Tuesday, February 24, 2009

தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 2

·

தொல். திருமாவின் பேட்டியின் இரண்டாம் பகுதி இப்பதிவில் வெளியாகின்றது. நேர்முகத்தின் ஒலிவடிவம் இறுதிப் பகுதியுடன் சேர்த்து வெளியாகும்.

திமுக கூட்டணியில் இருப்பதனால், விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் வீரியம் இருக்காது என்ற ஐயப்பாட்டுக்கு விடையளிக்கையில் "பிறர் விரும்புவதற்கு ஏற்றவாறெல்லாம் செயல்பட விடுதலை சிறுத்தைகள் ஒன்றும் தொங்கு சதைகள் அல்ல. தனித்து இயங்கவும், சிந்திக்கவும் விடுதலை சிறுத்தைகளுக்கு வலிமையும் உரிமையும் உண்டு" என்று கூறுகிறார் திருமா. திமுகவோ அல்லது வேறெந்த கட்சியோ விடுதலை சிறுத்தைகள் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது.

சென்ற பதிவின் பேட்டியின் தொடர்ச்சி...


முத்துகுமாரின் மரணத்திற்குப் பிறகு ஈழ ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க முடியுமா? இல்லை என்றால் அவரவர் அணியில் இருந்து தேர்தலை சந்திப்பதால் ஈழப் பிரச்சினையில் என்ன திருப்பம் வந்துவிடப் போகிறது?

முத்துக்குமாரின் மரணத்திற்குப் பிறகு தமிழீழ ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. தமிழீழத்தை ஆதரிக்கக் கூடிய அணியில் அதிமுக -வை இணைக்க முடியாது என்பது அறிந்த செய்தி. பாமக, மதிமுக, இந்திய பொதுவுடைமை கட்சி, பாஜக ஆகியவை தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஐயா நெடுமாறன் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்துள்ளது மகத்தான ஒன்று. இந்த அணி

பாமக, மதிமுக, வி.சி மற்றும் சிபிஐ ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
அப்படியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நியாயமானதுதான். ஆனால் எந்தளவுக்கு அது நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை. தேர்தலில் வெல்வதுதான் முக்கிய இலக்கு. தனித்து நின்றால் வெற்றி பெறமுடியாது. பாமக, மதிமுக, வி.சி மற்றும் சிபிஐ ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும். முத்துகுமாரால் ஏற்பட்ட இந்த இணைப்பு எதிவரும் நாடாளுமன்றத்தேர்தலால் சிதைந்து போய்விடக் கூடாது என்று உங்களைப் போலவே நாங்களும் எண்ணுகிறோம்.

ண்ணாவிரத மேடையில் நீங்கள் பேசியபோது இனி காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறினீர்கள். எனில், நீங்கள் தற்போது உள்ள அணியில் தொடர்ந்துகொண்டே எவ்வாறு தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள்?

ண்ணாவிரத மேடையில் இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது உண்மை.காங்கிரஸ் கட்சியை அம்பலப் படுத்துவோம், தனிமைப் படுத்துவோம் என்று சொன்னது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறவேண்டும் என்பதற்காகத்தான். அது ஏனோ நடைபெறவில்லை. மற்றபடி காங்கிரசுடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமும் இல்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான். இந்நிலையில் திமுகவும் காங்கிரசும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் உங்கள் நிலை என்ன என்பதுதான் உங்கள் கேள்வி. திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தனித்தே இதுவரையில் இயங்கிவருகிறோம். விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும், என்னை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் திமுக வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

மாநில அளவில் திமுக ஒரு கூட்டணி அமைத்துள்ளது. தேசிய அளவில் அக்கூட்டணியில் உள்ள பாமக போலல்லாமல் பல சிறிய கட்சிகள் மாநில அளவில் கூட்டணியில் உள்ளன. காங்கிரசுடன் அவற்றிற்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த பட்டியலில் விடுதலை சிறுத்தைகளும் அடங்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன். எனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எங்களுக்கு தொடர்பில்லை. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்தான் நாங்கள் இணைந்திருக்கிறோம். எதிவரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இதே கூட்டணியில் நீடிக்க நேர்ந்தால் அது எங்களுக்கு எந்த நெருக்கடியும் தராது. ஒருவேளை காங்கிரசுக்கு அஞ்சி விடுதலைசிறுத்தைகளை திமுக கைவிட்டால் தனித்தே தேர்தலை சந்திப்போமே ஒழிய ஈழத்தமிழருக்கு எதிரான அதிமுகவோடு தேர்தல் உறவை விரும்பமாட்டோம்.

மொழிப்போர்களால் பலனடைந்த திமுக இந்திய அரசியலில் தமிழர் நலனை பெரும்பாலான சமயங்களில் காத்து வந்துள்ளது. இன்று ஈழம் தொடர்பாக அக்கட்சி வெளிப்படையாக கைவிரித்துவிட்ட நிலையில், தற்போதைய ஈழ ஆதரவை ஒன்று திரட்டி விடுதலை சிறுத்தைகளை முழுமையான தமிழர் பிரதிநிதிகளாக்க முடியுமா?

ழப் தொடர்பாக திமுக வெளிப்படையாக கைவிரித்துவிட்டது; இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் முழுமையான தமிழர் பிரதிநிதிகளாக முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளது எங்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது. விடுதலை சிறுத்தைகள் தமிழர்களின் தனித்துவமான பிரதிநிதிகளாக நாங்கள் விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் மட்டுமே போராடி ஈழத் தமிழருக்கு உறுதுணையாக இருக்கமுடியாது. தமிழீழ ஆதரவு என்பது ஒட்டுமொத்த தமிழரின் ஆதரவாக இருக்கவேண்டும். விடுதலை சிறுத்தைகளை விட மூத்த கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. அவர்களை ஒருங்கிணைக்கும் மகத்தான பணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து பங்களிக்கும். ஈழத்தமிழர்கள் ஒரு சுமூகமான அரசியல் தீர்வை காணும் வரை எல்லோருடனும் இணைந்து செயல்படுவது எமது கடமை என உணர்கிறோம்.

மீபத்தில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்தினீர்கள். தனி ஈழம் தவிர்த்த எந்த தீர்வும் ஏற்க முடியாதா? தமிழீழம் வேண்டுமானால் விடுதலைப் புலிகளை ஆதரித்தாக வேண்டும். போராட்டங்கள் மூலம் சர்வதேசத்தில் ஈட்டப்படவிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவை எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மாற்றிவிட முடியும்?

மிழீழத்தை தவிர எந்தத்தீர்வையும் ஈழச்சிக்கலில் காணமுடியாது. தனிஈழம் ஒன்றே நிரந்தரத் தீர்வு. ராணுவத்தைக் கொண்டு ஈழப்போராட்டத்தை நசுக்கி விடமுடியும் என்று சிங்கள இனவெறி அரசு நம்புகிறது. தனிஈழத்திற்கு சிங்கள அரசை எவ்வாறு உடன்பட வைக்க முடியும், பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வை எப்படி பெறமுடியும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. அதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுப்படுத்தினால் தான் முடியும். ராணுவ ரீதியிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ அல்ல. விடுதலை புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்; அதை தமிழகம், தமிழீழம் தாண்டி அனைத்துத் தமிழரும் அதை ஏற்கிறார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினால்தான் சிங்கள இனவெறி நடத்துகிற கொடூரமான அடக்குமுறையை தடுக்கமுடியும். பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வுகான்கிற அழுத்தத்தை கொடுக்கமுடியும்.

இந்திய தேசியம் தமிழருக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் நலன் குறித்த கேள்விக்குறிக்கு இளைஞர்களின் எழுச்சியால் பதில் சொல்லமுடியும். இந்திய தேசியத்தை தமிழர்கள் எந்தளவுக்கு மதிக்கப்போகிறார்கள், அதை உள்வாங்கப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்லும்
எனவே நமது போராட்டம் சர்வதேசத்திலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டமாக அமைந்திடவேண்டும். அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் மீது கூட்டாக விதித்துள்ள தடையை நீக்கவைக்க முடியும். வெளிப்படையாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதன் மூலம் தான் சிங்கள அரசை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க முடியும்.

ன்று, இந்திய அரசு போராளிகளை ஊக்குவித்ததும் தன் நலனுக்கே! இப்போது அவர்களை நசுக்குவதும் அதன் நலனுக்கே! எனில், இந்திய தேசியத்தில் தமிழக தமிழரின் நிலை என்ன?

ந்திய அரசு போராளிகளுக்கு ஆயுத பயுற்சி மட்டுமல்லாமல் ஆயுதங்களையும் கொடுத்தது என்பது வரலாற்று உண்மைகள். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜெயவர்த்தனே அரசு இந்திய அரசுக்கு பணியவில்லை என்பதனால் இந்திய அரசு போராளிக்குழுக்களை ஆதரித்தது. இந்திய அரசின் ஆதிக்கத்தை இலங்கை வரை விரிவு படுத்தும் முயற்சியாகவே அது இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விடுதலைப் புலிகளின் கை ஓங்கிவிட்டது, பலம் பெற்றுவிட்டார்கள் என்ற நிலையில் இலங்கை அரசு இந்திய அரசின் உதவியை நாடியது. அவ்வாறு நாடியபோது புலிகளை நசுக்குவதில் தீவிரம் காட்டத்தொடங்கியது. புலிகளை ஆதரித்தால் இலங்கைக்கு இந்தியா பகைநாடாகும். இந்தியாவின் பகைநாடுகளின் ஆதரவு இலங்கைக்குக் கிடைக்கும். பகைநாடுகள் இலங்கையில் ராணுவத்தளம் அமைக்கும். அது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்று இந்திய அரசு கணக்குப் போட்டு சிங்கள அரசை வலிந்து வலிந்து வலிந்து ஆதரிக்கிறது.

கைநாடுகளை பணிய வைக்க போராளிகளை ஆதரித்த இந்திய அரசு இன்று நேரடியாகவே களத்தில் இறங்கி தமிழர்களை அழித்தொழிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்திய தேசியத்தில் தமிழகத்தமிழரின் நிலை என்ன என்பது உங்கள் கேள்வியாக உள்ளது. மிகவும் சரியான கேள்வி. தமிழகத் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், உணர்வுகள் அவமதிக்கப் படுகின்றன. கோரிக்கைகள் புந்தள்ளப் படுகின்றன. காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழருக்கு எதிராக செயல்படுகிறது. பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் ஆந்திர அரசை கண்டிக்க முன்வரவில்லை. இவ்வாறு இந்தியாவிற்குள்ளேயே உள்ள விவகாரங்களில் இந்திய அரசு தமிழருக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர் விவகாரத்தில் முற்றிலும் எதிராக இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேசியம் தமிழருக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் நலன் குறித்த கேள்விக்குறிக்கு இளைஞர்களின் எழுச்சியால் பதில் சொல்லமுடியும். இந்திய தேசியத்தை தமிழர்கள் எந்தளவுக்கு மதிக்கப்போகிறார்கள், அதை உள்வாங்கப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்லும்.


[தொடரும்]

டுத்த பகுதி விரைவில்...

6 comments:

எம்.எம்.அப்துல்லா said...
February 25, 2009 at 12:47 AM  

தொடருங்கள்...தொடருங்கள்...

குசும்பன் said...
February 25, 2009 at 4:40 AM  

//மற்றபடி காங்கிரசுடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமும் இல்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான்.//

இந்த பதிலில் கொஞ்சம் வருத்தம் தான், எந்த கட்சியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கொண்டு விரோதமடைவது இல்லை, அரசியல் முரண்கள்தான். அப்படியிருக்கு ஆம் காங்கிரஸோடு ஒத்துவராது அவர் இருக்கும் கூட்டணியும் ஒத்துவராது என்று பொட்டில் அடித்தாற்போல் அண்ணன் சொல்லி இருந்தால் இன்னும் அவருடைய மதிப்பு கூடும்!

மதிபாலா said...
February 25, 2009 at 4:45 AM  

உங்கள் கேள்விகளும் , தோழர் திருமாவளவனின் பதில்களும் அருமை.

ஒரே விடயத்தில் தான் நாம் வேறுபடுகிறோம். எனினும் முழுமையான பேட்டிக்கு பின் நமது கருத்தை வெளியிடுவதே சிறப்பென கருதுவதால் தற்போதைக்கு என் பாராட்டுக்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் மாறுவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கது மோகன் கந்தசாமி.

தொடருங்கள்.

மோகன் கந்தசாமி said...
February 26, 2009 at 11:29 PM  

நன்றி அப்துல்லா அண்ணே!

மோகன் கந்தசாமி said...
February 26, 2009 at 11:30 PM  

//இந்த பதிலில் கொஞ்சம் வருத்தம் தான், எந்த கட்சியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கொண்டு விரோதமடைவது இல்லை, அரசியல் முரண்கள்தான். ///

நிறைய வருத்தம். காங்கிரசுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புள்ள எவரையும் கயவாளித்தனம் என்னும் ரோகம் மெல்ல பீடிக்கும் என்பது உண்மை.

நன்றி குசும்பன்

மோகன் கந்தசாமி said...
February 26, 2009 at 11:35 PM  

////உங்கள் கேள்விகளும் , தோழர் திருமாவளவனின் பதில்களும் அருமை.///

நன்றி மதிபாலா!

////ஒரே விடயத்தில் தான் நாம் வேறுபடுகிறோம். எனினும் முழுமையான பேட்டிக்கு பின் நமது கருத்தை வெளியிடுவதே சிறப்பென கருதுவதால் தற்போதைக்கு என் பாராட்டுக்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.///

நாம் எதில் வேறுபாட்டாலும் ஈழ ஆதரவில் ஒன்றுபடுவோம் என்பது அறிந்ததுதானே!

///இணையம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் மாறுவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கது மோகன் கந்தசாமி.

தொடருங்கள்.////

நன்றிகள் மதுபாலா!