Saturday, June 14, 2008

தசாவதாரம்: ஒரு பொது மன்னிப்பு

·

பிரிட்டிஷ் காலத்தில் இந்துத்துவா கட்சி ஒன்றின் தலைவர் வீர சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து தன்னை விடிவுக்குமாறு கோரி பொது மன்னிப்புக் கேட்டு அரசுக்கு கருணைமனு அனுப்பினார்.

மகாகவி பாரதியார் புதுவையிலிருந்து மதராஸ் ஆட்சியருக்கு "அரசுக்கு எதிராக செயல் படமாட்டேன்" என்று பொருள்பட மன்னிப்பு கடிதம் அனுப்பினார்.

சீனாவில் கைது செய்யப்பட்ட வேவு ஆட்களை மீட்க தனது வெளியுறவுச் செயலரை மன்னிப்பு கேட்கச்சொன்னார் அமெரிக்க ஜனாதிபதி புஷ்

1984 -ல் நடந்த சீக்கிய படுகொலைகளுக்கு காங்கிரஸ் பிரதமர் மன் மோகன் சிங் மன்னிப்பு கேட்டார்.

வலைப்பதிவர் மோகன் கந்தசாமி தசாவதாரம் படத்திற்கு படம் பார்க்காமல் போலியான, ஜாலியான விமர்சனம் எழுதியதற்கு பொது மன்னிப்பு கேட்டார்.

டிஸ்கி: எனது 26 பதிவிற்கு பதிவர் "தம்பி" எழுதிய கட்டுரை தகுந்த லே அவுட் செய்யப்பட்டு தயாராக இருந்த போதிலும் தசாவதார புயல் வீசும் இந்த நேரத்தில் வெளியிட தயக்கம் உள்ளது. நல்ல பதிவை எவர் கண்ணிலும் படாமல் போகும்படி விட மனமில்லை. எனவே இன்னும் இரு நாட்களுக்கு அதை ஒத்தி வைக்கிறேன்.

13 comments:

Anonymous said...
June 14, 2008 at 6:01 PM  

உண்மைக்கதையை விட உங்கள் கதையில் லாஜிக் இருப்பதால், மன்னிப்பு தேவை இல்லை.

மோகன் கந்தசாமி said...
June 14, 2008 at 8:45 PM  

///உங்கள் கதையில் லாஜிக் இருப்பதால், மன்னிப்பு தேவை இல்லை.
///

:-)

கதிர் said...
June 15, 2008 at 12:03 AM  

அப்ப அது போலியா? நிஜம் இல்லையா?

கதிர் said...
June 15, 2008 at 12:07 AM  

ஆக, வீரசாவர்க்கரும், பாரதியும், புஷ்ம், சிங்கும் அதுகூட உங்களையும் தியாகிகள் பட்டியல்ல சேத்துகிட்டிங்க.

மோகன் கந்தசாமி said...
June 15, 2008 at 2:11 PM  

///உங்களையும் தியாகிகள் பட்டியல்ல சேத்துகிட்டிங்க.///
பதிவில் நான் கூறிய எவரும் தியாகிகள் அல்ல. பல பிகர்களை நண்பர்களிடம் கோட்டை விட்ட நான் தான் தியாகி.(ஹி ஹி). இவர்கள் லிஸ்டில் சேர்ந்ததுக்கு வருத்தப்படுகிறேன்.

rapp said...
June 15, 2008 at 3:45 PM  

ஆஹா, நான் அப்பவே சந்தேகப்பட்டேன். ஆனா பேசாம கமல் உங்ககிட்ட இருந்து கதை வாங்கி இருக்கலாம். உங்க கதையும், திரைக்கதையும் ஒரிஜினலை விட சூப்பரா இன்னும் பிரம்மாண்டமா இருந்துச்சு.

Athisha said...
June 15, 2008 at 11:43 PM  

பொது மன்னிப்பு தான் கேள்வி பட்டுருக்கேன்

இதென்ன போது மன்னிப்பு

தலைப்ப திருத்துங்க மோகன்

கோவி.கண்ணன் said...
June 15, 2008 at 11:43 PM  

//வலைப்பதிவர் மோகன் கந்தசாமி தசாவதாரம் படத்திற்கு படம் பார்க்காமல் போலியான, ஜாலியான விமர்சனம் எழுதியதற்கு போது மன்னிப்பு கேட்டார். //

செம நக்கலுதான்.

:)

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 4:44 AM  

///உங்க கதையும், திரைக்கதையும் ஒரிஜினலை விட சூப்பரா இன்னும் பிரம்மாண்டமா இருந்துச்சு.///
இதத்தான் நானும் சொன்னேன். கேட்க மாட்றாங்க வெட்டி ஆபிசர். ஆர்குட் -ல இருந்து, சில போரம் -கள் வரை எல்லாத்திலையும் என்னப்போட்டு கிழிக்கிரானுங்க.

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 4:46 AM  

////இதென்ன போது மன்னிப்பு////
இதுக்கு ஒரு பொது மன்னிப்பு கேட்டுக்கறேன் அதிஷா!

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 4:48 AM  

///செம நக்கலுதான்.

:)////

:(

rapp said...
June 16, 2008 at 7:48 AM  

எல்லாம் உங்க திறமையைப் பார்த்து காண்டுங்க. கவலையேப்படாதீங்க. அப்டியே மறக்காம எங்க தல ஜே.கே.ரித்தீஷ் படத்தோட விமர்சனமும் நேரம் வரும்போது மறக்காம போட்டுருங்க. இதான் மக்களை வெறுப்பேத்தி, சந்தர்ப்பத்தை பயன்படுத்திகிட்டு, சந்துல சிந்து பாடனத்துக்கு தண்டனை. எப்புடி?

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 11:05 AM  

////சந்துல சிந்து பாடனத்துக்கு தண்டனை. எப்புடி?////

பொது மன்னிப்பு கேட்டும் இப்படி ஒரு தண்டனை தருவது துரதிஷ்டவசமானது. எனினும் தண்டனையை ஏற்கிறேன். நன்றி வெட்டி ஆபிசர்.



கிடங்கு