Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Saturday, November 22, 2008

அடல்ட்ஸ் ஒன்லி: மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் !!!

· 5 comments

ப்போதெல்லாம் சென்னையில் இன்டர்நெட் ஸ்பீட் சொம்மா தூசு கெளப்புதாமே! அதை நம்பி இந்த பதிவை வலையேற்றுகிறேன். வீடியோக்களை பார்த்து பிபீ எக்கச்சக்கமா ஏறும் சமயத்தில் யூ டியூப் திக்குச்சுன்னா அமிஞ்ச பீடி கணக்கா ஆர்வம் அடங்கிப்புடும் அல்லவா?

வேற்று மொழி பாடல்கள் பாஷை புரியலைன்னாலும் சில சமயங்கள் ஈர்ப்பதுண்டு. இதோ, என் நெஞ்சை நக்கிய ஒரு சில மாற்றான் வீட்டு கில்மாகள் உங்கள் பார்வைக்கு! கதற கதற கண்டு ரசியுங்கள்!




பாடுபவர்: நடாஷ்ஜா, மொழி: ஸ்பானிஷ்,
ஊர்: ஜாமைக்காவில் ஏதோவொரு முட்டுச்சந்து


வீடியோவில் பாடி தோன்றும் கில்மா ஒரு ஜமைக்கா பிரஜை. சென்ற ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து போனதாக கூகுள் கூறுகிறது. இப்பாடல் ஸ்பானிய மொழியில் வெளியாகி பிறகு ஆங்கில ரீமிக்சுடன் ஹோபோக்கன் பார்களில் பட்டையை கிளப்பி வந்தது.இந்த இணைப்பில் உள்ள ஒரு பின்னூட்டத்தில் வரிகள் ஆங்கிலத்தில் உள்ளன. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் எனக்கொரு காப்பி அனுப்பவும்.










எழுதி பாடியவர்: ஸ்பானிஷ் மைக்.
ஊர்: நியூயார்க்/உலவும் இடம்:யூ டியூப்
மொழி: அரைகுறை ஸ்பானிஷ்

ந்த வீடியோவில், மிஸ்டர் மைக், தனது ஸ்பானிய ஒன் சைட் காதலிக்காக ஸ்பானிஷ் கற்றுக்கொண்டு அதை அவரிடமே பரிட்சித்து பார்கின்றார். அரை குறை ஸ்பானிஷ் -ல் அவர் பாடும் இந்த பாடல் மிக வேடிக்கையாக இருப்பதாக மொழி அறிந்த நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த இணைப்பில் அவரது பேட்டியையும் பார்த்துவிடுங்கள்.

இதுபோல் ப்ரீ லான்ஸ் யூ டியூப் சென்ஸ்சேசனஸ் நிறைய உண்டு. உதாரணத்திற்கு இந்த பிலிப்பினோ அமெரிக்கன் நர்சின் கைவண்ணத்தை பாருங்கள். அவரது வலைப்பூ இங்கே










பாடுபவர்கள்: திருமண கச்சேரி குழுவினர்,
ஊர்: அல்ஜீரியா, மொழி: அரபி

ரு திருமண வீட்டில் நடைபெறும் இசை கச்சேரி இது. ஆடும் பெண்கள், அந்நிகழ்ச்சிக்கு வந்த திருமணமான பெண்கள். 'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம். ஆண்ட்டிகளை ரசிப்பதில் ஆட்சேபனை உள்ளவர்கள் அடுத்த வீடியோவிற்கு போகலாம்.















ஊர்: பிரேசில், மொழி: பிரேசில்

ம்பா நடனத்தையும் மேற்கத்திய நடனத்தையும் கலந்துகட்டி அடிக்கும் இந்த கோழிகள் எல்லாம் லத்தீன் அமெரிக்கர்கள். பிரேசில் மொழிப்பாடல் புரியாவிட்டாலும் மெட்டு நம்மூர் சினிமா பாடல்களை ஒத்துள்ளது. பிரேசிலுக்கே உரிய முக்கால் நிர்வாண நடனங்கள் இதில் குறைவு என்றாலும், தொடர்புடைய வீடியோக்களில் நிறைய உண்டு. அட! நிறைய என்று சம்பா நடனத்தை சொன்னேங்க!














பாடியவர்: ஹபிப் கொய்ட்டி,
ஊர்: மேற்கு ஆப்பிரிக்கா,
மொழி: மாலி

ன்ன, இந்த பாடலை எங்கோ கேட்டது போல் உள்ளதா? உங்கள் விஸ்டா ஆபரேட்டிங் சிஷ்டத்துடன் சாம்பிள் மியூசிக் சில வந்திருக்குமல்லவா, அவற்றை மறுமுறை கேட்டுப்பாருங்கள், அவற்றில் இது இருக்கும். மாலி இசைக்கலைஞரான ஹபிப் கொய்ட்டி கிட்டார் வாசிப்பதில் ஒரு விற்பன்னர். சாம்பிளுக்கு இந்த இணைப்பில் உள்ளதை கேளுங்கள்.தவற விடாதீர்கள்!















பாடியவர்:என்ரிக் இக்லெஸியஸ்,
ஊர்: மாட்ரிட், ஸ்பெயின்,
மொழி: ஆங்கிலம், மூலம்: ஸ்பானிஷ்

ன்ரிக் இக்லெஸியஸை பற்றி அறிமுகம் தேவை இல்லை. இவர் 2002 -லிருந்தே இந்தியாவில் ரொம்ப பேமஸ். ஸ்பானிய மொழியிலமைந்த ஒரிஜினல் பாடலின் ஆங்கில வடிவத்திற்கு மூன்று விதமான பாடல் சூழல் உள்ளன. இந்த வீடியோவில் உள்ள சூழல் ஒரு மெக்சிகோ நாட்டு கிராமப்புறம். மெக்சிகன் நடிகை சல்மா ஹயாக், அக்கால நெவேடா போலீஸ்காரர் போன்ற ஷெரீப் போன்றோர் வருவதும் மெக்சிகன் சூழலுக்கு வலு சேர்ப்பவையாயிற்றே! வரிகள்











பாடியவர்கள்: ரே சார்லிஸ் மற்றும் குழுவினர்
ஊர்: ஆல்பனி, ஜியார்ஜியா, அமேரிக்கா.,
மொழி: ஆங்கிலம்.

றுபதுகளின் இசைக் கலைஞர் ரே சார்லிஸ் ஒரு பார்வையற்ற பியானிஸ்ட். ஹிட் த ரோட் ஜாக் (Hit the Road Jack) என்ற இந்த பாடல் மிகச்சிறந்த ஐந்நூறு பாடல்களில் ஒன்றாக வரிசைபடுத்தப் பட்டுள்ளது. வரிகளை இங்கே பாருங்கள்






















பாடியவர்கள்: ஒருவர் அரப், மற்றொருவர் யூதர்,
மொழி: ஆங்கிலம் மற்றும் அரபி பியூசன்

ருவரும் ரட்கர்ஸ் பல்கலை கழக மாணவிகள் என கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்தது இல்லை. தொன்னூறுகளில் இந்தியாவில் சக்கை போடு போட்ட 'தீ தீ' என்ற அரபு பாடல் வரிகளும் மெட்டும் லேசாக இப்பாடலில் தென்படுகின்றதா? வரிகளை இங்கே பாருங்கள்


















மொழி: உய்கூர்

சீனா வியட்நாம் எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்த உய்கூர் இனத்தவர். இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முழுக்கவும் வேறான தேசிய இனம் சீன வல்லரசில் எம்மாதிரியாக காலம் தள்ளுகிறது என்ற தகவல் இணையத்தில் கிடைக்கலாம். இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி வேண்டாம்.

இப்பாடலில் சீன பாதிப்பு தெரிந்தாலும் இது தனித்தன்மை வாய்ந்த பாரசீக நடனமாக கூறுகிறார்கள்.











பாடியவர்: நகீது அக்தர்,
ஊர்: குஜராத், பாகிஸ்தான், மொழி: உருது

பாகிஸ்தானின் மிகப்பிரபலமான பாடகர். இது ஒரு சாமி பாட்டு மாதிரி தெரியுது, மொழி தெரிந்தவர்கள் கண்டறிந்து சொன்னா தேவலை



























பாடியவர்: தாலேர் மெகந்தி
மொழி: பஞ்சாபி, ஊர்: பஞ்சாப், இந்தியா

தாலேர் மெகந்தி பற்றி நான் எது சொன்னாலும் அது புதிய செய்தியாக இருக்காது, எனவே அடுத்த வீடியோவுக்கு அப்பீட்டு!



























பாடியவர்: ஜேம்ஸ்
மொழி: ஹிந்தி, ஊர்: பங்களாதேஷ்

து ஒரு ஹிந்தி பாட்டு.(அப்படியா!)































பாடியவர்: நாகூர் ஹனிபா,
ஊர்: தமிழ்நாடு, மொழி: தமிழ்

திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் குழுக்களோடும்

மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய்,

முழங்கு சங்கே!!!

Read More......

Thursday, November 20, 2008

பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா... லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...

· 19 comments


படம்: டிஷ்யூம்,
பாடகர்: சுக்வந்தர் சிங், பாடகி: காயத்ரி,
இசை: விஜய் ஆண்டனி

தினமுன் தமிழ் மனத்தின் முகப்பை பார்வையிடும்முன் பழைமைபேசியின் வலைப்பூவை ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம். அவரது பதிவொன்றில் பதிவர் ஸ்ரீராம் இட்ட பின்னூட்டம் பார்த்ததும் கீழ்க்கண்ட பாடல் நினைவுக்கு வர, மாந்தனைய (மாந்தநேய?) அன்பர்களுக்காக அப்பாடல் வரிகள்!

















வெல்கம் டு த டேன்ஸ்...

ம்ஹே... ம்ஹக்...
ம்ஹே... ம்ஹக்...

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர


ஹேய்... கிட்ட நெருங்கி வாடி கர்லாகட்ட ஒடம்புக்காரி
பட்டா எழுதித்தாரேன் பஞ்சாம்ருதம் உதட்ட தாடி
தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி


சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

டேய்.. கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா

சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர


பொத்தி வச்ச புயலா நீ -தங்கம்
கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி -உன்னை
திங்கப்போறேன் தரியா நீ

சாத்திவச்ச கதவா நீ -உள்ள
ஊத்தி வச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ -உன்ன
என்னப்போறேன் கொடுடா நீ.

தெப்ப கொளத்துல
முங்கி குளிக்கையில்
உன்ன தொட்ட மீனு
வெந்துடிச்சே!

கட்ட எறும்புங்க
உன்ன கடிச்சதும்
சக்கர நோயில்
செத்துருச்சே!

சேட்டு முதுகுக்காராராராராரா (வர வர வர வம்சிபுக்கரு) ராராரா...

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா... (என்னடா??!!)
பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...


தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

சேல
கட்டி வந்த மயிலா நீ -என்ன
முட்ட வந்த முயலா
உடம்பில மருதாணீ -இப்ப
வைக்கப் போறேன் ரெடியா நீ

சுட்டெரிக்கும் பகலா நீ -என்ன
சொக்க வைக்கும் இரவா நீ
எந்திரிச்சு மெதுவா நீ -என்ன
தாண்டி வரும் களவானீ

வங்க கடலில
வந்த புயல் சின்னம்
பட்டுன்னு கரைய
தாண்டிடுச்சே!

நெஞ்சுக்கிடையில
புது புயல் சின்னம்
உன்ன இடிச்சதும்
போங்கிடுச்சே!

சேட்டு முதுகுக்காரிரிரிரிரிரிரிரி(வர வர வர வம்சிபுக்கரு)ரிரிரிரி

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா (வர்றேன்...)
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா (தர்றேன்...)
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா (போறேன்...)
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா

சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர..

Read More......

Friday, August 22, 2008

ஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் வீடியோ

· 3 comments

சென்ற பதிவில் நான் வெளியிட்ட ஆப்லெட் தங்கள் பிரவுசரில் தெரிவதில் பிரச்சினை உள்ளோர்கள் இந்த இணைப்பில் உள்ள என் முந்தய பதிவிற்கு விசிட் செய்து பார்த்தால் பலன் இருக்கும். அம்முயற்சியும் பலனில்லை என்றால் கீழ்காணும் குறைந்த குவாலிட்டி வீடியோவில் ஆப்லெட்டை பாருங்கள்.




http://www.youtube.com/watch?v=sG1n-vkpKSM

Read More......

ச்சும்மா ட்டமாஷ் - 50: சிறப்புப் பதிவுகள், விளம்பர ஆப்லெட், புதிய JavaFx -இல்.

· 15 comments



Applet Not Working!


நண்பர்களே! தட்டுத்தடுமாறி நானும் ஐம்பதை (பதிவு எண்ணிக்கைதாங்க! வேறொன்னுமில்ல,) நெருங்கி ஆயிற்று! ஐம்பதாவது பதிவை என் வலைப்பூவில் லக்கி லுக் எழுதி சிறப்பிக்கவிருக்கிறார். கோவி அவர்கள் பேட்டியை முதலில் பதிவிட இருக்கிறேன். இறுதியாக, வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். விபரம் மேலே உள்ள விளம்பர ஆப்லேட்டில்!


ஆப்லெட் தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது JavaFx -ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆப்லெட் என்பதால் நண்பர்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Read More......

Wednesday, June 11, 2008

இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா?

· 4 comments




ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி சிறப்பிப்போர்


எனது வலைப்பூவில் எழுதும் கோவியார், உண்மைத்தமிழனார், தம்பி, திவ்யா, மங்களூர் சிவா, சென்ஷி, வெட்டிஆபிசர், எரோட்டிக்கா. இணைப்பு: ஆப்லெட் கையேடு

Read More......

Sunday, April 13, 2008

குத்து எப்டிவோய் கீது?

· 0 comments









இதே மெரி குத்து யாருட்னா கீதா? லிங்க் இருந்தா குடுங்க்பா, பிளீஸ்!

Read More......