Thursday, September 17, 2009

போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி, பகுதி 2

·

பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


6. அவனது தொடர்பில் நீங்கள் பதிவுகள் எழுதியுள்ளீர்களா? ஆம் என்றால் எத்தனை? அவை எம்மாதிரியானவை?

விடாது கருப்பு யார் என்று கண்டறியவேண்டு என்ற ஆவலில் இமெயில் தொடர்பை ஏற்படுத்தி, அந்த சமயத்தில் என்னுடைய நன்பர் ஒருவர் சொன்ன ஒரு கருத்தாக்கத்தை பதிவாக்கினேன். வோல்கா நதியில் இருந்து வந்த அறிவாளிகள் ரஷ்யர்கள், சுகோய் விமானத்தை அந்தரத்திலேயே பல்டி அடிக்கவைக்கும் அவர்கள் தான் பார்பனர்கள் என்று எழுதினேன். அதன் பின் வேறு எந்த பதிவும் எழுதவில்லை. ஆனால் பிரச்சினையில் நானும் விடாது கருப்புவின் ஒரு ஆசிரியர் என்று காட்ட போலி டோண்டு முனைந்தபோது இதனையும் பயன்படுத்தினான்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை விளக்கவேண்டும். முகமூடி ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருப்பார். போலி டோண்டுவின் அல்லக்கை நீ என்று நான் நம்பவில்லை. ஆனால் போலி டோண்டுவை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக நீ சென்ற தூரம் அருவருப்பானது என்று. என் மனதில் எப்போதும் அரித்துக்கொண்டிருப்பது இது. போலி டோண்டு முயன்று நிறுவியது போல டோண்டு சாரின் மனைவி மகள் படத்தை நான் போலி டோண்டுவுக்கு அளிக்கவில்லை. போலி டோண்டு தளத்தில் எந்த ஆபாச பதிவும் எழுதவில்லை. யாருக்கும் எந்த ஆபாச பின்னூட்டமும் போடவில்லை.

போலி டோண்டு எபிசோடுக்கு முன்பே அல்லது இடையிலோ, எதிர் கருத்து சொல்பவர்களை கொஞ்சம் அரகண்ட் ஆக எதிர்கொண்டது உண்மை. ஆனால் ஆபாச பதிவு எழுதவோ, ஆபாச பின்னூட்டம் போடவோ என்னுடைய மனது ஒப்புக்கொள்ளாது என்பதை முகமூடிக்கு தெளிவுபடுத்த ஆசை.

போலி நடத்திய குழுமத்தில் பிறரது மடல் முகவரியை அவர்கள் அறியாமலேயே இணைக்க பொறிவைப்பது போன்ற மின்மடல்கள் பலருக்கும் வந்தன. அம்மடலில் இருக்கும் கார்பன் காப்பி முகவரிகளில் doondu@gmail.com -யும் இருக்கும். அம்மடல்களுக்கு 'ரிப்ளை ஆல்' கொடுக்கும்போது அது போலிக்கும் சென்று, பிறகு அவர்களும் அவன் நடத்தும் குழுமத்தில் உறுப்பினர்போல் இணைக்கப்படுவர். உங்களுக்கும் இதுபோன்ற மடல்கள் வந்ததா?

உண்மை. இருபத்தைந்து மின்னஞ்சல்களில் நடுவில் டூண்டு என்ற ஐடியும் தொக்கி நிற்கும், ஆனால் அதன் டிஸ்ப்ளே பெயர் டோண்டு என்று இருக்கும். ஆக ஒரு ஓவர் லுக் செய்துவிட்டு ரிப்ளை செய்தீர்கள் என்றால் நீங்கள் டூண்டுவுக்கு மின்னஞ்சல் செய்வது போன்றே தோற்றப்பாட்டுடன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும்.

இதில் எனக்கு ஒரு ஆச்சர்யம் பாருங்கள்.

போலி டோண்டுவை நான் பொது தளத்தில் எதிர்க்க ஆரப்பித்த பின், என்னுடைய நிறுவனம் தாய் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. என்னுடைய மின் அஞ்சல் ravindran.antonysamy@lgsonfindia.com என்பதில் இருந்து ravindran@lge.com என்று மாறிவிட்டது.

திடீரென ஒருநாள் லக்கிலுக் போன் செய்து, உங்கள் மின்னஞ்சல் ஸ்க்ரீன்ஷாட்டை போட்டிருக்கிறான் பாருங்கள் போலி. நீங்கள் அப்படி மின்னஞ்சல் அனுப்பினீர்களா என்று கேட்டான். டூண்டு தளத்தை திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அப்படியே ravindran.antonysamy@lgsonfindia.com என்ற மின்னஞ்சலில் இருந்து டூண்டு ஜிமெயிலுக்கு மின் அஞ்சல் போன மாதிரி ஒரு ஸ்க்ரீன்ஷாட். அதில் ஜிமெயிலில் வரும் ஐக்கான்கள் உட்பட பர்பெக்டாக இருந்தது கண்டு அதிர்ந்தேன். இது ஒரு எடுத்துக்காட்டு.

7. ravindran.antonysamy@lgsoftindia.com என்ற முகவரியில் இருந்து அவ்விதமான மடல் ஒன்று சிலருக்கு சென்றுள்ளது. அதில்doondu@gmail.com என்ற போலியின் முகவரியும் cc -யில் இருந்தது. இது பற்றிய உங்கள் விளக்கம் என்ன?

வேறு ஒருவர் மின்னஞ்சலை போல உருவாக்கி அனுப்பும் அளவுக்கு அவனுக்கு தொழில்நுட்ப அறிவு உண்டு.

8.ஆபாசமாக எழுதியது, உங்களை தாக்கியது, பதிவுலகின் மீது அக்கறை இவற்றில் எது மூர்த்திக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற என்னத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது?

என்னைப்பொறுத்தவரை, மிகுந்த சுயநலத்தோடு, என்னை தாக்கியமைக்கு முதலில் அவனுக்கு தண்டனை தரவேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால், அவனது ஒவ்வொரு ஆபாச தாக்குதல் வார்த்தைகளும் இரண்டு நாளைக்கு உள்ளத்தை விட்டு அகலாமல் தொண்டையில் சிக்கிய மீன் முள் போல உறுத்திக்கொண்டிருக்கும். மற்ற இரண்டுக்கும் பதில் அளிக்கவிருப்பமில்லை.

9. ஆபாசமாக எழுதியது மூர்த்தி மட்டுமல்ல என்கிறபோது வேறு எவர்மீதேல்லாம் புகார் அளித்துள்ளீர்கள்? வேறு யாரும் அவ்வாறு அளித்துள்ளார்களா? ஆம் எனில் அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன?

மூர்த்தியின் எல்லை மீறிய செயல் புகார் அளிக்க காரணம். பெங்களூர் தமிழர்களுக்கு பிரச்சனையான ஒரு நேரத்தில், என்னுடையது போல ஆர்க்குட் முகவரி ஒன்றை உருவாக்கி, அதில் என்னுடைய தொலைபேசி எண்ணையும் இட்டு, அதன் மூலமாக கன்னட சலுவளி சங்கங்கள், கன்னட வலைப்பதிவர் கூட்டமைப்புகள், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ஆர்க்குட்டர்களுக்கு, கன்னடன் எல்லாம் முட்டாள்கள், தமிழன் ஒவ்வொருவனும் ஒரு கன்னடனை கொல்லவேண்டும் என்கிற ரீதியில் நூற்றுக்கனக்கான இடங்களில் எழுதினான்.

அப்படி எழுதும்போது, என்னுடைய கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட என் மனைவியும் இது போன்ற குழுமங்களில் உறுப்பினர் என்பதால் என்னுடைய கவனத்துக்கு உடனே வர, நாங்கள் இதனை பெங்களூர் காவல் அதிகாரிகளிடம் கொண்டு சென்று, அதன் பிறகு அவர்களுடைய அறிவுரையின் பேரில் சென்னை காவல் நிலையம் வந்து புகார் தந்தோம்.

மூர்த்தி மீது மட்டும்தான் புகார் அளித்தோம். பாதிக்கப்பட்ட உண்மைத்தமிழனும், டோண்டுவும் இதில் இணைந்துகொண்டார்கள். உண்மைத்தமிழன் அண்ணனை முதலில் சந்தித்து, புகாரை தட்டச்சினோம். வழக்குரைஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜனை சந்தித்தி அவருடைய சட்ட ரீதியான ஆதரவையும் பெற்றேன்.

10. போலியால் ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளானது தவிர்த்து வேறு பல வழிகளிலும் தொல்லைக்குல்லானதாக தெரிவித்துள்ளீர்கள். அவை எவ்விதமானவை?
முந்தைய பதில் இதற்கும் பொருந்தும். திருமதி துளசி கோபாலிடம் மின்னஞ்சல் அனுப்பி டோண்டு மனைவி மகள் படத்தை பெற்று ஆபாச பதிவு எழுதியதாகவும், போலி டோண்டுவோடு தொடர்பில் இருந்ததாக போலி மின்னஞ்சல் ஸ்க்ரீன் ஷாட்கள் மூலமும், விடாது கருப்பு தளத்தில் நான் ஆசிரியர் என்பது போன்ற கட்டமைக்கப்பட்ட பிம்பமும், வலைப்பதிவின் மூலம் நான் ஆண்டுகணக்கில் பெற்ற நன்மதிப்பை தூள்தூளக்க போதுமானதாக இருந்தது. திருமதி துளசியும், நான் மதிக்கும் வாத்தியார் அய்யாவும், சிவஞானம் ஜியும், காசி சாரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு எப்படி உண்மைகளை புரியவைப்பது என்று குழம்பியே பெரும் மன உளைச்சல் அடைந்தேன். மேலும் நான்கு மாத கர்ப்பிணியான மனைவியுடன் சென்னைக்கு சென்று புகார் தரவேண்டிய அலைச்சலுக்கும் உள்ளானதால் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கப்பட்டேன். மேலும் என்னுடைய அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து, மனித வள அதிகாரிகளிடம் மூர்த்தி சொன்னது என்ன தெரியுமா ? ரவி என்பவர் அலுவலக நேரத்தில் இணையத்தில் பார்ப்பணர்களை தாக்கி எழுதுகிறார் என்பது. இதனால் அவர்கள் என் மீது வைத்திருந்த நன்மதிப்பும் உடைந்து தூளானது.
11. பார்பநீயப் பதிவர்களால் மிகுதியாக வெறுக்கப்படும் நீங்கள் டோண்டுவுடன் எவ்வாறு நெருங்கிநீர்கள் என்று கூற முடியுமா? 'ஊசி ஏற்றுவதுபோல்' உங்களை தாக்கிய பதிவர்கள் அல்லது பதிவுகள் எவை?

இணையத்தில் பார்ப்பணீயப்பதிவர்கள் என்று நான் யாரையும் கருதவில்லை. அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், ஜடாயு, ம்யூஸ் இந்துத்துவம் எழுதுவார்கள். அதில் உள்ள சில கருத்துக்களை எதிர்த்துள்ளேன், அவர்களும் என்னை பதிவு போட்டு குமுறியுள்ளார்கள். பொதுவாக முகமூடி எழுதும் நான்கு வரியில் நாற்பது உள்குத்துகள் இருக்கும். ஒருமுறை ஒரு இந்துத்துவ பதிவில் 'ரவீந்திரன் அந்தோனிசாமி' என்று என்னுடைய முழு பெயரை எழுதியதன் மூலம், நீ கிறிஸ்தவ மதம், அதனால் கருத்து சொல்ல வந்துவிட்டாயா என்பது போல கேட்டார். என்ன தான் நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை என்று தலைபாடாக சொன்னாலும், இந்துத்துவ பதிவர்கள் என்னை மதத்தை வைத்து தாக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்கள். ஒருமுறை முத்து தமிழினி சொன்னார். முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும் என்று. அதுபோல.

12. 'முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும்'- இது பற்றி உதாரணம் தந்து விளக்க முடியுமா?
இந்த இடத்தில் தேவை இல்லாதது இது. ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

13.டோண்டு பற்றி சாதரணமாக பலருக்கும் அப்போது தெரிந்திருந்த நிலையில் உங்களுக்கு தெரிந்தது என்ன?

மற்றவர்களுக்கு தெரிந்தது தான் எனக்கும். ஆனால், அவருக்கு தெரிந்த சில தனிப்பட்ட தகவல்கள் போலி டோண்டுவிடம் சென்றுவிடும். நான் ஒருமுறை பெங்களூர் கே ஆர் புரம் பிக் பஸாரில் இருந்தேன். அப்போது டோண்டுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. என்னுடைய மனைவி ஜெர்மன் படிக்கவேண்டும் என்பதை பற்றி விசாரிக்க நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அழைத்திருந்தார். அப்போது என்னுடைய மனைவி என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டார். சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய மனைவியின் சமூகத்தை சொல்லி திட்டி போலி டோண்டுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

14. பதிவுலகில் போலிடோண்டு தொடர்பாக நடக்கும் ஒவ்வொரு சச்சரவுகளின் போதும் கோவிகன்ணனை நீங்கள் தாக்கிவந்துள்ளீர்கள். அவரும் எதிபதிவுகள் இட்டுள்ளார். மூர்த்தியுடனான முந்தய பழக்கங்களில் நீங்கள் இருவரும் எவ்விதம் மாறுபடுகிறீர்கள் என்று கூறமுடியுமா?

மூர்த்தி தான் போலி டோண்டு என்று ஆயிரம் முறை நிரூபித்த பின்னும், மூர்த்தி என்னுடைய நன்பர், அவர் போலியா என்று தெரியாது. என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதிய விடாது கருப்பை பார்த்து தன்னுடைய பெரியார் பற்றிய அறிவை வளர்த்தேன் என்றெல்லாம் சொன்னால், கோபம் வருமா வராதா ?

<[தொடரும்]

26 comments:

TBCD said...
September 18, 2009 at 5:21 AM  

:)

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 10:23 PM  

//12. 'முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும்'- இது பற்றி உதாரணம் தந்து விளக்க முடியுமா?
//

மோகன்,

இவருக்கும் போலிக்கும் தொடர்பில்லை என்று நான் நம்பவில்லை, ஆனால் அவர் சென்ற தூரம் அறுவெருப்பானது என்று ஞானஸ்தானம் செய்து வைத்தவரைப் பற்றி ஆறுமுகத்திடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்லுவார்.

ரொம்பவும் நோண்டுறிங்களே.

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 10:27 PM  

//டோண்டுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. என்னுடைய மனைவி ஜெர்மன் படிக்கவேண்டும் என்பதை பற்றி விசாரிக்க நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அழைத்திருந்தார். அப்போது என்னுடைய மனைவி என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டார். சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய மனைவியின் சமூகத்தை சொல்லி திட்டி போலி டோண்டுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.//

டோண்டுவுகும் போலி டோண்டுவுக்கும் தொடர்பு இருந்தது - என்று இவர் சொல்வது போல் வேறு யாருமே சொன்னது கிடையாது.

டோண்டு சார் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

samundi said...
September 21, 2009 at 5:54 AM  

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

வால்பையன் said...
September 21, 2009 at 10:22 AM  

சென்ற பதிவுக்கு இட்ட பின்னூட்டத்தை இங்கே ரிப்பீட்டு செய்கிறேன்!

dondu(#11168674346665545885) said...
September 21, 2009 at 11:35 PM  

@கோவி கண்ணன்
அவற்றை முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து “நான் சொன்னதை டோண்டு ராகவன் மறுக்கவேயில்லை, ஆகவே அவர் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்” என்று இவரே ஜல்லியடிக்கலாம் என்பதால் சில விஷயங்களை சந்தேகத்துக்கிடமின்றி கூறிவிடுகிறேன். இவர் போலி டோண்டு மூர்த்தியுடன் உறவாடி அவன் ரகசியங்களை கறப்பதாக என்னிடம் கூறியது உண்மைதான். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் நான் கேட்கவில்லை. அவ்வப்போது இவராகவே பிராக்ரஸ் ரிப்போர்ட் ஃபோன் மூலமோ அல்லது வேறு வகையிலோ தருவார். மற்றப்படி ஆகஸ்ட் 2007-ல் இவர், உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் போலீசுக்கு போய் மூர்த்தி மேல் புகார் தந்தது, பத்திரிகைகளிலும் அது பற்றி செய்தி தந்தது ஆகிய விஷயங்கள் மனதுக்கு நிறைவையே தந்தன. பிறகு நானும் என் தரப்புக்கு போய் மூர்த்தி மேல் புகார் கொடுத்தது எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவை இப்போது இங்கு வேண்டாம். மொத்தத்தில் மூர்த்தி போலீசில் நின்று தலைகுனிந்து நின்றது, அவன் பல் பிடுங்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது என்பதே போதும். செந்தழல் ரவி பற்றி என்னைக் கேள்வி கேட்டு கோவிகண்ணன் இட்ட பதிவுக்கு நான் இட்ட எதிர்ப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் ஸ்னேப் போல அவர் செயல்பட்டார். அதற்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். அது அவரிடம் இருந்தது. அவ்வளவுதான் விஷயம்”.

இன்னொன்றும் கூறுகிறேன். ரவியை நான் அப்போது விட்டுக்கொடுக்காமல் இருந்தது ஜயராமனைக் காப்பாற்றவே என்று கோவி கண்ணன் ஓரிடத்தில் அபிப்பிராயப்பட்டிருக்கிறார். அது தவறு. ஏனெனில் ஜயராமன் அப்பாவி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. போலி டோண்டுதான் இங்கும் குற்றவாளி எனபதை நான் பல இடங்களில் கூறிவிட்டேன். எனது இலக்கு மூர்த்தி அச்சமயம் அவன் மேல் உள்ள குற்றச்சாட்டு திசைதிருப்பப்படக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் அவ்வாறு எழுதியது எழுதியதுதான். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போலி டோண்டுவுக்கு பலதகவல்கள் கொடுத்து வந்தது உண்மை டோண்டுவாகிய நான்தான் என அவதூறாக எழுதி வருகிறார். அது ஏன் எனத் தெரிய ஒன்றும் பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது. ரவி எனக்கனுப்பிய மின்னஞ்சல்களையெல்லாம் தேடிப் பார்த்து விட்டேன். அவர் சொன்னது போல அவர் மனைவிக்கு ஜெர்மன் படிப்பது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஃபோனில் பேசி அவரது மனைவியின் விவரங்களைக் கேட்டதாகவும் அவை பிறகு மூர்த்திக்கு சென்றதாகவும் கூறுகிறார். அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டது போல “எனக்கு அதற்கான மோட்டிவேஷன் என்ன”? என்னும் கேள்விதான் நிற்கிறது. அவர் மனைவி பற்றி அவரிடம் நான் ஒருவிவரமும் கேட்கவில்லை, அவரைப் பற்றி பேச்சே எங்கும் டெலிஃபோனில் பேசியதாக நினைவில்லை. அதே போல தான் போலியின் தளத்தை brute force கொண்டு உடைக்க முயற்சித்ததாகவும், அது எனக்குத் தெரியுமென்றும் பிறகு மூர்த்தியிடம் அச்செய்தி போனதாகவும் வேறு கூறுகிறார். நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல முழுவிவரம் ஒன்றையும் நான் கேட்கவில்லை. போலிக்கு எதிராக வேலை செய்கிறார் என்பதே எனக்கு போடுமானதாக இருந்தது. ஆகவே இங்கும் ரவி பொய் சொல்கிறார். அதற்கும் மோட்டிவேஷன் லக்கிலுக்கைக் காப்பாற்றுவதற்கே என்று தோன்றுகிறது. அவரைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.

என்னைப் பொருத்தவரை நான் தெளிவாகவே உள்ளேன். இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்ப்பதில் ஒன்று தோன்றுகிறது. செந்தழல் ரவி அப்ரூவராகச் செயல்பட்டுள்ளார் என வைத்துக் கொண்டாலும் மூர்த்தியை பிடிக்க அவரது உதவி இன்றியமையாததாக ஆகியிருக்கிறது. மூர்த்தி நீக்கப்பட்டுவிட்டான். அது போதும். இனிமேல் செந்தழல் ரவி வேறு பல்டிகள் அடித்தாலும் எனக்குக் கவலையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
September 21, 2009 at 11:41 PM  

நான் இங்கு குறிப்பிட்ட பதிவுகளின் ஹைப்பர் லிங்குகளை பிளாக்கர் ஏற்க மறுக்கிறது. ஆகவே அவற்றை வெறுமனே காட்டுகிறேன்.

பார்க்க: http://govikannan.blogspot.com/2008/02/blog-post_27.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_27.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 12:17 AM  

//ஏனெனில் ஜயராமன் அப்பாவி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. போலி டோண்டுதான் இங்கும் குற்றவாளி எனபதை நான் பல இடங்களில் கூறிவிட்டேன்//


யார் அல்லக்கை, யார் அப்பாவி என்பது டோண்டு சாருக்கு நல்லாத் தெரிகிறது. அதைவிட மகரநெடுங்குலைக்காதனுக்கும் தெரிந்திருக்கும், எதுக்கும் மகரநெடுங்குலைக்காதன் படம் இருந்தால் பதிவில் போடுங்கள், மகரநெடுங்குலைக்காதனின் காதில் பூ இருக்கான்னு பார்க்கிறேன்.
:)

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 12:20 AM  

//செந்தழல் ரவி அப்ரூவராகச் செயல்பட்டுள்ளார் என வைத்துக் கொண்டாலும் மூர்த்தியை பிடிக்க அவரது உதவி இன்றியமையாததாக ஆகியிருக்கிறது//

கொண்டாலும்....கொண்டாலும்.... அதுதான் டோண்டு சார். காரியம் ஆச்சுன்னு போதும் அப்பறம் எப்படியாவது ஒரு பிட்டைப் போட்டுவிட்டு போனால் எவனாவது தலையைப் பிச்சுக்குவான் உங்களுக்கும் பலிவாங்கியது போலவும் ஆகும்.

நல்லவேளை டோண்டு சாரைக் காப்பாற்றத்தான் நான் களத்தில் இறங்கினேன் என்று செந்தெழல் ரவி சொல்லவில்லை

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 12:24 AM  

//அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டது போல “எனக்கு அதற்கான மோட்டிவேஷன் என்ன”? //

உங்களுக்கெல்லாம் அடுத்தவர் சாதியை பொதுவில் வைப்பதில் இருக்கும் குஷி, அதுல கிடைக்கும் ஆனந்தம் இதையெல்லாம் மோட்டிவேசன் என்று வகைப்படுத்த முடியுமா டோண்டு சார் ?

அரசியல்வாதிகளில் யார் யார் எந்த சாதி என்று உங்கள் பதிவை, உங்கள் பதிவின் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்துவிடுமே டோண்டு சார்.

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 12:34 AM  

//“செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். //

இதெல்லாம் ரொம்ப கொடுமை டோண்டு சார், நான் தான் அவர் என்மீது சாணி அடித்தார் என்பதற்காக அப்படி ஒரு குற்றச் சாட்டுக் கூறுகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நீங்க என்ன சொல்லி இருக்கனும், ரவி பத்திரை மாற்றுத் தங்கம், அவரு அப்படியெல்லாம் செய்திருக்கக் கூடியவரே அல்லர் என்று சொல்லி இருக்கனும், பிறகு ஏன் அவர் ஒருவேளை அப்படி செய்திருந்தாலும் நான் மன்னிப்பேன் என்று உங்களுக்கு இருக்கும் ஒரு சிறு சந்தேகத்தை மறைமுக கருத்தாக திணித்துவிட்டு செல்கிறீர்கள் ?

100 % உங்களிடம் சொல்லிவிட்டு செயல்பட்டார் என்று சொல்லும் அவரைப் பற்றி நீங்கள் 100% 'அவர் செய்யக் கூடியவர் அல்லர், ஆதாரம் தந்தாலும் அவற்றை நான் நம்பவும் மாட்டேன்' என்று ஏன் சொல்ல முடியவில்லை ?

நீங்கள் மறைமுக மாக குறிப்பட்ட யூஸ் அண்ட் த்ரோ பாலிசியா ?

இந்த ஒரு விசயத்தில் செந்தழல் ரவி பாவம்.

dondu(#11168674346665545885) said...
September 22, 2009 at 12:36 AM  

//அரசியல்வாதிகளில் யார் யார் எந்த சாதி என்று உங்கள் பதிவை, உங்கள் பதிவின் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்துவிடுமே டோண்டு சார்.//

அரசியல்வாதிகளின் சாதி பற்றி அறிய டோண்டு தேவையில்லையே. அவர்கள் நிற்கும் தொகுதிகள் அலசலிலேயே அவை வந்து விடுகின்றனவே.

மற்றப்படி வேறு யார் சாதியையும் நான் எனது பதிவுகளில் குறிப்பிட்டதாக நினைவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
September 22, 2009 at 1:16 AM  

//ஆனால் நீங்க என்ன சொல்லி இருக்கணும், ரவி பத்திரை மாற்றுத் தங்கம், அவரு அப்படியெல்லாம் செய்திருக்கக் கூடியவரே அல்லர் என்று சொல்லி இருக்கணும்//
அதாவது நீங்கள் கடைசிவரை மூர்த்திக்கு வக்காலத்து வாங்கியது போல செய்திருக்க வேண்டும் என்றா கூறுகிறீர்கள்?

பை தி வே உங்கள் பதிவு, http://govikannan.blogspot.com/2009/09/blog-post_18.html அதையும் படித்துத் தொலைத்து விட்டேனே. அதில் செந்தழல் ரவி பதறிப் பின்னூட்டம் போட்டு நீங்கள் அப்பதிவை மறைத்து வைத்திருப்பதும் தெரியும்.

நடுவில் அதை எடுத்திருந்தீர்கள். அப்போது அதன் நகல் எடுத்து சேமித்துள்ளேன். இது உங்கள் தகவலுக்கு.

ஆகவேதான் எனது பின்னூட்டம் இப்பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 1:27 AM  

//அதாவது நீங்கள் கடைசிவரை மூர்த்திக்கு வக்காலத்து வாங்கியது போல செய்திருக்க வேண்டும் என்றா கூறுகிறீர்கள்? //

நான் மூர்த்திக்கு வக்காலத்து வாங்கவில்லை. தவறு செய்யும் எவரும் தண்டனை பெறவேண்டியவரே. மூர்த்தி தவறு செய்திருந்தால் செருப்பால் அடியுங்கள் என்றே சொல்லி இருக்கிறேன். என்னை மூர்த்தியின் நடவெடிக்கையில் தொடர்பு படுத்தும் முயற்சியைத் தான் நான் கண்டித்தேன்.


//பை தி வே உங்கள் பதிவு, http://govikannan.blogspot.com/2009/09/blog-post_18.html அதையும் படித்துத் தொலைத்து விட்டேனே. அதில் செந்தழல் ரவி பதறிப் பின்னூட்டம் போட்டு நீங்கள் அப்பதிவை மறைத்து வைத்திருப்பதும் தெரியும்.
நடுவில் அதை எடுத்திருந்தீர்கள். அப்போது அதன் நகல் எடுத்து சேமித்துள்ளேன். இது உங்கள் தகவலுக்கு.

ஆகவேதான் எனது பின்னூட்டம் இப்பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

சிதம்பர ரகசியம் ஒன்றும் இல்லை. அந்தபதிவின் பின்குறிப்பில் சொல்லி இருப்பதைத் தானே செய்து இருக்கிறேன்.
என் அனுமதி இன்றி யாரும் என்பதிவை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது. மீறி செய்யும் போது அதில் குறிப்பிட்டு இருப்பவரின் தாக்குதலுக்கு உள்ளானால் நான் பொறுப்பு இல்லை.

வேன்றுமென்றால் அச்சுப் பிரதி எடுத்து மகரநெடுங்குலைக்காதாதனுக்கு பூசை நடத்துங்கள், அதற்கு அனுமதி தருகிறேன்
:)

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 1:38 AM  

//ஆகவே இங்கும் ரவி பொய் சொல்கிறார். அதற்கும் மோட்டிவேஷன் லக்கிலுக்கைக் காப்பாற்றுவதற்கே என்று தோன்றுகிறது. அவரைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.
//

மோட்டிவேசன், மோட்டிவேசன் அற்ற என்பதெல்லாம் உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும், லக்கிலுக்கைக் காப்பாற்றத்தான் என்று ஒரு பிட்டைப் போட்டுச் செல்வதன் மோட்டிவேசன் என்ன ? நீங்களும் லக்கியும் தற்போதும் போனில் பேசிக் கொண்டு தானே இருக்கிறீர்கள் ? அது தவிர முத்துக்குமரனுக்கு தனிப்பதிவு எழுதி அல்லக்கை என்று சொன்னது போல் லக்கிலுக்கிற்கு எதுவும் தங்கள் அருளாத போது மோட்டிவேசன் பற்றி தங்கள் குறிப்படுவது பற்றி அறியத்தாருங்கள்.

நீங்கள் செந்தழல் ரவியைப் பார்த்து பரிதாபப்படுகிறேன் என்று சொல்லும் உங்கள் பெருந்தன்மையைப் போற்ற வார்த்தைகள் இல்லை.

இஸ்ரேல், சண்டை, ஸ்டாசி, நம்பிக்கைத் துரோகம் இதுபற்றி ஒரு கதை அத்துடன் இங்கே நீங்கள் இங்கே எழுதி இருக்கும் நீளப்பின்னூட்டம் தொடர்பு படுத்தி ஒரு தனிப்பதிவு போட்டுவிட்டு அதன் பின்னூட்டத்தில் அனானி(யாக) நான்கு பேர்களுக்கு அல்லக்கை பட்டம் கொடுத்துவிட்டால் இந்த வாரம் ஓடிப்போகும் டோண்டு சார்.
:)

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 1:51 AM  

//அது தவறு. ஏனெனில் ஜயராமன் அப்பாவி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை//

டோண்டு சார்,

உங்களுக்கு ஐயமா ஐயம் இல்லையான்னு யாருமே கேட்டது, கவலைப்பட்டது போல் தெரியவில்லை. ஜயராமன் சல்மா ஐயூப்பாக தான் செயல்படவில்லை என்று அவர் வலைப்பதிவில் சொன்னது கிடையாது, அது பற்றி அவரிடம் நேரடி வாக்குமூலங்களைப் பெற்று நீங்களும் பெற்றுப் பதிந்தது இல்லை. அது பற்றி நீங்களாகச் சொல்லும் கருத்துக்களைத் தான் நீங்கள் பதிந்தீர்கள், சல்மா ஐயூப் எழுதிய போலிப் பதிவுகள் 'ஆப்ரேசன் போலிக்கு' முன்பே அதாவது கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே பாலபாரதியின் 'ஆப்ரேசன் சல்மாவுக்கு' பிறகு அன்றே காணாமல் போனது.

dondu(#11168674346665545885) said...
September 22, 2009 at 1:52 AM  

//என் அனுமதி இன்றி யாரும் என்பதிவை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.//
கண்டிப்பாக செய்ய மாட்டேன், ஆனால் கோட் செய்வது என்பது அதில் அடங்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நீங்களே ஒரு காரணத்துக்காக அதை மூடிவைத்திருக்கும்போது கோட் கூட செய்ய மாட்டேன்.

நகல் எடுத்துள்ளேன் என்பது உங்கள் தகவலுக்குத்தான் கூறினேன். கூறுவதுதான் சரியான செயல்பாடாக எனக்குப் பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
September 22, 2009 at 2:01 AM  

@கோவி கண்ணன்
சல்மா அயூப் என்னும் பெயரில் உள்ள ப்ரொஃபைல் இப்போதும் அப்படியே உள்ளது.
அது முன்னால் ஜோதி என்ற பெயரில் இருந்தது. திசம்பர் 2005-ல் உருவானது.

மேலதிக விவரங்கள் எனது ஆப்பரேஷன் சல்மா அயூப் பதிவில் உள்ளன. பார்க்க: http://dondu.blogspot.com/2007/04/blog-post_14.html

வேறு எந்த பெயரில் வந்திருந்தாலும் நானும் பாலபாரதி எழுதியதை சந்தேகப்பட்டிருந்திருக்க மாட்டேன்.

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் என அக்கறை இல்லை.

எனக்கு இது சம்பந்தமாக தெரிந்திருக்கும் மேலதிகத் தகவல்களை போலீS எப்போது விசாரித்தாலும் கூறத் தயாராகவே உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 2:05 AM  

// dondu(#11168674346665545885) said...
@கோவி கண்ணன்
சல்மா அயூப் என்னும் பெயரில் உள்ள ப்ரொஃபைல் இப்போதும் அப்படியே உள்ளது.
அது முன்னால் ஜோதி என்ற பெயரில் இருந்தது. திசம்பர் 2005-ல் உருவானது.

//

டோண்டு சார்,

உங்கள் தகவலுக்காக ஜயராமன் சார் பதிவின் ப்ரொபைல் கூட March 2005
என்று தான் இருக்கு. மார்ச்க்கு பிறகு தானே திசம்பர் 2005.

லாஜிக் ஒன்றும் உதைப்பது போல் தெரியலையே.

பைதவே நீங்கள் 'ஜோதி' என்று குறிப்பிட்டு இருப்பது கத்திபாரா 'ஜோதி' திரையரங்கை நினைவு படுத்துவதை தவிர்பதற்கு இல்லை.

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 2:08 AM  

டோண்டு சார்,

தனிப்பதிவாக 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்' என்று போட்டு இருக்கிறீர்கள்.

பார்பனர்கள் தவிர்த்து யார் உங்களை எதிர்த்தாலும் அவர்களை எதிர்கொள்ளும் உங்கள் தைரியம்
பாராட்டத்தக்கது.

வாழ்க டோண்டு சாரின் வலையுலக சேவை.

dondu(#11168674346665545885) said...
September 22, 2009 at 2:19 AM  

//நான் மூர்த்திக்கு வக்காலத்து வாங்கவில்லை. தவறு செய்யும் எவரும் தண்டனை பெறவேண்டியவரே. மூர்த்தி தவறு செய்திருந்தால் செருப்பால் அடியுங்கள் என்றே சொல்லி இருக்கிறேன்.//
அவன்தான் குற்றவாளி எனத் தெரிந்தது ஜூலை 2008-ல். அப்போதாவது அவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று எங்காவது கூறினீர்களா?

//தனிப்பதிவாக 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்' என்று போட்டு இருக்கிறீர்கள்//.
யார் கண்டது இப்பதிவே வேறு ஏதேனும் அரசியலில் காணாமல் போகலாம் அல்லவா? எதுக்கும் இருக்கட்டும் என்றுதான் தனிப்பதிவிலும் இட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
September 22, 2009 at 2:21 AM  

//பார்பனர்கள் தவிர்த்து யார் உங்களை எதிர்த்தாலும் அவர்களை எதிர்கொள்ளும் உங்கள் தைரியம் பாராட்டத்தக்கது.//
மற்ற சாதிக்காரர்களை எதிர்த்து எழுத துப்பில்லாதவர்கள் பார்ப்பனரை மட்டும் எதிர்த்தால் இந்த சண்டைக்கார பாப்பான் விட்டுவிடவேண்டும் என எதிர்பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 2:52 AM  

//அவன்தான் குற்றவாளி எனத் தெரிந்தது ஜூலை 2008-ல். அப்போதாவது அவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று எங்காவது கூறினீர்களா?
//

டோண்டு இராகவன் சார், பல்பு வாங்கிட்டுப் போகனும் என்று பிடிவாதமாக இருந்தால் நான் ஒண்ணும் பண்ண முடியாது.

அது எவனாக இருந்தாலும் தண்டனைக்கு உரியவன் தான் என்று ஏற்கனவே 2007ல் எழுதி இருக்கிறேன். நீங்க 2008 பற்றிப் பேசுறிங்க. நிற்க.

போலி டோண்டுவிற்கு மட்டுமே அல்ல போலி டோண்டுவிற்கு அல்லக்கையாக செயல்பட்டவர்கள் அனைவருக்குமே கொடுக்கப்பட வேண்டியது தான். இங்கே செந்தழல் ரவி உங்கள் மீது இரண்டு குற்றச் சாட்டுகளைச் சொல்லி இருக்கிறார்

1. அவர் மனைபற்றிய தகவல்களை நீங்களே போலி டோண்டுவிடம் போட்டுக் கொடுத்ததாக
2. ப்ரூட் போர்ஸ் அட்டாக் பற்றிய தகவல்களை போலியிடம் நீங்கள் கசிய விட்டதாக

இந்த இரு தகவல்களையும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார். நீங்கள் மறுக்கிறீர்கள். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது

அவர் போலியின் அல்லக்கைகளை முழுமையாக ஆதாரத்துடன் அடையாளப்படுத்தினால் என்னிடம் இருப்பதே ஒரு ஜோடி நான் என்ன செய்வது சொல்லுங்கள் ?

வால்பையன் said...
September 22, 2009 at 2:54 AM  

//என்னிடம் இருப்பதே ஒரு ஜோடி நான் என்ன செய்வது சொல்லுங்கள் ? //

எத்தனை வருசமா வளர்க்குறிங்க இந்த ”ஜோடி”ப்புறாவை!

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 3:42 AM  

//dondu(#11168674346665545885) said...
September 22, 2009 2:21 AM
மற்ற சாதிக்காரர்களை எதிர்த்து எழுத துப்பில்லாதவர்கள் பார்ப்பனரை மட்டும் எதிர்த்தால் இந்த சண்டைக்கார பாப்பான் விட்டுவிடவேண்டும் என எதிர்பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு சார்,

பார்பனர்களை எதிர்த்து எழுதுபவர்கள் பற்றி நான் குறிப்பிடவில்லை டோண்டு இராகவன் சாரைப் பற்றி எழுதும் பார்பனர்கள் தவிர்த்து பிறரை டோண்டு இராகவன் சார் தைரியமாக எதிர்கொள்கிறார் என்றே சொன்னேன். நீங்கள் தொடர்பற்றி பார்பனர்களின் காவலாளி நான்(தாங்கள்) தான் என்பது போல் மார்தட்டுகிறீர்கள். அதில் எனக்கு ஒன்றும் இல்லை, அதை நான் கேட்கவும் இல்லை.

பார்பனர்களுக்காக நான் முன்மொழிகிறேன் அல்லது பார்பனர்கள் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா ? அந்த பின்னூட்டம் வழி என்ன சொல்கிறீர்கள் என்று படிப்பவர்கள் குழம்பும் வாய்ப்புண்டு.

கோவி.கண்ணன் said...
September 22, 2009 at 3:42 AM  

//நீங்கள் தொடர்பற்றி //

நீங்கள் தொடர்பற்று - என்று வாசிக்கவும்