Sunday, June 15, 2008

தம்பி: சாட்டில் மாட்டிய பிகரும், தாத்தா மடித்த பெண்ணும்

·

எனது வலைப்பூவில் இந்த கட்டுரையை எழுதியிருப்பவர் வலை பதிவர் தம்பி. பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார், மட்டுறுத்தும் பணியை எனக்களித்த அவருக்கு நன்றி.



வித்தியாசமான காதல் கதைனு நம்ம இயக்குனர்கள் படத்தோட ஆரம்ப விழா அன்னிக்கு மைக்க புடிச்சிட்டு கத்திகிட்டு இருப்பாங்க. அப்படி அவங்க வித்தியாசமான காதல் படங்கள எடுத்திருந்தாங்கன்னா 2 கோடி வித்தியாசமான படங்கள் வந்திருக்கும். ஆனா விரல் விட்டு சொல்லிக்கற மாதிரிதான் நல்ல படங்கள் இருக்கு. முதல்ல சினிமால காட்டுரமாதிரி அழகான ஒருத்திக்கும் அழகான ஒருத்தனுக்கும் காதல் வர்ற படங்கள்தான் அதிகமா இருக்கும். நிஜ வாழ்க்கைய பொறுத்தவரைக்கும் அதெல்லாம் கிட்ட நெருங்க முடியாத பொய்களாதான் இருக்கும்.

ப்ப உதாரணத்துக்கு இயல்பான சினிமா கதைகள்ல இருந்து வேறுபடற மாதிரியான இரண்டு சினிமாவ பாக்கலாம். இசை, காதல், உணர்வுகள், இதுக்கெல்லாம் மொழி ஒரு தடையா அமையாது என்பதால் வேறு மொழிப்படங்களை ரசிப்பது ஒன்றும் பெரிய பாதகம் இல்லை. அதனால தமிழ் வலைப்பதிவு வரலாற்றிலேயே முதல் முறையாக (சன், கலைஞர் புகழ் கர கர குரல் ) பிலிப்பைன்ஸ் நாட்டுத்திரைப்படம் ஒன்றினை பார்க்கலாம். அழகான ஒருத்திக்கும் அழகான ஒருத்தனுக்கும் ன்ற பொதுப்படுத்தப்பட்ட காதல்லருந்து விலகுற கதைகள் என்றாலே என்னைப்பொறுத்த வரைக்கும் வித்தியாசம்தான் அதனால இந்த படத்தையும் எடுத்துக்கலாம். அதுக்கு முன்னாடி பிலிப்பைன் சினிமா பத்தியும் சில வார்த்தைகள் சொல்லலாம். நம்ம தமிழ் சினிமா மாதிரியே பெரும்பாலும் காதல் படங்களை மட்டுமே, மூன்று மணி நேர, பாடல்கள் அடங்கிய, செண்டிமெண்ட், நகைச்சுவை ன்னு குறுகிய வட்டத்துக்குள்தான் இருக்கு. அப்பப்போ சில படங்கள் வருது ஆனா பார்க்கும் வாய்ப்புகள் குறைவா இருக்கு.




My Big Love







சீனி கம் படத்தைபார்த்தவங்க இந்த படத்தை பார்த்தாங்கன்னா நிறைய ஒற்றுமைகள் இருக்கறதை பாக்கலாம். இரண்டு நாயகர்களும் உணவு விடுதி சார்ந்த, அம்மா மட்டும் ஆதரவான உறவுநிலை, உருவ, வயது வேறுபாடு கொண்ட, பெண்ணிடம் பேச கூச்ச
சுபாவம் உடையவர்கள். படத்தின் பெரும்பாலான சீன்களும் இரண்டு படத்திற்கும் ஒத்துப்போற மாதிரி மைல்டா ஒரு டவுட்டு உண்டு. சீனி கம் படத்தில் உள்ளதுபோலவே அழகான ரெஸ்டாரண்ட், இவனை கேலி செய்யும் சக ஊழியர்கள், பதார்த்தத்தின் பெயரினை தப்பாக உச்சரிக்கும் மற்றொடு செஃப் என இரண்டு படத்திலும் ஆச்சரியப்படும் ஒற்றுமைகள்.

மேக்கி பேக்கரியில் வேலை செய்யும் படித்த, அமெரிக்காவில் வளர்ந்த இளைஞன், வசதியான சூழல், நல்ல வேலை, அருமையான வாழ்க்கை, மிக அழகான காதலி இவர்கள் இருவர் காதலுக்கும் குறுக்கே நிற்பது மேக்கியின் பருத்த உருவம். இருவரும் காதலிப்பது இணையத்தில். இருவரும் ஒரே கட்டிடத்தில் வசிக்கிறார்கள். மேக்கிக்கு நினாவை தெரியும் ஆனால் நினாவுக்கு மேக்கியை தெரியாது.
நினா வீட்டு வாசலில் பூங்கொத்துகள் வைப்பது, தான் செய்த புதுமையான இனிப்பு வகைகள் வைப்பது என நினாவை அசத்துகிறான். ஆனால் நினா தன் காதலன் உலகத்திலேயே மிக அழகானவன். ரசனையானவன் என்று கனவு காண்கிறாள். நினாவின் உடற்பயிற்சி ஆலோசகராக வரும் அய்ரா அசப்பில் திரிசா மாதிரி செம சப்பையாக ஆனால் திரிசாவை விட அழகாக இருக்கிறார்.

டத்தில் இவரின் நடிப்புதான் அழகாக இருக்கிறது. நினா வீட்டு வாசலில் மாக்கி பூங்கொத்து வைப்பதை ஒருநாள் அய்ரா




பார்த்துவிடுகிறாள். அவனும் "நான் அவன் இல்லை" என்று சொல்லி ஓடுகிறான். வழக்கம்போல தன் காதலன் பற்றி கனவு கண்டுகொண்டே வருகிறாள் பூங்கொத்தை காண்கிறாள். அப்போது அய்ரா அவளிடம் உங்கள் காதலன் பயங்கரா குண்டாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறாள். அப்படிலாம் இருக்கவே இருக்காது என்று மறுத்துக்கூறுகிறாள். அன்றைக்கு மேக்கியுடன் சாட்செய்யும்போது நாம் நாளை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறுகிறாள். அவனும் வேறுவழியின்றி சம்மதிக்கிறான்.




றுநாள் அழகான விடுதியொன்றில் காத்திருக்கிறாள் நினா. நாள் கடத்தப்பட்ட உயர்தர ஒயின் உடன் நம் சந்திப்பு நடக்கும் என கனவுடன் அமர்ந்திருக்கிறாள். அழகான ஆண்கள் வரும்போதெல்லாம் அவள் விழிகள் ஆர்வமுடன் "இவந்தானா" என்று தேடுகிறது. மாக்கி மிகுந்த தயக்கத்துடன், தாழ்வு மனப்பான்மையுடன் அழகிய பூங்கொத்தை கொண்டு வருகிறான். அவளோ இவன் கண்டுகொள்ளவில்லை. தன்னை மாக்கி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அமர்கையில் பெருத்த அதிர்ச்சி அடைகிறாள் அவளால் தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சி. அவனும் கை கொடுத்தவாறு நிற்கிறான் அவளோ சிலைபோல அமர்ந்திருக்கிறாள். சூழல் மவுனம்




கலைகிறது அதிருப்தியுடன் அமரச்சொல்கிறாள். அவனும் அவளின் மனநிலையை புரிந்துகொள்கிறாள். பேசிக்கொண்டிருக்கும்போது மாக்கியின் பருமன் தாங்காமல் இருக்கை உடைகிறது. உணவுகள் கீழ கொட்டுகின்றன, ஒயின் உருண்டு ஓடுகிறது, அனைவரும் இவர்களையே பார்க்கிறார்கள். நினா எழுந்துபோய் கைகொடுக்கிறாள் பாரம் தாங்காமல் அவளும் அவன் மேல் விழிகிறாள். பின்னாலிருந்து ஒருவன் அதை மொபைல் மூலம் படமாக்குகிறான். அவமானத்துடன் எழுந்து போகிறாள்.

றுநாள் அந்த வீடியோவை டீவியில் நகைச்சுவை காட்சியாக ஒளிபரப்புகிறார்கள்.


அய்ரா அதைக்காண்கிறாள். ஒருவனின் உள்ளத்தழகை, அவனின் காதலை புரியாமல் எல்லாரும் ஏளனமாக பார்ப்பதை பார்த்து முகம் சுளிக்கிறாள். அவனின் மேல் அனுதாபம் பிறக்கிறது. மாக்கியை சந்திக்கிறாள். அவமானத்தால் குறுகிய அவன் மனம் எல்லாரையும் வெறுக்கிறது. பல முயற்சிகளுக்குப்பின் அவனிடம் மனம் விட்டு பேசுகிறாள் அய்ரா. அவனின் உடலைக் குறைக்க



ஆலோசனை கூறுகிறாள். அவனும் ஏற்றுக்கொள்கிறான். அய்ராவுக்கு அவன் மேல் காதல் வருகிறது ஆனால் வெளிப்படுத்தாமல் இருக்கிறாள். அவனுக்கும் இவள்மேல் அன்பு பிறக்கிறது. இந்த நிலையில் அய்ரா தன் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு ஜப்பான் செல்கிறாள். இவனும் அமெரிக்கா செல்கிறான். திடீரென தொடர்புகள் அறுபடுகின்றன. மாக்கி அனுப்பும் மடல்களுக்கு அய்ரா பதிலேதும் அனுப்பாமல் தவிர்க்கிறாள். மூன்றாண்டு இடைவெளியில் "எப்படியிருந்த மாக்கி இப்படி ஆகிப்போகிறான்" படம் பார்க்க. அய்ரா நாடு திரும்புகிறாள். எதேச்சையாக மாக்கியினை சந்திக்கிறாள். மாக்கி தான் முன்னால் காதலித்த பெண்ணுடன் வாழ்கிறான். அவளின் அப்பாவின் தொழிலை இவனே நிர்வாகித்து வருகிறான். பிறகு மனப்போராட்டங்கள். அய்ராவை மாக்கியுடன் அவனின் முன்னாள் காதலியே இறுதியில் சேர்த்து வைக்கிறாள். படத்தின் கடைசி அரை மணி நேரம் தமிழ் சினிமாவுக்கு சவால் விடுவது போல உள்ளது. ஆக உண்மையான உணர்வுகள் மட்டுமே ஜெயிக்க முடியும். போலியான ஆடம்பர கற்பனைகள் காண்பதற்கு மட்டுமே ஜொலிக்கும். அவற்றால் ஒரு பிரயோஜனமுமில்லை.

சீனி கம்

பெரும்பான்மையானவர்கள் இதை பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். படத்தில் 65 வயதுக்க்காரருக்க்கும் 35 வயது பெண்ணுக்கும் காதல் உருவாகும். தந்தையை விட வயது கூடுதலாக உள்ளவருடன் காதல். பெண்ணின் தந்தையின் எதிர்ப்பு அவற்றை சமாளித்து பின் இணைவது கதை. இதிலும் அழகோ, காதல் என்பது இளைஞர்களுக்கானது என்பதோ, காமமோ, எந்த புண்ணாக்குமே இல்லாமல் உணர்வுகளுடன் கூடிய இரு மனங்கள் இணைவதை மிக இயல்பாக காட்டியிருப்பார்கள்.



ஏன் வயசானவங்களுக்கெல்லாம் காதலே வராதா? ஒரு துணை வேணும், ஒரு அன்பான கைப்பற்றல் வேணும்னு அவங்களுக்கு தோணவே தோணாதா? இல்ல அப்படி யாரும் செஞ்சா அது காதலாகாதா? இப்படிலாம் கேள்விக்கு விடை சொல்லும் படம். ஒரு ரசிகனா இருந்தா இந்த படத்தை ரசிக்கலாம். ரசிகன்ன உடனே பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகள்னு நினைச்சுக்க வேணாம். இது வாழ்க்கையை ரசிக்கும் ரசிகனை குறிக்கும். என்னைவிட சீனிகம் படத்தைப் பத்தி நிறையபேர் எழுதிட்டாங்க அங்க போய் பாத்திங்கன்னா உண்மை தெரியும். எழுத்தாளர் சாருநிவேதிதா இப்படி எழுதி இருக்கிறார்.



இரண்டு புகழ்பெற்ற நபர்களின் குறிப்புகள் கீழ் உள்ளது. யாரென கண்டுபிடித்தால் உங்களுக்கு ஓலைப்பகோடா இரண்டு பாக்கெட்டுகள் இனாம்.

6 August 1970, Mahé, Pondicherry
1930, Nannilam, Thanjavur, India

குளு: ஒருவர் இந்திய அளவில் புகழ்பெற்றவர், ஒருவர் உலக அளவில் புகழ்பெற்றவர்.



எனது வலைப்பூவில் அடுத்த பதிவை எழுதுபவர் வலை பதிவர் வெட்டி ஆபிசர்.

11 comments:

rapp said...
June 15, 2008 at 3:51 PM  

நீங்க சொல்ற மாதிரி படங்கள் எனக்குக் கூட நெம்ப பிடிக்கும். ஆனா சீனிக்கம்ல எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஏன்னா அந்த படத்தை(lage raho munnabhai அளவுக்கு)ரொம்ப எதிர்பார்த்தேன், ஆனா என் எதிர்பார்ப்பை முழுசா பூர்த்திசெய்யலை. எதிர்பார்ப்பே இல்லாம பார்த்திருந்த இன்னும் பிடிச்சிருக்கும்னு தோணுது.

rapp said...
June 15, 2008 at 3:52 PM  

ஆனாலும் தமிழ்ல அகத்தியன் விடுகதைனு ஒரு படத்தை எடுத்து வெருப்பேத்தினாரே, அதை விட இது எவ்வளவோ மேல்.

rapp said...
June 15, 2008 at 3:54 PM  

இதெல்லாத்தையும் விட எனக்கு நிழல் நிஜமாகிரதுல வர்ற கமல்-சுமித்ரா, ஷோபா-அனுமந்து ஜோடியும், அபூர்வ ராகங்கள்ள வர்ற மேஜர்-ஜெயசுதா ஜோடியும் நெம்ப பிடிக்கும்.

rapp said...
June 15, 2008 at 3:57 PM  

அதுல கமல் வச்சிக்கிட்டு வர்ற சிகயலங்காரத்தாலயே அவரைக் கண்டா பத்திக்கிட்டு வரும். இவருக்கு இவ்ளோ அழகான ஸ்ரீவித்யா கேக்குதான்னு கடுப்பா இருக்கும். நல்லவேளை ரஜினி வந்து மனசை சாந்தப்படுத்திடுவார்.

கதிர் said...
June 16, 2008 at 12:20 AM  

ராப்!

நன்றி உங்க கருத்துகளுக்கு. விடுகதை ஓரளவுக்கு நல்லா இருக்கும். பிரகாஷ்ராஜின் கோபங்கள் நம்மளை சிரிக்க வைக்கும். ஆச்சரியமான உண்மை என்னன்னா வயசானவங்க அதெல்லாம் செஞ்சா நமக்கு சிரிப்பு வரத்தான் செய்யும்.

பதிவை படிச்ச மக்களே அதுல கடைசியில் ரெண்டு கேள்விகள் கேட்டுருக்கேனே அது யாருக்குமே தெரியவில்லையா?

க்ளு கூட குடுத்துருக்கேனப்பா...

மோகன் நீங்களாச்சும் ட்ரை பண்ணுங்க, ரெண்டு பேருமே சினிமா ஆளுங்கதான்.

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 12:27 AM  

நான் கண்டு பிடிச்சிட்டேன்.
பாலச்சந்தர், நைட் சியாமளன்
சரிதானா?

உங்கள் பதிவு அருமை. நல்ல ஒப்பீடு.
இப்போதான் அந்த பிலிப்பைன்ஸ் படத்த டவுன் லோட் பண்ணேன்
பாத்துட்டு ஒரு பின்னூட்டம் இடறேன்

உங்க பதிவில் இதுக்கு ஒரு லிங்க் கொடுக்க முடியுமா?

rapp said...
June 16, 2008 at 12:35 AM  

அப்போ மனோஜ் நைட் ஸ்யாமலன் பாண்டிச்சேரிக்காரரா?

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 1:18 AM  

///அப்போ மனோஜ் நைட் ஸ்யாமலன் பாண்டிச்சேரிக்காரரா?///
நைட் சியாமளன் மாஹி -பாண்டிச்சேரி யை சேர்ந்தவர், தாய் மொழி என்ன வென்று தெரியவில்லை.

ஹாய் வெட்டி ஆபிசர், உங்க கட்டுரை ரெடி ஆகிடுச்சு, அடுத்தது அதுதான் பதிவிடப்ப்போறேன்

rapp said...
June 16, 2008 at 2:21 AM  

அப்டியா, நெம்ப ஆர்வத்தோட எதிர்பார்த்துகிட்டே இருக்கேன். நெம்ப நன்றி மோகன்.

கருணாகார்த்திகேயன் said...
June 16, 2008 at 5:51 AM  

மோகன் கந்தசாமி ,

மொத்தமும் படித்தேன்...
வார்தைகள் ஒன்றோன்றும் சாட்டை..
நிறைய எழுதுங்கள்...
25 வது பதிவுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்..

அன்பே சிவம் படத்துல கமல் சொல்லுவார்
" நானும்தான் கடவுள்னு .. அப்படிதான்... "
உங்கள் எழுத்தை ரசிக்க முடிகிறது...

அன்புடன்
கருணாகார்த்திக்கேயன்

மோகன் கந்தசாமி said...
June 16, 2008 at 10:53 AM  

////மொத்தமும் படித்தேன்...
வார்தைகள் ஒன்றோன்றும் சாட்டை..///
உண்மை தான் திரு கார்த்திகேயன்.

///நிறைய எழுதுங்கள்...///
இந்தப்பதிவு பதிவர் "தம்பி" எனக்காக எழுதியது. நானும் நிறைய எழுத முயல்கிறேன்.

////25 வது பதிவுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்..////
மிக்க நன்றி

////அன்பே சிவம் படத்துல கமல் சொல்லுவார்
" நானும்தான் கடவுள்னு .. அப்படிதான்... "
உங்கள் எழுத்தை ரசிக்க முடிகிறது.../////
:-)

நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாருங்கள். நன்றி



கிடங்கு