Thursday, October 30, 2008

பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி

· 8 comments

நண்பர்களே! இந்த குறுக்கெழுத்து போட்டி வித்தியாசமானது. முழுக்கவும் பதிவர்கள், வலைப்பூக்கள், பதிவுகள் தொடர்பான ஒன்று. வெற்றி பெறுவோர்க்கு பரிசு ஒன்றும் கிடையாது. பதிவு நன்றாக இருந்தால் நீங்கள் பரிசு அனுப்பலாம். நான் நிராகரிக்க போவதில்லை.




பிராக்டிஸ் போர்டு (click here)


இடமிருந்து வலம்
1)இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)
3)இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)
5)இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். பாரிசில் வசிக்கிறார்.(2)
6)கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)
7)போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)
14)இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்தை. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)
16) தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)
23)எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)

வலமிருந்து இடம்
4)ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)
8)காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)
9)பிளாக் எழுதும் பாலிவுட்காரார்.(3)
11)வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)
13)2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)
18)பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)
25) இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)

மேலிருந்து கீழ்
2)தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)
10)டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)
11) நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)
12) பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)
22) பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)

கீழிருந்து மேல்
15)நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல!(5)
17)மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)
19)டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)
20) அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(7)
21) வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)
24) குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)

Read More......

Wednesday, October 29, 2008

பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி

· 2 comments

நண்பர்களே! இந்த குறுக்கெழுத்து போட்டி வித்தியாசமானது. முழுக்கவும் பதிவர்கள், வலைப்பூக்கள், பதிவுகள் தொடர்பான ஒன்று. வெற்றி பெறுவோர்க்கு பரிசு ஒன்றும் கிடையாது. பதிவு நன்றாக இருந்தால் நீங்கள் பரிசு அனுப்பலாம். நான் நிராகரிக்க போவதில்லை.



இடமிருந்து வலம்
1)இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)
3)இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)
5)இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். பாரிசில் வசிக்கிறார்.(2)
6)கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)
7)போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)
14)இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்தை. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)
16) தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)
23)எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)

வலமிருந்து இடம்
4)ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)
8)காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)
9)பிளாக் எழுதும் பாலிவுட்காரார்.(3)
11)வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)
13)2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)
18)பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)
25) இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)

மேலிருந்து கீழ்
2)தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)
10)டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)
11) நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)
12) பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)
22) பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)

கீழிருந்து மேல்
15)நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல!(5)
17)மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)
19)டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)
20) அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(7)
21) வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)
24) குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)

Read More......

Tuesday, October 28, 2008

பதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் கிளாஸ் ஆண்ட்டி

· 15 comments

தமிழை நியூ ஜெர்சி மற்றும் நியூ யார்க்கில் தாங்கி நிறுத்தும் பதிவர்களே!, கனவான்களே!, உங்களுக்கோர் கெட்ட செய்தி. என்னுடன் படித்த ஒரு ஆண்டி, பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை டிஎன்ஏ மற்றும் புரோட்டின்களை பற்றி பேசியே என் தாக்க அறுத்துவந்த அவர் டெஸ்ட் அனிமல்ஸ் தேடிவருவதாகவும், அதுகுறித்து பதிவர்களின் ஆலோசனையை கேட்க விரும்புவதாகவும் கூறினார்.

இதுவரை மூன்று பேர் மட்டுமே சந்திப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இந்த நான்-பிராமின் அப்பர்-மிடில் கிளாஸ் ஆண்டியின் அதிரடி அறிவிப்பு நியூ ஜெர்சி எங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இதனால் பதிவர்கள் மத்தியில் பீதி உருவாகாமல் பார்த்துக்கொள்ளும்படி அவரது கணவர் இன்று தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். பரம்பரை வியாதியை கண்டு பிடிக்கிறேன் என்று கூறி தன் கணவரின் ரத்தத்தை அல்மோஸ்ட் காலி செய்துவிட்டாரென்று அவரது கணவரின் பேச்சில் அறிந்து கொள்ள நேர்ந்தது. எனவே நண்பர் சத்யா (ச்சின்ன பய்யன்), நண்பர் நசரேயன் ஆகியோரை இப்பதிவின் மூலம் எச்சரிப்பது என் கடமை.


தவிரவும், ஏனைய பதிவர்கள் எவரும் சந்திப்பு குறித்து எதுவும் தெரிவிக்காது இருக்கின்றனர். இதற்கென உருவாக்கப்பட்ட கூகிள் குழுமத்தில் பதினோரு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ளவர்களில் நான்கு பேர் மட்டுமே மடல் அனுப்பியுள்ளனர். நண்பர் குடுகுடுப்பை டெக்சாசில் இருப்பதால் வீடியோ கான்பரன்சில் கலந்து கொள்வார் என எதிபார்க்கப்படுகிறது. பதிவர் மொக்கைச்சாமி மற்றும் மருதநாயகம் நியூ ஜெர்சியில் இருப்பதாக அறிகிறேன். அவர்கள் மடல் அனுப்பி விவாதித்து இடத்தை முடிவு செய்து சொன்னால் சந்திப்புக்கு முன்கூட்டியே என்னை தயார் படுத்திக்கொள்ள முடியும்.

விபரங்களுக்கு: http://yesuvadian.blogspot.com/2008/10/blog-post_20.html

Read More......

Monday, October 27, 2008

கலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முகவரி..

· 79 comments

கடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிருந்த கலைஞர் இரு வாரங்களுக்கு முன் கிடைத்துவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். ஆனால் இப்போது வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டது கலைஞர் அல்ல என்றும் அது கலைஞரின் போலி என்றும் கூறுகின்றன. இனி கலைஞர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ம்ஹ்ம்ம்..துக்கம் தொண்டையை அடைப்பதால் இனி காமெடி கை கொடுக்காது. விஷயம் இதுதான். போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவது என்ற முக்கிய தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடாத ப்ரனாப்-பாசில் கூட்டறிக்கை எண்ணூறு டன் உதவிப்பொருள் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கையில் எவ்வித மாற்றமோ இன்றி பிரச்சினையை எளிதாக முடித்துக்கொண்டது காங்கிரஸ். வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் பாசில் பக்ஷே எண்ணூறு டன் பரிசுப்பொருளுடன் கிளம்புகிறார்.

ஒக்கேனக்கல் திட்டத்தில் கலைஞர் அடித்த பல்டியால் மானம் மட்டும்தான் போனது. இப்போது அடிக்கும் பல்டி ஊசலாடும் தமிழனின் உயிரை துச்சமென மதிப்பதாகிறது. நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என்னும் விஷயத்தை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் இந்த குழந்தைக்கு எவரும் எடுத்துச்சொல்லாமல் விட்டுவிட்டனர் போலிருக்கு.

தமிழ்தேசிய கலைஞர்தான் கோட்டை விட்டுவிட்டார். இந்திய தேசிய கலைஞர் என்ன ஆனார். கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை குறித்தும் குள்ள புஷ்கா ப்ரனாப்ஜி அல்வா கொடுத்து விட்டு போயிருக்கிறாரே! 1974 முதல் சமீபகாலம் வரை கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை இருக்கிறது என்று தானே நினைத்து வந்தோம். கேள்வி ஏதுமின்றி இலங்கைக்காரன் சுட்டு பிணங்களை அனுப்பிவைக்கும்போது வாய் மூடி இருந்த மத்திய அரசு சொல்லாமல் சொல்லியது நமக்கு அங்கே உரிமை இல்லை என்று. இதற்காகவே மத்திய அரசை நொங்கு எடுத்திருக்க வேண்டும். வாய்மையின் மொத்த உருவமான இலங்கையின் சிறப்பு தூதர் தந்த உறுதிமொழியை பிரனாப்ஜி நா தழுதழுக்க உங்களுக்கு ஒப்பிக்க நீங்களும் கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டீரோ!

சரி, முக்கியமானததைத்தான் விட்டுவிட்டீர்கள். சாதித்த ஒரே காரியத்தையும் ஒழுங்காய் செய்தீரா? உணவுப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா? இலங்கை இராணுவம் விநியோகிக்கும் உணவுப்பொருள் வண்டியில் ஆயுதத்தை ஏற்றி அனுப்ப, புலிகள் தங்கள் வழமைபோல அதை வழியிலேயே தகர்க்க, போன வாரமே சாகாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த தமிழன் உணவுப்பொருளை கண்ணில் பார்த்து விட்டு இந்த வாரம் சாகப்போகிறான்.

ஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன். எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ராஜதந்திர கோமாளித்தனம் செய்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும், நீங்களும் பெருவாரியாக வெற்றிபெறுவீர்கள் என்றா? அதீத கற்பனை அய்யா உமக்கு!

நினைவிருக்கிறதா உங்களுக்கு? ஒரு முறை கூலி உயர்வு கேட்டு போராடிய கோவை பஞ்சாலைத் தொழிலாளிகளுக்கு எதிராக லாக் அவுட் செய்த முதலாளிகளிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று! "நான் இப்போது ஊட்டி செல்கிறேன், மாலையில் கோவை வரும்போது மாலை இதழ்களில் கூலி உயர்வு பற்றி செய்தி ஏதும் இல்லை என்றால் நாளை காலை இதழ்களில் செய்தி வரும், 'அரசுடமையாக்கப்பட்ட ஆலைகளில் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு' -என்று சொன்னீர்களே!". இந்த நேர்மையும் நெஞ்சுரமும் எங்கே போனது அய்யனே!

நீங்கள் நினைக்கும்போது 'சுவிட்ச் ஆன்', 'சுவிட்ச் ஆப்' செய்ய இன உணர்வு என்ன திரைச்சீலையா? தீர்மானத்தில் கையெழுத்துப்போட்ட கட்சிகள் உம்மை சும்மா விடுவார்கள் என நினைத்தீரா? டி. ராஜாவின் பேட்டியை கேட்டீரா? நீர் டாராய் கிழிபடப்போவது உறுதி.

மிஸ்டர் ஞானி! ப்ளீஸ் கண்டின்யூ!

Read More......

Sunday, October 26, 2008

இந்தியாவில் தேசியம் கற்பனையா?

· 18 comments

சட்டப்படியும் பூகோளப்படியுமே தமிழன் இந்தியனாகிறான். மற்றெல்லாவற்றிலும் அவன் வேறு, ஏனைய இந்தியர் வேறு என்பது வெளிப்படை. ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து வாழ்வது என முடிவாகி அதன்படி தொடர்கிறோம். இது முழுக்கவும் இருதரப்பினரின் நலன் சார்ந்ததேயன்றி உணர்வுப்பூர்வமானதல்ல. எனவேதான் அவர்கள் நலன் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மை தேச துரோகி என்றும் நம் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் நாம் அவர்களை தமிழின துரோகி என்றும் சாடுகிறோம்.

எனில், இந்தியா உண்மையில் யாருடையது? இரு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீரிகள் தங்கள் விளைபொருட்களை ஜம்முவை கடந்து ஏனைய இந்திய மாநிலங்களில் விற்கத்தடையாக சனாதனிகள் போராட்டம் நடத்தினர். அமர்நாத் கோவிலுக்கு நிலம் தராவிட்டால் காஷ்மீரிகள் இந்தியாவில் நுழைய முடியாது என்பது தான் அவர்கள் வெளிப்படுத்த விரும்பியது. இந்தியனாக இருப்பதைக்காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் என்பதால் அவர்கள் விளைபொருட்களை விற்று பணம் பெற்றேயாக வேண்டிய சூழ்நிலையில் ஒரு முடிவை எடுத்தனர். எல்லையை சட்ட விரோதமாகவேனும் கடந்து பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று விளைபொருட்களை விற்பதுபோல் பாவ்லா காட்டுவது தான் அது. இப்போது, போலி நடுநிலையாளர்களும், இந்திய ஆட்சியாளர்களும் சனாதனிகளுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரிகள் தேச துரோகிகள் என்று கூறினர். அப்படியென்றால் தேச துரோகம் என்பது எவ்வளவு ஓரவஞ்சனையோடு நிர்ணயிக்கப்படுகின்றது பாருங்கள். இந்தியா எவ்வளவு கலங்கலாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாருங்கள்! இந்தியா எப்போதும் சனாதனிகளுடையதுதான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பிறகு, இந்த உச்சநீதிமன்றம் செய்யும் உள்ளடி வேலைகள் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். மூன்று கீழ்நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலிதாவை வெறும் கண்டனத்துடன் விடுதலை செய்தது. காவிரி நீரை திறந்துவிடும்படி தீர்ப்பில் ஏதும் கூறாமல் வெறும் 'டைரக்டிவாக' கர்நாடக மாநிலத்திற்கு ஆணையிட்டது. "நான் குற்றம் செய்தேன் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் எங்கும் இல்லை" என்று மோடி ஒரு நேர்காணலில் கூறுகின்றார். தமிழக பந்திற்கு எதிராக பஞ்ச கச்சத்தை இறுக்கிக்கொண்டு ஒரு அரசியல் கட்சி போல் ஆவேசத்துடன் வந்தது உச்சநீதிமன்றம். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்?

அயோக்கியத்தனங்களுக்கு எழுத்து சுதந்தரத்தையும், ஜனநாயகத்தையும் பயன்படுத்தி தேசிய பூச்சாண்டி காட்டுவதே பார்ப்பனர்களின் முழுநேர வேலை. இப்படிச் சொல்வதால் நியாயமான பார்ப்பனர்கள் கோபித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் அநியாயத்தை வாய்திறந்து பேசுவதில்லை இந்த நியாயவாதிகள். டபுள் டாக் பகுதியில் தமிழக அரசியலை கிண்டல் செய்ய மட்டும்தான் தெரியும் என்டிடிவி -க்கு. நமது கோரிக்கைகளை செய்தியாகக்கூட வெளியிடுவதில்லை இச்செய்தி நிறுவனம். பரபரப்பு செய்திகளுக்கு ஆளாய் பறக்கும் சி.என்.என்-ஐபிஎன் பேசாமல் ஆபாசப்படம் எடுத்து கூட்டம் சேர்க்கலாம். தி ஹிந்து எடுக்கும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நடந்து கொள்ளும் டைம்ஸ் ஆப் இந்தியா ஈழப்பிரச்சினையில் சுரத்தில்லாமல் கூட செய்தி வெளியிட மறுப்பது முரண்.

இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு? இலங்கை அரசியலமைப்பு சட்டம்போல் அல்லாமல் இந்தியச்சட்டங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒன்று. எனவே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்?

0. நம் நலன் பேணும் தேசிய கட்சி ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும். அல்லது உருவாக்க வேண்டும்.

1. ஜெயலலிதாவிற்கு கட்டாய அரசியல் ஒய்வு தந்தாக வேண்டும்.

2. இடஒதுக்கீடு, ஈழம், இந்திய தேசியம் போன்றவற்றில் தன் நிலைப்பாட்டை ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

3. திருமாவளவன் தன் கட்சியை அதிவேகத்தில் விஸ்தரிக்க வேண்டும்.

4. சனாதன பத்திரிக்கைகளுக்கு தரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும்.

5. சமூகத்தின் மனசாட்சிகளான எழுத்தாளர்கள் ஒரு புரட்சிக்கு வித்திட வேண்டும்.

இவை ஏதும் நடக்காத பட்சத்தில் இந்திய தேசியத்தில் பிடரியில் சம்மட்டியால் அடித்து அதை குற்றுயிர் ஆக்கவேண்டும்.

Read More......

நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு

· 8 comments

ஒக்கேனக்கல் பிரச்சினை போல் ஈழப்பிரச்சினையிலும் கலைஞர் பல்டி அடிப்பார் என ஏனோ என்னுள் ஒரு பட்சி கூறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால் கலைஞரின் நிலைப்பாட்டை நாராய் கிழித்து எனது பதிவில் தொங்கவிடும் எண்ணத்தில் இதுவரை ஈழம் தொடர்பாக பதிவெதுவும் எழுதாமல் இருந்தேன்.

"அடடடா! கந்தசாமியின் கொசுக்கடி தாங்கலடா!" என குமுறும் நண்பர்களே! அவசரப்படாதீர்கள், இன்றைய பதிவு பேசும் விசயத்திற்கு இன்னும் ஓரிரு வரிகளுக்குள் வந்து விடுகிறேன்.

இந்நிலையில் ஈழம் தொடர்பான எனது கேள்விகளுக்கு தமிழ் சசி பதிலளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, பதிவுலக இண்டலக்சுவல்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளேன்.

இதற்கிடையே, நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் அழைப்பை ஏற்று சினிமா தொடர் கேள்வி பதிலை இப்பதிவில் எழுதுகிறேன். "குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன்" என்று கூறும் சுந்தர் வாரம் ஒருமுறையாவது சினிமா பார்த்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். நானும் அப்படியே. எனினும் நான் இதுவரை பார்த்த தமிழ்ப்படங்களில் ஒரு இருபது சத படங்களை மட்டுமே மூன்றுமணி நேரம் தொடர்ந்து பார்த்துள்ளேன். பெரும்பாலானவை கமலஹாசன் படங்களே!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


பத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். எனது பெற்றோரின் பெரும் தடையை மீறி எனது உறவினர் ஒருவருடன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை பார்த்தேன். எனக்கு அப்போது ராதிகாவிற்கும் பிற துணை நடிகைகளுக்கும் முக வித்தியாசம் தெரியவில்லை. படத்தைவிட அரங்கின் வாயிலில் நடந்த பட்டாசு வெடிக்கும் வைபோகத்தில்தான் மனம் லயித்திருந்தது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். கமலஹாசன் படங்கள் என்றால் முதல் நாள் முதல் சோ -தான் எப்போதும். ஆனால் தசாவதாரம் பிரிவியூ சோ பார்த்தேன். டிக்கெட் கிழித்து தந்த குஜராத்தியுடன் ஸ்டூடண்ட் ஆபருக்கான வாக்குவாதத்தில் முதல் பத்து நிமிடங்கள் படத்தை தவற விட்டேன். படம் முடியும் முன்பாக எழுந்து சென்று பாக்ஸ் ஆபிசில் மீண்டும் சண்டை, அடுத்த சோ விற்க்காக டிக்கட் எனக்கு வழங்குமாறு.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பம்மல் சம்பந்தம். டீவிடி வைத்துள்ளேன். நகைச்சுவை படங்களிலும் மனதை உருக்கும் காட்சிகளை சீரியஸ் கெடாமல் வைக்க கமலகாசனால்தான் முடியும். 'ஏண்டி சூடாமணி' பாடல் ஒரு ஒப்பாரி வகைப்ப்பாடலாகும். கானா பாடல்களை விரும்பி கேட்பேன். புளியந்தோப்பு பழனியுடன் எனக்கு பழக்கம் உண்டு.

4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மகாநதி. ஆற்றாமையால் கமலகாசன் அழும் காட்சிகளிலெல்லாம் நானும் அழுதேன். நான் முழுமையாக பார்த்த படங்களில் அழாமல் பார்த்த படங்கள் மிகக்குறைவு. சோகக்காட்சிகளில் மட்டுமின்றி, தத்ரூபமான காட்சிகள், நிதர்சனங்களை சொல்லும் காட்சிகள், பெற்றோர் உதாசீனப்படுத்தப்படும் காட்சிகள், குழந்தைகள் இயல்பாய் நடிக்கும் காட்சிகள், ஆண்டான் அடிமை காட்சிகள், நவீன நிலபிரபுக்கள் விட்டேந்தியாக நடக்கும் காட்சிகள் என பல சமயங்களில் அழுவேன்.

5. உங்களை மிகவும் தாக்கிய அரசியல் சம்பவம்?

அண்ணாமலை படத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தபோது, ரசிகர் ஒருவர் தீக்குளித்ததாக வந்த செய்தி பகீரென்றிருந்தது. பிறகு, ரஜினி ரசிகர்களின் பல கிறுக்குத்தனங்களை கேள்விபடுகையில் சகஜமாகிப்போனது.

6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

குருதிப்புனல் திரைப்படத்திற்கு டிக்கட் கிடைக்காமல் செங்கல்பட்டு சென்று பார்த்தேன். அதில் அவிட் எடிட்டிங் செய்திருக்கிறார்கள் என அறிந்து அதுபற்றி செய்தி சேகரித்துக்கொண்டு பிறகு உன்னிப்பாக படத்தை பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.

7. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

விகடன், குமுதம் இதழ்களில் உள்ள சினிமா செய்திகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவற்றில் உள்ளவை எல்லாம், கிசு கிசு, வரவிருக்கும் படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் வித்தியாசமான படம் என்று தாடியை சொரிந்து கொண்டு எந்த டைரக்டராவது தரும் பேட்டிகள் என இவைதான் இருக்கும். 'திரை' என்ற இதழை நான் சென்னையில் இருக்கும்போது படிப்பதுண்டு. ஏனைய சிறுபத்திரிக்கைகள் போல் இவற்றிற்கும் நான் சந்தா பெறாத காரணத்தால் அவ்விதழை ஏரியா ஏரியாவாக தேடியலைந்து வாங்குவதே சுவாரசியமான அனுபவம்தான்.

8. தமிழ்ச்சினிமா இசை?

கமலகாசன் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமாவில் பிடித்த விஷயம் சினிமா மெல்லிசைதான். வரிச்சிறப்புள்ள பாடல்கள் பிடிக்கும். "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா?", "மூங்கில் காடுகளே!, வண்டு முனகும் பாடல்களே!", "ஆழ்வார்பேட்டை ஆண்டவா", "வா வா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டு", கொஞ்சநாள் பொறு தலைவா", "மாஞ்சோலை கிளிதானோ", "செந்தூர் முருகன் கோவிலிலே", "இன்பம் பொங்கும் வெண்ணிலா", "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" போன்ற பாடல்கள் எனக்கு மிகுதியாக பிடிக்கும். என் தங்கையும் என் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஒரே இசை கச்சேரியாக இருக்கும். சில ஆண்டுகளாக இதை தவற விடுகின்றேன்.

9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாள படங்களை தொலைகாட்சியில் நடுவிலிருந்து பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிகள் எனக்கு தெரியாததாலும் சப்-டைட்டில்கள் கிடைக்காது என்பதாலும் மெனக்கிடுவதில்லை. பிரபலமான படங்களை அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் சில பெங்காலி படங்களை பார்த்ததுண்டு. பதேர் பாஞ்சாலி, மகாபுருஷ், பிரதிவண்டி போன்றவை. பொல்லாதவன் திரைப்படம் பை சய்க்கில் தீவ்சின் ரீஜிநலைஸ்ட் வடிவம் ஆகும். கிட்டத்தட்ட, அல் பசினோ வின் அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். சென்ட் ஆப் வுமன் எனக்கு பிடித்த ஒன்று. தவிர, எ ப்வ்யு குட் மென், ஸ்லீப்பிங் வித் எனிமி, ரெசர்வாயர் டாக்ஸ், ப்யூட்டிபுல் மைன்ட், பிரட்டி வுமன், டான்சிங் வித் உல்வ்ஸ் போன்றவற்றையும் முழுசாக பார்த்துள்ளேன். என் வழமைபோல், பல படங்களை பாதிக்குமேல் பார்ப்பதில்லை. பர்பக்ஸன் இருந்தாலே படம் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.

10. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நான் பவித்ரா மருத்துவமனையில் பணி புரிந்தபோது, வாரம் இருமுறையாவது அங்கு ஷூட்டிங் நடக்கும். டபுள்ஸ் பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் மருத்துவராக நடிக்க சொன்னார் பாண்டியராஜன். சங்கோஜத்தால் மறுத்தேன். நடிகை சங்கீதா (அப்போதைய பெயர் ரசிகா என நினைக்கிறேன்) என்னை என் புஜத்தில் ஒருமுறை கிள்ளினார். குஷ்பூவும் சரத்குமாரும் கட்டிப்பிடித்தபடிதான் எப்போதும் பேசிக்கொண்டனர். கூன் விழுந்த கிழவியான சிம்ரனை நேரில் பார்த்தபிறகு பிடிக்காமல் போய்விட்டது. பிரபு தேவாவுக்கும் மீனவுக்கும் லவ்ஸ் இருந்த சமயம் நாயினும் மோசமாக அவர் ஜோள்ளியது சகிக்க வில்லை. டைரக்டர் பாலா ஓங்கி ஒரு அறை விட்டால் செத்துவிடுவார் போல் இருந்தார். நடிகர் விக்னேஷ்வர் (பசும்பொன் ஹீரோ) லிப்டில் மாட்டிக்கொண்டு விழித்தார். தீனா படத்தில் முப்பது நொடி காட்சியில் நடிப்பதற்குள் அஜித் மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக ரசிக தொல்லையில் சிக்கினார். குளுக்கோஸ் பாட்டிலை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு நோயாளி ஷூட்டிங் பார்க்க வந்தார். ஒரு சைனீஸ் துணை நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இவைதான் எனக்கும் தமிழ்த்திரை உலகிற்கும் உள்ள தொடர்பு. ஆக்கப்போர்வமானது என்று எதுவும் இல்லை. மறுபடியும் அம்மருத்தவனையில் பணி புரிய நேர்ந்தால் மீண்டும் இந்த சேவையை (:-)) திரைத்துறைக்கு செய்வேன்.



11. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில் நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும். மிஸ்கின், அமீர், பாலா, வெங்கட் பிரபு, விக்ரம், சினேகா, ஜீவா, வடிவேலு, கோவை சரளா, சந்தானம் போன்றோரால் தரத்திலும் மின்னும். விஜய் விரைவில் அரசியலுக்கு சென்று திரைவுலகை காப்பாற்றுவார். கமலகாசன் காலத்திலேயே இந்திய சினிமா என்றால் கோலிவுட் என்ற நிலை ஏற்பட்டு பாலிவுட் இரண்டாம் இடம் பெறும். இந்திய மொழிகளில் தமிழை மிகவும் விரும்புவதுபோல் தமிழ் சினிமாவையும் ரஷ்யர்கள் விரும்புவார்கள். சர்வதேச விருதுகள் பெருகும். தேசிய விருதுகள் குறையும்.


12. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு நிச்சயம் பாதிப்பு இருக்காது. அதற்கு அடுத்த ஆண்டுமுதல் மீண்டும் வந்து மொக்கை போடத்தானே போகிறார்கள்!

பலபேர் நடுரோட்டுக்கு வந்துவிடக்கூடும், பெண்களின் ஆதிக்கத்திலிருந்து சீரியல்கள் விடுபடும். உட்கார்ந்து யோசித்தால் இன்னும் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.

Read More......

Friday, October 24, 2008

ஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.

· 13 comments

பதிவுலக நண்பர்களே! ஈழப்பிரச்சினை குறித்து பதிவர் தமிழ் சசி அவர்களின் பேட்டியை விரைவில் இந்த வலைப்பூவில் வெளியிட இருக்கிறேன்.

தமிழ் சசியின் பதிவுகளை படித்து வருபவர்களுக்கு ஈழம் பற்றி அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிந்திருக்கும். ஆனால் ஈழம் குறித்து ஆழ்ந்த விசயங்களில் முன்பே தெரிபு இல்லாதவர்களுக்கு இவர் பதிவுகள் எல்லாவற்றையும் விளக்கிவிடா. எனவே நமக்கு வேண்டிய செய்திகளை கேள்விபதில் மூலம் அவரிடமிருந்து பெற்று 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிட அனுமதியை பெற்று உள்ளேன்.

Read More......

Friday, October 3, 2008

டெமாக்ரசி இண்டியன் ஸ்டைல்

· 18 comments

வெற்றிகரமான ஆட்சி முறை என்று உலகங்கும் ஏற்கப்பட்டாலும் ஜனநாயகம் ஊருக்கு ஊர் மாறித்தான் கிடக்கின்றது. முற்றாக இல்லையென்றாலும் இந்திய வகை ஜனநாயகம் கிட்டத்தட்ட தனித்தன்மை வாய்ந்ததுதான். எவரும் அதை நமக்கு துப்பாக்கி முனையில் ஏற்றுமதி செய்யவில்லை. நாமே சுத்திகரித்த ஒன்றும் அல்ல. பனானா ரிபப்ளிக்கும் அல்ல. மன்னரில்லாத இந்திய வகை முடியாட்சிதான் நமது ஜனநாயகம். மன்னனை லாபி செய்யும் குழுக்கள் நடத்தி வந்த முடியாட்சியும் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற பப்பட் ஜனநாயகமும் சர்விகிதத்தில் கலந்துதான் இந்தியவகை ஜனநாயகம்.

போதிய அளவு நேர்மையில்லாத நம்மை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகளிடம் நேர்மை எப்போதும் பற்றாக்குறைதான். குட்டிக்கரண அரசியலை மன்னித்து விடுகிறோம். ஊழல் புகார்களை மூக்கைப்பிடித்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகிறோம். ஏதோ ஒன்றிற்காக யாரையாவது ஆதரித்துவிடுகிறோம். அந்த ஏதோ ஒன்றின் தேவை இல்லாதவர்கள் அல்லது தேவையான ஒன்று என்னவென்று தெரியாதவர்கள் நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சலித்துக்கொள்கிறோம். சிலசமயம் பப்பூன்களாக மாறி பப்பூன்களை ஆட்சியில் வைத்து எல்லோரையும் பப்பூன்களாக்குகிறோம். இப்படி ஏதோ ஒருவகையில் ஜனநாயகத்தை சிறப்பாக நடாத்தி வருகிறோம்.

நம் ஜனநாயகத்தை கொண்டாட சிறப்பான காரணங்கள் ஏதும் இல்லை. குறைகளை பட்டியலிட்டாலும் அவற்றை நாம் நிவர்த்தி செய்யப்போவதில்லை. எனவே தமிழகத்தில் கடை விரித்திருக்கும் ஜனநாயக வியாபாரிகளின் வியாபார உத்திகளை பற்றிய எனது பார்வையை மட்டும் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

வியாபாரத்தில் புதுமைகளை புகுத்தி வெற்றி கொள்வது, தனித்திறமைகளை தக்கவைத்து நீடித்திருப்பது, வெற்றிபெற்ற உத்திகளை காப்பி அடிப்பது மற்றும் போட்டியை சமாளிக்க எதிரியின் உத்தியையே பயன்படுத்துவது எல்லாமே வழமைதான். அரசியலிலும் இது அப்படியே பொருந்தும். அதேபோல் அரசியலில் புகுத்திய புதுமைகள் போனியாகாமல் போவதும், காலாவதியான கொள்கைகளை கட்டிக்கொண்டு காணாமல் போவதும், எதிரியை போலவே அரசியல் செய்து மக்களை மாற்று சக்திக்காக ஏங்கவைத்து விடுவதும் இயல்பானதே. இதை வியாபாரத்திலும் பார்க்கமுடியும்.

பணத்தையும், வன்முறையையும். அரசியலில் புகுத்தி புதுமை செய்த காமராஜருக்கு தனித்தன்மையும் இருந்தது. ஊழல் கரை படியாதவர் என்பதுதான் அது. அவர் புகுத்திய புதுமை நன்றாக போனியாகியது. மற்றவர்களால் காப்பியடிக்கப்பட்டது. அதே சமயம், தமிழகம் இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு அவரே முதல் காரணம். அவரது எளிமை என்ற தனித்தன்மை இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் அது அவர் காலத்திலேயே காலாவதியாகிப்போன ஒன்று. அவரது நிறுவனம் திவாலாகி விடவில்லை என்றாலும் அவருக்குப்பின் அது வளரவே இல்லை.

அண்ணாதுரை அரசியலும் மேற்கண்ட தத்துவங்களில் இருந்து மாறாமல்தான் இருந்தது. காலாவதியான கொள்கைகளை கைவிட்டுத்தான் அரசியல் கரை சேர்ந்தார். நாவன்மையால் மக்களை சமாதானம் செய்து ஆட்சியை பிடித்தார். நீண்ட காலம் அவர் ஆட்சியில் இல்லாததால் வேறெவருடனும் ஒப்பிட முடியாது.

கலைஞர் நாவரசியலை அண்ணாவிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டார். காமராஜரின் பண அரசியலை காப்பியடித்தார். அரசியல் எதிரி எம்ஜியார் போலவே வன்முறை அரசியல் செய்தார். ஜெயலலிதாவை சமாளிக்க வம்ச எதிரிகளுடன் கூட்டணி வைத்து குட்டிக்கரண அரசியல் செய்தார். சமீப காலங்களில் ஜெயலலிதா போலவே இலவச அரசியல் செய்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தில் மவுன அரசியல் செய்து புதுமையை புகுத்தியுள்ளார். அதேசமயத்தில் காமராஜர் உருவாகிய அடித்தளத்தில் ஒரு கோட்டையையே உருவாக்கி பெரியார் வழியில் எல்லோரையும் அதன் பயனர் ஆக்கியுள்ளார். தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்.

எம்ஜியாரின் அரசியல் கம்யூனிஸ்டுகளின் அரசியலுடன் ஒப்பிட்டால் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏழைகளுக்கு இருவருமே குரல் கொடுத்தனர். கம்யூனிஸ்டுகள் வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். எம்ஜியார் வெள்ளித்திரையில் குரல் கொடுத்தார். எனினும் ஏழைப்பங்காளன் வேடம் நன்றாகவே போனியாகக்கூடிய உத்திதான். காலாவதியான கொள்கைகளை சமரசமின்றி பின்பற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் கொள்கையே ஜனரஞ்சகம்தான். உலகம் உய்ய ஒரே வழிதான் உள்ளதென கருத்துடையவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் வழியில் தமிழகம் உய்த்தேவிட்டது (தமிழகம் இன்று கல்வியில் சிறந்திருப்பதன் காரணம் சத்துணவு திட்டம் மற்றும் தனியார் கல்லூரிகளின் பெருக்கம் போன்றவையே). ஒருதுறையில் பெற்ற புகழை மற்றொரு துறையில் புழக்கடை வாயிலாக நுழைய பயன்படுத்தி மோசடி செய்ததுதான் அவர் புகுத்திய புதுமை.

The More You Know The More You Think You Have To Know More. இது ஜெயலலிதாவுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது அராஜக அரசியல் அவருக்கு மட்டுமே கைவரக்கூடியது என்று பத்தாம் பசளியாய் நினைத்துக்கொண்டுள்ளார் என்பது தெளிவு. அவரது வகை அரசியலில் வென்றால் அவருக்கு லாபம். தோற்றால் அவருக்கு நஷ்டம். மக்களுக்கு எப்போதும் நஷ்டம் தான். 1991-1996 ஆட்சிகாலத்தில் லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? 2001-2006 ஆட்சிக்காலத்தின் முதல் இரண்டரை ஆண்டுகாலம் நஷ்டம் யாருக்கு? இறுதி இரண்டரை ஆண்டுகாலம் லாபம் யாருக்கு? சு.சாமி, சங்கராச்சாரியார், சோ, சசிகலா போன்றோர் பின்னிருந்து இயக்க கண் போன போக்கில் அரசியல் செய்வதுதான் அவரது புதிய உத்தி. விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றவர்களிடம் இது போனியாகக்கூடும்.

நாவன்மை அரசியலில் வைகோவுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. காமராஜர் காலத்திலேயே காலாவதியாகிப்போன நேர்மையை தாமதமாக உதறியவர். விடுதலைப்புலிகள் தன்னை திமுக தலைவராக ஆக்குவார்கள் என தவறாக கணித்து நஷ்டகணக்கு எழுதிவைத்துள்ளவர். குட்டிகரன அரசியலில் தகுந்த தேர்ச்சியின்றி வியாபாரம் அதலபாதாளத்தில் உள்ளது. இவர் புகுத்திய புதுமைகள் எல்லாம் அட்டர் பிளாப்.

மருத்துவர் அய்யாவின் குட்டிக்கரண அரசியல் வெகு பிரசித்தம். ஆனால் இவர் இதில் சுயம்பு அல்ல. மொழியரசியல், ஈழத்தமிழர் அரசியல் போன்றவைகளும் காப்பி அடித்த வியாபாரத் தந்திரங்களே. இப்போது தீவிரமாக மார்க்கெட் செய்யப்பட்டு வரும் அவ்வுத்திகள் எவ்வாறு பலனளிக்கும் என அவர் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமூக நீதி என்ற அவரது பில்போர்டு தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வியாபாரம் ஜகத்ஜோதியாக நடைபெறும். சாதி சங்க அரசியல் அவரது புதுமை. மிகப்பிற்படுத்தப்பட்டவர்களின் நலன் பேண கட்சி தொடங்கி இப்போது அவர்களின் பெருமை பேசும் அமைப்பாக மாறியிருப்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

"புகழ் மோசடி" உத்தியை எம்ஜியாரிடமிருந்து காப்பி அடிப்பவர் யார் என்பது தெளிவு. பப்பூன் போன்ற சொல்லாடல்களை மீண்டும் இங்கு பயன்படுத்த விரும்பவில்லை.

எனது ஒரே நம்பிக்கை திருமாவளவன் மட்டுமே.

Read More......