சட்டப்படியும் பூகோளப்படியுமே தமிழன் இந்தியனாகிறான். மற்றெல்லாவற்றிலும் அவன் வேறு, ஏனைய இந்தியர் வேறு என்பது வெளிப்படை. ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து வாழ்வது என முடிவாகி அதன்படி தொடர்கிறோம். இது முழுக்கவும் இருதரப்பினரின் நலன் சார்ந்ததேயன்றி உணர்வுப்பூர்வமானதல்ல. எனவேதான் அவர்கள் நலன் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மை தேச துரோகி என்றும் நம் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் நாம் அவர்களை தமிழின துரோகி என்றும் சாடுகிறோம்.
எனில், இந்தியா உண்மையில் யாருடையது? இரு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீரிகள் தங்கள் விளைபொருட்களை ஜம்முவை கடந்து ஏனைய இந்திய மாநிலங்களில் விற்கத்தடையாக சனாதனிகள் போராட்டம் நடத்தினர். அமர்நாத் கோவிலுக்கு நிலம் தராவிட்டால் காஷ்மீரிகள் இந்தியாவில் நுழைய முடியாது என்பது தான் அவர்கள் வெளிப்படுத்த விரும்பியது. இந்தியனாக இருப்பதைக்காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் என்பதால் அவர்கள் விளைபொருட்களை விற்று பணம் பெற்றேயாக வேண்டிய சூழ்நிலையில் ஒரு முடிவை எடுத்தனர். எல்லையை சட்ட விரோதமாகவேனும் கடந்து பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று விளைபொருட்களை விற்பதுபோல் பாவ்லா காட்டுவது தான் அது. இப்போது, போலி நடுநிலையாளர்களும், இந்திய ஆட்சியாளர்களும் சனாதனிகளுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரிகள் தேச துரோகிகள் என்று கூறினர். அப்படியென்றால் தேச துரோகம் என்பது எவ்வளவு ஓரவஞ்சனையோடு நிர்ணயிக்கப்படுகின்றது பாருங்கள். இந்தியா எவ்வளவு கலங்கலாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாருங்கள்! இந்தியா எப்போதும் சனாதனிகளுடையதுதான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பிறகு, இந்த உச்சநீதிமன்றம் செய்யும் உள்ளடி வேலைகள் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். மூன்று கீழ்நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலிதாவை வெறும் கண்டனத்துடன் விடுதலை செய்தது. காவிரி நீரை திறந்துவிடும்படி தீர்ப்பில் ஏதும் கூறாமல் வெறும் 'டைரக்டிவாக' கர்நாடக மாநிலத்திற்கு ஆணையிட்டது. "நான் குற்றம் செய்தேன் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் எங்கும் இல்லை" என்று மோடி ஒரு நேர்காணலில் கூறுகின்றார். தமிழக பந்திற்கு எதிராக பஞ்ச கச்சத்தை இறுக்கிக்கொண்டு ஒரு அரசியல் கட்சி போல் ஆவேசத்துடன் வந்தது உச்சநீதிமன்றம். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்?
அயோக்கியத்தனங்களுக்கு எழுத்து சுதந்தரத்தையும், ஜனநாயகத்தையும் பயன்படுத்தி தேசிய பூச்சாண்டி காட்டுவதே பார்ப்பனர்களின் முழுநேர வேலை. இப்படிச் சொல்வதால் நியாயமான பார்ப்பனர்கள் கோபித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் அநியாயத்தை வாய்திறந்து பேசுவதில்லை இந்த நியாயவாதிகள். டபுள் டாக் பகுதியில் தமிழக அரசியலை கிண்டல் செய்ய மட்டும்தான் தெரியும் என்டிடிவி -க்கு. நமது கோரிக்கைகளை செய்தியாகக்கூட வெளியிடுவதில்லை இச்செய்தி நிறுவனம். பரபரப்பு செய்திகளுக்கு ஆளாய் பறக்கும் சி.என்.என்-ஐபிஎன் பேசாமல் ஆபாசப்படம் எடுத்து கூட்டம் சேர்க்கலாம். தி ஹிந்து எடுக்கும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நடந்து கொள்ளும் டைம்ஸ் ஆப் இந்தியா ஈழப்பிரச்சினையில் சுரத்தில்லாமல் கூட செய்தி வெளியிட மறுப்பது முரண்.
இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு? இலங்கை அரசியலமைப்பு சட்டம்போல் அல்லாமல் இந்தியச்சட்டங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒன்று. எனவே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்?
0. நம் நலன் பேணும் தேசிய கட்சி ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும். அல்லது உருவாக்க வேண்டும்.
1. ஜெயலலிதாவிற்கு கட்டாய அரசியல் ஒய்வு தந்தாக வேண்டும்.
2. இடஒதுக்கீடு, ஈழம், இந்திய தேசியம் போன்றவற்றில் தன் நிலைப்பாட்டை ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
3. திருமாவளவன் தன் கட்சியை அதிவேகத்தில் விஸ்தரிக்க வேண்டும்.
4. சனாதன பத்திரிக்கைகளுக்கு தரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும்.
5. சமூகத்தின் மனசாட்சிகளான எழுத்தாளர்கள் ஒரு புரட்சிக்கு வித்திட வேண்டும்.
இவை ஏதும் நடக்காத பட்சத்தில் இந்திய தேசியத்தில் பிடரியில் சம்மட்டியால் அடித்து அதை குற்றுயிர் ஆக்கவேண்டும்.
Sunday, October 26, 2008
இந்தியாவில் தேசியம் கற்பனையா?
at
9:11 PM
·
Subscribe to:
Post Comments (Atom)
கொடுமை! கொடுமை!
தொடர்வோர்
திரட்டு
- பேட்டி (21)
- அரசியல் (18)
- அடாவடி (16)
- நக்கல் (16)
- சில்ப்பா குமார் (15)
- ஈழம் (14)
- ச்சும்மா ட்டமாஷ்-25 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-50 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-75 (9)
- காண்டு (8)
- திமுக (8)
- காமெடி (7)
- போலிடோண்டு (7)
- சீரியஸ் (6)
- டோண்டு (6)
- தமிழ் சசி (6)
- திருமா (6)
- பெண்கள் (6)
- வீடியோ (6)
- ஆப்லெட் (5)
- கோவிகண்ணன் (4)
- சமூகம் (4)
- ஜ்யோவ்ராம் சுந்தர் (4)
- பெரியார் (4)
- வலைப்பூக்கள் (4)
- வி. சிறுத்தைகள் (4)
- அப்துல்லா (3)
- குறுக்கெழுத்து (3)
- செந்தழல் ரவி (3)
- தளபோட்ச்த்ரி (3)
- திராவிடம் (3)
- பார்ப்பனீயம் (3)
- பீத்த பதிவர்கள் (3)
- மதிபாலா (3)
- மொழிபெயர்ப்பு (3)
- லக்கி லுக் (3)
- அம்மா (2)
- அருந்ததி ராய் (2)
- இடி அமீன் (2)
- உடான்ஸ் (2)
- என் துறை (2)
- கமல் (2)
- கம்யூனிசம் (2)
- கவிதை? (2)
- கில்மா (2)
- சினிமா (2)
- சிறுகதை (2)
- ஜோதிடம் (2)
- பதிவர் சந்திப்பு (2)
- பயங்கரவாதம் (2)
- பெங்கை (2)
- மீள்பதிவு (2)
- மொக்கை (2)
- ரஜினி (2)
- ரவிகுமார் (2)
- வெட்டி ஆபிசர் (2)
- அதிஷா (1)
- இட ஒதுக்கீடு (1)
- கற்பு (1)
- கவிதை (1)
- குண்டு வெடிப்பு (1)
- குத்து (1)
- சாத்திரி (1)
- சிங்காரவேலர் (1)
- ஜனநாயகம் (1)
- ஜீவானந்தம் (1)
- தனிமாநிலம் (1)
- தமிழச்சி (1)
- தம்பி (1)
- நட்சத்திர வாரம் (1)
- பட்டமளிப்பு (1)
- மதம் (1)
- முரளிகண்ணன் (1)
- விஜயகாந்த் (1)
- ஹிந்தி (1)
கிடங்கு
-
▼
2008
(79)
-
▼
October
(8)
- பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி
- பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி
- பதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் க...
- கலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முக...
- இந்தியாவில் தேசியம் கற்பனையா?
- நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு
- ஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.
- டெமாக்ரசி இண்டியன் ஸ்டைல்
-
▼
October
(8)
18 comments:
நமக்காக சிறைசெல்லத் தயாராகும் உங்களுக்கு நமது நன்றி.. :(
Before this article I hate you... for this article Hats of you
///நமக்காக சிறைசெல்லத் தயாராகும் உங்களுக்கு நமது நன்றி.. :(///
பயமா இருக்கு அனானி! கொஞ்சம் கருணை காட்டுவீர்களா? ப்ளீஸ்!
/////for this article Hats of you///
நன்றி குழலி,
//Before this article I hate you... //
:-((
poda dubukku
velaiayi poi paru.
what are you doing in america, come to tamilnadu go to eellam and fight for your tamil peoples
useless go to hell
poda dubukku
நமக்காக சிறைசெல்லத் தயாராகும் உங்களுக்கு நமது நன்றி.. :(
@ எனவேதான் அவர்கள் நலன் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மை தேச துரோகி என்றும் நம் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் நாம் அவர்களை தமிழின துரோகி என்றும் சாடுகிறோம்.
சிம்பிலாக கூறிவிட்டீர்கள்.
முதலில் தமிழன் என்பதே கற்பனை தான்;சோழ நாட்டவன்,பாண்டியன்,சேரன்,பல்லவன்,கொங்கு நாட்டவன்,குற நாட்டவன் என்று பலவகையினர் பலவிதமாக தமிழ் பேசிக் கொண்டிருப்பது தான் நிதர்சனமான உண்மை;ஏதோ தமிழ் நாடு என்ற ஒரு மாநிலம் உருவானபோது, ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக தமிழன் என்று பொத்தாம் பொதுவாக உளறிக் கொண்டிருகிறோமே தவிர உணர்வுப்பூர்வமாக தமிழன் என்று சொல்லிகொள்வது ஒரு கறபனையின்றி வேறு என்ன?ஆகையால் ஒப்புக்கு தமிழன் என்று பேசும் மோகன் கந்தசாமி போன்ற துரோகிகளை பிடறியில் அடித்து யாழ்ப்பாணத்துக்கு பார்சல் பண்ண வேண்டும்.தமிழ் நாட்டை பல மாநிலங்களாக பிரித்து விட்டு ஒவ்வொரு இன மக்களையும் உணர்வுபூர்வமாக வாழ வகை செய்ய வேண்டும்.அந்த நாளும் வரும்.வாழ்க எம் பல்லவ நாடு.
@ Before this article I hate you... for this article Hats of you
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத குழலிக்கு ஒரு ஓ போடு
(இது தான் தமிழர்களுக்கும் தேசிய”வியாதி”களுக்கும் உள்ள வித்தியாசம்)
////இந்த உச்சநீதிமன்றம் செய்யும் உள்ளடி வேலைகள் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். மூன்று கீழ்நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலிதாவை வெறும் கண்டனத்துடன் விடுதலை செய்தது. காவிரி நீரை திறந்துவிடும்படி தீர்ப்பில் ஏதும் கூறாமல் வெறும் 'டைரக்டிவாக' கர்நாடக மாநிலத்திற்கு ஆணையிட்டது. "நான் குற்றம் செய்தேன் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் எங்கும் இல்லை" என்று மோடி ஒரு நேர்காணலில் கூறுகின்றார். தமிழக பந்திற்கு எதிராக பஞ்ச கச்சத்தை இறுக்கிக்கொண்டு ஒரு அரசியல் கட்சி போல் ஆவேசத்துடன் வந்தது உச்சநீதிமன்றம்.////
வெட்டவெளிச்சமாக்கிய வரிகள்!
////0. நம் நலன் பேணும் தேசிய கட்சி ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும். அல்லது உருவாக்க வேண்டும்.
1. ஜெயலலிதாவிற்கு கட்டாய அரசியல் ஒய்வு தந்தாக வேண்டும்.
2. இடஒதுக்கீடு, ஈழம், இந்திய தேசியம் போன்றவற்றில் தன் நிலைப்பாட்டை ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
3. திருமாவளவன் தன் கட்சியை அதிவேகத்தில் விஸ்தரிக்க வேண்டும்.
4. சனாதன பத்திரிக்கைகளுக்கு தரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும்.
5. சமூகத்தின் மனசாட்சிகளான எழுத்தாளர்கள் ஒரு புரட்சிக்கு வித்திட வேண்டும்.////
இவற்றை நடைமுறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையில்லை!
வேறு தீர்வுக்கத்தான் வழிகாண வேண்டும்.
அரிய பல விஷயங்களை நமக்கு அறியத்தரும் அண்ணன் அனானி அவர்களை இரு கால் கூப்பி வணங்குவோம்! :-)))
///சிம்பிலாக கூறிவிட்டீர்கள்.///
நன்றி திரு.அருண்மொழி
///(இது தான் தமிழர்களுக்கும் தேசிய”வியாதி”களுக்கும் உள்ள வித்தியாசம்)///
:-)))
///வெட்டவெளிச்சமாக்கிய வரிகள்!///
நன்றி திரு சிக்கிமுக்கி
////இவற்றை நடைமுறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையில்லை!///
கடைசி கருத்து (5. சமூகத்தின் மனசாட்சிகளான எழுத்தாளர்கள் ஒரு புரட்சிக்கு வித்திட வேண்டும்) வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டம் என்று சொல்லலாம். ஏனையவை சாத்தியமில்லை என எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் ஏனையவை யாவும் நடைமுறை அரசியல் சார்ந்தவையே. (முற்றாக இல்லையென்றாலும்)
முதல் ரெண்டு பாயிண்டும் சாத்தியமேப் படாது:):):) ஏன்னா அவங்க அரசியல்ல இருந்தாத்தானே விலகுறத்துக்கு, அவங்க பிஸ்னஸ் தானே செய்றாங்க. ஸ்டாலின் இதயெல்லாம் ஒழுங்கா செய்யனும்னு இனிமே நெனச்சாலும் முடியுமா, இருக்கிற கொடச்சல்களுக்கு மத்தியில:(:(:(
///ஏன்னா அவங்க அரசியல்ல இருந்தாத்தானே விலகுறத்துக்கு, அவங்க பிஸ்னஸ் தானே செய்றாங்க.///
அடேங்கப்பா என்னா உள்குத்து!:-))))
Why all people write against brhamins ?
Are you affected directly?
In Tamilnadu almost bramin domination is over.
In stae central govt/public sector undertakings their presence is very limited.( thanks to periyar,anna,kaligar,mgr,jeyalaitha and other polical parties and 69 % reservation).
even after this backward class people having less income /less oppoturnity are not getting their share of power/job positions.
it is the right time to start a good mision for that.
present political leaders are not for that ( including left parties)
let us extend our helping hand to the downtrodden of the backward people( socially and economically)
reservation should be implemented as follows
1.preference to weker section people eleiminating creamy layer people
2.then by creamy layer people
3.the left out placesmay be carried over to next year quota
4.the unfilled quota shoud never be given to o.c/f.c
5.fight for real social justice
-on behalf of affected people
Post a Comment