Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Friday, July 11, 2008

உதவி பிளீஸ்!

· 29 comments

எனது முந்தய பதிவில் அனானி நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் ஏதும் தர முடியாத நிலையில் உதவி வேண்டி அவரது கேள்விகளையும் எனது பதில் பின்னூட்டத்தையும் பதிவாக இடுகிறேன்.

நண்பர் அனானி!

உங்கள் கேள்விகளுக்கு ஜாதகத்தை நம்பும் எவரேனும் பதிலளிக்கக்கூடும் என காத்திருந்தேன். பிறகு நானே முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியதால் பதிலளிக்க முனைந்துள்ளேன்.

///1. Is the discipline of astrology comprehensive and complete?

நிச்சயமாக இல்லை. ஏனெனில் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூட முடியாத ஒன்று விரிவானதாகவும் முழுமையானதாகவும் இருக்க முடியாது.

ஜாதகம் என்பது கோள்களின் இருப்பிடங்களை சங்கேதங்களால் குறியிட்டு வைக்கப்பட்ட ஒரு சுவடி. ஒரு குழந்தை பிறந்ததும் அது முதல் மூச்சை விடும்போது கோள்கள் இருந்த நிலையை குறித்து வைக்கின்றனர். கோள்கள் இடம் மாறும்போது நமது நடவடிக்கைகளும் தக்கபடி மாறுகின்றன என்பது ஜாதகம் கணிப்பதன் அடிப்படை ஆகும்.

ஒரு தெளிவில்லாதா, ஆதாரம் இல்லாத ஒன்று பிரசங்கப்படுத்தப்படும் பொழுது சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நம்மை கேள்விகேட்க தூண்டுகின்றன. நம் கேள்விகள்: 1) பயன்படுத்தப்படும் கோள்களின் அறிவியல் முழுமையானதா? 2) அவை தமது ஆற்றல் மூலம் நம் வளி மண்டலத்தை பாதித்து அதன் ஊடாக மனிதர்களின் சுவாசத்தை கட்டுப்படுத்துகின்றனவா அல்லது வேறு வகையிலா? 3) சுவாசம் வளர்சிதை மாற்றத்தை ஓரளவுக்கு நிர்ணயித்தாலும் நம் வாழ்வு முழுக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியுமா? 4) அவ்வாறு கட்டுப்படுத்தினால், கோள்களின் நகர்வுகள் ஒரே மாதிரியான விளைவுகளைத்தானே அனைவரிடத்திலும் ஏற்படுத்தமுடியும்? 5) வெவ்வேறான விளைவுகள் என்றால் முதல் சுவாசத்தில் கோள்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்றும் தொடர வேண்டுமல்லவா? எனில் சுவாசித்தலின் வகைகளை விளக்கமுடியுமா?

இவை மிக மிக அடிப்படையான கேள்விகள். இவற்றிற்கே பதிலளிக்க முடியாத நிலையில் கிளைக்கேள்விகளுக்கு ஜாதகம் விடையளிக்கும் என கருத இடமில்லை.

///Which means there is no room for future correction, addition, deletion at all?///

கிளைக்கேள்விகள்: 1) பரிகாரங்கள் எவ்வாறு கோள்களின் நிலைகளை மாற்றி நம் நடவடிக்கைகளை சரிசெய்யும்? 2) ஒரே கணத்தில் பிறந்த பலரில் ஒருவர் பரிகாரம் செய்தால் மற்றனைவரின் குறைபாடுகளும் நிவர்த்தியாகிவிடுமா? 3) பரிகாரம் மற்றும் விதி இவற்றிடையேயான தொடர்பு அல்லது முரண் என்ன? 4) "உறுதியாக நம்புவதற்கு ஒத்திசைவாக காரணங்களை தேடுவது" என்ற சந்தேகத்தின் அறிவியலுக்கும் ஜோதிட கணிப்புகளுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு மறுப்பது?

இது போன்ற கேள்விகளே நிலுவையில் இருக்க நீங்கள் கேட்கும் இந்த கேள்வி என்றும் விடைதெரியாத கேள்வியாகத்தான் இருக்க முடியும்.

////2. If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?////
///3. Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?////

கோள்களும் விண்மீன்களும் எவ்வளவு இருந்தாலும் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுவதாக சொல்கிறார்கள். கோள்களின் தேர்வு எந்த அடிப்படையானது என்ற தகவல் இல்லை. ஆற்றல் தான் ஜோதிடத்தின் அடிப்படை எனில் கணக்கில் எடுக்கப்படாத கோள்களின் ஆற்றல் புறக்கணிக்கத்தக்கதா என்ற கேள்வி வருகிறது. பூமிக்கு வெகு அருகில் உள்ள கோள்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்றால் அவற்றின் உண்மையான சுழற்சிகளுக்கும் ஜோதிடத்தில் நிர்ணயிக்கும் சுழற்சிகளுக்கும் சிறிது கூட சம்பந்தமே இல்லையே ஏன்?

///4. How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person.////
ஹா ஹா ஹா ஹா

அனானி நண்பரின் கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் முயன்றேன் என்றாலும் என்னால் எதிர்கேள்விகளையும் சிரிப்பையும் தான் பதிலாக தரமுடிந்தது. சோதிட நிபுணர்கள் எவரேனும் பதில் தரக்கூடும். ஆனால் அவை முழுமையானதாகவும் விரிவானதாகவும் இறுதியானதாகவும் இருக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை.

Read More......

Wednesday, July 9, 2008

எமர்ஜென்சி பதிவு: டியர் செந்தழல் ரவி....

· 111 comments

டியர் செந்தழல் ரவி,

////அந்த பதிவு ஒரு தனிநபருக்கானதல்ல...ஒரு கான்ஸெப்ட் / தத்துவத்தை கேள்விகேட்கும் முயற்சியே...////

மிகத்தேவையான ஒரு முயற்சி இது. அம்முயற்சியை நீங்கள் மேற்கொண்ட இடம் .......... எவர் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தால் விவாதத்தை அருமையாக, சுவாரசியமாக எடுத்துசென்றிருக்கலாம். பெயர் குறிப்பிட்டு விவாதம் செய்தால் அதை ஸ்போர்டிவ் எடுத்துக்கொள்ள சுப்பையா சார் என்ன வாலண்டினா தமிழரசி போல் புதிய பதிவரா? நையாண்டியுடன் நீங்கள் கேட்ட நல்ல கேள்விகளுக்கு வெறும் கனல் மட்டும் பதிலாய் வந்தது ஆச்சர்யம் இல்லை. பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம்.

ஒரு ஓரமாக நாம் விவாதம் செய்வோம். ஜோசியம் உண்மையா உடான்ஸா என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு பகுத்தறிவதில் உதவுவோம். அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்லப்படும் ஆருடங்களுக்கு இயல்பாகவே காரணங்களை மேனுபாக்ச்சர் செய்துகொள்ளும் மனித மனம் நம்மை பகுத்தறிய விடுவதில்லை என்பதை விவாதிப்போம், ஜோசியத்தை முழுமையாக நம்புபவர்கள் பற்றிய கவலையை விடுத்து.

உங்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன். (ஆளுணர பாத்து ஆதரவு கடிதம் கூட கொடுத்துட்டேன்)

நன்றி,
மோகன் கந்தசாமி

டிஸ்கி: ஆகஸ்ட் எட்டுக்கு பிறகு தரும் ஆதரவிற்கு எந்த பயனுமில்லை. அதனால நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே அதரவு தரவே இப்பதிவு.

செந்தழல் ரவி கேள்விகள்
SP.VR. SUBBIAH பதில்கள்

ஆதரவு தருவோர் ஸ்மைலி பின்னூட்டமாவது இடவும்.

Read More......