Friday, July 11, 2008

உதவி பிளீஸ்!

·

எனது முந்தய பதிவில் அனானி நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் ஏதும் தர முடியாத நிலையில் உதவி வேண்டி அவரது கேள்விகளையும் எனது பதில் பின்னூட்டத்தையும் பதிவாக இடுகிறேன்.

நண்பர் அனானி!

உங்கள் கேள்விகளுக்கு ஜாதகத்தை நம்பும் எவரேனும் பதிலளிக்கக்கூடும் என காத்திருந்தேன். பிறகு நானே முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியதால் பதிலளிக்க முனைந்துள்ளேன்.

///1. Is the discipline of astrology comprehensive and complete?

நிச்சயமாக இல்லை. ஏனெனில் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூட முடியாத ஒன்று விரிவானதாகவும் முழுமையானதாகவும் இருக்க முடியாது.

ஜாதகம் என்பது கோள்களின் இருப்பிடங்களை சங்கேதங்களால் குறியிட்டு வைக்கப்பட்ட ஒரு சுவடி. ஒரு குழந்தை பிறந்ததும் அது முதல் மூச்சை விடும்போது கோள்கள் இருந்த நிலையை குறித்து வைக்கின்றனர். கோள்கள் இடம் மாறும்போது நமது நடவடிக்கைகளும் தக்கபடி மாறுகின்றன என்பது ஜாதகம் கணிப்பதன் அடிப்படை ஆகும்.

ஒரு தெளிவில்லாதா, ஆதாரம் இல்லாத ஒன்று பிரசங்கப்படுத்தப்படும் பொழுது சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நம்மை கேள்விகேட்க தூண்டுகின்றன. நம் கேள்விகள்: 1) பயன்படுத்தப்படும் கோள்களின் அறிவியல் முழுமையானதா? 2) அவை தமது ஆற்றல் மூலம் நம் வளி மண்டலத்தை பாதித்து அதன் ஊடாக மனிதர்களின் சுவாசத்தை கட்டுப்படுத்துகின்றனவா அல்லது வேறு வகையிலா? 3) சுவாசம் வளர்சிதை மாற்றத்தை ஓரளவுக்கு நிர்ணயித்தாலும் நம் வாழ்வு முழுக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியுமா? 4) அவ்வாறு கட்டுப்படுத்தினால், கோள்களின் நகர்வுகள் ஒரே மாதிரியான விளைவுகளைத்தானே அனைவரிடத்திலும் ஏற்படுத்தமுடியும்? 5) வெவ்வேறான விளைவுகள் என்றால் முதல் சுவாசத்தில் கோள்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்றும் தொடர வேண்டுமல்லவா? எனில் சுவாசித்தலின் வகைகளை விளக்கமுடியுமா?

இவை மிக மிக அடிப்படையான கேள்விகள். இவற்றிற்கே பதிலளிக்க முடியாத நிலையில் கிளைக்கேள்விகளுக்கு ஜாதகம் விடையளிக்கும் என கருத இடமில்லை.

///Which means there is no room for future correction, addition, deletion at all?///

கிளைக்கேள்விகள்: 1) பரிகாரங்கள் எவ்வாறு கோள்களின் நிலைகளை மாற்றி நம் நடவடிக்கைகளை சரிசெய்யும்? 2) ஒரே கணத்தில் பிறந்த பலரில் ஒருவர் பரிகாரம் செய்தால் மற்றனைவரின் குறைபாடுகளும் நிவர்த்தியாகிவிடுமா? 3) பரிகாரம் மற்றும் விதி இவற்றிடையேயான தொடர்பு அல்லது முரண் என்ன? 4) "உறுதியாக நம்புவதற்கு ஒத்திசைவாக காரணங்களை தேடுவது" என்ற சந்தேகத்தின் அறிவியலுக்கும் ஜோதிட கணிப்புகளுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு மறுப்பது?

இது போன்ற கேள்விகளே நிலுவையில் இருக்க நீங்கள் கேட்கும் இந்த கேள்வி என்றும் விடைதெரியாத கேள்வியாகத்தான் இருக்க முடியும்.

////2. If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?////
///3. Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?////

கோள்களும் விண்மீன்களும் எவ்வளவு இருந்தாலும் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுவதாக சொல்கிறார்கள். கோள்களின் தேர்வு எந்த அடிப்படையானது என்ற தகவல் இல்லை. ஆற்றல் தான் ஜோதிடத்தின் அடிப்படை எனில் கணக்கில் எடுக்கப்படாத கோள்களின் ஆற்றல் புறக்கணிக்கத்தக்கதா என்ற கேள்வி வருகிறது. பூமிக்கு வெகு அருகில் உள்ள கோள்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்றால் அவற்றின் உண்மையான சுழற்சிகளுக்கும் ஜோதிடத்தில் நிர்ணயிக்கும் சுழற்சிகளுக்கும் சிறிது கூட சம்பந்தமே இல்லையே ஏன்?

///4. How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person.////
ஹா ஹா ஹா ஹா

அனானி நண்பரின் கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் முயன்றேன் என்றாலும் என்னால் எதிர்கேள்விகளையும் சிரிப்பையும் தான் பதிலாக தரமுடிந்தது. சோதிட நிபுணர்கள் எவரேனும் பதில் தரக்கூடும். ஆனால் அவை முழுமையானதாகவும் விரிவானதாகவும் இறுதியானதாகவும் இருக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை.

29 comments:

Anonymous said...
July 11, 2008 at 4:43 AM  

Mohan,

Appreciate your initiative, time and effort in attempting to answer my questions.

Frankly, I was surprised to see a seperate post.

As I said earlier, I do believe in astrology. Two or three instances in my life "tend to" strengthen the belief. At the same time, these are some questions that keep nagging me.

I followed the posts of Mr. Subbiah from an objective perspective. Since my daytime job is not predicting astrology, I gave up after some lessons.

My 2 cents is it requires lot of numerical aptitude and memory power.

I do appreciate the effort of Mr Subbiah for universalising the knowledge in astrology. Who knows, it may eventually lead to review, revise, refine, reform or reject the discipline.

Hope some one would come forward to answer these questions.

rapp said...
July 12, 2008 at 1:14 AM  

மோகன் இந்த கேள்விகளோட என் சந்தேகத்தையும் சேர்த்துக்கங்க. அது தஞ்சை நாடி ஜோதிடம் பற்றியது. நானே ஒரு முறை எனக்குப் பார்த்தப்போ அதில் சொல்லப்பட்ட அத்தனை பெயர்களும் மற்றும் விஷயங்களும் சரியாக இருந்தது. நான் அங்கு சென்றதும் சுத்தமாக எதிர்பாராமல்தான், அதனால் அவர்கள் முன்னமே என்னைப் பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நான் கொடுத்தது வெறும் கைரேகைதான்.என்னை அவர்கள் பதினைந்து நிமிடங்களில் அழைத்தனர். அப்பொழுது நான் பதினோராம் வகுப்பு படிப்பதால் திருமண காண்டம் மற்றும் பிற காண்டங்கள் பார்க்க வேண்டாம் என அவர்களே கூறினார். கல்வி காண்டம் பார்க்கச் சொன்னார்கள் ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லாததால் நான் பார்க்கவில்லை. நான் அங்கு சென்றதும் எங்களின் வாகனத்தில்தான், அதனால் ஏற்கனவே நான் யாரிடமும் பேச்சுக் கொடுக்கவில்லை என உறுதியாக தெரியும்.

அதுப் போல என் தோழியின் சகோதரிக்கு திருமணத்திற்கு முன் அவர்களின் பெற்றோர் அவருக்கு இங்கு வந்து திருமண காண்டம் பார்த்தனர். அதில் நான்கு திருமாலின் பெயர்களைக் கூறி அதில் ஒரு பெயருடையவர் மாப்பிள்ளையாக வருவார் எனவும், அவருடன் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளைப் பெற்று பல ஆண்டுகள் நன்றாக வாழ்வார் எனக் கூறினார். அதேப்போல ஒரு வருடம் கழித்து ஒருத்தர் வந்தார், குடும்பம் மற்றும் அவரின் வேலை அனைத்தும் சரியாக இருந்ததால் மணமுடித்தனர். பின்னர் தான் அவருக்கு சாடிஸ்டிக் குணம் இருப்பதும், அது அவர் குடும்பத்திற்கும் தெரிந்தே இருந்ததென்பதும் தெரிய வந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டனர்.

நாடி ஜோதிடம் பிராடு என்று ஜோதிடர்கள் பலரே சொல்கின்றனர். ஒரு முறை தஞ்சையின் மிகப் பிரபலமான நாடி ஜோதிட நிலையத்தின் சென்னைக் கிளையை நடத்துபவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய கல்லூரித் தோழிகள் அவரின் மனைவியிடம் சிறிது காலம் நாட்டியம் பயின்றனர். அப்பொழுது அவரும் (எங்களிடம் ஒரு நண்பரைப்போல சகஜமாக இருப்பவர்)நாடி ஜோதிடம் உண்மையானது இல்லை என்றும், அதனால் அதில் கூறப்பட்டவைகளை நம்பி எதிர்கால விஷயங்களில் ஒன்றைக் கூட செய்யக்கூடாதென்றும், கூறியவர், ஆனால் எப்படி தாத்தா, கொள்ளுத்தாத்தா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, பெற்றோர், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தொழில் இப்படிப்பட்டவ்றை சொல்கிறார்கள் என்பதை சொல்ல மறுத்துவிட்டார். நாடி ஜோதிடத்தில் கொஞ்சமாவது உண்மையுண்டா என்றக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மழுப்பிவிட்டார். நான் சந்தித்த பலரும் இதைப் பற்றி அதிசயப்படுகின்றனர். ஆனால் தெளிவான பதிலில்லை.

அதனால் நாடி ஜோதிடர்கள் எவ்வாறு இவற்றை சொல்கின்றனர், அவர்கள் கூறும் கடந்த காலம் மிகச் சரியாக இருப்பது போல் எதிர்காலம் இருப்பதில்லையே ஏன், என்பதைப் போன்ற என் சந்தேகத்தையும் உங்களின் பிற கேள்விகளோடு சேர்த்துக் கொள்ளவும்

Anonymous said...
July 12, 2008 at 3:20 AM  

நாடி ஜோதிடம் ஒரு டுபாக்கூர். அதை நாம் பின்னர் பார்க்கலாமே? சற்று பொறுத்து நாடி சோதிட மோசடிகளை நான் விரிவாக விளக்குகிறேன். அதுவரை,

1. ஒரு நாடி சோதிட செஷன் எவ்வாறு நடக்கிறது,

2. கைரேகையை வைத்து எப்படி ஏடைக் கண்டுபிடிக்கமுடியும்,

3. முதலில் நடக்கும் கேள்வி-பதில் பகுதி எவ்வாறு உள்ளது,

4. அதற்கும் பகுத்து வெல்லுதல் (divide-and-conquer) உள்ள தொடர்பு,

5. கடந்தகால சரித்திரம் அப்படியே பொருந்தும்போது எதிர்காலப் பலன்கள் ஏன் குத்து மதிப்பாக உள்ளது,

6. கடந்தகால சரித்திரத்தை ஆணித்தரமாகக் கூறும் ஏடு, ஏன் எதிர்காலப் பலன்களுக்கு பரிகாரம் செய்தால் மட்டுமே நிறைவேறும் என்று டிஸ்க்ளெய்மர் போடுகிறது,

8. உங்களுக்கு கூறப்படும் பரிகாரத்தை ஏன் அவர்களே செய்யவேண்டும்,

9. அந்த ஏடுகளில் வரும் தமிழ் ஏன் ஆராய்ச்சியாளர்களால் அறியப்பட்ட எந்த ஒரு கடந்த காலகட்டத் தமிழுடனும் ஒத்து வருவதில்லை,

10. அந்த ஏடுகளில் உள்ள எழுத்துக்கள் ஏன் எந்த காலத் தமிழ் எழுத்துக்களுடனும் ஒத்து வருவதில்லை

என்பன போன்ற வினாக்களை சிந்தித்து வையுங்கள்.

rapp said...
July 12, 2008 at 3:43 AM  

ரொம்ப நன்றி அனானி, இன்னும் இன்னும் தோணும்போது எழுதி வைத்துக் கேட்கிறேன். உங்க உதவிக்கு நன்றி. அந்த மோசடியை பற்றிய தெளிவு பெற மிக ஆவலாக உள்ளேன்

Anonymous said...
July 12, 2008 at 5:23 AM  

Interesting,I will also follow this post to educate myself about astrology though I don't believe in it

மோகன் கந்தசாமி said...
July 13, 2008 at 1:02 AM  

ஹாய் ராப்,
நாடி சோதிடம் ஒரு பிராடு என்பதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

நான் வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிடம் பார்த்தபொழுதும் என் குடும்பவிபரங்களை சரியாகவே சொன்னார்கள். ஆனால் அவர்கள் 40 -க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அதன் பிறகுதான் அவர்களால் அதைச்சொல்லமுடிந்தது. வருடக்கணக்கில் இத்தொழில் செய்து வருபவர்கள் என்பதால் இது அவர்களுக்கு எளிது. இவ்வகை கணிப்புகளை விஜய் டி.வி. கிராண்ட் மாஸ்டர் செய்யும் கணிப்புகளுக்கு ஒப்பிடலாம்.

ஒருகட்டு ஓலைச்சுவடியிலிருந்து ஒவ்வொரு சுவடியாக திருப்பியவாறே, அவர்கள் சில கேள்விகளை கேட்பது வழக்கம். சரியான ஓலைச்சுவடியை கண்டுபிடிக்கும் பொருட்டு சிலகேள்விகள் தேவையாய் இருப்பதாக காரணம் கூறுவர். கேள்விகளை தொடர்ந்து கேட்டுவிட்டு, போதுமான விபரம் வந்தவுடன் ஏதோ ஒரு சுவடியில் நிறுத்துவர். அந்த சுவடிதான் நமக்காக பலநூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர் கணித்துவைத்த சுவடி என்றுகூறி பலன் சொல்லத்தொடங்குவர்.

பலன் சொல்லும்போது அவர்கள் செய்யுளாக படிக்கிறார்கள். அந்த செய்யுளுக்கு என்னால் எந்த அர்த்தத்தையும் ஊகிக்கமுடியவில்லை. எந்த கடினமான தமிழ் செய்யுளையும் என்னால் என்பது சதவீதம் வரை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இவற்றின் அர்த்தம் எனக்கு சுத்தமாக புரியவில்லை. அந்தச் சுவடியை நான் பார்க்கமுடியுமா என்று கேட்டபோது தயக்கமின்றி என்னிடம் காட்டினார்கள். (நிறைய பேர் இப்படி கேட்பார்கள் போலிருக்கிறது!). ஆனால் அதில் எந்த எழுத்துக்களும் இல்லை. எழுத்துக்கள் ஏதும் இல்லையே என்று நான் வினவியபோது நெடுங்காலத்திற்கு முன் எழுதப்பட்டது என்பதால் வெறும் கீறல்கள் மட்டும் மிஞ்சி இருப்பதாகவும், அக்கீறல்களை படிக்க தனித்திறமை வேண்டும் என்றும் கூறினார் அந்த நாடி சோதிடர். உண்மையில் அச்சுவடியில் போதுமான கீறல்களோ, இருந்த கீறல்களிலும் எவ்வித ஒழுங்கோ உண்மையில் இல்லை. அது எவ்வாறு இருந்தது என்றால், பச்சை தென்னை ஓலைக் கீற்றை நன்றாக கசக்கி பின் நீட்டினால் அதில் எவ்வாறு வடிவங்கள் இருக்குமோ அவ்வாறு இருந்தது.

சில கீறல்களை சுட்டி அவை என்ன எழுத்துக்கள் என வினவியபோது, சுவடியை தொட அனுமதித்ததே அதிக பட்சம், இதற்கு மேல் எதுவும் முடியாது என மறுத்துவிட்டார். இதற்கிடையில், கோபத்தின் உச்சத்திற்கே என் அம்மா சென்று விட்டதால், அவள் எதுவும் சொல்வதற்குமுன் என் இருக்கைக்கு திரும்பிவிட்டேன்.

இவ்வாறாக, அன்று நடந்தவற்றை நான் எவ்வாறு தொகுத்துக்கொண்டேன் என்றால்,
1) ஓலைச்சுவடியில் பொருள்தரும்படி ஏதும் வடிவங்களோ எழுத்துக்களோ இல்லை.
2) பெயர்களையும், தொழிலையும் சொல்லும் போது உள்ள தெளிவு சம்பவங்களை சொல்லும்போது இல்லை.
3) ஒரு கேள்விக்கு நாம் தவறாக பதில் சொல்லிவிட்டாலும் அவர்கள் முற்றிலும் சம்பந்தமில்லாத கணிப்புகளை தருகிறார்கள், சரியான சுவடியை அவர்கள் கண்டுபிடித்து சொன்னாலும் கணிப்புகள் மிகத்தவறாக வருகின்றன. எனவே கணிப்புகள் நம் பதில்களிலிருந்தே தரப்படுகின்றன எனக்கொள்ள முடியும்.

மோகன் கந்தசாமி said...
July 13, 2008 at 1:04 AM  

நண்பர் அனானி!
விளக்கங்களுக்கு காத்து இருக்கிறேன்!

மோகன் கந்தசாமி said...
July 13, 2008 at 2:04 AM  

ஹலோ ஷ்யாம்,
வருகைக்கு நன்றி!

அகரம் அமுதா said...
July 15, 2008 at 9:53 AM  

எனக்கும் நாடி சோதிடம் மீது 10வயது முதலே நம்பிக்கை இருந்ததில்லை. என் கட்சிக்கு வலிசேர்ப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.. வாழ்த்துகள்.

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 12:25 AM  

ஆதரவிற்கு நன்றி அமுதா!!!

லதானந்த் said...
July 16, 2008 at 3:08 AM  

Kindly read my blog which contains articls on "santhip pizhai"
www.lathananthpakkam.blogspot.com

I dont find Tamil font in this browsing centre. I will go home and send more comments in Tamil

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 4:51 AM  

////Kindly read my blog which contains articls on "santhip pizhai"
www.lathananthpakkam.blogspot.com
I dont find Tamil font in this browsing centre. I will go home and send more comments in Tamil///

நண்பரே! எவ்வளவு தேடியும் "சந்திப் பிழை" பதிவை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் வேறொன்று கண்டுபிடித்தேன். உங்கள் பதிவுகளை இதுநாள் வரை படிக்காமல் இருந்த நான் ஒரு வேஸ்ட் என்று.

Sanjai Gandhi said...
July 16, 2008 at 8:02 AM  

உள்ளேன் ஐயா :)

புதுகை.அப்துல்லா said...
July 16, 2008 at 8:59 AM  

யோவ் மோகன் அடுத்த மாசம் தான்வருவேன்னு சொன்ன உங்க பேச்ச நம்பி இங்குட்டு வராம இருந்தா அதுக்குள்ள ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க. '' உதவி பிளீஸ்'' பதிவில் உள்ள விஷயங்களைப் பற்றி என்னால் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது.காரணம் ஒருமுறை நண்பர் ஒருவரிடம் ஜாதக நம்பிக்கைகளைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருந்த போது திடீரென நீ துலுக்கன் அதனால அப்படித்தான் பேசுவன்னாரு. நான் அவரிடம் ஏங்க ஜோசியம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து மதங்களிலும் அனைத்து கலாச்சாரத்திலும் உள்ளது.இஸ்லாமியர்கள் மத்தியில் கூட பால்கித்தாப்(நாடி படிப்பதை ஒத்தது) படித்தல் என்ற ஜோசியம் உள்ளது. நான் அதையும் சேர்த்துதான் சொல்றேன்.நான் இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன். அப்படியும் கூட அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் இங்க நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.ஓரமா குந்திகினு வேடிக்கை பாக்குறேன்

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 5:13 PM  

/////யோவ் மோகன் அடுத்த மாசம் தான்வருவேன்னு சொன்ன உங்க பேச்ச நம்பி இங்குட்டு வராம இருந்தா அதுக்குள்ள ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க///

என்ன பண்றது புதுகை, சோறு இல்லாம இருந்தாலும் இருந்திடலாம் போல இருக்கு, பதிவு எழுதாமா ஒன்னும் முடியல! ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் அப்படின்னு சில மூத்த பதிவர்கள் சொன்னது கரைக்ட்டு தான் போல. (மூத்த என்பது இப்பவெல்லாம் வசைச்சொல் ஆகிவிட்டதுன்னு நினைக்கிறேன், அதனால அந்த வார்த்தை வாபஸ்)

///திடீரென நீ துலுக்கன் அதனால அப்படித்தான் பேசுவன்னாரு///
எதிர்கேள்வி கேக்கறவங்க மேல விழுந்து புடுங்கறதே ஒரு வாயடைக்கிற உத்திதான் புதுகை. அவங்க சகவாசத்தை உட்டுர்ரதான் நல்லது.

///இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன்///
அதுலயும் சில ஆதிக்கக்கூறுகள் இருக்கு புதுகை. அவைகளும் விமர்சனத்திற்குரியனவே!

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 5:14 PM  

ஆதரவுக்கு நன்றி சஞ்சய்!

Sridhar V said...
July 16, 2008 at 10:52 PM  

நாடி சோதிடம் பற்றிய உங்கள் விளக்கம் சரியே. நான் ஒரே ஒருமுறை மதுரையில் முயற்சி பண்ணியபொழுது நன்றாகவே குழம்பி விட்டார். கிட்டத்தட்ட 3-4 கட்டுகளுக்கு அப்புறம் ஏதோ ஒன்றை சொல்லி ஒப்பேற்றினார்கள். இதைப் பலரும் நம்புவது ஆச்சர்யம்.

அந்த சுவடிகளும், எழுத்தும் எல்லாமே 'செய்யப்பட்டவை'தான்.

பின்னூட்டம் பெரிதாக போய்விட்டது. அதனால் ஒரு சின்ன Disclaimer: நான் ஜோதிடத்திற்கோ, எண் கணிதத்திற்கோ, பெயர் சோதிடத்திற்கோ, வாஸ்துவிற்கோ, எனர்ஜி சிகிச்சைக்கோ, ராசிக்கல் வகையறாவிற்கோ வக்காலத்து வாங்கவில்லை. :-)

வான் சோதிடம் கணக்கின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இதனால் இதன் மேல் சிலருக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. இது ஒரு வகையில் 'குழப்ப வாதம்'தான். காலை அலுவலகம் கிளம்பும் தகப்பன் குழந்தையின் புன்சிரிப்பைப் பார்த்துவிட்டு போகும்பொழுது இலகுவாக வேலை செய்கிறான். அதே குழந்தை அழுது அடம்பிடித்தால், அலுவலகம் சென்ற பின்னர் மனம் தடுமாறுகிறது. எங்கோ ஒரு கோள் தடம் மாற நம் வாழ்வும் தடம் மாறும் (சனிப் பெயர்ச்சி) என்பது போல.

ஆக, வான் சோதிடம் கணக்கின் அடிப்படையில் அமைந்த ஒரு புணைவு என்று சொல்லலாம். அதில் படிக்க நிறையவே இருக்கிறது. ஆனால் பயன்படுத்த அதிகம் இல்லை.

மனம் தடுமாற்றம் அடையும்பொழுது சோதிட பலன்களை படித்து எதிர்காலத்தில் நம்பிக்கை வளர்த்துக் கொள்ளலாம். நான் அறிந்த வரையில் சோதிட பலன்களை இந்த அளவில் படிக்கின்றேன். தேவைப்படும்போது மட்டும். ஏற்றமான பாதையில் செல்லும்போது ஒரு பிடிமானம் போல.

வெளிப்படையாக நாத்திகர்களாக அறிவித்து கொள்கிறவர்களும் தங்கள் துணையையோ அல்லது அருகிலிருப்பவர்களோ இம்மாதிரி நம்பிக்கை கொண்டிருந்தால் அதை தடுக்காததிற்க்கு இந்த 'பிடிமான' தத்துவமும் ஒரு காரணம்.

ஒரு காரியத்தில் நாம் ஈடுபடும் போது அது முழுவதும் நம் முயற்சியில் மட்டும் நிறைவேறுவது இல்லை. அதனை பல undefined parameters பாதிக்கிறது. இது ஒரு இயற்கை. இதை நாம் ஒத்துக் கொள்ளும்பொழுது சோதிடக் கலையை நம்புகிறவர்களின் நம்பிக்கையையும் ஒத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

மற்றபடி நண்பர் கேட்ட கேள்விகளுக்கு -

1. Is the discipline of astrology comprehensive and complete?

மோகன் பதிலிலிருந்து சற்றே மாறுபடுகின்றேன். கணித சாத்திரத்தில் axioms and theorms என்று சொல்கிறோம். அதாவது 'அடிப்படை'கள். 1-ம் எண்ணிற்கு அடுத்து 2-ம் எண். இது போன்ற axioms-களுக்கு நிரூபணம் தேவையில்லை. அடுத்தது 'தேற்றங்கள்' என்று சொல்லப்படும் theorems. 9-ன் அள்வுகளில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை 9-ஆகவே இருக்கிறது. இவற்றை நிரூபிக்க வேண்டும். அதற்கு வழிசெய்வது ஒரு வகையில் axioms-களே.

அதுபோல வான் சோதிடம் ஒரு வரையறுக்கப்பட்ட கலைதான். ஜாதகம் கணிப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு நிரலிகளே வந்துவிட்டன. அதன் அளவில் அது முழுமையானதே.

//Which means there is no room for future correction, addition, deletion at all?//

ஜாதகம் கணிப்பது ஒரு சுலபமான வேலை. வெறும் கணித அடிப்படையில் செய்யப்படும் ஒரு செயல். அதன் நீட்சியாக செய்ய ஒன்றும் இல்லை. தோஷங்கள், பரிகாரங்கள் கொஞ்சம் பெரிதான domain. அதில் பிற்சேர்க்கைகள் நடந்திருக்கலாம். நடக்கலாம். :-)

//If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?//

துருவ நட்சத்திரம் என்றும் இருக்கத்தானே செய்கிறது? இன்னமும் பல கோடி வருடங்கள் இருக்கலாம். :-) அது போய்விட்டால் ஒரு பரிகாரம் செய்து விட்டு வேறு கணக்கை கொள்ளலாம். ஆனால் இப்பொழுது இருக்கும் கணக்கானது பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப் பட்டுக் கொண்டு வருகிறது என்பதை நாம் ஒதுக்கி விட முடியாது.

//Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?//

9 கிரகங்களும் 27 நட்சத்திரங்கள் மட்டுமல்ல. இன்னமும் நிறைய கணக்குகள் இருக்கின்றன. சூரிய சுழற்சியை அடிப்படையாக கொண்டு மாதங்கள் கணக்கிடுகிறார்கள். நிலாவை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திரங்களை கணக்கிடுகிறார்கள். அந்த நட்சத்திரங்களுக்கு பாதங்கள், ராசிகள்...

அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில கணக்கின் அடிப்படையில் சில குறியீடுகளாக இவை பயன்படுத்தப் பட்டிருப்பது புரியும். வாரத்திற்கு ஏன் ஏழு நாட்கள்? அந்த ஏழு நாட்களுக்கு ஏன் ஏழு கிரகங்களின் பெயர்களை சூட்டி வைக்கிறோம்? ஒரு வசதிக்காகத்தான். ஞாயிறு விடுமுறையாக கடைபிடிக்கப் படுவதற்கும் அதற்கு 'சூரியனை' (Sunday) அடையாளப்படுத்துவதும் ஏன்? இத்தனைக்கும் இந்த உலகம் இயங்குவதே சூரிய சக்தியினால்தான். அந்த நாளில் ஏன் விடுமுறை? It may be a mere co-incidence or some silly concept behind. But the bottom line is it is easy to have 7 days a week and 52 weeks a year to calculate the movement of the Earth around the Sun.

//How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person//

பேசிப் பாருங்கள். அவர் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டால் சரி. இல்லாவிடில் வேறு ஜோசியரைத் தேடுங்கள். ஜோசியருக்கா பஞ்சம் :-))

இப்பொழுது நிறைய ஜோசியத் தளங்கள் இருக்கின்றன. காசே செலவு செய்யாமல் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளலாம். :-))

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 11:30 PM  

ஸ்ரீதர் நாராயணன் அவர்களே!
தங்கள் கருத்துக்கள் நேரடியான பதில்கள் என்ற அளவிலே எதிர்கொள்கிறேன். ஆனால் ஜோசியத்தால் எந்த பயனும் இல்லை. மாறாக உபத்திரவம்தான். தன்னம்பிக்கை தருகின்றது என்ற ஒரே ஒரு பயனும் உபத்திரவம் இல்லாத பலவழிகளில் அதைப்பெறலாம் என்ற அடிப்படையில் முக்கியத்துவம் அற்றுபோகிறது. கேடுகள் மட்டும் பூதாகரமாக நிற்கின்றன. இதனாலேயே ஜோதிடம் அழிந்து போய்விடாதா என்ற ஆவல் மேலிடுகின்றது.

Sridhar V said...
July 17, 2008 at 12:17 AM  

//ஜோசியத்தால் எந்த பயனும் இல்லை. மாறாக உபத்திரவம்தான்//

மீண்டும் சொல்கிறேன். ஜோசியம் தேவை என்று நான் சொல்லவில்லை.

மற்றபடி ஜோசியம் இல்லாவிட்டால் அதன் இடத்தை இன்னொரு வாசியம் இட்டு நிரப்பும் என்றே நினைக்கின்றேன். :-)

புதுகை.அப்துல்லா said...
July 17, 2008 at 3:13 PM  

///இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன்///
அதுலயும் சில ஆதிக்கக்கூறுகள் இருக்கு புதுகை. அவைகளும் விமர்சனத்திற்குரியனவே!
//

மோகன் அப்படி இருந்தாலும் கூட அவற்றை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.காரணம் அது என்னுடைய இடம் அல்ல.எனக்கு உரிமை இல்லாத ஒன்றைப் பற்றி எனக்கு மாற்று கருத்து இருந்தாலும் கூட எப்படி நான் விமர்சிக்க முடியும்?

கயல்விழி said...
July 17, 2008 at 4:50 PM  

//ஒருமுறை நண்பர் ஒருவரிடம் ஜாதக நம்பிக்கைகளைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருந்த போது திடீரென நீ துலுக்கன் அதனால அப்படித்தான் பேசுவன்னாரு. நான் அவரிடம் ஏங்க ஜோசியம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து மதங்களிலும் அனைத்து கலாச்சாரத்திலும் உள்ளது.இஸ்லாமியர்கள் மத்தியில் கூட பால்கித்தாப்(நாடி படிப்பதை ஒத்தது) படித்தல் என்ற ஜோசியம் உள்ளது. நான் அதையும் சேர்த்துதான் சொல்றேன்.நான் இந்து மத வழிபாட்டு முறைகளை எதேனும் விமர்சனம் செய்தால் நீங்க அவ்வாறு கூறலாம் என்றேன். //

மக்களுடைய குறுகிய மனப்பான்மையை நினைத்து எனக்கு எரிச்சல் வராத நாளே இல்லை. ஜோதிடம் என்ற மூட நம்பிக்கை, அனைத்து மதத்தவருக்கும் ஏதோ ஒரு வகையில் இருக்கிறது. அப்படி இல்லை என்று வைத்துக்கொண்டாலும், ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக விமர்சிக்க கூடாது என்பது அபத்தம். என்று திருந்துவார்கள் இந்த மக்கள்?

கயல்விழி said...
July 17, 2008 at 4:51 PM  

அனைத்து ஜோதிட முறைகளும் டுபாக்கூர் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

மோகன் கந்தசாமி said...
July 17, 2008 at 7:56 PM  

///மோகன் அப்படி இருந்தாலும் கூட அவற்றை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.காரணம் அது என்னுடைய இடம் அல்ல.எனக்கு உரிமை இல்லாத ஒன்றைப் பற்றி எனக்கு மாற்று கருத்து இருந்தாலும் கூட எப்படி நான் விமர்சிக்க முடியும்?////


புதுகை,
நீங்கள் சொல்வது காமெடியாக இருக்கிறது. :-)).
ஏனெனில் கருத்து சுதந்திரத்தை மதிக்காத முண்டத்திடம் உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அடுத்தவர் "விஷயத்தில் தலையிடுகிறோம்" என்ற உணர்வு உங்களுக்கு வந்துள்ளது. சில பன்னாடைகள் அடுத்த சாதிக்காரனையே மனிதனாக மதிப்பதில்லை. வேறுசில புண்ணாக்குகள் வன்முறையிலே சாதி மேன்மையை தேடுகின்றன. கீழ்சாதிக்காரன் வெட்டுப்படும்போது நீங்கள் காண நேர்ந்தாலும் இது அவர்கள் மதப்பிரச்சினை என ஒதுங்கிவிடுவீர்களா? அல்லது ஏற்றுக்கொள்வீர்களா?

கருத்துச்சுதந்திரத்தை உங்களுக்கு எவரேனும் மறுத்தால் அல்லது நீங்களே மறுதலித்தால் நீங்கள் செகண்டரி சிடிசன் ஆக்கப்படுகிறீர்கள் அல்லது ஆகிவிடுகிறீர்கள். எனது நாட்டில் என்னால் செகண்டரி சிடிசனாக வாழமுடியாது, உங்களால் முடியுமோ?

மோகன் கந்தசாமி said...
July 17, 2008 at 7:59 PM  

/////ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக விமர்சிக்க கூடாது என்பது அபத்தம்.////
நச்.
:-))))

மோகன் கந்தசாமி said...
July 17, 2008 at 8:02 PM  

////அனைத்து ஜோதிட முறைகளும் டுபாக்கூர் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.////

பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி கயல்விழி!

புதுகை.அப்துல்லா said...
July 19, 2008 at 4:16 AM  

மோகன் சாதிப்பிரச்சனை என்பது மனிதர்கள் சார்ந்தது மதம் சார்ந்தது அல்ல. அப்படி எந்த கிருக்கு பயலாவது வெட்ட கிளம்பினால் தடுத்து அடிக்கும் முதல் அடி என் அடி என்பதில் மாற்றம் இல்லை. சக மனிதன் கீழ்தரமாக நடத்தப்படும் கொடுமைகளை என்னால் எப்போதும் பொறுக்க முடியாது. அதே நேரத்தில் வழிபாட்டு முறைகள் என்பது மதம் சார்ந்தது.இந்த முறையில் இறையை உணரலாம் என்று பிற மதத்தினர் அவர்கள் வழியை நம்புவதை இல்லை இல்லை என்வழிதான் சரி என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை என்று தான் சொன்னேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. மனிதர்களின் சுயமரியாதையின் பேரில் நடக்கும் போரில் நான் எப்போதும் பாதிக்கப் படுவோர் பக்கம்.இதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம்.

புதுகை.அப்துல்லா said...
July 19, 2008 at 4:20 AM  

கருத்துச்சுதந்திரத்தை உங்களுக்கு எவரேனும் மறுத்தால் அல்லது நீங்களே மறுதலித்தால் நீங்கள் செகண்டரி சிடிசன் ஆக்கப்படுகிறீர்கள் அல்லது ஆகிவிடுகிறீர்கள். எனது நாட்டில் என்னால் செகண்டரி சிடிசனாக வாழமுடியாது, உங்களால் முடியுமோ?//

என்னுடைய ஒரு பதிவில் "நாம் வாழப் பிறந்தவர்கள், நம் அன்னை பாரதத்தை வாழ வைக்கப் பிறந்தவர்கள். இந்த மண் மேல் அத்தனை பேருக்கும் உரிமையும் உண்டு...பொறுப்பும் உண்டு.அதை மனதில் நிறுத்தி மனிதர்களாய் வாழ்வோம்'' என்று எழுதி இருந்தேன்.அதுதான் இங்கும் எனது பதில்.நாட்ல என்ன வீட்ல கூட இரண்டாம் குடிமகனாக என்னால் வாழ முடியாது மோகன் அண்ணே!

புதுகை.அப்துல்லா said...
July 19, 2008 at 4:28 AM  

கயல்விழி said...

ஒரு சமுதாய சீர்கேட்டை வேற்று மதக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக விமர்சிக்க கூடாது என்பது அபத்தம். என்று திருந்துவார்கள் இந்த மக்கள்?//

நன்றி கயல்விழி.

முருகன் அடிமை said...
August 18, 2009 at 8:26 AM  

ஜோதிடத்தில் மென்மேலும் பாடங்களை வெளியுடுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்,
முருகன் அடிமை