Monday, November 10, 2008

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 3

·

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் கடந்த இரண்டு பதிவுகளாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது மூன்றாவது பகுதி.


ந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒப்பிட முடியுமா?

ந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இலங்கை அரசியலைப்புச் சட்டத்தையும் ஒப்பிட கூடிய அரசியல் சட்டமைப்பு குறித்த அறிவு எனக்கு இல்லை.
"ஏட்டளவில் (On Paper)" இந்திய அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குகிறது.

இலங்கையில் உள்ளது போலவே இந்தியாவிலும் மாநிலங்களுக்கு பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. ஆனால் ஒரளவுக்கு அதிகாரங்கள் உள்ளன. இந்தியாவின் அரசியல் அமைப்பில் உள்ளது போன்ற அதிகாரங்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கும் திட்டம் கூட சிங்கள அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது இலங்கைக்கு பொருந்தாது. இந்தியாவின் தற்போதைய அதிகாரப் பரவல் என்பது இந்தியாவின் பிராந்திய கட்சிகள் பலம் பெற்றதாலும், தேசிய கட்சிகள் பலம் இழந்ததாலும் தான் அடைய முடிந்தது. இந்தியா போன்று பெரிய நாட்டில், பல்வேறு பிராந்தியங்கள் உள்ள சூழ்நிலையில், பிராந்திய கட்சிகள் வலுப்பெறும் பொழுது தான் இந்த மைய கூட்டாட்சி நிலை ஏற்படுகிறது.

ஆனால் இலங்கை போன்ற சிறிய நாட்டில் இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால் இந்தியா போன்று அதிகாரப்பரவலாக்கம் ஏற்பட சாத்தியம் இல்லை.

இலங்கையில் இந்தியாவைப் போன்ற மாநில அதிகாரங்களை வழங்க முனைந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால சூழ்நிலை தான் இலங்கையில் ஏற்படும்.
இந்தியாவில் ஆரம்ப காலங்களில் மைய அரசு தான் பலம் பொருந்தி இருந்தது. மாநில ஆட்சிகளை கலைக்கும் அதிகாரங்களை பெற்றிருந்தது. மைய அரசின் அசுர பலம் காரணமாகவே கட்சத்தீவினை தமிழகத்தின் கடும் எதிர்ப்பினை மீறியும் இலங்கைக்கு

அன்றைய இந்தியாவின் மைய அரசு தாரைவார்த்தது. ஆனால் இன்றைய கூட்டாட்சி முறையில் அது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை.

எனவே இந்தியா போன்ற அதிகாரங்களை கொண்ட மாநிலங்களை இலங்கையில் உருவாக்குவது என்பது ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக முடியாது.

இவை தவிர இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்ட வரப்பட்ட பல மாற்றங்களே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம். குறிப்பாக 1956ம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டம் (Official Language Act or Sinhala Only Act), ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது. இந்திய அரசியல் சட்டத்தில் அவ்வாறான ஒரு நிலை இல்லை. என்றாலும் ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று கூறுவதை என்னால் என்றைக்கும் ஜீரணம் செய்து கொள்ள முடிவதில்லை. அப்படியெனில் மற்ற மொழிகள் எல்லாம் எதற்கு?

ழத்தமிழர் பற்றி அண்ணாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

ண்ணா காலத்தில் ஈழப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகம் இருந்தது இல்லை என நினைக்கிறேன். அதனால் அண்ணாவின் நிலைப்பாடு குறித்த எந்த தகவலும் இல்லை


விடுதலை புலிகளுக்கு எம்ஜியார் செய்த உதவிக்கும் இந்திய அரசு செய்த உதவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அல்லது வித்தியாசம் இல்லையா?

மிழீழ விடுதலை குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டு உதவி செய்த ஒரே தமிழக தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். எம்.ஜி.ஆர் ஆரம்பகாலங்களில் செய்த உதவி தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுவாக கொண்டு வந்தது.


இந்திரா, அமிர்த லிங்கம்,
நரசிம்ம ராவ்

எம்.ஜி.ஆர்., பிரபாகரன்
இந்திய அரசு ஒரு உதவியும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்கவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. தமிழ் போராளிக்குழுக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்திய அரசு நினைத்தது. தமிழ் ஈழத்தை ஒரு போதும் இந்திய அரசாங்கம் ஆதரித்தது இல்லை. இதன் காரணமாக இந்திய அரசு அளித்த பயிற்சியில் தமிழ் போராளிக்குழுக்களுக்கு மிகவும் தரம் குறைந்த ஆயுதங்களும், மிதமான பயிற்சிகளும் தான் வழங்கப்பட்டன. இது தமக்கு எந்த வகையிலும் உதவாது என பிரபாகரன் நினைத்தார் (பாலசிங்கம் எழுதிய "War and Peace" என்ற புத்தகம் இதனை விரிவாகவே விளக்குகிறது). அந்த சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆர் வழங்கிய பெரும் நிதி பிரபாகரனுக்கு பெரும் உதவியாக இருந்தது. பல நவீன ஆயுதங்களை வாங்க முடிந்தது. தரமான பயிற்சிகளை தாங்களாகவே புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர்.


வ்விஷயத்தில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் கலைஞரின் நிலைப்பாடு என்ன? கலைஞர் யாரை ஆதரித்தார்? எண்பதுகளின் இறுதியில் அவரது நிலைப்பாடு புலிகள் பக்கம் சாய்வாக இருந்ததா?

முதன் முதலில் 1970களில் தான் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் நுழைந்தது. செல்வநாயகம், தொண்டமான் போன்றோர் அப்போதைய முதல்வர் கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் பெரியாரை சந்தித்தனர்.

கலைஞர் ஒரு குழப்பமான நிலைப்பாட்டினை தான் ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து செய்து வருகிறார். தமிழனத்தலைவர் என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என விரும்பும் கலைஞர் தன்னுடைய அரசியல் சுயநலத்தைச் சார்ந்தே தன்னுடைய நிலைப்பாட்டினை அமைத்து கொண்டிருக்கிறார். 80களில் எம்.ஜி.ஆர் விடுதலைப்


தொண்டைமான்
புலிகளுக்கு நிதி வழங்கிய பொழுது கலைஞர் அதற்கு போட்டியாக டெலோ (TELO) அமைப்புக்கு நிதி வழங்கினார். அங்கும் அரசியல்.

1989ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கலைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு காரணம் சென்னையில் வைத்து பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டது தான் காரணம். மற்றொரு காரணம் கலைஞர் இலங்கையில் தமிழர்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த இந்திய இராணுவத்தை வரவேற்கவில்லை. இது இந்திய தேசியவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

உண்மையில் கலைஞர் எந்தக் காலத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை. ஆனால் அவ்வாறான ஒரு பிம்பம் எழுப்பபட்டது. இந்த அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கலைஞர் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கும் பொழுது அந்த குற்றச்சாட்டினை மறுக்க வேண்டிய நிலைக்கு கலைஞர் தள்ளப்படுகிறார். He is on Defensive. அதுவும் கலைஞர் போன்று அரசியல் அதிகாரங்களை மையப்படுத்தி "மட்டுமே" அரசியல் செய்பவர்களை அவ்வாறான Defensive நிலைக்கு தள்ளுவது என்பது ஒரு சரியான உத்தி. கலைஞருக்கு எதிராக மற்றொரு ஈழவிடுதலை ஆதரவாளர் இருந்திருந்தால் இந்த உத்தி வேலை செய்திருக்காது. ஆனால் ஜெயலலிதா இருந்ததால் கலைஞரை குற்றம்சாட்டிக் கொண்டே அவரை நெருக்கடி நிலையில் வைத்து ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படாமல் செய்து விட்டனர். தற்பொழுது கூட ஜெயலலிதா திடீர் என்று தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதும், பிறகு கலைஞர் களத்தில் இறங்கியதும், நிலைமை வலுத்ததும் ஜெயலலிதா பின்வாங்கி கலைஞரை குற்றம்சாட்டியது, இந்திய தேசியவாதிகள் அலறுவதும், பிறகு கலைஞர் பின்வாங்குவதும்...என்னய்யா அரசியல் இது.

திருச்செல்வம், கலைஞர்

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழப்போராட்டம் இலங்கையில் சிங்களனுக்கும்-தமிழனுக்கும் நடக்கும் யுத்தம். அந்த ஈழப்போராட்டத்தின் மற்றொரு பரிமாணம் தமிழகத்தில் உண்டு. தமிழகத்திலே ஈழப்போராட்டம் என்பது தமிழனுக்கும் - பார்ப்பானுக்கும் நடக்கும் யுத்தமாக நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் ஈழப்போராட்டத்தை வலுவாக எதிர்ப்பதையும் அவர்களின் நிலைப்பாட்டையே இந்திய நடுவண் அரசு முன்வைப்பதும் எதனை குறிக்கிறது ?

வைகோ புலித்தோல் வரித்தவரா அல்லது போர்த்தியவரா? அவரை திமுக தலைவராக ஆக்குவதாக எப்போதாவது புலிகள் உறுதி கொடுத்தனரா?

வைகோவை திமுக தலைவராக மாற்ற விடுதலைப் புலிகள் சதி செய்வதாக இந்திய உளவுத்துறை தகவலை வெளியிட்டது. உளவுத்துறைக்கு தான் திமுக மேல் என்ன கரிசனம் !! இந்திய உளவுத்துறை தமிழ் ஈழப்போராட்டத்தை நசுக்க பல வேலைகளை செய்து வந்தது/வருகிறது. அதில் ஒன்று தான் இந்த வேலை. கருணாநிதிக்கும் - வைகோவுக்கும் பகை உண்டாக்கியவர்களும், கருணாவை உருவாக்கி விடுதலைப் புலிகள்


ராமதாஸ்

வைகோ, பழ. நெடுமாறன்
இயக்கத்தை உடைத்தவர்களும் ஒருவர் தான்.
அவர்கள் இந்திய உளவுத்துறையினர் - ரா (RAW)


பாமக மற்றும் திருமா ஆகியோரின் விடுதலை புலிகள் தொடர்பான அணுகுமுறை என்ன? பொதுவுடமைவாதிகள் என்ன சொல்கிறார்கள்?


பாமக ஆரம்பகாலத்தில் தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரித்தது. ஆனால் தற்பொழுது அதன் நிலையில் சறுக்கல் தெரிகிறது. காங்கிரசை பகைத்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால் அடக்கி வாசிக்கிறார்கள். இது தான் தமிழகத்தின் தலையெழுத்து. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு பெரும் சக்தியாக ஏனோ தொடர்ந்து மதிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் காங்கிரசுக்கு ஓட்டு போடுபவர்களில் பெரும்பகுதியினர் எப்பொழுதோ சுடுகாட்டிற்கு போய் சேர்ந்து விட்டனர். தமிழக அரசியல் கட்சிகள் இதனை உணர்ந்து தங்கள் கூட்டணிகளை அமைக்க வேண்டும். ஆனால் அதனை எவரும் செய்வதில்லை.

ஈழப் பிரச்சனை என்பது தமிழக அரசியல் கட்சிகளின் அரசியல் சுயநலம் சார்ந்த பிரச்சனையாக காலப்போக்கில் மாறிவிடும் என்பதற்கு திமுக முதல் உதாரணம் என்றால் பாமக சமீபத்தைய உதாரணம்.

திருமா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இந்தப் பிரச்சனையில் காட்டி வரும் ஈடுபாடு தான் இந்தப் பிரச்சனையை தமிழகத்தில் அதிகளவில் பேசவைத்துள்ளது என நான் நினைக்கிறேன். டி.ராஜா போன்றோர் இந்தப் பிரச்சனையை இந்தியா அளவில் முன்வைத்துள்ளனர்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு பாரதீய ஜனதா கட்சியாக மாறிவருகிறது என்பது தேசிய அளவில் என்றோ வெளிபட்டு விட்டது என்பதால் அதனைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படவேண்டியதில்லை.

பொதுவாக பல கட்சிகள் முன்வைக்கும் எந்த முயற்சிக்கும் பெரிய பலன் இருக்கப்போவதில்லை என்பது வேறு விடயம். என்னைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சனை தமிழக மக்களின் முன்வைக்கப்பட வேண்டும். 18 வருடங்களாக அது நடக்கவில்லை. மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சனை குறித்து பேசப்படவேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய விருப்பம்.


கருத்துரிமை மீட்பு மாநாட்டில் திருமா

மற்றபடி, ஈழப்போராட்டத்தை புலிகள் தான் வென்றெடுக்க வேண்டும். இங்கு அகதியாக வந்து சேரும் மக்களுக்கும், ஈழத்திலேயே அகதியாக உள்ள மக்களுக்கும் பொருளுதவியும், நிதியுதவியும் செய்வது தவிர தமிழக மக்கள் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்பது தான் யதார்த்தமான சூழ்நிலை/அவலம்.

ஜெயலலிதாவின் பிரதமர் கனவிற்கும் அவரது தனிஈழ எதிர்ப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஜெயலலிதா பிரதமர் ஆவதெல்லாம் கனவில் தான் நடக்கும். அதற்கும் ஈழ எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோ, என்.ராம் போன்றோர் எதற்காக ஈழத்தை எதிர்க்கிறார்களோ, அந்த காரணம் தான் ஜெயலலிதாவிற்கும்.


மூகத்தின் மையத்தில் உள்ள இண்டலக்ச்சுவல்களில் விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் யாவர்?

ண்டலக்ச்சுவல்களா ? யார் அவர்கள் ?
இங்கு ஊடகத்தில் பலம் கொண்டவர்கள் யாரை முன்நிறுத்துகிறார்களோ, அவர்கள் தான் இண்டலக்ச்சுவல்கள். அவர்கள் ஆதரித்தால் என்ன ? எதிர்த்தால் என்ன ?


தெற்காசிய தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஏகமனதாக ஏற்கின்றனரா?


ம். ஏற்கிறார்கள். தெற்காசியா என்னும் பொழுது தமிழகம் மற்றும் இலங்கை மட்டும் தான். இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் கருத்துகணிப்புகள் அதைத் தானே சுட்டி காட்டுகிறது.



[தொடரும்]



அடுத்த பகுதியுடன் தொடர் பேட்டி முற்றுப்பெறும்

9 comments:

Anonymous said...
November 10, 2008 at 11:27 AM  

வைகோவை திமுக தலைவராக மாற்ற விடுதலைப் புலிகள் சதி செய்வதாக இந்திய உளவுத்துறை தகவலை வெளியிட்டது. உளவுத்துறைக்கு தான் திமுக மேல் என்ன கரிசனம் !! இந்திய உளவுத்துறை தமிழ் ஈழப்போராட்டத்தை நசுக்க பல வேலைகளை செய்து வந்தது/வருகிறது. அதில் ஒன்று தான் இந்த வேலை. கருணாநிதிக்கும் - வைகோவுக்கும் பகை உண்டாக்கியவர்களும், கருணாவை உருவாக்கி விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தவர்களும் ஒருவர் தான்.
அவர்கள் இந்திய உளவுத்துறையினர் - ரா (RAW)


Sir, if so what prevented your great leader from throwing that information into the dustbin?
if RAW can create a split just like that in DMK by giving false information it speaks volumes about the weakness of DMK, particularly the leader who is in the helm of affiars. At that time
DMK was not even the rulimg party
in tamil nadu. Anyway thanks
for not claiming that RAW killed
Padmanabha to discredit DMK
govt.

Anonymous said...
November 10, 2008 at 12:39 PM  

//
Sir, if so what prevented your great leader from throwing that information into the dustbin?
//

கருணாநிதி எப்படா வைகோவை காலி பண்றது அப்படின்னு இருந்தார். இது தான் சாக்குன்னு காலி பண்ணிட்டார்.

குடுகுடுப்பை said...
November 10, 2008 at 5:21 PM  

அங்கு நடக்கும் உண்மையான நிலையை வல்லரசுகளுக்கு எப்படி எடுத்து செல்வது.?

வல்லரசுகளின் ஆதரவை ஈழத்தமிழர்கள் பெருவதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

Unknown said...
November 10, 2008 at 10:37 PM  

Verry Sorry Sasi, I expected a neutral article, But it is more of LTTE's side and claiming that Prabaharan is "Thumb licking child".

Could you please tell us why it is not possible to have "States with more power" in Srilanka like what we have in India even if Srilanka Govt agree.?

How you are claiming that it is a fight between Brahmins and others in Tamilnadu? Is GK Vasan a brahmin.?
Are Thangabalu, Sonia, Manmohna singh EVKS they Brahmins.?

Can you tell us on why Rajiv gandhi -Lanka accord can not be implemented even if Srilanka Govt agree.?

Also on why LTTE in the public announced that they are going for accord and then in secret bought weapons esp from MGR.?

Why they did not participtate in the elction conducted as per accord.?

Where all the 12 leaders were travelling in the boat at the time of accord?


Are you denying that all these people are not tamils (May be I could have added one or two sinhalese also in the following list)and LTTE jusk killed them becaue thew were aginst tamils?



A T Duraiyappah SLFP Mayor for Jaffna

A Thiagarajah Ex ACTC MP for Vadokoddai who later joined the UNP

K T Pulendran UNP Organiser for Vavunia

A J Rajasooriar UNP Organiser in Jaffna

Mala Ramachandran UNP MMC for Baticaloa

Gnanachandiram Ex District Judge,
Point Pedro and Government Agent, Mullativu

C E anandarajah Principal, St Jones College, Jaffna

B K Thambipillai President, Citizens Cimmittee

V Dharmalingam Ex TULF MP for Manipay and Father of D
Siddharthan, Leader of PLOTE

Alakasunderam Ex TULF MP for Kopay

P Kirubakaran Primary Court Judge

Kathiramalai Sarvodaya Leader

Vignarajah Assistant Government Agent, Samanturai

Anthonimuttu Government Agent, Baticaloa

S S Jeganathan Assistant Government Agent, Baticaloa

Sinnadurai Assistant Government Agent, Trincomalee

M E Kandasamy Principal, Palugamam Maha Vidyalaya

S Siththamparanathan Principal, Vigneswara Vidyalaya, Trincomalee

S Wijayanadan Distric Secretary, Ceylon Communist Party

Velmurugu Master TULF Organiser and Citizens Committee Member, Kalmunai


Rev. Father Chandra Fernando President, Citizens Committee, Batticaloa

Rajjshankar President, Citizens Committee, Tennamarachchi

S Sambandamoorthy Ex TULF Chairman, District Development Council, Batticaloa

V M Panchalingam Government Agent, Jaffna

K Pulendran Assistant Government Agent, Kopay

A Amirthalingam TULF Leader and National List MP

V Yogeshwaran Ex TULF MP for Jaffna

Dr (Mrs) Rajini Thiranagama Lecturer in Anatomy at the Jaffna University and co-author of the "Broken Palmyrah" (21 Sptember 1989)

Ganeshalingam Ex EPRLF Provincial Minister for North and East

Sam Thambimuttu EPRLF MP

Mrs Thambimuttu Wife of EPRLF MP

V Yogasangari EPRLF MP in Madras

A Thangadurai TULF MP for Trincomalee

Mrs Sarojini Yogeshwaran TULF Mayoress for Jaffna

Pon Sivapalan TULF Mayor of Jaffna
Canagasabai Rajathurai EPDF Member for Jaffna

Veerahaththy Gunaratnam PLOTE member of the Pachchilaipalli

Pradheshiya Sabha (PS) in Jaffna (5 May 1999)

Razick, Supremo of the EPRLF’s armed wing (30 May 1999)

Dr Neelan Thiruchelvam Leader of TULF (29 July 1999)

N. Manickathasan Vice President of PLOTE (Tamil Political party working with the Sri Lankan Government)

Kumar Ponnambalam President of All Ceylon Tamil Congress (5 Jan 2000)

Vadivelu Vijeyaratnam Point Pedro Urban Council Chairman (14 Jan 2000)

Anton Sivalingam EPDP's Municipal Council members in Jaffna (1 March 2000)

Kanapathipillai Navaratnarajah TELO member of Arayampathi, Batticaloa - on 7 June 2000

Rajan Sathiyamoorthy Tamil National Alliance parliamentary candidate (Rajan Sathiyamoorthy was killed by LTTE Tamil Tiger Terrorists on 30 March 2004.)

Hon. Lakshman Kadirgamar (Foreign Minister in Sri Lanka) 12 August 2005 -

Kethishwaran Loganathan (54) Deputy Secretary General of Sri Lanka Peace Secratariat, SCOOP (12 August 2006)

T Maheshwaran Former Minister shot dead on 01 January 2008 (New Years day)

Minister D M Dissanayake LTTE Tamil Tigers Assassinate Minister D M Dissanayake; 12 people Injured; Another Person killed (03 January 2008)

K Sivanesan Jaffna TNA MP K. Sivanesan killed in an accidental explosion of a LTTE Tamil Tiger Claymore mine in the LTTE held area (05 March 2008).

Minister Jeyaraj Fernandopulle LTTE Tamil Tiger Terrorist's Suicide Bomb Attack killing Minister Jeyaraj Fernandopulle and 12 civilians (06 April 2008)


Rev. Father M. X. Karunaratnam, Chairman of the North East Secretariat on Human Rights (NESOHR), a Catholic priest attached to the Jaffna diocese (20 April 2008)

Ms. Maheswary Velautham Attorney –at-law and advisor to the Minister of Social Services and Social Welfare, Douglas Devananda shot dead by the LTTE Tamil Taiger terrorists on 13 May 2008

Anonymous said...
November 11, 2008 at 3:35 AM  

வழக்கம் போல் ஈழப் போராட்டதிற்கெதிராக ஆங்காங்கு வாந்தி எடுக்கும் stanjoe என்னும் அனாமதேயம் கொடுத்த பட்டியல் ஏதோ அரச இணையத்திலிருந்து சுட்டது தெரிகிறது. எம்.பி சிவனேசன், கருணாரட்ணம் அடிகளார்,
பாதர் சந்திரா பெர்னாண்டோ எனப் பாதிப்பேர் அர படைகளால் கொல்லப்பட்டதை ஈழத்தில் வாழ்ந்த அனைவரும் அறிவர்.

Anonymous said...
November 11, 2008 at 9:08 AM  

இந்த ஸ்ரான் ஜீ என்ற நாயின் மலத்தை எடுத்துவிடுங்கள். அந்த நாய்க்கு வேலையில்லை.

குசும்பன் said...
November 11, 2008 at 9:13 AM  

மிகவும் அருமையான கேள்விகள் முதல் பகுதியில் இருந்து முழுவதும் படித்தேன்.

1)புலிகளின் பலம் இப்பொழுது குறைந்து இருக்கிறதா? இல்லையெனில் எப்படி இவ்வளவு தூரம் இரானுவம் முன்னேற முடிந்தது?

2)ஆண்டன் பாலசிங்க, தமிழ்ச்செல்வன் இழப்பு பெரும் இழப்பாக தோன்றுகிறது அவர் இருந்திருந்தால் உலக நாடுகளை தங்கள் பக்கம் திரும்பி பார்க்கும் வகையில் ஊடகத்தை உபயோக்திருப்பார். அவர் இல்லாதது குறையா இல்லையா?

3) நார்வேயும் ஏன் மெளனம் சாதிக்கிறது?

Anonymous said...
November 11, 2008 at 9:23 AM  

ஸ்டேன் ஜோ அவர்கள் கொடுத்துள்ளப் பட்டியலில் விடுபட்ட சில பெயர்களையும் நான் இங்கே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

ப்ரிகேடியர் தமிழ்செல்வன் - அரசியல் அமைப்புச் செயலாளர், தமீழ விடுதலைப்புலிகள்

ப்ரிகேடியர் பால்ராஜ் - முண்ணணி படைத்தளபதி , தமீழ விடுதலைப் புலிகள்
இதையும் சொல்ல வேண்டியது தானே? ஏன் விட்டுட்டாரு ஸ்டேன் ஜோ?

விட்டா இலங்கையில செத்த அத்தனைப் பேருமே விடுதலைப் புலிகள்தான் கொன்னாங்கன்னு சொல்லுவாய்ங்க போல. என்னக் கொடுமை சாமி இது?

நல்லா சொல்லுறீங்கய்யா டீட்டெய்லு.

Anonymous said...
November 11, 2008 at 10:29 AM  

All the three,read totally just appears that this piece is written on behalf of LTTE.
There are no answers for some of the justified questions raised on LTTE's acts..

Very much biased one.



கிடங்கு