Wednesday, September 10, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50: ஜ்யோவ்ராம் சுந்தர் கவிதைகள்

·


னது வலைப்பூவில் கவிதைகள் எழுதி பெருமை சேர்த்த எழுத்தாளர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு நன்றி. அவருடனான மின் அரட்டை என்னை பரவசப்படுத்தி உள்ளது. எனது எழுபத்தைந்தாவது பதிவிற்காக நேர்முகம் அளிக்க ஒப்புக்கொண்டமைக்கு மீண்டும் ஒரு நன்றி.




இருள் சூழ்ந்த புதர்



லையில் பாதி வழுக்கையும்

தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த

அவன் பெயர் பார்திபனாம்.

அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்

எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்

பன்னிரெண்டாவது வரை

ஒன்றாகப் படித்தோமாம்

என் ஞாபக அடுக்குகளில்

மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்

பள்ளி - மதிய உணவு

ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி

பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை

இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்,

இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்

வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது

பேருந்தில் செல்லும் ராதிகாவை

சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது

பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்

மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி

அவசரமாய் ரயிலேறிப் போனான்

இரவில் மனைவியிடம் தன் பால்யகால

நண்பனைச் சந்தித்ததை

அவன் விவரித்து மகிழக்கூடும்

என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை

என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்


-ஜ்யோவ்ராம் சுந்தர்







ரொம்ப அழகு


சீறிப் பாயும் மழை அழகு

கழுவி விடப்பட்ட சாலை அழகு

இருளாய் இருக்கும் வானழகு

வெளிச்சங்களைச் சிதறும்

சோடியம் விளக்குகள் அழகு

விளம்பரப் பலகைகளின்

நீல மஞ்சள் பச்சை

பிம்ப பிரதிபலிப்புகள் அழகு

எதிர்ச் சாரியில் விரையும்

ரெயின் கோட் கணவன் அழகு

இடுப்பை அணைத்து

முதுகில் முகம் சாய்த்த மனைவி அழகு

சுருண்டு அபத்தமாய் விழுந்திருக்கும்

கறுப்பு யமாஹா அழகு

ரத்தத்தை உறைய விடாமல்

அடித்துச் செல்லும் நீரழகு

கவிழ்ந்து விழுந்திருப்பவனின்

சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு

வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்

வாகனங்களின் டயர் ஒலி அழகு

அழகு அழகு அழகு


-ஜ்யோவ்ராம் சுந்தர்



அடுத்து, புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரை இடம் பெறவுள்ளது.

11 comments:

புதுகை.அப்துல்லா said...
September 11, 2008 at 2:37 AM  

மீ த ஃபர்ஸ்டு

புதுகை.அப்துல்லா said...
September 11, 2008 at 2:39 AM  

மொத்தத்தில் கவிதைகள் இரண்டும் அழகு!அழகு!அழகு!

வெண்பூ said...
September 11, 2008 at 2:54 AM  

அற்புதமான கவிதைகள் சுந்தர்.

முதல் கவிதை ஒரு சிறுகதை என்றால் இரண்டாவது சிறுகதையின் வர்ணனைகள் ஒரு அற்புதமான(?) புகைப்படம். பாராட்டுக்கள்.

**********

பாராட்டுக்கள் மோகன்.. இவ்வளவு அழகான கவிதைகளை சுந்தரிடம் இருந்து பெற்றதற்கு..

மோகன் கந்தசாமி said...
September 11, 2008 at 2:59 AM  

///மொத்தத்தில் கவிதைகள் இரண்டும் அழகு!அழகு!அழகு!///

நன்றி புதுகை!

///பாராட்டுக்கள் மோகன்.. இவ்வளவு அழகான கவிதைகளை சுந்தரிடம் இருந்து பெற்றதற்கு..///

நன்றி வெண்பூ!

விஜய் ஆனந்த் said...
September 11, 2008 at 3:32 AM  

கவிதைகள் அருமை!!!

anujanya said...
September 11, 2008 at 3:37 AM  

இரண்டு கவிதைகளுமே அருமை. வாழ்த்துக்கள் சுந்தர்.

மோகன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கும், அழகு கவிதைகளைப் பெற்றதற்கும்.

அனுஜன்யா

பரிசல்காரன் said...
September 11, 2008 at 3:39 AM  

இரண்டு கவிதைகளுமே அருமை.

மோகன்.. இவ்வளவு அழகான கவிதைகளை சுந்தரிடம் இருந்து பெற்றதற்கு..

நன்றி மோகன்!!

முரளிகண்ணன் said...
September 11, 2008 at 4:09 AM  

excellent.

rapp said...
September 11, 2008 at 9:26 AM  

சுந்தர் அவர்களின் கவிதைகள் என்னுடையது அளவுக்கு இல்லையென்றாலும், பரவாயில்லை ரகம்:):):)

மோகன் கந்தசாமி said...
September 11, 2008 at 1:04 PM  

////கவிதைகள் அருமை!!!////

நன்றி விஜய்! நலமா?


////இரண்டு கவிதைகளுமே அருமை. வாழ்த்துக்கள் சுந்தர்.
மோகன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கும், அழகு கவிதைகளைப் பெற்றதற்கும்.

அனுஜன்யா////

முதல் வருகைக்கு நன்றி அனுஜன்யா!

////செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலம்தான் /////

ஞாபகம் இருக்கிறது வரிகள், பின்னூட்டம் இடவில்லை எனினும்.

மோகன் கந்தசாமி said...
September 11, 2008 at 1:05 PM  

///மோகன்.. இவ்வளவு அழகான கவிதைகளை சுந்தரிடம் இருந்து பெற்றதற்கு.////

நன்றி பரிசல் ஸ்டார்

நன்றி முரளி ஜி, சுந்தர் எப்பவும் எக்சலண்ட் தானே!
////excellent.///


////சுந்தர் அவர்களின் கவிதைகள் என்னுடையது அளவுக்கு இல்லையென்றாலும், பரவாயில்லை ரகம்:):):)////

ராப், உங்கள் கவிதையே என்னுடைய ரேஞ்சில் இருக்காது, அவர் கவிதை எப்படி இருக்கும். :-)))))))



கிடங்கு