Wednesday, June 25, 2008

செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூ.

·

நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூவை பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

வெகு நாட்களாக வலைப்பூவை தொடங்குவது குறித்து ஜெயலலிதா அவர்கள் யோசித்து வந்தாலும் இப்போதுதான் அவரது எண்ணம் கைகூடியிருக்கிறது. வழக்கறிஞர் ஜோதியின் துரோகத்திற்கு பிறகு, ஆலோசனை கூற தகுந்த ஆட்கள் கிடைப்பதில் சற்றே சுணக்கம் இருந்த போதிலும் இப்போது வெற்றிகரமாக வலைப்பூ தொடங்கப் பெற்றிருக்கிறது. புரட்ச்சித்தலைவி கொடநாட்டில் ஓய்வில் இருப்பதால் ஊட்டியில் இருந்தபடியே வலைப்பூவை நிர்வகிப்பார்

தற்போது வலைப்பூ முழுதும் திராவிட திம்மிகளின் ஆதிக்கம் நிலவுவதால் தலைவியின் பெயரில் வலைப்பூ தொடங்குவது சற்றே ஆபத்தாய் முடியும் என்று கருதி வலைப்பூ வேறொரு பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனையின் பேரில் Valentina என்று ஆங்கிலத்திலும் சகோதரர் வைகோ வின் கெஞ்சுதலின் பேரில் "தமிழரசி" என்று தமிழிலும், அதிமுக ஆஸ்த்தான சோதிடர் "நம்புங்கள்" நாறவாயன் வழிகாட்டுதலின் பேரில் இரண்டையும் கலந்து தமிங்கிலீஷில் ஒரு வலைப்பூ தொடங்கப்பட்டிருக்கிறது. ஆறுகொடியே எண்பத்தெட்டு லட்சத்து பண்ணிரெண்டாயிரத்து நூற்றி பதினோரு அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் பெயரில் புரட்சித்தலைவியின் "தான்தோன்றித்தன" தனியியல்புகள் தெறிக்கும் வண்ணம் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தற்குறி கமலகாசனைப் பற்றி அவரது “ஒலக நாயக்கன் “ கொட்டம் அடங்கும் பொருட்டு சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தனியொருவராக சட்டமன்றத்தை கதிகலக்கிய அம்மா இப்போது அதே பாணியில் எதிரிகளை பின்னூட்டங்களில் கலாய்த்து வருகிறார். இதுவரை தன்னை பீனிக்ஸ் பறவையாக காட்டி வந்த தானைத்தலைவி, சிங்க நிகர் செல்வி, புறநானூற்று தாய், நம் புரட்சித்தலைவி அம்மா இப்போது தன்னை அமிஞ்ச பீடி என்று blog caption -ல் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.

“பீடியைப்போலவே மீச்சிறு அளவினள்! புகைக்க நினைத்தால்(உங்களால் முடிந்தால்) நாறடிப்பேன், அமிஞ்ச பீடியாய், நனஞ்ச சுருட்டாய்!”

மகோன்னத மேதா விலாசம் ஸ்திரீ வாலன்டீனா தமிழரசியின் ஆன்லைன் பத்ரிகா -விற்கு இன்றே விஜயம் பண்ணுங்கள்.

....இருங்க இருங்க....இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்க போங்க.

டிஸ்க்கி1: பதிவுலகின் புதிய வரவு வாலன்டீனா தமிழரசியை வருக வருக என இருகரம் கூப்பி தமிழ்மண அரை டிக்கட்டுகள் சார்பாக வரவேற்கிறேன்.

டிஸ்க்கி 2: பதிவில் நான் குறிப்பிடும் பார்ப்பனியம் சார்ந்த கிண்டல்கள் ஜெயலலிதாவைச் சுட்டுவன மட்டுமே. பதிவர் வாலண்டினா, ஜெயலலிதா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என நான் கருதுவது தான்தோன்றித்தன தனியியல்புகள் முதலானவை மட்டுமே அன்றி வேறெதுவும் இல்லை.
I don't indulge in targeting people".

இணைப்பு(ஜூன்-26):

செல்வி ஜெயலலிதா, செல்வி வாலண்டினா ஒற்றுமைகள்:

1) இருவரும் கான்வென்ட் ஸ்கூல்

2) தற்போது வாசம்: முன்னவர் கொடநாடு, பின்னவர் ஊட்டி.

3) தலைக்கனம்:
பெரியவர்(1998): "என்னை கேள்வி கேட்பவர்கள் கோர்ட்டுக்கு கருணாநிதி வந்த போது இதே கேள்வியை கேட்டீர்களா?, நீங்களெல்லாம் எடுபிடிகள், உண்மையான பத்திரிக்கைக்காரர்களுக்கு பதில் சொல்லிக்கொள்கிறேன், இங்கிருந்து கிளம்புங்கள் எல்லோரும்"
சின்னவர்: "to see the achievements .... .... .... before scribling here. Any real Film Critics here?"

4) கெக்கே பிக்கே தனம்:
முன்னாள் முதல்வர்: "சேது சமுத்திரம் நிறைவேறினால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சுனாமி வரும்"
இந்நாள் உலற்வர்: ".....அப்படியே ஒரு மளிகைக்கடக்காரரின் பையனாக நடிக்காமல் வாழ்ந்துகாட்டிய பரத், பருத்திவீரன் கார்த்தி சரவனன், நாசர், சீயானாகவே மாறிய... அந்நியன் ரெமோ அம்பி என்று தம்மாத்தூண்டு ஷாட்களில் கலக்கிய விக்ரம், பிதாமகன், ஆறுச்சாமி என்று அசத்திய விக்ரம், பாலக்காட்டு சமையல் காரனாக வந்த மாதவன்...."

5) இங்கிலீஷ்-தமிழ் குழப்பம்:
இரும்பு பெண்மணி: ஓட்டு கேட்க தமிழும் சட்டமன்றத்தில் ஆங்கிலமும் பத்திரிக்கைகாரர்களுக்கு ரெண்டும் கலந்தும் என இவர் கலக்குவது நாம் அறிந்ததுதான்.
இம்சைப் பெண்மணி: "For Lucky once again.. from my post
ஆனால் நம் ஒலகத்த்ரப் படத்தில் முறூக்கேறிய"


6) அப்பீட்டு:
மூத்த செல்வி: "நான் பெண் என்பதால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறேன்"
இளைய செல்வி: "இன்று புதிதாக எழுதவந்திருக்கிறேன். அதற்குள் ”கேணத்தனமாக எழுதுகிறாள்” என்றெல்லாம் உற்சாகப்படுத்துவது அவசியம் தானா?"


7)

56 comments:

rapp said...
June 25, 2008 at 4:07 PM  

ஒரு நிமிஷம் தசாவதாரம் மாதிரி ஏமாத்துறீங்கன்னு நினைச்சேன். ஆஹா அங்க பின்னூட்டம் பார்த்தப்பவே நினைச்சேன்.

rapp said...
June 25, 2008 at 4:10 PM  

ரெண்டு பேரும் பேசி வெச்சிகிட்டு செய்யலையே? நிஜமான கும்மின்னா சரி.

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 4:15 PM  

வாங்க ராப்,
சும்மா தமாஷுக்குத்தான். இது தமிழரசி பற்றி ஒரு நாகரிகமான விமர்சனம்.
அவங்க பதிவுல பொய் கமெண்ட்டு போட்டா பதிலா ஒழுங்கா சொல்லாம நம்பல தற்குறி -ங்கறாங்க, இந்த வலைப்பூ நம்ம உலகம் இல்லையா? அதான் இங்க விமர்சனம் பண்றேன்.

rapp said...
June 25, 2008 at 4:15 PM  

உங்க நக்கலுக்கு அளவே கிடையாதுங்க.

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 4:16 PM  

///ரெண்டு பேரும் பேசி வெச்சிகிட்டு செய்யலையே?///
அய்யயோ! இனி அந்தப் பக்கமே போகமாட்டேன்.

rapp said...
June 25, 2008 at 4:17 PM  

ஹா ஹா ஹா

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 4:21 PM  

/////உங்க நக்கலுக்கு அளவே கிடையாதுங்க.////
நக்கலா? நீங்க வேற, நானே தாவு தீந்து போய் இருக்கேன். :-)

Anonymous said...
June 25, 2008 at 5:20 PM  

Super.. Start Music

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 5:29 PM  

Super.. Start Music

start panniruvom!

Anonymous said...
June 25, 2008 at 6:16 PM  

/////....இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்க போங்க.////
அங்க போயிட்டு வந்து போடறேங்க!

Anonymous said...
June 25, 2008 at 7:02 PM  

இன்னா பேஜாராப் போச்சு.ஜாயா கொடநாடு வந்தா சுப்புணி இங்கேயும் வந்து அம்மாடீ! அடுத்த பிரதமர் நீ தான்,தள்ளு பத்து கோடிய்,நான் அமெரிக்கா போய் சி.ஐ.ஏ. கிட்ட வழி பன்றேங்கறான்.
சோ மாமா,மோடி தான் பிரதமர்னு நன்றியில்லாம சொல்றாரு.
மோடி சாப்பிட்டுட்டு உன்னைப் பிரதமராக்குறேன்னு ஒப்புக்காவது சொன்னானா,நான் சொல்வேன்னு பாக்கறான்.

யாரைத்தான் நம்புவதோ சொல்லடி
சசியே!

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 7:58 PM  

////யாரைத்தான் நம்புவதோ சொல்லடி
சசியே!///
கட்சி கைல இருக்கனுன்னா முதல்ல சசிய நம்பக்கூடாது
கட்சியில வேலை செய்யரவன தேடி புடிச்சி வெளியேத்துறது அவங்கதான்.

பிரதமர் ஆவுனுன்னா சோ -வ நம்பக்கூடாது. அத்வானியா மேடையில வச்சிகினே மோடி தான் பிரதமர் -க்கு லாயக்கு -ன்னு சொன்னவர்

முதல்வர் ஆவனுன்னா சுப்புனிய நம்பக்கூடாது. தமிழ்நாட்டுக்கு எதிரா திட்டம் போட்டு கொடுத்தே ஓட்டு வாங்கிய காலி பண்ணிடுவாரு மனுஷன்.

Great said...
June 25, 2008 at 8:49 PM  

ஆஹா அங்க செம காமடி நடந்திருக்கே.

எக்ஸ்கியூஸ் மீ சார். இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமான்னு கேட்ட கோட் சூட் ஆசாமிக்கு வடிவேல் அட்ரஸ் சொல்ற மாதிரி நம்ம ஆளுங்களும் சீரியசா பதில் சொல்லி இருக்காங்க. அப்புறம் கோவை குணா கமல விட சூப்பர் அப்படீன்னு திரும்பி கிழிஞ்ச கோட்ட காட்டுனதும் "ஆஹா அவனா நீயி!!!" அப்படீன்னு 80 கிலோ மீட்டர் ஸ்பீட்ல ஓடி எஸ்கேப் ஆயிருக்காங்க"

சே! நான் அப்பவே பாக்காம மிஸ் பண்ணிட்டேனே.

ஹ..ஹா.. ஹா...
இது.. இது.. இது எப்படி இருக்கு!!!
(அகில உலக ஸ்டைல் மன்னன் கொக்கரகுளம் கோபாலு(எங்க ஊருல ரஜினி மாதிரி மிமிக்ரி பண்றவர்) ஸ்டைலில் படிக்கவும்).

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 9:07 PM  

///அப்படீன்னு 80 கிலோ மீட்டர் ஸ்பீட்ல ஓடி எஸ்கேப் ஆயிருக்காங்க"////
பெரிய பசங்கல்லாம் சூப்பரா எஸ்கேப் ஆயிட்டாங்க பாஸ், சின்ன பய்யன் என் சட்ட காலர் மட்டும் அங்க மாட்டிக்கிச்சி, எப்படியோ எஸ்கேப் ஆயிட்டேன் கடைசீல!

Great said...
June 25, 2008 at 9:22 PM  

ஆமா தசாவதாரத்துல "கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி காதல் தான்" அப்படீன்னு ஒரு பாட்டுல வருதே... உங்களைப் பத்தியா அது?
எனக்கென்னவோ அதனால தான் உங்க காலர பிடுச்சு அந்தம்மா உலுக்கியிருக்காங்கன்னு தோணுது.

எப்படியோ ஒருவழியா தப்பிச்சீங்க... சந்தோஷம்.

மோகன் கந்தசாமி said...
June 25, 2008 at 9:52 PM  

////ஆமா தசாவதாரத்துல "கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி காதல் தான்" அப்படீன்னு ஒரு பாட்டுல வருதே... உங்களைப் பத்தியா அது?
எனக்கென்னவோ அதனால தான் உங்க காலர பிடுச்சு அந்தம்மா உலுக்கியிருக்காங்கன்னு தோணுது.
எப்படியோ ஒருவழியா தப்பிச்சீங்க... சந்தோஷம்./////

என்ன இங்க பாத்ததாகவோ, பேசினதாகவோ நான் திரும்பவும் காலரோட சட்டை போட்டிருக்கிறதாகவோ வெளியில் சொல்லிடாதிங்க, ப்ளீஸ். இனிமேல என்னால ஓடமுடியாது.

Great said...
June 25, 2008 at 10:08 PM  

//என்ன இங்க பாத்ததாகவோ, பேசினதாகவோ நான் திரும்பவும் காலரோட சட்டை போட்டிருக்கிறதாகவோ வெளியில் சொல்லிடாதிங்க, ப்ளீஸ். இனிமேல என்னால ஓடமுடியாது.
//
:)

ஹ ஹா.. இனிமேலாவது உலக தரத்துக்கு பதிவு எழுதுற ஒலக பதிவரு அப்படின்னாவே உஷாராயிடுங்க. ஹி..ஹி...

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...
June 26, 2008 at 12:35 AM  

"பொம்பள டோண்டு" வாலண்டினா வாழ்க.

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 12:58 AM  

அண்ணே! ஒரிஜினல் மனிதன் அண்ணே! இப்படியெல்லாம் சொல்லாதிங்கன்னே! ப்ளீஸ். ஆம்பள பொம்பளன்னு பேசாதீங்கண்ணே!, ஒரு மறுப்பு ஒன்னு போட்டுடுங்கன்னே!

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 1:09 AM  

பதிவில் நான் குறிப்பிடும் பார்ப்பனியம் சார்ந்த கிண்டல்கள் ஜெயலலிதாவைச் சுட்டுவன மட்டுமே. பதிவர் வாலண்டினா, ஜெயலலிதா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என நான் கருதுவது "தான்தோன்றித்தன தனியியல்புகள்" மட்டுமே அன்றி வேறெதுவும் இல்லை.
I don't indulge in targetting people".
அடடா, கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சே!

VIKNESHWARAN ADAKKALAM said...
June 26, 2008 at 1:14 AM  

:)

லக்கிலுக் said...
June 26, 2008 at 1:24 AM  

தோழர் தமிழச்சி மாதிரி அடுத்த தோழர் தமிழரசி ரெடி!

மகிழ்ச்சியாக இருக்கிறேன் :-)

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 1:35 AM  

வாங்க விக்கி, நலமா?

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 1:41 AM  

////தோழர் தமிழச்சி மாதிரி அடுத்த தோழர் தமிழரசி ரெடி!////
நான் பதிவெழுதும்போதே இதையும் சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா தோழர் தமிழச்சி, பத்தி முழுசா எனக்கு தெரியுமான்னு எனக்கு ஒரு டவுட்டு, அதான் விட்டுட்டேன்.
இப்போ, தமிழச்சி சம்பந்த சர்ச்சை தெரிஞ்ச நீங்களே சொல்லிட்டீங்க, கரைக்ட்டாதான் இருக்கும்.

VIKNESHWARAN ADAKKALAM said...
June 26, 2008 at 3:02 AM  

விக்கி நலமாக இருக்கிறான்... அவனுக்கென்ன மோகன் ச்சும்மா ட்டமாஷ் சொய்து கொண்டு இருக்கும் போது... :)))))

நீங்கள் நலமா?? வீட்டில் அனைவரும் சௌக்கியமா??? மாடு கன்று போட்டு விட்டதா?? பக்கத்து வீட்டு தாத்தா உடல் நலம் இல்லாமல் இருந்தாரே இப்ப எப்படி இருக்கிறார் :)))))

புதுகை.அப்துல்லா said...
June 26, 2008 at 4:44 AM  

Great said...
ஆமா தசாவதாரத்துல "கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி காதல் தான்" அப்படீன்னு ஒரு பாட்டுல வருதே... உங்களைப் பத்தியா அது?
எனக்கென்னவோ அதனால தான் உங்க காலர பிடுச்சு அந்தம்மா உலுக்கியிருக்காங்கன்னு தோணுது.

எப்படியோ ஒருவழியா தப்பிச்சீங்க... சந்தோஷம்.//

ரிப்பீட்ட்ட்ட்டு...

மோகன் அண்ணே நல்லவேளை நா அங்குட்டு வரல.

கோவி.கண்ணன் said...
June 26, 2008 at 6:19 AM  

அங்கெல்லாம் ஆட்டோ வராது என்ற தைரியத்தில் எங்கள் தங்கத் தலைவியைப் பற்றி தாறுமாறாக எழுதுறிங்களா ?

சென்னை விமான நிலையத்தில் தானே இறங்குவிங்க ?
:)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
June 26, 2008 at 6:52 AM  

Hi Mohan,
I think this is in bad taste..
Please consider again on writing with personally dis-reespect posts..

லக்கிலுக் said...
June 26, 2008 at 7:38 AM  

//பதிவுலகின் புதிய வரவு வாலன்டீனா தமிழரசியை வருக வருக என இருகரம் கூப்பி தமிழ்மண அரை டிக்கட்டுகள் சார்பாக வரவேற்கிறேன். //

என் சார்பாகவும் வரவேற்றதற்கு நன்றி மோகன் :-)



///அறிவன்#11802717200764379909 said...
Hi Mohan,
I think this is in bad taste..
Please consider again on writing with personally dis-reespect posts..
////

அறிவுண்ணா அவ்ளோ ரீஜண்டா நீங்க? :-)

Anonymous said...
June 26, 2008 at 8:27 AM  

amminikkum super kudumbathu pennukkum oru thodarpu irukkunnu malai naatu nanban moolam kelvippatten. ellame animation mayam.

Pathivulaka Andhai (.) (.)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
June 26, 2008 at 8:44 AM  

//Please consider again on writing with personally dis-reespect posts..
////

அறிவுண்ணா அவ்ளோ ரீஜண்டா நீங்க? :-)
//

என்ன,ஏன் சந்தேகம் லக்கி?
அதை விட அதிகம் முயற்சி செய்யத்தான் விழைவு....
:(

Unknown said...
June 26, 2008 at 9:29 AM  

இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்கியுமா.

அசத்தல்

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 10:43 AM  

///பக்கத்து வீட்டு தாத்தா உடல் நலம் இல்லாமல் இருந்தாரே இப்ப எப்படி இருக்கிறார் :)))))////
பக்கத்துல வீடே இல்ல விக்கி, வனாந்தர காட்டுக்கு நடுவில இப்போ என் வீடு இருக்கு.

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 10:51 AM  

/////மோகன் அண்ணே நல்லவேளை நா அங்குட்டு வரல.///
ஒரே ஒரு முறை அங்கு சென்று வர பரிந்துரை செய்கிறேன் புதுகை, பின்னூட்டம் கூட வேண்டாம், போட்ட பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள். (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 11:01 AM  

////எங்கள் தங்கத் தலைவியைப் பற்றி தாறுமாறாக எழுதுறிங்களா ?////
கோவி,
நம்ம தலைவின்னு சொல்லுங்க. நம்ம தொகுதியில உங்கள் தலைமையை எந்த கோஷ்டி சண்டையும் இல்லாமல், ஏகமனதாக ஏற்கிறேன். கட்சி மேலிடத்துல போட்டுக்குடுத்துடாதீங்க.
:-)

///சென்னை விமான நிலையத்தில் தானே இறங்குவிங்க ?////
அதான், அம்மாவும் வலைப்பூ வந்துட்டாங்களே! இனி பின்னூட்டம் போடவே நேரம் சரியா இருக்கும் அவங்களுக்கு, ஆட்டோ பத்திஎல்லாம் யோசிக்கமுடியாது இனி. :-))

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 11:24 AM  

திரு அறிவன்,
மன்னிக்கணும். நான் மரியாதைக்குறைவாய் நடப்பவன் அல்ல. வாலன்டீனா பதிவில் நீங்களும் விவாதிதீர்களே, என் பின்னூட்டத்தில் கண்ணியக்குறைவேதும் இருந்ததா?.

இங்கு நான் செய்வதும் கண்ணியமான விமர்சனம் தான். உங்கள் நண்பர்களுடன் அரட்டையில் இருக்கும் பொது நீங்களும் இவ்வாறு பேசிக்கொள்வீர்கள் தானே.

தன்னால் சரிசெய்யமுடியாத, சரி செய்வது தன் கையில் இல்லாத, குறைகளைப் பற்றி பேசுவதுதான் அநாகரீகம். நான் செய்வது நாகரீகமானது தான். தனிமனித விமர்சனம் கூடாதென்பது அரசியலுக்கு சரியாக இருக்கும், ஏனெனில் அரசியல் வாதி ஒரு பிரதிநிதி, அவனைப் பின்பற்றுபவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்பவன், அவன் விருப்பத்தை அல்ல(உண்மை நிலை வேறு). எனவே அவனது பாலிசியை விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும்.

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 11:30 AM  

////என் சார்பாகவும் வரவேற்றதற்கு நன்றி ///
நன்றி. ஆனால் இதுல ஒரு பஞ்சாயத்து இருக்கு, நீங்க அரை-டிக்கெட்டா!

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 11:38 AM  

///amminikkum super kudumbathu pennukkum oru thodarpu irukkunnu malai naatu nanban moolam kelvippatten. ellame animation mayam///


கான்வென்ட் ஸ்கூல், ஊட்டி, தலைக்கனம், கெக்கே பிக்கே தனம், இங்கிலீஷ்-தமிழ் குழப்பம், ஜெயலலிதா -வின் இளமைக்கால முகத்தோற்றம், இவையெல்லாம் அப்படி ஒரு ஒற்றுமையை எடுத்து காட்டுகின்றனவா?

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 11:42 AM  

////இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்கியுமா////
போயட்டுபோவுது உடுங்க ஜெய்.

rapp said...
June 26, 2008 at 11:55 AM  

//ஜெயலலிதா -வின் இளமைக்கால முகத்தோற்றம், இவையெல்லாம் அப்படி ஒரு ஒற்றுமையை எடுத்து காட்டுகின்றனவா//
ஹை, அப்ப இவங்களும் செம அழகா இருப்பாங்களா? எப்படி உங்களுக்கெல்லாம் தெரியும், அவங்க பதிவு profileல புகைப்படம் போட்டிருக்கான்னு பார்த்தப்ப இல்லையே.

Anonymous said...
June 26, 2008 at 12:27 PM  

//////தோழர் தமிழச்சி மாதிரி அடுத்த தோழர் தமிழரசி ரெடி!////
கொடுமை.
தமிழச்சியாக இருந்திருந்தால் இத்தனை விமர்சனங்களுக்கு பொறுமையாய் பதில் சொல்லிகொண்டிருக்க மாட்டார்.ஷட் அப் என்பதை தமிழில் சொல்லி இருப்பார்.

Sanjai Gandhi said...
June 26, 2008 at 12:57 PM  

//டிஸ்க்கி: பதிவுலகின் புதிய வரவு வாலன்டீனா தமிழரசியை வருக வருக என இருகரம் கூப்பி தமிழ்மண அரை டிக்கட்டுகள் சார்பாக வரவேற்கிறேன். //

வழிமொழிகிறேன்..:P

... சூப்பர் பதிவு மோகன்... சீக்கிறமே அவங்க நடையை கட்டிடுவாங்கனு நினைக்கிறேன்...

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 2:30 PM  

ராப்,
///எப்படி உங்களுக்கெல்லாம் தெரியும், ///
எல்லாம் எமனுக்கு..ச்சே...எமக்குத் தெரியும்.
பதிவில் இணைப்பு இருக்கே, படிச்சீங்களா?

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 2:30 PM  

ராப்,
///எப்படி உங்களுக்கெல்லாம் தெரியும், ///
எல்லாம் எமனுக்கு..ச்சே...எமக்குத் தெரியும்.
பதிவில் இணைப்பு இருக்கே, படிச்சீங்களா?

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 2:33 PM  

////ஷட் அப் என்பதை தமிழில் சொல்லி இருப்பார்.////
விரைவில் இவரும் சொல்லிவிடுவார் என நம்புவோம்

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 2:36 PM  

////சூப்பர் பதிவு மோகன்... சீக்கிறமே அவங்க நடையை கட்டிடுவாங்கனு நினைக்கிறேன்...////
அய்யய்யோ, வேணாங்க, நம்ம பதிவுகளுக்கு மேட்டர் யார் தருவா? அப்பறம் பொழுது போகனுமில்ல.

rapp said...
June 26, 2008 at 2:41 PM  

ஆஹா சாரிங்க, இப்பத்தான் பார்த்தேன்

rapp said...
June 26, 2008 at 2:44 PM  

அதென்னங்க, நியு ஜெர்சி சூப்பர் நாயகன் மன்றம்ங்கறது? உங்களுக்கு இதப்பத்தி எதுனா தெரியுமா?

Anonymous said...
June 26, 2008 at 3:01 PM  

மோகன் இணைப்பு(ஜூன்-26)ல் இணைத்திருப்பவை சம்பந்தமில்லாமல் கிறுக்குத்தனமாக இருக்கிறது. கொஞ்சமாவது அறிவுடன் ஈடு கொடுத்து அந்த பெண்ணுடன் விவாதியுங்கள்.

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 3:16 PM  

////கொஞ்சமாவது அறிவுடன் ஈடு கொடுத்து அந்த பெண்ணுடன் விவாதியுங்கள்.////
முதலில் அவரை கொஞ்சம் அறிவு நாணயத்தோடு பதிவேழுதச்சொல்லுங்கள். பிறகு அது விவாதத்துக்கு ஏற்றதா இல்லையா என பார்ப்போம்.
உங்க சிண்டு முடியற கமெண்ட்ட அந்த பதிவிலும் பார்த்தேன், உங்க பேரச்சொல்லி கமெண்ட்டு போட்டிங்கனா நான் திரும்பவும் அங்கு சென்று டவுசர் கிழிஞ்சி வரத் தயார். நன்றி.

Anonymous said...
June 26, 2008 at 3:19 PM  

//உங்க பேரச்சொல்லி கமெண்ட்டு போட்டிங்கனா நான் திரும்பவும் அங்கு சென்று டவுசர் கிழிஞ்சி வரத் தயார்.//

விழுந்து விழுந்து சிரித்தேன்

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 5:47 PM  

ராப்,

///அதென்னங்க, நியு ஜெர்சி சூப்பர் நாயகன் மன்றம்ங்கறது? உங்களுக்கு இதப்பத்தி எதுனா தெரியுமா?///

அது ஏதோ வாலன்டீனா வகையறா அடிச்சா ஜால்ரா -ங்க!
அங்க கொசுக்கடி தாங்கல போல, பாவம் பொண்ணு கன்னுமுழிச்சி கமென்ட் ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருக்கு.

அபி அப்பா said...
June 26, 2008 at 6:51 PM  

யோவ் மோகன்! உம்ம நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு!! இன்னிக்கு மாத்திரம் 12 போன்! தமிழரசி உன் தங்கச்சியாமேன்னு!!! ஆமாய்யா ஆமாம்!! இப்ப என்னா செய்வ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Anonymous said...
June 26, 2008 at 9:04 PM  

Very Bad Taste :(

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 9:28 PM  

///இன்னிக்கு மாத்திரம் 12 போன்! தமிழரசி உன் தங்கச்சியாமேன்னு!!! ஆமாய்யா ஆமாம்!! இப்ப என்னா செய்வ???????????????????????///
அபி அப்பா,
என்னால ஏதும் செய்ய முடியாதுங்க, அப்பிராணி நான். நீங்க ஏதும் செஞ்சிடாதிங்க என்னை, பொண்ணுங்களோட அண்ணன் கையில அடி வாங்கி எனக்குப் பழக்கமில்ல, "அப்படின்னா பொண்ணுங்கக்கிட்ட டைரக்ட்டா வாங்கிக்குரியா?" -ன்னு கேட்டிங்கன்னா, ஹி ஹி.. நோ கமெண்ட்ஸ்.

மோகன் கந்தசாமி said...
June 26, 2008 at 9:41 PM  

///Very Bad Taste :(///


நண்பரே,
திரும்பத் திரும்ப அப்படிச்சொல்லாதிங்க,
இது ஒரு வகை விமர்சனம். இதில் தவறில்லை. மேட்டிமைப்போக்கு இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் விரும்பப்படுவதில்லை.

அதே போல் அரகன்ட்டா சொல்றதும் ஒரு வகை விமர்சனம் தான், இப்பல்லாம் பெரிய லெவல் இண்டர்வியூவ் -ல நேர்முகம் காண்பவர்கள் குழுவில் ஒருவர் அரகன்ட்டா, நக்கலா, பட பட -ன்னு பேசரவரா இருப்பார்.



கிடங்கு