நண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையை வெளியிடுகிறேன்.
"திராவிடம் ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த எழுச்சி!
கம்யூனிசம் ஒரு வர்கத்தின் அறிவார்ந்த கிளர்ச்சி!"
திராவிடமும் கம்யூனிசமும் என்று எழுதத் துவங்கினால் பதிவல்ல,ஒரு புத்தகமே போடலாம். ஆனால் நான் எழுதப்போவது ஒரு பெரிய சைஸ் பின்னூட்டம் தான்.மோகன் கந்தசாமி சொன்னதுபோல ஆராய்ச்சியெல்லாம் கிடையாது. அதுனால தைரியமா மேல படிங்க.
திராவிட இயக்கத்தின் நோக்கங்களுக்கும்,கம்யூனிச இயக்கத்தின் நோக்கங்களுக்கும் பெரிய வேறுபாடெல்லாம் இருப்பது இல்லை. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான இயக்கமாகத்தான் இரண்டும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே தங்கள் இயக்கங்களையும் நடத்தின. ஒரே மக்களிடம் கிட்டத்தட்ட ஒத்த கருத்தோடு தங்கள் பணியைச் செய்த இரு இயக்கங்களில் ஒரு இயக்கமான கம்யுனிசத்துக்கு பின்னடைவு.ஆனால் திராவிட இயக்கத்திற்கு இன்றும் போட்டியே இல்லாத நிலை.
கம்யூனிச இயக்கம் தமிழகத்தில் தங்கள் மக்கள் பணியைத் துவங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திமுக துவங்கப்பட்டது.ஆனால் அடுத்த பதினெட்டாண்டுகளில் மக்கள் மனதிலும் ஆட்சியிலும் முதற்பெரும் சக்தியாகி அரியணையில் அமர்ந்தது. ஆனால் தமிழகத்தின் இரண்டாம் பெரும் சத்தியாக இருந்த கம்யூனிச இயக்கம் இன்று எத்தனையாவது சக்தி?
தங்களை எப்போதும் சுத்த சுயம்புக்களாக நினைத்துக் கொள்வதால் எந்த இடத்தில்,எந்த நிலையில் இருந்தோம், இப்போது இருக்கின்றோம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் உணர்வதே இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தின் மேல் ஈடுபாடும் ஆதரவும் உடைய பலருக்கும் நம்மைப் போலவே போராட்ட குணமும்,சிந்தனையும் உடைய கம்யூனிச இயக்கம் ஏன் பெரிய அள்வில் வளராமலேயே போனது என்ற எண்னம் எப்போதும் உண்டு.
நாடு சுதந்திரம் அடையவிருந்த காலகட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு இயக்கம்! இன்றைக்கும் காவல்துறையினர் கைவைக்க சற்றே அஞ்சும் அளவிற்கு தீரமுடை ஒரு இயக்கம்! வறுமையையும் கம்பீரத்தோடு எதிர்கொள்ளும் தலைவர்களைக் கொண்டிருந்த ஒரு இயக்கம்! வீட்டைவிட நாடே பெரியது, அனைத்தையும்விட இயக்கமே பெரிது என்ற எண்ணம் உடையவர்களை மட்டுமே தொண்டர்களாய்க் கொண்ட ஒரு இயக்கம்! சாமானியன் ஒருவன் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும் அவன் சார்பாய் ஒலிக்கும் முதல் குரலை தன் குரலாய் கொண்ட ஒரு இயக்கம் திராவிட இயக்கத்தைவிட எங்கு பின்னடைந்தது என்பதை அறிய சில தத்துவங்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உலகின் எந்தப் பிரச்சனையின் மூலமும் இரண்டு தத்துவங்களுக்குள் அடங்கிவிடும். ஒன்று கருத்து முதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம்.( அண்ணே! எங்க ஓடுறீங்க? சும்மா பயப்படாம நில்லுங்க. நானே ஒரு மொக்கச்சாமி. ஆளு மிரண்டு போற அளவுக்கெல்லாம் எழுதவும் வராது,தெரியவும் தெரியாது. முடிஞ்ச அளவு எளிமையாவே விளக்கிடுறேன்)
கருத்து முதல் வாதம்னா வேற ஒன்னும் இல்ல, கருத்துங்கிற வார்த்தைக்கு பதிலா கடவுள்ங்கிற வார்த்தையைப் போட்டுப்பாருங்க.கடவுள் முதல்வாதம்னு ஆகுதா? அவ்வளவுதான் மேட்டரு.அவனின்றி ஓர் அணுவும் அசையாதுன்னு நம்ப பக்தி இலக்கியமெல்லாம் சொல்லுதுல்ல.அதுதான். அதாவது உலகத்துல எந்தப் பிரச்சனை நடந்தாலும், பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய எதிர்த்த வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போனாக்கூட அதுகெல்லாம் காரணம் கடவுள்தான்.ஒருத்தன் ஏழையா இருந்தா அதுக்கு காரணம் ஆண்டவன் அவனுக்கு போட்ட விதி. பணக்காரணா இருந்தா ஆண்டவன் அவனுக்கு போட்ட நல்ல விதி. உழைப்பு,அறிவு,திறமை இந்த மண்ணாங்கட்டியெல்லாம் காரணம் இல்ல. அரைகுறையா விளங்குனமாதிரி இருந்துச்சா? இதுதான் கருத்துமுதல் வாதம்.
பொருள்முதல் வாதம்னா என்ன? பேரே சொல்லுதா என்னான்னு!. அதேதான். எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது பொருளே. பொருட்களின்(பணத்தின்) பங்கீட்டில் எழும் சிக்கலே அனைத்து சிக்கலுக்கும் ஆதார சிக்கலாய் உள்ளது என்று சொல்வது பொருள்முதல் வாதம். அதாவது காசேதான் கடவுளடா! அது கடவுளுக்கே தெரியுமடாங்கற கதைதான்.
சரி! இந்த ரெண்டு தத்துவத்துக்கும் தமிழ்நாட்ல கம்யுனிஸ்ட் இயக்கம் பெரிய அளவில் வளராமல் போனதுக்கும் என்ன சம்மந்தங்குறீகளா? இருக்கே மேட்டரு! நம்ப காரல் மார்க்ஸ் அண்ணன்( நம்பள பத்திதான் தெரியுமே உங்களுக்கு! நமக்கு எல்லோரும் அண்ணந்தான்) அவர் ஊர்ல உள்ள நடப்ப ஒட்டி சில விஷயங்கள சொன்னாரு.அதை இங்கே உள்ள கம்யூனிஸ்டுகள் நம்ம மண்ணோட தன்மைக்கேறப அணுகவில்லை. மார்கஸ் அண்ணே ஊருல சாதி பேதம் கிடையாது. அங்க ஆண்டான் அடிமை முறை மட்டும்தான். அந்த அடிமையும் தன் உழைப்பாலோ அல்லது கடவுள் அருளாலோ முன்னேறி கொஞ்சம் காசோ நிலமோ பார்த்துவிட்டால் அடுத்த நொடியே அவனும் ஆண்டான் ஆகிவிடுவான். ஏற்கனவே உள்ள பழைய ஆண்டானும் நம்ப புது ஆண்டானும் இமிடியேட்டா சம்மந்தி ஆயிரலாம்.
ஆனா இங்க பிரச்சனையே வேற! மேல்சாதி,கீழ்சாதி வித்யாசம். நிலமும் காசும் ஆதிக்க சாதிகளிடத்தில். உழைப்பும்,வறுமையும் அடக்கப்பட்ட சாதிகளிடத்தில். இங்க வறுமைங்கிறது சாதியோட சம்மந்தப்பட்டதா இருந்தது.ஒரு சூத்திரன் தனது உழைப்பாலோ அல்லது கடவுள் அருளாலோ முன்னேறி விட்டால் அவன் மேல்சாதி அந்தஸ்தைப் பெறுவானா என்றால் பதில் எப்போதும் கிடையாது என்பதுதான். எளிய நிலையில் உள்ள ஒரு பிராமணர் லட்சாதிபதியான ஒரு சூத்திரரை விட எப்பொழுதும் அந்தஸ்தில் உயர்ந்தவர்.
அடிமை சாதிகளான பிற்பட்ட தாழ்தப்பட்ட சாதிகள் எந்தக்காலத்திலும் பொருளின் பெயரால் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளமுடியாது. அந்தஸ்தும், கவுரவமும் பிறப்பின் பெயரால் சாதியின் பெயரால் வருபவை. இந்த வித்யாசத்தை கம்யூனிஸ்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட தவறி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதைத்தான் கையில் எடுத்தது திராவிட இயக்கம்.
கம்யூனிச இயக்கம் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தபோது ஆந்திராவில் இருந்து இங்கு வந்து இயக்கப்பணி செய்த சீனிவாசராவ் போன்ற தோழர்கள் தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் கூலிகளாக இருந்தவர்களிடையே கூலி உயர்வு பற்றிய சிந்தனையை எழுப்பினர். பின்னர் இவை மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவி தொழிலாளர்கள் இடையே கம்யூனிச இயக்கத்திற்கு ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.
இந்நிலையில் 1925 ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவக்கி கெளரவம் என்பது காசில் பொதுவுடமையாக இருப்பது மட்டும் அல்ல சமூக சமதர்மத்திலும்தான் என்று சுயமரியாதைப் பிரசாரம் செய்யத் துவங்கினார். மனித மனம் இயல்பாகவே விரும்பும் சுயமரியாதையை, ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்து இழந்து போன சுயகவுரவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழ் சமுதாயம் வர்க்க பேதமின்றி திராவிட இயக்கத்தின் பின் பெரியார் தலைமையில் மெல்ல மெல்ல அணி வகுக்கத் துவங்கியது.
அப்பொழுதுகூட இந்த மனமாற்றத்தை கம்யூனிஸ்டுகள் உணரவில்லை. அது எப்படி என்பதற்கு ஒரு பெரிய வரலாற்று உதாரணமும் இருக்கு. ஒரு கட்டத்தில் பொதுவுடமை இயக்கமும்,சுயமரியாதை இயக்கமும் கை கோர்த்தன. ஆனால் கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் குறுகிய காலத்திலேயே அக்கைகள் பிரிந்து போயின.
இந்த இடத்தில கம்யூனுஸ்டுகளின் ஆரம்ப நிலையை மிகச் சுருக்கமா பார்த்துவிடுவோம். காங்கிரஸ் கட்சியின் மாநாடு பீகாரில் உள்ல கயாவில் 1922 ம் ஆண்டு நடந்தது. அதில் பங்குபெற்ற "சிந்தனைச் சிற்பி" சிங்காரவேலர் தனது இடி முழக்கத்தால் அனைவரையும் கிடுகிடுக்க வைத்தார். அனைவரும் மகாகணம் பொருந்திய என்று பேச்சைத் துவங்கிய போது கிங்காரவேலர் " தோழர்களே" என தன் பேச்சை ஆரமித்தார். " உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக நான் இங்கு வந்துள்ளேன்" என மகா துணிச்சலுடன் அறிவித்தார். இதில என்ன துணிச்சல் வேண்டி இருக்குன்னு நினைக்கிறீர்களா? அன்றைய பிரிட்டீஷ் அரசில் யாராவது கம்யூனிஸ்ட்டுன்னு தெரிஞ்சா அவன் வாழ்க்கை அத்தோட தரிசு. இந்தியாவிலேயே நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாகவும் தைரியமாகவும் அறிவித்த முதல் இந்தியர் சிங்காரவேலர்தான்.
இந்தியாவிலேயே உலகத் தொழிலாலர்களின் ஒற்றுமை தினமான "மே தினத்தை" முதன் முதலில் கொண்டாடிய சிரப்பைப் பெற்றவர் சிங்காரவேலர். கொண்டாடிய சிறப்பைப் பெற்ற நகரம் நம்ப சென்னை நகரம். கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் விடத்துவங்கியதை அறிந்த வெள்ளையர் அரசு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது சொல்லில் வடிக்க இயலாத அடக்குமுறையை ஏவத்துவங்கியது.
1928 -ம் ஆண்டில் நடைபெற்ற புகழ்பெற்ற இரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு சிங்காரவேலர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு கடும்காவல் தண்டணை பெற்றார். பின் மேல் முறையீட்டில் 2 ஆண்டு ஆக்கப்பட்டு 1930 ல் விடுதலை ஆனார். இதற்கிடையே 1925 ல் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கம் மக்களிடையே முழுமையாக சென்று அடைந்திருந்த நேரம். ஒருபுறம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்!மறுபுறம் சமதர்மச் சுடரொளி சிங்காரவேலர்! இரண்டு சரித்திரங்களும் இணைந்தன! பிறந்தது சுயமரியாதை-சமதர்ம இயக்கம்.
பகுதி - 2
31 comments:
அருமையான ஆராய்ச்சி அப்துல்லா. பாராட்டுக்கள்.. இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்.
கலக்கலாக துவங்கி இருக்கிறீர்கள்,பல தெரியாத விஷயங்களுடன். இந்தத் தலைப்பில் எழுதினால் வாழ்த்தை விட திட்டித் தான் அதிக பின்னூட்டம் வரும். கலங்காமல் இரண்டாம் பாகத்தைத் தொடருங்கள்.
இப்படிக்கு,
அனுபவப்பட்டவன்.
நல்லா எழுதி இருக்கிங்க அப்துல்லா.
பல செய்திகளை அறிந்து கொண்டேன்
அண்ணா, ரொம்ப நல்ல எடுத்துக்கிட்டு போகறீங்க. அடுத்தப் பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கேன். சிம்பிளா சொல்லனும்னா, திராவிட இயக்கங்கள் மாநிலம் எனும் கண்ணாடி மூலமா நாட்டை பார்த்துச்சி, அதனால் நம்மிடையே ஜாஸ்தி செல்வாக்கு பெற்றிருக்குன்னும், ஆனா கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நாடு எனும் கண்ணாடி மூலமா மாநிலத்தை பார்த்ததால் நம் தமிழ்நாட்டில் அவ்வளவு செல்வாக்கு பெறலைன்னும் நினைக்கறேன்(நன்றி: ப.சி)
//உலகின் எந்தப் பிரச்சனையின் மூலமும் இரண்டு தத்துவங்களுக்குள் அடங்கிவிடும். ஒன்று கருத்து முதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம்.( அண்ணே! எங்க ஓடுறீங்க? சும்மா பயப்படாம நில்லுங்க. நானே ஒரு மொக்கச்சாமி. ஆளு மிரண்டு போற அளவுக்கெல்லாம் எழுதவும் வராது,தெரியவும் தெரியாது. முடிஞ்ச அளவு எளிமையாவே விளக்கிடுறேன்)
கருத்து முதல் வாதம்னா வேற ஒன்னும் இல்ல, கருத்துங்கிற வார்த்தைக்கு பதிலா கடவுள்ங்கிற வார்த்தையைப் போட்டுப்பாருங்க.கடவுள் முதல்வாதம்னு ஆகுதா? அவ்வளவுதான் மேட்டரு.அவனின்றி ஓர் அணுவும் அசையாதுன்னு நம்ப பக்தி இலக்கியமெல்லாம் சொல்லுதுல்ல.அதுதான். அதாவது உலகத்துல எந்தப் பிரச்சனை நடந்தாலும், பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய எதிர்த்த வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போனாக்கூட அதுகெல்லாம் காரணம் கடவுள்தான்.ஒருத்தன் ஏழையா இருந்தா அதுக்கு காரணம் ஆண்டவன் அவனுக்கு போட்ட விதி. பணக்காரணா இருந்தா ஆண்டவன் அவனுக்கு போட்ட நல்ல விதி. உழைப்பு,அறிவு,திறமை இந்த மண்ணாங்கட்டியெல்லாம் காரணம் இல்ல. அரைகுறையா விளங்குனமாதிரி இருந்துச்சா? இதுதான் கருத்துமுதல் வாதம்.
பொருள்முதல் வாதம்னா என்ன? பேரே சொல்லுதா என்னான்னு!. அதேதான். எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது பொருளே. பொருட்களின்(பணத்தின்) பங்கீட்டில் எழும் சிக்கலே அனைத்து சிக்கலுக்கும் ஆதார சிக்கலாய் உள்ளது என்று சொல்வது பொருள்முதல் வாதம். அதாவது காசேதான் கடவுளடா! அது கடவுளுக்கே தெரியுமடாங்கற கதைதான்.
//
Since 20 years I am knowing these two words. This is the first time I understand the meaning. Thank you very much. Keep write in such easy understandable way
வெண்பூ said...
இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்.
//
ஹி...ஹி..ஹி.. நானும் தான்.
வாங்க அனானி அனுபவப்பட்டவன்!
இந்தத் தலைப்பில் எழுதினால் வாழ்த்தை விட திட்டித் தான் அதிக பின்னூட்டம் வரும். கலங்காமல் இரண்டாம் பாகத்தைத் தொடருங்கள்.
இப்படிக்கு,
அனுபவப்பட்டவன்.
//
என்னங்க ஆரமிக்கையிலேயே பீதியக் கிளப்புறீக? தெரியாம மாட்டிக்கிட்டேனா இங்க....
கோவி.கண்ணன் said...
நல்லா எழுதி இருக்கிங்க அப்துல்லா.
பல செய்திகளை அறிந்து கொண்டேன்
//
அண்ணே உங்களைப் போன்ற விஷய ஞானியின் பாராட்டு மகிழ்வளிக்கிறது.
வா ராப்,
//ஆனா கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நாடு எனும் கண்ணாடி மூலமா மாநிலத்தை பார்த்ததால் நம் தமிழ்நாட்டில் அவ்வளவு செல்வாக்கு பெறலைன்னும் நினைக்கறேன்(நன்றி: ப.சி)
//
ஓரு சிறு திருத்தம். கம்யூனிஸ்டுகள் மாஸ்கோங்கிற கண்ணாடிவழியா உலகைப் பார்த்தார்கள். உலகம்ங்கிற கண்ணாடி வழியா எதுவுமே பார்க்கல :(
வாங்க எட்வின் அண்ணே
Edwin said...
Keep write in such easy understandable way
//
அண்ணே வலைஉலகில் எல்லார்கிட்டயும் கேட்டுப் பாருங்க..நா ஓரு மொக்கச்ச்ச்மிண்ணே. இவ்வளவு தான் எனக்குத் தெரியும். :)))
வித்தியாசமான கருத்தோட்டத்தில் அமைந்துள்ளது உங்களது வாதம்... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
மிக ஆழமான ஆராய்சிக் கட்டுரை. இக் கட்டுரையில் அதற்கான் கடுமையான தயாரித்தலும், ஆழமான வாசித்தலும் புலப்படுகின்றது.
மிக எளிய வார்த்தைகளில் கம்யூனிஸ்டுகளுக்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
விரைவில் இரண்டாம் பாகத்தை எதிர்பார்கிறோம்.
ஏனுங்க, இப்படி நல்ல ஆராய்சிக் கட்டுரையெல்லாம் சுவையா எழுதுற அளவுக்கு திறமைய உள்ளார வைச்சுக்கிட்டு, எதுக்குங்கண்ணே மொக்கை என்ற தளத்தில் மட்டுமே இருக்கீங்க? மொக்கை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் மொக்கை மட்டுமே வாழ்க்கையல்ல. உங்கள் வலையிலும் இது போன்ற ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வெளியிடுங்கள்.
ஹி ஹி அண்ணே, அவங்க பார்வை விரிவடஞ்சு, சீனா, கியூபா வழியா எல்லாம் கூட பாக்கறாங்க. நீங்க அவங்களோட பார்வையை இப்படி குறைச்சு மதிப்பிட்டுட்டீங்களே:):):)
rapp said...
ஹி ஹி அண்ணே, அவங்க பார்வை விரிவடஞ்சு, சீனா, கியூபா வழியா எல்லாம் கூட பாக்கறாங்க. நீங்க அவங்களோட பார்வையை இப்படி குறைச்சு மதிப்பிட்டுட்டீங்களே:):):)
//
அவங்களுக்கு ஓலகப் பார்வைன்னா ஓனக்கு ஓலக நக்கலு ஹி...ஹி...ஹி...
ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் வலையிலும் இது போன்ற ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வெளியிடுங்கள்.
//
வெளியிடுவேன் ஆனா அண்ணன் ச்சின்னப்பையன்,வெண்பூ,தாமிரா,ராப் எல்லாம் என்னை உதைப்பாங்களே!!!
தமிழ் பிரியன் said...
வித்தியாசமான கருத்தோட்டத்தில் அமைந்துள்ளது உங்களது வாதம்... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ்
அப்துல், சீரியஸான பதிவாக இருப்பதால் படித்துவிட்டே வருகிறேன்.
மிக நல்ல துவக்கம். ஒரு தேர்ந்த கட்டுரையாளரின் புத்தகத்தை வாசிப்பது போன்ற எண்ணத்தை தருகிறது. வாழ்த்துகள் அப்துல்லா. தலைப்பிலோ அல்லது ஆரம்பத்திலோ "தமிழகத்தில் அல்லது இங்கே.." '..திராவிடமும் கம்யூனிஸமும்' என்று இருந்திருக்கவேண்டுமோ?
வாங்க தாமிரா அண்ணே
//
ஒரு தேர்ந்த கட்டுரையாளரின் புத்தகத்தை வாசிப்பது போன்ற எண்ணத்தை தருகிறது.
//
ஓஹோ...எண்ணத்தையெல்லாம் தருதா? குட்!குட்! :))
//தலைப்பிலோ அல்லது ஆரம்பத்திலோ "தமிழகத்தில் அல்லது இங்கே.." '..திராவிடமும் கம்யூனிஸமும்' என்று இருந்திருக்கவேண்டுமோ?
//
திராவிடம் என்பதே தமிழகத்தில்தானே?
20
21
22
23
25:):):)
அடடா ராப்பிடம் இருந்து கண்ணாபின்னா ஆதரவா?
மண்ணுக்குள் உறங்கும் தங்கத்தை வெட்டி எடுத்ததுப் போல், புதுகை அப்துல்லாவை வெளிக்கொணர்ந்ததற்கு மோகனுக்கு பாராட்டுக்கள்...தாமதமாகவே பார்த்தேன்...அருமையான, எளிதான நடை...கனமான விதயங்கள்....கலக்கல்...
எளிமையான விளக்கம் நண்பரே!
அருமையான பதிவு
நன்றி TBCD அவர்களே!
nice post!
மிக எளிய நடையில் கூற வந்த கருத்தை ஆழமாக கூறிவிட்டீர்கள்
நல்லா எழுதி இருக்கிங்க அப்துல்லா
BY
MURALI
Post a Comment