Saturday, June 13, 2009

திமுக வின் எதிர்காலம்

·

இந்த வலைப்பூவில் லக்கி லுக், மதிபாலா மற்றும் புதுகை அப்துல்லா ஆகியோர் திமுக -வின் தோற்றம், வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றி கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் உயர்வு நவிற்சி (அல்லது நடுவு நிலைமை!?) கொண்டவைதாக இருந்தன என்பதாக பின்னூட்டங்கள் வந்தன. ஆனால் திமுக -வின் அசமந்தங்களையும், அச்சுபிச்சுகளையும் விமர்சிக்கும் பதிவை வெளியிடவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. பதிவர் உண்மைத்தமிழனிடம் இதுபற்றி ஒருவருடத்திற்கு முன்பே கேட்டிருந்தேன். அவர் நேரம் வாய்க்கும்போது தருவதாக கூறியிருக்கிறார். எனினும் இப்பதிவு அந்நோக்கில் சிறிது தூரம் செல்கிறது.

அறிஞர் அண்ணாவின் மறைவு எவ்வாறு தமிழகத்தின் அரசியலை மாற்றியது என்பது பலரால் வெவேறு தளங்களில் அலசப்பட்டுள்ளன. அவருக்குப்பின் கட்சி எவ்வாறு கைமாறி இறுதியில் தனியுடமையானது என்பதும் வேண்டியமட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. எனினும் இவை எல்லாம் மாறப்போவதில்லை. இன்னும் எவ்வளவு மோசமாக அல்லது அசிங்கமாக திரியும் என்று வேண்டுமானால் எதிர்வு கூறலாம்.

ஒப்பீட்டளவில் அறுபது ஆண்டுகாலம் என்பது ஜனநாயகப் பரிணாமத்திற்கு மிகக்குறைவு. உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம் இன்னும் குழந்தைதான் என்றாலும் அது ஒரு சவலைக் குழந்தை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இன்னும் நூறாண்டுகாலம் வளர்ந்தபின்னும் அது சவலையாகத் தான் இருக்கும். அடிப்படை நேர்மை இல்லாத கட்சிகள் நிறைந்த மக்களாட்சியில் ஒன்று மற்றதற்கு முன் உதாரணமாக அமைந்து, சுயநலத்தைப் பொறுத்த அளவில் எங்கும் ஒரே கூட்டுக்கும்மியாக உள்ளது. அதிலுள்ள ஓட்டைகள் அனைத்தும் அகலமானவை. ஓட்டரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் யாவும் உடனடியாக ஒருமுறை அதில் விழுந்து எழுந்தால் பிறகு கூச்சமின்றி, விமர்சனத்திற்கு கவலைப்படாமல் அப்படியே தொடர்கின்றன. பெரும்கட்சிகளிடம் அவை ஏகலைவன் போல் பாடம் கற்றுக்கொள்கின்றன. பித்தலாட்ட அரசியலை பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்றவை திமுக -வின் அடியொற்றி செய்தாலும் குடும்ப அரசியலுக்கு காங்கிரஸ்தான் திமுகவின் முன்னோடி. காமராஜர் தொடங்கிவைத்த வாரிசு அரசியல் திமுக வை குட்டிச்சுவராக்கி உள்ளது.

இந்திராவை காமராஜர் அரசியலுக்கு அழைத்தார். பொறுக்கித்தனங்கள் தான் அரசியல் என்று கருதிய சஞ்சீவ் போலல்லாமல் ராஜீவும் சோனியாவும் காங்கிரசாரின் வற்புறுத்தலின் பேரில் அரசியலுக்கு வந்தார்களாம்!. ஆனால் திமுகவில் இருக்கும் வாரிசுகளை யார் வற்புறுத்தி அழைத்தார்கள்? இவர்களில் எவராவது தம் அரசியல் தத்துவம், திராவிடக் கொள்கையில் தமக்குள்ள பிடிப்பு, முக்கிய பிரச்சினைகளான இட ஒதுக்கீடு, ஈழம் மற்றும் மாநில சுயாட்சி போன்றவற்றில் தங்கள் நிலைப்பாடு பற்றி எங்காவது பேசியிருக்கிறார்களா? இவர்கள் கையில் திமுக எவ்வாறு இருக்கும் என்று யோசித்தால் அது கடந்த சில வருடங்களாக எவ்வாறு சுரனையற்றதாக இருக்கிறதோ அதுபோல் அப்படியே தொடரும் என்பது புரியும்.

மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார். ஏனெனில் அவரைப்பற்றி உடன்பிறப்புகளுக்கே முழுதாகத் தெரியுமா என்பது கேள்விக்குறியே! திராவிடம் குறித்து அவர் மேடையில் எங்காவது பேசினாரா என்பதுபற்றியும் தகவல் இல்லை. முதல்வரானால் மத்திய அரசிடம் இவர் எதை வலியுறுத்துவார்? அதிக நிதி வேண்டும் அல்லது குறிப்பிட்ட திட்டங்கள் தமிழகத்திற்கு வேண்டும் என வலியுறுத்தக்கூடும். நிதிக்கொள்கையிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ இவரது தலையீடு அல்லது வலியுறுத்தல் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது.

மாநில சுயாட்சியை பொறுத்தவரையில், ஒருமுறை மணி சங்கர் அய்யர் கூட்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்டாலின். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மாநில உள்ளாட்சிதுறையின் அதிகாரத்தில் தலையிடுகிறது என்று அப்போது கருணாநிதி குற்றம் சாட்டினார். அந்த குறிப்பிட்ட மத்திய அரசின் பிரச்சினைக்குரிய தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஆட்சி நிர்வாகத்தை பொறுத்தவரையில் சிறப்பாக செயல் படுபவர் என்றாலும் தமிழின அரசியலை கைவிட்டுவிட்டு ஒரு மொன்னை அரசியலைச் செய்ய ஒரு திமுக தேவையில்லை. திமுகவில் மிச்சமிருக்கும் சிறிது வீரியமும் இவரால் சிதையும் என உறுதியாக நம்பலாம்.

திமுகவை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கிய பொறுப்பில் மூன்று பேர் இருக்கிறார்கள். தயாநிதி மாறனைப் பற்றி நான் எதைக்கூறினாலும் அது புதிய செய்தியாக இருக்காது. பதிவர் குசும்பன் கூறியது போல் இவர் ஒரு 'பவுடர் பாண்டி' என்பதற்கு மேல் இவர் கொள்கை ரீதியாக எதையும் கிழிக்கப் போவதில்லை. அவரது தந்தையார் எழுதிய மாநில சுயாட்சி பற்றிய புத்தகங்களையாவது இவர் படித்திருப்பாரா என்பது சந்தேகமே! அதிக பட்சம் வட இந்தியாவில் மீடியா நண்பர்களை பிடித்துக்கொண்டு எதிர்காலத்தில் திமுகவிற்கு குடைச்சலைத்தரலாம். தவிர்த்து, திமுகவின் கொள்கைகளை மன்றங்களில் எடுத்தியம்பி கட்சிக்கு வலு சேர்ப்பார் என்று யாரும் நம்பவில்லை.

இடஒதுக்கீடு பற்றிய விவாதமொன்றில் பார்ப்பனிய குஞ்சுகளிடம் கனிமொழி சீரியதைப் பார்த்தவர்கள் நிச்சயம் இவரை நாடாளுமன்றத்திற்கு தகுதியான ஆள் என கணித்திருப்பார்கள். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவத்தில் இவர் உரைத்த பொய்களும், ஈழம் பற்றிய கேள்விகளுக்கு உளரியவைகளும் இவர் தம் தேவைகளுக்கு நேர்மையை அடகு வைப்பார் என்பது தெளிவானது. பதவிகளுக்காக தம் இட ஒதுக்கீடு கொள்கையை கைவிட மாட்டார் என்பது நிச்சயமில்லை. அழகிரி பற்றி நாம் அறிந்ததெல்லாம் பணப்பட்டுவாடா அரசியலும் அடிதடியும்தான். ஈழத்துயருக்கு மத்தியில் ஆடம்பர விழாக்களில் பொழுதைக் கழித்தவர். இவர் என்ன திராவிடத்தை நிலைநாட்டப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை கருணாநிதிக்கு தெரிந்திருக்கலாம். அவரது காலத்திற்குள் அதை தெளிவு படுத்துகிறாரா என்று பார்க்கலாம்!!

இவர்களையெல்லாம் விட நம் உடன்பிறப்புகள் தான் கிலியை ஏற்படுத்துகிறார்கள். தலைமையின் முடிவுகளில் இவர்களின் பங்கு என்று எதுவும் இல்லை என்றாலும் இவர்களின் எதிர்வினைகள் தலைமைக்கு சிறிது யோசனையைத் தரக்கூடும். ஆனால் இவர்கள் எப்போதும்போல அடிவருடிக்கொண்டே இருப்பின் திமுக இன்னும் மோசமான அரசியலை எவ்வித கூச்சமின்றி திமுக தொடரும் என்பது திண்ணம்.



இனி திமுகவிற்கு எவ்வித தனிச்சிறப்புகளும் இல்லை. ஏனைய கட்சிகளில் இதுவும் ஒன்று அவ்வளவே. மேலும், எதிர்காலம் கட்சித்தலைமை(களு)க்கு சிறப்பாக இருக்கக் கூடும். ஆனால் கட்சிக்கோ, உண்மைத் தொண்டர்களுக்கோ அல்லது திராவிட கொள்கையாளர்களுக்கோ எவ்வித நம்பிக்கையையும் அது தரப்போவதில்லை. கூடவே, பார்ப்பனிய எதிர்ப்பு, திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசவோ அதை சொல்லி ஓட்டு கேட்கவோ எவ்வித அருகதையும் அதற்கு இல்லை.

50 comments:

ரவி said...
June 13, 2009 at 3:42 PM  

ஜனநாயகம் குறித்து நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் மிக முக்கியமானவை....

ஜனநாயகம் என்பது மிக கேலிக்கூத்தான ஒரு சொல்லாடல். அரசராட்சியின் நீட்சிதான் ஜனநாயகம். ஆரம்பத்தில் நம்பிக்கையளித்து, மீண்டும் இப்போது பல்-இளிக்கும் ஜனநாயகம்,

இப்போது சிறிய மைக்ரோ லெவல் மன்னராட்சிக்கு நம்மை தள்ளிக்கொண்டுபோய்விட்டதாக தோன்றுகிறது..

இதில் தவறேதும் இருப்பதாக தோன்றவில்லை.

அடிப்படை மானுட இயல்பு.

தலைமைக்கு பின்னால் அணிவகுக்கும் மந்தைப்பண்பு ஜீன்களின் இடுக்குகளில் பொதிந்துள்ளது.

இந்த தலைமைப்பண்பு இயல்பிலேயே வாய்த்த அல்லது ஏற்படுத்திக்கொண்டவர்கள் முன்னேறுகிறார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அதிகாரப்பீடத்தில் நிறுத்துகிறார்கள்.

தமிழக அரசியலில் யானை மாலை போடும் அதிஷ்டம் வாய்த்த ஓ பன்னீர் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும் அந்த இடத்துக்கு வருவதும் இந்த தலைமைப்பண்புகளின் விருப்பங்களே.

பதினெட்டில் இருந்து ஒன்றாம் இடத்துக்கு தாவ இந்த தலைமைப்பண்பும் ஆளுமைத்திறமும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் இன்னபிறவும் போதுமானது...

அதிகாரபீடங்களில் சென்று அமரும் வல்லமைகள் அதன் பின் அதனினும் எளியவைகளை ஆட்டிவைக்கும் பரிணாம வளர்சிதை மாற்றக்கரும கந்தாயத்தை டீட்டெயிலாக விளக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லை...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
June 13, 2009 at 11:57 PM  

தொடர் முழக்கம் மோகன் கந்தசாமி,
வாழ்த்துகள்!
தமிழ்மண விண்மீன் மிளரட்டும்!
தினகரன் கே.பி.கந்தசாமியும், திமுகவும் என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையை எதிர்பார்கிறேன்!

ttpian said...
June 14, 2009 at 1:22 AM  

சூடு, சொரணை,ரோசம் மானம் என்பதெல்லாம் தமிழன் சம்பந்தப்பட்டது-
எட்டப்பனிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

நாடோடி இலக்கியன் said...
June 14, 2009 at 2:48 AM  

//ஓட்டரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் யாவும் உடனடியாக ஒருமுறை அதில் விழுந்து எழுந்தால் பிறகு கூச்சமின்றி, விமர்சனத்திற்கு கவலைப்படாமல் அப்படியே தொடர்கின்றன.//

மிகவும் சரியான வார்த்தைகள் நண்பரே.அதே மாதிரி ஜனநாயகம் குறித்த உங்கள் கருத்துகளும் நெத்தியடி.
செந்தழல் ரவி சொல்வதுபோல மன்னராட்சியின் நீட்சியாகவே மாறிவிட்டிருக்கிறது இன்றைய ஜனநாயகம்.

Anonymous said...
June 14, 2009 at 3:23 AM  

What is great about the dravidian politics that DMk cannot talk about it?After all it is an irrelevant and a third rate concept.Any son of a bitch be it manjathundu or for that matter mohan kandasami can talk about it.big deal you swine.

முத்துகுமரன் said...
June 14, 2009 at 4:22 AM  

இரண்டுவிதமான எதிர்காலத்தை பற்றி குறிப்பிட வேண்டும். கொள்கைகள் நீர்த்த திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்காலம் கவலைக்கிடமாக இருக்கிறது. செல்வம் சேர்த்த திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது.

ttpian said...
June 14, 2009 at 4:42 AM  

அல்வா கொடுப்பதில் மஞ்சள் துண்டு கில்லாடி....
சோனிய தியாக திருவிளக்கு
ராகுல் இளஞ்சிங்கம்
சண்டையை பார்க்காத தனது மகன்கள்
1)இளைய தலபதி
2)தென்மண்டல தளபதி

சரி,நமக்கு என்ன பட்டம்?

பரமார்த்த குருவின் சீடர்கள் அல்லது
கேனையர்கள் கூட்டம்

Anonymous said...
June 14, 2009 at 5:02 AM  

யாராவது ஒருவர் தி.மு.க வின் எதிர்காலத்திற்கும் தலைவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் தொண்டர்களின் எதிர்காலத்திற்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் உள்ள சம்பந்தம் அல்லது வித்தியாசத்தை சொல்ல வேண்டும்

Unknown said...
June 14, 2009 at 5:50 AM  

arumaiyaana padhivu....... nandri

பழமைபேசி said...
June 14, 2009 at 12:17 PM  

//சஞ்சீவ் போலல்லாமல்//

சஞ்சய் காந்தியா அல்லது சஞ்சீவ் ரெட்டியா?

//திமுக -வின் அடியொற்றி செய்தாலும் குடும்ப அரசியலுக்கு காங்கிரஸ்தான் திமுகவின் முன்னோடி.//

அல்ல இராசா அல்ல... முழுக்க முழுக்க ஆங்கிலேயனோட ஆட்சிமுறைதான் காரணம், அவங்ககிட்ட இருந்த இராசா இராணிப் பழக்கம் நம்ம மக்கள்ட்டயும் ஒட்டிகிச்சு... ஏன் பதிவுலகங்கூட ஒரு வழியில அப்படித்தான்!

Anonymous said...
June 14, 2009 at 12:56 PM  

முழுக்க முழுக்க ஆங்கிலேயனோட ஆட்சிமுறைதான் காரணம், அவங்ககிட்ட இருந்த இராசா இராணிப் பழக்கம் நம்ம மக்கள்ட்டயும் ஒட்டிகிச்

commpon, we already have rasa rani in our culture.

Anonymous said...
June 14, 2009 at 12:59 PM  

Pls do not compare Rahul Gandhi,Priyanka Gandhi with the dozens of offsprings that karunanidhi produced.Rahul and priyanka are so well educated and cultured where as the children of manjathundu thru both legitimate wives and illegitimate concubines are first rate riff raffs and thugs and uncultured brutes and uneducated swines true to the dravidian style.

பழமைபேசி said...
June 14, 2009 at 1:20 PM  

//முழுக்க முழுக்க ஆங்கிலேயனோட ஆட்சிமுறைதான் காரணம், அவங்ககிட்ட இருந்த இராசா இராணிப் பழக்கம் நம்ம மக்கள்ட்டயும் ஒட்டிகிச்

commpon, we already have rasa rani in our culture.
//


buddy,

monarchy is diffrent than having king or queen in republic government. whoever got support from Kennedy family is winning, and the same else where in the world such S'pore, whoever got support from Lee Quan Yu is pm out there... athe these came from British only... not from King Ashoka or Dhasaradha.... ha! ha!!

If you wanna have monarchy, have it... why do they mingle such a hell into democratic process...

after-all such Indian kings had accountability of ruling, these buggers? Ruining is well taught by british guys, no doubt on that!

பழமைபேசி said...
June 14, 2009 at 1:26 PM  

//Rahul and priyanka are so well educated and cultured //

ha! ha!! cultured by british, persians... where did the culture come from? areh boss, we guys were innocent all the way upto 19th century... how can they become uncultured all of suddent without some external interference?

தமிழ் நாடன் said...
June 15, 2009 at 1:41 AM  

ஐயா நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?
சனநாயகம் மாநில சுயாட்சி திராவிடக்கொள்கை கோட்பாடு தமிழின அரசியல் என்று நம் தமிழக கட்சிகளுக்கு தேவையே இல்லாத விடயங்களை திமுகாவிடம் மட்டும் நீங்கள் எப்படி எதிர்ப்பார்க்கலாம்.
இன்று கட்சிகளின் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே பணம்தான். கவுன்சிலர் தேர்தலுக்கே சில பல பத்து லட்சங்களை வீசுகிற இந்த காலத்தில் கொள்கையாவது கோட்பாடாவது. ஆசியாவின் முன்னனி பணக்காரர்களை கொண்ட கட்சி என்ற வகையில் திமுகாவுக்கு எதிர்காலம் மிக பிரகாசமாகவே இருக்கிறது.

மிதக்கும்வெளி said...
June 15, 2009 at 4:46 AM  

http://sugunadiwakar.blogspot.com/2009/06/blog-post.html

pls read.

மதிபாலா said...
June 15, 2009 at 4:52 AM  

முடியல.

என்ன மொத பின்னூட்டமே போயஸ் தோட்டத்திலிருந்து வந்திருக்கு தல?

Anonymous said...
June 15, 2009 at 5:14 AM  

//http://sugunadiwakar.blogspot.com/2009/06/blog-post.html//

நட்சத்திர வாரத்தில் எழுத சரக்கில்லாமல் இருந்தவர் மிதக்கும்வெளியின் இந்த பதிவை பார்த்துவிட்டே இப்பதிவை எழுதினார்

கோவி.கண்ணன் said...
June 15, 2009 at 5:23 AM  

//மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்//

பெயரளவுக்கு கொள்கை, நிலைப்பாடுகள் அறிவித்துவிட்டால் நிறைவு அடைஞ்சிடுவிங்களா ? கருணாநிதியும் கொள்கை, நிலைப்பாடுகள் வைத்திருந்தார். ஆனால் இப்ப ?

மதிபாலா said...
June 15, 2009 at 5:33 AM  

நட்சத்திர வாரத்தில் எழுத சரக்கில்லாமல் இருந்தவர் மிதக்கும்வெளியின் இந்த பதிவை பார்த்துவிட்டே இப்பதிவை எழுதினார்/

யாரய்யா இந்த அனானி??

மொதல்ல உம்ம மூஞ்சிய காட்டிட்டு குத்தம் சொல்லுமய்யா.

யாருகிட்ட எழுத சரக்கு இருக்கு , யாருகிட்ட இல்லேன்னு படிக்கிற எங்களுக்குத் தெரியும்.

மதிபாலா said...
June 15, 2009 at 5:37 AM  

திராவிடம்கிறது தென்னகம்...தென்னகத்தை மையப் படுத்தி , திராவிடத்தை மையப் படுத்தி வந்த திராவிட வரலாற்றில் இருந்து பிரிந்த கட்சிக்குப் பெயர்

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாம்.

அந்த கட்சிக்கும் 23 வருசம் ஆட்சியைக் கொடுத்தாங்களாம்.

அப்ப எல்லாம் இந்த கொள்கை , கோட்பாடு , வெத்தலை பாக்கு எல்லாம் கேக்கலியோ சாமி....கேக்கலியோ சாமி?

ரவி said...
June 15, 2009 at 9:40 AM  

மதிபாலா

உங்களது

//என்ன மொத பின்னூட்டமே போயஸ் தோட்டத்திலிருந்து வந்திருக்கு தல//

இந்த கருத்தை என் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள அத்தனை உரிமையும் எனக்குண்டு.

உங்களை யார் என்று தெரியாது. அவ்வப்போது உங்களது பதிவின் 'மார்க்கெட்டிங் ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அவ்வப்போது வருவதை தவிர...

போயஸ் தோட்டத்திலிருந்தோ அல்லது உமது '%%$$%#$%%%%' தோட்டத்திலிருந்தோ வந்திருக்கட்டும், அதை கேள்வி கேட்க நீங்கள் யார் ?

உமக்கும் எமக்கும் என்ன கொண்டான் கொடுத்தான் தகறாறா வாய்க்கா வரப்பு தகராறா ? வந்திருக்கும் மற்ற பின்னூட்டங்களை பற்றி கேள்விகேட்கவில்லையே நீங்கள் ?

ஒருவரை அனானி என்று தூற்றும் நீங்கள் எனக்கு 100 சதவீதன் அனானிதான்...

மணிப்பக்கம் said...
June 15, 2009 at 1:34 PM  

//மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்//

இல்லங்க... கருணாநிதி அன்பழகன், ஆற்காட்டார்கிட்ட கேட்டு அவங்க முடியாதுன்னு சொன்னபிறகுதானே, ச்டாலினுக்கு முடிசூடப்பட்டது? ;)

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:16 PM  

ஆகா! ரவி, செறிவாக உள்ளது உங்கள் பின்னூட்டம்!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:18 PM  

///தொடர் முழக்கம் மோகன் கந்தசாமி,
வாழ்த்துகள்!
தமிழ்மண விண்மீன் மிளரட்டும்!
தினகரன் கே.பி.கந்தசாமியும், திமுகவும் என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையை எதிர்பார்கிறேன்!///

வாருங்கள் ஜோதி பாரதி!, தொய்விற்கு வருந்துகிறேன்! மிக்க நன்றி நண்பரே!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:19 PM  

///சூடு, சொரணை,ரோசம் மானம் என்பதெல்லாம் தமிழன் சம்பந்தப்பட்டது-
எட்டப்பனிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?//

ப்ச்..

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:21 PM  

///மிகவும் சரியான வார்த்தைகள் நண்பரே.அதே மாதிரி ஜனநாயகம் குறித்த உங்கள் கருத்துகளும் நெத்தியடி.//

நன்றி நண்பரே!

//செந்தழல் ரவி சொல்வதுபோல மன்னராட்சியின் நீட்சியாகவே மாறிவிட்டிருக்கிறது இன்றைய ஜனநாயகம்.///

அவரது உவமையும் அருமை!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:22 PM  

/// நல்ல பதிவு///

நன்றி சரவணகுமரன் !

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:25 PM  

///இரண்டுவிதமான எதிர்காலத்தை பற்றி குறிப்பிட வேண்டும். கொள்கைகள் நீர்த்த திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்காலம் கவலைக்கிடமாக இருக்கிறது.///

தேர்தல் வெற்றியில் இவர்கள் அதை சரி செய்துவிடுவார்களாம்!!??!!.

///செல்வம் சேர்த்த திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது.///

:-))))

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:30 PM  

////யாராவது ஒருவர் தி.மு.க வின் எதிர்காலத்திற்கும் தலைவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் தொண்டர்களின் எதிர்காலத்திற்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் உள்ள சம்பந்தம் அல்லது வித்தியாசத்தை சொல்ல வேண்டும்///

யாராவது ஒருவர் தி.மு.க வின் எதிர்காலத்திற்கும் தலைவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் நிறைய தொடர்புண்டு. அவர்கள் எதிகாலம் தொடர்ந்து சுபிட்சமாக இருந்தால் கட்சி தானாக சேருமிடம் சேரும்!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:30 PM  

///arumaiyaana padhivu....... நன்றி///

நன்றி,

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:34 PM  

///சஞ்சய் காந்தியா அல்லது சஞ்சீவ் ரெட்டியா?///

வாருங்கள் பழைமை பேசி!, தட்டச்சு செய்தவரின் பிழையை நானும் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

///அல்ல இராசா அல்ல... முழுக்க முழுக்க ஆங்கிலேயனோட ஆட்சிமுறைதான் காரணம், அவங்ககிட்ட இருந்த இராசா இராணிப் பழக்கம் நம்ம மக்கள்ட்டயும் ஒட்டிகிச்சு..///

ம்ம்..விளக்கம் தேவையாயிருக்கிறது.

///ஏன் பதிவுலகங்கூட ஒரு வழியில அப்படித்தான்!///

சீரியஸா ஏதோ சொல்ல வருவது தெரிகிறது!! ஆனால், என்ன அது!??

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:35 PM  

///commpon, we already have rasa rani in our culture.///

:-))

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:37 PM  

///http://sugunadiwakar.blogspot.com/2009/06/blog-post.html

pls read.///

படித்தேன் நண்பரே!, மிக்க நன்றி!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:37 PM  

/////முடியல.

என்ன மொத பின்னூட்டமே போயஸ் தோட்டத்திலிருந்து வந்திருக்கு தல?////

:-))))

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:39 PM  

/////http://sugunadiwakar.blogspot.com/2009/06/blog-post.html//

நட்சத்திர வாரத்தில் எழுத சரக்கில்லாமல் இருந்தவர் மிதக்கும்வெளியின் இந்த பதிவை பார்த்துவிட்டே இப்பதிவை எழுதினார்///

அடேங்கப்பா!!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:42 PM  

////how can they become uncultured all of suddent without some external interference?////

போட்டுத்தாக்குங்கன்னே!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:45 PM  

///ஆசியாவின் முன்னனி பணக்காரர்களை கொண்ட கட்சி என்ற வகையில் திமுகாவுக்கு எதிர்காலம் மிக பிரகாசமாகவே இருக்கிறது.///

இப்படி இருப்பவர்கள் தொடர்ந்து இப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி தாமாக கழண்டு கொள்ளும்.

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:48 PM  

////பெயரளவுக்கு கொள்கை, நிலைப்பாடுகள் அறிவித்துவிட்டால் நிறைவு அடைஞ்சிடுவிங்களா ? கருணாநிதியும் கொள்கை, நிலைப்பாடுகள் வைத்திருந்தார். ஆனால் இப்ப ?//

ஆகா! சரியான கேள்வி!, பேச்சில் கொள்கையைவைத்து ஊரை ஏமாற்றாமல் இருப்பதே நல்லதுதான்.

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:49 PM  

////யாரய்யா இந்த அனானி??

மொதல்ல உம்ம மூஞ்சிய காட்டிட்டு குத்தம் சொல்லுமய்யா.

யாருகிட்ட எழுத சரக்கு இருக்கு , யாருகிட்ட இல்லேன்னு படிக்கிற எங்களுக்குத் தெரியும்.///

வாங்க மதி! நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:57 PM  

///
//என்ன மொத பின்னூட்டமே போயஸ் தோட்டத்திலிருந்து வந்திருக்கு தல/////

என்ன ரவி, ஒருவரிக்கே இப்படி பொரிந்துவிட்டீர்கள்!

///இந்த கருத்தை என் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள அத்தனை உரிமையும் எனக்குண்டு.///

அவர் இதுவரை எவரையும் தாக்கியதாக எனக்கு நினைவு இல்லை!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 10:58 PM  

///இல்லங்க... கருணாநிதி அன்பழகன், ஆற்காட்டார்கிட்ட கேட்டு அவங்க முடியாதுன்னு சொன்னபிறகுதானே, ச்டாலினுக்கு முடிசூடப்பட்டது? ;)//

ஆகா! செம லொல்லா இருக்கே இது! நன்றி நண்பரே!

மதிபாலா said...
June 15, 2009 at 11:38 PM  

இந்த கருத்தை என் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள அத்தனை உரிமையும் எனக்குண்டு.

உங்களை யார் என்று தெரியாது. அவ்வப்போது உங்களது பதிவின் 'மார்க்கெட்டிங் ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அவ்வப்போது வருவதை தவிர...

போயஸ் தோட்டத்திலிருந்தோ அல்லது உமது '%%$$%#$%%%%' தோட்டத்திலிருந்தோ வந்திருக்கட்டும், அதை கேள்வி கேட்க நீங்கள் யார் ?

உமக்கும் எமக்கும் என்ன கொண்டான் கொடுத்தான் தகறாறா வாய்க்கா வரப்பு தகராறா ? வந்திருக்கும் மற்ற பின்னூட்டங்களை பற்றி கேள்விகேட்கவில்லையே நீங்கள் ?

ஒருவரை அனானி என்று தூற்றும் நீங்கள் எனக்கு 100 சதவீதன் அனானிதான்...

June 15, 2009 9:40 AM\


மோகன் கந்தசாமி பதிவில் என்னுடைய பின்னூட்டம் திரு ஸ்பாம் மதிபாலா அவர்களே.//

நன்றி.

நான் விளையாட்டாகச் சொன்னதை இவ்வளவு சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை நண்பர் செந்தழல் ரவி..அதற்கான தாழ்மையான வருத்தங்கள் மற்றும் உங்கள் மனதை அந்தப் பின்னூட்டம் புண்படுத்தியிருந்தால் அதற்கான என்னை மன்னித்து விடும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய நாள் வரை , நான் யாருக்கும் என் பதிவின் லிங்க்கை வைத்துக்கூட யாருக்கும் மெயில் பண்ணியதில்லை. என் பதிவைப் பாருங்க என்று எப்போதும் மின்னஞ்சல் அனுப்பியதில்லை.

இன்னும் சொல்லப் போனால் உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன என்று கூட எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசையில்லை.


நிற்க....

மேலும் , மேலும் இந்த விவாதத்தை வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனக்கு இணையத்தில் இதுவரை நண்பர்கள் மட்டுமே உண்டு. முதன்முதலில் எனது விளையாட்டுத்தனத்தால் ஓரு சங்கடத்தை உருவாக்கிவிட்டோமோ என்று வருந்துகிறேன்.

மன்னிக்கவும்.

மற்றபடி நான் ஸ்பேம் ஆ இல்லையா என்று நண்பர்கள் அனைவருமே முடிவு செய்து கொள்ளலாம்.

அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த உரிமையில் தலையிட எனக்கு கொஞ்சமும் உரிமையில்லை.

நன்றிகள்.

இன்னமும் தோழமையுடன்
மதிபாலா.

மதிபாலா said...
June 15, 2009 at 11:54 PM  

அவர் இதுவரை எவரையும் தாக்கியதாக எனக்கு நினைவு இல்லை!///

நன்றி நண்பர் மோகன் கந்தசாமி.

மதிபாலா said...
June 16, 2009 at 12:51 AM  

இது சும்மா...

பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெறுவதற்கான பின்னூட்டம்.

நன்றி.

அஹோரி said...
June 16, 2009 at 1:22 AM  

2 ரூவா க்கும் 1 ரூவாக்கும் ( அரிசி விலையை தான் சொல்லறேன்) இந்த சனியம் ( வேற வார்த்தை தெரியல ) புடிச்ச மக்களுக்கு வித்தியாசம் தெரியட்டும் முதல்ல ... மத்தத பிறகு பேசுவோம் .

அபி அப்பா said...
June 16, 2009 at 8:25 AM  

மோகன் கந்தசாமி! நான் உங்களை அரசியல்ல் தெரிஞ்ச பதிவர் என்று தன் படிக்க ஆரம்பித்தேன். ஆனா சுத்தமா அரசியலே தெரியாதவர் என இப்ப தான் தெரிந்தது. திமுக வெறும் 32 பேருடன் ஆராம்பிக்க பட்டுஇன்றைக்கு ஒன்னனரை கோடி உறுப்பினர். உங்க பதிவு கணணை மூடிகிட்டு இருக்கும் கபோதி எழுதுவது போலவே இருக்கு. நாங்க உங்க "கருத்து கணிப்பு"பதிவு பதிவை பார்த்த போதே சிரிச்சிகிட்டோம். நீங்க ஒரு காமடி பீஸ்ன்னு. அதை ஏன் திரும்ப திரும்ப செய்யனும்.நான் உடல் நலம் சரியில்லாம இருந்தாலும் விவாதம் செய்ய தயார்!

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 9:20 PM  

///அவர் இதுவரை எவரையும் தாக்கியதாக எனக்கு நினைவு இல்லை!///

நன்றி நண்பர் மோகன் கந்தசாமி.//

விடுங்க மதி! :-)))

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 9:25 PM  

////ஆனா சுத்தமா அரசியலே தெரியாதவர் என இப்ப தான் தெரிந்தது. ////

என்னது அரசியலா? ஓ! திமுக வரலாறைச் சொல்றீங்களா!?!?

///திமுக வெறும் 32 பேருடன் ஆராம்பிக்க பட்டுஇன்றைக்கு ஒன்னனரை கோடி உறுப்பினர்///

தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களும் எண்ணிக்கையில் இவ்வளவு தான் இருக்கும். ஐந்தாம் வகுப்பு பாடபுத்தகத்தை ஒருவாட்டி புரட்டி பார்த்து விடுங்கள். எவனோ உங்ககிட்ட விட்ட டோலை என்னிடம் விடாதீர்கள்.

//உங்க பதிவு கணணை மூடிகிட்டு இருக்கும் கபோதி எழுதுவது போலவே இருக்கு.///

கண்ணை திறந்து கொண்டு சென்று நேரே கடலில் விழும் முட்டாளை அடியொற்றியே உங்கள் அரசியல் பதிவுகள் இருப்பதாக எனக்கு மட்டும் தோன்றுகிறது. மற்றவர்களுக்கு இதைவிட மோசமாக தோன்றுகிறதாம்!

////நாங்க உங்க "கருத்து கணிப்பு"பதிவு பதிவை பார்த்த போதே சிரிச்சிகிட்டோம். நீங்க ஒரு காமடி பீஸ்ன்னு. ////

அது எந்த "கருத்து கணிப்பு" பதிவுன்னு சொன்னா நானும் ஒருமுறை சிரித்துக் கொள்வேனல்லவா? அப்படி ஒரு பதிவை எனக்கே தெரியாம எவன் எழுதினான்னு தெரியலையே! ஒருவேளை உங்க பதிவையே அகாலவேலையில படித்துவிட்டு சிரித்துக் கொண்டீர்களா?!!

///அதை ஏன் திரும்ப திரும்ப செய்யனும்.நான் உடல் நலம் சரியில்லாம இருந்தாலும் விவாதம் செய்ய தயார்!///

குத்து தெலுங்கினி, பொடி டப்பா என்று நான் குறிப்பிடும் அந்த பதிவர்களை இனி ஒருபோதும் சீண்டுவதில்லை என முடிவெடுத்து மூன்று நாட்களாகின்றன. திமுக -வை ஆதரிக்கும் எத்தனையோ பேர் பதிவெழுதுகிறார்கள். இவர்களைப் பற்றி மட்டும் நான் ஏன் எழுத வேண்டும் என்று யோசிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதை மூன்றுநாட்களாக பதில் மடல் வராதபோதே நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் டூ லேட் இல்லை.

-----------------------------
to உடன்பிறப்பு!
சாரி மிஸ்டர் உடன்பிறப்பு, உங்களை விடுவதாயில்லை!

மதிபாலா said...
June 16, 2009 at 9:59 PM  

விடுங்க மதி! :-)))/

நன்றி மோகன். நான் எப்போதோ விட்டுவிட்டேன்.

உடன்பிறப்புக்களும் , நீங்களும் மோதிக்கொள்ளும் இடத்தில் நான் வேற தனி டிராக் ஓட்டிகிட்டு இருக்கேன்.

நடத்துங்க , நடத்துங்க.....