Thursday, May 22, 2008

சிங்கை, பெங்கை மற்றும் மங்கள் பாண்டே டொப்பி

·




சிங்கப்பூர் ஸ்காட்ஸ் டவர்

ஒட்டு வாங்கி பின் ஆட்சிக்கு வந்ததும் அல்வா பல்க் ஆர்டர் செய்து கடைக்கோடி குடிமகனுக்கும் கிடைக்கும்படி விநியோகிப்பது தான் உலகெங்கும் உள்ள ஜனநாயக நெறிமுறை. ஆனால் கர்நாடகத்தை பொறுத்தவரை அல்வா வழங்கும் காண்ட்ராக்ட் இப்போதே சி.என்.என்-ஐ.பி.என் -கு கொடுக்கப்பட்டு விட்டது. யார் வந்து சாங்க்ஷன் செய்வது என்பதுதான் முடிவு செய்ய வேண்டும்.

"என்ன பிரச்சினை -னு நீ இதுவரைக்கும் சொல்லல..." என்று கோபப்படுபவர்கள் சற்றே பொறுங்கள். நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா கட்சிகளும் தங்கள் அல்வா வகைப்பட்டியலில் மறக்காமல் சேர்த்திருந்த அல்வா "அடுத்த 5 ஆண்டுகளில் பெங்கையை சிங்கை ஆக்குவோம்" என்ற அல்வா தான். சிங்கப்பூர் சிங்கை என்றால் பெங்களூர் பெங்கை தானே? கோதாவில் உள்ள ஒரு முக்கிய கட்சி ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவாக தனது 5 ஆண்டுகால மத்திய ஆட்சியில் மாற்றி சாதனை படைத்திருக்கிறது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்து "யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் இண்டியா" என பெயர் மாற்றம் செய்வதுதான் பாக்கி. கூடவே பெங்களூருக்கும் பெயர் மாற்றம் செய்து "பெங்கை" ஆக்கிவிட்டால் பணி முற்றுப்பெறும்.



பெங்களூர்

இவர்கள் மனசில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பன்னாட்டு சாப்ட்வேர் பசங்களுக்கு சிட்டி -யை வாடகைக்கு விட்டுவிட்டால் பெங்களூர் சிங்கப்பூர் ஆகிவிடுமா? அல்லது பிரிகேட் ரோட்டில் எலக்ட்ரானிக் பார்க்கிங் மீட்டர் வைத்துவிட்டால் போதுமா? சில சாப்ட்வேர் புனிதப்பசுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை மிரட்டும் அளவிற்கு நிலைமை கொண்டுவந்து விட்டபிறகு சிங்கப்பூர் என்ன, கோயம்புத்தூர் -மாதிரி கூட ஆகமுடியாது.

"சென்னையை ஐ.டி -யில் முதன்மை நகரமாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட போது ஒருமுறை தமிழக ஐ.டி செயலர் சொன்னார், "வி டோன்ட் வான்ட் டு பி எ குயின் இன் த மிடில் ஆப் த க்வாலம்ஸ் (qualms)". ஆனால், பெங்களூர் இப்படித்தான் இன்றைய தேதியில் இருக்கிறது. உள்ளாடைகள் ஏதும் போடாமல் கோட் சூட் போட்டுக்கொண்டு வெளியே வந்தாயிற்று. இப்போது திரு திரு விழிகளுடன் நெளிந்து கொண்டு நிற்கிறது. இனி கோட் கோட் சூட் கழற்றாமல் உள்ளாடைகளை போட முடியாது, உள்ளாடைகளை போடாமல் இப்படியே தொடரவும் முடியாது. கோட் சூட் கழற்றினால் டைரக்டா அம்மனம்தான். ஐ.டி. இல்லன்னா பெங்களூர் ஜீரோ தான்.


மங்கள் பாண்டே டொப்பி

இதுல, உல்ட்டா ஜால்ரா போடரத்துக்குன்னே ஒரு கும்பல் எப்பவும் தயாரா இருக்கும். யாருன்னு நான் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். தே ஆர் நன் அதர் தேன் நார்த் இண்டியன்ஸ் லைக் சி.என்.என்-ஐ.பி.என். இவனுங்களுக்கு சவுத் இந்தியான்னா பெங்களூர் -வும் ரஜினிகாந்த்தும் தான். இப்படி கூலிவாங்காம மாரடிக்கிரவனுங்க லிஸ்ட் ரொம்ப பெருசு. டைம்ஸ் நவ், எக்கானமிக்ஸ் டைம், இந்தியா டுடே மற்றும் பெரும்பாலான ஆங்கில, இந்தி மொழி பேப்பர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியாக்கள்.


ஒருமுறை சஞ்சய் மன்ஜ்ரேக்கர் சின்னசாமி ஸ்டேடியம் கமெண்ட்ரி பாக்ஸ் -ல உட்காந்துகிட்டு சொல்றார், "பெங்களூர், அன்-டிஸ்பூட்டட் ஐ.டி. கேபிட்டல் ஆப் இண்டியா". என்னவோ மத்த சிட்டி எல்லாம் இந்த விசயத்தை டிஸ்பூட் பண்ற மாதிரியும், இவுரு சொம்புல தண்ணி புடிச்சுகிட்டு, தோள்ல துண்ட போட்டுக்கிட்டு, ஆலமரத்தடிக்கு பஞ்சாயத்து பண்ண வந்த மாதிரியும் இருக்கு இவர் பேச்சு.


சரி, இவனுங்கள பத்திதான் தெரியுமே, உருப்படியா வேற எதாவது பேசுவோம். இப்ப, பெங்கையை எப்படி சிங்கையா மாத்தரதுன்னு நம்ம குத்து ரம்யா தாத்தாவுக்கும்(S.M. கிருஷ்ணா), நம்ம எட்டு பாட்டி ராசாவுக்கும்(எட்டியூரப்பா) ஐடியா கொடுப்போமா?

1. சிங்கையில் சீனாக்கார்கள் ஜாஸ்த்தி என்பதால் ரெண்டு லோடு சீனாக்காரங்கள இம்போர்ட் பண்ணி சிட்டி புல்லா சுத்த விட்டா இம்மீடியட்டா சிங்கப்பூர் லுக் வந்துடும்.



2. சிட்டி ட்ராபிக் போலிஸ் தொப்பி மங்கள் பாண்டே டொப்பி போல இருப்பதால் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுவதாக நினைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்கள் தொழில் தொடங்க வந்து விடுகிறார்கள். காஷ்ட்யூமை சிங்கப்பூர் போலிஸ் மாதிரி மாற்றுவது நல்ல தீர்வு.



3. இந்தமாதிரி படங்களை கிராபிக்ஸ் செய்து நெட் முழுக்க பரப்பிவிட்டு இதுதான் பெங்களூர் என்று மொள்ளமாரித்தனம் செய்துவிட்டால் பிறகு சிங்கை எப்படி பெங்கை ஆவது என யோசிக்க ஆரம்பித்துவிடும். நாமும் நிரந்தரமாக காவிரிபிரச்சினையிலேயே பொழுதை கழிக்கலாம்.

உங்ககிட்ட ஏதும் ஐடியா இருக்கா?

5 comments:

மோகன் கந்தசாமி said...
May 23, 2008 at 2:46 AM  

Test!

Anonymous said...
May 23, 2008 at 3:58 PM  

//இந்தமாதிரி படங்களை கிராபிக்ஸ் செய்து நெட் முழுக்க பரப்பிவிட்டு இதுதான் பெங்களூர் என்று மொள்ளமாரித்தனம் செய்துவிட்டால் பிறகு சிங்கை எப்படி பெங்கை ஆவது என யோசிக்க ஆரம்பித்துவிடும்.//
சூப்பருங்கோ.
கேக்கிறவன் கேணயா இருந்தா................
கன்னடப் பசங்கள சொல்லணும்.

மோகன் கந்தசாமி said...
May 23, 2008 at 4:18 PM  

ஹாய் வெட்டி ஆபிசர்,
காவிரி பிரச்சினையில கூட "போனா போறானுங்க, எப்படி பாத்தாலும் நம்ம பசங்கன்னு" தோனுது. ஆனா இந்த நார்த் இந்தியன் நான்சன்சு -கள் கூட கை கோத்த செம காண்டாவுது.

கோவி.கண்ணன் said...
June 10, 2008 at 12:56 AM  

பெங்களூரு மேல ஏன் உங்களுக்கு இப்படி ஒரு காண்டு ?

காவேரி பிரச்சனையா ? ஒக்கனேகல்லா ?

மோகன் கந்தசாமி said...
June 11, 2008 at 11:28 PM  

கோவி,
///காவேரி பிரச்சனையா ? ஒக்கனேகல்லா ?///

இரண்டு காரணங்களுமே காண்டு ஏற்படுத்துபவைதான் எனினும் முக்கிய காரணம், நான் பழக நேர்ந்த சில தமிழ் பெங்களூர் வாசிகளின் வெற்று அலப்பறைதான்.