Saturday, December 6, 2008

ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி பாகம் - 2

·

'ச்சும்மா ட்டமாஷ் - 75' -க்காக ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் அளித்த பேட்டியின் முதல் பாகம் சென்ற பதிவில் வெளியானது. தொடர்ந்து இது இரண்டாவது பாகம்.

மீப காலங்களில் திமுக -வினர் கூட விமர்சனங்களை பொறுக்க மாட்டாதவர்களாக உள்ளனர். அவர்கள் (ஒருவேளை)நினைப்பதுபோல் திமுக இல்லாவிட்டால் திராவிட சிந்தனையாளர்களும் நடுநிலையாளர்களும் அரசியல் அகதிகளா என்ன?

நீங்கள் சொல்லியிருப்பதுபோல் நான் உணரவில்லை. விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்; அவ்வளவே. ஒரு உதாரணத்திற்கு இப்படிப் பார்ப்போம் : அதிமுக ஆட்சியிலிருந்தால் இப்போது கலைஞரைச் செய்வதைப்போல் ஜெயலலித்தாவை கண்டமேனிக்கு விமர்சிக்க முடியுமா?

நடுநிலை என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நடுநிலையான கருத்து என எதுவுமே இருக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்; கட்சி சாராதவர்கள் என வேண்டுமானால் சொல்லலாம்.

லைப்பூ உலகம் வழங்கும் சுதந்திரம் அனைத்தையும் தமிழ்மணத்தால் வழங்க முடியாததற்கு என்ன காரணம்? தமிழ்மண பயனர்களா? தமிழ்ச்சமூகமா? நண்பர் பைத்தியக்காரன் சொன்னதுபோல், இலவச சேவை தரும் தமிழ்மண நிர்வாகிகளின் புரவல மனப்பான்மையா?

சிம்பிள் : பாண்டிச்சேரிப் பெண் பதிவர்கள் :))

நம்முடையது ஒருமாதிரியான கட்டுப்பெட்டித்தனமான, அதே சமயம் அதை மீறவும் உள்ளுக்குள் விரும்பும் ஒரு சமூகம் என்பதாய் நான் கணித்திருக்கிறேன்.

இன்னொன்று, இணையத்தில் சில இடங்களில் பொறுப்பற்ற முறையில் சுதந்திரம் (கட்டற்ற சுதந்திரம்!) பாவிக்கப்படுகிறது. இதுவும் ஆபத்தானதே.

ட்டற்ற சுதந்திரம் விளைவிக்க வாய்ப்புள்ள ஆபத்து ஒன்றை உதாரணம் கூறி விளக்க முடியுமா?

சிலருக்கு இணையம் தரும் முகமற்ற தன்மை மிரட்டல்களை விட முடிகிறது. என்னுடைய சாரு நிவேதிதாவும் ஆபாசமும் என்ற இடுகை அப்படிப்பட்ட ஒரு வலைப்பூவைப் பார்த்த எரிச்சலில் எழுதியதுதான். மேலும், பலரும் அறிந்திருக்கும் போலிப் பிரச்சனை கட்டற்ற சுதந்திரத்தினால் வந்ததே.

லகெங்கும் பெண்டாட்டி என்பது இன்றும் வேலைக்கார வர்க்கம் தானே?



துரதிர்ஷ்டவசமாக, ஆம்!




துணைக்கண்ட அரசியலில் அதிகார உச்சிக்கு சென்றதும் பெண்கள் கிடைத்தற்கரியது கிடைத்தது போல் அதிகாரத்தை கையாள்வதேன்?

து மிகப் பெரிய உளவியல் ஆய்விற்குரியது.

துணைக்கண்ட அரசியலில், ஒப்பீட்டளவில் ஆண்களைவிட, அரசியல் பதவியடையும் பெண்கள் சர்வாதிகாரிகளாகவே மாறிவிடுகிறார்கள். பெனாசீர் புட்டோ, மாயாவதி, இந்திரா காந்தியிலிருந்து நம்மூர் ஜெயலலிதாவரை நிறைய உதாரணங்கள். ஷீலா தீட்சித், வசுந்தரா ராஜே சிந்தியா போன்றவர்கள் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருப்பதால் தப்பிப்போனார்களோ என்னவோ!

இத்தனைகாலம் அடக்கிவைக்கப் பட்டிருந்ததால் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாகக்கூட இது இருக்கலாமோ?

பெண்சீன்டலை ஆணாதிக்கமாகத்தான் கொள்ளமுடியுமா? வேறு பரிமாணங்கள் அதற்கு உண்டா?


நிச்சயமாக சீண்டல் காதலின், காமத்தின் ஓர் அங்கம்தான். ஆனால் யாரைச் சீண்டுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம் :)



ழுத்தாளர் எழுதினாலும் காமக்கதைகள் சரோஜாதேவிக்கதைகள் போலவே இருப்பது ஏன்? உங்கள் கதைகள் காமத்தை தூண்டவே இல்லையே!

ங்கள் கேள்வியில் முரண் உள்ளது :)

சரோஜாதேவிக் கதைகள் உணர்ச்சிகளைக் கிளறிவிடுவது. சுயமைதுனத்திற்கு மட்டுமே பயன்படுவது. அல்லது உடலுறவின்போது படித்ததை நினைவுக்கு கொண்டுவந்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்ளப் பயன்படுவது.

ஒரு வசதிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறேன் : action based கதைகளை எழுதினால் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். ஆனால் என் நோக்கம் அதுவல்ல.

இன்னொன்று, குதப் புணர்ச்சி பற்றி ஒரு கதை எழுதிவைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகப் பதிவிடவில்லை. அப்படியே எழுதினால் அடிக்க வருவார்கள்! மாற்றவும் கைஓடவில்லை :)

என்னுடைய கதைகளுக்கு வந்த சில அனானிப் பின்னூட்டங்களும் சில பதிவர்களின் எதிர்ப்பையும் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது! என்னுடைய கதைகள் தோல்வி என விமர்சிப்பது வேறு, வெறும் ஆபாசம் எனப் புறந்தள்ளுவது வேறல்லவா?

எல்ஃபிரெட் ஜெலனிக்கின் Piano Teacher, ழார் பத்தேலின் Story of the Eye மாதிரியான ஒரு கதையை தமிழில் வெகுஜன ஊடகத்தில்கூட வேண்டாம், சிறுபத்திரிகை ஊடகத்திலோ அல்லது மாற்று ஊடகம் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ் இணையப் பக்கங்களிலோ ஏன் எழுத முடிவதில்லை என யோசித்துப் பார்க்கலாம்.

ங்கள் காமக்கதைகளில் இருக்கும் இலக்கியச் சுவை உங்கள் ஏனைய படைப்புகளிலும் அப்படியே கிடைக்கிறது. இந்நிலையில் காமக்கதைகளை ஒரு வெரைட்டிக்காகத்தான் எழுதினீர்களா? வேறு என்ன காரணம்?

முன்பே ஒர் இடத்தில் சொல்லியது போல காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் திட்டமன்றி வேறில்லை. திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. உதா :

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை

அந்தச் சண்டையில

கிழிஞ்சுதுடா

ஸ்ரீதேவி புண்டை

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். இதை நீங்கள் நாயகன் என்றால் சண்டை போடும் வீரர்களாகவும் நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம். இந்தப் பாட்டை விளக்கங்களுடன் எழுதினால் கட்டுரையாகிவிடும். என் வேலை அதுவல்ல. வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால் வரும் எதிர்ப்பு எத்தன்மையாய் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்மாதிரியான சில சங்கடங்கள் :(

"அர்ப்பணிப்பு ஆசை இல்லாத பெண்காமமும் இரக்க உணர்வு இல்லாத ஆண் காமமும் வெறும் உடற்காரணிகளின் கைவரிசையே! அவை உங்களுக்கு விதிக்கப்பட்ட காமுறும் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது, அர்பணிப்பும் இரக்கமுமே காதலாக கொள்ளப்படும்" -என்கிறார் எங்கள் பேராசிரியர்(இந்தியாவில்). இவ்விரு உணர்வுகளும் உங்கள் காமக்கதைகளில் தென்படவில்லையே? (காலச்சுவடோ அல்லது தீராநதியிலோ நான் படித்த ஒரு சிறுகதை பேராசிரியரின் இவ்வரிகளை ஞாபகப்படுத்தியது!)

ன்னங்க இப்படில்லாம் கேக்கறீங்க :( அர்ப்பணிப்பு வேணுமாம் பெண்களுக்கு, இரக்க உணர்வு வேணுமாம் ஆண்களுக்கு.. இதை உடைத்துப் பார்த்தால் வரும் அர்த்தம் பெண்கள் அடிபணிய வேண்டும், ஆண் பெண்களைக் கண்டு இரக்க உணர்வோடு கலவி செய்ய வேண்டும். காலம் காலமாக சொல்லப்பட்டு வருவதுதானே இதெல்லாம்... ஏன், பெண்ணோ ஆணோ காமத்திற்காக - உடல் தேவைகளுக்காக - மட்டுமே ஓக்கக் கூடாதா?
இம்மாதிரியான ஆணாதிக்க வெறி பிடித்த பேராசிரியர்கள் இருந்தால் விளங்கிடும் :(

"ஜனரஞ்சக எழுத்து வாசகர்களை இலக்கிய வாசிப்புக்கு நகர்த்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சியாக உங்களது சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுக பதிவுகளை கொள்ளலாமா? அவ்வகைப்பதிவுகள் தொடருமா?

ணையத்தில் புழங்குபவர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாவிதமான எழுத்துகளும் தெரிந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பிடித்த வகைமாதிரி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள். அவ்வளவே.

எனவே இக்காரியம் வெகுஜனப் பத்திரிகைகள் (அல்லது அதில் எழுதும் எழுத்தாளர்கள்) செய்யவேண்டியது.

நான் எழுத நினைத்தது சிறுபத்திரிகை வாசகர்களும் பரவலாக அறியாத பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகள்.

"அடிப்படை ஆதாரம் ஏதும் தரமுடியாத ஒரு கேள்வி. தமிழிஷ் திரட்டியில் உங்களுக்கு பங்கு இருக்கிறதா?

மிழ்மணம் போலவே அதிலும் இணைந்திருக்கிறேன் :)எனக்கு கணினி அறிவே மிகக்குறைவு. ஒரு படம் இணைக்கக்கூட இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதில் திரட்டியா.. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், அதெல்லாம் ஒன்றுமில்லை.


'ச்சும்மா ட்டமாஷ்' -வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?


கோவியார், தமிழ் சசி, லக்கி பேட்டிகள் என்று வித்தியாசமான விஷயங்களுடன் இருக்கிறது. தள்போட்சுத்ரி படித்த ஞாபகமிருக்கிறது. ச்சும்மா ட்டமாஷூக்கென்றாலும், சீரியஸான விஷயங்களும் இருக்கின்றன :)


[முற்றும்]

31 comments:

நசரேயன் said...
December 6, 2008 at 8:51 PM  

நான் தான் முதல்ல

TBCD said...
December 6, 2008 at 11:14 PM  

தமிழிசு திரட்டி பின்னால் ஏதோ அரசியல் இருப்பதாக உணருகிறீர்களா மோகன்...???

ஃஃஃஃஃ

தமிழிஷ் என்று "ஷ்" சேர்த்து தமிழை இழிவு செய்வதுப் போல் எவருமே உணரவில்லையா....

முரளிகண்ணன் said...
December 6, 2008 at 11:26 PM  

மிக அருமையா இருக்கிறது. கேல்விகளும் பதில்களும்

வால்பையன் said...
December 6, 2008 at 11:55 PM  

// அதிமுக ஆட்சியிலிருந்தால் இப்போது கலைஞரைச் செய்வதைப்போல் ஜெயலலித்தாவை கண்டமேனிக்கு விமர்சிக்க முடியுமா?//

மறுக்கிறேன், ஜெயலலிதா காலத்தில் இந்த அளவு ஊடகங்கள் வளர்ச்சி பெற வில்லை என்பதே உண்மை.

ஒரு மொழியை மட்டும் தெரிந்து கொண்டு என் மொழி தான் சிறந்தது என்று சொலவது போல் உள்ளது உங்கள் வாதம்.

மூத்த பதிவர்கள் வெகு சிலரே,
அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் விமர்சனம் செய்கிறோமா, இல்லையா பாருங்கள்

வால்பையன் said...
December 7, 2008 at 12:00 AM  

//ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை

அந்தச் சண்டையில

கிழிஞ்சுதுடா

ஸ்ரீதேவி புண்டை

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங் //

முதல் இரண்டு வரிகளையும்,கடைசிவரியையும் படிக்க ரொம்ப சிரமப்பட்டேன். இது தான் மொழி விளையாட்டோ

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
December 7, 2008 at 1:36 AM  

வால்பையன், இன்னொரு மொழியும் தெரிந்துகொண்டுதான் என் மொழி சிறந்ததென்று சொல்கிறேன்.அதே போல் ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்துகொண்டுதான் கலைஞர் (ஒப்பீட்டளவில்) சிறந்தவர் என்கிறேன் :)

வால்பையன் said...
December 7, 2008 at 1:47 AM  

//ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்துகொண்டுதான் கலைஞர் (ஒப்பீட்டளவில்) சிறந்தவர் என்கிறேன் :) //

இது பொதுபுத்தி முறை தானே!
இரண்டு பேருமே கொள்கை முறையில் மாறுபட்டவர்கள்.

ஜெயலலிதா அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்றால் கருணாநிதி மட்டும் என்ன செய்கிறாராம்.

தற்போதய அரசியல் ஸ்டண்டுகள் உங்களுக்கு சலிப்பை தரவில்லையா!

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு யாரும் வருவது போல் தெரியவில்லை.

எத்தனை கோடி கிடைக்கும் என்பது தான் குறியாக இருக்கிறது.

குமுத்தில் வந்த ஸ்சுஸ் பேங்க் கட்டுரை படித்தீர்களா?

எல்லோருமே திருட்டு பசங்க தான்
(ஜெயலலிதா உட்பட)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
December 7, 2008 at 2:22 AM  

நடைமுறை அரசியல் சார்ந்து என்ன சாத்தியம் எனப் பார்க்கவேண்டும். இப்போது திமுகவை விட்டால் அதிமுக என்ற பேயாட்சிதான். இது குழந்தைக்குக்கூடத் தெரியுமே... இந்நிலையில் ஒப்பீட்டளவில் திமுகவே சிறந்தது என்பது என் எண்ணம்.

i do not want to take a very 'holistic' view that all politicians are corrupt! இதுதான் மீடியாக்கள் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தி :)

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 10:00 AM  

//நான் தான் முதல்ல//
:-)))

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 10:08 AM  

/////தமிழிசு திரட்டி பின்னால் ஏதோ அரசியல் இருப்பதாக உணருகிறீர்களா மோகன்...???/////

இணையம் தவிர்த்து ஏனைய ஊடகங்கள் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் உணர்கிறேன். ஆகவே இணைய திரட்டிகளின் நிர்வாகங்கள் பற்றி தொடர்ந்து அறிந்த கொள்ள நான் விழைவதாலேயே அக்கேள்வி கேட்டேன். பிற ஊடகங்களில் தென்படும் அரசியல் இதிலும் வந்துவிடக்கூடாது என சுந்தர் போலவே நானும் நினைக்கிறேன்.

///தமிழிஷ் என்று "ஷ்" சேர்த்து தமிழை இழிவு செய்வதுப் போல் எவருமே உணரவில்லையா....////

நான் உணர்கிறேன். ஆனால் இந்த தவறை நானும் அவ்வப்போது செய்து வந்துள்ளதால் என்னால் கைகாட்ட இப்போது முடியவில்லை, :-)))

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 10:08 AM  

///மிக அருமையா இருக்கிறது. கேல்விகளும் பதில்களும்////

வருகைக்கு மிக்க நன்றி முரளிகண்ணன்

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 10:10 AM  

/////முதல் இரண்டு வரிகளையும்,கடைசிவரியையும் படிக்க ரொம்ப சிரமப்பட்டேன்./////

அப்படியென்றால் ஏனைய வரிகளை சிரமமில்லாமல் படித்தீர்களா?

:-)))

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 10:11 AM  

////இப்போது திமுகவை விட்டால் அதிமுக என்ற பேயாட்சிதான். இது குழந்தைக்குக்கூடத் தெரியுமே...////

nach...:-)))

Indian said...
December 7, 2008 at 1:02 PM  

நல்ல கேள்விகள் மற்றும் அதற்கு சொல்லப்பட்ட பதில்களும்.

Anonymous said...
December 7, 2008 at 1:32 PM  

unparliamentary வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாமே.

மற்றபடி நன்றாக இருக்கிறது.

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 3:44 PM  

///நல்ல கேள்விகள் மற்றும் அதற்கு சொல்லப்பட்ட பதில்களும்.///
நன்றி இந்தியன்

மோகன் கந்தசாமி said...
December 7, 2008 at 3:45 PM  

////unparliamentary வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாமே.///

:-)))

///மற்றபடி நன்றாக இருக்கிறது.///
நன்றி

Sridhar Narayanan said...
December 7, 2008 at 7:17 PM  

பேட்டி நன்றாக இருக்கிறது.

//எழுத்தாளர் எழுதினாலும் காமக்கதைகள் சரோஜாதேவிக்கதைகள் போலவே இருப்பது ஏன்? உங்கள் கதைகள் காமத்தை தூண்டவே இல்லையே! //

கேள்வியாளர் ‘மொழி விளையாட்டின்’ ஆதர்ச வாசகர் போலத் தெரிகிறது :-)

இது பெருமளவில் சப்ஜெக்டிவான விஷயம்தானே. நேரடியான செயலைக் காண்பிக்கும் நீலப் படஙகளுக்கும், வெண்பனியின் பின்னனியில் முழு உடையில் முத்தமிடும் காதலர் காட்சியும் அவரவர் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி மாறுபட்டதுதானே. (எனக்கு எல்லாமே ஓக்கேதான்:)) )

சுந்தர் விளையாட்டாய் எழுதிப் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அது எந்த மாதிரி விளையாட்டை வாசகரின் மனதில் விளையாடியது என்பதை வலைப்பக்கத்தை வைத்து கணிக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இது புத்தகமாக வந்து பெருவாரியான வாசகர்களால் வாசிக்கப்பட்டால் சரியான மதிப்பீடு தெரியும்.

சுந்தர்! சீக்கிரமாக புத்தகம் வெளியிடுங்கள்.

//வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால்//

செய்யலாம்தான். ஆனால் ஒரே ஒரு சங்கடம் இந்த வலைப்பதிவுகள் எல்லாவித வயதினருக்கும் பொதுவாக இருப்பது. பள்ளியில் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து இந்தப் பாட்டை பாடிக் களிப்புறலாம். ஆனால் பள்ளியின் பிரேயர் ஹாலில் எல்லாரும் கூடியிருக்க இந்தப் பாட்டை பாட முடியாது. பாடியிருக்கவும் மாட்டார்கள். இது தமிழ்ச் சமூகம் / இந்தியச் சமூகம் என்றெல்லாம் குறுக்க முடியாது. எந்த இடங்களிலுமே பொதுவெளியில் சில கட்டுபாடுகளுடந்தான் மொழி பரிமாற்றம் செய்கிறார்கள். வலைப்பதிவு என்பது பொதுவெளியாக ஆகிவிடுவதால் சில சுயக் கட்டுபாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. Again its subjective. :-)

//எனவே இக்காரியம் வெகுஜனப் பத்திரிகைகள் (அல்லது அதில் எழுதும் எழுத்தாளர்கள்) செய்யவேண்டியது. //

அப்ப நீங்க அந்த லிஸ்ட்ல இல்லையா? :-) ஓ! நீங்களும் ஆ.வி.க்கு வந்திட்டீங்களோ இப்ப.

சிறு பத்திரிகைகள் பற்றிய பல தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. சமீபத்தில் நான் ரசித்தது ‘நவீன விருட்சம்’ல் வந்த நகுலனின் கடிதம் - நில், வா, போ. நல்லதொரு அனுபவம்.

//ச்சும்மா ட்டமாஷூக்கென்றாலும், சீரியஸான விஷயங்களும் இருக்கின்றன :) //

உண்மை. தசாவதாரக் கதை போல் ட்டமாஷுக்காக பல சீரியஸ் முயற்சிகள் செய்யப்படுகிறது. மோகனுக்கு வாழ்த்துகள்.

Anonymous said...
December 7, 2008 at 8:41 PM  

//பள்ளியில் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து இந்தப் பாட்டை பாடிக் களிப்புறலாம். ஆனால் பள்ளியின் பிரேயர் ஹாலில் எல்லாரும் கூடியிருக்க இந்தப் பாட்டை பாட முடியாது. பாடியிருக்கவும் மாட்டார்கள். இது தமிழ்ச் சமூகம் / இந்தியச் சமூகம் என்றெல்லாம் குறுக்க முடியாது. எந்த இடங்களிலுமே பொதுவெளியில் சில கட்டுபாடுகளுடந்தான் மொழி பரிமாற்றம் செய்கிறார்கள். வலைப்பதிவு என்பது பொதுவெளியாக ஆகிவிடுவதால் சில சுயக் கட்டுபாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. Again its subjective. :-)//

Sariyaana Karuthu!

சின்னப் பையன் said...
December 7, 2008 at 9:11 PM  

அருமையான கேள்விகளும், பதில்களும்.

வாழ்த்துக்கள் மோகன்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
December 8, 2008 at 1:30 AM  

ஸ்ரீதர், அந்தப் பாட்டை நிச்சயம் prayer hallலோ அல்லது ஆசிரியர்கள் முன்னிலோ பாடமாட்டார்கள்தான். நான் எங்கே அப்படிச் சொன்னேன்? வேறொரு கேள்விக்குப் பதிலான தமிழ்ச் சமூகம் பற்றிய என் கணிப்பை இதில் இணைத்து தமிழ்ச் சமூகம் இந்தியச் சமூகம் என்றெல்லாம் சொல்ல முடியாது என்றால், நான் என்ன செய்ய :)

ஆறாவது படிக்கும் மாணவன் பாடும் பாட்டை இணையத்தில் கதையில் ஏன் ஏற்ற முடிவதில்லை என்பதை யோசித்துப் பார்க்கலாம் (இப்போது தமிழ்ச் சமூகம் பற்றிய விமர்சனம் வந்துவிடும்!).

Sridhar Narayanan said...
December 8, 2008 at 1:58 AM  

//ஆறாவது படிக்கும் மாணவன் பாடும் பாட்டை இணையத்தில் கதையில் ஏன் ஏற்ற முடிவதில்லை என்பதை யோசித்துப் பார்க்கலாம் (இப்போது தமிழ்ச் சமூகம் பற்றிய விமர்சனம் வந்துவிடும்!).//

தல,

நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன். பொதுவெளியில் சில சுயகட்டுபாடுகள் அல்லது அறங்கள் தேவைப்படுகின்றனதாக கூட இருக்கலாம். மற்றபடி நான் படிப்பதில் பிரச்சினையேயில்லை. மேலும் சமூக சூழல் இறுக்கம் தளர்ந்து போகவும் செய்யலாம்.

அக்னி பார்வை said...
December 8, 2008 at 4:46 AM  

அசத்தலான கேள்விகள் , லவக்மான் பதில்கள்..அருமை மோகன்

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:25 AM  

ஸ்ரீதர்,

///கேள்வியாளர் ‘மொழி விளையாட்டின்’ ஆதர்ச வாசகர் போலத் தெரிகிறது :-)///

நீங்கள் நினைப்பது சரி.

///உண்மை. தசாவதாரக் கதை போல் ட்டமாஷுக்காக பல சீரியஸ் முயற்சிகள் செய்யப்படுகிறது. மோகனுக்கு வாழ்த்துகள்.////

மிக்க நன்றி ஸ்ரீதர் நாராயணன்.

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:26 AM  

நன்றி ரவி

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:27 AM  

////அருமையான கேள்விகளும், பதில்களும்.

வாழ்த்துக்கள் மோகன்...////

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ச்சின்னப் பையன் சார்.

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:29 AM  

////அசத்தலான கேள்விகள் , லவக்மான் பதில்கள்..அருமை மோகன்//

வாங்க அக்கினிப் பார்வை,

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

anujanya said...
December 8, 2008 at 6:32 AM  

மோகன்/சுந்தர்,

இரண்டாம் பாகமும் அட்டகாசம். காமத்தை மொழி விளையாட்டாகச் சொல்வதில் உள்ள சிக்கலைவிட மொழிவிளையாட்டுக்கு எதற்காக காமத்தைத் தெரிவு செய்ய வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிக்கலானது. உங்கள் காமக் கதைகளை மிகத் தாமதமாக, மிகுந்த யோசனைக்குப் பிறகே படிக்கத் துவங்கினேன். 'முற்போக்கு' பட்டத்தில் நாட்டம் இல்லை என்றாலும், 'விளக்கெண்ணை' என்ற அவச் சொல்லிலிருந்து தப்பிக்க, படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் வளர் மிக வாஞ்சையுடன் குறிப்பிடும் மிடில் கிளாஸ் மரூன் மனப்பான்மையிலிருந்து வெளிவருவது மிகக்கடினம். ஆதலால் சுந்தர் 'நீங்கள் நல்லவரா இல்ல கெட்டவரா' என்றால் ...... Jury is still out. :))

//இது புத்தகமாக வந்து பெருவாரியான வாசகர்களால் வாசிக்கப்பட்டால் சரியான மதிப்பீடு தெரியும்.

சுந்தர்! சீக்கிரமாக புத்தகம் வெளியிடுங்கள்.//

சுந்தரின் வலைப்பூவையே, யாருமில்லாத போதுதான் படிக்க வேண்டிய நிலை. ஸ்ரீதர், அதுக்கு உலை வைக்காதப்பா. புத்தகமெல்லாம் நான் நிச்சயம் வாங்க மாட்டேன் :))

மோகன், மிக ஆழமான கேள்விகளுக்கு இன்னொருமுறை பாராட்டுக்கள்.

அனுஜன்யா

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 2:16 AM  

///சுந்தரின் வலைப்பூவையே, யாருமில்லாத போதுதான் படிக்க வேண்டிய நிலை///

ஆஹா! :-))

///மோகன், மிக ஆழமான கேள்விகளுக்கு இன்னொருமுறை பாராட்டுக்கள். ///

நன்றி அனுஜன்யா!

கோவி.கண்ணன் said...
December 17, 2008 at 3:31 AM  

சுந்தரின் இரண்டாம் பாகம் கேள்வி பதில் இன்று தான் படித்தேன்.

பயன்படுத்தியுள்ள சொற்கள் அதிர்ச்சி அளித்தாலும்... எல்லாம் நம்மைச் சுற்றிலும் கேட்டவைதான், பொது ஊடகம் என்னும் எழுத்துலகில் புனிதம் கட்டமைப்பட்டுள்ளதால் மிகையாக தோன்றுகிறது.

படிப்பவர்களின் எண்ணங்களில் கோளாறுகள் இல்லை என்றால் எழுத்துத் தன்மையின் கட்டுப்பாடுகள் தேவைபடும் இடங்களில் உடைத்துக் கொள்ளலாம் என்று உணர்த்துவதாக புரிகிறது.

சுந்தருக்கு பாராட்டுகள்.

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 4:42 PM  

நன்றி கோவி



கிடங்கு