நண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையின் இறுதி பகுதியை வெளியிடுகிறேன். முதல் பகுதி சென்ற பதிவில்.
தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இனைந்து "சுயமரியாதை-சமதர்ம இயக்கம்" என்ற இயக்கத்தை தோற்றுவித்தனர்.இந்த இயக்கும் தோன்றுவதற்கு முன் 1927 ல் மே தினத்தன்று அவருடைய குடியரசு இதழில் இப்படி எழுதுகிறார்.
"பொதுவாக எனது பிரசங்கத்தில் அரசியல் தலைவர்களை, மதத்தை, குருக்களை, கோவிலை, அரசாங்கத்தை, நீதிஸ்தலத்தை, தேர்தல் அமைப்பை, இன்னும் பிறவற்றை, யார் யாரையோ எதுஎதற்கோ கண்டித்து இருக்கிறேன். நான் கண்டிக்காத திட்டமோ, இயக்கமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படவே மாட்டேன் என்கிறது" என எழுதிய பெரியாரின் கண்களில் பட்டது சிங்காரவேலரின் இயக்கமும், திட்டமும்,யோசனையும்.
இருவரின் கூட்டு முயற்சியால் சுயமரியாதை இயக்கத்தவரிடையேயும், பொதுமக்களிடமும் கம்யூனிசக் கருத்துக்கள் விரிவாக பரவத்துவங்கின. ஈரோட்டுப் பாதை என பின்னால் பெயர் பெற்ற திட்டத்தை சிங்காரவேலரும்,பெரியாரும் உருவாக்கினார்கள்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக "தென்னிந்திய சமதர்ம கட்சி" என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி துவங்கவும் ஏற்பாடு நடந்தது. இதையடுத்து நடந்த கூட்டங்களில் பெரியாரின் பேச்சில் தீப்பொறி பறந்தது. அதுவரை சாதி, மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு போன்ற சமூக பிரச்சனைகளை மட்டுமே பேசப்பட்ட நிலைமாறி அரசியல், பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளும் முன்னிறுத்தப்பட்டன. ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும் போது "பொதுவுடமை அரசுமுறை இந்தியாவில் ஏற்பட என்ன தடை என்று தெரியவில்லை. பொதுவுடமையை ஏன் விரும்புகின்றோம் எனச் சொல்ல பயப்படத் தேவை இல்லை. எல்லோரும் புரட்சிக்குத் தயாராக இருக்க வேண்டும்.பயப்படக் கூடாது. அதனால் என்ன பின்விளைவு ஏற்பட்டாலும் சரி. இதை புரட்சி என்றால் பயப்படாதீர்கள். இது நடக்கும்! நடந்தே தீரும்!" என முழங்கினார்.
இதே நேரத்தில் சிங்கார வேலர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அவர் எழுதிய 'பொதுவுடமை விளக்கம்' என்ற புத்தகத்தில் கம்யூனிசத்தை வெறும் அரசியல்,பொருளாதார சித்தாந்தமாக சுருக்கிக் கூறாமல் சமூகவியல், பண்பாடு போன்ற அனைத்தையும் தழுவிய சித்தாந்தமாக அவர் சித்தரித்தார். சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா சிங்காரவேலருடன் தொடர்பில் இருந்து தமிழகம் முழுவதும் சென்று சமதர்ம சங்கங்களை அமைக்க வழிகாட்டினார்.
இப்படிப்பட்ட போக்குகள் அனைத்தையும் கண்டு அஞ்சிய வெள்ளையர் அரசு தனது தாக்குதலைத் துவங்கியது. "இன்றைய ஆட்சி ஏன் போக வேண்டும்?" என்ற குடியரசு இதழின் தலையங்கத்தை காரணம் காட்டி பெரியாரையும் அவர் சகோதரி கண்ணம்மாவையும் 1933 டிசம்பர் 30 நாள் சிறையில் அடைத்தனர். பெரியார் சிறைப்பட்ட போதும் அதற்குப் பின்பும் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன்.
பகத்சிங்கின் "நான் ஏன் நாத்தீகன் ஆனேன்" என்ற புத்தகத்தை மொழி பெயர்த்தற்காக தோழர் ஜீவாவையும், ஈ.வெ.கிருட்டிணசாமியையும் 1935 பிப்ரவரி முதல் வாரத்தில் அரசு கைது செய்தது. ஜாமீனில் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பெரியார் கூறியபடி இருவரும் அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். இந்த நிகழ்வு கம்யூனிஸ்டுகளிடையே கோழைத்தனமான செயலாக பார்க்கப்பட்டு பெரியார் மேல் வெறுப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை பெரியார் வெளியிடுகிறார். முதல் அறிக்கை 10/03/1935 அன்றும் இரண்டாவது அறிக்கை 31/03/1935 அன்றும் குடியரசு இதழில் வெளியாயின.
முதல் அறிக்கையில் "மேல்சாதி ஆதிக்க காங்கிரஸை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் சாதி, மத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமே ஆகும். இவற்ரைப் பற்றி பிரசாரம் செய்யவும், அமுல்படுத்தவும் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டீஷ் ஆட்சியே மேலானது என்பது எனது அபிப்ராயம் ஆகும்" என்றார்.
இரண்டாவது அறிக்கையில் "ஈ.வெ.கிருஷ்ணசாமி, ப.ஜீவானந்தம் ஆகிய இரு தோழர்களும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கு நானே ஜவாப்தாரி என அறிவித்துக் கொள்கிறேன். இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும் அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேஸையே பொறுத்தது மாத்திரம் அல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். மக்களுக்கு சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல பொருளாதார கொடுமைகளும் தீர வேண்டியது அவசியம் என நாம் கருதியதால் பொருளாதாரம் சம்மந்தமாக சிறிது பிரச்சாரம் செய்ய ஆரமித்தோம். என்றாலும் அரசாங்கத்தார் தப்பபிப்ராயத்தைக் கொண்டு இயக்கத்தை அடக்குமுறைப் பிரயோகம் கொண்டு முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். சர்க்காரோடு இந்த மாதிரி ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சத்தில் சர்க்கருக்கும், நமக்கும் வீண் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்திற்கு வர வேண்டியுள்ளது." எனக் குறிப்பிட்டார்.
அதாவது கம்யூனிச சார்புடைய எந்த இயக்கத்தையும் எப்படியும் அழித்து விடுவது என்ற நிலையில் பிரிட்டீஷ் அரசாங்கம் இருந்ததால் பெரியார் அரசோடு மோதி ஆரம்ப நிலையிலேயே இயக்கம் அழிந்து விடாமல் அரசின் போக்கிலேயே விட்டுப்பிடித்து முதலில் இயக்கத்தை காப்பது என்ற நிலையில் இருந்தார். ஆனால் பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்கு சிங்காரவேலர், ஜீவா மற்றும் பலர் எதிப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிங்காரவேலர் 'புதூலகம்' என்ற இதழைத் 1935 மே தினத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தை விமர்சித்தும் தீவிர கம்யூனுசத்தை வலியுறுத்தியும் கட்டுரைகளை எழுதிவந்தார். பெரியாரின் போக்கை எதிர்த்த ஜீவா போன்றோரும் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினர். கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் கருவாகி உருவாகும் நேரத்தில் குறைப் பிரசவக் குழந்தையாய் சுயமரியாதை-சமதர்ம இயக்கம் முடிந்து போனது.
மார்க்சியமும், பெரியாரியமும் இனைந்து செயல்படத் துவங்கி சுயமரியாதை-சமதர்ம இயக்கமாக மலர்ந்து வெற்றிகளைக் குவித்து, எதிரிகளை அஞ்சி நடுநடுங்கச் செய்த அந்த அற்புதமான வரலாறு 3 ஆண்டுகளுக்குள் (1933-36) முடிந்து போனது. பெரியாரியமும்,மார்க்சியமும் தொடர்ந்து இனைந்து இருந்தால், மண்ணுக்கேத்த மகத்தான் அந்த இயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தால், அப்போது உருவாகி வந்த எஃகு போன்ற கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த இயக்கத்தோடு இனைந்து செயல்பட்டு இருந்தால் ஒரு வேளை தமிழகத்தின் வரலாறே பிரம்மிக்கத்தக்க அளவில் மாறிப்போய் இருக்கும்.
அன்று மக்கள் விருப்பத்தை, மாற்றத்தை கணிக்கத்தவறியதன் விளைவு தான் இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளை பின்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கின்றது. நாட்டில் மதவாதம் பல தரப்பிலும் தலை தூக்கும் இன்றைய நிலையில், புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு சாரார் மட்டுமே மேலும் மேலும் பயனடையும் இன்றைய சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் என்று பெரும்பான்மையான மக்கள் இன்றும் நல்லெண்னம் கொண்ட இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் நாளுக்கு நாள் தேய்ந்தே போகும் காரணம் என்ன என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம். இன்றும் கூலி உயர்வு மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்க்கும் வாரியம் அமைத்து குறைந்தபட்சக் கூலியை சட்டமாக்கி வைத்தது திராவிட இயக்கம். இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கின்றது.... என்ன செயவதென்று யோசியுங்கள் தோழர்களே!
48 comments:
//சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம்.//
ஒத்துக்கொள்கிறேன்.சிறு வயதில் இருந்து பெரியாருடன் இருந்த என் தாத்தாவுடன் வளர்ந்தவன்.திராவிட இயக்கம் செய்த நன்மைகள் ஏராளம் அதை பல சமயம் நேரில் பார்த்தவன் என்ற முறையில் உங்கள் ஆய்வை பாராட்டுகிறேன்
me the second
அண்ணே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. எங்கப்பா இதயெல்லாம் தான் சின்ன வயசுல எங்களுக்கு சொல்வார்.
//சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம்.//
சும்மா நச்சுன்னு இருக்கு. இனி இதுமாதிரி நெறைய நச்சுன்னு எழுதுங்க. சூப்பர்:):):)
ஒத்துக்கொள்கிறேன்.சிறு வயதில் இருந்து பெரியாருடன் இருந்த என் தாத்தாவுடன் வளர்ந்தவன்.
//
வாய்ப்பு இருப்பின் உங்க தாத்தாவைச் சந்திக்க விரும்புகின்றேன்
அருமை.. அருமை.. அப்துல்லா.. எனக்கு இந்த செய்திகளும், சொல்லப்பட்ட விதமும் முற்றிலும் புதிது. நன்றிகள்.
7
8
9
10
அதற்குள் முடிந்து விட்டதே என்று தோன்றுகிறது.
சில வரலாற்று நினைவுகள் ஆறாத வடுக்களாக தான் இருக்கின்றன.
நடந்து முடிந்ததை பற்றி நான் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை,
ஆனால் பெரியாரும், கம்யூனிசமும் பிரிந்ததை பற்றி கவலைப்படுகிறேன்
நாப் ஓரு காலத்துல 100 போட வந்தப்ப வரிசையா நம்பர்ல கமெண்ட்ட போட்ட. அப்புறம் 50 இந்த மாதிரி போட்ட. அப்புறம் 25.இப்போ 10 ஐயும் இதுமாதிரி போடுற. இனிமே 1 போடுறதுக்கு -95,--96,-97,-98,-99,0,1 இப்படி ஆரமிப்பியோ?
போன பின்னூட்டத்தில் ராப் என்பதற்கு பதிலா நாப் என்று தவறாக வந்துவிட்டது.
வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி வெண்பூ :)
வாங்க வால்பையன்
//நடந்து முடிந்ததை பற்றி நான் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை,
ஆனால் பெரியாரும், கம்யூனிசமும் பிரிந்ததை பற்றி கவலைப்படுகிறேன்
//
உண்மைதான் வாலு
பல தகவல்களை எழுதி இருக்கிறீர்கள், குறிப்பாக சிங்கார வேலர் பற்றி நீங்கள் எழுதிய பிறகே அறிந்து கொண்டேன்.
பெரியார்தான் தமிழக கட்சிகளாக இருந்தாலும், தேசிய கட்சிகளாக இருந்தாலும் அவை தமிழகத்தில் காலூன்றியதற்கு பெரியார் தான் காரணம். காங்கிரஸ், கம்யூனிஸம், திராவிட கட்சிகள் இவற்றையெல்லாம் பெரியாரே வளர்த்து இருக்கிறார்.
அருமையான தகவல்கள் தம்பி அப்துல்லா, இன்னும் பல அரசியல் கட்டுரைகள் வரும் காலத்தில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.
இல்லைண்ணே, இது தமிழ்மணம் மறுமொழிகள் பகுதியில் வந்தால் இன்னும் நெறயப் பேர் படிப்பாங்க இல்ல, அதான். பலப்பேருக்கு இந்தப் பதிவு தெரியாம போய்டப் போகுதுன்னு செஞ்சேன். நல்ல கட்டுரை ஆச்சே, நடு ராத்திரியில உக்காந்து கம்ப்ளீட் பண்ணீங்க இல்லையா:):):) (இது சீரியஸ் பின்னூட்டம் இல்லை, அதால பதிலும் நக்கலா இருக்கணும்)
//இனிமே 1 போடுறதுக்கு -95,--96,-97,-98,-99,0,1 இப்படி ஆரமிப்பியோ? //
கம்யூனிசம் தெரிஞ்ச அளவுக்கு உங்களுக்கு கணக்கு தெரியலயே அப்துல்லா...
அது -4, -3, -2, -1, 0, 1 அப்படி வரனும். :)))))
****
இட்லிவடை சைட் பாத்தீங்களா? செஸ் மோஹனப்பிரியாவுக்கு நீங்க பண்ண ஹெல்ப் பத்தி போட்டிருக்காங்க..
பெரியார்தான் தமிழக கட்சிகளாக இருந்தாலும், தேசிய கட்சிகளாக இருந்தாலும் அவை தமிழகத்தில் காலூன்றியதற்கு பெரியார் தான் காரணம். காங்கிரஸ், கம்யூனிஸம், திராவிட கட்சிகள் இவற்றையெல்லாம் பெரியாரே வளர்த்து இருக்கிறார்.
//
100% உண்மை அண்ணே
20
இது சீரியஸ் பின்னூட்டம் இல்லை, அதால பதிலும் நக்கலா இருக்கணும்)
//
நக்கல் (நீ சொன்ன மாதிரியே பதில் சொல்லிட்டேன் )
வெண்பூ கமெண்ட் பப்ளிஸ் செய்த அப்புறம் தான் உருத்துச்சு. சரி இத யாரு கவனிக்கப் போறான்னு விட்டுட்டேன்.பாருங்க அல்காரிதம் எல்லாம் படிச்ச ராப்பே கவனிக்கல :)
புதுகை,
கட்டுரைகள் இரண்டும் அற்புதம். ஆனால், நான் தொலைபேசியில் கூறியதையே இங்கு ஒரு முறை கூற விரும்புகிறேன். நல்ல கட்டுரையின் நடுவே கலோக்கியலான வாசகங்களை தவிர்த்திருக்கலாம்.
பிரமாதம். இரண்டு குட்டிப்பதிவுகளில் ஒரு பெரிய சரித்திரத்தை சொல்வதை ஓரளவு சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.!
me the 25
:):):)
///இல்லைண்ணே, இது தமிழ்மணம் மறுமொழிகள் பகுதியில் வந்தால் இன்னும் நெறயப் பேர் படிப்பாங்க இல்ல, அதான். பலப்பேருக்கு இந்தப் பதிவு தெரியாம போய்டப் போகுதுன்னு செஞ்சேன்.////
அடடே! இது எனக்கு தோணாம போச்சே! நல்ல யோசிக்கறீங்க! நன்றி ராப்.
ராப் தரும் ஆதரவு பிரம்மிக்க வைக்கிறது. (ஆமா இன்னும் வேலை கிடைக்கலயா)
வேலையில இருக்கிற நீங்கல்லாம் அப்டியே வேலையா பாக்கறீங்க?:):):)
30
//இது சீரியஸ் பின்னூட்டம் இல்லை, அதால பதிலும் நக்கலா இருக்கணும்)
//
நக்கல் (நீ சொன்ன மாதிரியே பதில் சொல்லிட்டேன் )//
நீங்க இப்படி போங்காட்டம் அடுவீங்கன்னு தெரியும், நல்லா படிச்சுப் பாருங்க, 'நக்கலா' பதில் சொல்லுங்கன்னு சொல்லிருக்கேன், 'நக்கல்னு' பதில் சொல்லுங்கன்னு சொல்லலயே, அஸ்கு புஸ்கு
வேலையில இருக்கிற நீங்கல்லாம் அப்டியே வேலையா பாக்கறீங்க?:):):)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தாமிரா said...
பிரமாதம். இரண்டு குட்டிப்பதிவுகளில் ஒரு பெரிய சரித்திரத்தை சொல்வதை ஓரளவு சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.!
//
நன்றி தாமிரா அண்ணே
மோகன் கந்தசாமி said...
புதுகை,
கட்டுரைகள் இரண்டும் அற்புதம். ஆனால், நான் தொலைபேசியில் கூறியதையே இங்கு ஒரு முறை கூற விரும்புகிறேன். நல்ல கட்டுரையின் நடுவே கலோக்கியலான வாசகங்களை தவிர்த்திருக்கலாம்.
//
அண்ணே உங்களுக்கு தெரியாதது இல்ல...நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். என் மக்களின் மொழி என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் பிரியாது. சார், மேடம் என்று அழைப்பதை விட அண்ணே, அக்கா என்று அழைப்பதை எளிதாக உணருகிறேன்.
:)
அப்துல்லா!
அசத்தல்ம்மா!
ஒரு நேர்த்தியான
கட்டுரையாளனின்
வீச்சு தெரிகிறது.
வாழ்த்துக்கள்...
என்னையறியாமல்
வந்த
ஆனந்தக்கண்ணீரை
கட்டுப்படுத்தமுடியாமல்....
நல்ல தரமான கட்டுரை.. சட்டுன்னு முடிஞ்சுப்போச்சே.. இன்னுமொரு பாகம் எப்படி கருத்து முதல் வாதத்தை எதிர்த்த வழி வந்தவங்க எல்லாம் இப்போ பொருள் முதல் வாதத்தில முன்னிலை வகிக்கராங்க என்பதை பற்றி எழுதி இருக்கலாம்..
அசத்தலாக எழுதியிருக்கிறீர்கள் அப்துல்லா. மோகன் கந்தசாமிக்கு நன்றிகள்
தெளிவா எளிமையா எழுதி இருக்கீங்க அப்துல்லா. வாழ்த்துக்கள்.
மோகன், பேச்சு நடைல எழுதி இருக்கிறது என்னை போல ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகர்களுக்கு படிக்க ரொம்ப எளிதா இருக்கு. புரிந்து கொள்ளவும் ரொம்ப வசதியா இருந்தது.
என்னையறியாமல்
வந்த
ஆனந்தக்கண்ணீரை
கட்டுப்படுத்தமுடியாமல்....
//
என் ஓவ்வொரு முயற்சிகளிலும் என்னை வாழ்த்திப் பாராட்டும் உங்கள் அன்பு உள்ளத்திற்கு முன்னால் என்னை மிகவும் சிறிதாக உணர்கிறேன். நன்றி சுரேகாண்ணே...
வாங்க பாரத் அண்ணே
//இன்னுமொரு பாகம் எப்படி கருத்து முதல் வாதத்தை எதிர்த்த வழி வந்தவங்க எல்லாம் இப்போ பொருள் முதல் வாதத்தில முன்னிலை வகிக்கராங்க என்பதை பற்றி எழுதி இருக்கலாம்..
//
மோகனண்ணே சரின்னாருன்னா அவரோட 100 வது சிறப்பு பதிவுல எழுதிருவோம் :)
// மோகனண்ணே சரின்னாருன்னா அவரோட 100 வது சிறப்பு பதிவுல எழுதிருவோம் :)//
நாங்க எல்லாம் நாளைக்கு பரீட்சைக்கு இன்னைக்கு படிச்சு பாசாகர புள்ளைக .
எங்களை போய் அவளோ நாள் காத்து இருக்க சொன்னா எப்படி அண்ணே.
ஒத்துக்கொள்கிறேன்.சிறு வயதில் இருந்து பெரியாருடன் இருந்த என் தாத்தாவுடன் வளர்ந்தவன்.
//
வாய்ப்பு இருப்பின் உங்க தாத்தாவைச் சந்திக்க விரும்புகின்றேன்//
எட்டு வருடம் தாமதமான விருப்பம்.:-)
திராவிடம், கம்யூனிசம் தொடர்பான பதிவு என்பதால் இந்த சுவையான செய்தி சொல்கிறேன். என் தாத்தா பெரியாரிடம் குறிப்பிட்ட இடத்தில் அரசுக்கு தெரிவித்துவிட்டு தண்டவாளத்தை உடைக்கும் போராட்ட வழிமுறை ஒன்றை சொல்லியிருக்கிறார். அதற்கு பெரியார் நல்ல யோசனை தண்டவாளம் , ஆனா தீ.கம்யூக்கள் சொல்லாமல் வேறு இடத்தில் பேர்த்தால் உயிர்கள் போக வாய்ப்பு உள்ளது என்று கூறினாராம். அன்று முதல் தாத்தா தண்டவாளம் ராஜகோபால் என்றே அழைக்கபட்டார்.
வாங்க முரளிகண்னன் அண்ணே!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி :)))
வருகை தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்!
மிக எளிய நடையில் கூற வந்த கருத்தை ஆழமாக கூறிவிட்டீர்கள்
//சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம்.//
அண்ணா கலக்கிட்டிங்க போங்க.................
இணையத்தளத்தில் இளம்பரிதி.... {நாங்களும் வருவோம்ல }
அப்துல்லா!
அசத்தல்ம்மா!
ஒரு நேர்த்தியான
கட்டுரையாளனின்
வீச்சு தெரிகிறது.
வாழ்த்துக்கள்...
என்னையறியாமல்
வந்த
ஆனந்தக்கண்ணீரை
கட்டுப்படுத்தமுடியாமல்....
V.P.R.ELAMPARITHI
அண்ணா கலக்கிட்டிங்க போங்க.................
இணையத்தளத்தில் இளம்பரிதி
{நாங்களும் வருவோம்ல }
Post a Comment