
தமிழ் சினிமா தொடர்பான பதிவுகள் என்றாலே வலையுலகில் நம் நினைவுக்கு வருபவர் பதிவர் முரளி கண்ணன். செறிவான செய்திகள் நிரம்பிய பதிவுகளை தொடர்ச்சியாக தந்து வரும் முரளி அவர்கள் 'ச்சும்மா ட்டமாஷ் - 75' -காக சிறப்பு பதிவு ஒன்றை அளித்துள்ளார். வலைப்பூ வாசகர்களுக்காக அப்பதிவை படங்களுடன் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
தமிழ் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டுவந்த படங்கள்
தமிழ்சினிமாவின் பயணம் 1931 ல் காளிதாஸ் படம் மூலம் ஒரு சிற்றாராய் தொடங்கி பல சிற்றோடைகளின் சங்கமத்தால் நதியாய் மாறி நம் மனத்தோட்டத்தில் பல பூக்களை பூக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நதியில் பல சாயக் கழிவுகள், சாக்கடைகள் கலந்தாலும் தொடர்ந்து புது வெள்ளம் பாய்ச்சும் சிற்றோடைகள், காட்டாறுகளால் தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நதிக்கு கணக்கிலடங்கா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், பாடல் ஆசிரியர்கள், தொழில்னுட்ப வல்லுனர்கள் புதுவெள்ளம் பாய்ச்சியுள்ளார்கள். காட்டாறாய் வந்து இந்த திரைநதியை புதுப்பித்த சிலபடங்களைப் பற்றிய பார்வையே இது. இந்த படங்களால்தான் தமிழ்சினிமாவில் சில புதிய போக்குகள் தோன்றின.
தியாக பூமி - 1939
இதற்க்கு முன் வந்த பெரும்பாலான படங்கள் ராமாயானம்,மகாபாரதம் போன்ற காப்பியங்களையும், ஏனைய புராணக் கதைகளையுமே களமாக கொண்டிருந்தன. நாடகங்கள், மற்ற

தியாக பூமி படத்தில் ஒரு காட்சி
பராசக்தி – 1952
பெரும்பாலும் புராணக்கதைகளே வந்துகொண்டிருந்ததால் கதா பாத்திரங்களின் பேச்சுமொழி பிராண நாதா டைப்பிலேயே இருந்து வந்தது. அத்தி பூத்தாற்போல சில சமூக கருத்துள்ள படங்கள் வந்தாலும் அதில் பேச்சு மொழி வடமொழி கலந்தே இருந்தது. இந்த படம் அந்த வழக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. கருணாநிதியின் வசனம் சிவாஜி கணேசனால் உச்சரிக்கப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வசனங்களை புத்தகமாக போட்டு விற்கலாம் என கருணாநிதி சொன்ன போது அதை தயாரிப்பாளர்கள் கேட்கவில்லை.

பராசக்தி படப்பிடிப்பின் போது டைரக்டர்
கிருஷ்ணன்- பஞ்சு, மற்றும் சக நடிகர்களுடன்
சிவாஜி கணேசன்.
கல்யாணப் பரிசு 1959
பராசக்தி படத்தின் மூலம் வசன மொழி மாறினாலும் உச்சரிப்பு தொனி பெருமளவு மாறவில்லை. நடிகர்கள் இயல்பாக வசனம் பேசவில்லை. அதீத உணர்ச்சிமயமாகவே இருக்கும். ஸ்ரீதரின் வருகை இதை பெருமளவு மாற்றியது. திரையில் பாத்திரங்களை

தங்கவேல், ஜெமினி,
சரோஜாதேவி

இயக்குனர்
ஸ்ரீதர்
பாமா விஜயம் 1967 / எதிர்நீச்சல் 1968
இதை பாலசந்தரின் பங்களிப்பு என்றும் சொல்லலாம். நடுத்தர வர்க்கத்தின் ஆசைகள், அபிலாஷைகள், சோகங்கள் அனைத்தையும் திரையில் கொண்டு வந்தார் இவர்.

பாலச்சந்தரின்
'பாமா விஜயம்'

முத்துராமன், நாகேஷ்,
ஜெயந்தி
பதினாறு வயதினிலே – 1977
அதுவரை கிராமப் படங்கள் வந்திருந்தாலும் அவை படப் பிடிப்பு அரங்கங்களிலேயே படமாக்கப்பட்டன. எம்ஜியார் நடித்த விவசாயி என்னும் படத்திற்க்கு கூட அரங்கில் நாற்று நட்டுதான் படம் பிடித்தார்கள். பெரும்பாலான படங்களில் பேக் டிராப்பாக திரையில் கிராம வீடுகளை வரைந்துகூட படமெடுத்தார்கள். இப்படத்திற்க்கு பின்னரே கேமரா உண்மையான கிராமத்துக்குள் நுழைந்தது. அதுவரை நேட்டிவிட்டி என்ற பரிமாணம்

16 வயதினிலே - ரஜினி, கமல்
மௌனராகம் – 1986
இதன்முன்னர் பகல் நிலவு, இதய கோயில் ஆகிய படங்களை தமிழில் தந்திருந்தாலும் இப்படத்திற்க்கு பின்னரே மணிரத்னம் கவனம் பெற்றார். இவரின் வருகை பிண்னனி இசை,ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகிய முக்கிய துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். கச்சேரிகளில் பாடகர்கள்,

மௌனராகம் - ரேவதி, கார்த்திக்
ரோஜா - 1992 – ஜெண்டில்மேன் 1993
இப்படங்களின் வருகை தமிழ் பட மார்க்கெட்டை விரிய வைத்தது எனலாம். இப்படங்களின் இசை [ஏ ஆர் ரகுமான்] வட இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இதன்பின்னாலேயே மற்ற ஏரியாக்களை குறிவைத்தும் [ஷங்கர்-தெலுங்கு, மணிரத்னம்- தேசம்].

ரோஜா-அரவிந்த சாமி, மதுபாலா

ஜெண்டில்மேன் - படப்பிடிப்பில்
இயக்குனர் ஷங்கர், மதுபாலா, அர்ஜூன்
சேது - 1999
இயல்பான கதையும், சொல்லும் விதமும் மிக முக்கியம் என்னும் போக்கை இந்தப்படம் கொண்டுவந்தது. இதன்பின் வந்த அழகி,ஆட்டோகிராப்,பருத்திவீரன் போன்ற படங்களை இதற்க்கு உதாரணமாய் கூறலாம். அதுவரை கதாபாத்திரத்துக்காக

சேது - விக்ரம்
இப்பொழுது இந்த ஆண்டில் வந்த படங்களில் இரண்டு படங்களை மாற்றம் கொண்டு வரத்தக்க படங்களாக பார்க்கலாம். அவை தசாவதாரம், சுப்ரமணியபுரம். இதில் எந்த படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, சில ஆண்டுகளில் தெரியவரும்.
தசாவதாரம் வந்தபின் இந்த ஆறு மாதங்களில் வந்த எந்த ஆக்ஷன் கமர்சியல் படமும் வெற்றிபெறவில்லை. இந்த படம் கமர்சியல் சினிமாவின் தரத்தை உயர்த்தியதாக சொல்லலாம். நான் இந்த படத்தை சென்னையின் மூன்று வெவ்வேறு இடங்களில் [சத்யம்- ரூ120, உதயம் – ரூ50, வேளச்சேரி ராஜலட்சுமி – ரூ 10] பார்த்தேன். அந்த தியேட்டர்களின் கேட்ச்மெண்ட் ஏரியா மக்களில் பெரும்பாலும் மீண்டும் அத்திரையரங்குகளுக்கே செல்வார்கள். அவர்கள் சத்யம்,ஏகன் ஆகிய படங்களுக்கு செல்லும் போதும் அதே கட்டணம் தான். ஆனால் அவர்கள் மனதில் தசாவதாரம் ஏற்படுத்திய

ஆஸ்கார் ரவி
சகோதரருடன்
ஜாக்கி ஜான்

சுப்ரமணியபுரம்
படத்தில்
ஒரு காட்சி
இந்த கட்டுரையை வெளியிட வாய்ப்பளித்த மோகன் கந்தசாமிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ஆர் முரளிகண்ணன்



