Monday, January 26, 2009

கருணாநிதிக்கு "அல் பச்சீனோ" -வின் அறிவுரை

· 0 comments

கருணாநிதிக்கு "அல் பச்சீனோ" -வின் அறிவுரை.

ஹாலிவுட் நடிகர் அல் பச்சீனோ தொன்னூறுகளில் நடித்த ஒரு திரைப்படத்தில் நமது தற்போதைய தமிழக முதல்வருக்கு அறிவுரை கூறும் வகையில் வசனம் பேசியிருக்கிறார். ஆனால் அந்த அறிவுரை அப்படத்தின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு கூறுவதுபோல் அமைந்துள்ளது. எனினும், திமுக தலைவரை பற்றி நம்மைவிட ஒரு அமெரிக்க நடிகர் இவ்வளவு அழகாக அறிந்து வைத்துள்ளதும், முன்னுனர்ந்துள்ளதும் ஆச்சர்யமளிக்கிறது. அந்த வசனத்தை நம் வசனகர்த்தாவுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் மொழிபெயர்த்துள்ளேன்.

அந்த வசனம் "சென்ட் ஆப் எ உமன்" என்ற படத்தில் வருகிறது. ஒரு பள்ளி மாணவன், ஒரு குறும்புத்தனமான செய்கைக்காக குற்றம் சாட்டப்பட்ட தனது சக மாணவ நண்பர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல கோரப்படுகிறான். பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் தனது நண்பர்களை காட்டி கொடுக்க மறுக்கிறான். முதல்வரின் ஸ்காலர்ஷிப் என்ற ஆசை வார்த்தையும் அவன் மனதை அசைக்க வில்லை. அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கும் முடிவை குழுவுக்கு பரிந்துரைக்கிறார் பள்ளி முதல்வர். அதை எதிர்த்து அந்த மாணவனின் சார்பில் அல் பச்சீனோ பேசும் அந்த புகழ் பெற்ற வசனத்தில் நமது தமிழின தலைவருக்கும் சேர்த்து அறிவுரை கூறுகிறார்.

முதல்வர் - டிராஸ்க்
அல் பச்சீனோ - சிலேய்ட்
மாணவன் - சிம்ஸ் சார்லி.

முதல்வர்: திரு. சிம்ஸ், நீர் ஒரு நாடகக்காரர் மற்றும் பொய்யர்.

அல் பச்சீனோ: ஆனால், துரோகி இல்லை.

முதல்வர்: எக்ஸ் கியூஸ் மீ!

அல் பச்சீனோ: நோ. உங்களுக்கு தயவில்லை. இது ஒரு பீச்சட்டி வாதம்.

முதல்வர்: திரு. சிலேய்ட், உங்கள் வார்த்தையை அளந்து பேசுங்கள், நீங்கள் இருப்பது "பெயர்டு" பள்ளி. உங்கள் ராணுவ முகாம் இல்லை. திரு. சிம்ஸ், நீங்கள் பேச ஒரு இறுதி வாய்ப்பை தருகிறேன்.

அல் பச்சீனோ: திரு. சிம்ஸ் அதை விரும்பவில்லை. அவருக்கு எந்த பட்ட பெயரும் வேண்டாம். "பெயர்டு மாணவன்" -ஆக இருப்பதே போதும்.

என்ன கொடுமை இது? உங்கள் பள்ளியின் லட்சிய வாசகம் என்ன? "மாணவர்களே! உங்கள் நண்பர்களுக்கெல்லாம் தெரிவியுங்கள், உங்கள் உடம்புத் தோலை காப்பாற்றிக்கொள்ளுங்களென்று!, இல்லாவிட்டால் பொசுக்கி விடுவோம்" -இதுதானே நீங்கள் எச்சரிக்க விரும்புவது?

ரகசியம் வெளியாகி மலமாக நாறும்போது, சிலர் ஓட்டமெடுப்பார்கள், சிலர் எதிர்கொள்வார்கள். இங்கே சார்லி நெருப்பை நேருக்கு நேர் சந்திக்கிறான். அங்கே ஜார்ஜ் (மற்றொரு மாணவன்) அவனது அப்பாவின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொள்கிறான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஜார்ஜை பாராட்டுகிறோம். சார்லியை அரற்டுகிறோம்.

முதல்வர்: பேசி முடித்துவிட்டீர்களா சிலேய்ட்?

அல் பச்சீனோ: இல்லை, இப்போதுதான் தொடங்கியுள்ளேன்.
இங்கு யாரெல்லாம் படித்தார்கள் என்று தெரியவில்லை!! வில்லியம் ஹோவார்ட் டார்ஃப்ட், வில்லியம் ஜென்னிங், வில்லியம் டேல்... இன்னும் யாராரோவெல்லாம் படித்திருக்கட்டும். அந்த துடிப்பு இப்போது போய்விட்டது. இங்கே நீங்கள் கட்டிவருவது எலிகள் அண்டிய கப்பலைத்தான். காட்டிகொடுக்கும் பெருச்சாளிகள் பயணிக்கும் கப்பல் தான் அது. இந்த பிள்ளைகளுக்கு மனிதத்தை கற்றுத்தருகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அந்த என்னத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பள்ளி போதிப்பதாக கூறிக்கொள்ளும் அந்த அதிமுக்கிய நீதியையே நீங்கள் கொல்லுகிறீர்கள். என்ன சிறுமை அய்யா இது? என்ன மாதிரியான நாடகத்தை இன்று நடத்துகிறீர்கள்? இந்த நாடகத்தின் ஒரே சோக பாத்திரம், இதோ என்னருகில் அமர்ந்திருக்கிறது. இந்த சிறுவனின் ஆண்மை ஒர்மமானது. சமரசத்தை ஏற்காது. எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இங்கே ஒருவர் சார்லியை விலைக்கு வாங்க முயன்றார், அது யாரென்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சார்லி தன்னை விற்க மறுத்துவிட்டார்.

முதல்வர்: சார், நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்.

அல் பச்சீனோ: வரம்பு மீறலா? வரம்பு மீறலென்றால் என்ன வென்று உங்களுக்கு தெரியவில்லை மிஸ்டர் டிராஸ்க், அது என்னவென்று என்னால் காட்டமுடியும். ஆனால் எனக்கோ வயதாகிவிட்டது. ஓய்ந்துவிட்டேன். நான் இப்போது குருடன் வேறு. நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போதும் இருந்திருந்தால் இந்நேரம் இவ்விடத்தில் அனல் பறந்திருக்கும். இது வரம்பு மீறலாம்! யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர் தெரியுமா? எனக்கும் ஒருகாலத்தில் பார்வை இருந்தது. நானும் பார்த்திருக்கிறேன். இந்த சிறுவர்களைப் போல, இதைவிடவும் சிறிய பிள்ளைகள் சதைகள் தொங்க, தோள்கள் சாய்ந்து, கால்கள் ஓய்ந்து தண்டிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் உறுதி முடமாகிபோகவில்லை.

இந்த அற்புதமான ராணுவ சிறுவனின் வாலை சுருட்டி அவனது "ஆரிகன்" வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இல்லை, உண்மையில் இவனது ஆன்மாவை சிதைக்கிறீர்கள்.

முதல்வர்: நிறுத்துங்கள் திரு. சிலேய்ட்?

அல் பச்சீனோ: நான் இன்னும் முடிக்கவில்லை. நான் அரங்கில் நுழையும்போது, என் காதில் விழுந்தது, "தலைமைத்துவத்தின் தொட்டில்". எல்லாம் சரி, ஆனால் தொட்டிலின் மைய நான் முறிந்தால் தொட்டில் வீழும். இங்கே விழுந்தே விட்டது. மனிதர்களை வார்ப்பவர்களே, தலைவர்களை உருவாக்குபவர்களே! எந்த மாதிரியான தலைவர்களை இங்கே உருவாக்குகிறீர்கள் என சிந்தியுங்கள்.

இன்று காட்டிகொடுக்க மறுக்கும் சார்லியின் மவுனம் சரியா தவறா என்று எனக்கு தெரியாது. நான் நீதிமான் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரியும். தன் சுயநலத்திற்காக இவன் யாரையும் விற்க மாட்டான். அதற்குப் பெயர்தான் ஓர்மம். அதுதான் வீரம். அதுதான் தலைவர்களை உருவாக்கும்.


எனது வாழ்க்கையில் மிக குழப்பமான நெருக்கடிகளை சந்தித்துளேன். அப்போதெல்லாம் நான் தேர்ந்தெடுக்கவேண்டிய பாதை எதுவென்று எனக்கு நன்றாகவே தெரியும். சந்தேகமில்லாமில்லாமல் தெரியும். ஆனால் நான் அப்பாதையை தேர்ந்தெடுக்க வில்லை. ஏன் தெரியுமா? அப்பாதை மிகக் கடினமானது. இப்போது சார்லியும் நெருக்கடியில்தான் இருக்கிறான். இவனும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளான். மிகச்சரியான பாதை. கொள்கைகளால் ஆன பாதை. நடத்தையான பாதை. அவனது பயணம் தொடர வேண்டும். இவனது எதிகாலம் உங்கள் கையில் உள்ளது. விலைமதிப்பற்ற எதிர்காலம் அது. நம்புங்கள்!. அதை அழித்துவிடாதீர்கள். அதை காப்பாற்றுங்கள்! ஆதரவளியுங்கள்! ஒருநாள் உங்களுக்கு அது பெருமை சேர்க்கும். நான் உறுதியாகச் சொல்கிறேன்.


இந்த உரைக்குப் பின், பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில், நல்ல முடிவை ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிக்கிறது.


இது முழுக்கவும் தற்போது வாளாவிருக்கும் தமிழக முதல்வருக்கு அல் பச்சீனோ தரும் அறிவுரையாக கொள்ள முடியும்.

Read More......

Saturday, January 24, 2009

எங்கய்யா போனார் டகுல் பாட்சா உடன் பிறப்பு!!!

· 11 comments

எவராவது திமுக -வை விமர்சனம் செய்தால் கரைவேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு வரும் அண்ணன் "உடன்பிறப்பு", திமுக அனுதாபிகள் விமர்சனம் செய்தால் அவர்களை எதிர்(ரி)நிலையில் வைத்து ரவுண்டு கட்டுவது வழக்கம். ஈழப்பிரச்சினையில் கலைஞரின் டகுல்பாட்சா -வால் வலையுலகின் பல அரசியல் நிலைப்பாடுகள் யூ -டார்ன் அடித்துவிட்ட நிலையில் நமது உடன்பிறப்பு ஒரு வழக்கமான "அய்யகோ!!!" அறிக்கையுடன் வந்து உடனடியாக ஆஜராகும் படி "தெர்ர்ர்ர்ராவிட சமூகம்" கேட்டுக்கொள்கிறது.

ஈழம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடுகளில் ரொம்ப ஃபேமஸான ஒன்று "தமிழர் வேறு, புலிகள் வேறு" -என்பதாகும். இரண்டும் ஒன்றுதான் என்று கூறும் தரப்பினர் மட்டும்தான் இன்று இன்னல் படும் தமிழர் நிலை குறித்து கவலை கொள்கின்றனர். "வேறு-வேறு" -என்ற கொள்கைக்கார அண்ணாத்தைகள் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் அல்லது டமாஷ் அறிக்கை வெளியிட்டு தங்கள் டவுசரை அவுத்துக்கொள்கிறார்கள். தமிழன் செத்தால் அவர்கள் புலிகள் செத்த கணக்கில் சேர்க்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்டுகள் மற்றும் திமுக போன்றோருக்கு ஈழத்தில் விழும் ஒவ்வொரு பிணத்திலும் தமிழர்-புலிகள் வித்தியாசம் தெரிவதில்லை. அவர்களை பொறுத்த வரை எல்லாம் புலிகளே!. உயிரோடு இருக்கும் போது இவர்களுக்கு அப்பாவியாக தோன்றும் தமிழன், இறக்கும்போது புலியாக தோன்றுவது விந்தைதான்.


சமீபத்தில் உருவாகி, குறுகிய காலத்திலேயே சூப்பர் ஹிட்டாகியுள்ள ஒரு நிலைப்பாடு "ராஜீவ் கொலைக்கு முன் - அதற்குப் பின்" என்ற நிலைப்பாடாகும். திமுகவின் பாசறையில் கருப்பெற்று உடன்பிறப்புகளால் மார்க்கெட் செய்யப்பட்டு வரும் இந்த சரக்கு சற்று மஜாவான சரக்கு. ஈழம் தொடர்பில் முன்பு துடிப்பாக இருந்துவிட்டு, பிறகு இத்தனை நாளாக வாளாவிருந்த உணர்வாளர்கள் எல்லாம் இந்த சரக்கை அடித்துவிட்டுத்தான் தொடர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த சரக்கை காய்ச்சும் திமுக -வோ எப்போதும் கொட்டாவி தான் விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது யாராவது உண்ணாவிரதம், போராட்டம் என்று பட்டக்ஸில் ஒரு எத்து விடும்போது தலையை சிலுப்பிக் கொண்டு எழுந்துவிடும். உடனே, ஒரு "அய்யகோ" அறிக்கையோ, அல்லது "இறுதி எச்சரிக்கையோ" வெளியிட்டு விட்டு இழுத்து போர்த்திக் கொள்ளும்.

இவைதவிர இன்னொரு நிலைப்பாடு ஒன்றும் உள்ளது. அது ஒரு அறிவிக்கப்படாத, ஆனால் உறுதியான நிலைப்பாடாகும். "கலைஞரின் உயிருக்கு புலிகளால் ஆபத்து என்ற ரா -வின் அறிக்கைக்கு முன் - அதற்குப் பின்" என்பதுதான் அது. இதில் நம்பகத்தன்மை இருக்கிறதோ இல்லையோ, இதை நம்புவதால் திமுக -விற்கு பலன் இருந்தது. இப்போதும் இருக்கிறது. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதுவதன் மூலம் அந்த அறிக்கையை நான் நம்பவில்லை என்று கலைஞர் பம்மாத்து செய்தாலும் உண்மையில் அவர் நம்புகிறார் என்றே தோன்றுகிறது. எந்த அளவுக்கு நம்புகிறார் என்றால் போரில் சாகும் ஈழத்தமிழனுக்கும் வீரமரணம் எய்தும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனம் மரத்துப் போகும் அளவுக்கு நம்புகிறார்.


புலி ஆதரவாளர்கள் எல்லாம் புலிகளுக்காக கவலைபடுவதுபோல் தெரியவில்லை. எந்த இக்கட்டான நிலையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று புலிகளுக்கு தெரியும். அதுபற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை. அப்பாவிகள் பற்றிய கவலையுடன் சேர்ந்து இப்போது "தமிழினத் தொலைவர்" பற்றிய கவலைதான் மிகவும் வாட்டுகிறது. "எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்" -என்ற வசனம் நியாபகத்திற்கு வருகிறதா?!!?!


நெருக்கடி சமயங்களில் அவ்வப்போது வரும் கலைஞரின் அறிக்கைகள் எல்லாம் சுப்பிரமணியன் சாமியின் அறிக்கைகள் போல டமாஷ் ஆகிவிட்டதால், மிக சீரியஸாக பதிவெழுதும் உடன்பிறப்பின் டண்டனக்கா அறிக்கை வந்தால் கும்மியடித்து பொழுதை போக்க வசதியாக இருக்கும். அவர்கிட்ட யாராவது சொல்லுங்கப்பு!!!!

Read More......

Wednesday, January 21, 2009

அரசுக்கெதிரான ஆரிய சதி - ஒரு அலசல்.

· 11 comments

மிழீழம் தொடர்பாக தமிழக அரசியலில் சில தினங்களுக்கொரு முறை ஏதேனும் ஒரு குறிப்பிடத்தகுந்த சம்பவமோ அல்லது முக்கிய அறிக்கையோ வந்தவண்ணம் இருந்துவருகின்றது. திருமாவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசுக்கெதிராக ஒரு ஆரிய சதி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார். அந்த சதி என்னவென்று அவர் தெளிவாக சொல்லாத நிலையிலும், அவர் எதை சொல்லியிருக்கக்கூடும் என்பதை பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். மேலும், அது ஆரியசதிக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒன்றா என்றும் நாம் யோசிக்க முடியும். இது தவிர, பாமக தலைவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தன்னை சதிகாரன் என்று கூறுவது தவறு என விளக்கமளித்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற பாஜக தமிழக கிளையின் பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என ஒரு தலைவர் பேசினார் என்று பத்திரிகைகளில் செய்திவந்தது. அது தொடர்பாக தீர்மானம் எதுவும் அவர்கள் போடாத நிலையிலும், தமிழீழ தமிழர்களுக்கு ஆதரவான அறிக்கைகளை அதன் பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் வெளியிட்டிருந்தார். இதுபோன்று ஜெயலலிதாவும் சில மாதங்களுக்குமுன் ஒரு அறிக்கையைவிட்டு பரபரப்பு கிளப்பினார். அந்த அறிக்கை அதற்கு முந்தய அவரது காமெடி அறிக்கைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல எனினும் அது சிலருக்கு கிலியை ஏபடுத்தியது உண்மை. மேலும் அது ஒரு சதி நிறைந்த பித்தலாட்டம் என்பதும் உண்மை. இப்போது அதைபோன்றே ஒரு அறிக்கை பாஜக தரப்பில் இருந்து வருவது சிறிதும் நம்பகத்தன்மையற்றதே ஆகும்.

ந்த அறிக்கைகளை தொடர்ந்து, பார்ப்பன ஊடகங்களும் இன்ன பிறரும் தமிழீழத் தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து காங்கிரசின் துரோகம் பற்றியும் திமுக அதற்கு துணைபோவது பற்றியும் உடைந்த குரலில் விசனப்படுகின்றன. இவ்வாறு செய்வதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைவதுடன் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்று மாநில ஆட்சியையும் இழக்கச்செய்ய முடியும் என கருதுகின்றன. இதைத்தான் ஆரிய சதி என்றும் அது தமிழர் நலன் காக்கும் கழக ஆட்சிக்கெதிரான சூழ்ச்சி என்றும் திமுக தலைவர் குறிப்பிடுகிறார். உண்மையில் இது ஆரிய சதிதானா?

முதலில் ஆரிய சதி என்பது என்ன? தமிழர் நலன் தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகளை அனைத்து வழிகளிலும் ஆரியர்கள் குழுவாக இணைந்து முறியடிக்க முயல்வதை ஆரியசதி என்று ஒரு விளக்கம் தரமுடியும். ஆனால் இப்போது எந்த தமிழர் நலன் தொடர்பான முயற்சியை பார்ப்பனர்கள் முறியடிக்க முயன்றார்கள் என்று புரியவில்லை. இப்போது தமிழக அரசு தமிழர் நலன் தொடர்பாக கிட்டத்தட்ட எதுவுமே செய்யவில்லை. வழக்கமான வளர்ச்சித் திட்டங்களும், வாக்காளர்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளும் இவ்வரசு மட்டும் செய்யக்கூடியவை அல்ல. எந்த அரசும் செய்தாக வேண்டிய ஒன்று. தமிழர் நலன் நாடும் கட்சி மட்டுமல்ல, வாக்கு வங்கியை தக்கவைக்க முயற்சிக்கும் ஏனைய கட்சிகளும் தமது ஆட்சிகளில் இதை செய்வார்கள். ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது இன்னொருவர் சில சாமர்த்திய காய்நகர்த்தல்கள் மூலமோ, (உண்மை, பொய் என்ற இருவகை) பிரச்சாரங்கள் மூலமோ ஆட்சிக்கு வர முயல்வார்கள். அது தானே அரசியல்! அத்தகைய ஒரு அரசியல் விளையாட்டுதான் தற்போது ஒரு தரப்பு செய்கிறது. தமிழக அரசு ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு ஆட்டத்தை ஆடிவருகிறது. இதில் எங்கே ஆரிய சதி வருகிறது? சதியில் ஆரியர்கள் இருந்தாலே அது ஆரிய சதியாகி விடுமா? தமிழர்நலன் தொடர்பாக அரசு என்ன முயற்சி செய்தது? எதை ஆரியர்கள் தடுத்தார்கள்? சேது சமுத்திரத் திட்ட எதிர்ப்பில் ஒரு தெளிவான ஆரிய சதி இருந்தது. அம்மாதிரியான சமயங்களிலெல்லாம் தமிழர் அனைவரும் திமுக -வின் பின்னால் அணிவகுத்து நின்றுள்ளனர். அது சேது சனுத்திர திட்டமாக இருந்தாலும் சரி, ஒக்கேனக்கல் திட்டமாக இருந்தாலும் சரி. தமிழக அரசியல் தலைவர்கள் முதலாக, திரை நட்சத்திரங்கள் ஈறாக, வலைப்பதிவர்கள் வரை அனைவரும் சமரசமின்றி தமிழக அரசை ஆதரித்தனர். இப்போது பதவிக்காக நடைபெறும் இருவேறு தரப்பினரின் சராசரி அரசியல் சண்டைக்கு ஆரிய சதி என்ற முலாம் எதற்காக திமுக பூசுகிறது? யாரிடம் ஆதரவு வேண்டி இத்தகைய அறிக்கையை கலைஞர் வெளியிடுகிறார்?

னவே, திமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேறொரு வழியை ஏற்பாடு செய்து கொள்வதுதான் நல்லது. காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடந்த வருடங்களில் செய்ததை போல. பலமுறை இருகட்சியினரும் விட்டுகொடுத்து தத்தமது ஆட்சிகளை காப்பாற்றி வந்துள்ளனர். இதில் சாமார்த்தியமான கட்சி என்று காங்கிரசைத்தான் சொல்ல வேண்டும். சில ஒப்புக்கு சப்பாணி சமரசங்களை வழங்கி, பிரதி பலனாக நல்ல 'டீல்' -களை திமுக விடம் இருந்து பெற்றுள்ளது. கப்பல் போக்குவரத்து துறையையும், தகவல் தொழில்நுட்ப துறையையும் விட்டுத்தந்ததில் காங்கிரஸ் இழந்தது ஒன்றுமில்லை (சந்திர சேகர ராவ் என்ற வலுவற்ற கூட்டாளியை இழந்ததன் காரணம் இதுவல்ல). தமிழ் - செம்மொழி அறிவிப்பு என்பது ஒரு பெரிய டீல் என்று அன்று ஏமாற்றப்பட்டது. (செம்மொழிக்கான தகுதியென ஆயிரம் வருடங்களை நிர்ணயித்தபோதே அந்த டீல் கான்கிரசுக்கானது என்று அறிய முடிந்தது). அப்படியென்றால் திமுக ஏமாளி என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. அது சுயநலனுக்காக காங்கிரசிடம் இழந்த டீல்களை தமிழர் நலனுக்கான நல்லெண்ண நடவடிக்கை என மக்களிடம் போனி செய்வதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றே வந்துள்ளது. சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது வட இந்திய வாக்காளர்களை இழந்திருக்கும் என நம்புகிறது (அது உண்மையில்லை என்பது என் கருத்து). எனவே திமுக -வை சரிகட்டி அத்திட்டத்தை முடக்குவது காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றி தரும் டீல். ஒக்கேனக்கல் விவகாரமும் அத்தகைய ஒன்றுதான். இத்திட்டம் முடங்கும்போதும் தமிழர் நலன் தொடர்பான அறிக்கை ஒன்று தமிழின தலைவரிடம் இருந்து வந்தது. அத்தகைய அறிக்கைதான் இப்போது திமுக தலைவர் விடும் ஆரிய சதி என்ற அறிக்கை.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈழப்பிரச்சினையில் இப்போது என்ன நடக்கிறதோ அதுதான் நடக்கும். திமுக ஆட்சியில் இல்லாவிட்டால் போராட்டமாவது வலுப்பெறும். இப்போது அதையும் அவ்வப்போது கிள்ளி எறிந்து விடுகிறார் கலைஞர். இதற்கு தமிழர்கள் ஆர்ப்பரித்து ஆதரவு தரவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆரியம், பார்ப்பனியம், அவாள், சதி, சூழ்ச்சி என்ற சொல்லாடல்கள் மூலம் தமிழனின் ரத்தத்தை சூடேற்றப் பார்க்கிறார். அவரது பிரச்சினையை தமிழனின் பிரச்சினையாக்க முயல்கிறார்.

ப்பீட்டளவில் திமுகவின் ஆட்சி நிர்வாகம் நன்றாக உள்ளதை நாம் அறிவோம். அதற்காக வேண்டுமானால் கலைஞரின் தற்போதைய நெருக்கடியை எண்ணி நாம் பரிதாபப் படலாம். ஆவேசத்துடன் அதரவு தந்து அலகு குத்திக்கொள்ள முடியாது. முடிந்தால் சில அறிவுரைகளை கூறலாம். ஆனால் அவ்வரிவுரைகள் கூட அவருக்கு உவப்பளிக்குமா என்று தெரியாது. இருந்தாலும் சொல்லிவைப்போம். 1) காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தரலாம். 2) அல்லது, வைகோ, காடுவெட்டி குருவை நேரில் சந்தித்து சமாதானப் படுத்தலாம். 3) திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யலாம் (ஆனால், இதை செய்வதும் திருமாவை திமுக தலைவராக்குவதும் ஒன்றே!). இன்னும் பல யோசனைகளை உள்ளன. ஆனால் அவற்றை சொன்னால் நான் சீரியஸாக(:-))) சொன்ன முந்தய மூன்று அறிவுரைகளும் காமேடியாகிவிடும் வாய்ப்புள்ளதால் தவிர்கிறேன்.

Read More......

Friday, January 16, 2009

தமிழா!... வளவா!... எம் தலைவா!

· 36 comments

மிழினத்திற்கு தலைவன் இல்லையடா, இனி தலைமகன் தான் உண்டு. நம் சகம் இனி அவன்தான். சந்தர்ப்பம் தகவமைக்க முடியாதவன் அவன். தமிழ்ப்பார் ஆளத் தகுந்தவன் அவனே!

ண்ணாவிரதம் ஒரு பூச்சாண்டி ஆயுதம். அது ஒரு ஊரை ஏமாற்றும் வேலை. வலிவாயுதம் என்று பித்தலாட்ட பிரச்சாரம் செய்துவந்தோரை நோக்கியே அதை எய்த போதுதான் அது ஒரு டம்மி வெடி என்று உலகம் அறிந்தது. பிறகு, திலீபனும் செத்துப் போனான். நம் ஆயுதம் அதுவல்ல.

ம் ஆயுதம் வேறொரு இடத்தில் இருக்கிறது. வேறொரு கையில் இருக்கிறது. அவ்வாயுதத்திற்கு அடிபணியாதவன் இந்தத் தமிழவனியில் எவனும் இல்லை. தவறான இடத்திலிருந்து அதை பறி. அதைக்கொண்டு நேரடியாக தமிழனை கைப்பற்று.

க்களாட்சியின் எஜமானர்களாயிற்றே நாம். ஆணையிட்டோம். பணிந்து கேட்டோம். கெஞ்சிப்பார்த்தோம். காரியும் உமிழ்ந்தாயிற்று. இதிலெல்லாம் அரங்கேறாத அம்பலமா நம் உண்ணா நிலை அரங்கேற்றும். நீ செத்தால் அவனுக்கென்ன! இது நமக்கு வேண்டாத வேலை.


ழத்தை காக்க முடியாது...
ஏண்டா?...
அவன் வேறு நாடு...
சரி, சிங்களனுக்கு உதவாதே!...
அதுவும் முடியாது!...
அது ஏண்டா?
நாம் நிறுத்தினாலும் சீனாக்காரன் நிறுத்தமாட்டான்...
சரி நீயாவது நிறுத்து...
அதெல்லாம் முடியவே முடியாது...
இது ஏண்டா முடியாது?
அவன் சிங்களனை நெருங்கினால் இந்தியாவையும் நெருங்குவான்!...
அட பயந்தான்கொள்ளி கருமாந்திரமே!

தெற்காசிய வல்லரசு தன் கூட்டாளியை பிடிக்கும் தந்திரத்தை பார்த்தாயா? இவனா போரை நிறுத்தப் போகிறான். ஜனநாயகம் தோற்ற இடம் ஈழமாக மட்டும் இருக்கட்டும். அதை இங்கேயும் தோற்கடிக்காதே! ஜனநாயக மாயை மீது வெளிச்சத்தை தெளிக்காதே! அதை தெளிவித்தால் இங்கு பலருக்கு தோள் துண்டு இருக்காது. ஏற்கனவே வேட்டியின்றிதான் ஆசனம் அமர்கின்றனர். இன்னும், பலர் அம்மணமாக அமர்வது வேறு விஷயம்.

மிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!

Read More......