
சட்டமடித்து சுவரில் மாட்டலாம்.
டீப்பாயின் மேல்விரித்து பூச்சாடி வைக்கலாம்.
வாசலில் கோலமிட்டு நடுவில் நிறுத்தலாம்.
என்வீட்டு கற்பை பார்!, எல்லோருக்கும் காட்டலாம்.
இதழ்களிலே கற்பலங்கார டிப்ஸ் தரலாம்.
அலங்கார நிபுணர்களின் ஆலோசனைப் பெறலாம்.
கற்பில்லா வீடுகளை பரிகாசம் செய்யலாம்.
தேவையின்றேல் கைத்துடைத்து குப்பையிலே வீசலாம்.

வாரத்துக்கு ரெண்டுகிலோ எங்கத்தி மூல.
பற்றாகுற பட்ஜெட்டில் தினத்திக்கி தொல்ல.
கைக்காசு போட்டாலும் நானெங்கு வாங்க.
கட்டுனவன் மனசுவச்சா தானிங்கு எல்லாம்.
கடைத்தெருவு கற்பெல்லாம் சுகாதாரக் கேடு?
எவர்க்கென்ன தெரியும்நான் படுகின்ற பாடு Read More......



