Wednesday, October 29, 2008

பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி

·

நண்பர்களே! இந்த குறுக்கெழுத்து போட்டி வித்தியாசமானது. முழுக்கவும் பதிவர்கள், வலைப்பூக்கள், பதிவுகள் தொடர்பான ஒன்று. வெற்றி பெறுவோர்க்கு பரிசு ஒன்றும் கிடையாது. பதிவு நன்றாக இருந்தால் நீங்கள் பரிசு அனுப்பலாம். நான் நிராகரிக்க போவதில்லை.



இடமிருந்து வலம்
1)இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)
3)இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)
5)இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். பாரிசில் வசிக்கிறார்.(2)
6)கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)
7)போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)
14)இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்தை. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)
16) தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)
23)எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)

வலமிருந்து இடம்
4)ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)
8)காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)
9)பிளாக் எழுதும் பாலிவுட்காரார்.(3)
11)வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)
13)2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)
18)பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)
25) இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)

மேலிருந்து கீழ்
2)தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)
10)டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)
11) நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)
12) பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)
22) பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)

கீழிருந்து மேல்
15)நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல!(5)
17)மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)
19)டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)
20) அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(7)
21) வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)
24) குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)

2 comments:

பழமைபேசி said...
October 29, 2008 at 12:12 PM  

புதுமையாவும் இருக்கு, நல்லாவும் இருக்கு.... முயற்சி செய்யலாம்... நிறைய கடந்த காலப் பின்னணி தெரிஞ்சு இருக்கணும் போல இருக்கு. :-o)

நசரேயன் said...
October 29, 2008 at 6:39 PM  

நானும் ஒரு உள்ளேன் போட்டுகிறேன்