Sunday, December 21, 2008

தமிழகத்தில் ஒரு தனி மாநில கோரிக்கை; குடுகுடுப்பையாருக்கு ஒரு வேண்டுகோள்.

· 52 comments

பதிவர் குடுகுடுப்பை தென்மாவட்டங்களை உள்ளடக்கி செந்தமிழ்நாடு என்னும் தனி மாநிலம் உருவாக்குவது பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அம்மாவட்டங்களில் வளர்ச்சியின்மையை காரணம் கூறியிருந்தார். "மாலிவுட் என்ற திரைத்துறையை உருவாக்கலாம்" என்பது போன்றும் நகைச்சுவைக்காக சில விஷயங்கள் கூறப்பட்டன. அவற்றை மறுத்து சில கருத்துக்களை கூறி அதற்கு தேவையேதும் இல்லை என வலியுறுத்தவே இப்பதிவு.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இரண்டாம் மட்ட நகரங்கள் தொழில் வளர்ச்சிக்கு முனைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளன என்கிறது மெக்கின்சி ரிபோர்ட். கோவை மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஓசூர் ஆகிய நகரங்களில் ஐடி கட்டமைப்புகளை அரசு தீவிரமாக வளப்படுத்தி வருகிறது. ஐடி -யில் கோவையின் அசுர வளர்ச்சியை பற்றி எல்லோருக்கும் தெரியும். அது தொழில் வளர்ச்சியில் ஏற்கனவே செழுமை பெற்ற நகரம். ஹெல்த் சர்வீஸ் இங்கு சென்னைக்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளது (இந்தியாவின் மெடிகல் காபிடல் சென்னை). அண்ணா பல்கலைக்கழகம் ஒன்று இங்கே தொடங்கப்பட்டு உள்ளது;சுய நிர்வாகத்துடன் விரைவில் செயல்படவிருக்கிறது. திருப்பூரை ஏனைய மாநகரங்களுக்கு இணையாக மாற்றும்படிக்கு நிர்வாக வசதி கருதி தனி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் "டெஸ்டினேசன் மதுரை" என்ற கருத்தரங்கை ஒவ்வொரு வருடமும் மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. சென்னை பெங்களூர் போன்ற நகரங்களில் பத்து வருடங்களுக்கு முன் இவ்வாறான கருத்தரங்களை நடத்தி வந்தது. தமிழக அரசு இவற்றை முன்னெடுக்கிறது. உள்கட்டமைப்புகள் முக்கிய கவனம் பெறுகின்றன. இந்தியாவின் ஏனைய இரண்டாம்நிலை நகரங்களை விட மதுரை பலமடங்கும், சில மாநில தலைநகரங்களைவிடவும், சிலவற்றுக்கு இணையாகவும் உள்கட்டமைப்பை பெற்றுள்ளது.

கோவையை போலவே திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது;சுய நிர்வாகத்துடன் விரைவில் செயல்படவிருக்கிறது. இந்தியாவின் இரண்டாம் நிலை தலைநகரங்களில் பூனா போன்று விமான போக்குவரத்து அதிகம் பெற்ற நகரம் இது. சிறந்த கல்வி நிலையங்களை கொண்ட நகரம். உள்கட்டமைப்புக்கு அரசின் (குறிப்பாக மத்திய அரசின்) கவனம் பெற்றுள்ள நகரம்.

தென்மாவட்டங்களில் சமீபகால வளர்ச்சிகள் யாவும் மாநில அரசின் முனைப்பினாலேயே நடைபெறுகின்றன. திருநெல்வேலியிலும் அண்ணா பல்கலை கழகம் நிறுவப்பட இருக்கிறது. சேது சமுத்திரத்திட்டம் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமான திட்டமன்று. அது ஒரு மிகப்பெரிய திட்டத்தின் முதல் நடவடிக்கை. கனரக மற்றும் உற்பத்தித்தொழிலில் உலக நாடுகள் தமிழகத்தை குறிவைத்து இந்திய அரசையும் மாநில அரசையும் நெருக்குகின்றன. குறிப்பாக ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா போன்றவை. புதிய தொழிற்சாலைகள் அனைத்தையும் தென் மாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல மாநில அரசு நினைக்கிறது. அதனாலேயே தூத்துக்குடி துறைமுக மேம்பாடும் சேது சமுத்திரமும் முக்கியமான முதல் நடவடிக்கைகள் ஆகின்றன. இது தற்போதைய தமிழக அரசின் நீண்டகால அடிப்படையிலான முயற்சி.

தற்போதைய தொழிற்கொள்கை சென்னையை விட்டு எவ்வளவு தூரம் வெளியே தொழிற்சாலையை அமைக்கிறீர்களோ அதற்கு தகுந்த ஊக்கத்தொகையும் வரிவிலக்கும் தருகிறது. விரிவாக்கப் பணிதவிர வேறெந்த புது முயற்சிகளும் சென்னைக்கு 150 கிமீ உள்ளாக தொழில்துறையில் தொடங்க தனியாருக்கு கிட்டத்தட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கிராமப்புற வளர்ச்சி மிக மிக மிக மிக மிக முன்னேற்றமாக உள்ள மாநிலம் தமிழகம். கிராமவளர்ச்சியின் குறியீடுகளில் ஒன்றான அர்பனைசேசன் ஒப்பீட்டளவில் முதலிடத்தில் (இரண்டாம் இடம் பெற்ற மாநிலத்தைவிட மிகுந்த வித்தியாசத்துடன்) உள்ளது.

வளர்ச்சியில் சென்னை முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பது இருபது வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டு. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஐடி -இன் துரித வளர்ச்சியும், தயாநிதி மாறனின் சில விளம்பரமிக்க முயற்சிகளும் சென்னை முன்னிலைப்படுத்துவதாக தோற்றம் அளிக்கின்றன. இரண்டாம் மட்ட நகரங்களை மேம்படுத்தும் பணி பின்னணியிலும், விளம்பரமின்றியும், வழக்கமான செயல்பாடு போல் பரபரப்பின்றியும் நடைபெற்று வருகிறது. அதிமுக -விட திமுக இதை தொய்வில்லாமல் செய்கிறது என்றாலும் அதிமுக -இவற்றிற்கு பெரும்பாலும் தடையாக இல்லை. (1991-1995 -ல் கதை வேறு; அப்போது இரண்டாம் மட்ட நகரங்களின் வளர்ச்சி மட்டுமல்ல, எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை)

ஆக, தென்மாவட்டங்கள் வளர்ச்சியில் புறக்கணிக்கப் படுகின்றன என்பது தற்போதைய காலங்களில் ஏற்க முடியாத குற்றச்சாட்டு. வேறுசில வசதிக்குறைவுகள் அங்கே இருக்கின்றன என்றால் சிலவற்றை ஏற்க முடியம். முக்கிய அரசு அலுவலகங்கள் தங்கள் தலைமையகத்தை சென்னையில் கொண்டுள்ளன. கடைக்கோடித் தமிழன் இவற்றின் பயனைப்பெற நேரவிரையம் செய்து பயணிக்க வேண்டியுள்ளது என்பது உண்மை. நாம் உச்சநீதி மன்றத்தின் பயன்பாட்டை பெற வெகுதூரம் வடக்கு நோக்கி பயணம் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உயர் நீதிமன்றக் கிளை மதுரையில் அமைத்து நீதித்துறை தென்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ததுபோல் தமிழக அரசும் முக்கிய அரசு அலுவலகங்களின் தலைமையகத்தை தென்மாவட்டங்களுக்கு மாற்றியோ அல்லது தற்சார்பாக செயல்படும் கிளைகளை அங்கு அமைத்தோ அம்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ய வேண்டும். முடிந்தால் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒன்றை அங்கே நடத்தலாம். கோடைகால தலைநகரமாக தென்மாவட்ட நகரம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

எனினும், தென்மாவட்டங்களை உள்ளடக்கி தனியாக ஒரு மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதற்கான தேவை கிஞ்சித்தும் இல்லை. தனிமாநில உருவாக்கத்திற்கு வளர்ச்சி, கலாச்சாரம் அல்லது மொழி என ஏதேனும் ஒரு காரணி இருக்க வேண்டும். ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும், தெலுங்கானா கோரிக்கை கலாச்சாரத்தை முன்னிறுத்தியும் தனி மாநிலம் கேட்டன/கேட்கின்றன. தமிழகத்தில் இவ்வாறான கோரிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் நமக்கு ஒட்டுமொத்தமாக நட்டமே ஏற்படும். மத்திய அரசுடனான பார்கெயின் பவர் நமக்கு குறையும். முக்கிய பிரச்சினையில் இருவேறு நிலைப்பாட்டை இரு மாநிலங்களும் எடுத்தால் தமிழின எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். (ஏற்கனவே ஈழப்பிரச்சினையில் நமக்கு மூன்று வித நிலைப்பாடுகள் உள்ளன). வேறு மாநிலங்கள், நாடுகளில் வாழும் தமிழருக்கு நம்மால் வலுவோடு குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். (உ - ம்: காங்கிரஸ் ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஈழப்பிரச்சினை, கர்நாடக பிரச்சினை என்னவாகும்?)

இவை தவிர பல பிரச்சினைகள் உள்ளன. வலைப்பூக்களில் பேசப்படும் பல விஷயங்கள் வெளியே கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், தனிமாநில கோரிக்கை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லாதபோது (குறைந்த பட்சம் தற்போது) நாம் அவ்வகை முயற்சியை தொடக்கிவைக்ககூடாது.

Read More......

Friday, December 19, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: அருந்ததி ராய் - நவம்பர் செப்டம்பரல்ல! - பகுதி 2

· 5 comments

ழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரை அவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். இதன் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிட்டுள்ளேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல;

நவம்பர் செப்டம்பரல்ல! - பகுதி 2

ர்.எஸ்.எஸ். அமைப்பு 45,000 கிளைகளையும், பெரும் எண்ணிக்கையில் தான அமைப்புகளையும், இந்தியாவெங்கும் வெறுப்புத்தத்துவத்தை போதிக்கும் எழுபது லட்சம் ஆர்வலர்களையும் கொண்டுள்ளது. இதில் நரேந்திர மோடியும் ஒருவர். கூடவே, முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய், தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பல மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் என பலரும் இதில் உறுப்பினர்களாவர்.

தச்சார்பற்ற ஜனநாயகத்தை குழப்ப இவர்கள் போதாதென்றால் குறுகிய வைராக்கியங்களை போதிக்கும் எண்ணற்ற முஸ்லீம் அமைப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

க, இந்தச்சமனில், பிரிவு-அ, பிரிவு-ஆ இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்த்டுத்தாக வேண்டும். நான் பிரிவு-ஆ வை தேர்ந்தேடுத்துக்கொள்கிறேன். அடுத்து, நமக்கு ஒரு களம் வேண்டுமல்லவா, எப்போதும்?

ந்த அணுஆயுத துணைக்கண்டத்தில் "பிரிவினை"தான் அந்தக்களம் . இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் அந்த "ராட்கிலிஃப்" எல்லைக்கோடு மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், வயல்கள், இனங்கள், நீரமைப்புகள், வீடுகள், குடும்பங்கள் ஆகியவற்றின் ஊடாக கிழித்துச் செல்லுமாறு ஒரே இரவில் வரையப்பட்டது. கிளம்பும் தருவாயில் இறுதியாக பிரிட்டன் நமக்கு விட்ட ஒரு எத்துதான் அது. பத்துலட்சம் மக்களின் படுகொலைக்கும், கற்கால வரலாற்றின் மிகப்பெரிய மனித இடப்பெயர்வுக்கும் காரணமானது அப்பிரிவினை. என்பது லட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு, உடுத்திய ஆடையோடு வெறுங்கையுடன் (முஸ்லீம்கள் புதிய இந்தியாவை விட்டும், இந்துக்கள் புதிய பாகிஸ்தானை விட்டும்) வெளியேறினர். அவர்கள் ஒவ்வொருவரும் விவரிக்க முடியாத வலியையும், வெறுப்பையும், திகிலையும், ஏக்கத்தையும் தம்முள் சுமந்து சென்றனர். அறுபடாமல் மிச்சமிருக்கும் தசைகளில் உள்ள புண், அந்த ரத்தம், நொறுங்கிய எலும்புகள் இவையாவும் நம்மை இன்னமும் குறுகிய வெறுப்பு, பழகிப்போன திகில், கூடவே சிறிது அன்பு இவற்றால் நம்மை இணைக்கின்றன. இவைதான் மீண்டுவர எந்த முகாந்திரமும் இதுவரை தென்படாத ஒரு அபாயத்தில் காஷ்மீரை தள்ளியுள்ளன. அது இதுவரை அறுபதாயிரம் பேரை கொன்றுள்ளது. "தூய்மை தேசமாகிய"(Land of Pure) பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசானது; விரைவில் அது ஊழல் நிறைந்த ஒன்றாக, கொடூர ராணுவ தேசமாக, வேற்று நம்பிக்கைகளை வெளிப்படையாக வெறுக்கும் நாடாக மாறிப்போனது. ஆனால், மறுபுறத்தில் விஷயம் அற்புதமாக கையாளப்பட்டது. இந்தியா பிறக்கும் முன்பிருந்தே, 1920 -களில் தொடக்கி, இந்தியாவின் ரத்த ஓட்டத்தில் பஜ்ரங்கியின் முன்னோர்கள் நஞ்சை கலந்து வந்தனர். 1990 -வாக்கில் அதிகாரத்தை கைப்பற்ற தயாரானார்கள். 1992 -இல் எல்.கே.அத்வானி தலைமையில் இந்துக்கும்பல் பாபர் மசூதியில் புகுந்து அதை இடித்தது. 1998 -இல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டது. அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான" போரால் காற்று இவர்கள் பக்கம் வீசத்தொடங்கியது. அது இவர்களை தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதித்தது. மேலும் படுகொலைகளை நிகழ்த்தவும் பாசிசத்தை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக நடைமுறையாக முன்வைக்கவும் வழிவகை செய்தது. இவையாவும் சர்வதேச நிதியத்திற்கு இந்தியா தனது சந்தையை திறந்துவிட்டிருந்த சமயத்தில் நிகழ்ந்தன. இவை சர்வதேச நிறுவனங்களின் நலன்சார்ந்த நடவடிக்கைகளேயாகும். அந்நிறுவனங்கள் கைக்கொண்டிருந்த ஊடகங்கள் இந்த தேசத்தை தவறே செய்யாத நாடாக சித்தரித்தன. இவை இந்து தேசியவாதிகளுக்கு ஊக்கத்தை கொடுத்ததுடன், தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக்கின. இதுதான் துணைக்கண்ட பயங்கரவாதத்தை உலாகலாவிய பயங்கரவாதத்துடன் இணைக்கச்செய்தது; ஒரு சரித்திர பின்புலத்தையும் கொடுத்தது. இப்போது மும்பைத்தாக்குதலையும் அதனுடன் இணைத்துவிட்டது.

ர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த எல்.கே. அத்வானி பாகிஸ்தானின் சிந்த் பகுதியிலிருந்தும் ஹபிஸ் சயீத் இந்தியாவின் சிம்லாவிலிருந்தும் வந்தவர்கள் என்பது உண்மையில் நமக்கு ஆச்சர்யத்தை தரக்கூடாது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியுடன் லஷ்கர்-இ-தோய்பா செய்துள்ளதற்கான திடமான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக, 2001 பாராளுமன்ற தாகுதளுக்குப்பின்னும், 2002 சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பின்போதும், 2006 சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பின்போதும், இந்திய அரசு அறிவித்தது போலவே மும்பை தாக்குதலுக்குப்பிறகும் அறிவித்தது. லஷ்கர் இதை மறுத்துள்ளபோதும் அதுதான் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் உளவுத்துறையினரின் கூற்றுப்படி "இந்திய முஜாகிதீன்" என்ற அமைப்பின் மூலம் லஷ்கர் இந்தியாவில் இயங்குகிறது. ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரியான ஷேக் முக்தார் அகமது, கொல்கத்தா வாசியான தௌசிப் ரகுமான் ஆகிய இரு இந்திய பிரஜைகள் மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, ஏற்கனவே பாகிஸ்தானை முழுப் பொறுப்பாக்கி வைக்கப்பட்ட தெளிவான குற்றச்சாட்டு லேசாக கலங்கியுள்ளது.

ந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி மட்டுமின்றி உலகின் பலநாடுகளில் பரவியுள்ள செயல் வீரர்கள், பயிற்சியாளர்கள், பயிற்சி ஏற்பாட்டாளர்கள், நிழலுலகினர், உளவு எதிர்ப்பு பிரிவினர் என ஒரு உலகளாவிய சிக்கலான வலையமைப்பு இச்சமயங்களில் முடிச்சவிழ்வது வழக்கம். இன்றைய உலகில், தீவிரவாத செயல்களின் சங்கிலித்தொடர்பை ஒரு குறிப்பிட்ட தேசத்தின் எல்லைகளுக்குள் சுருக்கி அதை மடக்குவதென்பது, கார்பரேட் நிறுவனமொன்றின் சொத்தை ஒரு குறிப்பிட்ட நாட்டு எல்லைக்குள் கைக்கொள்ள முயல்வதற்குச்சமம். இரண்டுமே சாத்தியமல்ல.

ம்மாதிரியான சூழ்நிலைகளில் வான் தாக்குதல் தீவிரவாத முகாம்களை அழிக்க உதவுமே ஒழிய, தீவிரவாதிகளை அல்ல. நிச்சயம் போரும் நலம்பயக்காது. (மேலும் நமது நேர்மையை ஒருமுறை உரசிப்பார்த்துக்கொள்வோம்; உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ இந்தியாவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்று).

ப்கன் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக முதலிலும் பிறகு எதிராகவும் நடைபெற்ற அமெரிக்க போர்களில் நிர்பந்த கூட்டாளியாக்கப்பட்ட பாகிஸ்தான் இத்தகு முரண்பாடுகளால் இன்று ஒரு உள்நாட்டுப்போரை நோக்கி தள்ளாட்டத்துடன் நகர்கிறது. சோவியத்துக்கு எதிரான புனிதப்போரில் அமெரிக்காவிற்கு பயிற்சித் தரகர்களாக செயல்பட்ட பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நிதி ஆதாரங்களை உருவாக்கி பெருக்கச்செய்தன. இவ்விதமாக பிராங்கைஸ்டீன் பிசாசுகளை முடைந்து உலக புழக்கத்தில் விட்டு தாம் வேண்டும்போது அவற்றை கட்டுக்குள் வைக்க அமேரிக்கா விரும்பியது. ஆனால் செப்டம்பர் 11 -இல் இப்பிசாசுகள் தம் சொந்த வீட்டில் நுழையும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. எனவே, ஆப்கானிஸ்தான் மீண்டும் புதிதாக கட்டமைக்கப்பட வேண்டியாதயுள்ளது. இப்போது மீண்டும் சீரழிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலிருந்து சிதிலங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் வழிந்தோடுகின்றன. வெடித்துச் சிதறவிருக்கும் ஒரு நாட்டை தான் ஆள்வதை பாகிஸ்தான் அரசாங்கம் கூட மறுக்கப்போவதில்லை. தீவிரவாத பயிற்சி முகாம்கள், நெருப்பை சுவாசிக்கும் முல்லாக்கள், இஸ்லாம் இவ்வுலகை ஆளவேண்டும்/ஆளும் என நம்பும் மனம்பிறழ்தோர் யாவரும் இரு ஆப்கானிய போர்களின் தீய விளைவுகளே. இந்தக் குரோதம் பாகிஸ்தான் அரசுமீதும், மக்கள் மீதும் மழையை பொழிவது போதாதென்று இந்தியாவிலும் கசிந்தோடுகிறது. இந்த சந்தர்பத்தில் இந்தியா போரை முடிவுசெய்தால் இந்த பிராந்தியம் எங்கும் அந்த மழை பொழிவு முழுமை பெற்றுவிடும். பாகிஸ்தான் திவாலாகி அழிந்துபட்டு அதன் கசடுகள் இந்திய கடற்கரைகளுக்கு அடித்துச்செல்லப்படும்; முன்னெப்போதுமில்லாத ஒரு அபாயத்தில் நம்மை பொருத்திவிடும். பாகிஸ்தான் வீழ்ந்தால் லட்சக்கணக்கான தேசம்சாராத அணுஆயுததாரிகளை நம் அக்கம்பக்கத்தவர்களாகப் பெறவேண்டும். மிகவும் சிக்கலான நம்மூர் மதவாதிகளின் விஷயத்தை மேலும் மோசமாக்கும்படியாக அதனுள் அமெரிக்க சாபக்கேட்டை அனுமதித்து, பாகிஸ்தான் செய்த அதே தவறை ஏன் இந்திய ஆட்சியாளர்களும் செய்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒரு வல்லரசு எப்போதும் கூட்டாளிகளை கொண்டிராது. இடைத்தரகர்கள் மட்டுமே அதற்கு உண்டு.

போரினால் விளையும் ஒரே நன்மை, அது நம் உள்நாட்டில் பெருகிவரும் பிரச்சினைகளை தவிர்க்க உதவும் ஒரு சிறந்த உபகரணம் என்பதே!

மும்பை தாக்குதல் நேரலையாக (மற்றும் சிறப்பு ஒளிபரப்பு) நமது அறுபத்தேழு 24-மணிநேர செய்தி ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டது; சர்வதேச ஊடகங்கள் எத்தனை என்று கடவுளுக்குத்தான் தெரியும். தொகுப்பாளர்கள் செய்தி அரங்கிலும், நிருபர்கள் சம்பவ இடத்திலும் முடிவில்லாத ஒரு உற்சாக வர்ணனையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தன்னை பலவானாக கருதிக்கொள்ளும் இந்த அணுஆயுத நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் காவல் துறை போன்றோரின் வீச்சின்மையை ஒரு சிறுவயதினரின் ஆயுததாரிக்குழு அம்பலப்படுத்தியதை அவநம்பிக்கையுடன் மூன்று இரவுகள் மூன்று பகல்களாக நாம் பார்த்துவந்தோம். இதை இவர்கள் ஒளிபரப்பும்போதே தீவிரவாதிகள் ஜாதி, மத, இன, தேச பேதமின்றி அப்பாவிகளை ரயில் நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், விடுதிகளிலும் கண்மூடித்தனமாக கொன்று குவித்தனர்.



[தொடரும்]


Read More......

ச்சும்மா ட்டமாஷ் - 75: அருந்ததி ராய் - நவம்பர் செப்டம்பரல்ல!

· 6 comments

ழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரை அவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல!

மது சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் உரிமையை நாம் ஏமாந்துள்ளோம். மும்பை கோரம் உச்சமடைந்த சமயத்தில், அந்த கொடிய நாளுக்கு மறுதினம், நாம் இந்தியாவின் 9/11 -ஐத்தான் பார்க்கிறோம் என நமது 24 -மணிநேர செய்தி ஊடகங்கள் நமக்கு அறிவிக்கை செய்தன. பழைய ஹாலிவுட் அச்சில் வரும் பாலிவுட் பட நாயகர்கள் போல் நாமும் நம் பங்கையும் நமக்குரிய வசனத்தையும் உச்சரிக்க எதிர்பார்க்கப்பட்டோம். எனினும் அவை நமக்கு முன்பே இப்படியாக உரைக்கப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.

ப்பிராந்தியத்தில் பதற்றம் கூடிப்போன தருவாயில் அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'கெட்டவர்களை' கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கையேதும் எடுக்காவிட்டால் அங்கு உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதலை இந்தியா தொடரலாம்; இதில் வாசிங்டன் ஒன்றும் செய்வதற்கில்லை என தன் கருத்தாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

னால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008 2001 அல்ல; பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அல்ல; இந்தியா அமெரிக்காவும் அல்ல.

னவே, நம் சீரழிவிலிருந்து நாமே மீளவேண்டும்; சிதிலங்களிளிருந்தும், நம் உடைந்த இதயங்கள் வழியாகவும் நமது முடிவுகளை நாமே கண்டடைய வேண்டும்.

டம்பர இந்தியாவின் பணக்கார பட்டினம் காஷ்மீரிலேய மிக மோசமாக சீரழிந்த குப்வாரா நகரம்போல் காட்சியளிக்க, ஆயிரக்கணக்கான ராணுவத்தினரின் கண்காணிப்பில் நவம்பர் இறுதிவாரம் நடந்த காஷ்மீர் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வந்திருப்பார்கள் என நினைத்தால் அது முரணாக தோன்றுகிறது.

மும்பை தாக்குதலானது இந்திய நகரங்களிலும் மாநகரங்களிலும் நடைபெறும் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்களில் மிக சமீபத்திய ஒன்று, அவ்வளவே. அகமதாபாத், பெங்களூர், தில்லி, குவகாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் மலேகான் போன்றவையெல்லாம் நூற்றுக்கணக்கில் சாதாரண மக்கள் இறக்கவும் காயமடையவும் காரணமாயிருந்த தொடர் குண்டு வெடிப்புகளை சந்தித்துள்ளன. இந்திய முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் என காவல்துறை சரியானவர்களைத்தான் விசாரனைகைதிகளாக கைது செய்துள்ளது என்றால், இந்த நாட்டில் ஏதோ மோசமான தவறு நடைபெறுவதாகவே அர்த்தம் ஆகிறது.

ம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்களானால், மும்பையில் சாதாரண மக்கள் கூட இறந்தார்கள் என்பதை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். ஒரு பரபரப்பான தொடர்வண்டி நிலையத்திலும் ஒரு பொது மருத்துவமனையிலும் அவர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பணக்காரர்களையும் ஏழைகளையும் வேறுபடுத்தவில்லை. எல்லோரையும் ஒரே கொடூரத்துடன்தான் கொன்றனர். ஆனால் ஒளிரும் இந்தியாவின் பளபளப்புத் தடுப்பான்களை சீரும் தீவிரவாதம் தகர்த்தெறிந்தது கண்டு இந்திய ஊடகம் விக்கித்துப்போனது. ஒரு யூத மையத்தையும் இரு ஆடம்பர விடுதிகளின் பளிங்கு முகப்பு மற்றும் கண்ணாடி நடன அரங்குகளையும் இந்த தீவிரவாத முடை வீச்சம் வியாபித்ததால் விழி பிதுங்கி நின்றது. அவ்விரு விடுதிகளும் மும்பையின் அடையாளங்கள் எனவும் நமக்கு சொல்லப்பட்டது. அது முற்றிலும் சரியே. சாதாரண இந்தியர்கள் அனுதினமும் அல்லலுறும் அநியாயத்தின், நேரும் அசிங்கத்தின் உடனடி அடையாளம் அவைகள்தான். அழகான மேன்மக்கள் தாங்கள் தங்கி இருந்த அறைகள், தங்கள் மனங்கவர்ந்த உணவு விடுதிகள், தங்களுக்கு பணிவிடை செய்த பணியாளர்கள் பற்றியெல்லாம் மனதுருக்கும் இரங்கல்களால் நிறைத்திருந்த அன்றைய செய்தித்தாளின் இடது உச்சியில் ஒரு பீட்சா கம்பனியின் விளம்பரம் கட்டம் கட்டப்பட்டிருந்தது. "ஹங்கிரி கியா?" (பசிக்கிறதா, ம்?). சர்வதேச பசிக்குறியீட்டில் (International Hunger Index) இந்தியா சூடானுக்கும் சோமாலியாவுக்கும் கீழே இடம்பெற்றுள்ளதை விளக்கத்தான் அந்த விளம்பரம் என நாம் கொள்ளலாம். ஆனால் இது அதற்கான போரல்ல. அந்த போர் கிராமங்களிலுள்ள தலித் பண்ணைகளிலும், நர்மதா மற்றும் கோயல் காரோ ஆற்றங்கரைகளிலும், செங்காரா ரப்பர் தோட்டத்திலும், நந்திகிராம், சிங்கூர், லால்கர் போன்ற மேற்கு வங்க கிராமங்களிலும், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களிலும், பெருநகர குப்பங்களிலும் நடத்தப்படுவது. அது தொலைகாட்சிகளில் நடைபெறப்போவதில்லை.


ஹஃபிஸ் சயீத்

பாபு பஜ்ரங்ஜி

நரேந்திர மோடி

ற்கால பயங்கரவாதத்தின் போக்கு ஒரு தீவிரமான, மன்னிக்கமுடியாத தவறுகள் நிறைந்த பாதையில் திரும்பிவிட்டது. ஒரு புறத்தில் உள்ளவர்கள் (இதை பிரிவு - அ எனக்கொள்வோம்) தீவிரவாதத்தை, குறிப்பாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை, வெறுப்பால், சுவாதீனமின்றி, தனியான அச்சில் தனக்கேயுரிய வட்டப்பாதையில் சுழலக்கூடிய, புறவுலகில் தொடர்பில்லாத, வரலாறு, புவியியல் மற்றும் பொருளாதார காரணிகள் ஏதும் இல்லாத ஒன்றாக பார்ப்பவர்களாவர். எனவே அத்தீவிரவாதத்தை அரசியல் ரீதியாக தீர்க்க முயல்வது, புரிந்து கொள்ள முயல்வது கூட அதை நியாயப்படுத்துவதற்குச் சமம்; மேலும் அது ஒரு குற்றம் என்பது இவர்களது வாதம்.

தீவிரவாதத்தை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது எனினும், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலிலேயே இருக்கின்றது. அக்காரணிகளை கவனிக்கத் தவறினால் அது பிரச்சினையை மோசமாக்குவதுடன் மேலும் அதிக மக்களை துன்பத்தில் தள்ளும்; இதுவும் ஒரு குற்றமே என்று பிரிவு - ஆ நம்புகிறது.

1990 -ல் லஷ்கர் - இ - தோய்பா(தூய்மையின் போர்ப்படை) -வை தோற்றுவித்த, அடிப்படைவாத சலாஃபி முஸ்லீம் பாரம்பரியத்தை சேர்ந்த, ஹஃபிஸ் சயீத் நிச்சயம் பிரிவு அ -வினரின் வாதத்தை வலிமைப் படுத்துபவர்கள். ஹஃபிஸ் சயீத் மனித வெடிகுண்டை அங்கீகரிப்பவர்; யூத, ஷியா மற்றும் ஜனநாயக வெறுப்பை கொண்டவர்; அவரது இஸ்லாம் இந்த உலகை ஆளும் வரை புனிதப்போரை நடத்தவேண்டும் என நம்புபவர்.

வர் கூறியவற்றில் சில: "இந்தியா ஓர்மத்துடன் இருக்கும் வரை அமைதி இராது; அவர்களை சிதை; கருணைகேட்டு, உன் முன்னாள் அவர்கள் மண்டியிடும்வரை தொடர்ந்து சிதை."

மேலும், "இந்தியா இந்த வழியை நமக்கு காட்டியுள்ளது. தகுந்த பதிலடியை நாம் தருவோம். அது காஷ்மீரில் முஸ்லிம்களை கொள்வதைப்போல் இந்துக்களை கொன்று பழி வாங்குவோம்."

னால், தன்னை ஜனநாயகவாதி என்றும் தீவிரவாதி அல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் பாபு பஜ்ரங்கி எந்த இடத்தில் பிரிவு - அ -வினருடன் ஒத்துப்போகிறார்? 2002 குஜராத் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இவர் காமிரா முன் கூறுகிறார்: "ஒரு முஸ்லீம் கடையைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை, அனைத்திற்கும் தீவைத்தோம், ....தாக்கினோம், போசுக்கினோம், தீயிட்டோம், ...இந்த பாஸ்டர்டுகள் தாம் சிதையாவதை விரும்பவில்லை; மேலும் அது குறித்து மிகவும் பயந்தனர்; இதனாலேயே அவர்களை தீயிலிட்டோம். ...எனக்கு ஒரு இறுதி ஆசை உள்ளது... எனக்கு மரண தண்டனை தாருங்கள்... தூக்கில் தொங்குவதில் எனக்கு கவலை இல்லை. ...அதற்கு முன் எனக்கு இரண்டே இரண்டு நாட்களை மட்டும் தாருங்கள். ஏழெட்டு லட்சம் எண்ணிக்கையில் இவர்கள் உள்ள ஜுஹோபுரா பகுதிக்கு செல்வேன். ...அவர்கள் கதையை முடிப்பேன். ...இன்னும் கொஞ்சம் பேர்தான் சாகட்டுமே! ...குறைந்தது இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம்பேர் வரை சாகவேண்டும்.

மேலும், பிரிவு - அ, தனது செயல் திட்டத்தில் எவ்விடத்தில் ஆர்.எஸ். எஸ். -இன் பைபிலான "நாம் அல்லது நமது தேசியம்" பொருந்திவருகிறது? இதை வரையறை செய்த எம். எஸ். கோல்வாக்கர் 'குருஜி' 1944 -ல் ஆர்.எஸ்.எஸ் தலைவரானார். அது மேலும் கூறுகிறது: முஸ்லீம்கள் இந்துஸ்தானத்தில் முதலில் காலடி வைத்த அந்த தீய நாளிலிருந்து இந்த நொடிவரை இந்து தேசம் அந்த சூரையாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகிறது. இன உணர்வு எழுச்சி பெற்று வருகிறது"

ல்லது: "இன மற்றும் கலாச்சார தூய்மைக்காக யூதக்களையை எடுப்பதன் மூலம் ஜெர்மனி உலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. இனப்பெருமை அங்கே உச்சம் பெற்றது. அந்த நல்ல பாடத்தை கற்பதன் மூலம் இந்துஸ்தானம் பலன் பெறமுடியும்"

ண்மையில் இந்து வலதுசாரிகளின் துப்பாக்கி முஸ்லீம்களை நோக்கியது மட்டுமல்ல, தலித்துகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரிசாவின் காந்தமாலில், கிறித்துவர்களுக்கெதிரான இரண்டரை மாதகால வன்முறை நாற்பது பேர் வரை கொன்றுள்ளது. நாற்பதாயிரம் பேர்வரை தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிபேர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.



கோல்வாக்கர்

த்தனை காலமும் லஸ்கர் - இ - தோய்பா -வின் முன்னணி அமைப்பான ஜமாத் - உத் -தாவா -வின் தலைவராக ஹஃபிஸ் சயீத் ஒரு மதிப்பான வாழ்க்கையை லாகூரில் வாழ்ந்துவந்துள்ளார். வெறியுடன் கூடிய திரிபுவாத போதனைகள் மூலம் இளைஞர்களை தனது காட்டுமிராண்டி புனிதப்போருக்கு தயார்படுத்தி வந்துள்ளார். டிசம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. ஜமாத் - உத் -தாவா -க்கு தடைவிதித்தது. சர்வதேச நிர்பந்தத்தால் ஹஃபிஸ் சயீத் -ஐ பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. ஆனால், பாபு பஜ்ரங்ஜியோ பிணையில் வெளியே வந்து மதிப்பான வாழ்க்கையை குஜராத்தில் தொடர்கிறார். படுகொலைகள் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.ஹச்.பி -இலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். பஜ்ரங்ஜி -யின் முன்னாள் குருவான நரேந்திர மோடி இன்னமும் குஜராத் முதல்வர்தான். ஆக, குஜராத் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர் இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; மேலும் இவர் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளான ரிலையன்ஸ், டாடா-வால் வெகுவாக போற்றப் படுபவருமாவார்.கார்பரேட்டுகளின் செய்தித்தொடர்பாளரும், ஒரு தொலைக்காட்சியின் அரங்கு முன்னவருமான ஸொஹைல் சேத் சமீபத்தில் 'மோடி ஒரு கடவுள்' என விளித்துள்ளார். குஜராத்தில் இந்துக் கும்பல்களின் சூறையாட்டத்தை மேற்பார்வை செய்த, சமயங்களில் உதவியும் செய்த போலீஸ்காரர்களுக்கு பரிசுகளும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.



[தொடரும்]

பகுதி-2

Read More......

Thursday, December 18, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: அதிஷா - மர்டர் அக்யூஸ்டை காதலித்த ஜூலி!

· 11 comments

ஜால் குஜால் நாயகன் என்று அன்போடு அழைக்கப்படும் பதிவர் அதிஷா அவர்கள் இந்த இன்பக்கதையை அவரது இன்பினிட்டி குடுவையிலிருந்து ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக தந்துள்ளார். பிகரை சைட் அடிக்கப்போன இடத்தில் ஒரு மர்டரை நிகழ்த்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளான நண்பர்களின் சோகத்தை பதிவு செய்கிறது இந்த கதை. படிக்கும்போதே சோகம் கணித்திரையிலிருந்து கைநீட்டி நம் கழுத்தை நெரிக்கிறது. நீங்களும் அதை அனுபவியுங்களேன்!


பி1 போலீஸ் ஸ்டேசன் தெரியாமல் கோவையில் யாருமே இருக்க முடியாது , மிக அரிய வழக்குகளையும் குற்றவாளிகளையும் சந்தித்த அக்காவல் நிலையம் இதுவரை அந்த மூவரைப்போல எந்த குற்றவாளியையும் கண்டதில்லை . பி1 காவல் நிலைய சரித்திரத்திலேயே அந்த மூவர் குறிப்பிடத்தக்கவர்கள் . அதில் ஒருவன் இன்று அப்போதைய காவல் நிலையத்தின் ஆய்வாளரின் ரெண்டு விட்ட மருமகன் .

அந்த மூவரும் அக்காவல் நிலையம் குறித்த அறிவும் அதற்கான தேவையுமின்றிதான் இத்தனை காலம் இருந்தனர் . எப்போதாவது டிரெயினிங் ஸ்கூல் பிள்ளைகளை சைட்டடித்து விட்டு வரும்போது வழியில் பார்த்ததுண்டு .

விசும்பி விசும்பி விடாமல் அழுதுகொண்டிருந்தான் கார்த்தி . அவன் இதற்கு முன் இது போல் அழுததேயில்லை . கண்களில் கசிந்து கொண்டிருந்த கண்ணீர் மூக்கைத்தாண்டி உதட்டின் வழியே வழிந்து இறுதியில் உதட்டில் துவர்த்தது.

கடைசியாக அவன் ஆயா செத்தப்போது எவ்வளவோ அழ முயற்ச்சித்தும் அழ வராமல் மிகவும் துன்பப்பட்டிருக்கிறான் . மற்றவர்கள் அழும் போது கேனப்பயல் வினோ ' ஹமாரா ஆயா மர்கயா ' என்று நாயகன் பாணியில் திரும்ப திரும்ப சொல்லி அவனை சிரிக்க வைத்தது தேவையில்லாமல் ஞாயபகத்திற்கு வந்து தொலைக்க அழுகையிலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

பக்கத்தில் ஆரஞ்சு நிற பூப்போட்ட ஜட்டி அதன் மத்தியில் மிக்கிமௌஸ் என அதை மறைத்தவாறு குந்தவைத்து முழங்காலோடு தனது இரண்டு கைகளையும் கட்டியபடி வினோ அமர்ந்திருந்தான் (ஆய் போவது போல). அவன் அருகில் முஸ்தபா அவனும் அப்படியே அவன் பச்சை ஜட்டி மிக்கிமௌஸ் இல்லை.

கார்த்தி மட்டும் அழுதுகொண்டிருக்க, வினோ முஸ்தபாவின் காலை நோண்டி கார்த்தி அழுவதை சுட்டிக்காட்டினான், முஸ்தபாவிற்கு சிரிப்பை அடக்கமுடியாமல் வாயை கைகளால் பொத்திக்கொண்டு முகத்தை தனது தொடைகளுக்குள் மறைத்து வைத்து சிரிக்கத்தொடங்கினான்.

நடுவில் மறைந்திருந்த முஸ்தபாவின் விக்கிவிக்கி சிரிக்கும் தாடையில் லத்தி ஒன்று நுழைந்தது,

''சார் இவனா!'', கறுத்த குண்டு போலீஸ், முறைத்தபடி இன்னொரு போலீஸிடம்.

''இல்ல சார், மூணாவது இருக்கான் பாருங்க அவன்'' கார்த்தியை காட்டினார்,

பொட்டை மாதிரி அழற, அறிவுகெட்டவனே, ஆம்பளைதான நீ?'' 16 வயது கார்த்தியை மிரட்டினார் 40 வயது கறுத்த குண்டு போலீஸ் ( சிரிப்பு போலீஸ் போல இருந்ததால் மீண்டும் வினோவிற்கு சிரிப்பு ) . (பொட்ட என்கிற சொல் கார்த்தியை கோபமூட்டியிருக்க வேண்டும் .

''சார் எங்கப்பாக்கு தெரிஞ்சா.....ம்...ம்......ம் என்ன வீட்டுள்ளயே சேத்த மாட்டாருங்... சார் , நான் ஒன்னும் பண்ணல சார் ,ம்.......ம்.......ம்.......ம் இவனுங்கதான் சார் '' , தேம்பி தேம்பி அழுதபடியே கூறினான் .

கார்த்தியின் பிருஷ்டத்தில் ''பளீர்'' , ஒரு அடி , இடி போல விழுந்தது .

''ஏன்டா நீயெல்லாம் ஒரு பிரெண்டா , இவ்ளோ ஈஸியா சரண்டர் ஆகிட்ட , பாரு அவனுங்கள , கல்லு மாதிரி இருக்காணுங்க , ஸ்கூல் படிக்கும் போதே ஈவ்டீசிங் , மர்டரு ... அசிங்கமா இல்ல''

''சார் , வலிக்குது சார் , அடிக்காதீங்க சார் , சார் இதெல்லாம் கொலையா...... , இதுக்குப் போயி இப்படி அடிக்கிறீங்களே .. ''

''அடத்தூ செத்த பாம்புடா நீ '' காரி துப்பிவிட்டு போனார் கறுத்த போலீஸ் . போகும் போது வினோவிற்கும் முஸ்தபாவிற்கும் பிருஷ்டத்தில் ஒன்று தர மறக்கவில்லை . பளீர் பளீர்... கார்த்தி முகத்தில் வெற்றிசிரிப்பில் பற்களும் பளீர் பளீர்...

மூன்று நாட்கள் முன்பு வரை அவர்களுக்கு தெரியாது இப்படி ஒன்று நடக்கப்போகிறதென்று . எல்லோரையும் போல (அதாவது 16 வயது காளைகளைப் போல ) தெருவோர திட்டோ திண்ணையோ அல்லது சலூன் வாசலோ எதிலோ ஒன்றில் அமர்ந்து கொண்டு போகும் வரும் மக்களை கலாய்த்தவாறு கும்மியுடன் கும்மாளமாகத்தான் குஜாலாகத்தான் இருந்தனர் .

7 மணிக்கு நண்பர்கள் ஸ்டார் சலூன் வாசலில் கூடுவது வழக்கம் . அப்போதுதான் டியூசன் முடித்து அவ்வழியே வரும் அழகிகளையும் அழகியாகப்போகிறவர்களையும் ஸைட் அடிக்க வசதி .கார்த்திக்கு தினமும் 7 மணி ஆகிவிட்டால் தம்மடித்தாக வேண்டும் இல்லையேல் கை நடுக்கமே வந்து விடும் , அதும் கிங்ஸ்தான் ! . இரண்டேமுக்கால் ரூபாய் கிங்ஸ் வாங்க ஒரு ரூபாயோடு தினமும் வந்துவிடுவான் . என்றுமில்லாமல் அவன் அன்றைக்கு 6.45க்கே வந்துவிட்டான் . கோபத்தோடிருந்தான் . சலூன் கடைக்குள் நுழைந்து முடியை கோதிவிட்டுக்கொண்டான் . வினோ வந்தான் .

'' மச்சி , கிளம்புடா தம்மடிக்க போலாம் ''

''மச்சி என்னடா ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க ''

வரியா இல்லியா இல்லாட்டி நானே போறேன் ''

''கார்த்தி இருடா, முஸ்தபா வந்துருவான் '' சொல்லிக்கொண்டிருக்க அவனும் தனது பிஎஸ்ஏ பச்சை சைக்கிளில் சைக்கிளில் வந்துவிட்டான் .

தியேட்டருக்கு பின்னால் இருக்கும் முட்டுச்சந்தில் மூவரும் குழுமினர் .

''மச்சி இந்தா 5 ரூபா, என்கிட்ட அவ்ளோதான் '' வினோ நீட்டினான் .

''கார்த்தி நீடா '' என்றதும் 1 ரூபாவை எடுத்து நீட்டினான் . வினோ முறைத்தான் .

இரண்டு கிங்ஸ் மட்டும் வாங்கிக்கொண்டு வினோ பற்றவைத்தான் ஒரு கிங்ஸை. இன்னொன்றை முஸ்தபா . கார்த்தி வினோவை முறைத்தபடியே இருந்தான் .

''அப்புறம் கார்த்தி என்னடா டென்சன் '' , கார்த்தி பேசாமல் அமர்ந்திருந்தான் .

''ஏன்டா லூசு அவன்தான் டென்சனா இருக்கான்ல அவன்கிட்ட சிகரெட்ட குடுரா '' ,. சிகரட்டை கொடுத்தான் வினோ .

''மச்சி , நம்ம தெருல ஒரு பொண்ணு பாக்க குஷ்பு மாதிரி போகுமே தெரியுமா ஒனக்கு ''

''யார்ரா ''

''அதான் நம்ம லதா வீட்டுக்கெதிர் வீடு , பேரு கூட ஜீலினு....''

''அடிங்க... அவ என் ஆளுடா '' வினோ அலறினான் .

''ச்சீ கருமம் எவனுக்குடா வேணும் உன் ஆளு ,பேரப்பாரு ஜீலி பப்பினு , நாய்க்கு வைக்கறமாதிரி ''

''அப்புறம் என்ன மேட்டர் , ''

''ஸ்கூல் பக்கம் நேத்து நம்ம கலாவுக்காக வெயிட் பண்ணிட்ருந்தேன் மச்சி , கலாகிட்ட கிப்ட்டும் லவ்லெட்டரும் குடுக்கலாம்னு போனா, அவ கூட இவளும் வந்திட்டிருந்தா , என்னை பார்த்ததும் திட்ட ஆரம்பிச்சிட்டா , என்ன பத்தி கலாகிட்ட தப்புதப்பா சொல்லி தந்திருப்பா போல, என் கலா என்னை எப்படி பாத்தா தெரியுமா..... ''

''ஏன்டா இதுக்குலாம் பீல் பண்ற விடுரா விடுரா நம்ம கலாதானடா எங்க போயிரப்போறா'' வினோ முகத்தை சிரிக்காதது போல வைத்துக்கொண்டு நக்கலடித்தான் .

'' இத்தனை நாள் என்னை ஹீரோ மாதிரி பாக்கறவ இன்னைக்கு பபூன் மாதிரி பாக்கறாடா அதுக்கு அவதாண்டா காரணம் , மஞ்சுதான் சொன்னா , இப்போலாம் ஜீலியும் கலாவும் ரொம்ப குளோஸ் ஆகிட்டாங்களாம் , மஞ்சுகிட்ட கூட கலா சரி பேசறதில்லையாம் ''

''அவளுக்கு என்னடா உன் மேல பொச்சுகாப்பு ''

''தெரில மச்சி ''

''அப்புறம் ஏன்டா உன் லைன்ல கிராஸ் பண்றா? ''

''அவளுக்கு ஆப்படிச்சாதான் சரியாவுன்டா...!!''

''ஆமா இவரு பெரிய ஆசாரி ஆப்படிக்க கெளம்பிட்டாரு... மூடிட்டு வேற பிகர பார்ராங்கன்னா .அதான் மஞ்சுகிட்டதான் பேசறல்ல அவளுக்கு குடுத்துற வேண்டியதுதான அந்த லெட்டர ''

வெறியோடு இருவரையும் முறைத்தான் கார்த்தி . அவனவன் வலி அவனவனுக்குதான் தெரியுமாம் . மூவரும் தம்மடித்து முடித்து கிளம்பினர் . போகும் போது ஐம்பது காசு அஜந்தா பாக்கு வாங்கி வாயில் போட மறக்கவில்லை , ஒரு பாக்கில் மூன்று பாகமாய் . தம்மடித்த வாயை ஒருவர் முகத்தில் மற்றவர் ஊதி வாசனை போய்விட்டதா என சரிபார்த்த பின் வீட்டிற்க்கு கிளம்பினர் .

அடுத்த நாள் காலை வேளை , சனிக்கிழமையாதலால் பள்ளி விடுமுறை , 8 மணிக்கே சலூன் வாசலில் வந்து அமர்ந்து கொண்டான் வினோ , மற்றவரும் பின்னாலேயே .

ஜீலி தனது நாய் சின்ட்ரல்லாவை அழைத்துக்கொண்டு வாக்கிங் போய் திரும்பிக்கொண்டிருந்தாள் , ஜீலிக்கு 15 வயதுதான் , வயதுக்கு மீறிய வளர்ச்சி . அவளது நாய் ஏதோ வகையை சேர்ந்தது , பாட்ஷா படத்தில் வருமே அதை விட பெரியது . இவள் அந்த நாயோடு காலை வேளைகளில் வாக்கிங் போகும் போது அந்த நாயைக்கூட பார்க்காமல் இவளைத்தான் பார்ப்பார்கள் , எது பெரியதோ அதைத்தானே நம் விந்தையான மனித உள்ளம் முதலில் காணும் .

சிலுப்பி சிலுப்பி நாயும் அவளும் நடந்து வர , அவளது டைட் டிஷர்ட்டும் , மிக டைட்டான பேண்ட்டும் வினோவை ஏதோ செய்திருக்க வேண்டும் , அவள் அவர்களை கடக்கையில் எந்த எழவெடுத்த புயல் அவனை அடித்ததோ வினோ பாட ஆரம்பித்தான்......

'' ஏரு பெருசா.....! இந்த ஊரு பெருசா......! சொல்லடி நெல்லு பெருசா....! பயக பல்லு பெருசா......! '' .

கடுப்பானாள் ஜீலி..

''ஷிட்! ...... சின்ட்டு அட்டாக் '' என்று கையில் இருந்த நாயை கழண்டு ஓட விட்டாள் .

அது கார்த்தியின் மேல் பாய, மூவரும் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடினர் . கரிம் பாய் கடை தாண்டி மூன்றாவது சந்து ஒரு முட்டுச்சந்து அது தெரிந்தும் அவசரத்தில் அங்கே ஓடினர் . முஸ்தபாவிற்கு நாய்கள் என்றாலே ஆகாது . நாய்கள் மார்கழி மாதத்தில் குஜாலாக இருக்கும் போது எத்தனை முறை கல் எரிந்து கலைத்திருக்கிறான் தெரியுமா? அவனது பால்யத்தில் ஏதோ ஒரு தெருநாய் இவன் டியூசன் போய்விட்டு வரும்போதெல்லாம் துரத்துமாம் , கடித்ததில்லை , துரத்தியதற்கே இத்தனை கோபம் .

முட்டுசந்தில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் அங்கிருந்த செங்கல்லை எடுத்துக்கொண்டு நாயை நோக்கி ஓடினான் , அதற்குள் நாய் இவன் மேல் பாய இவன் நகர்ந்து விட்டான் . சின்ட்ரல்லா( அந்த நாயின் பெயர் சின்ட்ரல்லா ) நேராக முஸ்தபா பின்னால் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டது, அது ஒரு குறுகலான சாக்கடை , அந்த நாயால் வெளியே வர இயலவில்லை . வெளிவரும் முயற்சியில் அதன் தலை ஒருபக்கமும் அதன் உடல் ஒரு பக்கமுமாக கோணல் மாணலாக மாட்டிக்கொண்டது.

இவ் இவ் இவ் இவ்...கிவ் கிவ் கிவ் கிவ் என்று முனகியது , அந்த நாயைவிட நல்ல நாய் நம்ம கார்த்தி அதை வெளியே எடுக்க எத்தனித்தான் . வினோ அவனை தடுத்து ஆப்படிக்க நேரம் வந்துவிட்டது என்றான் . முஸ்தபா மெல்லிதாக புன்னகைத்தான் , கார்த்தி தெலுங்கு பட வில்லனைப்போல முஹ்ஹாஹாஹாஹா என்று உலகம் அதிர சிரித்தான் .... முஸ்தபா கையிலிருந்த செங்கல்லுக்கு வேலை வந்துவிட்டது .

இவ்இவ்இவ்இவ்... முனகல் அவ்அவ்அவ்அவ் ஆகி ஆஆஆஆஆவ் ஆகி ங்ங்ங்ங்ங் என குறைந்தது . கார்த்தி கடைசியாக ஒரு பெரிய குழவி கல் போன்ற ஒன்றை தூக்கி வந்து அதன் மண்டையில்............. இப்போது ங்ஙங்ங் கூட இல்லை . ஸ்ஸ் தான் .

வீதி வீதியாக நாயை தேடிக்கொண்டு ஜீலி கடைசியாக கரீம்பாய் கடையில் விசாரித்தாள் . அவர் மூன்றாவது வீதிபக்கம்தான் போனார்கள் என்று சொல்ல மூன்றாவது வீதியில் அந்த மூவர் இல்லை . சாக்கடையில் நாயின் பிணம் . கதறி அழுதாள் ஜீலி . அவள் அந்த சாக்கடையில் விட்ட கண்ணீரால் அந்த சாக்கடை மட்டுமல்ல அந்த ஊர் பாதாளசாக்கடையே அன்று சுத்தம் ஆகியிருக்க வேண்டும் . வெறி கொண்டாள் .பழி என்றாள் . இறந்து போன நாயின் உடலை அடக்கம் செய்தனர் அவள் வீட்டினர் . கண்கள் சிவக்க , நரம்புகள் புடைக்க நாயின் ஸாரி சின்ட்ரல்லாவின் சமாதியில் அந்த மூவரை அழித்தே தீருவேன் என சபதமெடுத்தாள் .

பிறகென்ன அவள் சித்தப்பா அந்த ஊர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர், அந்த மூவருக்கு பிடிவாரண்ட் . மூவரும் மாட்டிக்கொண்டனர் . நாயை அடித்ததற்க்காக உள்ளே வைத்து அடிக்க முடியுமா . ஜீலியை ஈவ்டீசிங் செய்ததாக எப்.ஐ.ஆர் .

காலையிலேயே பிடித்துக்கொண்டு வந்துவிட்டனர் . அந்த காவல் நிலையத்தின் அனைத்து காவலர்களும் அந்த மூவரையும் நன்கு என்ஜாய் பண்ணி அடித்தனர் . மதிய வேளையில் ஜீலியும் அவளது தந்தையும் வந்து பார்த்து விட்டுச்சென்றனர் . வினோவுக்கு அவமானமாக போய்விட்டது ஆயிரம்தான் இருந்தாலும் வருங்கால மாமனார் முன்னால் ஜட்டியோடு அமர வேண்டியதாகிவிட்டதே என்று . டீ கொடுப்பவன் கூட அடித்திருக்கலாம் .

இரவு ஒன்பது மணிக்கு மூவரது பெற்றோரும் வந்தனர் . முப்பதாயிரம் கொடுத்து பிள்ளைகளை மீட்டனர் . லஞ்சமில்லை , ஜீலியின் தந்தை இறந்து போன நாய்க்காக கேட்ட நஷ்ட ஈடு . அந்த நாயின் விலை முப்பதாயிரமாம். ஒரு வாரம் ஆய் கூட போக இயலாமல் அவதிப்பட்டனர் மூவரும் .. அடி முழுக்க அங்கேயே விழுந்திருந்தது . சம்பவம் முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே சலூன் கடை அதே மூவர் . அதே காலை வேளை எட்டு மணி , ஜீலி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள் . வினோ அவளிடம் அருகில் சென்று ,

''ஹாய் , ஜீலி ''

''ம்ம் என்ன?''

''ஸாரிப்பா , கோபத்தில அப்படி பண்ணிட்டோம் ''

''இட்ஸ் ஓகே, ''

''ப்ளீஸ் நீ என்ன மன்னிச்சிட்டேனு சொல்லு ''

''சரிடா மன்னிச்சிட்டேன் போடா ''

''உன்னால ஒரு வாரமா சரியா உக்கார கூட முடியல தெரியுமா , எப்படி அடிச்சாங்க தெரியுமா . அதை உங்கிட்ட காட்டக்கூட முடியாதுப்பா ''

அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது .

''.............''

''என்ன ஜீலி சிரிக்கற ''

''இல்ல ,

ம்ம்ம்........................................................ ஒன்னுமில்ல , ஹாஹா''

''சரி விடு , பாய் ''

''ஏய் வினோ, அதான உன் பேரு , ஈவ்னிங் வீட்டுக்கு வரியா , கேரம்ஸ் விளையாடலாம் , நீதான் கேரம்ஸ் ஸ்டேட் லெவல் சாம்பியனாமே , ஸ்கூல்ல ஒன் சிஸ்டர் சொன்னா , அடுத்த வாரம் டூர்ணமென்ட் ஸ்கூல்ல அதான் ''

''.................... '' மௌனமாக இருந்தான் , ஆனால் மனசுக்குள் ஆயிரம் வாலா வெடித்து சிதறியது , ராக்கெட்டுக்கள் பறந்தன , மனது படபடக்க ஆரம்பித்தது . குறுகுறுப்பாக இருந்தது . இப்போதே அவளை காதலிலத்து விட்டதாய் உணர்ந்தான் . அவள் உதடுகளில் முத்தமிட்டதை மகிழ்ந்தான் .

'' 7 மணிக்கு வந்திடுரீயா.. அப்பாட்ட சொல்லிடறேன் ''

''ஓகே....................................... ஓகே....................'' என்றபடியே ரிவர்ஸில் நடந்து கார்த்தி அருகில் அமர்ந்து கொண்டு அவள் செல்லும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தான் .

கண்களால் காறித்துப்ப முடியுமா...????

முதன்முறையாக அன்றுதான் வினோ அதைப்பார்த்தான் . கார்த்தி,முஸ்தபா மூலமாக ... இவன் ஈ என்று கேனத்தானமாக சிரித்தான் .

கார்த்தியும் , முஸ்தபாவும் அதற்குப்பின் அவனிடம் பேசுவதில்லை . முஸ்தபாதான் கார்த்தியின் கிங்ஸிற்கு ஒன்னேமுக்கால் ரூபாய் தர வேண்டியிருந்தது .

மாலை வேளைகளில் வினோ மட்டும் ஜீலிக்கு கேரம் , காதல் , முத்தம் , இத்யாதி இத்யாதி இன்பங்கள் குறித்து சொல்லிக்கொடுக்கிறான் .


அன்புடன்
அதிஷா



Read More......

Wednesday, December 17, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திமுகவின் அடுத்த தலைமை

· 28 comments

ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலா அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது.


திமுகவின் அடுத்த தலைமை

து கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது


ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது?

1. திமுகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்ததை தெளிவுற மக்கள் விளங்கும் வண்ணம் சொல்லும் திறன் படைத்த படித்த அரசியல்வாதி – இத்தகைய ஒருவர் திமுகவிற்கு தலைமைப் பொறுப்பேற்பதில் தவறென்ன இருக்கிறது?

2. சில மாதங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசீர் பூட்டோ இறந்த போது ஒரு உயிலை எழுதி வைத்துவிட்ட இறந்தார்….தான் இறந்த பிறகு தனது மகன் தான் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்று. கட்சியை தனது குடும்பச்சொத்தாக கருதும் பலர் முன்னிலையில் இன்றைக்கும் கட்சிக்காக அடிமட்டத்தொண்டனாகவே இருக்க விருப்பம் என்று சொல்லும் ஒருவர் தலைவராக வருவதில் என்ன தவறிருக்க முடியும்?

3. குதியும் , திறமையும் படைத்த ஒருவர் திமுக தலைவரின் பிள்ளை என்ற ஒரே காரணத்தால் மட்டுமே தலைமையேற்கக் கூடாதா என்ன?

கவே, மு.க.ஸ்டாலின் அவர்களே அடுத்த திமுக தலைமையாக இருக்க வசதியும் , வாய்ப்பும் இருக்கிறது. அத்தலைமைப்பொறுப்பிற்கு தகுதியான நபராகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார் என்றே தமிழகத்தின் அடையாளமான திமுகவின் தொண்டர்கள் கருதுகிறார்கள். அவரைப் பற்றி தெளிந்த ஒரு பார்வைக்கு வர நாம் எமஜென்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

து மிசா காலம், இரணடாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்த மாபெறும் சோதனை. இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி தனது சுயநலத்துகாக மிசாவையும், எமர்ஜென்சியையும் பயன்படுத்தி காட்டு தர்பார் நடத்தியதொரு காலம்.


எதற்கு எமர்ஜென்சி?

1971ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திருமதி இந்திராகாந்தி அத்தேர்தலில் வென்றார். பிரதமரின் தனிச்செயலாளராக இருந்த யஷ்பால் கபூர் என்ற அரசு ஊழியரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தியதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் பிரிவு 123 விதி 7ன் படி சட்டவிரோதமாக செயல்பட்டதாகச் சொல்லி 1975 ஜூன் 12ம் நாள் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் தண்டனையாக இந்திராகாந்தி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இந்தியாவின் எந்தத் தொகுதியிலும் போட்டியிடக்கூடாது என்றும் சொன்னது. உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார் இந்திராகாந்தி. உச்சநீதிமன்றத்தில் அப்போது விடுமுறைக்கால நீதிபதியாயிருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்திரா காந்தி மக்களவை உறுப்பினராய் நீடிக்கலாமெனவும் ஆனால் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவோ வாக்களிக்கவோ உறுப்பினர் என்பதற்கான ஊதியம் பெறவோ உரிமையில்லை எனவும் 25.6.1975 மாலை 3 மணிக்கு தீர்ப்பளித்தார்

ச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இந்திரா பதவி விலக வேண்டும் என்று நாடெங்கும் எதிர்ப்பலை கிளம்பியது. ஜூன் 25 ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணி நாடு தழுவிய சத்தியாக்கிரக இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாய் சித்தரித்து தீர்ப்பு வெளியான ஒரு சில மணிகளிலேயே நெருக்கடி நிலையை அறிவிக்கத் துணிந்தார் இந்திரா. இதற்காக அமைச்சரவையைக் கூட கூட்டாமல், தன் கைப்பொம்மையாயும்- ஆகவே குடியரசுத் தலைவராயுமிருந்த ஃபக்ருதின் அலி அகமதிடம் 25 ம்தேதி பின்னிரவில் கையொப்பம் பெற்று 1975 ஜூன் 26 அதிகாலை முதல் இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்தார் இந்திரா. சட்டத்திற்குட்பட்டு தான் இனியும் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக இந்திராவும் அவரது செல்லமகன் சஞ்சய் காந்தியும் தேர்ந்தெடுத்த இழிவான- எதேச்சதிகார பாதைதான் எமர்ஜென்சி. ( நன்றி – திரு.ஆதவன் தீட்சண்யா , கீற்று.காம் )


கொள்கைக்காக சிறை செல்லத் தயங்காத ஸ்டாலின்

மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டார்கள். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் எழும்பிய எதிர்ப்புக்குரலை அடக்கிய இந்திராகாந்தி தமிழகத்தில் மட்டும் ஒரு வலுவான குரல் ஒலிப்பதை நசுக்க முடியவில்லை……அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். ஆம் கலைஞரின் குரல்…!! திமுகவின் மீது கடுங்கோபம் கொண்ட இந்திராகாந்தி மிசாவை ஏவிவிட்டார். உச்சகட்டமாக, 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். மொத்த தமிழகமுமே கலைஞர் கைது செய்யப்படுவார் என்றே நினைத்தது. ஆனால் கலைஞருக்குப் பதில் இந்திராகாந்தி அம்மையார் கைது செய்தது கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலினை

24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. திமுகவின் தலைவர்களுள் ஒருவரான சிட்டி பாபு கொல்லப்பட்டார்….மு.க.ஸ்டாலினும் இவ்வாறான சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டார்.

கொண்ட கொள்கைக்காக சிறை செல்லவும் தயங்காதவர் தான் மு.க.ஸ்டாலின்.


கைதிற்கு அஞ்சாத ஸ்டாலின்

தே ஜெயலலிதா அம்மையார் 2001ல் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞரை எந்தவொரு மூகாந்திரமுமில்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது. அதற்கான காரணமாகவும் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும் போது கட்டிய மேம்பாலங்களில் ஊழல் செய்தததாகத் தான். அப்போதும் கூட, காவலர்கள் தன்னைக் கைது செய்யும் வரை காத்திருக்காமல், தன்னைக் கைது செய்யும் படி தானாகவே காவல் நிலையப் படியேறியவர்தான் மு.க.ஸ்டாலின் , தன் மீது வழக்குப்போட்டவுடனே ஆஸ்பத்திரியில் ஹார்ட் அட்டாக் என்று படுத்துக் கொள்ளும் அனேக அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.

தவியை நீட்டித்துக்கொள்வதற்காக சட்டத்தையே மாற்றியமைத்த பர்மாவின் ஜூண்டா கதை நமக்குத் தெரியும், பாகிஸ்தானின் முஷாரப் கதையும் நாமறிந்ததுதான், இந்தோனேசியாவின் சுகார்தோ கதையும் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் ஒருவரின் பதவியை பறிப்பதற்காகவே தனிச்சட்டம் போட்டது நமது தமிழ்நாட்டில்தான்…அத்தகைய சட்டம் யாரைக் குறிபார்த்து பாய்ந்தது? மு.க.ஸ்டாலினைக் குறிபார்த்துத்தான். அவர் சென்னை மேயராக இருந்த போது கராத்தே தியாகராஜனை வைத்து நடந்த கூத்துக்கள் உலகறிந்ததே!

ப்படி அடக்குமுறைகளை வென்று எழுந்து நிற்பவர்தான் மு.க.ஸ்டாலின். இப்படி சோதனைகளையே சாதனைகளாக்கி ஒட்டுமொத்த திமுகவினரின் வாழ்த்துக்களையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின்.


அரசியல் நாகரிகத்தின் அடையாளம் மு.க.ஸ்டாலின்

சென்னை மேயராக இருந்த போதும் சரி, இப்போது உள்ளாட்சித் துறை மந்திரியாக இருக்கும் போது சரி, தனது அளவிலான பணிகளை எந்தவித விமர்சனமும் இல்லாமல், எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் அமைதியாகச் செய்து வருகிறார். இவரிடம் ஒரு நாலாந்தர அரசியல் வாதிகளைப் போல் வெற்றுச் சவடால்களைக் காணவே முடியாது. ஒண்டிக்கு ஒண்டி வர்றியா போன்ற கேவலமான அரசியல் கூத்துக்களைக் காண முடியாது. தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை அவர் இன்று வரை யார் மீதும் வைத்ததில்லை. மரியாதையற்ற வார்த்தைகளை உபயோகித்து எந்த ஒரு தலைவரையும் அவர் இன்று வரை விளித்தது கிடையாது. அதைப்பற்றி அவரே சொல்வதைக் கேளுங்களேன்

நிருபர்களின் கேள்வி

சாதாரண சமாச்சாரங்களுக்குக் கூட மேடையில் துண்டை இழுத்துவிட்டுக்கொண்டு சவால் விடுவதும், மாற்றுக்கட்சியினரை வறுத்தெடுப்பதுமாக இருக்கும் தமிழக அரசியலில் நீங்கள் மட்டும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதோ, சவால் விடுவதோ இல்லையே?

மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்

ங்களிடம் சாதனைப் பட்டியல் இருக்கிறது. மேடையில் அதைச் சொல்கிறேன்.அது இல்லாதவர்கள் வெற்றுச்சவால்களை நம்பித்தான் பேச வேண்டியிருக்கிறது. நான் ஐ.ஐ.டியில் ஆய்வு மாணவன்.

ரு தேர்ந்த தலைவனுக்கு அடக்கத்தை விட வேறென்ன பெரிய குணம் வேண்டிக் கிடக்கிறது? மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி, மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை கட்சி வேறுபாடு கடந்து மக்கள் ஒரு நல்ல செயல் வீரராகவே கருதுகிறார்கள். அவர்தான் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்.

கவே, திமுகவின் எதிர்காலத்திலும் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை , திமுகவின் எதிர்கால தலைமையிலும் எந்தவிதக் குழப்பமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தனது திசையில், தனது பயணத்தில் எப்போதும் போன்றே வெற்றி தோல்விகளுடன் பயணிக்கும் என்று சொல்லி இந்த அளவில் முடித்துக்கொள்கிறேன்

ந்த நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட கட்டுரையை வாசித்தவர்களுக்கு நன்றிகள். வாசிக்காதவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தோழமையுடன்
மதிபாலா



ஒரு முக்கிய குறிப்பு.

யல்பிலேயே திமுகவின் அனுதாபியான நான் முதலில் தெளிவு படுத்த வேண்டியது, இந்தக் கட்டுரையை நடுநிலைப்பார்வையிலிருந்து எழுத முயற்சிக்கிறேன்…சில சமயங்களில் திமுகழகம் பற்றிய பார்வைக்கு சில விடயங்களை சொல்கையில் தவிர்க்க முடியாமல் சார்பு நிலை வந்துவிட வாய்ப்புண்டு. அதை கூடியவரை தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அது வெற்றியடைந்ததா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

Read More......

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக.

· 28 comments

சென்ற பதிவில் முதல் பகுதியாக வெளியான மதிபாலாவின் கட்டுரை இப்பதிவில் தொடர்கிறது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில் வெளியாகும். இது ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக அவர் எழுதிய சிறப்புப்பதிவு.


ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக

திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு நடாத்தப்பட்ட தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற்றது. கலைஞர் இரண்டாம் முறையாக பதவியேற்றார். பின்பு திமுகழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார்

எம்.ஜி.ஆரின் பிரிவு

சினிமா கவர்ச்சி , கொள்கைப் பாடல்கள் என்ற ஜனரஞ்சகத்தின் மொத்த வடிவமான எம்.ஜி.ஆரும் அவரது கட்சியுமான அதிமுக , தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் , எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சியிலிருந்தார். எம்.ஜி.ஆரின் கலருக்கும் , எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்களுக்குமே ஓட்டுப் போட்ட மக்கள் அனேகம் பேர். இதில் கொள்கையென்ன ,கோட்பாடென்ன , எல்லாம் காற்றில் பறந்தன….அந்த மாயைதான் இன்றைக்கும் அவரது சாதனைகளென பெரிதாகச் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும் , தொலைநோக்கு திட்டங்கள் ஏதுமில்லாவிட்டாலும் அவரைப் புகழ்ந்து பேசக் காரணம் என்றால் அதில் மிகையில்லை

மூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை, தனது ஆரம்பமே தலித்களுக்கும் , தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை பெற்றுக்கொடுக்க முயற்சித்த ஒரு கட்சியை வெறும் சமபந்தி விருந்தினாலும் ,ஊடகக் கவர்ச்சியாலும் தோற்கடித்தார் எம்.ஜி.ஆர் என்னும் தனி மனிதர்……அத்தனி மனிதரை பின்னாலிருந்து இயக்கியது கலைஞரையும் , திமுகவையும் ஜென்ம பகைவர்களான கருதிக்கொண்டிருந்த பார்ப்பன ஊடகங்கள். அன்று திமுக பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்பதிலேயே குறியாக இருந்த காலம்..அன்றைய வன்மத்தை இன்றும் கூட மறக்காத பார்ப்பன ஊடகங்கள், இன்றும் கூட திமுகவின் செய்திகளை திரித்துக்கூற முயலும் பார்ப்பன ஊடகங்கள், எதற்குமே தகுதியில்லாத விஜயகாந்தை தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக சித்தரிக்க முயலும் இந்த ஊடகங்கள் அன்றைக்கு எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் மிஸ்டர். க்ளீன் இமேஜ் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

றைந்த ஒரு தலைவரை கொச்சைப்படுத்தும் நோக்கமில்லை நமக்கு , ஆனால் தொடர்ந்து வரும் ஆரிய , திராவிடச் சண்டையில் கொஞ்சமேனும் தமிழர்களைத் தலைநிமிர வைத்த திமுகவை முடக்கும் முயற்சியில் பார்ப்பனர்கள் தாற்காலிக வெற்றி பெற்றார்கள் என்பதைச் சொல்லும் முகமாகவே மேற்கண்ட செய்திகளைச் சொன்னோம்.

13 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தும் எம்.ஜி.ஆரால் திமுகவிற்கும் , உடன்பிறப்புக்களுக்கும் இருந்த பந்தத்தை உடைக்க முடியவில்லை. திமுகவின் தொண்டர் பரப்பு அப்படியே இருந்தது…கழகத்தையும் , கலைஞரையும் உயிரெனக் கொண்டவர்கள் கழகத்திலேயே இருந்தார்கள். இன்னுஞ் சொல்லப்போனால் திமுகவிற்கு அது ஒரு நல்ல வாய்ப்பாகவே இருந்தது. பதவிச்சுகத்திற்காக கட்சியில் திழைப்பவர்கள் யார் , உண்மையிலேயே கழகத்தின் பால் பற்றுக்கொண்டவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் அற்புத வாய்ப்பாகவே இருந்தது. அந்த அக்னிப்பரிட்சையில் திமுகவும் , அதன் தொண்டர்களும் வென்று காட்டினார்கள்


ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக

ரித்திரத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் காணாமல் போனதான வரலாறுதான் உண்டு இங்கே…ஆனால் அதன் பிறகும் எழுந்து நின்ற அதிசயம் தான் திமுக. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு நடந்த 1989 தேர்தலில் எம்.ஜி.ஆரின் மனைவியும் , சினிமாவில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடிய ஜெயலலிதாவும் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றனர். அந்தத் தேர்தலே திமுகவின் மீள் வருகைக்கு கட்டியம் கூறிற்று.

1991ல் ஆட்சி புலிகளுக்கு ஆதரவளிப்பதாக பொய்க்குற்றச்சாட்டு சொல்லப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். ராஜிவ் கொலைக்கு கலைஞரே காரணம் என்று முக்குக்கு முக்கு பிரச்சாரம் செய்த ஜெயல்லிதா ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். திமுக சொல்லவொணாத அடக்குமுறைக்கு ஆட்பட்டது. ஒரு ரூபாய் சம்பளம் பெற்று நூறு கோடி ரூபாயில் கல்யாணம் நடத்திய அதிசயமும் அப்போதுதான் நடந்தது, ஆட்டோ அனுப்பும் கலாச்சாரமும், கஞ்சா கேஸ் கலாச்சாரமும், கொஞ்சமும் அரசியல் நாகரீகமில்லாத ஒரு சூழலும் தமிழகத்தில் அப்போதுதான் தொடங்கிற்று.

வைகோவின் பிரிவு

ம்.ஜி.ஆரின் பிரிவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட மற்றொரு மாபெரும் பிளவாகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எல்லோரும் கருதினார்கள். திமுகவின் இளைஞர் பட்டாளம் வைகோவின் பின்னால் சென்று விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். பாதிக்கும் மேற்பட்ட மாவட்டச்செயலாளர்கள் வைகோவின் பின்னால் அணி வகுத்தார்கள். கட்சியின் அடையாளமான உதயசூரியனே முடக்கப்பட்டுவிடக்கூடும் என்றார்கள். ஆனால அத்துணை அனுமானங்களையும் உடைத்தெறிந்து விட்டு, 1996ல் நடந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறியது. ஜெயலலிதா கூட தோற்றுப்போனார்

ஜெயலலிதாவின் மேல் தொடரப்பட்ட நியாயமான வழக்குகளை , தன் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக வழக்குப் போட்டதாக பிரச்சாரம் செய்த ஜெயலலிதா 2001 ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். அரசு ஊழியர்களும் , போக்குவரத்து கழக ஊழியர்களும் கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். மக்கள் மேல் அநியாயத்திற்கு வரிச்சுமைகள் சுமத்தப்பட்டன. அதுவரை தான் செய்ததெல்லாம் சரியெனவே வாதிட்டு வந்த செயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கேற்பட்ட வரலாறு காணாத தோல்வியால் யூ டேர்ன் எடுத்தார். பறிக்கப்பட்ட சலுகைகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அவரது யூ டேர்ன் சிறிதளவு மக்களைக் கவர்ந்தாலும் தமிழக மக்கள் 2006ல் கழகத்திடம் மீண்டும் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்தார்கள்…அந்தத் தேர்தல் தமிழக வரலாற்றில் முதன் முதலில் ஒரு மைனாரிட்டி அரசாங்கத்திற்கு அடி கோலிற்று. சில இலவச அறிவிப்புகள் பிடிக்காத சாராரும், விஜயகாந்த் அவர்களின் நுழைவும் அந்த மைனாரிட்டி அரசின் காரணாங்களாயினர்.

னால் அந்தத் தேர்தலில் , தனது தேர்தல் அறிக்கையையே கதாநாயகனாக மாற்றிய திமுக இன்று வரை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கிறது


திமுகவின் எதிர்காலம்

திமுகவின் எதிர்காலம் என்ற கேள்வியை நாம் திமுகவின் வரலாற்றின் மூலமாகவே சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுகவின் வரலாறானது அளப்பரிய வெற்றிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் மிகப்பெரும் சரிவுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில பத்திகளில் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் தனது தோல்விகளுக்கான பதிலை தனது வெற்றிகளிலிருந்தே அக்கழகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வெற்றிகளையும் தோல்விகளையும் சீர்தூக்கிப் பார்க்கையில் நமக்குத் தெரிவதெல்லாம், எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழல்களிலும் கூட கழகத்திற்கான அடித்தளம் மிக வலுவாகவே கட்டப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வீரியமான வார்த்தைகளை இன்றைக்கும் தமது உயிர்மூச்செனக் கொண்ட உடன்பிறப்புக்கள் இன்னும் மிகுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் மிக விரைவில் தோல்வியிலிருந்து திமுக மீள முடிகிறது

1972 ல் எம்.ஜி.ஆரின் அசுர பலமும், திமுகவிற்கெதிரான ஊடக எதிர்ப்பும் , சினிமாக் கவர்ச்சியும் திமுகவிற்கு தோல்வியைக் கொடுத்தன. 1991ல் ராஜிவ் கொலை என்ற அனுதாப அலை திமுகவிற்கு தோல்வியைக் கொடுத்தது. 2001ல் எதிர்க்கட்சி கூட்டணி பலமும் , பணப்புழக்கமில்லை என்ற பிரச்சாரமும் தோல்வியைக் கொடுத்தது. இன்று சினிமாக் கவர்ச்சியாலும், பதவி ஆசையாலும் ஒரு சில இளைஞர்கள் விஜயகாந்த் பின்னாலும் , சரத்குமார் பின்னாலும் அணி வகுத்திருக்கலாம். ஆனால் , தங்களைப் பிணைக்கும் எந்தவொரு கொள்கையும் , சக்தியுமில்லாமல் நீண்ட காலம் அவர்களைப் பிணைத்து வைக்க முடியாது. அத்தகைய திடீர் கட்சிகளால், அடித்தளம் வலுவாகவுள்ள திமுகவை அத்துணை சீக்கிரம் வீழ்த்தி விட முடியாதென்பதே உண்மை. மாறாக ஒரு சர்வாதிகார மையத்தைக் கொண்டுள்ள கட்சிகள் வீழ்வதற்கே வாய்ப்புண்டு என்றே நான் கருதுகிறேன்.


உட்கட்சி ஜனநாயகம்

ம்.ஜி.ஆர் தனது கட்சியை ஒரு நிறுவனம் போலத்தான் நடத்தினார். உட்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் இன்றும் அதிமுகவினர் கேட்பார்கள். ஆனால் அன்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகத்தான் இருந்தது திமுக. இன்றும் கூட. இன்று 2008ல் கூட, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உட்கட்சித் தேர்தலை நடந்தால் உள்குத்துக்கள் தோல்விகளைத் தர வல்லவை என்ற நிலையிலும் உட்கட்சித் தேர்தல்களை நடத்துகிறது திமுக

னால், நமது எம்.ஜி.ஆரைப் பார்த்துத்தான் நாம் கட்சிப்பதவியில் இருக்கிறோமா இல்லையா என்ற பரிதாப சூழலில் இருக்கிறது அதிமுக…எம்.ஜி.ஆரின் பார்மூலாவில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் விஜய்காந்த் கட்சியிலும் அவ்வாறே. அதனாலேயே இன்று வரை கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்கள் நம்பிக்கையளிக்கக் கூடியவர்களாக திமுகவில் காட்சியளிக்கிறார்கள். ஒரு பத்து இரண்டாம் மட்டத் தலைவர்கள் திமுகவில் உடனே தெரியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவிலோ மற்ற எந்த தமிழக / தேசியக் கட்சியிலுமே தலைமையால் திணிக்கப்பட்டவர்களே இரண்டாம் மட்டத்தலைவர்களாகிறார்கள். அதனால் கட்சித்தலைமைக்கும், தொண்டர்களுக்குமிடையிலான பாலமாக செயல்பட திணிக்கப்பட்ட தலைவர்களால் இயல்வதில்லை.

ந்திரிப் பொறுப்பை இழந்த பின்பும், மாவட்டச்செயலாளராக கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி. ராஜா அவர்களின் பேட்டியே அதற்கு நல்ல சான்று. மந்திரிப் பொறுப்பைக் காட்டிலும் உயர்ந்தது கழகத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பெரியது, அதையே நான் விரும்புகிறேன்” என்று சொன்ன ஒரு வார்த்தையே திமுகவின் வலிமை என்பது ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அதன் தொண்டர்களின் மன வலிவில் இருக்கிறது என்பது புலனாகிறது. தனது வலிமையென்ன என்பதை திமுக தெரிந்தே வைத்திருக்கிறது.


திராவிட முன்னேற்றக் கழகமும், கொள்கைகளும்

திமுகவின் எதிர்காலம் என்பது அது எத்துணை காலம் தனது கொள்கைகளை அடை காத்து வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. சொல்லப்போனால் இன்றைக்கும் கொள்கைகளை கொஞ்சமாவது மதிக்கும் , அதற்கு தன் கவனத்தைச் செலுத்தும் ஒரே இயக்கம் திமுகதான் என்று சொன்னால் அது மிகையில்லை. திமுகவின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையாதலால் , அந்த நிலைப்பாட்டை நாம் இன்றைய நிகழ்வுகளை கொண்டே பார்க்க வேண்டும்.

1. ரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் உரிய சம்பளத்தையும் சலுகைகளையும், போனஸ்களையும் கொடுத்து திமுக , தொழிலாளிகளின் உரிமைகளை மறுக்காமல் தொழிலாளிகளின் அரசாக இருக்கிறது.

2. ரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று ஏழைகளின் அரசாக காட்சியளிக்கிறது

3. மூக நீதிக்கொள்கையில் நம்பிக்கை கொண்டு இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் பரவவும் , க்ருமி லேயரை எதிர்க்கவும் , முஸ்லீம் , கிறித்துவ மதங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அருந்ததியினருக்கான தனி இட ஒதுக்கீடு என்று தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறது.

4. தாழ்த்தப்பட்ட சமூகமும் அர்ச்சகராகலாம் என்று சாதி ஒழிப்புக்கொள்கையை கொஞ்சமேனும் முன்னெடுத்துச் செல்கிறது

5. மிழுணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்கும் விதமாக தமிழ்ப்புத்தாண்டு தைப் பொங்கலே என்று அறிவித்திருக்கிறது. தமிழ் மொழியை செம்மொழியாக்க இயன்ற வரை போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது

6. மிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் , தமிழீழ உணர்வாளர்களுக்கும் மாபெரும் எதிர்ப்புக்கிடையே , தனது கூட்டணிக்கட்சியே எதிர்த்தாலும் கூட கருத்துச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.

7. தேவையான சமயங்களில் , தவறிழைப்போர் மிக உயர்பதவிலியிருந்தாலும் அவர்களை தூக்கிவீசத் தயங்காமல் இருக்கிறது. அதற்கு நேற்று என்.கே.பி.ராஜாவும் இன்று வீரபாண்டியாருமே உதாரணம்.

8. எதிர்க்கட்சிகளின் முறையான குற்றச்சாட்டுகளுக்கும் , வாதங்களுக்கும் பொறுப்புடன் பதில் தந்து கொண்டிருக்கிறது.

9. ஜெயலலிதாவின் வருகையினால் முடிவுரை கட்டப்பட்ட அரசியல் நாகரீகத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் தன்னை அர்பணித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தன் நிலையை தாழ்த்திக் கொண்டு அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருப்பதாக கலைஞர் அறிவித்தது மற்றும் மின் வெட்டுப் பிரச்சினையில் அதிமுகவையும் விவாதத்திற்கு வரச்சொல்லி வலியச் சென்று அழைத்தது திமுக.

10. ன்றைக்கும் , அதிமுக தலைவி கொடநாட்டிலும் , 2011ல் முதல்வாராவேன் என்று சொல்லிக் கொள்ளும் விஜயகாந்த் பொள்ளாச்சியில் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கும்ப் போது திமுகவின் தலைமையும் , அத்துணை மட்டங்களும் மக்களை நேரடியாக சந்தித்து அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்

11. ளைஞர் சக்தியும் , மகளிர் சக்தியும் 60 ஆண்டு காலமானாலும் தம்மிடையே கணிசமாக இருக்கிறதென்பதை கட்டியம் கூறும் முகமாய் இரண்டு மிகப்பெரிய மாநாடுகளை வரலாறு காணாத வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறது திமுக.

னது கொள்கைகளிலிருந்தோ, பார்வைகளிலிருந்தோ இன்று வரை திமுக விலகவில்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணங்களே சாட்சி. குறைகளற்ற அரசாக திமுக ஆட்சி இருக்கிறதென்பது என் கருத்தல்ல. குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு ரூபாய் அரிசியையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தாராள நிதி வழங்கலையும், இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களை ஏழைகளுக்கு தருவதையும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததையும் பாராட்டும் அதே வேளை இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டத்தையும், மின் வெட்டை ஒட்டிய சொதப்பலையும் நாம் ரசிக்கவில்லை என்பதையும் பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு

தேபோல், கட்சியளவில் தயாநிதி மாறன் திணிப்பு மற்றும் விலக்கல், கனிமொழி திணிப்பு, ஈழத்தமிழர் விடயத்தில் ராஜினாமா நாடகம் இன்னுஞ்சில நிகழ்வுகள் நமக்கு ஏற்புடையதாயில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக விமர்சனங்கள் இருப்பினும் பெரிய அளவிலான உடன்பிறப்புக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் நிகழ்வுகள் யாதுமிருப்பதாக நாம் கருதவில்லை. அதனால் தனது உடன்பிறப்புக்களின் நம்பிக்கையை கலைஞரும், திமுகவும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

க, கட்சி மீது பற்றுக்கொண்ட உடன்பிறப்புக்களை தன்னகத்தே இன்றுவரை வைத்துக்கொண்டிருக்கும் திமுகவின் எதிர்காலம் வழக்கம் போலவே வெற்றிகளும் , தோல்விகளும் கலந்ததாக இருக்கும். அதைப்பற்றிய பெரிதொரு கவலை தேவையே இல்லை என்பதே எம் கருத்து. கலைஞருக்குப் பின்னும் கூட...

ன்?

பார்ப்போம்...



[தொடரும்]


அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும்.

Read More......

Tuesday, December 16, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திராவிட முன்னேற்ற கழகம் -இனி!

· 22 comments

'ச்சும்மா ட்டமாஷ் - 75': சிறப்பு பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் மதிபாலா அவர்கள் எழுதும் அரசியல் கட்டுரை வெளியாகிறது. திமுக -விற்கு வலுவான திராவிட மாற்று கட்சி தற்போதைய தமிழக அரசியலில் இல்லை என்னும் நிலை திமுக -வை முன்னெப்போதுமில்லாத வகையில் அக்கறை இன்மையுடன் கூடிய சோம்பல் கொள்ளச்செய்கிறது என்பது பரவலான எண்ணம். மேலும் ஒரு பெரிய அளவிலான தலைமை மாற்றத்திற்கு திமுக தயாராகி வரும் இச்சூழ்நிலையில் மாற்றத்திற்கு பிறகான திமுகவின் நிலை எவ்வாறு இருக்கும் என இக்கட்டுரை ஆராய்கிறது.


திராவிட முன்னேற்றக் கழகம் – இனி?

'தி்ராவிட முன்னேற்றக் கழகம் – இனி?' என்ற இந்தக் கேள்வி வெகு ஆழமானது. அந்தக் கேள்வியில் திமுகவின் அடுத்த அரசியல் தலைமை பற்றிய வினவல் மட்டும் அடங்கியிருக்கவில்லை…..திமுகவின் எதிர்காலம் என்ன என்னும் மாபெரும் கேள்வியும் அடங்கியிருக்கிறது


திமுக ஒரு புறக்கணிக்கவியலாத சக்தி

ற்றேறக்குறைய சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழகத்தின் வரலாற்றில் இன்று வரை திமுகவின் பங்களிப்பு இல்லாத காலமில்லை. சுதந்திரமடைந்த புதிதில் தம்மைத் தாமே ஆண்டு கொள்வதற்காக தேசம் தம்மைத் தயார் படுத்திக்கொண்டிருந்த ஒரு வேளையில்தான் திமுகழகம் தோன்றியது.

பார்ப்பனர்களாலும், உயர் சாதி இந்துக்களாலும் நிரம்பி வழிந்த தமிழக/இந்திய அரசியலை கொஞ்சமேனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பக்கமும் , தாழ்த்தப்பட்டவர்களிடமும் கொண்டு

சேர்க்க சமூக வழியில் போராடுவது பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம்…அதனை அரசாங்க வழியில் சாத்தியப்படச் செய்யும் அரசியல் சக்தியாக இன்று பிரமாண்டமாக ஆலம்போல் ஓங்கி வளர்ந்து நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம். ஆக

தமிழகத்தின் அரசியலில், தமிழகத்தின் சமூகத்தில், தமிழகத்தின் கட்டமைப்பில், தமிழகத்தின் தொழில் வளத்தில், தமிழ் வளர்ச்சியில், தேசிய மொழியென சொல்லப்பட்ட ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் திராவிட

முன்னேற்றக் கழகத்தின் பங்கு இல்லையென்று அக்கழகத்தின் இன்றைய அரசியல் எதிரிகள் கூட சொல்ல மாட்டார்கள்.சொல்ல முடியாது.

த்தகையதோர் இயக்கம் , தனது வாழ்நாளில் எந்தவொரு இயக்கமுமே கண்டிராத மாபெரும் வெற்றிகளையும் குவித்திருக்கிறது. எந்தவொரு இயக்கமுமே தாங்க முடியாத மாபெரும் தோல்விகளையும் கண்டிருக்கிறது. அத்தோல்விகளுக்கு பிறகு பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்திருக்கிறது. இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறது

ன்றும் திராவிட இயக்கத்தின் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படும் போதும் , அவ்வியக்கத்தின் முக்கியக் கோட்பாடான கடவுள் மறுப்புக் கொள்கையை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் , தொடர்ந்து திமுகவை மக்கள் ஆதரித்தே வருகிறார்கள்

து ஏன்?


காங்கிரசை வீழ்த்திய திமுக

ரை நூற்றாண்டிற்கு மேல் கட்டுப்பாடோடு இருந்த காங்கிரஸ் கட்சியை , நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததாக சொல்லப்படும் ஒரு கட்சியை , சமுக நீதிக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு இயக்கம் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் தோற்கடிக்கப் போகிறது என்று யாரும் திமுகழகம் தொடங்கப்பட்ட 1949ல் எண்ணியிருக்க வாய்ப்பில்லை.

ன்றைக்கும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் காங்கிரஸ் பேரியக்கமானது தனது வலுவான தொண்டர் படையை தமிழகத்தில் மட்டுமே முற்றிலுமாக இழந்திருக்கிறது. அதுவும் எத்தகையதொரு தொண்டர் படையை? சுதந்திர வேட்கையில் தமது இன்னுயிரையும் தரத் துணிந்ததொரு தொண்டர் படையை….!!!! அதுவும் வீழ்த்தியதெப்போது? இன்றைக்கும் அனேக மக்களால் கர்ம வீரர் அன்போடு அழைக்கப்படும் உயர்திரு. காமராசர் அவர்களின் காலத்தில்!

ந்த பெரியதொரு பிரபுவத்துவ கட்சியை , அக்கட்சியின் ஆதிக்கத்தை , மாநில நலன்களை என்றுமே பிரதிநிதித்துவப் படுத்தாத தேசிய தலைமைகளுக்கு கட்டுப்பட்ட கட்சியின் ஆதிக்கத்தை தகர்த்தெரிந்தது திமுக. இன்று கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் , ஆந்திராவில் தெலுங்கு தேசம் , பிரஜா ராஜ்யம் , தெலுங்கானா ராஷ்டிரா சமீதி , மகாராஷ்டிராவில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , உத்திரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி , பஞ்சாபில் அகாலிதளம் , ஹரியானாவில் லோக்தளம் , காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி , தேசிய மாநாட்டுக் கட்சி , ஒரிஸாவில் பிஜு ஜனதா தளம் , மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் இப்படி இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் மாநில உணர்வுகளும் , மாநிலக் கட்சிகளும் தோன்றி விட்டன, காரணம் , தேசிய கட்சிகளாக அறியப்பட்டவை தமது மாநில உணர்வுகளை புறக்கணித்தமையே

ன்றைக்கும் தேசிய கட்சிகள் இல்லாததாலேயே தமிழகத்தின் வளர்ச்சி குறைந்ததாக குறைபட்டுக்கொள்ளும் பலரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும் , தேசியக் கட்சிகளையே நம்பிக்கொண்டிருந்த மேலே சொன்ன பல மாநிலங்கள் எப்படி மாநிலக் கட்சிகளுக்கு பின்னால் சென்றன என்பதை.

தையெல்லாம் அன்றே கண்டுணர்ந்த தீர்க்கதரிசிதான் அறிஞர் அண்ணா

து எப்படி சாத்தியமாயிற்று?


திமுகவின் தொண்டர் பலம்.

இன்றைக்கும் அனேக தமிழ் மக்கள் திமுகவின் மேல் மதிப்பும், அவ்வியக்க வளர்ச்சியின் மேல் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணி வேர்களான தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் இன்றும் மிகப்பலர் தங்களது வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் 1972ல் கட்சியை விட்டு வெளியேறிய போது அனேகம் பேர் திமுகவின் கதி அதோகதிதான் என்றார்கள். 1976ல் அதிமுக ஆட்சிக்கட்டிலில் ஏறிய போதிலிருந்து 1989 வரை திமுகழகம் தொடர்ச்சியான தோல்வியையே சந்தித்து வந்திருந்தது……இருந்தும் அக்கட்சியின் தொண்டர் பலம் சரியவே இல்லை. 1976ல் ஆரம்பித்து 1989 வரை தொடர்ந்து தோல்வியையே சந்தித்த பிறகும், 1990களில் வைகோ சற்றேறக்குறைய பாதி மாவட்டச் செயலாளர்களை தன்னகத்தே கொண்டு சென்ற பிறகும் இன்றைக்கும் ஒரு பெரும் இளைஞர் சமுதாயம் திமுகவின் மேல் பற்றுக்கொண்டு பதவிசுகம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் கழகத்தைப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கு?

ந்த ஏன் , எப்படி , எதற்கு என்ற மூன்று கேள்விகளுக்கு விடை கண்டோமானால் திமுகவின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது என்ற மாபெரும் கேள்விக்கு விடை காண வாய்ப்புண்டு. கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு என்ற மூன்று மந்திரங்களால் இன்னமும் கட்டுண்டு கிடக்கின்ற ஒரு இயக்கத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் , அதன் வருங்கால தலைமை எப்படிச் செயல்படும் என்று யாராலுமே அறுதியிட்டுக்கூறவியலாது. வேண்டுமானால் எப்படியிருக்கப்போகிறது என்ற ஒரு அனுமானத்தை மட்டுமே கூறலாம். அத்தகைய அனுமானத்தை முன்னெடுக்க திமுக கடந்து வந்த பாதையை அலசுவது கட்டாயம்.

முதலில் திமுகவின் வரலாற்றை ஒரு கழுகுப்பார்வை பார்த்துவிடலாம்!


திமுகவின் தோற்றமும் வரலாறும்

60 ஆண்டு கால வரலாற்றை ஆறுபக்கங்களில் புரட்டி விட முடியும் என்பவன் வெறுங்கையில் முழம் போடுபவனாகத் தான் இருக்க முடியும். ஆகவே , ஒரு சில குறிப்புகள் மட்டும் இங்கே!

தந்தை பெரியார்

1947ல் சுதந்திரம் பெற்றபிறகு , தேசம் முழுமையும் எவ்வாறு நாட்டை வழிநடத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் சமூகக் கட்டமைப்பு என்ற முள்வேலி சமூகத்தைச் சீரழிக்கிறது , அதனால் சமூகச் சீர்திருத்தமே நாட்டிற்கு முதல் தேவை என்று ஒரு பெரியவர் ஒருவர் வாய்வலியக் கத்திக்கொண்டிருந்தார்.

ப்பெரியவர்தான் பெரியார்!

ந்தை பெரியார் என்னும் கடந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளர்தான் திமுகவின் உந்து சக்தி, திமுகவின் அடித்தளம், திமுகவின் வளர்ச்சிக்கான காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை. தந்தை பெரியார் , கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் இவரைத் தவிர்த்து எழுதப்படும் வரலாறென்பது “தமிழர்களின் சிறு பங்களிப்புமில்லாத இராமாயணம், மஹாபாரதம்” போன்ற இன்னொரு புர்ராணமாகவே இருக்க முடியும், நம்புவதற்குசிதமில்லாத கட்டுக்கதைகளாகவே இருக்க முடியும். பிரிட்டிஷ் காரர்களுக்கு ஜால்ரா அடித்தால் பல பட்டங்களையும் , செல்வங்களையும் பெற முடியும் என்றவொரு சூழலில் வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். ( நன்றி – திரு.ஞானி – அவர்தாம் பெரியார் கட்டுரை). வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மட்டும் பெரியாரை பார்ப்பவர்கள் குறுகிய பார்வையுள்ளவர்களாகவே நான் கருதுகிறேன்……தீண்டாமை எதிர்ப்பு , சுய மரியாதை, வகுப்புவாரியான இட ஒதுக்கீடு, பகுத்தறிவு , பெண்ணுரிமைக் கோட்பாடு இவைகளுக்காக இறுதிவரை போராடியவர் பெரியார்

த்தகைய அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக அவர் கண்டறிந்தது தான் இந்து மதமென்னும் அரக்கன். அம்மதத்துக்கு மூலம் யார்? கடவுள்

க பிரச்சினையின் ஆணி வேரை அறுத்தெரிந்தால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். பால் பொங்குது, பொங்குதுன்னு சொல்லி எரியற கொள்ளியை இழுத்து விட்டுக்கொண்டே இருப்பது முட்டாள்தனம் என்று கண்டறிந்த தீர்க்கதரிசிதான் பெரியார்…அதன் விளைவாகவே அவர் கடவுள் எதிர்ப்பை கையிலெடுத்தார்( நன்றி – அமைதிப்படை வசனம்). ஆனால் இன்றைக்கு அவரை வெறும் நாத்தீகவாதி என்ற பார்வையில் மட்டுமே சுருக்கிவிட்டது இந்தச் சுயநலச் சமூகம். அவரது கருத்துக்களுக்கான தேவையை இன்றைக்கும் மும்பை சம்பவம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது

வரால் தான் திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கழகமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்கான மூல காரணி. நாம் இங்கே இதைச் சொல்வதற்கு காரணம் திமுகவின் அடிப்படை மிக வலுவானது என்பதை எடுத்துரைக்கத்தான்.

அறிஞர் அண்ணா

ம்மாபெரும் மனிதராம் பெரியார் கண்டெடுத்த சீடர்களில் மிக முக்கியமானவர் காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணா…தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர்…...பெரியார் நீதிக் கட்சியிலிருந்தபோது பெரியாரின் கொள்கைகளாலும் , சமூக சீர்திருத்தக் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட அண்ணா நீதிக்கட்சியில் இணைந்து பின் பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.

நாடு சுதந்திரம் பெற்ற இரண்டே ஆண்டுகளில் உருவானதொரு இயக்கம்தான் திமுக……..அக்கட்சி 1957 வரை தேர்தலில் போட்டியிடாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே தன் பணிகளைத் தொடர்ந்தது….1957ல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் அறிஞர் அண்ணா , தான் கண்ட முதல் தேர்தலிலேயே 15 இடங்களில் காங்கிரசை வீழ்த்தி சட்டசபைக்குச் சென்றது கழகம்.1957 க்கு முன் அது சமூக சீர்திருத்த இயக்கம் தான்….இருப்பினும் கட்சியின் வளர்ச்சி இருந்ததற்கு காரணம் ஆட்சியதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாக இல்லாத தலைவர்களும் , தொண்டர்களும் நிரம்பியிருந்தார்கள் என்பதுதான்

1957 ல் முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட திமுகழகம் அடுத்த பத்தே ஆண்டுகளில் 1967ல் ஆட்சியைப் பிடித்தது…. பெரியார் ஊட்டிய சுயமரியாதைக்கொள்கைகளாலும் , தமிழ் மொழிப் பற்றாலும், ஹிந்தி திணிப்பை எதிர்த்த திமுகவின் செயல்பாடுகள் பிடித்தும் அனேக மக்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டார்கள். சினிமா கவர்ச்சியாலோ , பொய் வாக்குறுதிகளாகலோ வாக்குகளை அள்ளிய வெற்றி அல்ல 1967 தேர்தல் வெற்றி.

கலைஞர்

1967ல் மாபெரும் வெற்றியடைந்த கழகம் 1969ல் மாபெரும் இழப்பை சந்தித்தது…..அறிஞர் அண்ணா புற்றுநோயால் உயிரிழந்தார்.…இன்றைக்கு கலைஞருக்கு பின்னால் கழகம் , கலகமாகிவிடும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்பவர்கள் 1969 ஆம் ஆண்டு தமிழகச் சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்க்கவேண்டும்…..மாபெரும் அரசியல் எதிரிகளை புறந்தள்ளிவிட்டு மேலெழுந்த கழகம் , பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் புதிய தலைவனை தேட வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது

ந்தச் சூழலில் கழகத்தை கட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றவர்தான் கலைஞர் மு கருணாநிதி……அதையொட்டி ஏராளமான கதைகள் அவ்வப்போது வருவதுண்டு. அதையெல்லாம் நாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்த ஒரு இயக்கத்திற்கு தலைவராக கருணாநிதி பதவியேற்றதை மட்டுமே பார்க்கிறோம்.

சொல்வன்மை , செயல் வன்மை , பேச்சாற்றல் , எழுத்தாற்றல் என பலவகையில் அவருக்கிணை இன்றும் கூடயாருமே இல்லாததொரு சூழலில் கழகத்துக்கு அவரை விட பொறுத்தமான தலைவர் வேறு யாரும் இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழலாமலில்லை.



[தொடரும்]


அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும்.

Read More......

Friday, December 12, 2008

மூத்த பதிவருங்கெல்லாம் ரிடையராகி தொலைத்தால் என்ன!

· 71 comments

அவ்வப்போது யாராவது எதையாவது கிளப்பிவிட்டு தமிழ்மணத்தை அல்லோகலப் படுத்துவதால் அச்சமயங்களில் திரட்டியின் முகப்பிற்கு வரவே பகீரென்றிருக்கிறது. சாட்டிலோ தனி மடலிலோ திட்டிக் கொள்ளும் கொள்ளும் நேரம்போக முச்சந்திக்கு வந்து முண்டாசு தட்டுவதும் ஒரு கிக்குதான் போலிருக்கு.

இந்த பரஸ்பர டவுசர் அவுத்துக்கொள்ளும் வைபோகத்தில் பங்கு பெறுவோர் தனித்தனியாகவும் கூட்டாகவும் சில வரலாற்று சாகசங்களை அரங்கேற்றி இருப்பார்கள் என கருத இடமிருக்கிறது. அவற்றை விலாவாரியாக விளக்கிவிட்டு அவர்களது குடுமிப்பிடியை தொடர்ந்தால் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கக்கூடும். இவர்களது ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக படித்து அர்த்தம் ஊகித்து தெரிந்த செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் நம்ம தலைக்கா எகிறி விடுகிறது என்பது சோகமான செய்தி.



இருப்பினும் தற்போது சூடாக பரிமாறிக்கொள்ளப்படும் வசவுகளுக்கு மூலகாரணம் புரியாமல் தவிக்கும், தமிழ்மண அரைடிக்கட்டுகளின் சவுகரியத்திற்காக நான் ஊகித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது உசிதமாகப்படுகிறது. இந்த எபிசோடின் துவக்கம் அமெரிக்காவில் துவ்ங்குவதாகக் கொள்ளமுடியும். புதிதாக திரட்டி சமைத்துள்ள அமெரிக்கவாழ் மூத்த பதிவர் ஒருவர் சிங்கையில் உள்ள ஒரு மூத்த கருத்துப் பதிவரைப் பற்றி ஒரு பிலாக்கொகிராபி பதிவை எழுதினார். அந்த சிங்கைபதிவருடன் பன்னெடுங்காலமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ள மும்மூர்த்திப் பதிவர்கள் பின்னூட்டத்தில் அதை விமர்சித்திருந்தனர். அந்த மூன்று மூத்த பதிவர்களில் வெளியே தமிழ்த் திரட்டி நடத்திவரும் பதிவரும் தனது சீரிய பதிவுகளால் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவரும் டெசிபல் குறைவான விமர்சனத்தை வைக்க, ஐரோப்பா பயணத்திலிருக்கும் ஒரு மூத்த மொக்கைப் பதிவர் வழக்கம் போல் சவுண்ட் பைட்டை கூடுதலாக சேர்த்திருந்தார். அமெரிக்கவாழ் மூத்த பதிவர் அபாண்ட குற்றச்சாட்டு ஒன்றை ஏற்கனவே இவர்மீது வைத்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், சிறிது காலமாக நட்புக்கரத்தை நீட்டிபார்த்து ஓய்ந்துபோன சிங்கைப் பதிவர் இந்த அதிரடி விமர்சனத்திற்கு எதிவினையாக பதிவொன்றை வெளியிட்டுவிட மைனஸ் இருபது டிகிரி சுவீடன் தட்பவெட்பத்திலிருந்து ஒரு பிழம்புப் பதிவு ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இந்த பிழம்பை வேடிக்கை பார்க்கச்சென்று முடி பொசுங்கிப் போனவர்களெல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஓட எதிர்த்திசையில் ஒரு சூறாவளி தாக்கத்தொடங்கியது. காண்டின் உச்சத்தை அடைந்து விட்ட கஜேந்திரன் பொறுமை இழந்து சுழன்றடிக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட புயல்தான் அது. தனது சுவாரசியமான பதிவுகளால் பெருமதிப்பைப் பெற்றுள்ள இந்த மூத்தப் பதிவரின் கோபத்திற்கு காரணம் தான் வழக்கமாக ஜோவியலாக காலை வாரிவிடும் இன்னொரு மூத்த பதிவருக்கு மற்றொரு மூத்த பதிவர் இட்ட அநாகரீகமான பின்னூட்டமேயாகும்.

அநாகரீகப் பின்னூட்டம் என்பது வலை உலகின் சாபக்கேடு என்கிற நிலையில் அப்பின்னூட்டமிட்ட அந்த மூத்த பதிவர் நியாயமான காரணத்திற்கு கீழ்த்தரமான பின்னூட்டத்தை இட்டிருக்கக் கூடாது என வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்த மேலும் சில மூத்த பதிவர்கள் இப்போது கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கோலிகுண்டு விளையாட்டில் பேந்தா கட்டி தோற்றுப்போன சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போன்று ஈழத்தமிழருக்கு அறிவுரைகூறிக்கொண்டு திரியும் பலர் தங்களது காமெடிகளால் தமிழ்மணத்தை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர் என்பது யாவர்க்கும் தெரிந்ததே. அந்த காமெடி டிராக்குகளுக்கு ஒரு குரூரத்தன்மையை தொடர்ந்து வழங்கிவரும் பன்மொழி வித்தகரான இந்த மூத்த பதிவருக்கு ஒரு புதிய போர்வாள் கிடைத்திருப்பதாக வேறு சில மூத்த பதிவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஆக, பிழம்பாலும் புயலாலும் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ்மண சிறுபான்மை பதிவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு இடைக்கால போர் நிறுத்தத்திற்கு மூத்த பதிவர்கள் முன்வரவேண்டும். நான்காண்டு காலாமாக நடைபெற்று வரும் இந்த மூன்றாம் தமிழ்மண பாணிபட்டுப்போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என அரசியல்வாதிகள் போல் காமெடி செய்யாமல் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மொத்தமாக எல்லோரும் ரிட்டையராகி ஆளுக்கொரு திரட்டி உருவாக்கி தனி சாம்ராஜ்யம் நடத்துமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு: நியூ ஜெர்சி காட்டுப் பகுதி ஒன்றில் தனது கடைசிகாலத்தில் ஐயின்ஸ்டீன் தங்கிஇருந்து மாஸ் எனர்ஜி கொள்கையையும் குவாண்டம் பிசிக்ஸையும் ஒருமைப் படுத்த முயற்சி செய்து வந்தார். அவர் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் நான் வசிப்பதால் பிழம்புப் பதிவையும் புயல் பதிவையும் ஒருமைப் படுத்த முடியுமா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். விடை கிடைத்தால் மகிழ்ச்சி. அதற்குள் இரண்டுமே கட்டுடைக்கப் பட்டு அதர பழசாகி பின் அவரவர் வேலையைப் பார்க்கச்சென்று விடுவார்களேயானால் அதுவும் மகிழ்ச்சியே.

[அமேரிக்கா.. இளா.. சிங்கப்பூர்... கோவி... ஓசை... குழலி... ரவி... சுவீடன்... லக்கி... காண்டு... டோண்டு... பெயரிலி... ஐன்ஸ்டீன்... அடச்சே]

Read More......

Monday, December 8, 2008

ச்சும்மா ட்டமாஷ்-75: முரளிகண்ணன் - என்றென்றைக்குமான மாற்றத்தை தந்த படங்கள்

· 32 comments

மிழ் சினிமா தொடர்பான பதிவுகள் என்றாலே வலையுலகில் நம் நினைவுக்கு வருபவர் பதிவர் முரளி கண்ணன். செறிவான செய்திகள் நிரம்பிய பதிவுகளை தொடர்ச்சியாக தந்து வரும் முரளி அவர்கள் 'ச்சும்மா ட்டமாஷ் - 75' -காக சிறப்பு பதிவு ஒன்றை அளித்துள்ளார். வலைப்பூ வாசகர்களுக்காக அப்பதிவை படங்களுடன் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தமிழ் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டுவந்த படங்கள்

மிழ்சினிமாவின் பயணம் 1931 ல் காளிதாஸ் படம் மூலம் ஒரு சிற்றாராய் தொடங்கி பல சிற்றோடைகளின் சங்கமத்தால் நதியாய் மாறி நம் மனத்தோட்டத்தில் பல பூக்களை பூக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நதியில் பல சாயக் கழிவுகள், சாக்கடைகள் கலந்தாலும் தொடர்ந்து புது வெள்ளம் பாய்ச்சும் சிற்றோடைகள், காட்டாறுகளால் தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நதிக்கு கணக்கிலடங்கா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், பாடல் ஆசிரியர்கள், தொழில்னுட்ப வல்லுனர்கள் புதுவெள்ளம் பாய்ச்சியுள்ளார்கள். காட்டாறாய் வந்து இந்த திரைநதியை புதுப்பித்த சிலபடங்களைப் பற்றிய பார்வையே இது. இந்த படங்களால்தான் தமிழ்சினிமாவில் சில புதிய போக்குகள் தோன்றின.


தியாக பூமி - 1939

தற்க்கு முன் வந்த பெரும்பாலான படங்கள் ராமாயானம்,மகாபாரதம் போன்ற காப்பியங்களையும், ஏனைய புராணக் கதைகளையுமே களமாக கொண்டிருந்தன. நாடகங்கள், மற்ற


தியாக பூமி படத்தில் ஒரு காட்சி
மொழிகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகியவையும் இங்கு தயாரிக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளைப் பேசிய படங்கள் மிக குறைவே. கல்கி கிருஷ்ன மூர்த்தி எழுதிய தியாக பூமி நாவலை அடிப்படையாக கொண்டு கே சுப்ரமனியம் இயக்கிய இந்த படம் பெண்ணுரிமையையும் தீண்டாமைக் கொடுமையையும் பேசியது. திரையில் இதையும் பேசலாம் எனும் போக்கை துவக்கிய படம் இதுவே. வெள்ளையர் ஆட்சியால் பல சிக்கல்களை கடந்து இந்த படம் மக்கள் மனதில் இடம் பெற்றது.



பராசக்தி – 1952

பெரும்பாலும் புராணக்கதைகளே வந்துகொண்டிருந்ததால் கதா பாத்திரங்களின் பேச்சுமொழி பிராண நாதா டைப்பிலேயே இருந்து வந்தது. அத்தி பூத்தாற்போல சில சமூக கருத்துள்ள படங்கள் வந்தாலும் அதில் பேச்சு மொழி வடமொழி கலந்தே இருந்தது. இந்த படம் அந்த வழக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. கருணாநிதியின் வசனம் சிவாஜி கணேசனால் உச்சரிக்கப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வசனங்களை புத்தகமாக போட்டு விற்கலாம் என கருணாநிதி சொன்ன போது அதை தயாரிப்பாளர்கள் கேட்கவில்லை.


பராசக்தி படப்பிடிப்பின் போது டைரக்டர்
கிருஷ்ணன்- பஞ்சு, மற்றும் சக நடிகர்களுடன்
சிவாஜி கணேசன்.
ஆனால் ஒருவர் இதை தியேட்டரில் கவனித்து எழுதி புத்தகமாக போட விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. அதனால் அடுத்துவந்த மனோகரா படத்தயாரிப்பாளர் இந்த தவறை செய்யவில்லை. ஒரு காலத்தால் அழியாத கலைஞனை மட்டும் இந்த படம் கொடுக்கவில்லை, நாற்பது ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் இந்த படம் இருந்திருக்கிறது. இந்த படத்தின் வருகைக்குப் பின்னரே சமூக கருத்துள்ள படங்கள் அதிகரித்தன. வடமொழி பயன்பாடு வசனத்தில் குறைந்தது.



கல்யாணப் பரிசு 1959

ராசக்தி படத்தின் மூலம் வசன மொழி மாறினாலும் உச்சரிப்பு தொனி பெருமளவு மாறவில்லை. நடிகர்கள் இயல்பாக வசனம் பேசவில்லை. அதீத உணர்ச்சிமயமாகவே இருக்கும். ஸ்ரீதரின் வருகை இதை பெருமளவு மாற்றியது. திரையில் பாத்திரங்களை


தங்கவேல், ஜெமினி,
சரோஜாதேவி

இயக்குனர்
ஸ்ரீதர்
இயல்பாக பேச வைத்தார். இவர் எடுத்துக் கொண்ட களங்களும் இதற்க்கு வாய்ப்பாய் அமைந்தன. புதிய திரைக்கதை உத்திகள், பாடல்கள் படமாக்குவதில் நளினம், மெருகேற்றப்பட்ட நகைச்சுவை காட்சிகள் என தமிழ்திரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் இதை உறுதிசெய்தன. திரைக்கதை என்ற பதத்தை முதலில் உருவாக்கியவர் இவர் என்று கூட சொல்வார்கள்.








பாமா விஜயம் 1967 / எதிர்நீச்சல் 1968

தை பாலசந்தரின் பங்களிப்பு என்றும் சொல்லலாம். நடுத்தர வர்க்கத்தின் ஆசைகள், அபிலாஷைகள், சோகங்கள் அனைத்தையும் திரையில் கொண்டு வந்தார் இவர்.


பாலச்சந்தரின்
'பாமா விஜயம்'

முத்துராமன், நாகேஷ்,
ஜெயந்தி
இதற்க்கு முன் நடுத்தர வாழ்க்கையை இந்த அளவுக்கு பிரதிபலித்த படங்கள் குறைவே. இவரது நாடகங்களே பின்னாளில் திரைப்படமாக மாறியதால், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வாங்க முடிந்தது. ஆனால் நாடகப்பாணியிலேயே அது அமைந்திருந்தது இவரின் குரை என்று சொல்லலாம். பல பரீட்சார்த்த கதை முயற்சிகளுக்கு இவரது வருகை காரணமாய் அமைந்தது.






பதினாறு வயதினிலே – 1977

துவரை கிராமப் படங்கள் வந்திருந்தாலும் அவை படப் பிடிப்பு அரங்கங்களிலேயே படமாக்கப்பட்டன. எம்ஜியார் நடித்த விவசாயி என்னும் படத்திற்க்கு கூட அரங்கில் நாற்று நட்டுதான் படம் பிடித்தார்கள். பெரும்பாலான படங்களில் பேக் டிராப்பாக திரையில் கிராம வீடுகளை வரைந்துகூட படமெடுத்தார்கள். இப்படத்திற்க்கு பின்னரே கேமரா உண்மையான கிராமத்துக்குள் நுழைந்தது. அதுவரை நேட்டிவிட்டி என்ற பரிமாணம்


16 வயதினிலே - ரஜினி, கமல்
இல்லாமல் இருந்த தமிழ்திரைக்கு அதை அளித்தவர் பாரதிராஜா. எம்ஜியார் இந்த ஆண்டில் தன் திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு முதலமைச்சரானார். அவரது கடைசி படமான [அவசர போலிஸ் – பாக்யராஜ் சேர்க்காமல்] 1978ல் வெளிவந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு கூட இந்த ஆண்டிலேயே முடிவடைந்தது. போட்டி இல்லாத பந்தயத்தில் ஓட யாருக்கு மனமிருக்கும்?. சிவாஜி கூட இதன்பின் 20 ஆண்டுகள் துறையில் இருந்தாலும் முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற மிக சில படங்களிலேயே தன் இருப்பை உணர்த்தினார். இதற்க்கு அவருக்கு ஏற்ற கதைகளை அவரால் உருவாக்க முடியாததே காரணம் என்றும் சொல்லலாம். ஆனால் இதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பக்கூடிய பொடென்சியல் உள்ள இருவர் இந்த படத்தின் மூலம் எழுச்சி பெற்றனர். மற்றோரு முக்கிய வரவு இளையராஜா. 1976 ல் அன்னக்கிளி மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இப்படத்தின் மூலமே தன் சாம்ராஜ்யத்தை நிறுவினார் என்று சொல்லலாம். இதன் பின்னரே நாட்டுப்புற இசை, மேற்கத்திய சாயலுள்ள மெல்லிசை போன்றவை தமிழ் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இப்படத்திற்க்கு கிடைத்த வெற்றி மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றோர் இயல்பான கதைக்களத்துடன் படம் எடுக்க வாய்ப்பாய் அமைந்தது.




மௌனராகம் – 1986

தன்முன்னர் பகல் நிலவு, இதய கோயில் ஆகிய படங்களை தமிழில் தந்திருந்தாலும் இப்படத்திற்க்கு பின்னரே மணிரத்னம் கவனம் பெற்றார். இவரின் வருகை பிண்னனி இசை,ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகிய முக்கிய துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். கச்சேரிகளில் பாடகர்கள்,


மௌனராகம் - ரேவதி, கார்த்திக்
பக்கவாத்தியக்காரர்களுக்கு தனிஆவர்த்தன வாய்ப்பு வழங்கி அவர்களை சிறப்பிப்பது போல இவர் டெக்னீஷியன்களுக்கு உரிய ஸ்கோப்பை கொடுத்தார் எனலாம். ஒளிப்பதிவு இயக்குனருக்கு உரிய அங்கீகாரம் இவர் வருகைக்கு பின்னாலேயே சரியாக கிடைத்தது எனலாம். கலை இயக்குனர் என்பவர் இவர் வருகைக்கு முன் இவ்வளவு கவனம் பெற்றதில்லை. கதாபாத்திரங்களுக்கு ஏற்ற உடைகள், அவர்கள் வசதிக்கேற்ப வீடுகள், காலகட்டத்திற்க்கு ஏற்ப பிராப்பர்டிகள் என மெனக்கெட்டு இவர் கவனித்து செய்தது தமிழ் திரையில் அதுவரை இல்லாதது. நாயகன் படத்தில் இவை உச்சம் பெற்றது எனலாம்.




ரோஜா - 1992 – ஜெண்டில்மேன் 1993

ப்படங்களின் வருகை தமிழ் பட மார்க்கெட்டை விரிய வைத்தது எனலாம். இப்படங்களின் இசை [ஏ ஆர் ரகுமான்] வட இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இதன்பின்னாலேயே மற்ற ஏரியாக்களை குறிவைத்தும் [ஷங்கர்-தெலுங்கு, மணிரத்னம்- தேசம்].


ரோஜா-அரவிந்த சாமி, மதுபாலா
படம் எடுக்கும் போக்கு தொடங்கியது. துள்ளலிசை படங்களுக்கு அவசியமாயிற்று. பிரபுதேவாவின் நடன எழுச்சி நாயகர்களை வியர்வை சிந்த வைத்தது. கிராபிக்ஸ் தொழில்னுட்பம் தேவையோ, இல்லையோ பயன்படுத்தப் படவேண்டும் என்ற போக்கு துவங்கியது. முக்கியமாக பிரமாண்டப் படங்களின் அணிவகுப்பும் துவங்கியது. கதை முக்கியமில்லை, திரைக்கதை,

ஜெண்டில்மேன் - படப்பிடிப்பில்
இயக்குனர் ஷங்கர், மதுபாலா, அர்ஜூன்
தொழில்நுட்பத்தால் படத்தை சரிகட்டிவிடலாம் என்ற எண்ணமும் படைப்பாளிகளிடம் ஏற்பட்டது. சில நல்ல படங்களும் வந்தன.




சேது - 1999

யல்பான கதையும், சொல்லும் விதமும் மிக முக்கியம் என்னும் போக்கை இந்தப்படம் கொண்டுவந்தது. இதன்பின் வந்த அழகி,ஆட்டோகிராப்,பருத்திவீரன் போன்ற படங்களை இதற்க்கு உதாரணமாய் கூறலாம். அதுவரை கதாபாத்திரத்துக்காக


சேது - விக்ரம்
உருவத்தை மாற்றுவது அத்தி பூத்தாற் போலவே தமிழில் இருந்தது. இப்படம் அதில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது எனலாம். இப்பட வெற்றியால் விக்ரம்,சூரியா,ஜீவா ஆகியோர் மெத்தட் ஆக்டிங் முறைக்கு மாறினார்கள். மற்ற சக நாயகர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வை கொடுத்தது எனலாம்.




ப்பொழுது இந்த ஆண்டில் வந்த படங்களில் இரண்டு படங்களை மாற்றம் கொண்டு வரத்தக்க படங்களாக பார்க்கலாம். அவை தசாவதாரம், சுப்ரமணியபுரம். இதில் எந்த படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, சில ஆண்டுகளில் தெரியவரும்.

சாவதாரம் வந்தபின் இந்த ஆறு மாதங்களில் வந்த எந்த ஆக்‌ஷன் கமர்சியல் படமும் வெற்றிபெறவில்லை. இந்த படம் கமர்சியல் சினிமாவின் தரத்தை உயர்த்தியதாக சொல்லலாம். நான் இந்த படத்தை சென்னையின் மூன்று வெவ்வேறு இடங்களில் [சத்யம்- ரூ120, உதயம் – ரூ50, வேளச்சேரி ராஜலட்சுமி – ரூ 10] பார்த்தேன். அந்த தியேட்டர்களின் கேட்ச்மெண்ட் ஏரியா மக்களில் பெரும்பாலும் மீண்டும் அத்திரையரங்குகளுக்கே செல்வார்கள். அவர்கள் சத்யம்,ஏகன் ஆகிய படங்களுக்கு செல்லும் போதும் அதே கட்டணம் தான். ஆனால் அவர்கள் மனதில் தசாவதாரம் ஏற்படுத்திய


ஆஸ்கார் ரவி
சகோதரருடன்
ஜாக்கி ஜான்

சுப்ரமணியபுரம்
படத்தில்
ஒரு காட்சி
எண்டெர்டைன்மெண்ட் கோஷண்டை இப்படங்கள் ஏற்படுத்த முடியாததால் [படம் சுமார் என்றாலும் – எதிர்பார்ப்புக்கும் அதிகமான தோல்வி] மக்கள் இவற்றை நிராகரித்தனர். சுப்ரமணியபுரம் போல இப்பொழுது வந்துள்ள படம் பூ. இப்படங்களுக்கு கிடைக்கும் கவனிப்பு,தாக்கம் என்ன என்பது சில ஆண்டுகளுக்குப் பின்னரே நம்மால் உணரமுடியும்.



இந்த கட்டுரையை வெளியிட வாய்ப்பளித்த மோகன் கந்தசாமிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்
ஆர் முரளிகண்ணன்

Read More......


கிடங்கு