நண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையின் இறுதி பகுதியை வெளியிடுகிறேன். முதல் பகுதி சென்ற பதிவில்.
தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இனைந்து "சுயமரியாதை-சமதர்ம இயக்கம்" என்ற இயக்கத்தை தோற்றுவித்தனர்.இந்த இயக்கும் தோன்றுவதற்கு முன் 1927 ல் மே தினத்தன்று அவருடைய குடியரசு இதழில் இப்படி எழுதுகிறார்.
"பொதுவாக எனது பிரசங்கத்தில் அரசியல் தலைவர்களை, மதத்தை, குருக்களை, கோவிலை, அரசாங்கத்தை, நீதிஸ்தலத்தை, தேர்தல் அமைப்பை, இன்னும் பிறவற்றை, யார் யாரையோ எதுஎதற்கோ கண்டித்து இருக்கிறேன். நான் கண்டிக்காத திட்டமோ, இயக்கமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படவே மாட்டேன் என்கிறது" என எழுதிய பெரியாரின் கண்களில் பட்டது சிங்காரவேலரின் இயக்கமும், திட்டமும்,யோசனையும்.
இருவரின் கூட்டு முயற்சியால் சுயமரியாதை இயக்கத்தவரிடையேயும், பொதுமக்களிடமும் கம்யூனிசக் கருத்துக்கள் விரிவாக பரவத்துவங்கின. ஈரோட்டுப் பாதை என பின்னால் பெயர் பெற்ற திட்டத்தை சிங்காரவேலரும்,பெரியாரும் உருவாக்கினார்கள்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக "தென்னிந்திய சமதர்ம கட்சி" என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி துவங்கவும் ஏற்பாடு நடந்தது. இதையடுத்து நடந்த கூட்டங்களில் பெரியாரின் பேச்சில் தீப்பொறி பறந்தது. அதுவரை சாதி, மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு போன்ற சமூக பிரச்சனைகளை மட்டுமே பேசப்பட்ட நிலைமாறி அரசியல், பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளும் முன்னிறுத்தப்பட்டன. ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும் போது "பொதுவுடமை அரசுமுறை இந்தியாவில் ஏற்பட என்ன தடை என்று தெரியவில்லை. பொதுவுடமையை ஏன் விரும்புகின்றோம் எனச் சொல்ல பயப்படத் தேவை இல்லை. எல்லோரும் புரட்சிக்குத் தயாராக இருக்க வேண்டும்.பயப்படக் கூடாது. அதனால் என்ன பின்விளைவு ஏற்பட்டாலும் சரி. இதை புரட்சி என்றால் பயப்படாதீர்கள். இது நடக்கும்! நடந்தே தீரும்!" என முழங்கினார்.
இதே நேரத்தில் சிங்கார வேலர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அவர் எழுதிய 'பொதுவுடமை விளக்கம்' என்ற புத்தகத்தில் கம்யூனிசத்தை வெறும் அரசியல்,பொருளாதார சித்தாந்தமாக சுருக்கிக் கூறாமல் சமூகவியல், பண்பாடு போன்ற அனைத்தையும் தழுவிய சித்தாந்தமாக அவர் சித்தரித்தார். சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா சிங்காரவேலருடன் தொடர்பில் இருந்து தமிழகம் முழுவதும் சென்று சமதர்ம சங்கங்களை அமைக்க வழிகாட்டினார்.
இப்படிப்பட்ட போக்குகள் அனைத்தையும் கண்டு அஞ்சிய வெள்ளையர் அரசு தனது தாக்குதலைத் துவங்கியது. "இன்றைய ஆட்சி ஏன் போக வேண்டும்?" என்ற குடியரசு இதழின் தலையங்கத்தை காரணம் காட்டி பெரியாரையும் அவர் சகோதரி கண்ணம்மாவையும் 1933 டிசம்பர் 30 நாள் சிறையில் அடைத்தனர். பெரியார் சிறைப்பட்ட போதும் அதற்குப் பின்பும் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன்.

பகத்சிங்கின் "நான் ஏன் நாத்தீகன் ஆனேன்" என்ற புத்தகத்தை மொழி பெயர்த்தற்காக தோழர் ஜீவாவையும், ஈ.வெ.கிருட்டிணசாமியையும் 1935 பிப்ரவரி முதல் வாரத்தில் அரசு கைது செய்தது. ஜாமீனில் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பெரியார் கூறியபடி இருவரும் அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். இந்த நிகழ்வு கம்யூனிஸ்டுகளிடையே கோழைத்தனமான செயலாக பார்க்கப்பட்டு பெரியார் மேல் வெறுப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை பெரியார் வெளியிடுகிறார். முதல் அறிக்கை 10/03/1935 அன்றும் இரண்டாவது அறிக்கை 31/03/1935 அன்றும் குடியரசு இதழில் வெளியாயின.
முதல் அறிக்கையில் "மேல்சாதி ஆதிக்க காங்கிரஸை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் சாதி, மத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமே ஆகும். இவற்ரைப் பற்றி பிரசாரம் செய்யவும், அமுல்படுத்தவும் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டீஷ் ஆட்சியே மேலானது என்பது எனது அபிப்ராயம் ஆகும்" என்றார்.
இரண்டாவது அறிக்கையில் "ஈ.வெ.கிருஷ்ணசாமி, ப.ஜீவானந்தம் ஆகிய இரு தோழர்களும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கு நானே ஜவாப்தாரி என அறிவித்துக் கொள்கிறேன். இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும் அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேஸையே பொறுத்தது மாத்திரம் அல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். மக்களுக்கு சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல பொருளாதார கொடுமைகளும் தீர வேண்டியது அவசியம் என நாம் கருதியதால் பொருளாதாரம் சம்மந்தமாக சிறிது பிரச்சாரம் செய்ய ஆரமித்தோம். என்றாலும் அரசாங்கத்தார் தப்பபிப்ராயத்தைக் கொண்டு இயக்கத்தை அடக்குமுறைப் பிரயோகம் கொண்டு முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். சர்க்காரோடு இந்த மாதிரி ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சத்தில் சர்க்கருக்கும், நமக்கும் வீண் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்திற்கு வர வேண்டியுள்ளது." எனக் குறிப்பிட்டார். அதாவது கம்யூனிச சார்புடைய எந்த இயக்கத்தையும் எப்படியும் அழித்து விடுவது என்ற நிலையில் பிரிட்டீஷ் அரசாங்கம் இருந்ததால் பெரியார் அரசோடு மோதி ஆரம்ப நிலையிலேயே இயக்கம் அழிந்து விடாமல் அரசின் போக்கிலேயே விட்டுப்பிடித்து முதலில் இயக்கத்தை காப்பது என்ற நிலையில் இருந்தார். ஆனால் பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்கு சிங்காரவேலர், ஜீவா மற்றும் பலர் எதிப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிங்காரவேலர் 'புதூலகம்' என்ற இதழைத் 1935 மே தினத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தை விமர்சித்தும் தீவிர கம்யூனுசத்தை வலியுறுத்தியும் கட்டுரைகளை எழுதிவந்தார். பெரியாரின் போக்கை எதிர்த்த ஜீவா போன்றோரும் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினர். கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் கருவாகி உருவாகும் நேரத்தில் குறைப் பிரசவக் குழந்தையாய் சுயமரியாதை-சமதர்ம இயக்கம் முடிந்து போனது.
மார்க்சியமும், பெரியாரியமும் இனைந்து செயல்படத் துவங்கி சுயமரியாதை-சமதர்ம இயக்கமாக மலர்ந்து வெற்றிகளைக் குவித்து, எதிரிகளை அஞ்சி நடுநடுங்கச் செய்த அந்த அற்புதமான வரலாறு 3 ஆண்டுகளுக்குள் (1933-36) முடிந்து போனது. பெரியாரியமும்,மார்க்சியமும் தொடர்ந்து இனைந்து இருந்தால், மண்ணுக்கேத்த மகத்தான் அந்த இயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தால், அப்போது உருவாகி வந்த எஃகு போன்ற கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த இயக்கத்தோடு இனைந்து செயல்பட்டு இருந்தால் ஒரு வேளை தமிழகத்தின் வரலாறே பிரம்மிக்கத்தக்க அளவில் மாறிப்போய் இருக்கும்.அன்று மக்கள் விருப்பத்தை, மாற்றத்தை கணிக்கத்தவறியதன் விளைவு தான் இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளை பின்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கின்றது. நாட்டில் மதவாதம் பல தரப்பிலும் தலை தூக்கும் இன்றைய நிலையில், புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு சாரார் மட்டுமே மேலும் மேலும் பயனடையும் இன்றைய சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் என்று பெரும்பான்மையான மக்கள் இன்றும் நல்லெண்னம் கொண்ட இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் நாளுக்கு நாள் தேய்ந்தே போகும் காரணம் என்ன என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம். இன்றும் கூலி உயர்வு மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்க்கும் வாரியம் அமைத்து குறைந்தபட்சக் கூலியை சட்டமாக்கி வைத்தது திராவிட இயக்கம். இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கின்றது.... என்ன செயவதென்று யோசியுங்கள் தோழர்களே!



இந்த இடத்தில கம்யூனுஸ்டுகளின் ஆரம்ப நிலையை மிகச் சுருக்கமா பார்த்துவிடுவோம். காங்கிரஸ் கட்சியின் மாநாடு பீகாரில் உள்ல கயாவில் 1922 ம் ஆண்டு நடந்தது. அதில் பங்குபெற்ற "சிந்தனைச் சிற்பி" சிங்காரவேலர் தனது இடி முழக்கத்தால் அனைவரையும் கிடுகிடுக்க வைத்தார். அனைவரும் மகாகணம் பொருந்திய என்று பேச்சைத் துவங்கிய போது கிங்காரவேலர் " தோழர்களே" என தன் பேச்சை ஆரமித்தார். " உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக நான் இங்கு வந்துள்ளேன்" என மகா துணிச்சலுடன் அறிவித்தார். இதில என்ன துணிச்சல் வேண்டி இருக்குன்னு நினைக்கிறீர்களா? அன்றைய பிரிட்டீஷ் அரசில் யாராவது கம்யூனிஸ்ட்டுன்னு தெரிஞ்சா அவன் வாழ்க்கை அத்தோட தரிசு. இந்தியாவிலேயே நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாகவும் தைரியமாகவும் அறிவித்த முதல் இந்தியர் சிங்காரவேலர்தான்.
இவர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டே இன்றைய சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் பிழைத்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனினும் நிஜ வாழ்வில் இவர்கள் சத்தம்போட்டோ, வாய்விட்டோ சபதமெடுத்து காமடி செய்வதில்லை, இவர்களின் பாணி சைலண்டாக சூனியம் வைப்பதாகும். இந்த சைலண்டாக சூனியம் வைக்கும் கலை ஒரு உன்னத கலையாகும். இதனை, கொச்சைத்தமிழில் 'கூட இருந்தே குழிப்பறிப்பது' எனவும் கூறலாம்.




பெண்கள் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்துள்ளோர், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைபாடுவோர் போன்றோரின் உண்மை முகம் போலிடோண்டுவின் இரண்டாம் முகத்தில் இருந்து ஏதாகிலும் வேறானதா?
இதுபற்றி அண்மையில் ஒரு விவாதம் ஓடியது, பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவதால் பெண்களின் குரல்களுக்கு பின்னனி கொடுக்கும் அளவுக்குக் கூட அவர்களின் எழுத்தின் தன்மை இல்லை என்றும் சொல்லப்பட்டது. பெண்களின் சிந்தனையும் அவர்களின் உணர்வுகளும் வேறானது. ஒரு பெண் அவளுக்கான உரியமையுடைய பெயரில் ஆண்கள் எழுதுவதென்பதை ஆணின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் தவிர்த்து வேறு பெண்கள் பெருமையானதாக கருதவில்லை என்றே சொல்கிறார்கள். பெண் பெயரில் எழுதுபவர்களில் பெண்ணுக்காக எழுதுபவகளின் விழுக்காடு மிக மிக குறைவே. அதிலும் பெண் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டு வசைபாடுதல், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைப்படுபதல் என்பது தன்னை மறைத்துக் கொண்டு வசைபாடும் போலி டோண்டு வகையராக்களின் செயலை ஒத்தது தான். ஒரே பெரிய வேறுபாடு போலி டோண்டுவின் வலைப்பதிவு வசையின் தொகுப்பாக இருந்தது. இவர்கள் அந்த அளவுக்கு அதற்காக நேரம் ஒதுக்கவில்லை என்று கூறிக் கொள்ளலாம். அப்படியும் முயன்றிருக்கிறார்கள் அதற்கு நல்லொதொரு உதாரணம் சல்மா அயூப் என்ற பெயரில் இஸ்லாமியர்களைத் திட்டி எழுதப்பட்ட பதிவு. மேலும் ஒரு பெண் பதிவரின் பெயரில் போலிப் பதிவு ஆரம்பிக்கப்பட்டதும் அதை எழுதியவர் யார் என்று வெளியே தெரிந்ததும் பதிவர்கள் அறிந்ததே.

