Sunday, September 13, 2009

போலி டோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை

·

கடந்த சிலநாட்களாக தமிழ் வலையுலகை அல்லோகலப் படுத்திவரும் போலி டோண்டு விவகாரம் பதிவர்கள் மத்தியில் மட்டுமல்லாது வாசகர்கள் மத்தியிலும் சில எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றம், அவமானம், பதற்றம், பயம், நிம்மதி, அங்கலாய்ப்பு, அருவருப்பு என சில உணர்வுகளை உருவாக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த விவகாரம் காவல் துறை சம்பந்தப்பட்ட ஒன்றாகிப் போனபின் பல போலித்தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வலைப்பூக்களும் புதிய பதிவர்களால் நிரம்பி ஆரோக்கிய பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனினும் அவ்வப்போது புதிய பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் சிலராலும், வேண்டுமென்ற பிரச்சினையை கிளர வேண்டும் எண்ணத்தில் சிலராலும் இப்பிரச்சினை தூண்டப்பட்டு வருகிறது. ஓராண்டுக்குமுன் பதிவர் இளா -வால் இவ்வாறு ஒருமுறை தூண்டப்பட்டது. தற்போது சிறில் அலெக்ஸ் எழுதிய பதிவால் புதிய பதிவர்களுக்கு அவ்விவகாரம் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் இவ்விவகாரம் குறித்து, இதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பத்தப் பட்டவர்கள் தவிர்த்து ஏனையோர் கருதுவது 'இது தற்போது தேவையற்ற பிரச்சினை' என்பதாகும். ஆனால் அக்கருத்து இப்பிரச்சினை குறித்து முழுமையாக அறியாமலோ அல்லது எதுவுமே தெரியாமலோ இவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆகவே இதுகுறித்து இவ்வலைப்பூவில் முடிந்தவரை ஆதியோடந்தமாக விளக்க, இத்தொடர் பதிவும், வரவிருக்கும் பேட்டிகளும் முயற்சி செய்கின்றன.

உரிமைத்துறப்பு: தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


இந்த கதை 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. டோண்டு உட்பட பலரது தளங்களில் இதுபற்றிய செய்திகள் இருந்தாலும் அனைத்தும் சார்புக்கதைகளே. ஒரு முழுமையான விசாரணையை பலரிடம் மேற்கொண்டதின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்படுகிறது.

18-11-2004 அன்று நேசமுடன் வெங்கடேஷ் என்பவரால் எழுதப்பட்ட கமலகாசன் பற்றிய பதிவு (http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1) ஒன்று இவ் விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அப்பதிவில் கமலகாசனை சிலாகிக்கும் ஆசிரியர் அவரது குறிப்பிட்ட இரு பலங்கள் வேறு எவரிடமும் இல்லாதவை என்றும் அவருக்கு அடுத்து அரவிந்தசாமி, மாதவன் ஆகியோரிடம் அவற்றை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

///கமலுக்குப் பின் நான் இருவரை அதுபோன்ற ரிஸ்க் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒருவர் அரவிந்தசாமி. அவருக்கும் கமலைப் போலவே பேசும் முகம், கண்கள். கமலைவிட ஸ்மார்ட்டாய், வெள்ளைவெளேர் என்று வேறு இருந்தார்./////

////மற்றொருவர், மாதவன். இவரும் பாப்புலர் ஹீரோவின் அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றவர். /////பாப்புலர் ஹீரோ பிம்பத்தில் இருந்து சட்டென ஒரு கேரக்டர் ஹிரோ உயரத்துக்கு இவர் போகவேண்டும். அதற்கான அத்தனை வளங்களும் அவரிடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ////

பதிவர் ஒரு பிராமணர் என்பதை பின்னூட்டங்களில் அறிய முடிகிறது. பிராமணல்லாதோரை விட பிராமணருக்கு கூடுதல் தகுதிகள் உள்ளன என்பதுபோன்று இணையத்திலும் இதழ்களிலும் எழுதப்பட்ட பதிவுகளும், கட்டுரைகளும் எண்ணற்றவை இருந்தாலும் இப்பதிவுதான் போலி டோண்டு விவகாரத்திற்கு ஆணிவேர். அப்பதிவில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர்தான் விசாரனைக்குள்ளான பதிவர் மூர்த்தி என்று கருதப்படுகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட அவரது பின்னூட்டங்களில் அவர் அனைத்துவித கண்ணியத்தையும் கடைபிடித்திருக்கிறார். சூத்திரனை சோற்றுக்கு போய் மாடு மேய்க்கச் சொல்லும் ஒரு பின்னூட்டத்திற்கும் பொறுமையாகவே பதில் அளிக்கிறார். ஆனால் அவரது கடைசி பின்னூட்டத்திற்கு பிறகு வந்த அனானிமஸ் பின்னூட்டங்கள் அவரை மூர்க்கமாகவும் ஆபாசமாகவும் தாக்கியுள்ளன.

இன்று புனிதராக தனக்கு தானே பட்டம் கட்டி கொண்டிருக்கும் டோண்டு ஒரிஜினல் பெயரிலும், அனானிமஸ் மற்றும் முரளிமனோகர் பாணியில் வேறு வேறு பெயர்களிலும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பதை காணலாம். குறிப்பாக 'கமல் ரசிகன்' என்ற பெயரில் வந்த பின்னூட்டம் மிக மோசமானது. வழிப்போக்கனாக அங்கு கண்ணியமாக வாதிட்டது மூர்த்தி தானா என்பதை உறுதிகூட செய்யாமல், அது மூர்த்தியே தான் என்று முத்திரை குத்தி மாற்றி மாற்றி அடுத்தடுத்து அவரவர் வலைப்பதிவில் கும்மியிருக்கிறார்கள் பிராமண பிரியர்கள். சம்பந்தபட்ட சுட்டிகள் இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை, பலரும் பதிவுகளை அழித்துவிட்டார்கள். அவை கிடைத்தால் இன்றைய புனித பிம்பங்கள் அப்போது எவ்வளவு புனிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து தன் மீது குத்தப்பட்ட ஆபாச முத்திரை மூர்த்தியை மூர்க்கம் கொள்ள செய்தது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட போலியின் பொதுவான செயல்பாடு எதுவாக இருந்தது? டோண்டுவின் பதிவில் யாரும் பின்னூட்டம் இடக்கூடாது என்று பகிரங்கமாக மிரட்டப்பட்டார்கள். மீறி பின்னூட்டம் இட்டவர்களின் பதிவுகளுக்கு ஆபாச பின்னூட்டங்கள் வரும். இந்த பின்னூட்டங்களையும் டோண்டு பெயரிலேயே போட்டதால் மூர்த்திக்கு போலி டோண்டு என்று பெயர் சூட்டப்பட்டது. பலரும் இந்த சாக்கடையில் கல்லெறிய தயங்கி ஒதுங்கி நின்றார்கள்.

பிரச்சினையை தொடக்கத்திலேயே முடித்திருக்க டோண்டுவால் முடிந்திருக்கக் கூடும். போலிடோண்டுவின் எதிர்வினை ஆபாச பதிவுகளை நிறுத்துவது தொடர்பாக டோண்டு ஆதரவாளர்களும் அதை நிறுத்தி விட்டு தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சிலர் அவ்வாறு பிரச்சினையை முடித்திருக்கின்றனர். ஆனால் டோண்டுவால் பிரச்சினை பெரிதானது. பிரச்சினையில் ஒதுங்கி நின்றவர்கள் சிலரை பற்றிய தகவல்கள் டோண்டுவால் போலிடோண்டுவுக்கு போனதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக டி.பி.ஆர் ஜோசப், சிவஞானம்ஜி ஆகிய மூத்த பதிவர்களை சொல்லலாம். இவர்களை பற்றி போலியிடம் டோண்டுவே போட்டு கொடுத்தது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, டோண்டு பின்னூட்டமிடும் அப்பாவி பதிவர்கள் டோண்டுவுக்கு பதில் பின்னூட்டமிடும்போது அவர்கள் போலி டோண்டுவால் தாக்கப்பட்டார்கள். இதற்கிடையே, டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் இடையில் ஆபாச சேட்டிங் பலமுறை நடந்துள்ளன. பதிவர் சந்திப்பு ஒன்றில் ‘மூர்த்தி தேவடியா மகன் போனில் திட்டினான்’ என்று டோண்டு சொன்னதை சந்திப்பில் கலந்துகொண்ட, இவ்விஷயத்தில் சம்பந்தப்படாத பதிவர்கள் மூலம் அறியப்படுகிறது.

போலியும் டோண்டுவும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக மாய்ந்துக் கொள்ளும்போது ஒதுங்கி நின்றவர்கள் பயந்தான்கொள்ளிகளாக கருதப்பட்டனர். பலர் பதிவெழுதுவதை நிறுத்தினர். ஆனால் சிலர் போலியின் அல்லக்கைகளாக பெயர்சூட்டப்பட்டனர். போலியுடன் தம் தொடர்பை மறுத்த அல்லது துண்டித்துக்கொண்ட பலரும் அப்பெயரை பெற்றுக்கொண்டனர். அப்பெயர் பெற்றவர்களில் சிலர் பிறகு போலியிடம் தமக்கேற்பட்ட மனக்கசப்புகளால் தம் ஆதரவை டோண்டுவுக்கு வழங்கத் தொடங்கினர். போலியை போலி பாணியிலேயே தொடர்ந்து தாக்கி வந்த பலருக்கு டோண்டுவிடம் இருந்து என்ன பட்டம் கிடைத்தது என்று தெரியவில்லை. இதன் பிறகு ஆபாசமாகத் தாக்கிக் கொண்டவர்கள் மற்றும் அமைதியாக இருந்தவர்கள் என்று இருந்த இரு பிரிவு மாட்டிக்கொண்டவர்கள், மாட்டிவிடுபவர்கள் என்று மாறிப்போனது.

இந்நிலையில் தமக்கு ஆதரவு திரட்ட டோண்டு செய்த சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. சென்னையில் பதிவர் சந்திப்பு என்று அறிவிப்பார். ஏழெட்டு பேர் விபரம் தெரியாமல் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் கூடுவார்கள். போண்டா சாப்பிடுவார்கள். அன்று மாலையே பதிவர் சந்திப்பு பதிவு ஒன்றை டோண்டு போடுவார். சந்திப்பில் போலியை ஒழிப்பது எப்படி என்று பேசியதாக எழுதுவார். இது போதாதா? சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவர் பெயரிலும் போலி தளம் ஆரம்பித்து விடுவான் போலி டோண்டு. இவ்வாறாக டோண்டு – போலி டோண்டு என்ற இரு நபருக்கும் மட்டுமே இருந்த பிரச்சினையை மிக கவனமாக போலி டோண்டு – தமிழ் பதிவர்கள் என்று வளர்த்தெடுக்க டோண்டு பிரயத்தனப்பட்டார். 2005, 2006 மற்றும் 2007 ஆகிய மூன்றாண்டுகளில் போலி டோண்டு தமிழ் வலைப்பூக்களில் கடுமையான வெறியாட்டம் ஆடி வந்திருக்கிறான். சகட்டுமேனிக்கு கண்ணில் கண்ட எல்லோரையுமே ஆபாசமாக அர்ச்சித்து மன உளைச்சலை கொடுத்து வந்திருக்கிறான்.

எப்படி இருந்தாலும் போலியை உருவாக்கியவர் என்ற முறையிலும், போலி டோண்டு தற்போது வலைப்பூக்களை விட்டு விலகி விட்டதாலும் டோண்டுவே அப்போது இருந்த ஆபாசசூழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார்.


[தொடரும்]

50 comments:

TBCD said...
September 13, 2009 at 10:33 PM  

உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன் !

மோகன் கந்தசாமி said...
September 13, 2009 at 11:15 PM  

///உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன்///

வாங்க! TBCD

gulf-tamilan said...
September 13, 2009 at 11:22 PM  

தொடர் கதையா !!! ம்.

ILA (a) இளா said...
September 13, 2009 at 11:26 PM  

ஒரு பக்கமா நின்னு வேடிக்கை பார்த்தமாதிரி தெரியுதுங்களே. இப்படி எழுதினாவே தூண்டுறதுதான். என் பேரு வந்தததால இங்கன வந்தேன். :)

மோகன் கந்தசாமி said...
September 13, 2009 at 11:36 PM  

Thanks Gulf-Tamilan

மோகன் கந்தசாமி said...
September 13, 2009 at 11:36 PM  

இளா!

இப்படி எழுதினா தூண்டல் இல்லை. எழுதியபின் 'நான் தூண்டுவதற்காகத் தான் எழுதினேன்' என்று சொல்லும்போதுதான் அது தூண்டல். சென்ற ஒரு தூண்டலை தூண்டியவரின் வாக்குமூலம் இது!!

மேலும், இரு பாகங்கள் இருக்கு. ஐந்துக்கும் மேற்பட்ட பேட்டிகள் இருக்கு. அதன் பிறகு சொல்லுங்கள், இது தூண்டலா இல்லையா என்று!!!

பிறகு, நலமா??!!

நம்ம பதிவர் சந்திப்பு போட்டோ இருக்கா உங்க கிட்ட!!

ILA (a) இளா said...
September 13, 2009 at 11:45 PM  

//நான் தூண்டுவதற்காகத் தான்
எழுதினேன்' //

தூண்டுனமாதிரி நானும் எழுதலை, எழுதும் போது அது எண்ணமும் இல்லே. தூண்டுவதற்காக எழுதுவேன்னு எழுதலையே அப்புறம் எத வெச்சி தூண்டினேன்னு சொல்றீங்க? BLOGOGRAPHYதொடற்சியா லக்கிபத்தி எழுதியிருக்கனும். போலி சம்பந்தப்பட்டது எழுதினாலும்/எழுதாட்டாலும் பிரச்சினை வரும்னு விட்டுட்டேன்.

சந்திப்பின் புகைப்படங்கள் இல்லிங்க. கிடச்சா தரேன்

SurveySan said...
September 14, 2009 at 12:11 AM  

யாருமே புச்சா ஒரு மேட்டரும் சொல்ல மாட்றீங்களே? அரச்ச அரச்ச மாவையே அரைக்கறீங்க மாத்தி மாத்தி.

இந்தப் பதிவு, ஒரு பக்கம் அரைக்கர மாதிரியே தோணுது. அடுத்த பகுதிகள் வாசிச்சிட்டு நடுவா அரைக்குதான்னு சொல்றேன்.

நீங்க மேற்கோள் காட்டிய கமல் பதிவிலும், ஆரம்ப சாதியம்சத்தை கொண்டு வந்தது வழிப்போக்கர் தான் என்று தெரிகிறது.

வழிப்போக்கர் தான் அவனா, அவன் தான் இவனான்னெல்லாம், ஆதாரம் இல்லாமல் முடிஞ்ச வரைக்கும் சொல்வதை தவிர்க்க்லாம் என்பது என் கருத்து. கேஸு அது இதுன்னு போயிக்கிட்டு இருக்குல்ல, அதனால சொல்றேன்.

அடுத்த பதிவுகளை எதிர்பார்த்து, ஆவலுடன் ;)

SurveySan said...
September 14, 2009 at 1:54 AM  

//பதிவர் ஒரு பிராமணர் என்பதை பின்னூட்டங்களில் அறிய முடிகிறது//

how did you deduce this?

உண்மைத்தமிழன் said...
September 14, 2009 at 2:09 AM  

இனி எழுத வேண்டாம்னு சும்மா இருந்தாலும் அந்த முருகன் விடமாட்டேங்குறான்..

தனிப்பதிவு போட்டுத்தான் மோகனை கும்மணும் போலிருக்கு..!

போடுறேன்..

கிரி said...
September 14, 2009 at 3:09 AM  

வாங்க மோகன் எப்படி இருக்கீங்க! :-)

//இதுகுறித்து இவ்வலைப்பூவில் முடிந்தவரை ஆதியோடந்தமாக விளக்க, இத்தொடர் பதிவும், வரவிருக்கும் பேட்டிகளும் முயற்சி செய்கின்றன. //

இதெல்லாம் நடக்கிற காரியமா!நடத்துங்க ;-)

Anonymous said...
September 14, 2009 at 3:57 AM  

//அப்பதிவில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர்தான் விசாரனைக்குள்ளான பதிவர் மூர்த்தி என்று கருதப்படுகிறது//.
தான் வழிப்போக்கன் என்பதை மூர்த்தியே ஒத்துக் கொண்டாகி விட்டது. ஆகவே கருதப்படுகிறது என்றெல்லாம் எழுதப் [பிரமேயமே இல்லை.

//முப்பதுக்கும் மேற்பட்ட அவரது பின்னூட்டங்களில் அவர் அனைத்துவித கண்ணியத்தையும் கடைபிடித்திருக்கிறார்.//
மூர்த்தியின் ஆரம்பப் பின்னூட்டம் இதோ:
“நடிகர் திலகம் தனது நடிப்பால் எல்லோரையும் கவர்ந்திழுத்ததோடு தம் வாழ்க்கையும் திறந்த புத்தகமாக வைத்திருந்தார். அதனாலேயே அவரின் புகழ் இறந்த பின்னும். உங்களின் கமலும் திறந்த புத்தகமாகத்தான்! ஆனால் திறந்திருப்பது அவர் வாழ்க்கையல்ல... அண்டர்வேர்!//
இதில் என்ன கண்ணியம் கண்டீர்கள்.

//இன்று புனிதராக தனக்கு தானே பட்டம் கட்டி கொண்டிருக்கும் டோண்டு ஒரிஜினல் பெயரிலும், அனானிமஸ் மற்றும் முரளிமனோகர் பாணியில் வேறு வேறு பெயர்களிலும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பதை காணலாம். குறிப்பாக 'கமல் ரசிகன்' என்ற பெயரில் வந்த பின்னூட்டம் மிக மோசமானது.//
Quite uncalled for libellous accusation that I commented under the name of கமல் ரசிகன்.
முரளி மனோகர் பெயரில் ஒரு ஆபாசப் பின்னூட்டத்தையாவது காட்டவியலுமா? விஷயம் புரியாமல் உளறக்கூடாது.

//பிரச்சினையை தொடக்கத்திலேயே முடித்திருக்க டோண்டுவால் முடிந்திருக்கக் கூடும். போலிடோண்டுவின் எதிர்வினை ஆபாச பதிவுகளை நிறுத்துவது தொடர்பாக டோண்டு ஆதரவாளர்களும் அதை நிறுத்தி விட்டு தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சிலர் அவ்வாறு பிரச்சினையை முடித்திருக்கின்றனர்.//

ஆம் வலைப்பூவையே விட்டு ஓடியிருக்கின்றனர், ஆகவே பிரச்சினையிலிருந்து விலகினர். அம்மாதிரி நான் செய்யவில்லை. உமக்கு ஏதேனும் ஆட்சேபணை? அல்லது கடைசியில் மூர்த்தியை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசியது குறித்து ஏதேனும் வருத்தம்?

//பிரச்சினையில் ஒதுங்கி நின்றவர்கள் சிலரை பற்றிய தகவல்கள் டோண்டுவால் போலிடோண்டுவுக்கு போனதாக கூறப்படுகிறது.//
இந்த கூறப்படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் இல்லாது ஆதாரம் தரமுடிந்தால் தாருங்கள்.

எனக்கு பின்னூட்டமிடக்கூடாது என மூர்த்தி கூறியது எந்த விதத்தில் உங்களால் ஜஸ்டிஃபை செய்யப்படும்?

//எப்படி இருந்தாலும் போலியை உருவாக்கியவர் என்ற முறையிலும், போலி டோண்டு தற்போது வலைப்பூக்களை விட்டு விலகி விட்டதாலும் டோண்டுவே அப்போது இருந்த ஆபாசசூழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார்.//
வழக்கமான மோகன் கந்தசாமித்தனமான உளறல் என்று அதை அலட்சியம் செய்கிறேன்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் விதமாக அதன் நகலை எனது “சப்பைக்கட்டு கட்டும் போலியின் அல்லக்கைகள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2009/09/blog-post_12.html

டோண்டு ராகவன்

கிஷோர் said...
September 14, 2009 at 4:31 AM  

ம்ம்ம்ம் சூப்பரு அப்புறம் :)

மாடல மறையோன் said...
September 14, 2009 at 5:30 AM  

இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு மூலகாரணமே, சாதிப்பிளவுதான் என்பது என் முடிபு.

தமிழ்ப்பார்ப்பனர் வலைபதிவு போன்ற படித்தவர்கள் காணப்படும் இடங்களில் தங்கள் சாதியைப்பற்றிப் பேசியும், தாங்கள் மற்றவரிடமிருந்து தனித்து ஒரு குழுவாக இயங்குவதினாலும், வலைபதிவு போன்றவிடங்களில், பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் என ஒரே பிரிவாக செயல் ஆகிவிட்டது.

பார்ப்பனப்பிரிவுக்கு டோண்டு ராகவன் தலைமைபோல் செயல்பட்டு வருகிறார். அவர் சகாக்கள் அவர் எழுதும் அனைத்திலும் வந்து ஆஜராகி பின்னூட்டமிட்டு, அவருக்கு ஊக்கம் அளித்துவருகின்றனர்.

பார்ப்பனரல்லாதோர் அப்படி ஒன்றாக செயல்படுகிறமாதிர் தெரியவில்லை. அதாவது, அவர்களில் பலர் பார்ப்பன்ரோடே இருக்கிறார். அது நிற்க.

இப்படி சேரமுடியாத பிரிவை உணராமல், இவர்கள் விடயத்தில் அவர்கள் ஏன் நுழைகிறார்கள்? தாங்கள் தனியே செயல்படவேண்டியதுதானே? அவர்கள் சில சினிமா நடிகர்கள் எங்கள் சாதி. நாங்கள் மற்ற தமிழரைவிட அழகு என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டால் என்ன பிரச்னைமற்றவருக்கு?

பார்ப்பனர் பிறரிடமிருந்து தனித்து தங்களுக்குத்தாங்களே தம் சாதியைப்பற்றி உயர்வாக நினைத்தும் எழுதியும் வந்தால் மற்றவர் ஏன் அங்கு போய் கதைக்கிறார்கள்?

அன்றும் இன்றும் பார்பபனர்கள் மற்றவர்களிடம் சொல்லிவருவது,

”நாங்கள் எப்படியும் இருந்துவிட்டுப்போகிறோம்...நீங்கள் ஏன் எங்களைவதைக்கிறீர்கள்?”

என்பதுதான்.

நான் வலைபதிவுகளுக்கு புதியவன். இதுகுறித்து என அனுபவம் என் புதிய வலைபதிவில் உள்ளது. www.inippumkarippum.blogspot.com

உங்கள் தனித்தன்மையையும் தனிச்சிறப்பயும் பற்றி நீஙகள் பேசிக்கொள்ளுங்கள். அவர்களைப்பற்றி அவர்கள் பேசிக்கொள்ளட்டும். தனித்தனியே செயல்படுங்கள். எல்லாம் நலமாகும் என்பது என் கருத்தாகும்.

iniya said...
September 14, 2009 at 7:34 AM  

எப்படி இப்படில்லாம்?

Anonymous said...
September 14, 2009 at 7:36 AM  

டோண்டுவுக்கு அடுத்த ரவுண்டு விளம்பரமா? எல்லோருமாக சேர்ந்து இப்படி அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்தே உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் அவரிடம் கேள்வி கேட்டு அதற்கு அவர் தீர்வு சொல்கிற ரேஞ்சுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள். நடத்துங்க.

Anonymous said...
September 14, 2009 at 7:52 AM  

டோண்டு சல்மா அயூப் என்ற பெயரில் ஜயராமனோடு நடத்திய வலைப்பூவையும், அதற்கு உண்மைதமிழன் எழுதி கொடுத்த ஆபாச பின்னூட்டங்கலையும் பற்றியும் சொல்லியிருக்கலாம்.

Anonymous said...
September 14, 2009 at 8:18 AM  

ஃபீல்ட் அவுட் ஆன பார்ட்டிங்க எல்லாம் ரீ என்ட்ரீ ஆக போலி பத்தி பேச ஆரம்பிச்சுடுதுங்ஜ

களப்பிரர் - jp said...
September 14, 2009 at 10:03 AM  

டோண்டு மாதிரி வயசான பார்ப்பனர்கள் கணினி முன் உட்கார்ந்து சுய தொழில் செய்வதால், நாள் முழுவதும் பதிவும் எதிர் பதிவும் போட்டு உண்மை திராவிடர்களின் சுயமரியாதையை சீண்டி பார்க்க முடிகிறது.

மூர்த்தி போன்றவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் பெரியார் பற்றி எழுத வேண்டும், அரசியல் எழுத வேண்டும் அப்புறம் இந்த பார்ப்பனர்களுக்கு பதிலும் எழுத வேண்டும். அவர் கோவப்படாமல் என்ன தான் செய்வார் ??

ஒரு யூதனை விட நான் இஸ்ரேலை அதிகம் நேசிக்கிறேன் என்ற ரீதியில் வாந்தி எடுக்கும் அவரின் அரசியல் எழுத்துக்கள் சமத்துவம் பேசும் யாவருக்கும் வெறுப்பேற்றவே செய்யும்.

ஆதலால் அவரின் மீது கோவப்பட்டு அவரின் பதிவுகளை படிக்காதீர்கள் பின்னோட்டம் இடாதீர்கள் என்று மூர்த்தி சொல்ல நேர்ந்தது புரிந்து கொள்ள கூடியதே. எப்படி உலகில் கொக்க கோலாவை புறக்கணியுங்கள், தோல் ஆடைகளை புறக்கணியுங்கள் என்று பல அமைப்புகள் குரல் கொடுக்கின்றனவோ அது போல்.

சும்மா மீண்டும் மீண்டும் மூர்த்தி ஆபாசமா பினூட்டம் இட்டார், பலான படம் போட்டார் என்றால் அதற்கான பதில் - அவரும் அந்த செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டியவேரே. ஆனால் அவரது எதிரணி என்ன இயேசு சொன்னதுபோல் மறு கன்னத்தை கட்டிகொண்டா நின்றது ? விட்டது சிகப்பு, விடாது பருப்பு என்ற ரீதியில் அவர்களும் சளைக்காமல் எழுதியவர்கள் தான்.
கமல் - அரவிந்த சாமி - மாதவன் பற்றிய பதிவில் முதலில் ஆபாசமாக பதிலிட ஆரம்பித்தவர்கள் மூர்த்தியின் எதிர் வாத காரர்களே.
அவர்களையும் இந்த சைபர் போலீஸ கண்டு புடித்து அதற்கான தண்டனையை கொடுத்தால் மட்டுமே மூர்த்திக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

மூர்த்தியின் பெயரை லக்கியார் அவர் எழுதிய தொடரில் சொல்லாமல் விட்டது தான் உண்மை தமிழனிற்கு வருத்தம் என்றால் - எம்பதாயிரத்தி நானூத்தி எழுபத்தி நான்கு வாக்கியங்களில் இருக்கும் அந்த பதிவில் உண்மையார் சல்மா அயூப்பை பற்றி சொல்லி இருக்கிறாரா? ஏன் ? என்று யாரும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவர்கள் அல்லக்கை.

எனக்கு தெரிந்தவரையில் உலகின் எந்த நாட்டிலும் எந்த இனத்திலும் "அண்டர் வேர் திறப்பது" என்பது கெட்ட வார்த்தையே கிடையாது.

//டோண்டுவுக்கு அடுத்த ரவுண்டு விளம்பரமா? எல்லோருமாக சேர்ந்து இப்படி அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்தே உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் அவரிடம் கேள்வி கேட்டு அதற்கு அவர் தீர்வு சொல்கிற ரேஞ்சுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள். நடத்துங்க.//

சரியாக சொன்னீர்கள்.

Anonymous said...
September 14, 2009 at 10:41 AM  

Dondu wanted everybody should get bashings from poli. So he try to include everybody in poli's hitlist and brand others as cowards.

To some extent, finally kuzhali ravi chella also doing the same.

dondu(#11168674346665545885) said...
September 14, 2009 at 1:18 PM  

//ஒரு யூதனை விட நான் இஸ்ரேலை அதிகம் நேசிக்கிறேன் என்ற ரீதியில் வாந்தி எடுக்கும் அவரின் அரசியல் எழுத்துக்கள் சமத்துவம் பேசும் யாவருக்கும் வெறுப்பேற்றவே செய்யும்.//
இஸ்ரேலுடன் எனக்கு பூர்வஜன்ம பந்தம். அப்படித்தான் கூறுவேன், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.

இப்போதுகூட ஈழத் தமிழர்கள் இஸ்ரவேலர்களை பின்பற்றவேண்டும் என பலரும் கூறுவதை கேட்டதில்லையா?

பை தி வே இஸ்ரேலை குறிப்பிட்டதால் மட்டுமே நான் இங்கு வந்தேன். வேறு விஷயங்கள் இஸ்ரேலுடன் ஒப்பிடும்போது எனக்கு ஒன்றுமேயில்லைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

களப்பிரர் - jp said...
September 14, 2009 at 1:23 PM  

ஆங்கில கூற்று ஒன்று தான் நினைவிற்கு வருகிறது “Society prepares the crime, the criminal commits it”. மூர்த்தி அவர்களுக்கு களம் அமைத்து கொடுத்த பெருமை உங்களை தான் சாரும்!

Anonymous said...
September 14, 2009 at 2:10 PM  

//டோண்டு போன்ற கடைந்தெடுத்த ஜாதிவெறியர்களை கட்டுப்படுத்த ஆயிரம் போலிகளை உருவாக்க வேண்டும்//
இப்படி உசுப்பேத்தியே பாவம் மூர்த்தியை போலீசிடம் கொண்டு சேர்த்தீர்கள். ஒரு போலியை உருவாக்கி அவருக்கும், அவர் குடும்பத்திற்கும், பிறருக்கும் ஏற்பட்ட தொல்லைகள் போதாதா? டோண்டுவை இக்னோர் செய்துவிட்டு வேலையைப் பார்ப்பதே சிறந்த வழி. டோண்டுவின் குருநாதர் சோ இப்படித்தான் நாப்பது ஆண்டுகளாக ஜாதி வெறி பிடித்து கத்திக்கொண்டிருக்கிறார். அவரால் ஏதாவது கிழிக்க முடிந்ததா? ஒன்றுமில்லை. அதே மாதிரிதான் டோண்டுவும். சும்மா தவளைச் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார். விட்டுத்தள்ளுங்கள்.

அர டிக்கெட்டு! said...
September 14, 2009 at 4:34 PM  

சுமார் ஒரு வருடம் முன்னால் வலையுலகத்துக்கு புதியவனாய் வந்து போலி டோண்டு பிரச்சனையை பற்றி ஒரு பின்னூட்டத்தில்ல கேட்டேன், பிறகு எழுதுவதாய் சொன்னீர்கள்.. அதை எழுதியமைக்கு நன்றி. மொத்த தொடரையும் படித்துவிட்டு கருத்து எழுதுவதுதான் சரியானது என்றாலும். இங்கே தோழர் jp கருத்்தை ஒட்டி எனது கருத்தையும் பதிகிறேன்

மூர்த்தி அராஜகமான முறைகளை கடைப்பிடித்ததும், அதனால் நட்பு சக்திகளையே பகையுணர்ச்சி கொள்ளச்செய்ததும் அடி முட்டாள்தனமான செயல்பாடு. இதனால் பார்ப்பனியத்தை, இனவெறியை நேரடியாகவும்/மறைமுகமாகவும் தூக்கிப்பிடிக்கும் டோண்டு என்னும் வலைப்பதிவின் உள்ளடக்கத்துக்கு எதிரான போராட்டம்,
தனிநபர் பிரச்சனையாக மாறி/மாற்றப்பட்டு திசைவிலகி போய்விட்டது. மூர்த்தியோ அவருடன் இருந்தவர்களுக்கோ இந்த அரசியல் அறிவு கொஞ்சமும் இருந்த்தாக தெரியவில்லை. திராவிடம் பெரியார் என பந்தாவுக்கு பேசினாலும் பெரியாரை மருந்தளவுக்காவது படித்திருந்தால் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டம் பற்றி அறிந்திருக்கலாம்.

வலையுலகில் மீண்டும் பொதுவுடமை, திராவிடம், தமிழ், ஈழம், இலக்கியம் போன்றவை மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதால் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பதிவர்கள் போலி டோண்டு பிரச்சனையை தோண்டி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். முதல் சுற்றில் பாடம் கற்றது அவர்கள் மட்டுமல்ல என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Anonymous said...
September 14, 2009 at 6:09 PM  

\\இஸ்ரேலுடன் எனக்கு பூர்வஜன்ம பந்தம். அப்படித்தான் கூறுவேன், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.//
முன்பெல்லாம் இஸ்ரேலியர்களுக்கு நாடு கிடையாது....அபோதெல்லாம் இஸ்ரேலியர்கள் அடிகடி இந்திய வந்து சொன்றதாக படித்த நியாபகம்.....

எம்.எம்.அப்துல்லா said...
September 14, 2009 at 7:27 PM  

என்னடா மோகன் அண்ணனை இம்புட்டு நாளா ஆளக்காணோமேன்னு நினைச்சேன். இம்புட்டு நாளா அடிவாங்க ஒடம்பத் தேத்திக்கிட்டு இருந்துருக்குறீருன்னு இப்பத்தான் தெரியுது :))

எம்.எம்.அப்துல்லா said...
September 14, 2009 at 7:43 PM  

//இப்போதுகூட ஈழத் தமிழர்கள் இஸ்ரவேலர்களை பின்பற்றவேண்டும் என பலரும் கூறுவதை கேட்டதில்லையா

//

உளறாதீரும். முதலில் நீங்கள் தனிஈழத்தை ஆதரிக்கின்றீர்களா??ஈழத் தமிழர்கள் விஷயத்தைப் பற்றிப்பேச உங்களுக்கு எந்தவிதத்திலும் அருகதை இல்லை. நான் ஏதாவது இது விஷயமாக கேட்கப்போனால் ஈழத்தமிழர்கள் ஆதரவு வேறு, புலிகள் ஆதரவுவேறு என்று சப்பைக்கட்டு கட்டுவீர்கள். ஈழத்தமிழர்கள் விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பது இங்கு அனைவருக்கும் தெரியும். போலிடோண்டு விவகாரத்தைப்பற்றிப் பேசுவதானால் அதைபற்றி மட்டும் பேசுங்கள். உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க தினமும் செத்துப்பிழைக்கும் இனத்தை ஆட்கள் ஆக்காதீர்கள்.

கோபம்....குமுறிவிட்டேன். எனக்கு பதில் சொல்கின்றேன் பேர்வழி என மீண்டும் எம் இனத்தை இழுக்காதீர்.தயவுசெய்து போலி விவகாரம் பற்றி மட்டும் பேசுங்கள்.

Anonymous said...
September 14, 2009 at 8:25 PM  

Great defense. Blame the victims. Murthy was shaping into Mahatma but for the victims he turned into psycho.

dondu(#11168674346665545885) said...
September 14, 2009 at 9:22 PM  

// எனக்கு பதில் சொல்கின்றேன் பேர்வழி என மீண்டும் எம் இனத்தை இழுக்காதீர்.தயவுசெய்து போலி விவகாரம் பற்றி மட்டும் பேசுங்கள்.//
நீங்கள் குமுற வேண்டுமானால் முதலில் களப்பிரரிடம் அதை செய்யுங்கள். அவர்தான் இஸ்ரேலை இழுத்தார்.

அதே சமயம் ஈழத்தமிழர்கள் தற்சமயம் கி.பி. 70-ல் யூதர்கள் இருந்த நிலையில் உள்ளனர். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் அலைந்து இஸ்ரேலை ஸ்தாபித்தனர். ஈழத் தமிழர்களும் அவர்களை பின்பற்ற வேண்டும் என எனக்கு முன்பே பலரும் குரல் தந்து விட்டனர்.

நான் தரக்கூடாது என என்னிடம் சொல்ல நான் யாருக்கும் அந்த உரிமை தரவில்லையே.

டோண்டு ராகவன்

டோண்டு வகையரா said...
September 14, 2009 at 9:32 PM  

திராவிட அரசியல் பேசும் அல்லக்கைகள் அனைவருமே ஆபாசப் பிரியர்கள் தான்.அது, பெரிய தாடிக்காரர்,அண்ணாதுரை,மஞ்ச துண்டு போன்ற தலைவர்களாக(?) இருந்தாலும் சரி

Anonymous said...
September 14, 2009 at 10:09 PM  

@எம்.எம்.அப்துல்லா
//ஈழத் தமிழர்கள் விஷயத்தைப் பற்றிப்பேச உங்களுக்கு எந்தவிதத்திலும் அருகதை இல்லை.//

ஏனய்யா இதை தீர்மானிக்க நீர் யார்? ஈழத் தமிழனா அல்லது அவர்தம் பிரதிநிதியா?

டோண்டு ரொம்ப நாளுக்கு முன்பு ஒரு பதிவு இட்டார்... ஒரு ஈழத் தமிழர் அவரிடம் மொழிபெயர்ப்பு விடயமாக அணுகினாராம். அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் அடைக்கலம் கேட்டு விண்ணபித்துள்ளார். அங்கிருந்து வந்த பதிலை மொழிபெயர்ப்பு செய்யவேண்டும். ஆனால் அந்நாட்டரசு அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. காசில் எப்போதும் கறாராக இருக்கும் டோண்டு அவரின் துன்பம் கண்டு மனமுருகி அவரிடம் பணமேதும் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பி வைத்துள்ளார். இந்த மனித நேயம் போதாதா?

டோண்டு இதையாவது செய்தார். நீர் வெட்டியாக ஈழத் தமிழர் பற்றி இரண்டு பதிவு போட்டிருப்பீர்.

என்னவோ வன்னிக்குப் போய் சிங்கள காடையரை வேரறுத்தவர் போல் எழுதுகிறீர்???

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:25 PM  

இளா, தனிமடலில் பேசுவோம்.

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:29 PM  

////யாருமே புச்சா ஒரு மேட்டரும் சொல்ல மாட்றீங்களே? அரச்ச அரச்ச மாவையே அரைக்கறீங்க மாத்தி மாத்தி.///

முழுபதிவுகளையும் படித்தால் உங்கள் எண்ணம் மாறலாம்.

///வழிப்போக்கர் தான் அவனா, அவன் தான் இவனான்னெல்லாம், ஆதாரம் இல்லாமல் முடிஞ்ச வரைக்கும் சொல்வதை தவிர்க்க்லாம் என்பது என் கருத்து. கேஸு அது இதுன்னு போயிக்கிட்டு இருக்குல்ல, அதனால சொல்றேன்.///

FIR -கூட ஒரு பப்ளிக் டாக்குமெண்ட் தான். எனினும் இவ்விவகாரம் FIR அளவிற்கு கூட செல்லவில்லை போலிருக்கு. மொத்தமாக ஒரு விசாரணை நடைபெற்றிருக்க வேண்டும். அல்லது நடைபெற்றே இருக்ககூடாது.

//அடுத்த பதிவுகளை எதிர்பார்த்து, ஆவலுடன் ;)//

விரைவில்.

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:32 PM  

///இனி எழுத வேண்டாம்னு சும்மா இருந்தாலும் அந்த முருகன் விடமாட்டேங்குறான்..
தனிப்பதிவு போட்டுத்தான் மோகனை கும்மணும் போலிருக்கு..!
போடுறேன்..////

மோகனை கும்முவதில் மோகனுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இதற்கு பேசாமல் எனக்கு ஒரு பேட்டி தரலாம்.

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:35 PM  

///வாங்க மோகன் எப்படி இருக்கீங்க! :-)///

நல்லா இருக்கேன் கிரி.

//இதுகுறித்து இவ்வலைப்பூவில் முடிந்தவரை ஆதியோடந்தமாக விளக்க, இத்தொடர் பதிவும், வரவிருக்கும் பேட்டிகளும் முயற்சி செய்கின்றன. //

இதெல்லாம் நடக்கிற காரியமா!நடத்துங்க ;-)///

ஒரு முயற்சி தான். :-))

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:40 PM  

////இந்த கூறப்படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் இல்லாது ஆதாரம் தரமுடிந்தால் தாருங்கள்.///

ஆதாரங்கள் எல்லாம் நான் நம்புவதற்கு திரட்டப்பட்டவை. வெளியிடுவதற்காக அல்ல. மேலும் இப்பதிவில் நான் யாரையும் விசாரிக்கவோ தண்டனை கொடுக்கவோ இல்லை. அதற்கான இடத்தில் இல்லை. பலரும் வினவும் கேள்விகளுக்கு விடைகான முயன்றேன். என்னை நம்புபவர்களுக்கு செய்தியாக தர முயற்சிக்கிறேன். அவ்வளவே!

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:45 PM  

வருகைக்கு நன்றி நண்பர் அரை டிக்கெட்டு

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:49 PM  

அப்துல்லா அண்ணே ! நல்லா இருக்கீங்களா!!??

உங்கள் பின்னூட்டங்களுக்கு விரிவாக பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஏனெனில் நான் இவ்விவகாரம் குறித்த எப்பின்நூட்டத்திற்கும பதிலோ பாராட்டோ தெரிவிக்க விரும்பினாலும் வேண்டாம் என நினைக்கிறேன். காரணம் நேரம் அதில் போய்விடும் என்று கருதுகிறேன். ஒவ்வொருவருக்கும் இறுதியில் நிச்ச்யம் அளிப்பேன் அல்லது சம்பத்தப்பட்ட வர்களிடம் பெற்று அளிப்பேன்.

பிறகு ஊரில் அனைவரும் நலமா? விரைவில் தொலை பேசுகிறேன்

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 10:53 PM  

நன்றி நோக்கியா மற்றும் கிஷோர்

எம்.எம்.அப்துல்லா said...
September 15, 2009 at 1:35 AM  

//ஏனய்யா இதை தீர்மானிக்க நீர் யார்? ஈழத் தமிழனா அல்லது அவர்தம் பிரதிநிதியா?

//

அவர்தம் உறவு

அப்புறம் ஒரு ஈழத் தமிழருக்கு இலவசமாக மொழிபெயர்த்துத்தந்தால் அவர் தனி ஈழத்தை ஆதரிப்பவராகி விடுவாரா?? எங்கே அவரை நான் தனி ஈழம் அமைவதை ஆதரிக்கின்றேன் என்று பகிரங்கமாகச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

//டோண்டு இதையாவது செய்தார். நீர் வெட்டியாக ஈழத் தமிழர் பற்றி இரண்டு பதிவு போட்டிருப்பீர்.

//

நான் என்னவெல்லாம் செய்தேன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கு விளாவாரியாக விளக்கி விளம்பரம் தேட நான் ஆள் அல்ல.

அனானி பின்னூட்டங்களுக்கு இனி என்னிடம் இருந்து பதில் இருக்காது.

SurveySan said...
September 15, 2009 at 2:35 AM  

இன்னும் பதில் சொல்லாம புது பதிவு போட்டுட்டீங்களே?

Anonymous said...
September 15, 2009 at 6:33 AM  

மோகன் கந்தசாமிய விட செம காமெடியனா இருப்பாரு போலருக்கே இந்த அப்துல்லா. இவரு என்னத்த கிழிச்சாருன்னு விலாவரியா சொல்ல மாட்டாராம். ஆனா டோண்டு மட்டும் சொல்லணுமாம். இதிலயும் ஷரியத் சட்டமா?

Anonymous said...
September 15, 2009 at 6:35 AM  

போதும்ப்பா மோகன். நீ போலியோட அல்லக்கைன்னு ஒருதரும் உண்ணை சொல்லலைன்னு தூக்கிகிட்டு வந்திட்டியாக்கும்? கவலைப்படாத. அல்லைக்கைன்னு சொல்றதுக்கும் கூட ஒரு தகுதி வேணும். அது உணக்கில்லை.

ஒரு பழைய வலைப்பதிவர் said...
September 15, 2009 at 6:58 AM  

//
போதும்ப்பா மோகன். நீ போலியோட அல்லக்கைன்னு ஒருதரும் உண்ணை சொல்லலைன்னு தூக்கிகிட்டு வந்திட்டியாக்கும்? கவலைப்படாத. அல்லைக்கைன்னு சொல்றதுக்கும் கூட ஒரு தகுதி வேணும். அது உணக்கில்லை.
//

ரிப்பீட்டு.

Anonymous said...
September 15, 2009 at 7:00 AM  

//இன்னும் பதில் சொல்லாம புது பதிவு போட்டுட்டீங்களே?//

ஏன் சர்வேஷன். பாப்பார மாமாக்களின் புனிதம் சந்தி சிரிக்கிறது என்றதுமே சொம்பை தூக்கி கொண்டு வந்து விட்டீர்களே. உங்கள் மாமா ஜயராமன் ஒரு போலி பதிவு வைத்திருந்தது பற்றி எப்போதாவது பேசியதுண்டா. அப்போவெல்லாம் சொம்பினை திவசம் செய்ய அனுப்பி வைத்து விடுவீர்களா.

Anonymous said...
September 15, 2009 at 7:37 AM  

//மோகன் கந்தசாமிய விட செம காமெடியனா இருப்பாரு போலருக்கே இந்த அப்துல்லா. இவரு என்னத்த கிழிச்சாருன்னு விலாவரியா சொல்ல மாட்டாராம். ஆனா டோண்டு மட்டும் சொல்லணுமாம். இதிலயும் ஷரியத் சட்டமா?//

யோய் அண்ணாத்தே ரொம்ம பீலிங்சு போட்டு ‘சீசீசீ’ பதிவு போடுவாரு

Anonymous said...
September 15, 2009 at 9:28 AM  

@எம்.எம்.அப்துல்லா

//அவர் தனி ஈழத்தை ஆதரிப்பவராகி விடுவாரா?? எங்கே அவரை நான் தனி ஈழம் அமைவதை ஆதரிக்கின்றேன் என்று பகிரங்கமாகச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.//

தனி ஈழத்தை ஆதரிப்பது போலத்தான் அவரது பின்னூட்டம் உள்ளது.

{அதே சமயம் ஈழத்தமிழர்கள் தற்சமயம் கி.பி. 70-ல் யூதர்கள் இருந்த நிலையில் உள்ளனர். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் அலைந்து இஸ்ரேலை ஸ்தாபித்தனர். ஈழத் தமிழர்களும் அவர்களை பின்பற்ற வேண்டும் என எனக்கு முன்பே பலரும் குரல் தந்து விட்டனர்.}

இந்த டோண்டுவின் பின்னூட்டம்.

//அனானி பின்னூட்டங்களுக்கு இனி என்னிடம் இருந்து பதில் இருக்காது.//

அப்துல்லா பேரு போட்ட பின்னூட்டங்களுக்கு இனி என்னிடம் இருந்து கேள்வி இருக்காது...ஹிஹி

எம்.எம்.அப்துல்லா said...
September 15, 2009 at 10:06 AM  

//அப்துல்லா பேரு போட்ட பின்னூட்டங்களுக்கு இனி என்னிடம் இருந்து கேள்வி இருக்காது...ஹிஹி

//

:))))

samundi said...
September 21, 2009 at 6:30 AM  

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

balutanjore said...
September 21, 2009 at 2:44 PM  

sir please comeout with the complete facts

i am new to blogs and now only i have started reading about dondu episode

balasubramanian vellore