ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலா அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது.
திமுகவின் அடுத்த தலைமை
இது கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது
ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது?
1. திமுகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்ததை தெளிவுற மக்கள் விளங்கும் வண்ணம் சொல்லும் திறன் படைத்த படித்த அரசியல்வாதி – இத்தகைய ஒருவர் திமுகவிற்கு தலைமைப் பொறுப்பேற்பதில் தவறென்ன இருக்கிறது?
2. சில மாதங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசீர் பூட்டோ இறந்த போது ஒரு உயிலை எழுதி வைத்துவிட்ட இறந்தார்….தான் இறந்த பிறகு தனது மகன் தான் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்று. கட்சியை தனது குடும்பச்சொத்தாக கருதும் பலர் முன்னிலையில் இன்றைக்கும் கட்சிக்காக அடிமட்டத்தொண்டனாகவே இருக்க விருப்பம் என்று சொல்லும் ஒருவர் தலைவராக வருவதில் என்ன தவறிருக்க முடியும்?
3. தகுதியும் , திறமையும் படைத்த ஒருவர் திமுக தலைவரின் பிள்ளை என்ற ஒரே காரணத்தால் மட்டுமே தலைமையேற்கக் கூடாதா என்ன?
ஆகவே, மு.க.ஸ்டாலின் அவர்களே அடுத்த திமுக தலைமையாக இருக்க வசதியும் , வாய்ப்பும் இருக்கிறது. அத்தலைமைப்பொறுப்பிற்கு தகுதியான நபராகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார் என்றே தமிழகத்தின் அடையாளமான திமுகவின் தொண்டர்கள் கருதுகிறார்கள். அவரைப் பற்றி தெளிந்த ஒரு பார்வைக்கு வர நாம் எமஜென்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அது மிசா காலம், இரணடாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்த மாபெறும் சோதனை. இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி தனது சுயநலத்துகாக மிசாவையும், எமர்ஜென்சியையும் பயன்படுத்தி காட்டு தர்பார் நடத்தியதொரு காலம்.
எதற்கு எமர்ஜென்சி?
1971ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திருமதி இந்திராகாந்தி அத்தேர்தலில் வென்றார். பிரதமரின் தனிச்செயலாளராக இருந்த யஷ்பால் கபூர் என்ற அரசு ஊழியரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தியதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் பிரிவு 123 விதி 7ன் படி சட்டவிரோதமாக செயல்பட்டதாகச் சொல்லி 1975 ஜூன் 12ம் நாள் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் தண்டனையாக இந்திராகாந்தி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இந்தியாவின் எந்தத் தொகுதியிலும் போட்டியிடக்கூடாது என்றும் சொன்னது. உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார் இந்திராகாந்தி. உச்சநீதிமன்றத்தில் அப்போது விடுமுறைக்கால நீதிபதியாயிருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்திரா காந்தி மக்களவை உறுப்பினராய் நீடிக்கலாமெனவும் ஆனால் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவோ வாக்களிக்கவோ உறுப்பினர் என்பதற்கான ஊதியம் பெறவோ உரிமையில்லை எனவும் 25.6.1975 மாலை 3 மணிக்கு தீர்ப்பளித்தார்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இந்திரா பதவி விலக வேண்டும் என்று நாடெங்கும் எதிர்ப்பலை கிளம்பியது. ஜூன் 25 ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணி நாடு தழுவிய சத்தியாக்கிரக இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாய் சித்தரித்து தீர்ப்பு வெளியான ஒரு சில மணிகளிலேயே நெருக்கடி நிலையை அறிவிக்கத் துணிந்தார் இந்திரா. இதற்காக அமைச்சரவையைக் கூட கூட்டாமல், தன் கைப்பொம்மையாயும்- ஆகவே குடியரசுத் தலைவராயுமிருந்த ஃபக்ருதின் அலி அகமதிடம் 25 ம்தேதி பின்னிரவில் கையொப்பம் பெற்று 1975 ஜூன் 26 அதிகாலை முதல் இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்தார் இந்திரா. சட்டத்திற்குட்பட்டு தான் இனியும் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக இந்திராவும் அவரது செல்லமகன் சஞ்சய் காந்தியும் தேர்ந்தெடுத்த இழிவான- எதேச்சதிகார பாதைதான் எமர்ஜென்சி. ( நன்றி – திரு.ஆதவன் தீட்சண்யா , கீற்று.காம் )
கொள்கைக்காக சிறை செல்லத் தயங்காத ஸ்டாலின்
மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டார்கள். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் எழும்பிய எதிர்ப்புக்குரலை அடக்கிய இந்திராகாந்தி தமிழகத்தில் மட்டும் ஒரு வலுவான குரல் ஒலிப்பதை நசுக்க முடியவில்லை……அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். ஆம் கலைஞரின் குரல்…!! திமுகவின் மீது கடுங்கோபம் கொண்ட இந்திராகாந்தி மிசாவை ஏவிவிட்டார். உச்சகட்டமாக, 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். மொத்த தமிழகமுமே கலைஞர் கைது செய்யப்படுவார் என்றே நினைத்தது. ஆனால் கலைஞருக்குப் பதில் இந்திராகாந்தி அம்மையார் கைது செய்தது கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலினை
24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. திமுகவின் தலைவர்களுள் ஒருவரான சிட்டி பாபு கொல்லப்பட்டார்….மு.க.ஸ்டாலினும் இவ்வாறான சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டார்.
கொண்ட கொள்கைக்காக சிறை செல்லவும் தயங்காதவர் தான் மு.க.ஸ்டாலின்.
கைதிற்கு அஞ்சாத ஸ்டாலின்
இதே ஜெயலலிதா அம்மையார் 2001ல் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞரை எந்தவொரு மூகாந்திரமுமில்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது. அதற்கான காரணமாகவும் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும் போது கட்டிய மேம்பாலங்களில் ஊழல் செய்தததாகத் தான். அப்போதும் கூட, காவலர்கள் தன்னைக் கைது செய்யும் வரை காத்திருக்காமல், தன்னைக் கைது செய்யும் படி தானாகவே காவல் நிலையப் படியேறியவர்தான் மு.க.ஸ்டாலின் , தன் மீது வழக்குப்போட்டவுடனே ஆஸ்பத்திரியில் ஹார்ட் அட்டாக் என்று படுத்துக் கொள்ளும் அனேக அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
பதவியை நீட்டித்துக்கொள்வதற்காக சட்டத்தையே மாற்றியமைத்த பர்மாவின் ஜூண்டா கதை நமக்குத் தெரியும், பாகிஸ்தானின் முஷாரப் கதையும் நாமறிந்ததுதான், இந்தோனேசியாவின் சுகார்தோ கதையும் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் ஒருவரின் பதவியை பறிப்பதற்காகவே தனிச்சட்டம் போட்டது நமது தமிழ்நாட்டில்தான்…அத்தகைய சட்டம் யாரைக் குறிபார்த்து பாய்ந்தது? மு.க.ஸ்டாலினைக் குறிபார்த்துத்தான். அவர் சென்னை மேயராக இருந்த போது கராத்தே தியாகராஜனை வைத்து நடந்த கூத்துக்கள் உலகறிந்ததே!
அப்படி அடக்குமுறைகளை வென்று எழுந்து நிற்பவர்தான் மு.க.ஸ்டாலின். இப்படி சோதனைகளையே சாதனைகளாக்கி ஒட்டுமொத்த திமுகவினரின் வாழ்த்துக்களையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின்.
அரசியல் நாகரிகத்தின் அடையாளம் மு.க.ஸ்டாலின்
சென்னை மேயராக இருந்த போதும் சரி, இப்போது உள்ளாட்சித் துறை மந்திரியாக இருக்கும் போது சரி, தனது அளவிலான பணிகளை எந்தவித விமர்சனமும் இல்லாமல், எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் அமைதியாகச் செய்து வருகிறார். இவரிடம் ஒரு நாலாந்தர அரசியல் வாதிகளைப் போல் வெற்றுச் சவடால்களைக் காணவே முடியாது. ஒண்டிக்கு ஒண்டி வர்றியா போன்ற கேவலமான அரசியல் கூத்துக்களைக் காண முடியாது. தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை அவர் இன்று வரை யார் மீதும் வைத்ததில்லை. மரியாதையற்ற வார்த்தைகளை உபயோகித்து எந்த ஒரு தலைவரையும் அவர் இன்று வரை விளித்தது கிடையாது. அதைப்பற்றி அவரே சொல்வதைக் கேளுங்களேன்
நிருபர்களின் கேள்வி
சாதாரண சமாச்சாரங்களுக்குக் கூட மேடையில் துண்டை இழுத்துவிட்டுக்கொண்டு சவால் விடுவதும், மாற்றுக்கட்சியினரை வறுத்தெடுப்பதுமாக இருக்கும் தமிழக அரசியலில் நீங்கள் மட்டும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதோ, சவால் விடுவதோ இல்லையே?
மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்
எங்களிடம் சாதனைப் பட்டியல் இருக்கிறது. மேடையில் அதைச் சொல்கிறேன்.அது இல்லாதவர்கள் வெற்றுச்சவால்களை நம்பித்தான் பேச வேண்டியிருக்கிறது. நான் ஐ.ஐ.டியில் ஆய்வு மாணவன்.
ஒரு தேர்ந்த தலைவனுக்கு அடக்கத்தை விட வேறென்ன பெரிய குணம் வேண்டிக் கிடக்கிறது? மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி, மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை கட்சி வேறுபாடு கடந்து மக்கள் ஒரு நல்ல செயல் வீரராகவே கருதுகிறார்கள். அவர்தான் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்.
ஆகவே, திமுகவின் எதிர்காலத்திலும் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை , திமுகவின் எதிர்கால தலைமையிலும் எந்தவிதக் குழப்பமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தனது திசையில், தனது பயணத்தில் எப்போதும் போன்றே வெற்றி தோல்விகளுடன் பயணிக்கும் என்று சொல்லி இந்த அளவில் முடித்துக்கொள்கிறேன்
இந்த நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட கட்டுரையை வாசித்தவர்களுக்கு நன்றிகள். வாசிக்காதவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தோழமையுடன்
மதிபாலா
ஒரு முக்கிய குறிப்பு.
இயல்பிலேயே திமுகவின் அனுதாபியான நான் முதலில் தெளிவு படுத்த வேண்டியது, இந்தக் கட்டுரையை நடுநிலைப்பார்வையிலிருந்து எழுத முயற்சிக்கிறேன்…சில சமயங்களில் திமுகழகம் பற்றிய பார்வைக்கு சில விடயங்களை சொல்கையில் தவிர்க்க முடியாமல் சார்பு நிலை வந்துவிட வாய்ப்புண்டு. அதை கூடியவரை தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அது வெற்றியடைந்ததா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
28 comments:
நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்!
ஸ்டாலின் அவர்களைப் பற்றி எழுதினதுல, அவர், ஜெயலலிதா முதல்வரா இருந்த பொழுது, வரிசையில் நின்று, நிதி அளித்த பக்குவம் குறிப்பிடப்பட்டு இருந்தா, இன்னும் நல்லா இருக்கும். இது ஒரு சிறு விசயமா, நிறையப் பேருக்குத் தோணலாம். எவ்வள்வு சகிப்புத்தன்மை இருந்திருக்கணும், மனப்பக்குவம் இருந்திருக்கும்ங்றதுக்கு இது ஒரு நிகழ்வு.
//ஒரு முக்கிய குறிப்பு.இயல்பிலேயே திமுகவின் அனுதாபியான நான் முதலில் தெளிவு படுத்த வேண்டியது, இந்தக் கட்டுரையை நடுநிலைப்பார்வையிலிருந்து எழுத முயற்சிக்கிறேன்…சில சமயங்களில் திமுகழகம் பற்றிய பார்வைக்கு சில விடயங்களை சொல்கையில் தவிர்க்க முடியாமல் சார்பு நிலை வந்துவிட வாய்ப்புண்டு. அதை கூடியவரை தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அது வெற்றியடைந்ததா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.//
மிக அருமையாய் எழுதியுள்ளீர்கள்.
பாரட்டுக்கள்.
நெல்லை அரசு
பல நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான அலசல்...
அருமையான பதிவு....மீண்டும் இது போன்று........
அருமையான பதிவு தோழா வாழ்த்துக்கள்
நன்று!
மதிபாலா உங்களது முயற்சிக்கு ஒரு பெரிய்ய பாராட்டுக்கள். தகவல்களினடிப்படையில் பாருக்கும் போது பலருக்கு இந்தக் கட்டுரை பல தகவல்களை அளித்து விட்டுச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. வாழ்த்துக்கள்.
/ஒரு முக்கிய குறிப்பு.இயல்பிலேயே திமுகவின் அனுதாபியான நான் முதலில் தெளிவு படுத்த வேண்டியது, இந்தக் கட்டுரையை நடுநிலைப்பார்வையிலிருந்து எழுத முயற்சிக்கிறேன்…சில சமயங்களில் திமுகழகம் பற்றிய பார்வைக்கு சில விடயங்களை சொல்கையில் தவிர்க்க முடியாமல் சார்பு நிலை வந்துவிட வாய்ப்புண்டு. அதை கூடியவரை தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அது வெற்றியடைந்ததா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.//
இதை நீங்களே சொல்லி இருப்பதால் இதை நான் பேச வேண்டியதாய் போயிற்று. இல்லையெனில் முதல் பத்தியுடனேயே முடித்து விட்டு சென்றிருந்திருக்கலாம். என்னுடைய பார்வையில் உங்களை அறியாமலோ அல்லது உங்களால் அறியப்பட்டோ சற்றே சார்பு நிலையில்தான் இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது என்பதை கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது எனக்கு பல இடங்களில் ஏற்பட்டது. (இதைக் குற்றம் என்ற முறையில் சொல்ல வில்லை. விமர்சனம் என்ற முறையில் சொல்கிறேன்)
அதாவது ஒரு சிலவற்றிற்கு காரணங்களாக நீங்கள் சொல்லி இருப்பவை: ஸ்டாலின் நான் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விருப்பம் என்று சொல்லி இருப்பதையும் ஒரு காரணமாக சேர்த்திருப்பது. ஈரோட்டில் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணகர்த்தாவாய் இருக்கும் என்.கே.பி ராஜா ஒரு மொக்கை பேட்டியை ஒரு காரணமாயும் நீங்கள் சொல்லி இருப்பது ஆகியவற்றைப் பற்றி சொல்கிறேன். இது போன்ற அறிக்கைகளையும், தேன் தடவப்பட்ட வார்த்தைகள் உள்ள பேட்டியையும் மட்டும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ள வேண்டு மென்றால் ஜெயா நியூஸ்ல அம்மா மக்களுக்கு வேண்டு கோள் வெப்பாங்க பாருங்க... அன்னை தெரசா உள்ளிட்ட கருணையின் மொத்த உருவமாய் தம்மை உருவகப் படுத்தி அவர் மேற்கொள்ளும் நாடகங்களையும் அதிமுகவினர் ஆதாரமாய் கூறும் போது நான்(ம்) நம்ப வேண்டுமாய் இருக்கும். எனக்கு என்னமோ இரண்டுமே நகைப்பிற்குரியதே.
நிற்க. வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு தயாநிதிக்கும், கனிமொழி, அழகிரி, மற்றும் அழகிரி மகள் ஆகியோருக்கு மிகக் கண்டிப்பாய் பொருந்துமே ஒழிய ஸ்டாலினுக்கு பொருந்தாது என்பதில் வெகு நிச்சயமாய் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. உங்களுடைய பதிலிலும் வாரிசு அரசியல் என்ற ஒன்றிற்கு ஸ்டாலின் என்ற ஒற்றை பரிமாண பதில்தான் கிடைத்ததே தவிர மற்றோர் குறித்தான பதில் கிடைக்க வில்லை.
1967 - 69 கால கட்டங்களில் கலைஞர் திடீரென்று முண்ணனிக்கு வந்தன் பிண்ணனியை ஒரேயடியாய் நீங்கள் தவிர்த்து விட்டது...//சினிமாவில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடிய ஜெயலலிதாவும்// என்பது போன்ற மறைமுக வார்த்தைப் பிரயோகங்கள்... இது போன்ற சில சின்ன சின்ன விஷயங்கள் உங்களது இந்தக் கட்டுரை சற்றே சார்பு நிலையுடயதாய்தான் இருக்கிறது என்ற நினைக்கத் தூண்டி இருக்கிறது.
மிக முக்கியமாய் இதைத் தாண்டி நான் சொல்ல நினைப்பது ஒன்று. அதிமுக குறித்து இது போன்றதோர் கடந்த கால வரலாற்றுடனும், சாதனைகளும் வைத்து எழுத முயற்சி செய்தால் இந்தளவுக்கு தமிழக வரலாற்றை புரட்டிப் போட்டது போன்ற தொடர் சம்பவங்களை அடுக்க முடியுமா என்பது பெரும் கேள்விக் குறியே. அதை விட முக்கியம் உங்கள் அளவுக்கு கூட நடு நிலையாக(கொஞ்சமேனும்) எழுத அதிமுக கழகத் தோழர்களுக்கு மனம் வருமா என்பது பெரும்ம்ம்ம் சந்தேகமே.
திமுக கட்சியின் ஜனநாயகமாக நான் நினைப்பது இதைத்தான். நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
http://blog.nandhaonline.com
அருமை....
தோழர் மதிபாலா, நேரமின்மையால் இரவு வந்து விரிவாக பின்னூட்டம் இடுகிறேன்.
\\திமுகவின் அடுத்த தலைமை//
உடைந்த துண்டுகளில் பெரிய துண்டுக்கு தயாநிதி மாறன்.
ஒரு சிறிய துண்டுக்கு `அஞ்சா நெஞ்சன்' ?? அழகிரி.
சிந்திய சிதறல்களுக்கு மு.க.ஸ்டாலின்.
மற்றும் சில சிதறல்கள் A.D.M.K., M.D.M.K., கூட பொய் ஒட்டிக்கொள்ளும்.
சில உதிரிகள் அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கும்.
இதைத்தான் தமிழக மக்கள் காணப்போகிறார்கள்.
//Vanangamudyy said...
\\திமுகவின் அடுத்த தலைமை//
உடைந்த துண்டுகளில் பெரிய துண்டுக்கு தயாநிதி மாறன்.
ஜஸ்டிக் கட்சி தொடங்கி அது தி.க வாய் மலர்ந்து பின் திமுக வாய் பெரும் விருட்சமாய் உள்ளதற்கு அடிபடைக் காரணமே,பார்பனர் ஆதிகத்தை அடியோடு அழித்து ஆதிக்க மற்ற சமுதாயத்தை அமைபதுதான் என்பது உலகறிந்த உண்மை.
அதில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக வுக்கு தலைவி ஜெயலலிதா
இவர் ஐயங்கார் வகுப்பை சேர்ந்தவர்.
அடுத்து திமுகவின் ஒரு பகுதிக்கும் தயாநிதி தலைவர் என்றால் ( தயாநிதியின் தாயாரும்,மனைவியும் பார்பனர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்பர்)
50-60 ஆண்டுகால பகுத்தறிவுப் புரட்சியின் முடிவு இப்படியா?
இதைத் தெரிந்துதான் மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள் அவ்வளவு பிடிவாதமாய் இருந்தார் போலிருக்கிறது.
வணங்காமுடியின் ஆசையை நிராசையாய் ஆக்குவது உடன் பிறப்புகளின் கையில்
இளஞ்செழியன் ஐயா அவர்களே இதில் என் ஆசை எங்கிருந்து வந்தது..
நடக்கும் நிகழ்வுகளை கொண்டு இப்படித்தான் இருக்கும் நீரோட்டம் என்று ஒரு அனுமானம் அவ்வளவே.
//மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டார்கள். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் எழும்பிய எதிர்ப்புக்குரலை அடக்கிய இந்திராகாந்தி தமிழகத்தில் மட்டும் ஒரு வலுவான குரல் ஒலிப்பதை நசுக்க முடியவில்லை……அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். ஆம் கலைஞரின் குரல்…!! திமுகவின் மீது கடுங்கோபம் கொண்ட இந்திராகாந்தி மிசாவை ஏவிவிட்டார். உச்சகட்டமாக, 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். மொத்த தமிழகமுமே கலைஞர் கைது செய்யப்படுவார் என்றே நினைத்தது. ஆனால் கலைஞருக்குப் பதில் இந்திராகாந்தி அம்மையார் கைது செய்தது கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலினை//
ஸ்டாலின் கைது செய்யபட்டதற்க்கு காரணம்
அன்று முதல்வரின் மகன் என்ற ஆணவத்தில் சென்னையில் பல இடங்களில் இளமை வேகத்தில் செய்த பிரச்சனைகள்
பல அதிகாரிகளின் பிள்ளைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடியது
ஸ்டாலின் பாத்திமாவை துரத்தியது கடத்தியது எல்லாம் பாத்திமா பாவுவே குமுதம் ஏட்டில் பேட்டியாக கொடுத்தது 89 ஆண்டில் வந்தது.
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யபட்டது அவரால் சமூகத்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தான்.
வணக்கம்! நான் இங்க ஒன்னு ரெண்டு விபரங்களப் பதிய ஆசைப் படுகிறேன்.
ஒரு முதல்வரின் மகன், சமூக விரோதச் செயல்ல ஈடுபட்டு, அது ரொம்பவும் வரம்பு மீறினதா இருந்தா, உள்ள போட வேண்டியது அவசியம். அதுவும், சமூக விரோதச் செயலுக்கான சட்டப் பிரிவுல. அவசர காலச் சட்டத்துல அல்ல.
உண்மையிலேயே, அப்பா, மகன் ரெண்டு பேரையும் உள்ள தள்ளத்தான் எல்லா ஏற்பாடும், காரணம், அவங்களோட அரசியல் பலத்தை முடக்க. கலைஞர் தப்பியதற்குக் காரணம், காரோட்டிக் கண்ணப்பன் என்று எல்லோராலும் புகழப்படுகிற, கொங்குநாட்டுச் சிங்கம் மு.கண்ணப்பன் அவர்களே. அவரோட சாதுர்யம், துணிவு, அவரைக் கொண்டு சென்றது. ஏன், வட நாட்டுத் தலைவர்களை எல்லாம், தமிழகம் தன்னகத்தே வைத்துக் காப்பாற்றிய எரிச்சலில், கிடைத்தவனையாவது உள்ளே போடுவோமெனத் தள்ளப்பட்டவரே இன்றைய உள்ளாட்சி அமைச்சர். இன்னும் வட நாட்டுத் தலைவர்களுக்கு தமிழகத்தின் மீது ஒரு மரியாதை இருக்கிறது என்றால், அன்று அவர்களுக்கு இங்கு கிடைத்த அடைக்கலமே காரணம்.
// கலைஞர் தப்பியதற்குக் காரணம், காரோட்டிக் கண்ணப்பன் என்று எல்லோராலும் புகழப்படுகிற, கொங்குநாட்டுச் சிங்கம் மு.கண்ணப்பன் அவர்களே.//
அதன் நினைவாகவே, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டு, அழகூட்டப்பட்டதும் வரலாறுதான்!
///ஸ்டாலின் அவர்களைப் பற்றி எழுதினதுல, அவர், ஜெயலலிதா முதல்வரா இருந்த பொழுது, வரிசையில் நின்று, நிதி அளித்த பக்குவம் குறிப்பிடப்பட்டு இருந்தா, இன்னும் நல்லா இருக்கும். இது ஒரு சிறு விசயமா, நிறையப் பேருக்குத் தோணலாம். எவ்வள்வு சகிப்புத்தன்மை இருந்திருக்கணும், மனப்பக்குவம் இருந்திருக்கும்ங்றதுக்கு இது ஒரு நிகழ்வு///
ஈழத்தமிழர் உதவி நிதி சேகரிப்பில் அதிமுக நடந்து கொண்ட விதத்தை நினைத்துப் பார்த்தால்!!!!????
பழைமைபேசி,
மதிபாலாவின் கட்டுரை போலவே உங்கள் பின்னூட்டமும் பல விஷயங்களை அறியத்தருகின்றது
பின்னூட்ட ஆதரவு தந்த அனைவருக்கும் என்சார்பிலும் மதிபாலா சார்பிலும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
//திமுகவின் அடுத்த தலைமை
இது கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது
ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது?//
மதிபாலவின் கேள்விக்கு நல்ல பதில்
27-12-2008 அன்று நடைபெற உள்ள சிறப்பு செயற்குழுவில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் , பொதுச் செயலாளாராய் பதவியேற்க உள்ளாராம்
தலமைப் பதவிக்கான வழியில் ஸ்டாலின்
வாழ்த்துவோம்
///
27-12-2008 அன்று நடைபெற உள்ள சிறப்பு செயற்குழுவில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் , பொதுச் செயலாளாராய் பதவியேற்க உள்ளாராம்
தலமைப் பதவிக்கான வழியில் ஸ்டாலின்
வாழ்த்துவோம்////
Thanks Ilanchezhian sir.
நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்!
ஸ்டாலின் அவர்களைப் பற்றி எழுதினதுல, அவர், ஜெயலலிதா முதல்வரா இருந்த பொழுது, வரிசையில் நின்று, நிதி அளித்த பக்குவம் குறிப்பிடப்பட்டு இருந்தா, இன்னும் நல்லா இருக்கும். இது ஒரு சிறு விசயமா, நிறையப் பேருக்குத் தோணலாம். எவ்வள்வு சகிப்புத்தன்மை இருந்திருக்கணும், மனப்பக்குவம் இருந்திருக்கும்ங்றதுக்கு இது ஒரு நிகழ்வு.
//
நன்றிகள் பழமைபேசி ,
உண்மைதான் , ஸ்டாலினின் மனப்பக்குவமும் குறிப்பிட அவசியமான ஒன்று.
மிக அருமையாய் எழுதியுள்ளீர்கள்.
பாரட்டுக்கள்.
நெல்லை அரசு
------------------------
பல நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான அலசல்...
சரவணகுமரன்
-----------------------------
Dr. சாரதி said...
அருமையான பதிவு....மீண்டும் இது போன்று........
--------------------------------
முகமது பாருக் said...
அருமையான பதிவு தோழா வாழ்த்துக்கள்
--------------------------------
அருமையான பதிவு தோழா வாழ்த்துக்கள்
December 18, 2008 12:44 AM
Blogger Pot"tea" kadai said...
நன்று!
-----------------------------
நந்தா said...
மதிபாலா உங்களது முயற்சிக்கு ஒரு பெரிய்ய பாராட்டுக்கள்.
------------------------
அன்பு நண்பர்கள்
நெல்லை அரசு
சரவணகுமரன்
டாக்டர் சாரதி
பொட் "டீ" கடை
முகமது பாரூக்
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பாராட்டுக்களனைத்தும் என்னை ஊக்கப்படுத்தும் ஒரு அபின் என்ற வகையில் உடம்பிற்கு கெடுதலில்லாத இந்த போதை மருந்தை மேலும் மேலும் அள்ளித்தர வேண்டுகிறேன்.
தோழமையுடன்
மதிபாலா
இதை நீங்களே சொல்லி இருப்பதால் இதை நான் பேச வேண்டியதாய் போயிற்று. இல்லையெனில் முதல் பத்தியுடனேயே முடித்து விட்டு சென்றிருந்திருக்கலாம். என்னுடைய பார்வையில் உங்களை அறியாமலோ அல்லது உங்களால் அறியப்பட்டோ சற்றே சார்பு நிலையில்தான் இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது என்பதை கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது எனக்கு பல இடங்களில் ஏற்பட்டது. (இதைக் குற்றம் என்ற முறையில் சொல்ல வில்லை. விமர்சனம் என்ற முறையில் சொல்கிறேன்)
//
உங்கள் ஆழமான பார்வைக்கு மனமார்ந்த நன்றிகள் திரு.நந்தா ,
விமர்சனங்களைப் புறக்கணித்து விட்டோ , புறந்தள்ளி விட்டோ போக என்றுமே நினைப்பவனல்லன் நான். மாறாக விமர்சனங்களே நமது படைப்புக்களை பட்டை தீட்ட வல்லவை என்று திண்ணமாக நம்புகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட செய்திகள் மட்டுமல்ல , வேறு சில பத்திகளும் கூட இந்தக் கட்டுரையின் நடுநிலையைப் பற்றிய கேள்வியை எனக்குள்ளேயே எழுப்பின. ஆனால் அவற்றை மாற்றிய போது உள்ளடக்கம் மாறுவதான தோற்றத்தை உருவாக்கிற்று. அதனால்தான் அந்த கடைசி டிஸ்கியையே போட வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகினேன்.
விமர்சனங்களுக்கு மிகுந்த நன்றிகள்
அருமை....
தோழர் மதிபாலா, நேரமின்மையால் இரவு வந்து விரிவாக பின்னூட்டம் இடுகிறேன்.
நன்றிகள் புதுகை அப்துல்லா அண்ணாச்சி!!
December 18, 2008 4:24 AM
Blogger Vanangamudyy said...
\\திமுகவின் அடுத்த தலைமை//
உடைந்த துண்டுகளில் பெரிய துண்டுக்கு தயாநிதி மாறன்.
ஒரு சிறிய துண்டுக்கு `அஞ்சா நெஞ்சன்' ?? அழகிரி.
சிந்திய சிதறல்களுக்கு மு.க.ஸ்டாலின்.
மற்றும் சில சிதறல்கள் A.D.M.K., M.D.M.K., கூட பொய் ஒட்டிக்கொள்ளும்.
சில உதிரிகள் அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கும்.
இதைத்தான் தமிழக மக்கள் காணப்போகிறார்கள்.//
நண்பர் வணங்காமுடி,
அதிகாலைக் கனவு பலிக்குமென்ற மூடத்தனத்தைப் போலவே உங்கள் கணிப்புகளும் இருக்கின்றன.
பகுத்தறிவுக்காரர்களிடம் அது செல்லுபடியாகாது அண்ணாச்சி.
ஸ்டாலின் கைது செய்யபட்டதற்க்கு காரணம்
அன்று முதல்வரின் மகன் என்ற ஆணவத்தில் சென்னையில் பல இடங்களில் இளமை வேகத்தில் செய்த பிரச்சனைகள்
பல அதிகாரிகளின் பிள்ளைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடியது
ஸ்டாலின் பாத்திமாவை துரத்தியது கடத்தியது எல்லாம் பாத்திமா பாவுவே குமுதம் ஏட்டில் பேட்டியாக கொடுத்தது 89 ஆண்டில் வந்தது.
//
89ல் நான் எட்டு வயது சிறுவனாக இருந்தேன். அதனால் எனக்குத் தெரியாது என்பது தப்பித்துக்கொள்ளும் முறை. ஆனாலும் எம்.ஜி.ஆர் பற்றியும் , ஜெயல்லிதா பற்றியும் கண்ட வதந்திகள போலவே இதையும் பார்க்கிறேன்.
தவிர்த்து அண்ணா சொன்ன ஒரு வாக்கியத்தை நினைவு படுத்துகிறேன்.
நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் ஒன்றும் படிதாண்டாப் பத்தினியுமல்ல.
///
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யபட்டது அவரால் சமூகத்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தான்.
///
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி , நான் படித்ததிலேயே சூப்பர் ஜோக் இதுதான். நன்றிகள்
அதன் நினைவாகவே, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டு, அழகூட்டப்பட்டதும் வரலாறுதான்!//
நன்றிகள் பழமைபேசி , திரு.கண்ணப்பன் நின்று செயித்து மந்திரியானது நான் சார்ந்த தொகுதியான பல்லடம் தொகுதி என்பதையும் நான் பதிவு செய்து கொள்கிறேன்.
எங்கள் வீட்டோரம் ஆரம்பிக்கப்பட்ட உதயசூரியன் நற்பணி மன்றத்திற்கான இடத்தை தன் சொந்தப்பணம் போட்டு வாங்கித்தந்தவரும் , தனது சொந்தச் செலவில் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா நடத்தியதும் எங்கள் வீட்டில் மதிய உணவருந்தியதும் மறக்க முடியாதவை.
அவர் மேல் உள்ள பாசத்தினால் அந்த உதயசூரியன் நற்பணி மன்றம் கலைக்கப்பட்டு மதிமுக மன்றமாக மாற்றப்பட்டது. ஆனால் அவர் மேல் உள்ள பாசம் கால்ப்போக்கில் வைகோவின் செயல்பாடுகளால் மறைந்துவிட்டது.
பின்னர் அவ்வியக்கத்தில் சுணக்கமேற்பட்டு , கலைஞர் / பேராசிரியர் பாசறையாக காட்சியளிக்கிறதிப்போது!!!
என்னதான் திமுகவைவிட்டு வெளியே வந்தாலும் , அதிமுகவுடன் இணைந்திருப்பதென்பது முன்னாள் திமுகவினருக்குக் கூட பொருந்தாத விடயம் என்பதை எனக்கு உணர்த்தியது அந்நிகழ்வு.
மதிபாலவின் கேள்விக்கு நல்ல பதில்
27-12-2008 அன்று நடைபெற உள்ள சிறப்பு செயற்குழுவில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் , பொதுச் செயலாளாராய் பதவியேற்க உள்ளாராம்
தலமைப் பதவிக்கான வழியில் ஸ்டாலின்
வாழ்த்துவோம்//
நன்றிகள் திரு.இளஞ்செழியன்
நல்லது நடந்தால் சரிதான். நாமும் வாழ்த்துகிறோம்.
ஒரு முக்கிய குறிப்பு.இயல்பிலேயே திமுகவின் அனுதாபியான நான் முதலில் தெளிவு படுத்த வேண்டியது, இந்தக் கட்டுரையை நடுநிலைப்பார்வையிலிருந்து எழுத முயற்சிக்கிறேன்//
இயல்பிலே நான் திமுக வின் அனுதாபி இல்லையென்றாலும், உங்கள் கட்டுரையை ரசித்தேன் (அதில் சில கருத்து வேறுபாடிருந்தாலும்)
அற்புதமான பதிவு.. நடுநிலையானது..
கருத்து வடிவாக்கம் அற்புதம்..
ஸ்டாலின் பற்றிய கருத்துகள் மிகத் தெளிவு..
கலைஞர் கருணாநிதி இன் சாதனைகளும் யாரும் இதுவரை தமிழ் சமுதாயத்திற்கு செய்யாதவையே.. கலைஞர் கருணாநிதி என்ற பெரிய ஆளுமையால், இந்த உயர்ந்த மனிதர் (ஸ்டாலின்) அதிகம் தென் படவில்லை..
அவருடைய வாய்ப்புகள் வரும் பொது வெகுவாக அறியப்படுவார், மெச்சப்படுவார்..
(மிசா காலம் - பாத்திமா பாபு சம்பந்தபடுதுவது தவறான வாதம், ஒருவேளை உண்மையகாயீருந்தாலும் சம்மந்தமில்லாத கால கட்டம், - மன்னிக்கவும் - எழுதியவரின் (Rajaசெழியன்) அரைகுறை தெளிவு - இவ் விடயத்தில்)..
அறிவுமணி -.. (now in Portugal)
Post a Comment