Monday, December 24, 2007

மெட்ராஸ் -னா நக்கலா பூடுச்சா!

·

சில பேரு இருக்கான் மீடியா-ல, கரிட்டா சொல்நோன்னா இங்கிலீஷ் மீடியா-ல, அவுன்லுக்கு மெட்ராஸ்-ஸ நக்கல் பன்றதான் வேலையே! பெங்களுருன்னா ஒஸ்தி, மெட்ராஸ்-னா சொம்மா. நார்த்தின்டியா காரனுங்கதான் சிஎன்என்-ஐபிஎன்-ல நல்லா ஆக்குபை பண்ணிக்கிட்டு நம்மள தெனம் தெனம் வெறுப்பேத்திகிட்டு இருக்கானுங்கோ. பெங்களூரு ஒரு டப்பா ஊரு. அத போய் சிங்கபூர் ரேஞ்சிக்கி பேசரானுங்கோ. இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ. அம்பது வருசமா நோர்த்ல பப்பு வித்து போநியாவுல. சௌத்ல நாமலாம் அம்பது வருஷமா கஷ்டப்பட்டு (எவ்ளோ ஓரவன்ஜன பன்னானுங்க இந்தி பசங்க) நம்ம ஊருங்கள டெவலப் பண்ணி வச்சா, இவனுங்க வந்து கூடாரம் போட்ருவானுங்கோ போல்ருக்கே! இதுல இவ்னுங்களுக்கொஷ்ரம் நாம இந்தி படிக்கணுமாம்! பொட்டி படிக்கை யோட சென்ட்ரல் ல வந்து இவனுங்க நிக்கும் போது அவனுங்களுக்கு அட்ரஸ் சொல்ரதுக்கொஷ்ரமெல்லாம் நாம இந்தி படிக்க முடியுமா? அது சரி! கன்னடா காரனுங்கல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்குங்கோ. மெட்ராஸ்-ஸ நக்கல் பண்ணா ஜில்லுன்னு தான் இருக்கும் உனுக்கு இப்போ. மெட்ராஸ் ல கேம்ப் அடிக்க முடியாத எரிச்சல்ல "ச்சேய் இந்த பயம் புய்க்கும்" ன்ற மாதிரி நக்கல் தான் அடிப்பனுங்கோ. ஆனா உங்க ஊர அவுனுங்க ஊரா ஆக்கி உங்கள "செகண்டரி சிடிசன்" ஆக்கிடுவானுகோ ஜாக்ரத, அவ்ளோதான் சொல்வேன்.

8 comments:

Unknown said...
January 21, 2008 at 1:48 AM  

Naala Kadhaiya keethupa....

TBCD said...
February 21, 2008 at 12:50 AM  

நல்லா கீது வாத்தியாரே..

கரீக்டாச் சொன்னேன்..

பெங்களூரு காரானுங்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏதோ, 25000 தூரம் இருக்கிற மாதிரி, எந்த ஊருலேயிருந்தாலும், ஆர் யு பிரம் சென்னை...சென்னை பீபிள் ஆர் வெர்ஸ்ட்...சென்னை ஆட்டோ டிரைவர்ஸ் வெர்ஸ்ட்...தே டோண்ட் ஸ்பீக் இந்தி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்..


போக போகப் புரியும்...இந்த இந்தியின் ஆதிக்கம் தெரியும்...

மோகன் கந்தசாமி said...
March 1, 2008 at 5:25 AM  

Hi TBCD,
/////...சென்னை ஆட்டோ டிரைவர்ஸ் வெர்ஸ்ட்/////
சென்னை ஆட்டோ டிரைவர் -சை ஆட்டோ டேரரிஷ்ட்டுகள் -ன்னு சொல்லி மத்திய ரிசர்வு, பேரா மிலிடெரி எல்லாம் அனுப்பறது ஒண்ணுதான் இன்னம் பாக்கி.

////போக போகப் புரியும்...இந்த இந்தியின் ஆதிக்கம் தெரியும்/////
தும்ப வுட்டுட்டு வால புடிக்கிற மராட்டி காரனுங்க மாதிரி லேட்டாதான் இவனுங்களுக்கும் புரியும். மொழி ஆர்வம் எது மொழி வெறி எதுன்னு தெரியாம உழைக்கும் மக்களைத்தான் தாக்குவானுங்க. board room -ல ஒக்காந்துகிட்டு, மீடியாவ வச்சி ஒவ்வொரு கன்னடா காரன் புருவத்தையும் வழிச்சி அடையாளம் தெரியாம ஆக்கப்போரானுங்க இந்தி காரனுங்க. அது தெரிய வர அன்னைக்கு பொழைக்க வந்து பொழப்ப மட்டும் பாக்கற மக்களை உருட்டு கட்டைய தூக்கிக்கிட்டு தொரத்துவானுங்க. முட்டாப்பசங்க....
மோகன் கந்தசாமி

கோவி.கண்ணன் said...
April 11, 2008 at 9:23 AM  

மோகன்,

இந்த பதிவுக்கு என்னுடைய http://govikannan.blogspot.com/2008/04/blog-post_5030.html பதிவில் வெளம்பரம் கொடுத்திருக்கிறேன்.
:)

மோகன் கந்தசாமி said...
April 13, 2008 at 3:19 PM  

//வெளம்பரம் கொடுத்திருக்கிறேன்.//
ரொம்ப ட்டேங்க்ஷ்பா! மனசுக்கு ரொம்ப கில்மாவாகீதுபா!

HK Arun said...
April 22, 2008 at 3:24 PM  

சென்னை வட்டார தமிழில் நகைச்சுவையாக எழுதியிருந்தாலும், மிகவும் சிறந்த சிந்தனைக்குறிய பதிவு.

நன்றி

மோகன் கந்தசாமி said...
April 24, 2008 at 3:54 AM  

நன்றி அருண், மீண்டும் வருக!

Anonymous said...
April 27, 2008 at 5:02 PM  

:)

Pinnitapaa...

Naan nenachen... Nee sollitta..

un kitta irunthu naan neraya ethir paakaren...