Tuesday, March 10, 2009

தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருணாநிதி கைது!

·

சென்னை: 12 மார்ச், 3011: தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வருணாநிதி இன்று மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்ததற்காகவும், தமிழுணர்வாளர்களை ஒடுக்கியதற்காகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் குற்றவாளிக்கு அவர் தரப்பு வாதங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் மன்ற குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அவ்வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணாநிதி: மக்கள் மன்றம்..., விச்சித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. மோசமான அரசியல்வாதிகளை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விச்சித்திரமும் அல்ல, வழக்காடும் நானும் அவ்வளவு மோசமான அரசியல்வாதியும் அல்ல. தமிழக அரசியலிலே, சர்வசாதாரணமாக தென்படக்கூடிய அரசியல் வியாதிகளிலே நானும் ஒருவன். ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்தேன். தமிழுணர்வாளர்களை ஒடுக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. ஈழ ஆதரவிலே குழப்பம் விளைவித்தேன். ஆதரவு கூடாது என்பதற்காக அல்ல. திமுக அரசு கவிழக்கூடாது என்பதற்காக. தமிழுனர்வாளர்களை ஒடுக்கினேன். அவர்கள் உண்மைத்தமிழர்கள் என்பதற்காக அல்ல. தமிழுணர்வு கிளர்ந்து அது காங்கிரஸ்காரன் டவுசரை கிழிக்கக்கூடாது என்பதற்காக.

(அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து வருணாநிதியிடம் ஏதோ சொல்ல முனைகிறார்.)

வருணாநிதி: உனக்கேன் இவ்வளவு அக்கறை. காங்கிரஸ்காரனுக்கே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே என் குடும்ப நலமும் கலந்திருக்கிறது. கட்சிக்காக தங்கள் குடும்பத்தை மறந்து கட்சி நலனே கதி என்று கிடக்கிறார்களே உண்மைத்தொண்டர்கள், அவர்களைபோல் அல்ல.

இதற்கே இப்படி குற்றம் சாட்டுகிறீர்களே, இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையிலே சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் அவன் நடத்தி வந்துள்ள நாடகங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். எளிதாக கரவொலியை பெற்றதில்லை நான். அரிதாரம் பூசி நடிக்க வேண்டியிருந்தது. எளிதாக ஓட்டுகளை பெற்றதில்லை நான். வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டியிருந்தது. கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழகத்திலே, திருக்குவலையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். ஊரை ஏய்த்து சொத்து சேர்க்க இன்னொரு ஊர். தமிழக அரசியலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? சென்னை...! கட்சியை எனக்கு தாரைவார்த்தது. காங்கிரஸ் கூட்டணியை தந்தது. இன்று கூட்டணிக்கு ஆளாய் பறக்கிறாளே என் தங்கை 'சாணி'யா அவளை ஜெயிக்க வைக்க மீண்டும் மக்களிடம் ஓடோடி வந்தேன். மோசடி அரசியல் அரசியல் செய்து ஓட்டு பொறுக்குகிறாளே, இதோ இந்த ஜாலக்காரி பயலலிதா, இவளது அரசியல் சதிவலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். ஓட்டு வங்கியை பறிகொடுத்தேன், ஆட்சியை இழந்தேன், கடைசியில் பதவிப் பைத்தியமாக மாறினேன். கூட்டணிக்கு வந்த தங்கையை சந்தித்தேன். பல் பிடுங்கிய பாம்பாக. ஆம். பொக்கையாக!

தங்கையின் பெயரோ 'சாணி'யா! டெரரான பெயர். கழுத்திலோ மாங்கல்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கண்ணிலோ பழியுணர்வு, கையிலே தமிழன் ரத்தம், ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அலைந்தாள், அவளுக்காக நான் அலைந்தேன். அவளுக்கு கூட்டணி ஆசை காட்டினர் பலர். அவர்களில் பேராசை பிடித்த சிலர் கைமாறாக அதிக இடங்கள் கேட்டனர். பம்மாத்து அரசியல் செய்த குற்றத்திற்காக குற்றவாளி கூண்டில் நிற்கிறானே இந்த கொடியவன் விஜயகோந்து, ஐஸ் வைத்து மடக்கமுயன்றான் என் தங்கையை. நான் மட்டும் தடுத்திராவிட்டால் அவள் அப்போதே அவனுடன் கூட்டணியை அறிவித்திருப்பாள். அவளது பதிவிரதம் பற்றி கேள்வி எழுப்பியவர்களும் கூட்டணிக்காக வந்தனர், தீவிரவாதத்தின் பெயரால், இந்திய தேசியத்தின் பெயரால். பிரதியுபகாரமாக என்னை கூட்டணியிலிருந்து கழட்டி விடச்சொன்னார்கள். மாநில அளவில் பிரச்சனை செய்தாலும் டெல்லியிலாவது என்னுடன் அனுசரணையாக இருந்திருப்பார்கள் காங்கிரசார். அவர்களை தூண்டிவிட்டது பயலலிதாதான்.

நிம்மதியிழந்த என்தங்கை அரசியலைவிட்டே செல்ல முடிவெடுத்தாள். காங்கிரசை செல்வாக்கற்ற தமிழ்நாட்டிலே அவள் விட்டுவைக்க விரும்பவில்லை. அவளே அழித்து முடித்து விட்டாள். சொந்த கட்சியையே அழிக்க முயல்வது ஒன்றும் விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அகிம்சா மூர்த்தி, ஜீவ காருண்ய சீலர், அவரே சுதந்திரத்திற்குபின் காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதத்தான் 'சாணி'யாவும் செய்து கொண்டிருக்கிறாள். அது எப்படி குற்றமாகும்?

கூட்டணிக்காக பாமக விரட்டியது, பயந்தோடினாள்; தேமுதிக துரத்தியது, மீண்டும் ஓடினாள்; அதிமுக என் தங்கையை பயமுறுத்தியது; ஓடினாள், ஓடினாள், அறிவாலயத்தின் குட்டிச்சுவர் வரை ஓடினாள். திமுகவிற்கு வேறு நாதியில்லாததால் கூட்டணியை தொடர்ந்தாள்.

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

வருணாநிதி: இல்லை அதுவும் என் வழக்குதான். காங்கிரஸ் இலங்கைக்கு ஆயுதம் தந்தது ஒரு குற்றம், ஈழ ஆதரவில் நான் குழப்பம் விளைவித்தது ஒரு குற்றம், தமிழுனர்வாளர்களை ஒடுக்கியது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார், யார் காரணம்? அப்பாவிகள் ஈழத்திலே சாகிறார்களே, அது யார் குற்றம்? எங்களின் குற்றமா? அல்லது எங்கள் மீது அபரிதமான நம்பிக்கைவைத்து ஏமாந்து போகிறார்களே, அவர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர்த்தது யார் குற்றம்? குடும்பத்துக்கு ஒருபவுன் வாங்கும் வாக்காளர்கள் குற்றமா? அல்லது வாக்குகளை வாங்கி குடும்பத்துக்கு பதவிகள் தரும் எங்களின் குற்றமா? இந்த அரசியல் பெருச்சாளிகள் களையப்படும்வரை ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர் படும் துயர் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் அரசியல் வரலாற்றில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் சுயநலம், சூழ்ச்சி, அக்கிரமம் நிறைந்த அரசியல் தத்துவம்.

நீதிபதி: உன்வாதம் பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் உன் மீது குற்றம் சாட்டி கூண்டிலேற்றினால், நீ எங்கள் மீதே குற்றம் சுமத்தக்கூடாது. எங்கள் பிட்டை எடுத்து எங்களுக்கே போடுவது டகால்டி வேலை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ உன்னை தமிழினத்தலைவர் என்று நீயே கூறிக்கொள்றாய் என்பது உண்மையா?

வருணாநிதி: என்னை தமிழினத்தலைவர் என்பது உங்களுக்கே வேடிக்கையாய் தெரியவில்லை!!?!

வழக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதிவரை ஒத்தி வைக்கப் படுகிறது.

29 comments:

Anonymous said...
March 11, 2009 at 2:13 AM  

அப்பப்பப்பா என்னா இது?

தமிழநம்பி said...
March 11, 2009 at 8:24 AM  

asaththugiReergaL.
eezha niaiyinaal manakkavalai irunthalum nagaich chuvayai suvaiththe theeraveNdi irukkirathu!

kanippoRi pazhuthu - thamizhil ezhuth eyalavillai.
poruththtruga.

Anonymous said...
March 12, 2009 at 1:32 AM  

பட்டையை கிளப்பிடிங்க ............

அறம் செய விரும்பு said...
March 12, 2009 at 1:50 AM  

superbbbbb!!! Make sure name shouldn't be original but can mimik !!!

So try to Give Nick name

Ex: "So" Neeya!!!

அபி அப்பா said...
March 12, 2009 at 2:01 AM  

கந்தசாமி! அருமையான பதிவு!

ஜோ/Joe said...
March 12, 2009 at 3:56 AM  

:))))))))))

Anonymous said...
March 12, 2009 at 5:05 AM  

ரொம்ப தாமதம் ஆச்சுங்க...

இவருக்கு தண்டனை: தமிழ் மக்கள் அனைவரும் கல்லால் அடித்துக் கொல்லுவார்கள்..

தோழமையுடன்

முகமது பாருக்

சின்னப் பையன் said...
March 12, 2009 at 10:31 AM  

அட்டகாசம்...

TBCD said...
March 12, 2009 at 11:14 AM  

அசத்திட்டீங்க...

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:35 PM  

அப்பப்பப்பா என்னா இது?

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:39 PM  

///asaththugiReergaL.
eezha niaiyinaal manakkavalai irunthalum nagaich chuvayai suvaiththe theeraveNdi irukkirathu!

kanippoRi pazhuthu - thamizhil ezhuth eyalavillai.
poruththtruga.//

நன்றி தமிழ்நம்பி,
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா எல்லாரும் நலமா? கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தை கேட்டதா சொல்லவும்!

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:40 PM  

///பட்டையை கிளப்பிடிங்க ............///

நன்றி அனானி ஆசானே!!

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:41 PM  

//////பட்டையை கிளப்பிடிங்க ............///

நன்றி அனானி ஆசானே!!///

ஓகே! மாத்தியாச்சுங்க, நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:44 PM  

///கந்தசாமி! அருமையான பதிவு!//

அபி அப்பா!

என்னாது அருமையான பதிவா? அப்ப அடுத்தமுறை உங்களுக்கு கோபம் வரமாதிரி கலாய்க்கிறேன்!! :-)))

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:45 PM  

வாங்க ஜோ!!

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:46 PM  

///இவருக்கு தண்டனை: தமிழ் மக்கள் அனைவரும் கல்லால் அடித்துக் கொல்லுவார்கள்..

தோழமையுடன்

முகமது பாருக்///

ஆகா! இதுக்கு என்ன ரியாக்ஷன் கொடுக்கிரதுன்னே தெரியலையே! நன்றி ஃபாருக்.

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:54 PM  

///அட்டகாசம்...///

வாங்க ச்சின்ன பையன்! உங்க அட்டகாசத்தை விடவா? :-))))

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:55 PM  

///அசத்திட்டீங்க...///

வாங்க டிபிசிடி!! நலமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
March 12, 2009 at 10:44 PM  

:):):):)

Anonymous said...
March 25, 2009 at 1:08 PM  

Thalaivar thiruma DMK congress vittu veliya vara mattennu sollierukkare ethu pathi pudhu padhivu ethuvum elliya....

அபி அப்பா said...
March 25, 2009 at 2:18 PM  

\\///கந்தசாமி! அருமையான பதிவு!//

அபி அப்பா!

என்னாது அருமையான பதிவா? அப்ப அடுத்தமுறை உங்களுக்கு கோபம் வரமாதிரி கலாய்க்கிறேன்!! :-)))\\

இதிலே கோவம் வர என்ன இருக்கு!உங்க ஆதங்கம் எல்லாம் எழுத்தால் தீர்த்துகிட்டீங்க. இதிலே எனக்கு கோவம் வர என்ன இருக்கு:-))

நாங்க இப்ப செயல் படுத்தும் நிலையில் இருக்கோம்(அதாவது ஆட்சியில்) ஆனா செய்ய முடியலை, அதனால ஓட்டால் தோற்கடிங்க(முடிஞ்சா) பின்ன அந்த இடத்தில் வந்து உட்காந்து நீங்க பேசும் டயலாக்கை நானும் நான் பேசும் டயலாக்கை நீங்களும் சந்தோஷமா பேசிகிட்டு இருப்போம்.

தமிழன்-கறுப்பி... said...
March 25, 2009 at 6:05 PM  

அபி அப்பா said...
\\///கந்தசாமி! அருமையான பதிவு!//

அபி அப்பா!

என்னாது அருமையான பதிவா? அப்ப அடுத்தமுறை உங்களுக்கு கோபம் வரமாதிரி கலாய்க்கிறேன்!! :-)))\\

இதிலே கோவம் வர என்ன இருக்கு!உங்க ஆதங்கம் எல்லாம் எழுத்தால் தீர்த்துகிட்டீங்க. இதிலே எனக்கு கோவம் வர என்ன இருக்கு:-))

நாங்க இப்ப செயல் படுத்தும் நிலையில் இருக்கோம்(அதாவது ஆட்சியில்) ஆனா செய்ய முடியலை, அதனால ஓட்டால் தோற்கடிங்க(முடிஞ்சா) பின்ன அந்த இடத்தில் வந்து உட்காந்து நீங்க பேசும் டயலாக்கை நானும் நான் பேசும் டயலாக்கை நீங்களும் சந்தோஷமா பேசிகிட்டு இருப்போம்.
\\

"ஹாஹா ஹிஹி"

;)

பதி said...
March 25, 2009 at 6:29 PM  

:)

Anonymous said...
March 25, 2009 at 8:47 PM  

Arumai! :-)))

மோகன் கந்தசாமி said...
March 25, 2009 at 10:11 PM  

///Thalaivar thiruma DMK congress vittu veliya vara mattennu sollierukkare ethu pathi pudhu padhivu ethuvum elliya....///

புதுப் பதிவுதான!! இருக்கு போடறேன் சீக்கிரமா!

மோகன் கந்தசாமி said...
March 25, 2009 at 10:19 PM  

///நாங்க இப்ப செயல் படுத்தும் நிலையில் இருக்கோம்(அதாவது ஆட்சியில்) ஆனா செய்ய முடியலை///

ஆட்சியில் இருந்தா எதுவும் செய்யமுடியாதா? ஆட்சியில் இல்லைன்னாதான் செய்யமுடியாதுன்னு நெனச்சேன்! ஆட்சியில் இருக்கும்போதுதான் அதிகாரம் இருக்கும்னு அரசியல் தெரிஞ்சவங்க எல்லாம் பேசிக்கிறாங்க! எதுக்கும் ஒருவார்த்தை அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்!

///ஓட்டால் தோற்கடிங்க(முடிஞ்சா) ///

தயவு செஞ்சு திமுக தொண்டர்களெல்லாம் சேர்ந்து இந்த தேர்தல்ல திமுக வை ஜெயிக்க வச்சிடுங்க! இல்லன்னா தமிழ்நாடு பூரா மேடையேறி ஈழத்தமிழருக்கு ஆதரவாக வேட்டியவிழ்த்து தலைவர் குத்தாட்டம் போட ஆரம்பிச்சிடுவார். அது இன்னும் கேவலமாக இருக்கும்.

மோகன் கந்தசாமி said...
March 25, 2009 at 10:21 PM  

வாங்க தமிழன் - கறுப்பி!

மோகன் கந்தசாமி said...
March 25, 2009 at 10:21 PM  

நன்றி பதி

மோகன் கந்தசாமி said...
March 25, 2009 at 10:22 PM  

மிஸ்டர் ஷண்முகம், முதல் வருகைக்கு நன்றி