Saturday, December 6, 2008

ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி

·

லை உலகம் வெகுவாக அறிந்துள்ள எழுத்தாளர்களுள் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களும் ஒருவர். இலக்கியச் சுவை ததும்பும் கவிதைகளை பதிவுகளில் தொடர்ந்து படைத்துவருபவர். சமீபத்தில் இவரது பதிவுகளில் சிலவற்றை முன்னிறுத்தி தமிழ்மணத்தில் எழுத்து சுதந்தரம் தொடர்பான சர்ச்சை வந்தபோது பெரும்பாலான பதிவர்கள் எழுத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றதும் நாம் அறிந்ததே!


ந்நிலையில் 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவின் எழுபத்தைந்தாவது பதிவு நிறைவடைந்ததை ஒட்டி சில சிறப்புப் பதிவுகள் வெளிவரவிருக்கின்றன. முதலாவதாக ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி தொடர்ந்து அதிஷாவின் சிறுகதை, மதிபாலாவின் அரசியல் கட்டுரை, ராப் எழுதும் சிறப்புப் பதிவு, புதுகை அப்துல்லாவின் கட்டுரை மற்றும் முரளிக்கண்ணன் எழுதும் சினிமா பதிவு ஆகியவற்றை பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


ங்கள் முழுப்பெயர், புனைப்பெயர்(காரணம்), சொந்த ஊர், வாழிடம், படிப்பு, முக்கிய பணி ஏனையவை பற்றி கூறுங்கள்.

பெயர் சுந்தர். புனைபெயர் ஜ்யோவ்ராம் சுந்தர். முதலில் ஜீவராம் சுந்தர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கும் முன் எழுத ஆரம்பித்த சில மாதங்கள் அனாமிகன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன்.

பிரமிளின் பல புனைபெயர்களில் ஒன்றின் ஒரு பகுதி ஜியோவ்ராம். அவரது எழுத்துகளின் மேல் உள்ள ஈர்ப்பினால் அப்பெயர் வைத்துக் கொண்டேன்.

சொந்த ஊர், வாழிடம் எல்லாம் சென்னைதான். படிப்பு இளங்கலை (கடைசி வருடம் முடிக்கவில்லை). 1990லிருந்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணி.

நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? உங்களை எழுதச்செய்தது அல்லது முன்னோடி யார்?


1990லிருந்து எழுதிவருகிறேன். 1998ல் எழுதுவதை நிறுத்திவிட்டேன். மறுபடியும் இப்போது இணையத்தில் 2007 நவம்பரிலிருந்து. வாசிப்பு தீவிரமடைய தானாகவே எழுதத் துவங்குவது பலருக்கு வாடிக்கை. நானும் அப்படியே.


திவுத்துறை மற்றும் அச்சு ஊடகத்துறை போன்றவற்றில் வெளிவந்துள்ள உங்கள் ஆக்கங்களை பற்றி குறிப்பிட முடியுமா?

ச்சு ஊடகத்தில் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளிலேயே எழுதியிருக்கிறேன். பிரதானமாகக் கவிதைகளும், சில சிறுகதைகளும், ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புகளும். கவிதாசரண், மவ்னம், நடுகல், செந்தூரம் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.


ங்கள் ஆரம்பகால எழுத்துக்கள் பற்றி சொல்லுங்கள். கூடவே எவ்வகை எழுத்தை விரும்பினீர்கள், இப்போது எவ்வகை எழுத்தை மேற்கொள்கிறீர்கள் எனவும் விளக்குவீர்களா?

புனைவு சார்ந்த எழுத்துகளே என்னை அதிகமும் (எழுத) வசீகரித்தவை. அவ்வகை எழுத்துகளையே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

'கவித்துவம்' என்று நம்பப்படும் வார்த்தைகளைப் போட்டு அதைக் கவிதையாக நம்புவது என்னளவில் உடன்பாடில்லை.

புனிதம், உன்னதம் என்றில்லாமல் இலக்கியத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கவே விருப்பம். வெற்றிமேல் வெறி ஏற்றாத, அதற்காக தோற்பதற்கான ஆட்டமாகவும் ஆகிவிடாத ஒரு விளையாட்டு - இதைச் செய்வது சுலபமில்லை என்றபோதும்.

ழுத்தாளர் நகுலனைப் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருக்கிறீர்கள். அவரைப்பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

னக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் நகுலன். அவரது எழுத்துகளை ஆராதிப்பவன் என்ற முறையில் நான் எழுதினால் அது மிக மிக ஒருதலைப் பட்சமாகவே இருக்கும். ஏற்கனவே இணையத்தில் அவரைப் பற்றி சில பதிவுகள் இருக்கின்றன.


விஞன் சொல்லாத பொருளையும் வாசகன் கற்பித்துக்கொள்ளும் வகைக் கவிதை தமிழில் சாத்தியமா? உதாரணம் தரமுடியுமா?

நிச்சயம் சாத்தியம். இன்னும் சொல்லப்போனால், எழுதியபிறகு ஆசிரியனின் பங்கு முடிந்துவிடுகிறது.

தமிழ் வலைப்பக்கங்களில் Death of the Author என்பதை எவ்வளவு மலினப் படுத்த முடியுமோ அவ்வளவு மலினப்படுத்திவிட்டார்கள் (ஒருவர் பிறகு எதற்கு பணம் கேட்கிறார்கள், அவர்கள் பெயர்களில் ஏன் வெளியிடுகிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டார்!)Death of the Intentions of the Author எனப் புரிந்து கொள்ளலாம் நாம். ஆசிரியப் பிரதியைவிட வாசகப் பிரதியே முக்கியம். அதற்கென வாசகன் இஷ்டத்திற்கு அர்த்தங்களைச் சொல்லிச் செல்லலாமென்பதில்லை.

ஒரு நல்ல கவிதை என்பது பல அர்த்தங்களைத் தரவல்லது! வலைப்பதிவுகளிலேயே அப்படிப்பட்ட பல கவிதைகளை நீங்கள் பார்க்கலாம். தனிமையைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. கென் எழுதிய கவிதையொன்றைப் பார்ப்போம் (http://www.thiruvilaiyattam.com/2008/11/blog-post.html).

தனித்த இரவு

எவருமற்ற அறையின் கதவுகள்
இருளோடு விரியத்திறக்கிறது
சுருண்டு கிடக்கும் பாய்கள்
தலையணையோடு புணர்ந்து முகிழ்கிறது
முந்தின தினம் தொலைத்த‌
மின்சாரம் எதிர் வீட்டுப்பூனையின்
கண்களில் ஒளிந்து மினுக்கிடுகிறது

ரத்தசோகை நோயென மெழுகின்
வெளிச்சம் அழுது வடிய‌
ஈரம் கசியும் சுவரில்
பேயாடுகிறது உருவம்

தீராத நாளின் சொச்ச
இரவை
விரல் உருவங்கள் படைத்துக்
கழிக்கிறேன்
கிழிந்த நிலா நகர்கிறது மெல்ல
மிக மெல்ல

வாசகனாக இது எனக்குச் சொல்வது என்ன... யோசித்துப் பார்க்கிறேன். இதில் பாய்கள் ஏன் பன்மையிலும் தலையணை ஒருமையிலும் வரவேண்டும். ஒருவேளை இன்னொருவர் இருந்திருந்து அவர் தலையணையை எடுத்துச் சென்றிருக்கலாம். அந்த இன்னொருவர் எதிர்-பாலினமாக இருப்பாரோ (பாய்கள் தலையணையோ புணர்ந்து...) அந்த இன்னொருவர் பிரிந்ததாலேயே தனிமை அதிக வாதையைத் தந்திருக்கலாம். இப்படியாக இதை நான் வாசிக்க வேறொருவர் வேறு மாதிரியான வாசிப்பைத் தருவதற்கான ஸ்பேஸ் இந்தக் கவிதையில் இருக்கிறது!

ஞான பீட விருதை குறிவைத்து ஜெயமோகனின் எழுத்து நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுவதைப் பற்றி?

புனைவிலக்கியம் என்ற வகையில் ஜெயமோகனின் பல சிறுகதைகள், நாவல்களின்மேல் எனக்கு ஈடுபாடுண்டு. அவருடைய ரப்பர், காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. அவரது கதைகளில் சில அரசியல் சிக்கல்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியத்தில் அவருக்கென ஓர் இடம் நிச்சயமுண்டு. (அவரது பல்டிகளையும் கோணங்கித்தனங்களையும் நியாயப் படுத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்!)

அவருக்கு ஞானபீட விருது கிடைத்தால் மகிழ்ச்சியே. ஆனால் அதைக் குறிவைத்து அவர் இயங்குவதாக எனக்குத் தோன்றவில்லை.

லக்கிய பரிச்சயம் இல்லாதவர்க்கு சாரு நிவேதிதாவினுடைய படைப்புகள் மனம் பிறழ்ந்த எழுத்துக்கள் போல்தான் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எழுத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகள் மரை கழண்டவர் போலவே இருப்பது ஏன்?

ருவரின் செயல்பாடுகள் புரியாதபோது, அதைக் காரணமாகக் கொண்டே அவரை மரை கழண்டவர் எனச் சொல்வதெல்லாம் மிகமிக அதிகப்படியான வார்த்தைகள். எதிர்-கலாச்சாரக்கூறுகள் கொண்ட பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அதனாலேயே பொதுப்புத்தி கட்டியமைத்த ஒரு பிம்பம் அது.

மூகக்கேட்டை பற்றி ஒருவர் எழுதினால் அவரை கட்சி எழுத்தாளர் என்றும் சமூக விழுமியங்களை கேள்வி கேட்டால் அவரை கலக எழுத்தாளர் என்றும் எழுத்துலகில் முத்திரை இடுவார்கள் என்பது உண்மையா? கொள்கை எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் இல்லையா?

ல்லை. அப்படி எனக்குத் தோன்றவில்லை.

எந்தக் கொள்கையையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வது நம்பிக்கையாளர்கள் என்ற இடத்தை அடையத்தான் உதவும். முடிந்தவரையில் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துபவனே கலைஞன். கேள்விகள் எதுவும் எழுப்பாத சரணாகதி நிலையில் தன்னை வைத்துக் கொள்வதை எழுத்தாளன் ஏற்கமுடியாதில்லையா?

கொள்கைகளில் தீவிர ஈடுபாடுடையவர்களும் பல இலக்கியங்களைத் தந்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம் தமிழிலேயே பல உதாரணங்கள் உண்டு. (இங்கே கொள்கை என்பதைக் கட்சிக் கொள்கை எனப் புரிந்து கொள்ளவும்)

இன்னும் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்தால் கொள்கை அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்தென ஏதாவது உண்டா என்ன? சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துவதும் ஒரு எழுத்தாளனின் வேலைதான்.

திராவிட இயக்கத்தின் அரசியல் வெற்றி (தமிழ்ச்)சமூகத்தில் அதிகாரத்தை பரவலாக்காமல் வெறும் மடைமாற்றிவிட்டது என்பது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?

திராவிட இயக்கம் என்றில்லை - எல்லாவித அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க அல்ல, மாறாக குவித்துக்கொள்ளவே விரும்பும். அதிகாரம் செயல்படும் விதம் அப்படி!



பார்ப்பனிய கொட்டம் திராவிட எழுச்சியால் அடங்கியது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் பிராமணரல்லாத உயர்சாதியினரின் கொட்டம் யாரால் அடங்கக்கூடும்? இதில் திருமாவின் பங்களிப்பு வருங்காலத்தில் எப்படி இருக்கும்?

டிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியினர் பார்ப்பனர்களாக ஆக முயற்சிக்கின்றனர் என்பது எனது பார்வை. உதாரணத்திற்குப் பெயர் வைப்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இம்மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். போலவே 'சுத்தம்' பற்றிய கருத்தியலும். அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!

திருமாவின் பங்களிப்பு சிலவருடங்களாக ஏமாற்றத்தையே அளிப்பதாயுள்ளது. ஆனால் நடைமுறை அரசியல்சார்ந்து அவர்தான் ஓரளவிற்கு நம்பிக்கையளிக்கிறார் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

டஇந்திய நகரங்களில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு காஷ்மீர் காரணமா அல்லது இந்து அடிப்படைவாதிகள் காரணமா? அல்லது இரண்டுமா?

ட இந்திய நகரங்கள் என்றில்லை. இப்போது மும்பை போன்ற மேற்கிந்தியாவிலும், முன்னர் கோயமத்தூர், பெங்களூர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகள் போன்ற காரணங்களினால் தென்னிந்தியாவும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

இது ஒரு சமூக ஆய்வாளனுக்குரிய கேள்வி. என்னிடம் பதிலில்லை. நீங்கள் குறிப்பிட்டது தவிர வேறு காரணங்களும் இருக்கலாம்.

என்னளவில், யார் காரணம் என்பது முக்கியமில்லை. வன்முறை என்பதை யார் எந்தக் காரணம் கொண்டு முன்வைத்தாலும் எதிர்க்கப்படவேண்டியதே.

மும்பை சம்பவத்திலும் ஈழம் மற்றும் தமிழக மீனவர் விஷயத்திலும் வட இந்திய ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்தை கூறமுடியுமா?

மும்பை வன்முறையை அவர்கள் அழகான தொடர்-காட்சி மயப்படுத்தலின்மூலம் மக்கள் தங்கள் நினைவிலி மனங்களில் இன்னும் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் வேண்டும் என ஆவலாய் கேட்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த கோரத்தில் 48 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பெரிதாகப் பேசக்காணோம். இவர்களுக்கு தாஜ் மகால் / ஓபராய் ஓட்டல்களின் தாக்குதலே பெரிதாகப் போய்விட்டது.

ஈழம், தமிழக மீனவர் குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுகிறார்களா என்ன? ஒளிபரப்ப வேறு விஷயங்கள் கிடைக்காவிட்டால், அதைத் தொட்டுச் செல்கிறார்கள், அவ்வளவே.



[தொடரும்]


அடுத்து பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும்

22 comments:

கோவி.கண்ணன் said...
December 6, 2008 at 10:32 PM  

நண்பர் சுந்தரின் பேட்டி கலக்கல்,

ஆழ்ந்தவாசிப்பும், எழுத்து ஆகியவற்றின் தூய்ப்பு பதிலில் நன்றாக தெரிகிறது.

இருவருக்கும் பாராட்டுகள்.

TBCD said...
December 6, 2008 at 11:09 PM  

சுவையான/சூடான கேள்விகள்...சுவரசியமான பதில்கள்...!!!

பேட்டிக்கு கேள்வி தயார் செய்வதும் கடினமான காரியம் போலத் தான் தெரிகிறது..

தொடர்ந்து, பேட்டிகளை வெளியிட்டு, வலையுலகத்து பத்திர்க்கையாளராக பரிமானமளிக்கும் கந்தசாமிக்கு வாழ்த்துக்கள்...

TBCD said...
December 6, 2008 at 11:11 PM  

இது தொடர்ச்சிக்கு...

வால்பையன் said...
December 6, 2008 at 11:29 PM  

//படிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியினர் பார்ப்பனர்களாக ஆக முயற்சிக்கின்றனர் என்பது எனது பார்வை. உதாரணத்திற்குப் பெயர் வைப்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இம்மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். போலவே 'சுத்தம்' பற்றிய கருத்தியலும். அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்! //


உண்மை உண்மை உண்மை

ஆட்காட்டி said...
December 7, 2008 at 6:44 AM  

!!!!

பழமைபேசி said...
December 7, 2008 at 7:18 AM  

வாழ்த்துகள்!

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 9:56 AM  

////நண்பர் சுந்தரின் பேட்டி கலக்கல்,

ஆழ்ந்தவாசிப்பும், எழுத்து ஆகியவற்றின் தூய்ப்பு பதிலில் நன்றாக தெரிகிறது.

இருவருக்கும் பாராட்டுகள்.////

நன்றி கோவிகண்ணன்.

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 9:58 AM  

////
தொடர்ந்து, பேட்டிகளை வெளியிட்டு, வலையுலகத்து பத்திர்க்கையாளராக பரிமானமளிக்கும் கந்தசாமிக்கு வாழ்த்துக்கள்...////

:-))))

மிக்க நன்றி TBCD

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 9:59 AM  

நன்றி வால்பையன்
நன்றி ஆட்காட்டி
நன்றி பழைமைபேசி

Anonymous said...
December 7, 2008 at 12:17 PM  

நல்லதொரு பதிவு. சுந்தரைப் பற்றி வலைக்குப் புதியவனாகிய எனக்கு நல்ல அறிமுகம். நன்றி.

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 3:43 PM  

///நல்லதொரு பதிவு. சுந்தரைப் பற்றி வலைக்குப் புதியவனாகிய எனக்கு நல்ல அறிமுகம். நன்றி.///

நன்றி வடகரை வேலன்

குடுகுடுப்பை said...
December 7, 2008 at 10:00 PM  

குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! //

இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை வளர்த்ததில் தொலைக்காட்சிகாரர்களின் பங்கு அதிகம்.

anujanya said...
December 8, 2008 at 6:06 AM  

மோகன்,

யோசிக்க வைக்கும் கேள்விகள். சுந்தரைப் பற்றி ஓரளவு தெரிந்ததால், ஆச்சரியப்பட வைக்காத, ஆயினும் பிரமாதமான பதில்கள். படித்த எனக்கு உங்கள் இருவர் மீதான மரியாதை மிகுந்தது என்று நிச்சயம் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:10 AM  

////இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை வளர்த்ததில் தொலைக்காட்சிகாரர்களின் பங்கு அதிகம்.///

ஆம், இவ்விஷயத்தில் இவர்கள் கூட்டு களவாணிகள். :-)))))

நன்றி குடுகுடுப்பை

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:11 AM  

////யோசிக்க வைக்கும் கேள்விகள். சுந்தரைப் பற்றி ஓரளவு தெரிந்ததால், ஆச்சரியப்பட வைக்காத, ஆயினும் பிரமாதமான பதில்கள். படித்த எனக்கு உங்கள் இருவர் மீதான மரியாதை மிகுந்தது என்று நிச்சயம் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா!

Anonymous said...
December 8, 2008 at 11:01 AM  

/////குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை!////

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், கடந்த இரண்டு தலைமுறைகளில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால், தமிழ்ச்செல்வி,தேன்மொழி , சொல்லின் செல்வன், இளஞாயிறு, அறிவழகன், திருமாறன் என்றெல்லாம் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்கள் இன்று நிகில், கிஷோர், ஜ்யோத்ஸ்னா, மிருணாளினி என்று பட்டையைக் கிளப்புகின்றன! கேட்டால், தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!

நன்றி!

சினிமா விரும்பி

Sanjai Gandhi said...
December 9, 2008 at 12:22 AM  

//திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. //

இதை மட்டும் என்னால் எந்த சூழ்நிலையிலுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை சுந்தர்ஜி. திரட்டி என்பது பதிவுகளை திரட்டி அதற்கு சுட்டிகள் தரும் ஒரு சாதாரன வலைத்தள சேவை. சுட்டி தருவதோடு அதன் வேலை முடிந்துவிட வேண்டும். அதை விடுத்து அந்த வலைப்பூவில் என்ன இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கக் கூடாது. திரட்டியில் இணைந்திருக்கிறது என்பதற்காவே ஒரு வலைப்பூவில் இருப்பதற்கு அந்த திரட்டி எந்த வித்ததிலும் பொறுப்பாகாது. அதே போல் அந்த வலைப்பூவில் என்ன இருக்க வேண்டும் என்று சொல்லும் பொறுப்பும் கிடையாது.. பிற மண்டல மொழிகளுக்கான திரட்டிகள் பற்றி தெரியவில்லை. ஆனால் ஆங்கில வலைப்பூக்களை திரட்டும் எந்த திரட்டியுமே இந்த முட்டாள் தனமான கொள்கையுடன் இல்லை.. திரட்டிகள் விதிமுறைகள் அல்லது நிபந்தணையுடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த திரட்டியில் நேரடியாக எழுதும் போது வேண்டுமானால் அவர்கள் என்ன நிபந்தனை/விதிமுறை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வெரும் இணைப்பு கொடுக்க என்ன விதிமுறை வேண்டிகெடக்கு? நாம் என்ன எழுதவேண்டும் என தீர்ன்மானிக்க திரட்டிகளுக்கு என்ன உரிமை இருக்கு?
-----------

பேட்டி அருமை.. தொடர்ந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் மோகன்..


தருமபுரியில் படிச்சிங்களா? எந்த பள்ளியில்?

Sanjai Gandhi said...
December 9, 2008 at 12:24 AM  

//குடுகுடுப்பை said...

குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! //

இதில் ஜோசியக்காரர்களின் பங்கே அதிகம், இவர்களை வளர்த்ததில் தொலைக்காட்சிகாரர்களின் பங்கு அதிகம்.//

”ஜோ”சியக்காரன் ”சோ”சியக்காரன் ஆகும்வரை இப்படி தான் இருக்கும்.. ;))

Sanjai Gandhi said...
December 9, 2008 at 12:26 AM  

//அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்! //

அநியாயத்துக்கு நெசம்..

இப்போல்லாம் பெரும்பாலான பென்கள் வந்துண்டு, போயிண்டு காத்துண்டு என்று தான் பேசுகிறார்கள். எனக்கு இப்படி வார்த்தைகளை கேட்டாலே கொஞ்சம் எரிச்சலா இருக்கு. அதனால் என் வலைப்பூவில் எழுதும் போதுகூட இவற்றை பயன்படுத்தி நக்கல் அடிப்பதுண்டு. :)

Sanjai Gandhi said...
December 9, 2008 at 12:40 AM  

//தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!//

என் பெயர் சஞ்சய், தம்பி ராஜிவ்.. இதாவது கட்சி பாசத்தில் வைத்தது.
இப்போ பாருங்க..
எங்க வீட்டில் இருக்கும் சித்தப்பா, அக்கா, அண்ணன் குழந்தைகள் பெயர்...

தீக்‌ஷா, தீப்ஷிகா, தனீஷ், க்ரித்திக், தீக்‌ஷிதா, ஸ்வேதா, ஸ்ரீநாத் இன்னும் இதே போல பல பெயர்கள். :))

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 2:23 AM  

////தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!///

இது இவர்களுக்கு அறிவிலித்தனமான பாஷன்! தமிழ்நாட்டுக்கு வெளியே புரிய வேண்டுமென்பதெல்லாம் எதிர்வீட்டுகாரனுக்கு பிடித்த உணவைத்தான் என் வீட்டில் சமைப்பேன் என்பதுபோல் உள்ளது!

நன்றி சினிமா விரும்பி!

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 2:36 AM  

///நாம் என்ன எழுதவேண்டும் என தீர்ன்மானிக்க திரட்டிகளுக்கு என்ன உரிமை இருக்கு?///

துளியும் இல்லை!

////பேட்டி அருமை.. தொடர்ந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் மோகன்..//

நன்றி சஞ்சய்,

////இப்போல்லாம் பெரும்பாலான பென்கள் வந்துண்டு, போயிண்டு காத்துண்டு என்று தான் பேசுகிறார்கள். ////

வெற்று அலப்பறை என்றாலே அது பெண்கள் தானே!

///எங்க வீட்டில் இருக்கும் சித்தப்பா, அக்கா, அண்ணன் குழந்தைகள் பெயர்...///

விளக்க முயன்றாலும் 'அவனா நீயி' அப்படீங்கரமாதிரி பார்க்கிறார்கள்!



கிடங்கு