Wednesday, January 21, 2009

அரசுக்கெதிரான ஆரிய சதி - ஒரு அலசல்.

·

மிழீழம் தொடர்பாக தமிழக அரசியலில் சில தினங்களுக்கொரு முறை ஏதேனும் ஒரு குறிப்பிடத்தகுந்த சம்பவமோ அல்லது முக்கிய அறிக்கையோ வந்தவண்ணம் இருந்துவருகின்றது. திருமாவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசுக்கெதிராக ஒரு ஆரிய சதி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார். அந்த சதி என்னவென்று அவர் தெளிவாக சொல்லாத நிலையிலும், அவர் எதை சொல்லியிருக்கக்கூடும் என்பதை பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். மேலும், அது ஆரியசதிக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒன்றா என்றும் நாம் யோசிக்க முடியும். இது தவிர, பாமக தலைவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தன்னை சதிகாரன் என்று கூறுவது தவறு என விளக்கமளித்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற பாஜக தமிழக கிளையின் பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என ஒரு தலைவர் பேசினார் என்று பத்திரிகைகளில் செய்திவந்தது. அது தொடர்பாக தீர்மானம் எதுவும் அவர்கள் போடாத நிலையிலும், தமிழீழ தமிழர்களுக்கு ஆதரவான அறிக்கைகளை அதன் பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் வெளியிட்டிருந்தார். இதுபோன்று ஜெயலலிதாவும் சில மாதங்களுக்குமுன் ஒரு அறிக்கையைவிட்டு பரபரப்பு கிளப்பினார். அந்த அறிக்கை அதற்கு முந்தய அவரது காமெடி அறிக்கைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல எனினும் அது சிலருக்கு கிலியை ஏபடுத்தியது உண்மை. மேலும் அது ஒரு சதி நிறைந்த பித்தலாட்டம் என்பதும் உண்மை. இப்போது அதைபோன்றே ஒரு அறிக்கை பாஜக தரப்பில் இருந்து வருவது சிறிதும் நம்பகத்தன்மையற்றதே ஆகும்.

ந்த அறிக்கைகளை தொடர்ந்து, பார்ப்பன ஊடகங்களும் இன்ன பிறரும் தமிழீழத் தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து காங்கிரசின் துரோகம் பற்றியும் திமுக அதற்கு துணைபோவது பற்றியும் உடைந்த குரலில் விசனப்படுகின்றன. இவ்வாறு செய்வதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைவதுடன் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்று மாநில ஆட்சியையும் இழக்கச்செய்ய முடியும் என கருதுகின்றன. இதைத்தான் ஆரிய சதி என்றும் அது தமிழர் நலன் காக்கும் கழக ஆட்சிக்கெதிரான சூழ்ச்சி என்றும் திமுக தலைவர் குறிப்பிடுகிறார். உண்மையில் இது ஆரிய சதிதானா?

முதலில் ஆரிய சதி என்பது என்ன? தமிழர் நலன் தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகளை அனைத்து வழிகளிலும் ஆரியர்கள் குழுவாக இணைந்து முறியடிக்க முயல்வதை ஆரியசதி என்று ஒரு விளக்கம் தரமுடியும். ஆனால் இப்போது எந்த தமிழர் நலன் தொடர்பான முயற்சியை பார்ப்பனர்கள் முறியடிக்க முயன்றார்கள் என்று புரியவில்லை. இப்போது தமிழக அரசு தமிழர் நலன் தொடர்பாக கிட்டத்தட்ட எதுவுமே செய்யவில்லை. வழக்கமான வளர்ச்சித் திட்டங்களும், வாக்காளர்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளும் இவ்வரசு மட்டும் செய்யக்கூடியவை அல்ல. எந்த அரசும் செய்தாக வேண்டிய ஒன்று. தமிழர் நலன் நாடும் கட்சி மட்டுமல்ல, வாக்கு வங்கியை தக்கவைக்க முயற்சிக்கும் ஏனைய கட்சிகளும் தமது ஆட்சிகளில் இதை செய்வார்கள். ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது இன்னொருவர் சில சாமர்த்திய காய்நகர்த்தல்கள் மூலமோ, (உண்மை, பொய் என்ற இருவகை) பிரச்சாரங்கள் மூலமோ ஆட்சிக்கு வர முயல்வார்கள். அது தானே அரசியல்! அத்தகைய ஒரு அரசியல் விளையாட்டுதான் தற்போது ஒரு தரப்பு செய்கிறது. தமிழக அரசு ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு ஆட்டத்தை ஆடிவருகிறது. இதில் எங்கே ஆரிய சதி வருகிறது? சதியில் ஆரியர்கள் இருந்தாலே அது ஆரிய சதியாகி விடுமா? தமிழர்நலன் தொடர்பாக அரசு என்ன முயற்சி செய்தது? எதை ஆரியர்கள் தடுத்தார்கள்? சேது சமுத்திரத் திட்ட எதிர்ப்பில் ஒரு தெளிவான ஆரிய சதி இருந்தது. அம்மாதிரியான சமயங்களிலெல்லாம் தமிழர் அனைவரும் திமுக -வின் பின்னால் அணிவகுத்து நின்றுள்ளனர். அது சேது சனுத்திர திட்டமாக இருந்தாலும் சரி, ஒக்கேனக்கல் திட்டமாக இருந்தாலும் சரி. தமிழக அரசியல் தலைவர்கள் முதலாக, திரை நட்சத்திரங்கள் ஈறாக, வலைப்பதிவர்கள் வரை அனைவரும் சமரசமின்றி தமிழக அரசை ஆதரித்தனர். இப்போது பதவிக்காக நடைபெறும் இருவேறு தரப்பினரின் சராசரி அரசியல் சண்டைக்கு ஆரிய சதி என்ற முலாம் எதற்காக திமுக பூசுகிறது? யாரிடம் ஆதரவு வேண்டி இத்தகைய அறிக்கையை கலைஞர் வெளியிடுகிறார்?

னவே, திமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேறொரு வழியை ஏற்பாடு செய்து கொள்வதுதான் நல்லது. காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடந்த வருடங்களில் செய்ததை போல. பலமுறை இருகட்சியினரும் விட்டுகொடுத்து தத்தமது ஆட்சிகளை காப்பாற்றி வந்துள்ளனர். இதில் சாமார்த்தியமான கட்சி என்று காங்கிரசைத்தான் சொல்ல வேண்டும். சில ஒப்புக்கு சப்பாணி சமரசங்களை வழங்கி, பிரதி பலனாக நல்ல 'டீல்' -களை திமுக விடம் இருந்து பெற்றுள்ளது. கப்பல் போக்குவரத்து துறையையும், தகவல் தொழில்நுட்ப துறையையும் விட்டுத்தந்ததில் காங்கிரஸ் இழந்தது ஒன்றுமில்லை (சந்திர சேகர ராவ் என்ற வலுவற்ற கூட்டாளியை இழந்ததன் காரணம் இதுவல்ல). தமிழ் - செம்மொழி அறிவிப்பு என்பது ஒரு பெரிய டீல் என்று அன்று ஏமாற்றப்பட்டது. (செம்மொழிக்கான தகுதியென ஆயிரம் வருடங்களை நிர்ணயித்தபோதே அந்த டீல் கான்கிரசுக்கானது என்று அறிய முடிந்தது). அப்படியென்றால் திமுக ஏமாளி என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. அது சுயநலனுக்காக காங்கிரசிடம் இழந்த டீல்களை தமிழர் நலனுக்கான நல்லெண்ண நடவடிக்கை என மக்களிடம் போனி செய்வதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றே வந்துள்ளது. சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது வட இந்திய வாக்காளர்களை இழந்திருக்கும் என நம்புகிறது (அது உண்மையில்லை என்பது என் கருத்து). எனவே திமுக -வை சரிகட்டி அத்திட்டத்தை முடக்குவது காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றி தரும் டீல். ஒக்கேனக்கல் விவகாரமும் அத்தகைய ஒன்றுதான். இத்திட்டம் முடங்கும்போதும் தமிழர் நலன் தொடர்பான அறிக்கை ஒன்று தமிழின தலைவரிடம் இருந்து வந்தது. அத்தகைய அறிக்கைதான் இப்போது திமுக தலைவர் விடும் ஆரிய சதி என்ற அறிக்கை.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈழப்பிரச்சினையில் இப்போது என்ன நடக்கிறதோ அதுதான் நடக்கும். திமுக ஆட்சியில் இல்லாவிட்டால் போராட்டமாவது வலுப்பெறும். இப்போது அதையும் அவ்வப்போது கிள்ளி எறிந்து விடுகிறார் கலைஞர். இதற்கு தமிழர்கள் ஆர்ப்பரித்து ஆதரவு தரவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆரியம், பார்ப்பனியம், அவாள், சதி, சூழ்ச்சி என்ற சொல்லாடல்கள் மூலம் தமிழனின் ரத்தத்தை சூடேற்றப் பார்க்கிறார். அவரது பிரச்சினையை தமிழனின் பிரச்சினையாக்க முயல்கிறார்.

ப்பீட்டளவில் திமுகவின் ஆட்சி நிர்வாகம் நன்றாக உள்ளதை நாம் அறிவோம். அதற்காக வேண்டுமானால் கலைஞரின் தற்போதைய நெருக்கடியை எண்ணி நாம் பரிதாபப் படலாம். ஆவேசத்துடன் அதரவு தந்து அலகு குத்திக்கொள்ள முடியாது. முடிந்தால் சில அறிவுரைகளை கூறலாம். ஆனால் அவ்வரிவுரைகள் கூட அவருக்கு உவப்பளிக்குமா என்று தெரியாது. இருந்தாலும் சொல்லிவைப்போம். 1) காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தரலாம். 2) அல்லது, வைகோ, காடுவெட்டி குருவை நேரில் சந்தித்து சமாதானப் படுத்தலாம். 3) திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யலாம் (ஆனால், இதை செய்வதும் திருமாவை திமுக தலைவராக்குவதும் ஒன்றே!). இன்னும் பல யோசனைகளை உள்ளன. ஆனால் அவற்றை சொன்னால் நான் சீரியஸாக(:-))) சொன்ன முந்தய மூன்று அறிவுரைகளும் காமேடியாகிவிடும் வாய்ப்புள்ளதால் தவிர்கிறேன்.

11 comments:

பழமைபேசி said...
January 21, 2009 at 7:40 PM  

அன்புத்தம்பீ,

உமது இனமான உணர்வை மெச்சுகிறேன். அதே வேளையில், இனமான உணர்வு கொண்டவர்கள் ஒன்றைப் புரிந்தாக வேண்டும். ஒரு அரசியல் கட்சியையோ, அல்லது தலைவரையோ நொந்து பயன் இல்லை. தமிழரிடத்திலே, இனமான உணர்வு மங்கிப் போய் விட்டது. விட்டில் பூச்சிகளாய், ஏமாறுகிறார்கள். அதற்கு யார் காரணம்? அதை அடையாளமிடுங்கள். இனமான உணர்வு மேலோங்கும் நேரத்தில், கன்னடம் என்ன? காந்தாரம், காசுமீரம் கூட நம்மவர் சொன்னபடித் தலையாட்டும். மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும். நாம், யாருக்கும் அபிமானி அல்லர். இனத்துக்கு மட்டுமே அபிமானி!

மோகன் கந்தசாமி said...
January 21, 2009 at 8:25 PM  

///மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும்.///

மாற்று கருத்துக்கு நான் நன்றி தான் சொல்வேன். மன்னிப்பு கோருவதா? :-))))

///அன்புத்தம்பீ,

உமது இனமான உணர்வை மெச்சுகிறேன். ////

மிக்க நன்றி அண்ணா!!

////தமிழரிடத்திலே, இனமான உணர்வு மங்கிப் போய் விட்டது. விட்டில் பூச்சிகளாய், ஏமாறுகிறார்கள். அதற்கு யார் காரணம்? அதை அடையாளமிடுங்கள்./////

எனக்கும் அதுதான் புரியவில்லை. எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது. எப்போதிருந்து இப்படி அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்று நிச்சயமாக தெரியவில்லை.

///நாம், யாருக்கும் அபிமானி அல்லர். இனத்துக்கு மட்டுமே அபிமானி!///

அறிவேன் அய்யா!

நன்றி.

Anonymous said...
January 21, 2009 at 9:19 PM  

ஈழத் தமிழருக்காக ஆட்சி என்ன உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக உலகின் ஒன்பதேமுக்கால் கோடித் தமிழரின் ஒரே தலைவர் முனைவர் கலைஞர் சொல்லியிருக்கிறாரே, பிறகு வேறென்ன தான் எதிர்பார்க்கிறீர்கள்? இதுமாதிரி உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் தமிழருக்காக எத்தனையோ முறை உயிர்விட்டு, தமிழன்னையின் அருளால் ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுந்திருக்கிறார். அவ்வாறு இன்னொரு முறை உயிர்விடமாட்டாரா, தமிழன்னையும் தன் தலைமகனை இன்னொரு முறை உயிர்ப்பிக்க மாட்டாளா என்ன? அவர் உயிரைத் துறக்க தமிழன்னையின் அனுமதிக்காக காத்திருந்த வேளையில் பெயரைத் தட்டிச் செல்வதற்காக வேறு யாரோ உண்ணாநோன்பு இருந்தால் அத்தகைய துரோகிகளை தமிழன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மோகன் கந்தசாமி said...
January 21, 2009 at 9:25 PM  

////தமிழன்னையும் தன் தலைமகனை இன்னொரு முறை உயிர்ப்பிக்க மாட்டாளா என்ன?///

கொஞ்சம் விவகாரமான அனானி போலிருக்கே நீங்கள்!

மதிபாலா said...
January 22, 2009 at 12:37 AM  

சுத்தமா பிரியலே தல....எனினும் ஒரு பிரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.

Bharath said...
January 22, 2009 at 1:17 AM  

//ஆரியம், பார்ப்பனியம், அவாள், சதி, சூழ்ச்சி என்ற சொல்லாடல்கள் மூலம் தமிழனின் ரத்தத்தை சூடேற்றப் பார்க்கிறார்.//

மறதியாய் Spectrum ஊழலுக்கு உபயோகித்த அதே டெம்ப்ளேட்டை உபயோகித்துவிட்டார் என்று நினைக்கிறேன்..

மக்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகமாகிவிட்டதுன்னு புரிந்துக் கொள்கிற காலம் சீக்கிரம் வரும்..

Anonymous said...
January 22, 2009 at 2:07 AM  

ஆட்சியைக் கவிழ்க்க சதி என்பதெல்லாம் நாடகம்.மனமிருந்தால்
வழியுண்டு.கலைஞர் அழுத்தம் கொடுத்திருந்தால் இந்திய அரசு
இப்படி நடந்து கொள்ளாது.
சென்னையில் ஆவேசக்
குரல்,வேதனைக் குரல்,வாய்ச்சவடால் என நவரசம்
காட்டும் கலைஞரும்,ராமதாஸும்
தில்லியில் என் இப்படி பேசுவதில்லை.
அரசில் திமுக,பாமக பங்கு வகிக்கும்
போது வெளியுறவுத் துறை செயலரிடம் அவர் இலங்கை செல்லும் முன் திமுக,பாமக அமைச்சர்கள் சந்தித்து இந்த
கோரிக்கைகளை வலியுறுத்துங்கள்
என்று சொன்னதாக செய்திகள்
இல்லை. எதிரிகளை விட
நண்பர்கள் போல் நடிக்கும்
துரோகிகள்தான் ஆபத்தானவர்கள்.
ஈழத்தமிழருக்கு நண்பராக நடிக்கும்
துரோகிகளின் எண்ணிக்கை அதிகம்.

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 2:42 PM  

///சுத்தமா பிரியலே தல....////

தல...உண்மையிலே புரியாதது கலைஞர் செயல் தான். கடைசிகாலத்தில் இவர் என்னமாதிரியான பெயருடன் திகழப்போகிறார் என்று நமக்கு ஒன்றும் புரியவில்லை.

///எனினும் ஒரு பிரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.///

நன்றி நன்றி...

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 2:45 PM  

/////மறதியாய் Spectrum ஊழலுக்கு உபயோகித்த அதே டெம்ப்ளேட்டை உபயோகித்துவிட்டார் என்று நினைக்கிறேன்.. ////

ஹா ஹா... அதற்கு மட்டுமா இந்த டெம்ப்ளேட்டை உபயோகப் படுத்துகிறார். எதற்கெடுத்தாலும் ஆரிய சதி, அவாள் சூழ்ச்சி... இப்படி சொல்லி சொல்லியே நம்ம தலையில் மிளகாய் அரைக்கிறார்.

///மக்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகமாகிவிட்டதுன்னு புரிந்துக் கொள்கிற காலம் சீக்கிரம் வரும்..///

அந்தபயம் அவருக்கும் வந்தால் சரி!!!

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 2:54 PM  

////ஆட்சியைக் கவிழ்க்க சதி என்பதெல்லாம் நாடகம்.மனமிருந்தால்
வழியுண்டு.கலைஞர் அழுத்தம் கொடுத்திருந்தால் இந்திய அரசு
இப்படி நடந்து கொள்ளாது.////

இவ்வளவு நெஞ்சழுத்தத்துடன் காங்கிரஸ் இருப்பதன் காரணமே காங்கிரசின் ஈழக்கொள்கையை திமுக -வும் பகிர்ந்து கொள்கிறது என்பதுதான். இவரெல்லாம் அழுத்தம் கொடுப்பார் என்று அவர் அவரது அரசியல் எதிரிகள் கூட நம்ப மாட்டார்கள்.

////சென்னையில் ஆவேசக்
குரல்,வேதனைக் குரல்,வாய்ச்சவடால் என நவரசம்
காட்டும் கலைஞரும்,ராமதாஸும்
தில்லியில் என் இப்படி பேசுவதில்லை.////

தமிழ் சசி சொன்னது போல், இந்த டகுல் பாட்ச்சா டெக்னிக்கை திமுகவிடம் கற்றுக்கொண்டுள்ளது பாமக.

////அரசில் திமுக,பாமக பங்கு வகிக்கும்
போது வெளியுறவுத் துறை செயலரிடம் அவர் இலங்கை செல்லும் முன் திமுக,பாமக அமைச்சர்கள் சந்தித்து இந்த
கோரிக்கைகளை வலியுறுத்துங்கள்
என்று சொன்னதாக செய்திகள்
இல்லை.////

சொன்னால்தானே செய்திகள் வரும். :-))))

////எதிரிகளை விட
நண்பர்கள் போல் நடிக்கும்
துரோகிகள்தான் ஆபத்தானவர்கள்.
ஈழத்தமிழருக்கு நண்பராக நடிக்கும்
துரோகிகளின் எண்ணிக்கை அதிகம்.////

துரோகிகள் என்பது அதிகப்படியான வார்த்தை என்றாலும் அந்த பட்டம் ஏற்பட்டாலும் அசைந்து கொடுக்க மாட்டார்கள்.

துரோகப்பட்டியலின் வெயிட்டிங் லிஸ்ட் கேண்டிடேட்டுகள்!!!

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 2:55 PM  

வாமுகொமு அண்ணே!

நிலமையையை ஓரிரு சித்திரங்களில் அழகாக காட்டிவிட்டது அருமை.