Friday, August 22, 2008

ஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் வீடியோ

· 3 comments

சென்ற பதிவில் நான் வெளியிட்ட ஆப்லெட் தங்கள் பிரவுசரில் தெரிவதில் பிரச்சினை உள்ளோர்கள் இந்த இணைப்பில் உள்ள என் முந்தய பதிவிற்கு விசிட் செய்து பார்த்தால் பலன் இருக்கும். அம்முயற்சியும் பலனில்லை என்றால் கீழ்காணும் குறைந்த குவாலிட்டி வீடியோவில் ஆப்லெட்டை பாருங்கள்.




http://www.youtube.com/watch?v=sG1n-vkpKSM

Read More......

ச்சும்மா ட்டமாஷ் - 50: சிறப்புப் பதிவுகள், விளம்பர ஆப்லெட், புதிய JavaFx -இல்.

· 15 comments



Applet Not Working!


நண்பர்களே! தட்டுத்தடுமாறி நானும் ஐம்பதை (பதிவு எண்ணிக்கைதாங்க! வேறொன்னுமில்ல,) நெருங்கி ஆயிற்று! ஐம்பதாவது பதிவை என் வலைப்பூவில் லக்கி லுக் எழுதி சிறப்பிக்கவிருக்கிறார். கோவி அவர்கள் பேட்டியை முதலில் பதிவிட இருக்கிறேன். இறுதியாக, வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். விபரம் மேலே உள்ள விளம்பர ஆப்லேட்டில்!


ஆப்லெட் தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது JavaFx -ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆப்லெட் என்பதால் நண்பர்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Read More......

Thursday, August 21, 2008

ஆம்! பெண்கள் பெரும்பாலும் சந்தர்ப்பவாத கோழிகள்தான்.

· 43 comments

எனது முப்பது வருட வாழ்வில் நான் இதுவரை சந்தித்துள்ள என் வயதொத்த அல்லது குறைந்த பெரும்பாலான பெண்களை பற்றி எனக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நல்ல அபிபிராயம் கிடையாது. மென்மையானவர்கள், பண்பானவர்கள், உழைப்பாளிகள், அறிவாளிகள் என எல்லோரும் பெண்களை குறிப்பிட்டாலும் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என சொல்வதே சரியென்று எனக்கு படுகிறது.

உதவி கேட்கும்போது பம்முவதும், மற்றவர்கள் அதை எதிர்பார்க்கும்போது கைவிரிப்பதும் பெண்களுக்கு இயல்பாகவே கைவரப்பெற்ற ஒன்று. ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களிடம் அப்பட்டமாக தென்படுவதை பெரும்பாலானவர்கள் கவனித்திருக்க கூடும். நாகரீகமாக செய்தால் இவற்றை உள்ளரசியலின் கூறுகளாக கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஜனநாயகத்தின் சலனத்தை தீர்மானிப்பதே உள்ளரசியல் தானே! ஆனால் பச்சையாக செய்வதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எதிராளி இவற்றை அடாவடியாக எதிர்கொள்ள நேரும்.

என்னை பொறுத்தவரை வலிய வந்து ஈசும் பெண்ணின் முதல் பத்து வார்த்தைகளில் அவளது தற்போதைய தேவை என்ன என்பதை கணித்துவிட முயல்வேன். அதில் வெற்றி பெற்றால் உடனடியாக என் கதவை அவள் முகத்தில் இழுத்து சாதிவிட சற்றும் தயங்குவதில்லை. பெரும்பாலானவர்கள் இதை செய்வதில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு பிறகு அப்பெண்கள் தங்கள் இயல்பை காட்டியதும் அவர்கள் மீது வன்மம் கொண்டலைவார்கள்.

இவ்வளவு விவரமான பார்ட்டி போல சீன் போடும் நான் எந்த பெண்ணிடமும் உதவி பெற்றதே இல்லையா? நிச்சயம் பெற்றிருக்கிறேன். எனக்கு உதவியவர் ஆணோ பெண்ணோ எவராயினும் அவருக்கு எந்த சூழ்நிலையிலும் உதவிட தயாராகவே இருப்பேன். இடுக்கண் வருங்கால் நழுவுவதோ அல்லது உதவாது போக நேர்கையில் சப்பை கட்டுவதோ நான் கிஞ்சித்தும் செய்வதில்லை. எனது பெரும்பாலான நண்பர்களும் இதை செய்வதில்லை. ஆனால் தோழிகள்? அதை நான் சொல்லவும் வேண்டுமா? ஆம்! பெண்களில் பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகள் தான்.

எல்லாம் சரி! பெண்களுக்குள்ளே எப்போதும் ஓயாமல் நடக்கும் பனிப்போருக்கு நான் மேலே சொன்ன காரணமும் ஒன்றா?

Read More......

Friday, August 8, 2008

பயமாயிருக்கு: ரஜினியை விமர்சிக்காமல் தண்ணி தெளிச்சு விட்டுட்டோம்.

· 16 comments

சமீப காலமாக ரஜினி அவர்களைப்பற்றி லகுவாக விமர்சிக்கும் எங்கள் குரல்களின் நியாயங்களை வெறிபிடிக்காத ரஜினி ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். எனினும், இதனால் எங்களுக்கே ஒரு புறம் சலிப்பு ஏற்படுவதாலும் சில அன்பான எச்சரிக்கைகள் எங்களை பீதி கொள்ளச்செய்வதாலும் சந்தேகக் கண்களில் இருந்து ஓடி ஒளிந்து கொள்ளலாமென முடிவெடுக்கிறோம்.

"ரஜினி பாஸ்டு அனதர் டெஸ்ட் ஆப் லாயல்டி" -என செய்தி வெளியிட்ட தமிழ் துவேஷிகளாகட்டும், தன்மையான ரசிகராகிய கிரி, இவ்வளவுக்குப்பிறகும் பாலால் கட்டவுட் கழுவிய கோஷ்டிகளாகட்டும் எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தார்கள்.



ரொம்ப நோகாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா போயஸ் கார்டன் பக்கம் பார்த்து கும்பிடுங்க.....நாங்க யாரையும் கும்பிடாம எங்க பொழப்ப பாக்க ஒதுங்கிக்கறோம்.....உங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு மகாநடிகர் !!! அடுத்தமுறை ரோபோவா வந்து மக்களை ஏமாற்றட்டும்...அதுவரை அவரை கண்டுக்கறதா இல்லை !!!!

ச்சும்மா ட்டமாஷ்: தனித்திரு விழித்திரு பசித்திரு.....: எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

Read More......