Sunday, April 5, 2009

திருமா வெளியிட்ட ரகசியம்

·

ஆட்சியை கலைக்க சதி என்று திமுக போலியாக பலமுறை அலறிய போதெல்லாம் நம்பிய மக்கள் மெய்யாகவே ஒரு சதிவலை பின்னப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை. இப்போதும் திமுக கூப்பாடு போடத்தான் செய்தது. எனினும் பலனில்லை. தமிழின துரோகி என்ற பட்டம் கிட்டத்தட்ட கொடுக்கப் பட்டுவிட்டது. பாவம், "புலிவருது! புலிவருது!" -என்று பொய்யாக ஓலமிட்டபோது உதவிக்கு வந்த கூட்டம், உண்மையில் புலி வந்தபோது வாளாவிருந்துவிட்டது.

திருமா தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இச்சதி பற்றி குறிப்பிட்டபோது திமுக கூறியதில் உண்மை இருப்பது உறுதியானது. அதிமுக + மதிமுக -வின் அறுபத்தியாறு சீட்டுகளுடன் காங்கிரஸ் மற்றும் பாமகவின் உறுப்பினர்களையும் சேர்த்து காங்கிரஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசை அமைக்க ஒரு சதி நடந்ததாக அவர் கூறுகிறார். இம்மாதிரியான அரசியல் டிராமாக்கள் புதிதல்ல; ஜனநாயக நடைமுறைகள்தான். மேலும் திமுக -வின் கடந்தகால செயல்பாடுகள் இம்மாதியானவைதான் என்றாலும் இந்த சதியை நடத்த முயன்ற நேரம் மற்றும் முனைந்தோரின் வாய்ச்சவடால்கள் போன்றவை அம்பலத்திற்கு முக்கியமானவை.

ஈழத்திற்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடந்த நேரம் எல்லோரும் காங்கிரசை கரித்துக்கொண்டிருந்த போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மத்தியில் உள்ளதுபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் தலைமை ஏற்கவேண்டும் என்று ஒருவர் பினாத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் தமிழனின் தீராத்துயராகிய ஜெயலலிதா ஈழத்திற்கெதிரான அறிக்கைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க பாடுபட்டவர் நம் தமிழ்க்குடி சொங்கி அவர்கள். ஈழத்து ரட்சகன் போல் தம்மை காட்டிக்கொண்ட ராமதாஸ் காகிரசுக்கு ஆதரவாக இதை அப்போது செய்தார். அப்போதேன்றால் 1947 -இல் அல்ல. வெறும் ஓரிரு மாதங்களுக்கு முன். இன்று காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று கண்டுபிடித்து கூறி நமக்கு விழிப்புணர்வேற்றிவிட்டு கூட்டணி மாறி இருக்கிறார்.

திருமா மேலும் கூறுகிறார்: "காங்கிரஸ் கூட்டணி தேவையா? இப்படி ஒரு துயரான ஆட்சியில் நாம் தொடரவேண்டுமா? என்ற எண்ணம் கலைஞருக்கு ஏற்பட்டது, மீண்டும் தேர்தலில் வெல்ல திமுகவால் முடியும் என்று அவர் நம்பினார்." ஆட்சியை இழக்க அவர் தயாராக இருந்தாலும் ஆட்சி கவிழ்ந்ததும் தேர்தலை நடத்தவிடாமல், எஞ்சிய காலத்திற்கு காங்கிரஸ் தலைமையில் இடைக்கால ஆட்சியமைக்க பெரிய திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக கருணாநிதி தன்னிடம் கூறியதாக பேட்டியில் திருமா குறிப்பிடுகிறார். ("நானா துரோகி?" என்ற தலைப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டது நினைவிருக்கலாம்). மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் முழுமையாக காங்கிரஸ் கையிலும், அரசுகளின் சிண்டு ஜெயலலிதா கையிலும், எட்டப்பனின் சிரிப்பு ராமதாஸ் வாயிலும், திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் திரு திரு விழிப்பை வைகோவின் கண்களிலும் பார்க்க தமிழன் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?

எல்லாம் சரி. ஆனால், ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? கருணாநிதியின் மனிதச் சங்கிலி என்ற சிறு நாடகத்திற்கே தமிழ்நாடெங்கும் பேரெழுச்சி பொங்கியது நமக்கு தெரியும். ஆட்சியை இழந்திருந்தால் அவர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து பெரும்பான்மை பெற்றிருப்பார். காங்கிரசுடன் சேர்த்து ஜெயாவையும், வெளியுறவு அமைச்சகத்தில் இருட்டுக்குசு விட்டுக்கொண்டிருக்கும் ஜந்துக்களையும் ஒருங்கே டர்ராக்கி இருக்கலாம். இதை நடக்கவிடாமல் செய்தது யார்? ஈழத்திற்காக பாரம் சுமக்கும் மருத்துவர் அய்யா அவர்கள். திமுக -வை பழி வாங்குகிறாராம்!! அதற்காக துரோகிகளை ஆட்சியிலமர்த்த முயன்றுள்ளார். புலிகளை பழிவாங்க ஈழ மக்களை பலிவாங்கும் காங்கிரசிற்கும் திமுகவை பழிவாங்க துரோக ஆட்சிக்கு துணைபோகும் ராமதாசுக்கும் வித்தியாசங்கள் ஏதும் உளதா? திமுக வை பழிவாங்க ராமதாசுக்கு அப்படி என்ன தேவை? ஆட்சியில் குறை கண்டுபிடிக்கிறேன் என்று கூறிக்கொண்டு எல்லா நலத்திட்டங்களிலும் ஆற்று மணலை வாரிப் போட்டவர் இவர். இடஒதுக்கீட்டின் பலனை மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்த்த பாமக -வை வன்னியப் பெருமை பேசும் சாதிப் பார்ப்பனர்கள் கையில் இன்று முழுமையாக கொடுத்துவிட்டார். காடுவெட்டி குரு போன்ற சாதியவாதிகளுக்காக திமுக -வை பழிவாங்குகிறார். இவரை நம்பினால் ஈழத்தமிழன் மட்டுமல்ல இங்குள்ள உண்மைத்தமிழனும் சிங்கி அடிக்கவேண்டியதுதான். நல்லவேளையாக மூன்றாவது அணியும் தோன்றிய கணத்திலேயே முடிந்துபோனது.

மூன்றாவது அணி அமைக்க முழுமூச்சாக பாடுபட்டவர் யாரென்று நமக்கு தெரியும். அவ்வணியில் இணைய மதிமுக விற்கு உள்ள பிரச்சினைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் வெற்றிபெறும் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி தோற்றுக்கொண்டிருக்கும் கட்சி அது. அணி அமைந்த பிறகு அக்கட்சியை அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கமுடியும். ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பாமகவிற்கு என்ன தடை? அதன் தலைமையில்தான் கூட்டணி என்று திருமா கூறிக்கொண்டிருந்தார். அதை ஏற்க மறுத்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பை நிர்மூலமாகியது யார்? உலகத்தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் பாமக -வை.

திமுக -வை சுழற்றும் சாட்டை காங்கிரஸ் கையில் சிக்கியது பாமகாவால். தேர்தல் நடக்கவிருந்த வாய்ப்பை கெடுத்தது பாமக. மூன்றாவது அணியை சிதைத்தும் அக்கட்சியே. பழியை காங்கிரஸ் மீது போட்டு நாடகமாடும் கருணாநிதிக்கும், கருணாநிதி மீது போட்டு ஓட்டு பொறுக்கும் ராமதாசுக்கும் ஒரே பெயர் தான். அது என்ன?!?!

23 comments:

கோவி.கண்ணன் said...
April 5, 2009 at 11:42 PM  

ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்கிற சிந்தனையில் திமுகவை விட்டால் தமிழகத்துக்கு விடிவுகாலமே இல்லை என்கிற சிந்தனையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக நினைக்க முடிகிறது.

கலைஞர் நிறைய தவறுகள் செய்துவிட்டார், குறிப்பாக வானளாவிய சொத்துகள், வாரிசு அரசியல் இன்னும் பலப் பல. மற்றக் கட்சித் தலைமைகளைவிட தவறு செய்வதில் தானும் சலைத்தவன் என்பவர் இல்லை என்பதாக நடந்து கொள்ளும் போது இந்த ஆட்சியால் பயன் என்ன என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னொன்றும் கவனிக்க இந்த முறை ஜெ மீது எந்த ஊழல் வழக்குகளும் பதியப்பட வில்லை

நவீன் said...
April 6, 2009 at 2:03 AM  

திருமாவின் பேட்டி பார்த்தபின்புதான் அவருடைய நிலைப்பாட்டை அதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

//Blogger கோவி.கண்ணன் said...
ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்கிற சிந்தனையில் திமுகவை விட்டால் தமிழகத்துக்கு விடிவுகாலமே இல்லை என்கிற சிந்தனையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக நினைக்க முடிகிறது.//

கோவி சார், இன்றைய நிலையில் அதுதானே நிதர்சனம்?

தமிழன் said...
April 6, 2009 at 12:01 PM  

திருமா இப்போது சொன்ன கருத்தை என் நண்பர் போன மதமே கூறிவிட்டார்.

ஆதாரம் இந்த சுட்டிக்கு சென்று பார்க்கவும்.


http://dilipan-orupuratchi.blogspot.com/2009/03/blog-post.html

ரவி said...
April 6, 2009 at 12:15 PM  

Thongabalu claimed that thiruma had asked sorry to him.

is that true ?

if not true then why thiruma had not given any public statement about that ?

ராம கிருஷ்ணன் said...
April 6, 2009 at 3:57 PM  

ஆக அண்ணன் திருமாவுக்காக மருத்துவரை பிராண்ட ஆரம்பித்து விட்டீர்கள்!

"அத்துமீறு அடங்கமறு" என்பதெல்லாம் தமிழ்குடிதாங்கியிடம் மட்டும்தான். அண்ணன் தங்கபாலு,அண்ணன் இளங்கோவன்,அண்ணன் வாசன், அண்ணன் சுதர்சனம் இவர்களிடம் எல்லாம் கிடையாது போல. என்ன செய்வது?
ஒரு காலத்தில் அண்ணன் தினகரனிடம்,அண்ணன் நடராசனிடம் மண்டியிட்டோம்.
இப்போ அண்ணன் அழகிரி, அண்ணன் ஸ்டாலின், அண்ணன் தயாநிதியிடம் கை ஏந்துகிறோம். இதற்கெல்லாம் யார் காரணம்? கயவாளி ராமதாசு தானே!
இந்த நிலை மாற அடுத்த தேர்தலில் அண்ணன் கேப்டன் விஜெயகாந்துடன் கூட்டணி வைப்பேன். இதை அந்த ராமதாசால் தடுக்க முடியாது. நான் திரைப்படத்துறையை சார்ந்தவன் என்பதால் கூறுகிறேன். அவரது நேர்மை எனக்கு தெரிந்து இருந்தாலும் என்னை யாரோடும் சேரவிடாமல் தடுத்ததே இந்த சுயனலமிதான். யாரிடமும் நான் உண்மையை கூற தயங்க மாட்டேன். விஜேய காந்துடம் சேர விடாமல் தடுத்த ராமதாசு ஏழு தொகிதியிலும் மண்ணை கவுவது என் உண்ணாவிரதம் மீது சத்தியம். தாய்மண் மீது சத்தியம்.ஏலம் சாரி ஈழம் மீது சத்தியம்.
அன்னை சோனியா வாழ்க! அண்ணன் ராகுல் வாழ்க!!

Anonymous said...
April 6, 2009 at 11:22 PM  

என்னங்கடா இது? இதை முன்னாடியே சொல்லித் தொலைத்திருக்கலாம் தானே? இப்ப மட்டும் ஏன்? எல்லாப் பன்னியு, --- தின்னாது. ---- தின்னுறது எல்லாம் பன்னியாகாது.

Ramanan N said...
April 7, 2009 at 1:16 AM  

சந்தோஷபடும் காங்கிரஸ் :
அ.தி.மு.க கூட்டனிக்கு போடப்படும் ஒட்டு காங்கிரசிற்கு எதிரானது என்றும் ஈழ தமிழருக்கு ஆதரவானது என்றும் சிலர் நினைக்கின்றனர் அது முற்றிலும் தவறு.இதுவரை ஈழ தமிழர் பற்றி அக்கரை கொள்ளாத,வாய் திறக்காத ஜெயா .காங்கிரசுக்கு வெளிபடையாகவே கூட்டனிக்கு அழைப்புவிடுத்தார்.காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்த உடன் உண்ணாவிரதம் ,அறிக்கைகள் என்று ஆரம்பித்துவிட்டார்..

இந்த யுத்தத்தில் குளிர்காய்வது காங்கிரஸ் தான் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் வெற்றி பெரும் என்பதில் உறுதியாக உள்ளது என்று சொல்லி விட முடியாது அதே நேரத்தில் இந்த ஈழ தமிழர் பிரச்னை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தாலும் சரி அல்லது ஈழத்தமிழர் பிரச்னை தேர்தலில் எதிரோளிகாது போனாலும் சரி அது காங்கிரசுக்கு அதரவாகவே அமையும் ...

தி,மு,க உடனான கூட்டணி தோல்வி அடைந்தால்.அதி,மு,க வெற்றி பெற்ற நிலையில் தேர்தலுக்கு பின் அ.தி.,மு,க காங்கிரசுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் அதரவு கொடுக்கும். இதன் முலம் அ.தி,மு.க தமிழகத்தில் காங்கிரஸ் ,பா.ம.க ம.தி.மு.க , கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து இப்பொது இருக்கும் தி,மு,க ஆட்சியை கவிழ்த்து விட்டு இவர்கள் ஜெயா தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைக்கலாம்.காங்கிரஸ் தலைவர்கள் பலர் தி,மு,க உடன் ஜெயிப்பதை விட அ.தி,மு,க உடன் ஜெயித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள் கருணாநிதி ஆட்சியில் பங்கு இல்லை ஜெயா ஆட்சியில் பங்கு கேட்கலாம் என்று பேரம் நடக்கலாம் ....எனவே தி.மு.க வை எதிர்கிறேன் என்று அ.தி.மு,க வுக்கு ஒட்டு போடுவது முட்டாள் தனம்

Ramanan N said...
April 7, 2009 at 1:38 AM  

முன்றாவது அணி அமைக்க திருமா முயற்சி செய்ய வில்லை என்றால் உங்கள் குற்ற சாட்டை ஏற்றுகொள்கிறோம்..... தி,மு.க கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தவர் திருமா ...கருணாநிதி கூட இருந்து கொண்டே இலங்கை பாதுகாப்பு இயக்கம் அமைத்தவர் ......இதை காரணம் காட்டி விடுதலை சிறுத்தைகள் தனித்து விடப்படலாம் என்ற அச்சம் இருந்தும் துணிந்து இறங்கியவர் திருமா ..வைகோ இந்த இயக்கத்தை கட்டி அமைப்பதில் கூட முதலில் ஒத்துழைப்பு தரவில்லை அவர்களது தேர்தல் நிலை அப்படி இருந்தது .... திருமா எதற்கும் துணிந்து எடுத்த காரியங்கள் உண்மையான ஈழ தமிழர்கள் மறக்க மாட்டார்கள் .....ராம்தாஸ் தலைமையில் இந்த இயக்கம் கூட்டணியாக மாற வேண்டும் என்று முயற்சி எடுத்து பலன் இல்லாது போனது காரணம் அவர் அவர் கட்சியின் தேர்தல் நிலை வேறு ஈழ நிலை வேறு என்ற முடிவு தான் அதை தான் திருமாவும் எடுத்தார் ....அ. தி.மு.க எப்படி தோழமை கட்சிகளை மதிக்கும் என்பதற்கு இன்று வை,கோ, விற்கு ஏற்பட்ட நிலைமையை வைத்து கொண்டே பக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் அ.தி.மு.க உடன் திருமா போகவில்லையே என்று குறை சொல்ல கூடாது ....அதை போல தனித்து நிற்பதும் கட்சிக்குள் பாதிப்பை தான் தரும் ......

Ramanan N said...
April 7, 2009 at 1:53 AM  

சிறுத்தைகளின் தேர்தல் நிலை கூறித்து திருமா வெளியட்ட கட்டுரை www.tholthiruma.blogspot.com

அஹோரி said...
April 7, 2009 at 7:22 AM  

அப்டின்னா ப ம க துரோகி , தி மு க அணியில் உள்ளவர் கள் நல்லவர்கள். அப்படிதானே ?

இதற்க்கு எதற்கு சகோதர சண்டை , கொழா சண்டை என்றெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டும் கருணாநிதி. திருமா வுக்கு என்னன்னா, தன்ன மதிக்காத ஜெயா வை விட , கருணாநிதி மேல் அவ்வளவுதான்.

எல்லாருக்கும் இளிச்சவாயன் யாரென்றால் அது ப ம க. இஷ்டத்துக்கு சொல்லலாம். என்னென்ன சொல்லலாம் , சாதி கட்சி ( கருணாநிதி அவாள் , இவாள் ன்னு கவிதை எழுதுவது எந்த வகை , வி சி கட்சி எந்த வகை ?) , தேர்தலுக்கு தேர்தல் கட்சி தாவல் ( எந்த தி மு க காரனை வேண்டுமானாலும் கேள் , கடந்த தேர்தலில் ப ம க விற்கு எதிராக 'உள் குத்து' செய்தார்களா ? இல்லையா ? என்று) வேற என்ன சொல்ல முடியும் உங்களால்?

சரி , யார் ஆதி முதல் கூட்டணி இன்றி தனித்து போட்டி இடுகிறார்கள் ? எந்த கட்சியும் இல்லை.
யார் கூட்டணி மாறாமல் / மாற்றாமல் போட்டி இடுகிறார்கள் ? யாரும் இல்லை.

பிறகு ஏன் ப ம க வை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் என்றால், ஒரு ஜாதி சங்கத்தை இந்த அளவுக்கு வளர்த்து ராஜ்ய சபை வரை அழைத்து சென்று விட்டார் ராமதாஸ். 'பிரபஞ்ச தமிழர்களின் தலைவர்' , ' செவ்வாய் கிரக தமிழர்களின் தலைவர்' என்று விட்ட பில்டப் ராமதாஸ் ஆரம்பித்த 'மக்கள் டிவி' , ஈழ தமிழ ஆதரவு ஆகயவைகளால் ஆட்டம் கண்டுள்ளது. புகை , மதுவுக்கு எதிரான கடும் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு. இவைகளெல்லாம் நடக்கிறதோ இல்லையோ இவையெல்லாம் ஒரு சிறந்த அரசியல்வாதியின் நடவடிக்கைகள். வன்னியர்களின் கட்சியில் சாதி வேறுபாடின்றி தலித்துகளை இணைத்த ராமதாஸ் நாளையே பிற அனைத்து ஜாதிகளை யும் இணைக்க மாட்டார் என்று என்ன நிச்சயம். மக்கள் டிவி என்ன வன்னியர்களுக்காக ஆரம்பித்த டிவி யா ? அதில் நடுநிலையுடன் செய்திகளை வெளியிட வில்லையா? சரியோ தப்போ , தன் கருத்தை பதிய வைக்கும் குணம் வெகு சிலருக்கே உண்டு. கருணாநிதியை ஜெயலலிதா சிறையில் அடைத்த போது கூட்டணியில் இருந்தாலும் சிறைக்கு சென்று பார்த்தவர் ராமதாஸ்.

சரி நம்ப கழக தலைவர்களை பார்ப்போம்,
அடுத்த தலைமுறையில் யாராவது ஸ்டாலின் மகனுக்கு எதிராக முதலமைச்சர் பதவிக்கு ஆப்பு அடிக்க வாய்ய்ப்பு இருந்தால் , இந்த தலைமுறையிலேயே கருவறுக்கும் தமிழ் சினிமா வில்லன் போன்ற எண்ணம் உடையவர்களுக்கு ராமதாஸ் போன்றோரின் வளர்ச்சி கண்டிப்பாக வயித்தெரிச்சலை குடுக்கும்.

கல்யாணமோ , கருமதியோ தன் தான் பிரதானம் என்ற எண்ணம் உடையவர் ஜெயலலிதா அவருக்கு ராமதாஸ் ம்ம் ஒன்றுதான் நேற்று பதிவு செய்த கட்சி தலைவரும் ஒன்றுதான்.

ஆகவே தமிழர்களே , ராமதாஸ் முகம் கவர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம், கேள்விக்கு சம்பந்தமில்லாமல் செந்தமிழில் பதில் சொல்ல தெரியாமல் இருக்கலாம், அடுக்கு மொழியில் பேச தெரியாமல் இருக்கலாம். அதற்க்காக ப ம க வை / ராமதாஸ் ஐ வீடு கட்டி அடிக்காதீர்கள் .

ப ம க வின் அமைச்சர்கள் வேலு, எ கே மூர்த்தி , அன்புமணி ஆகியோரின் சேவையை பாருங்கள், நீங்கள் சாதி மாறி கல்யாணம் செய்பவராக, ரிசர்வேஷன்னை எதிர்ப்பவராக, தன் சாதிகாரனை மட்டும் உயர்ந்தவனாக நினைக்காதவராக இருந்தால் ... இருந்தால் ... இருந்தால் ... ஜாதி உணர்வை நீக்கி , ராமதாஸ் சை ஒரு வன்னியராக பார்க்காமல் தமிழராக பாருங்கள் .... ப ம க அமைச்சர்களை சாதி உணர்வுடன் பார்க்காமல் தமிழராக பாருங்கள்.

rwdw said...
April 7, 2009 at 11:48 AM  

thiruma naddum punitham?pundai ippa enke thirumavinta eelappattu

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 8:58 PM  

////ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்கிற சிந்தனையில் திமுகவை விட்டால் தமிழகத்துக்கு விடிவுகாலமே இல்லை என்கிற சிந்தனையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக நினைக்க முடிகிறது.////

நிச்சயமாக இல்லை கோவி. புதிய விடிவு காலம் விரைவில் பிறக்கும் என்பதை உணர்ந்தே எழுதினேன்.

////கலைஞர் நிறைய தவறுகள் செய்துவிட்டார், குறிப்பாக வானளாவிய சொத்துகள், வாரிசு அரசியல் இன்னும் பலப் பல. மற்றக் கட்சித் தலைமைகளைவிட தவறு செய்வதில் தானும் சலைத்தவன் என்பவர் இல்லை என்பதாக நடந்து கொள்ளும் போது இந்த ஆட்சியால் பயன் என்ன என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னொன்றும் கவனிக்க இந்த முறை ஜெ மீது எந்த ஊழல் வழக்குகளும் பதியப்பட வில்லை////

இனி இந்த இரு இம்சைகளாலும் எந்தப் பலனும் இல்லை. அதுகளை அதுக பாட்டுக்கு விட்டுட வேண்டியதுதான்.

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 8:59 PM  

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நவீன்

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 9:00 PM  

///திருமா இப்போது சொன்ன கருத்தை என் நண்பர் போன மதமே கூறிவிட்டார்.

ஆதாரம் இந்த சுட்டிக்கு சென்று பார்க்கவும்.///

வாருங்கள் திலீபன். உங்கள் பதிவை கவனிக்கத் தவறிவிட்டேன்

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 9:02 PM  

////Thongabalu claimed that thiruma had asked sorry to him.

is that true ?

if not true then why thiruma had not given any public statement about that ?////

இது பற்றி முழுமையாக எதுவும் தெரியவில்லை ரவி. விரைவில் பதிலைப் நாம் அறிய நேரலாம். அதுவரை தொங்க பாலுவும் மற்றவர்களும் அடித்து ஆடிக்கொள்ளலாம்

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 9:31 PM  

////ஆக அண்ணன் திருமாவுக்காக மருத்துவரை பிராண்ட ஆரம்பித்து விட்டீர்கள்! ////

நான் இப்போது தான் பிறாண்டுகிறேன் என்று அறிந்து கொண்டீர்கள் போலிருக்கு.! இதற்குமுன் கருனாநிதியையும்தான் பிராண்டினேன். இப்போது மட்டும் பதிலுக்கு வந்து பிராண்டுகிறீர்களே! இதிலேயே புரிந்துவிடுகிறது, உங்களுக்கு ஈழ விசயத்தில் அக்கறையா அல்லது அதைச் சொல்லி வயிறு வளர்ப்பவர்களின் அடியை பிராண்டுவதில் அக்கறையா என்று? வாழ்த்துக்கள்!!

///"அத்துமீறு அடங்கமறு" என்பதெல்லாம் தமிழ்குடிதாங்கியிடம் மட்டும்தான். ///

அடங்க மறுப்பதும் அத்து மீறுவதும் ஆதிக்கங்களுக்கு எதிராக மட்டும்தான். எந்த ஒடுக்குமுறைகும் எதிராக திரும்பி அடிக்கப் படும். தமிழ்க் குடி தாங்கியிடம் அத்து மீறுவது காலணாவுக்கு பிரயோஜனம் இல்லை.


///"அத்துமீறு அடங்கமறு" என்பதெல்லாம் தமிழ்குடிதாங்கியிடம் மட்டும்தான். அண்ணன் தங்கபாலு,அண்ணன் இளங்கோவன்,அண்ணன் வாசன், அண்ணன் சுதர்சனம் இவர்களிடம் எல்லாம் கிடையாது போல. என்ன செய்வது?
ஒரு காலத்தில் அண்ணன் தினகரனிடம்,அண்ணன் நடராசனிடம் மண்டியிட்டோம்.
இப்போ அண்ணன் அழகிரி, அண்ணன் ஸ்டாலின், அண்ணன் தயாநிதியிடம் கை ஏந்துகிறோம். இதற்கெல்லாம் யார் காரணம்? கயவாளி ராமதாசு தானே!
இந்த நிலை மாற அடுத்த தேர்தலில் அண்ணன் கேப்டன் விஜெயகாந்துடன் கூட்டணி வைப்பேன். இதை அந்த ராமதாசால் தடுக்க முடியாது. நான் திரைப்படத்துறையை சார்ந்தவன் என்பதால் கூறுகிறேன். அவரது நேர்மை எனக்கு தெரிந்து இருந்தாலும் என்னை யாரோடும் சேரவிடாமல் தடுத்ததே இந்த சுயனலமிதான். யாரிடமும் நான் உண்மையை கூற தயங்க மாட்டேன். விஜேய காந்துடம் சேர விடாமல் தடுத்த ராமதாசு ஏழு தொகிதியிலும் மண்ணை கவுவது என் உண்ணாவிரதம் மீது சத்தியம். தாய்மண் மீது சத்தியம்.ஏலம் சாரி ஈழம் மீது சத்தியம்.
அன்னை சோனியா வாழ்க! அண்ணன் ராகுல் வாழ்க!!////

வி. சி திமுக கூட்டணியில் இருப்பதற்கு மூன்றாவது அணி அமையாததுதான் காரணம். அந்த அணி அமையாததன் காரணம் பாமக முதலான கட்சிகளின் வெற்று அலப்பறைதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கிண்டல் மொழியில் பின்னூட்டமிட்டு ஒப்புக் கொண்டமைக்கு ஒரு சபாஷ்.

(இப்ப பதில் கிண்டலுக்கு நேரமில்லை, வேறொரு சந்தர்ப்பத்தில் ராமன் டவுசர், கிருஷ்ணன் டவுசர், சிவபெருமான் டவுசர், இன்னும் பலர் டவுசர்களை பொறுமையாக கிழிக்கும் வைபோகத்தை வைத்துக் கொள்ளலாம்)

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 9:36 PM  

////என்னங்கடா இது? இதை முன்னாடியே சொல்லித் தொலைத்திருக்கலாம் தானே? இப்ப மட்டும் ஏன்? எல்லாப் பன்னியு, --- தின்னாது. ---- தின்னுறது எல்லாம் பன்னியாகாது.///

ரொம்ப ஸ்பீடா போகாதீங்க புகழினி! பன்னி போன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்தாதீர்கள்!!!

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 9:39 PM  

திரு ரமணன்,

தெளிவான விளக்கங்களுக்கும், சுட்டிகளுக்கும் நன்றிகள். பின்னூட்டமிடுபவர்கள் இதை ஒரு முறை படித்தால் நன்றாக இருக்கும்.

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 10:04 PM  

////அப்டின்னா ப ம க துரோகி , தி மு க அணியில் உள்ளவர் கள் நல்லவர்கள். அப்படிதானே ?////

திமுக - ஏன் இழுக்கிறீர்கள்? நாம் திமுக வை விமர்சித்தால் உடன்பிறப்புகள் உடனே ஜெயலலிதாவை இழுத்தி வைய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதுபோல் பாமக வை விமர்சித்தால் பாட்டாளிகள் உடனே திமுக இழுத்து பேச ஆரம்பிக்கிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கடா வெண்ணைகளா என்று வடிவேல் சொல்வாரே ஒரு படத்தில்!!! அதுதான் நியாபகத்திற்கு வருகிறது.

///இதற்க்கு எதற்கு சகோதர சண்டை , கொழா சண்டை என்றெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டும் கருணாநிதி.///

இதை அவரிடமே போய் நீங்கள் கேட்கலாம்!!

/// திருமா வுக்கு என்னன்னா, தன்ன மதிக்காத ஜெயா வை விட , கருணாநிதி மேல் அவ்வளவுதான்.///

ஜெயாவை விட கருணாநிதி மேல் என்பது மட்டுமல்ல, தனியாய் நிர்பதைவிடவும் மேல்! பாமக -வுக்கு கொஞ்சம் அக்கறை இருந்திருந்தால் திருமாவுக்கு இந்த நிலை இல்லை.

////எல்லாருக்கும் இளிச்சவாயன் யாரென்றால் அது ப ம க. இஷ்டத்துக்கு சொல்லலாம். என்னென்ன சொல்லலாம் , சாதி கட்சி ( கருணாநிதி அவாள் , இவாள் ன்னு கவிதை எழுதுவது எந்த வகை , வி சி கட்சி எந்த வகை ?) , தேர்தலுக்கு தேர்தல் கட்சி தாவல் ( எந்த தி மு க காரனை வேண்டுமானாலும் கேள் , கடந்த தேர்தலில் ப ம க விற்கு எதிராக 'உள் குத்து' செய்தார்களா ? இல்லையா ? என்று) வேற என்ன சொல்ல முடியும் உங்களால்?////

பாமக இளிச்சவாயன் கட்சி என்றால் பயில்ஸ் வந்தவன் கூட கஷ்டத்தை மறந்து சிரிப்பான்!!!

மேலும் கருணாநிதி, திமுக வை விமர்சிப்பதென்றால் உடன்பிறப்புகள் பதிவில் போய் விமர்சியுங்கள். அல்லது நான் அடுத்த பதிவில் அவர்களை விமர்சிக்கும் பொது நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். இப்போது பாமக தரப்பு நியாயம் இருந்தால் அதை மட்டும் எடுத்து வையுங்கள். மற்றவர் மீது ஈழ விஷயத்தில் என்ன குறை என்று அறிந்தே இருக்கிறேன். உங்கள் பாடம் தேவையில்லை. திருமாவை விமர்சிப்பதென்றால் 'டு த பாயின்ட்' விமர்சியுங்கள். பத்தி சொல்ல முயற்சிக்கிறேன்.

அன்புமணி, வேலு, மூர்த்தி, ரயில்வே , மக்கள் டிவி, கொண்டாய் வேனுக்கொபால், இட ஒதுக்கீடு, மூன்றாம் பாலின விவகாரம், ஏஇட்ஸ் ஒழிப்பு, சித்தமருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இதெல்லாம் எங்களுக்கு தெரியும். கலாச்சாரக் காவல், நலத்திட்டங்களுக்கு எதிரான பரட்டை அரசியல் இவையும் எங்களுக்கு தெரியும். இப்போ புதுசா ஈழ விவகாரத்தில் போட்ட அந்தர் பல்டி எல்லாத்துக்கும் தெரியும். இனி ஆவேசப் படுவதகேல்லாம் பாமக வுக்கு தகுதி இல்லை. முகமுடி கிழிந்து தொங்குகிறது.

மோகன் கந்தசாமி said...
April 7, 2009 at 10:06 PM  

கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காதிங்க அனானி சுவாமிகளே!

அஹோரி said...
April 9, 2009 at 10:40 AM  

நீங்க திருமா பக்தர் என்று தெரிந்து விட்டது. ஈழ விவகாரத்தில் திருமாவை விட ராமதாஸ் எவ்வளவோ மேல். ஒரே கூட்டணியில் காங்கிரஸ் வுடன் சண்டை, கருணாவை கெஞ்சி இடம் பிடிக்க தேவை இல்லை. இந்த இரண்டு செஅட் க்கு கருணா கலை பிடிப்பதை விட தனித்தே நின்று இருக்கலாம்.

எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு காங்கிரஸ் கு ஊட்டு கேட்பார் திருமா. ஜாதி உணர்வு வேண்டம் நண்பரே ....

//கொண்டாய் வேனுக்கொபால், இட ஒதுக்கீடு, மூன்றாம் பாலின விவகாரம், ஏஇட்ஸ் ஒழிப்பு, சித்தமருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இதெல்லாம் எங்களுக்கு தெரியும்.//

இவை அனைத்துமே அன்புமணி செய்த நல்ல விஷயங்கள். பல தரப்பட்ட பேப்பரையும் படிக்கவும். தெளிவான சிந்தனையுடன் அலசி பாருங்கள்.
கொண்டாய் வேனுக்கொபால் -- இவரால் துரத்தப்பட்ட மும்பை டாக்டர் தான் மன்மோகன் சிங் ஆபரேஷன் காக மீண்டும் வரவழைக்க பட்டார். வேணுகோபாலை துரத்தியது சரி. சில நல களுக்கு முன் ஹிந்து வில் ஒரு ஆர்டிக்க்லே வந்த்து இதை பற்றி.
இட ஒதுக்கீடு -- என்னத்த சொல்ல
மூன்றாம் பாலின விவகாரம் -- இது தப்பு என்றல் , மருத்துவர்கள் வைத்தியம் பார்க்க மாட்டர்கள். வாகன விபத்து க்கு போலீஸ் சர்டிபிகேட் மாதிரி , இதனால் வரும் வியாதிக்கு , வைத்தியம் பார்க்க கோர்ட் / போலீஸ் சர்டிபிகேட் தேவைப்படும் மருத்துவர்களுக்கு. சோ ... கொஞ்சம் யோசிக்கணும்.

மறுபடி சொல்ல்கிறேன் .. ஜாதி உணர்வை தவிர்த்து பார்க்க பழகவும்.

இரா.சுகுமாரன் said...
April 12, 2009 at 9:50 AM  

//திருமா தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இச்சதி பற்றி குறிப்பிட்டபோது திமுக கூறியதில் உண்மை இருப்பது உறுதியானது. அதிமுக + மதிமுக -வின் அறுபத்தியாறு சீட்டுகளுடன் காங்கிரஸ் மற்றும் பாமகவின் உறுப்பினர்களையும் சேர்த்து காங்கிரஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசை அமைக்க ஒரு சதி நடந்ததாக அவர் கூறுகிறார்.//

கருணாநிதி ஆட்சி கவிழ்ந்து போனால் என்ன இதைவிட மோசமாக ஈழத்தமிழிர்கள் மீது தாக்குதல் தொடுத்து இருப்பார்களா? என்ன முடியாது.

60,000 ஆயிரம் கோடி கொள்ளையடித்த பணத்தை காங்கிரசு காட்டிக்கொடுக்காமல் இருக்க தலையாட்டி பொம்மையானார் கருணாநிதி.

கருணாநிதி-செயலலிதா எல்லாம் ஒன்று என்று பேசுமளவு கருணாநிதியில் செயல்கள் மலிந்து போயுள்ளன.

Anonymous said...
April 13, 2009 at 4:13 PM  

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான்-திருமா

Ethu pathi unga karuthu enna...http://thatstamil.oneindia.in/news/2009/04/13/tn-i-am-always-loyable-to-congress-says-thiruma.html