ற குற்றச்சாட்டை அவர் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. உலகனாயகனை விடவும் மருதநாயகம் குழப்புறாரப்பா!

பதிவுச்சூழலைப் பொறுத்தவரை 'மூத்த' என்ற அடைமொழியை உச்சரித்தாலே என் உமிழ்நீர் கசந்து விடுகிறது. நிற்க, பதிவர் இளா மொக்கைகளை பதிவுலகில் குறைப்பது குறித்து ஒரு விவாத திட்டத்துடன் வந்திருந்தார். வெறுக்கத்தக்கதாகிய தூய்மைவாதத்திற்கு இணையானது இவ்வாதம். தமிழ்மணத்தில் மொக்கைகள் பெருகியதற்கு செந்தழல் ரவியும் மற்றொருவரும் காரணமாக சொல்லப்பட்டது. எழுத்துலகில் அவதூறு பெருகியதற்கு ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் காரணம் என்றால் எப்படி காமெடியோ, அப்படியான காமெடி இது. என் பதிவுகளை படித்ததே இல்லை என்ற ஒரு டகால்டி உண்மையைச் சொன்னார் இளா. இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.

குறுக்கெழுத்துபோட்டி புகழ் இலவச கொத்தனார்தான் சந்திப்பின் நாயகன். சவுண்ட் பைட் ஜாஸ்தியாக இருந்தாலும் கூடவே பயனுள்ளவற்றை பகிர்ந்து கொண்டார். விக்கி பசங்க, ட்விட்டர் என்று பலதை அறிந்தோம். அவர் உணவு கட்டணத்தை செலுத்தியபோது அவரது புனைப்பெயருக்கு ஏற்றார் போல் உணவும் இன்று இலவசம் என நினைத்தோம். ஆனால், இறுதியில் "ஏய், டேக் த டொண்டி பை ருபீஸ்"

மூத்த பதிவர்களும் வாசகர்களும் ஆரம்பம் முதலே பதிவர் சத்தியராஜ் குமாரை பாராட்டியதைப் பார்த்தால் இவர் சங்க காலத்திலிருந்தே பதிவுகள் எழுதி வருபவர் போல் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் அவரது எழுத்து சிலாகிக்கப் படும்போது "நம்ம பதிவை யாரும் படிக்க மாட்டன்கிராய்ங்களே!" என்று நசரேயனை நான் பார்க்க, "நீரெல்லாம் எதுக்கு பதிவெழுத வந்தீர்" என்று என்னை அவர் முறைக்க ஒரே அசிங்கமாக போய்விட்டது. சரி, இதுக்கே அசிங்கப்பட்டா எப்புடி!

பல இணைய தளங்களை நடத்திவரும் கணேஷ், நெடுநாளைய வாசகர் ஜெய் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டனர். வெகுகாலமாக வலையுலகில் இயங்குபவர்களாகிய இவர்கள் பலவிஷயங்களை கலந்து கட்டி கலகலபூட்டினர். சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை கணேஷ் எல்லோருக்கும் மறுநாள் அனுப்பி வைத்தார். நன்றிகள். பிழையின்றி எழுத முடியாமையே அவர் பதிவுகள் எழுதாதன் காரணம் என்று சொன்னார் ஜெய். நம்பிட்டேன். என் பதிவுகளை படித்துள்ளதாக அவர் சொன்னபோது அவர் முகத்தை உற்று கவனித்தேன், சீரியசாத்தான் சொன்னார். காமெடி இல்லை. மேலும், ஒரு ஹார்வார்ட் பல்கலைகழக மாணவர், இந்திய, தமிழ் கலாச்சாரங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார். என்ன கொடுமை சார் இது!

உணவு முடிந்த சிறிது நேரத்தில் கன்னட வெறியுடன் எங்களை நெருங்கினார் உணவக நிர்வாகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியேறாவிட்டால் காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என்று எச்சரித்தார். தண்ணீர் விடுவோம் என்று சொல்பவர்களை உதைக்க வேண்டாமா!?

சோமர்செட் ஹொய்சாலா உணவகத்தில் நடைபெற்ற இப்பதிவர் சந்திப்பு, முன்னதாக ஈழத்தமிழர்களுக்காகவும் மும்பை உயிர் இழப்புகளுக்காகவும் ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. சந்திப்பில் பேசிய ஏனையவற்றை பற்றி எழுதி போரடிக்காமல் ரத்தினச்சுருக்கமாக தளபோஸ்த்ரி வடிவில் கூறிவிடுகிறேன்.

சிவராஜ் பாட்டில்... கோஸ்டல் கார்ட்... எம் கே நாராயணன்... ஐயோ பாவம் ரஜினி... தட்ஸ் தமிழ்... குறுக்கெழுத்து... இலவசம்... ட்விட்டர்... பாஸ்டன் பாலா...மாதவிப்பந்தல்... பொதுச்சேவை... சிங்கப்பூர்... கோனா பதிவர்... பானா பதிவர்... போலி டோண்டு... அய்யய்யோ திராவிடமா!... மொக்கையை குறைப்பது எப்படி?... அக்குளை சொரிவது எப்படி?... வ. வ. சங்கம்... அய்யனார்... சாரு... டோண்டு... ராப்... வெண்பூ... பரிசல்காரன்... உண்மைத்தமிழன்... கூகிள் புரமோட்... பிளாக்பெர்ரி யூனிக்கோட்... இட்லிவடை... பொப்பெ... கெளம்பு காத்து வரட்டும்

இனிதே நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில், புதிய பதிவர் என்ற வகையில் நான் அறிந்து கொள்ள கிடைத்தவை நிறைய. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்ற குறையை தவிர எல்லாம் நிறைவே. எனில், லவடா என்ற உருவகத்திற்கு இப்பதிவில் தேவை என்ன? ஏதுமில்லை. எல்லாம் ச்சும்மா ட்டமாஷ்!


அவதூறு / கிசு கிசு / தானே கேள்வி தானே பதில்

பதிவர் சந்திப்பிற்கு வந்தோரில் பாஸ்டன் பாலாவும் ஒருவரா?
மோகன் கந்தசாமி: தெரியாது
ஏனையோர்: வரவில்லை.

இட்லி வடைக்கு செய்தி தருவோர் சந்திப்பிற்கு வந்திருந்தனரா?
மோகன் கந்தசாமி: வந்திருக்கலாம்.
ஏனையோர்: வரவில்லை.


நசரேயன், மோகன் கந்தசாமி, சத்தியராஜ் குமார்,
சோகன், இளா, மருதநாயகம்.



கே.ஆர்.எஸ், நசரேயன்



சுதன், இளா, மருதநாயகம், இலவச கொத்தனார்




ஜெய், குரு

59 comments:

கோவி.கண்ணன் said...
November 30, 2008 at 10:21 PM  

உங்கள் பாணியில் கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள்.

பதிவர் முகமூடி சந்திப்புக்கு வரவில்லையா ?

குடுகுடுப்பை said...
November 30, 2008 at 10:48 PM  

உண்மையாவே நடந்துருச்சா? எல்லாரும் ஹீரோ கணக்கா இருக்கீங்க.

முகவை மைந்தன் said...
November 30, 2008 at 10:56 PM  

வெளுத்துக் கட்டி இருக்கீங்க போல. எகன, மொகனையும், ஏதென்று தெரியாத நேரத்தில் சட்டென்று பொறி பறந்ததாக உணர்ந்தாலும் சொல்லத் தெரியாத கணங்களையும் (பின்நவீனத்துவமாம்), பர, பரப்புமாக தொகுத்திருக்கிறீர்.

மேலும் பல பதிவர் கூட்டம் காண வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...
November 30, 2008 at 11:07 PM  

//வெளுத்துக் கட்டி இருக்கீங்க போல. எகன, மொகனையும், ஏதென்று தெரியாத நேரத்தில் சட்டென்று பொறி பறந்ததாக உணர்ந்தாலும் சொல்லத் தெரியாத கணங்களையும் (பின்நவீனத்துவமாம்), பர, பரப்புமாக தொகுத்திருக்கிறீர்.//

இதுதான் பிந வா ? அப்ப மோ.க பிந பதிவரா ? தளபோஸ்ரி தளபதியை இப்படி மட்டம் தட்டி இருக்கப்படாது.

மருதநாயகம் said...
November 30, 2008 at 11:08 PM  

//'சகலகலாவல்லவன்' வலைப்பூ நிர்வாகிக்கும் மருதநாயகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக அவரே சொன்னார் [பத்த வச்சாச்சு!, இந்த திரி பத்தி எரிஞ்சா குளிர் காயலாம், :-)))]//

அய்யா, நிஜமாவே பத்த வச்சுட்டீங்கய்யா? சகலகலா வல்லவனில் முதலில் எனக்கு கமெண்ட் மாடரேஷன் செய்யும் வசதி இல்லாததால் என்னுடைய கமெண்ட் கூட உடனே வெளிவரவில்லை என்று தான் சொன்னேன். மேலும் இப்போது அந்த வசதி எனக்கு இருக்கிறது என்பதையும் சொன்னேன். எப்படியோ போங்க

மோகன் கந்தசாமி said...
November 30, 2008 at 11:47 PM  

/////உங்கள் பாணியில் கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள்.////

நன்றி கோவி கண்ணன்.

///பதிவர் முகமூடி சந்திப்புக்கு வரவில்லையா ?////

அப்படி யாரும் வரவில்லை கோவி.

மோகன் கந்தசாமி said...
November 30, 2008 at 11:51 PM  

/////உண்மையாவே நடந்துருச்சா? /////
அப்ப, குடுகுடுப்பை என்ற பேரில் கலந்து கொண்டது நீங்கள் இல்லையா?

///எல்லாரும் ஹீரோ கணக்கா இருக்கீங்க./////
என்னா ஒரு எகத்தாளம்!!??!! :-))))

மோகன் கந்தசாமி said...
November 30, 2008 at 11:53 PM  

////வெளுத்துக் கட்டி இருக்கீங்க போல. எகன, மொகனையும், ஏதென்று தெரியாத நேரத்தில் சட்டென்று பொறி பறந்ததாக உணர்ந்தாலும் சொல்லத் தெரியாத கணங்களையும் (பின்நவீனத்துவமாம்), பர, பரப்புமாக தொகுத்திருக்கிறீர்.////

முடிவா என்னதான் சொல்றீங்க முகைவை ஜி! பதிவு நல்லா இல்லையா? :-))))))

////மேலும் பல பதிவர் கூட்டம் காண வாழ்த்துகள்.///

நன்றி முகைவை தமிழன்

மோகன் கந்தசாமி said...
November 30, 2008 at 11:54 PM  

////இதுதான் பிந வா ? அப்ப மோ.க பிந பதிவரா ? தளபோஸ்ரி தளபதியை இப்படி மட்டம் தட்டி இருக்கப்படாது.////

ஆஹா!

மோகன் கந்தசாமி said...
November 30, 2008 at 11:58 PM  

////அய்யா, நிஜமாவே பத்த வச்சுட்டீங்கய்யா? சகலகலா வல்லவனில் முதலில் எனக்கு கமெண்ட் மாடரேஷன் செய்யும் வசதி இல்லாததால் என்னுடைய கமெண்ட் கூட உடனே வெளிவரவில்லை என்று தான் சொன்னேன்.///

அடடா! தவறாக புரிந்து கொண்டேனே!

////மேலும் இப்போது அந்த வசதி எனக்கு இருக்கிறது என்பதையும் சொன்னேன்////

இதை கவனிக்க தவறி விட்டேன். பிழை என்னுடையதே!

////எப்படியோ போங்க///

ஸாரி மருதநாயகம் ஜி!

பழமைபேசி said...
November 30, 2008 at 11:59 PM  

தளபதிக்குதான் ஒரே சிரிப்பு!

குடுகுடுப்பை said...
December 1, 2008 at 12:10 AM  

மோகன் கந்தசாமி said...
November 30, 2008 11:51 PM

/////உண்மையாவே நடந்துருச்சா? /////
அப்ப, குடுகுடுப்பை என்ற பேரில் கலந்து கொண்டது நீங்கள் இல்லையா?

///எல்லாரும் ஹீரோ கணக்கா இருக்கீங்க./////
என்னா ஒரு எகத்தாளம்!!??!! :-))))

அய்யா நான் என்ன எகத்தாளம் பேச என்ன பழமைபேசியா?

எனக்கும் போலியா!!!! :)

வெண்பூ said...
December 1, 2008 at 12:15 AM  

நல்ல பதிவு.. படங்களும் அருமை..

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 12:16 AM  

////அய்யா நான் என்ன எகத்தாளம் பேச என்ன பழமைபேசியா?

எனக்கும் போலியா!!!! :)////

நோ நோ, குடுகுடுப்பை ஜி, நான் தமாசுக்கு சொன்னேன், வடிவேலு சொல்வாரே "என்னா ஒரு வில்லத்தனம்!!??!!" -அப்படின்னு. அந்த மாதிரி சொன்னேன். ஸ்மைலி போட்டிருந்தேனே பார்க்கவில்லையா? :-)))

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 12:18 AM  

////தளபதிக்குதான் ஒரே சிரிப்பு!//

தளபதி நசரேயனை யாருன்னு நெனைச்சிங்க?, சிங்கமுல்ல!

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 12:19 AM  

/////நல்ல பதிவு.. படங்களும் அருமை../////

நன்றி வெண்பூ சார்!!

லக்கிலுக் said...
December 1, 2008 at 12:31 AM  

//'சகலகலாவல்லவன்' வலைப்பூ நிர்வாகிக்கும் மருதநாயகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக அவரே சொன்னார் [பத்த வச்சாச்சு!, இந்த திரி பத்தி எரிஞ்சா குளிர் காயலாம், :-)))]//

:-)))))))))

குடுகுடுப்பை said...
December 1, 2008 at 12:39 AM  

////அய்யா நான் என்ன எகத்தாளம் பேச என்ன பழமைபேசியா?

எனக்கும் போலியா!!!! :)////

நோ நோ, குடுகுடுப்பை ஜி, நான் தமாசுக்கு சொன்னேன், வடிவேலு சொல்வாரே "என்னா ஒரு வில்லத்தனம்!!??!!" -அப்படின்னு. அந்த மாதிரி சொன்னேன். ஸ்மைலி போட்டிருந்தேனே பார்க்கவில்லையா? :-)))

பாத்தேன் நான் நம்ம பழமையாரா வாரலாம்னு போட்டேன், ஆனா நாந்தான் ஸ்மைலி போட மறந்துட்டேன்.

சின்னப் பையன் said...
December 1, 2008 at 11:08 AM  

இது என்ன ஓ பக்கங்களுக்கு போட்டியா????

சின்னப் பையன் said...
December 1, 2008 at 11:08 AM  

//லட்டு கொடுத்து லவடா வாங்கின கதை எவர்க்கேனும் தெரியுமா?//
இது குறித்து தனிப்பதிவு தேவை...

சின்னப் பையன் said...
December 1, 2008 at 11:08 AM  

அவ்வ்வ்.... ஜ்யோவ்ராம் சுந்தர் நல்லவரு, வல்லவருன்னு நான் சொன்னதையெல்லாம் விட்டுட்டு, இப்படி பத்தவெச்சிட்டியே பரட்டை?????

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 11:30 AM  

//////'சகலகலாவல்லவன்' வலைப்பூ நிர்வாகிக்கும் மருதநாயகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக அவரே சொன்னார் [பத்த வச்சாச்சு!, இந்த திரி பத்தி எரிஞ்சா குளிர் காயலாம், :-)))]//

:-)))))))))////

பிழைக்கு சாரி, புரிதலுக்கு நன்றி லக்கிலுக்!

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 11:40 AM  

////இது என்ன ஓ பக்கங்களுக்கு போட்டியா????///

இல்லைங்க, 'ச்சின்னப்பையன் பார்வையில்' -என்பது போல் புதிய பதிவர் பார்வையில். ஆச்சர்ய ஓ!

/////லட்டு கொடுத்து லவடா வாங்கின கதை எவர்க்கேனும் தெரியுமா?//
இது குறித்து தனிப்பதிவு தேவை...////

இந்த சொல்லாடலை கவன ஈர்ப்புக்கு பயன்படுத்தினேன். மற்றபடி சந்திப்பு நிறைவாகவே இருந்தது.

////அவ்வ்வ்.... ஜ்யோவ்ராம் சுந்தர் நல்லவரு, வல்லவருன்னு நான் சொன்னதையெல்லாம் விட்டுட்டு, இப்படி பத்தவெச்சிட்டியே பரட்டை?????////

அடுத்தவங்க அடிச்சிக்கரத பார்க்கிறதில் இருக்க சந்தோசம் நாம நல்லா வாழ்ரதில் கூட இல்லை. :-)))))


நன்றி ச்சின்னப்பையன்!

நசரேயன் said...
December 1, 2008 at 11:49 AM  

சந்திப்பு பதிவா வந்துருச்சா?

நசரேயன் said...
December 1, 2008 at 11:50 AM  

சும்மா சொல்ல ௬டாது சும்மா புகுந்து விளையாடிட்டீங்க. அருமையான விளக்கம்

நசரேயன் said...
December 1, 2008 at 11:52 AM  

/*
உண்மையாவே நடந்துருச்சா? எல்லாரும் ஹீரோ கணக்கா இருக்கீங்க.
*/
மாடு மெயக்கவருக்கு யாரை பார்த்தாலும் ஹீரோ மாதிரி தான் இருக்கும், என்னை எல்லாம் 500 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்துல எடுத்தது

நசரேயன் said...
December 1, 2008 at 11:53 AM  

/*
தளபதிக்குதான் ஒரே சிரிப்பு!
*/
சிரிக்கலைன்னா என்னை கண்டு பிடிப்பவர்களுக்கு 1000 டாலர் பரிசு கொடுக்க வேண்டிய வரும்

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 11:57 AM  

////சந்திப்பு பதிவா வந்துருச்சா?///

ஆணியெல்லாம் புடுங்கிட்டு ஆற அமர வந்து பாக்கிறீங்களா? பதிவு வந்து ஒரு மாமாங்கம் ஆச்சு!

///சும்மா சொல்ல ௬டாது சும்மா புகுந்து விளையாடிட்டீங்க. அருமையான விளக்கம்///

பாத்திங்களா, இதுதான வேணாங்குறது!


அது சரி! எங்க உங்க பதிவு?

மொக்கைச்சாமி said...
December 1, 2008 at 12:12 PM  

நல்ல கவரேஜ். ஆமா என்ன போட்டோ எல்லாம் "ரொம்ப" பளிச்சுன்னு இருக்கு? photshop'ல எடிட் பண்ணீங்களோ? :-)))))
ச்சின்னப்பையன் connecticut'ல இருந்து வந்ததையும், சத்தியராஜ் குமார் virginia'ல இருந்து வந்ததையும் சொல்லி இருக்கலாம். ஏன்னா ரெண்டு பேருமே 3 மணி நேர சந்திப்புக்கு கிட்ட தட்ட 6 மணி நேரம் டிரைவ் பண்ணி வந்திருக்காங்க...

Thamiz Priyan said...
December 1, 2008 at 12:26 PM  

கலக்கலா இருந்திருக்கும் போல... KRS அங்கிளை வைத்து கந்தன் கருணை படத்தை ரீமேக் செய்யலாம் போல் இளமையா இருக்கார்..:)

நசரேயன் said...
December 1, 2008 at 12:52 PM  

/*
////சந்திப்பு பதிவா வந்துருச்சா?///

ஆணியெல்லாம் புடுங்கிட்டு ஆற அமர வந்து பாக்கிறீங்களா? பதிவு வந்து ஒரு மாமாங்கம் ஆச்சு!

///சும்மா சொல்ல ௬டாது சும்மா புகுந்து விளையாடிட்டீங்க. அருமையான விளக்கம்///

பாத்திங்களா, இதுதான வேணாங்குறது!


அது சரி! எங்க உங்க பதிவு?
*/
உங்களை மாதிரி எனக்கு சிறப்பா எழுத தெரியுமுன்னு தோணலை.

கடைசி வரைக்கும் நீங்க இளா கிட்ட கேட்ட கேள்வியை பத்தி எழுதவே இல்லை

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 1:02 PM  

////உங்களை மாதிரி எனக்கு சிறப்பா எழுத தெரியுமுன்னு தோணலை.///
நானே மொக்கையை எப்படி குறைப்பதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன், இப்பபோய் இந்த மொக்கை பதிவை நல்லாருக்குன்னு சொல்றீங்க! சரி சரி பதிவு போட சோம்பலா இருக்குன்னு சொல்லுங்க! ஹி ஹி :-)))

////கடைசி வரைக்கும் நீங்க இளா கிட்ட கேட்ட கேள்வியை பத்தி எழுதவே இல்லை////
வேகாத பருப்பை அடுப்பில் வைத்தால் விறகு தான் நட்டம் என்று நண்பர் அறிவுரை சொன்னதால், அந்த சேப்டர் குளோஸ்.

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 1:48 PM  

////நல்ல கவரேஜ். ஆமா என்ன போட்டோ எல்லாம் "ரொம்ப" பளிச்சுன்னு இருக்கு? photshop'ல எடிட் பண்ணீங்களோ? :-)))))///

வாங்க குரு,

ஆமாம், படம் கொஞ்சம் இருட்டா தெரிஞ்ச மாதிரி இருந்ததால, கொஞ்ச புராசஸ் செஞ்சிட்டேன்.

///ச்சின்னப்பையன் connecticut'ல இருந்து வந்ததையும், சத்தியராஜ் குமார் virginia'ல இருந்து வந்ததையும் சொல்லி இருக்கலாம். ஏன்னா ரெண்டு பேருமே 3 மணி நேர சந்திப்புக்கு கிட்ட தட்ட 6 மணி நேரம் டிரைவ் பண்ணி வந்திருக்காங்க...////

மறந்துட்டேன், இதோ இப்போ நீங்க சொல்லிட்டீங்க!

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 1:49 PM  

////கலக்கலா இருந்திருக்கும் போல... KRS அங்கிளை வைத்து கந்தன் கருணை படத்தை ரீமேக் செய்யலாம் போல் இளமையா இருக்கார்..:)////

நன்றாக பழகுபவரும் கூட!

நன்றி தமிழ்பிரியன்

ILA (a) இளா said...
December 1, 2008 at 2:25 PM  

//இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.//
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

பழமைபேசி said...
December 1, 2008 at 2:26 PM  

திண்ணையில யாரோ என்னைக் கூப்ட்டா மாதர இருந்துச்சே?

Anonymous said...
December 1, 2008 at 3:47 PM  

பதிவர் சந்திப்பிற்கு வந்தோரில் பாஸ்டன் பாலாவும் ஒருவரா?
மோகன் கந்தசாமி: தெரியாது
ஏனையோர்: வரவில்லை

@ilamurugu Sorryங்க வீட்டில் விருந்தாளிகள் இருந்ததால் வர முடியவில்லை. அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம்! ட்விட்டர்களையும் கூப்பிடுங்க! ;)

Boston Bala said...
December 1, 2008 at 4:04 PM  

சந்திப்பு சூப்பராக இருந்திருக்கு... அடுத்த தடவையாவது ஒழுங்காக மிஸ் செய்யாமல் இருக்க பார்க்கிறேன்.

பதிவிற்கு நன்றி

கிரி said...
December 1, 2008 at 5:08 PM  

நல்லா விளக்கமா பதிவர் சந்திப்பு பற்றி கூறி இருக்கீங்க போர் அடிக்காம..

இது தான் முதல் சந்திப்பா..இல்லை முன்பே இது போல நடந்து உள்ளதா?

கிரி said...
December 1, 2008 at 5:14 PM  

நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு :-)

நசரேயன் said...
December 1, 2008 at 5:50 PM  

/*
நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு :-)
*/
எல்லோரும் என்னைய கருப்பு அஜீத் ன்னு ௬ப்பிடுவாங்க :)
இதை சொன்னா சிங்கை "முகவை மைந்தனுக்கு" கோபம் வருமே

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 6:19 PM  

/////இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.//
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.///

உண்மைகளை ஏற்பதில் எப்போதும் பிரச்சினை இல்லை. உண்மை முலாம் மட்டுமே கசக்கும்.

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 6:22 PM  

////திண்ணையில யாரோ என்னைக் கூப்ட்டா மாதர இருந்துச்சே?//

வீட்டுக்குள்ளேயே இருங்க, நசரேயன் திண்ணையில்தான் இன்னும் இருக்கிறார்.

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 6:23 PM  

////பதிவிற்கு நன்றி///

வருகைக்கு நன்றி பாஸ்டன் பாலா.

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 6:27 PM  

////நல்லா விளக்கமா பதிவர் சந்திப்பு பற்றி கூறி இருக்கீங்க போர் அடிக்காம..///

நன்றி கிரி,

////இது தான் முதல் சந்திப்பா..இல்லை முன்பே இது போல நடந்து உள்ளதா?////

எனக்கு இதுதான் முதல் சந்திப்பு, ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்

மோகன் கந்தசாமி said...
December 1, 2008 at 6:30 PM  

//////*
நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு :-)
*/
எல்லோரும் என்னைய கருப்பு அஜீத் ன்னு ௬ப்பிடுவாங்க :)
இதை சொன்னா சிங்கை "முகவை மைந்தனுக்கு" கோபம் வருமே///

முகவை மைந்தனுக்கு கோபம் வருதோ இல்லையோ, விஜயகாந்த்துக்கு கோபம் வந்திடப்போகுது! அவரையும் குறிப்பிட்டு விடுங்கள்.

பழமைபேசி said...
December 2, 2008 at 11:32 AM  

மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...
December 2, 2008 at 4:30 PM  

//இட்லி வடைக்கு செய்தி தருவோர் சந்திப்பிற்கு வந்திருந்தனரா?
மோகன் கந்தசாமி: வந்திருக்கலாம்.
ஏனையோர்: வரவில்லை//

அலோ...
அதான் இட்லி வடைக்கு இட்லி வடை சப்ளை செய்வது யாருன்னு இடலி வடை சாப்பிட்டுக்கிட்டே பேசினோம்-ல? மறந்துட்டீரா? :)

//கே.ஆர்.எஸ். தன் பதிவுகள் போலவே மென்மையாக இருக்கிறார்[:-)))]. குறைந்த பட்சம், இவருக்கு ஏகவசனத்தில் கூட பேசத்தெரியாது போலிருக்கு//

ச்சே! அன்னிக்குன்னு பார்த்து பதிவர் சந்திப்பில் கலாட்டா எதுவும் நடக்காம போயிரிச்சே! முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)

//என் பதிவுகள் குறித்து ஆப் த ரெக்கார்ட் -ஆக விமர்சனம் செய்வதாக கூறி என் வேண்டுகோளை ஏற்றார். இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதா//

இல்லவே இல்லை!
@கோவி அண்ணே! உங்களைப் பேட்டி எடுத்தாருல்ல இவரு? அதுல தான் ஆப் த ரெக்கார்ட் மேட்டரு இருக்கு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...
December 2, 2008 at 4:31 PM  

//மோகன் கந்தசாமி said...
/////இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.//
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.///

உண்மைகளை ஏற்பதில் எப்போதும் பிரச்சினை இல்லை. உண்மை முலாம் மட்டுமே கசக்கும்//

நச்! :))))

இலவசக்கொத்தனார் said...
December 2, 2008 at 4:49 PM  

கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 50 ஆவது பின்னூட்டம் போட வந்துட்டேன் போல!

சவுண்ட் பைட் அதிகம் அப்படின்னா பேச்சு ரொம்ப கடியா இருந்துச்சுன்னு அர்த்தமா?

படமெல்லாம் பளபளன்னு இருக்கே!

தளபோஸ்த்ரி என்றால் என்ன?

கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதினால் நலம். ஒரு முறை எழுதிய பின் படித்துப் பார்த்தால் இவைகளைத் திருத்த முடியும்.

உதாரணமாக போட்டோமாக் நதியை போண்டமாக் என மாற்றியது வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இல்லாத குறையைத் தீர்ப்பதற்காக என நம்ப முடியவில்லை. அல்லது நாடகங்கள் போட்ட காரணத்தால் நசரேயனை க’லை’யானவராகச் சொன்னது.

ILA (a) இளா said...
December 2, 2008 at 5:15 PM  

//முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)//
ஐயா, அது வேற மோகன்யா..

மோகன் கந்தசாமி said...
December 3, 2008 at 3:22 AM  

////மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.////

உங்கள் வாழ்த்துச்செய்திகள் வாசிக்கப்பட்டது உண்மை. அது அவைக்குறிப்பிலும் ஏற்றப்பட்டுள்ளது. ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் செய்தி முறையாக சென்று சேரவில்லை போலும். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. எப்புடி??? :-))))))

மோகன் கந்தசாமி said...
December 3, 2008 at 3:24 AM  

///பதிவிற்கு நன்றி///

பின்னூட்டத்திற்கு நன்றி

மோகன் கந்தசாமி said...
December 3, 2008 at 3:34 AM  

////அலோ...
அதான் இட்லி வடைக்கு இட்லி வடை சப்ளை செய்வது யாருன்னு இடலி வடை சாப்பிட்டுக்கிட்டே பேசினோம்-ல? மறந்துட்டீரா? :)////

ரவி ஜி, ஞயாபகம் இருக்கு, சும்மா பரபரப்புக்கு எதையாவது கிளப்பனுமே அதுக்குத்தான் இது!! :-))))

///ச்சே! அன்னிக்குன்னு பார்த்து பதிவர் சந்திப்பில் கலாட்டா எதுவும் நடக்காம போயிரிச்சே! முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)///

அய்யயோ! அடுத்த சந்திப்புல ஜாக்கிரதையா இருக்கணும் போல!

////கோவி அண்ணே! உங்களைப் பேட்டி எடுத்தாருல்ல இவரு? அதுல தான் ஆப் த ரெக்கார்ட் மேட்டரு இருக்கு! :))////
என்னங்க இது? கோவி சொன்னதை அப்படியே டிட்டோ போட்டுட்டீங்க! உங்கள பேட்டி எடுத்தாத்தான் உங்க கருத்தை சொல்வீங்களா? :-)))))

மோகன் கந்தசாமி said...
December 3, 2008 at 3:36 AM  

///நச்! :))))//

ம்ஹம்ம்

மோகன் கந்தசாமி said...
December 3, 2008 at 3:49 AM  

///கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 50 ஆவது பின்னூட்டம் போட வந்துட்டேன் போல!///

எப்புடி இதெல்லாம்? :-))))))

///சவுண்ட் பைட் அதிகம் அப்படின்னா பேச்சு ரொம்ப கடியா இருந்துச்சுன்னு அர்த்தமா?///
சேச்சே! கடியாயிருந்தா கடியாயிருந்துதுன்னு சொல்லிருப்பேனே!

///படமெல்லாம் பளபளன்னு இருக்கே!///
சும்மா... போட்டாஷாப் போட்டு எடுத்தாச்சு!

///தளபோஸ்த்ரி என்றால் என்ன? ///
http://mohankandasami.blogspot.com/2008/05/blog-post_19.html
இதுதாங்க்னா அது! படிச்சுப்பாருங்க ஒருவாட்டி, காமெடியா இருக்கும்!

///கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதினால் நலம். ஒரு முறை எழுதிய பின் படித்துப் பார்த்தால் இவைகளைத் திருத்த முடியும். ///
செஞ்சிர்ரேன் செஞ்சிர்றேன்!

////உதாரணமாக போட்டோமாக் நதியை போண்டமாக் என மாற்றியது வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இல்லாத குறையைத் தீர்ப்பதற்காக என நம்ப முடியவில்லை.///

பக்கத்துவூட்டுகாரன் சொன்னத கேட்டு அப்படியே எழுதிட்டேங்னா!

மோகன் கந்தசாமி said...
December 3, 2008 at 3:50 AM  

//////முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)//
ஐயா, அது வேற மோகன்யா..///

ஆமாங்கய்யா! நான் அவனில்லை!

RAMYA said...
December 4, 2008 at 12:48 AM  

நெசமாலுமே பதிவர் சந்திப்பு நடந்திடுச்சா, பாவி மக்கா சொல்லவே இல்லே. நசறேயனுக்கு சிரிப்பு கொப்பளிசுகிட்டு இல்லே வருது. அடி ஆத்தி. எல்லாரும் அம்புட்டு அழகா சிரிகிறீங்க. எல்லாரையும் படம் பிடிச்சி காடியதிருக்கு நன்றி.

மோகன் கந்தசாமி said...
December 4, 2008 at 12:27 PM  

///நெசமாலுமே பதிவர் சந்திப்பு நடந்திடுச்சா, பாவி மக்கா சொல்லவே இல்லே. ////

நசரேயன், சின்னப்பையன், இளா, நான் எல்லோரும் சந்திப்பு குறித்து பதிவு போட்டிருந்தோமே!

////நசறேயனுக்கு சிரிப்பு கொப்பளிசுகிட்டு இல்லே வருது. அடி ஆத்தி////
:-)))

///எல்லாரையும் படம் பிடிச்சி காடியதிருக்கு நன்றி.///
நன்றி



கிடங்கு