பதிவர் குடுகுடுப்பை தென்மாவட்டங்களை உள்ளடக்கி செந்தமிழ்நாடு என்னும் தனி மாநிலம் உருவாக்குவது பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அம்மாவட்டங்களில் வளர்ச்சியின்மையை காரணம் கூறியிருந்தார். "மாலிவுட் என்ற திரைத்துறையை உருவாக்கலாம்" என்பது போன்றும் நகைச்சுவைக்காக சில விஷயங்கள் கூறப்பட்டன. அவற்றை மறுத்து சில கருத்துக்களை கூறி அதற்கு தேவையேதும் இல்லை என வலியுறுத்தவே இப்பதிவு.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இரண்டாம் மட்ட நகரங்கள் தொழில் வளர்ச்சிக்கு முனைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளன என்கிறது மெக்கின்சி ரிபோர்ட். கோவை மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஓசூர் ஆகிய நகரங்களில் ஐடி கட்டமைப்புகளை அரசு தீவிரமாக வளப்படுத்தி வருகிறது. ஐடி -யில் கோவையின் அசுர வளர்ச்சியை பற்றி எல்லோருக்கும் தெரியும். அது தொழில் வளர்ச்சியில் ஏற்கனவே செழுமை பெற்ற நகரம். ஹெல்த் சர்வீஸ் இங்கு சென்னைக்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளது (இந்தியாவின் மெடிகல் காபிடல் சென்னை). அண்ணா பல்கலைக்கழகம் ஒன்று இங்கே தொடங்கப்பட்டு உள்ளது;சுய நிர்வாகத்துடன் விரைவில் செயல்படவிருக்கிறது. திருப்பூரை ஏனைய மாநகரங்களுக்கு இணையாக மாற்றும்படிக்கு நிர்வாக வசதி கருதி தனி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் "டெஸ்டினேசன் மதுரை" என்ற கருத்தரங்கை ஒவ்வொரு வருடமும் மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. சென்னை பெங்களூர் போன்ற நகரங்களில் பத்து வருடங்களுக்கு முன் இவ்வாறான கருத்தரங்களை நடத்தி வந்தது. தமிழக அரசு இவற்றை முன்னெடுக்கிறது. உள்கட்டமைப்புகள் முக்கிய கவனம் பெறுகின்றன. இந்தியாவின் ஏனைய இரண்டாம்நிலை நகரங்களை விட மதுரை பலமடங்கும், சில மாநில தலைநகரங்களைவிடவும், சிலவற்றுக்கு இணையாகவும் உள்கட்டமைப்பை பெற்றுள்ளது.
கோவையை போலவே திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது;சுய நிர்வாகத்துடன் விரைவில் செயல்படவிருக்கிறது. இந்தியாவின் இரண்டாம் நிலை தலைநகரங்களில் பூனா போன்று விமான போக்குவரத்து அதிகம் பெற்ற நகரம் இது. சிறந்த கல்வி நிலையங்களை கொண்ட நகரம். உள்கட்டமைப்புக்கு அரசின் (குறிப்பாக மத்திய அரசின்) கவனம் பெற்றுள்ள நகரம்.
தென்மாவட்டங்களில் சமீபகால வளர்ச்சிகள் யாவும் மாநில அரசின் முனைப்பினாலேயே நடைபெறுகின்றன. திருநெல்வேலியிலும் அண்ணா பல்கலை கழகம் நிறுவப்பட இருக்கிறது. சேது சமுத்திரத்திட்டம் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமான திட்டமன்று. அது ஒரு மிகப்பெரிய திட்டத்தின் முதல் நடவடிக்கை. கனரக மற்றும் உற்பத்தித்தொழிலில் உலக நாடுகள் தமிழகத்தை குறிவைத்து இந்திய அரசையும் மாநில அரசையும் நெருக்குகின்றன. குறிப்பாக ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா போன்றவை. புதிய தொழிற்சாலைகள் அனைத்தையும் தென் மாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல மாநில அரசு நினைக்கிறது. அதனாலேயே தூத்துக்குடி துறைமுக மேம்பாடும் சேது சமுத்திரமும் முக்கியமான முதல் நடவடிக்கைகள் ஆகின்றன. இது தற்போதைய தமிழக அரசின் நீண்டகால அடிப்படையிலான முயற்சி.
தற்போதைய தொழிற்கொள்கை சென்னையை விட்டு எவ்வளவு தூரம் வெளியே தொழிற்சாலையை அமைக்கிறீர்களோ அதற்கு தகுந்த ஊக்கத்தொகையும் வரிவிலக்கும் தருகிறது. விரிவாக்கப் பணிதவிர வேறெந்த புது முயற்சிகளும் சென்னைக்கு 150 கிமீ உள்ளாக தொழில்துறையில் தொடங்க தனியாருக்கு கிட்டத்தட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கிராமப்புற வளர்ச்சி மிக மிக மிக மிக மிக முன்னேற்றமாக உள்ள மாநிலம் தமிழகம். கிராமவளர்ச்சியின் குறியீடுகளில் ஒன்றான அர்பனைசேசன் ஒப்பீட்டளவில் முதலிடத்தில் (இரண்டாம் இடம் பெற்ற மாநிலத்தைவிட மிகுந்த வித்தியாசத்துடன்) உள்ளது.
வளர்ச்சியில் சென்னை முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பது இருபது வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டு. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஐடி -இன் துரித வளர்ச்சியும், தயாநிதி மாறனின் சில விளம்பரமிக்க முயற்சிகளும் சென்னை முன்னிலைப்படுத்துவதாக தோற்றம் அளிக்கின்றன. இரண்டாம் மட்ட நகரங்களை மேம்படுத்தும் பணி பின்னணியிலும், விளம்பரமின்றியும், வழக்கமான செயல்பாடு போல் பரபரப்பின்றியும் நடைபெற்று வருகிறது. அதிமுக -விட திமுக இதை தொய்வில்லாமல் செய்கிறது என்றாலும் அதிமுக -இவற்றிற்கு பெரும்பாலும் தடையாக இல்லை. (1991-1995 -ல் கதை வேறு; அப்போது இரண்டாம் மட்ட நகரங்களின் வளர்ச்சி மட்டுமல்ல, எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை)
ஆக, தென்மாவட்டங்கள் வளர்ச்சியில் புறக்கணிக்கப் படுகின்றன என்பது தற்போதைய காலங்களில் ஏற்க முடியாத குற்றச்சாட்டு. வேறுசில வசதிக்குறைவுகள் அங்கே இருக்கின்றன என்றால் சிலவற்றை ஏற்க முடியம். முக்கிய அரசு அலுவலகங்கள் தங்கள் தலைமையகத்தை சென்னையில் கொண்டுள்ளன. கடைக்கோடித் தமிழன் இவற்றின் பயனைப்பெற நேரவிரையம் செய்து பயணிக்க வேண்டியுள்ளது என்பது உண்மை. நாம் உச்சநீதி மன்றத்தின் பயன்பாட்டை பெற வெகுதூரம் வடக்கு நோக்கி பயணம் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உயர் நீதிமன்றக் கிளை மதுரையில் அமைத்து நீதித்துறை தென்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ததுபோல் தமிழக அரசும் முக்கிய அரசு அலுவலகங்களின் தலைமையகத்தை தென்மாவட்டங்களுக்கு மாற்றியோ அல்லது தற்சார்பாக செயல்படும் கிளைகளை அங்கு அமைத்தோ அம்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ய வேண்டும். முடிந்தால் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒன்றை அங்கே நடத்தலாம். கோடைகால தலைநகரமாக தென்மாவட்ட நகரம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
எனினும், தென்மாவட்டங்களை உள்ளடக்கி தனியாக ஒரு மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதற்கான தேவை கிஞ்சித்தும் இல்லை. தனிமாநில உருவாக்கத்திற்கு வளர்ச்சி, கலாச்சாரம் அல்லது மொழி என ஏதேனும் ஒரு காரணி இருக்க வேண்டும். ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும், தெலுங்கானா கோரிக்கை கலாச்சாரத்தை முன்னிறுத்தியும் தனி மாநிலம் கேட்டன/கேட்கின்றன. தமிழகத்தில் இவ்வாறான கோரிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் நமக்கு ஒட்டுமொத்தமாக நட்டமே ஏற்படும். மத்திய அரசுடனான பார்கெயின் பவர் நமக்கு குறையும். முக்கிய பிரச்சினையில் இருவேறு நிலைப்பாட்டை இரு மாநிலங்களும் எடுத்தால் தமிழின எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். (ஏற்கனவே ஈழப்பிரச்சினையில் நமக்கு மூன்று வித நிலைப்பாடுகள் உள்ளன). வேறு மாநிலங்கள், நாடுகளில் வாழும் தமிழருக்கு நம்மால் வலுவோடு குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். (உ - ம்: காங்கிரஸ் ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஈழப்பிரச்சினை, கர்நாடக பிரச்சினை என்னவாகும்?)
இவை தவிர பல பிரச்சினைகள் உள்ளன. வலைப்பூக்களில் பேசப்படும் பல விஷயங்கள் வெளியே கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், தனிமாநில கோரிக்கை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லாதபோது (குறைந்த பட்சம் தற்போது) நாம் அவ்வகை முயற்சியை தொடக்கிவைக்ககூடாது.

52 comments:
தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தனி மாநிலம் தேவை இல்லை என்றே உணர்கின்றேன். சென்னை மாநிலத்தின் தலைநகராக இருப்பதால் அதன் வளர்ச்சி அதீதமாக இருக்கின்றன. அந்த மாயத் தோற்றமே இது போன்ற எண்ணங்களாக இருக்கலாம்.
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இனி ஒரு கூடுதல் மாநிலம் தேவையில்லை. இப்போது தமிழகம் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றது.
Fonts size கொஞ்சம் சற்று பெரிது செய்தால் நன்றாக இருக்கும். படிப்பதற்கும் வசதியாக இருக்கும்.
வட மாவடடங்களை உள்ளடக்கிய மாநிலக் கோரிக்கை முன்பு பா.ம,க வால் கேட்கப் பட்டது.
அந்த கோரிக்கை பின் தொய்வடைந்துவிட்ட நிலையில் இந்த கோரிக்கை அந்த கோரிக்கைக்கு புத்துயிர் ஊட்டலாம்.
தேவையில்லா பிரச்சனை.
///அந்த மாயத் தோற்றமே இது போன்ற எண்ணங்களாக இருக்கலாம்.///
மாயத்தோற்றம் என்பது மிகச்சரி.
நன்றி தமிழ்பிரியன்
///மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இனி ஒரு கூடுதல் மாநிலம் தேவையில்லை. இப்போது தமிழகம் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றது///
ஆம். முற்றிலும் உண்மை. அனைத்து மாவட்டங்களையும், அனைத்துமட்ட நகரங்களையும், கிராமப்புறங்களையும், அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் வளர்ச்சி இது.
///Fonts size கொஞ்சம் சற்று பெரிது செய்தால் நன்றாக இருக்கும். படிப்பதற்கும் வசதியாக இருக்கும்///
செய்துள்ளேன் நண்பரே. இதைதொடர முயற்சிக்கிறேன்
////வட மாவடடங்களை உள்ளடக்கிய மாநிலக் கோரிக்கை முன்பு பா.ம.க வால் கேட்கப் பட்டது.////
அது முற்றிலும் அரசியலும் சிறிது சுயநலமும் சார்ந்த கோரிக்கையாகும். மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய கோரிக்கைதான் எனினும் இது வலுவான ஒன்றல்ல. இவ்வகை காரணங்கள் ஒரு தனிமாநில கோரிக்கைக்கு போதாது.
///
தேவையில்லா பிரச்சனை.//
ஆம் நண்பரே!
நன்றி
///தமிழ் பிரியன் said...
தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தனி மாநிலம் தேவை இல்லை என்றே உணர்கின்றேன். சென்னை மாநிலத்தின் தலைநகராக இருப்பதால் அதன் வளர்ச்சி அதீதமாக இருக்கின்றன. அந்த மாயத் தோற்றமே இது போன்ற எண்ணங்களாக இருக்கலாம்.///
repeateyyyyyyyyy
///Fonts size கொஞ்சம் சற்று பெரிது செய்தால் நன்றாக இருக்கும். படிப்பதற்கும் வசதியாக இருக்கும்///
செய்துள்ளேன் நண்பரே. இதைதொடர முயற்சிக்கிறேன்
நன்றி... ஒரு வாசகரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, அதனை சரி செய்ததற்கு மிக்க நன்றி.
தனிமாநில கோரிக்கையை நான் ஆதரிக்கவில்லை அதைத்தான் என் பதிவின் கடைசியில் கிண்டலாக எழுதியிருந்தேன். தென் மாவட்ட முன்னேற்றத்தில் அரசு முனைப்பாக செயல்படவேண்டும் என்பது மட்டுமே.
மற்றபடி புறக்கணிப்பையும் மீறி தமிழகம் வளர்ந்ததற்கு திராவிட கட்சிகள் தான் காரணம் என்பதும் என் கருத்து.
தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தனி மாநிலம் தேவை இல்லை என்றே உணர்கின்றேன். சென்னை மாநிலத்தின் தலைநகராக இருப்பதால் அதன் வளர்ச்சி அதீதமாக இருக்கின்றன. அந்த மாயத் தோற்றமே இது போன்ற எண்ணங்களாக இருக்கலாம்.///
சென்னையின் இந்த வளர்ச்சி மற்ற நகர்களுக்கும் பிரித்து அளிக்கப்படவேண்டும் அதுதான் சென்னைக்கும் நல்லது.
இவை தவிர பல பிரச்சினைகள் உள்ளன. வலைப்பூக்களில் பேசப்படும் பல விஷயங்கள் வெளியே கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், தனிமாநில கோரிக்கை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லாதபோது (குறைந்த பட்சம் தற்போது) நாம் அவ்வகை முயற்சியை தொடக்கிவைக்ககூடாது.//
நான் தனி மாநில கோரிக்கையை கண்டிப்பாக ஆதரிக்கவில்லை, ஆனால் அப்படி ஒரு எதிர்வினை என் பதிவின் முதிர்ச்சியின்மையால் ஏற்படும் தோற்றம் உள்ளது, என் பதிவை உடனே நீக்கிவிடுகிறேன்
பதிவர் குடுகுடுப்பை தென்மாவட்டங்களை உள்ளடக்கி செந்தமிழ்நாடு என்னும் தனி மாநிலம் உருவாக்குவது பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அம்மாவட்டங்களில் வளர்ச்சியின்மையை காரணம் கூறியிருந்தார்//
புது மாநிலம் உருவாக்காமல் பிரச்சினையை கூறி வளர்ச்சியை முன் வைப்பதே என் நோக்கம், அது உங்களுக்கும் புரிந்திருக்கும். ஆனால் நான் சரியாக கையாளவில்லை என புரிந்துகொண்டேன். இதனை விவாதப்பொருள் ஆக்க விரும்பவில்லை அதனால் பதிவை நீக்கியுள்ளேன்.
குடுகுடுப்பை,
///என் பதிவை உடனே நீக்கிவிடுகிறேன்///
///இதனை விவாதப்பொருள் ஆக்க விரும்பவில்லை அதனால் பதிவை நீக்கியுள்ளேன்.///
என்ன இது விபரீதம்! இவ்வாறு ஏன் செய்தீர்கள்? பதிவின் இறுதியில் ஒரு டிஸ்கியை இட்டிருந்தாலே போதுமல்லவா? அல்லது பின்னூட்டத்தில் தெளிவு படுத்தினால் கூட நிறைவே! இதற்காக பதிவை நீக்கி விட்டீர்களே! இது தவறு, இவ்வாறு செய்யக்கூடாது! பதிவுலகில் கடும் விமர்சங்களையும் கண்டனங்களையும் ஊதித்தள்ளிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் சகஜம். இதற்காக இந்த நடவடிக்கை அதிகப்படியாது.
சாரி குடுகுடுப்பை! :-(
//தமிழக அரசும் முக்கிய அரசு அலுவலகங்களின் தலைமையகத்தை தென்மாவட்டங்களுக்கு மாற்றியோ அல்லது தற்சார்பாக செயல்படும் கிளைகளை அங்கு அமைத்தோ அம்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ய வேண்டும்.//
தமிழக அரசு தற்பொது 5440 பொது சேவை நிலையங்களை (common service centres) அமைக்கும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அரசின் அனைத்து துறை சார்ந்த விஷயங்களுக்கும் (உதாரணம் - பட்டா விண்ணப்பம், அல்லது உரிமம் விண்ணப்பம், சேவை வரி விண்ணப்பம்) இந்த நிலையங்கள் பயன்படும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இங்கிருந்து மின்னஞ்சல் அனுப்பலாம். அத்தாட்சி எண்ணையும் பெற்றுக்கொள்ளலாம்
ஒவ்வொரு துறையும் இதற்கென தனியாக இணைய சேவைகளை வழங்க உள்ளது.
இந்த திட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட சில வ்ருடங்கள் ஆகலாம். ஆனால் அதன் பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தலைமைச்செயலகம் போன்ற இடங்களுக்கு அலையும் தேவை இருக்காது
இது ஊடக செய்தி
This Common Services Centre is an ICT-enabled Service Delivery outlet providing a range of services to the people in the village / town in which it is located. These Centres are being designed as ICT-enabled Kiosks having a PC along with basic support equipment like Printer, Scanner, UPS, with Wireless Connectivity as the backbone and additional equipment for edutainment, telemedicine, projection systems, etc. Approved by Government these Common Service Centre Scheme are being envisioned as the front-end delivery points for Government, private and social sector services to rural citizens in an integrated manner. The core objective being to provide a platform that can enable Government, private and social sector organizations to align their social and commercial goals for the benefit of the rural population in the remotest corners.
////தமிழக அரசு தற்பொது 5440 பொது சேவை நிலையங்களை (common service centres) அமைக்கும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. ///
இதனால் ஊழல் மெல்ல குறைந்து போகும் எனத் தோன்றுகிறது.
///ஒவ்வொரு துறையும் இதற்கென தனியாக இணைய சேவைகளை வழங்க உள்ளது.///
மின்மயமாதல் துரிதப்படும். சேவை தரமாகும்.
///இந்த திட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட சில வ்ருடங்கள் ஆகலாம்.///
மெதுவாக நிறைவேறினாலும் டேம்பர் புரூஃப் -டன் நடந்தால் திட்டம் வெற்றிபெறும். (வெள்ளோட்டமின்றி இவை நடைபெறாது எனினும்)
தகவல்களுக்கு நன்றி டாக்டர் புருனே!
தென் மாவட்டங்களுக்கு மதுரை தலைநகரம் என கொள்வோம். அப்புறம் திருநெல்வேலியிருந்து ஒருத்தர் இன்னொரு மாநிலம் வேணுமின்னு பதிவு போடுவார். Considering down the line we should have 240(தொகுதிக்கணக்கா)
சொல்ல மறந்துட்டேன், தலைப்பு மட்டும்தான் படிச்சேன், பதிவ இனிமேதான் படிக்கனும்
குடுகுடுப்பை,
///என் பதிவை உடனே நீக்கிவிடுகிறேன்///
///இதனை விவாதப்பொருள் ஆக்க விரும்பவில்லை அதனால் பதிவை நீக்கியுள்ளேன்.///
என்ன இது விபரீதம்! இவ்வாறு ஏன் செய்தீர்கள்? பதிவின் இறுதியில் ஒரு டிஸ்கியை இட்டிருந்தாலே போதுமல்லவா? அல்லது பின்னூட்டத்தில் தெளிவு படுத்தினால் கூட நிறைவே! இதற்காக பதிவை நீக்கி விட்டீர்களே! இது தவறு, இவ்வாறு செய்யக்கூடாது! பதிவுலகில் கடும் விமர்சங்களையும் கண்டனங்களையும் ஊதித்தள்ளிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் சகஜம். இதற்காக இந்த நடவடிக்கை அதிகப்படியாது.
சாரி குடுகுடுப்பை! :-(
// நீக்கியதன் காரணம் தமிழர் ஒற்றுமையை விவாதமாக்குமோ என்ற எண்ணம் தோன்றியதால்.மேலும் சில தனிப்பட்ட காரணங்கள்
தனி மாநிலம் தேவையென்று சொல்லி, குடும்பதுல கொளபடிஉண்டு பண்ணாதிங்க. ஏற்கனவே தென் மாவட்டகாரங்க கொஞ்சம் ரோசமனவங்க. ஒடனே அருவா கத்தினு இறங்கிற போறாங்க.
அப்ப எனக்கு தென் மாநில முதல்வர் பதவி கிடைக்காதா ?
//சென்னையின் இந்த வளர்ச்சி மற்ற நகர்களுக்கும் பிரித்து அளிக்கப்படவேண்டும் அதுதான் சென்னைக்கும் நல்லது.//
என்னது மற்றச் நகர்களுக்கு பிரிச்சிக்கொடுக்கணுமா??? சான்ஸே இல்லை குடுகுடுப்பை சார். எந்த கழகம் ஆட்சியில் இருந்தாலும் அவர்களோட புரிந்துணர்வு ஒப்பந்தம் செங்கல்பட்டு,ஷிரிபெரும்புதூரை தாண்டாது. அப்படியே கூப்பாடு போட்டாலும் நாங்குநேரில நாங்க ஆரம்பிச்சிருக்கோம் அப்படிம்பாங்க.. அதை இன்னும் ஆரம்பிச்சிட்டேதான் இருக்காங்க......
இப்படித்தான் இருக்கனும் அப்படின்றது தென் மாவட்டங்களின் சாபம்.
இது ஒரு ஆழமான பிரச்சினை.
எந்தவொரு பகுதியுமே தான் புறக்கணிப்பதாக கருதுகின்ற போது தனியே போக வேண்டும் என்று சொல்வது இயல்பானது. தொடர்ச்சியான நமது அரசுகளும் தென் மாவட்டங்களைப் பாராமுகமாகவே வைத்திருப்பதும் உண்மையே.
தென் மாவட்டங்கள் மட்டுமல்ல , மேற்கு மாவட்டங்களுக்கும் தமிழக அரசுகள் எதையும் செய்ததாகக் காணோம்.
மகாராட்டிர அரசு மும்பைக்கு இணையாக புனேவையும் , நாக்பூரையும் வளர்த்தெடுக்க முயற்சிக்கும் போது ஏன் நம்மால் மட்டும் முன்னேற்றங்களை பரவலாக்க முடியாது?
குஜராத்தில் அக்மதாபாத் மட்டுமன்றி பரோடா , சூரத் இன்னபல நகரங்கள் பரவலான வளர்ச்சியை பெறும் போது சென்னை மட்டுமே வளர்வது இயற்கை என்று சொல்லி எப்படித் தப்பிக்க முடியும்?
உதாரணத்திற்கு - தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர வேறெங்கும் சர்வதேச க்ரிக்கெட் போட்டிகள் நடந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா??
ஆனால் ஆந்திராவில் ஹைதராபாத் தவிர விஜயவாடா , விசாகப்பட்டினம் இங்கெல்லாம் சர்வதேச க்ரிக்கெட் நடக்கிறதே? ம்காராஷ்டிராவில் புனே , நாக்பூர் , நாசிக் , குஜராத்தில் ராஜ்கோட் , பரோடா , சூரத் , பஞ்சாபில் அம்ரிஷ்டர் , லூதியானா , மொகாலி என்று நீளும் நகரங்கள் இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.
க்ரிக்கெட்டை நான் பெரிதாக மதிப்பதில்லை...நமது மற்றைய மாவட்டங்களுக்கான புறக்கணிப்பை சொல்வதற்கு அவ்விளையாட்டை உபயோகிக்கிறேன்...
ஆகவே , இப்பதிவினில் உள்ள ஒவ்வொரு விடயமும் உண்மையாக இருக்குமானால் சந்தோசமே , ஆனாலும் சென்னை மட்டுமே ஆட்சியாளர்களின் அதீத கவனத்தை பெற்று வருகிறது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை.
அந்நிலை மாற்றப்பட்டாக வேண்டும்.!!!!!
இதுதான் நிதர்சனம் , இதை அங்கே அது செய்யப்படும் , இங்கே அது செய்யப்படும் , அங்கே தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படும் என்ற அரசியல்வாதிகளைப் போல புறக்கணிப்பை மூடி மறைக்க வேண்டிய தேவை நமக்கு இல்லையே நண்பரே.....
நன்றி திரு ராதா கிருஷ்ணன்,
நன்றி திரு ராகவன்
///தென் மாவட்டங்களுக்கு மதுரை தலைநகரம் என கொள்வோம். அப்புறம் திருநெல்வேலியிருந்து ஒருத்தர் இன்னொரு மாநிலம் வேணுமின்னு பதிவு போடுவார். Considering down the line we should have 240(தொகுதிக்கணக்கா)///
:-))))
////சொல்ல மறந்துட்டேன், தலைப்பு மட்டும்தான் படிச்சேன், பதிவ இனிமேதான் படிக்கனும்///
என் பதிவெல்லாம் நீங்க படிப்பீங்களா??!!! :-)))
///நீக்கியதன் காரணம் தமிழர் ஒற்றுமையை விவாதமாக்குமோ என்ற எண்ணம் தோன்றியதால்///
:-(
///தனி மாநிலம் தேவையென்று சொல்லி, குடும்பதுல கொளபடிஉண்டு பண்ணாதிங்க. ஏற்கனவே தென் மாவட்டகாரங்க கொஞ்சம் ரோசமனவங்க. ஒடனே அருவா கத்தினு இறங்கிற போறாங்க.///
ஆகா! நல்லா கெளப்புரீங்கய்யா பீதியை!
நன்றி வில்லன்
///அப்ப எனக்கு தென் மாநில முதல்வர் பதவி கிடைக்காதா ?///
விடுங்க நசரேயன், நியூ ஜெர்சி முதல்வராயிடலாம்!
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி இது
மத்திய மேற்கு மாவட்டங்களை இணைத்து கோவையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைக்கவேண்டும் சில அமைப்புகள் கோருகின்றன.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.. தமிழ்நாட்டில் அதிக வரி கட்டும் பகுதிகளாக மத்திய மேற்கு மாவட்டங்கள் இருந்தும் தமிழக அரசு எங்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது தான் அவர்கள் குற்றசாட்டு.
தென்பகுதியில் போதிய வளர்ச்சி இல்லை அதனால தனி மாநிலம், மத்திய மாவட்டங்கள் அதிக வரி கட்டியும் அரசு ஒன்னும் செய்யவில்லை என ஒரு மாநிலம், நம்ம மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி கேட்ட வடக்கு மாவட்டங்களை பிரித்து ஒரு மாநிலம்.
நல்ல கேக்குறாங்கப்பா கேள்வி.. ஒரு வேலை இந்த 2011 முதல்வர் போட்டியில பிரச்சனை எதுவும் வரகூடாதுன்னு இருக்குமோ ?
அண்ணன் மோகன் கந்தசாமி அவர்கள் வேணும்னே என் பின்னூட்டத்தை ஒரு நன்றி கூட சொல்லாமே புறக்கணித்துவிட்டதாக "எப்.பி.ஐ" சொல்கிறது...அதற்கான அத்தனை ஆதாரமும் இருக்கிறது. அதனால அடுத்த மாசம் கருணாநிதி ஆட்சி குளோஸ் , நான் அடுத்த வாரம் காப்ப்பி பார்ட்டி நடத்துறேன்.. ஜெயலலிதாதான் பிரதமர்....அதுக்கான அத்துணை எவிடென்ஸும் எங்கிட்ட இருக்கு.....யாரும் தப்ப முடியாது..
நோட் திஸ் பாயிண்ட்.
சும்மா லுல்லுலாயிக்கு , சுப்பிரமணியம் சுவாமி ஸ்டைல்ல...
டெஸ்ட்
///இப்படித்தான் இருக்கனும் அப்படின்றது தென் மாவட்டங்களின் சாபம்.//
அத்திரி,
இது ஏற்றுக்கொள்ள முடியாது!. பக்கத்து மாநில போட்டியை தவிர்க்க சென்னை சில விஷயங்களில் முன்னிறுத்தப்படுகிறது. மேலும், தென்மாவட்டங்களில் வளர்ச்சியில்லை என்ற வாதத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் தனிமாநில கோரிக்கையை எவ்வாறு முன் நிறுத்தமுடியும் என்றுதான் விசனப்படுகிறேன்.
மதிபாலா,
////மகாராட்டிர அரசு மும்பைக்கு இணையாக புனேவையும் , நாக்பூரையும் வளர்த்தெடுக்க முயற்சிக்கும் போது ஏன் நம்மால் மட்டும் முன்னேற்றங்களை பரவலாக்க முடியாது?///
நிச்சயம் முடியும் என்பது நமக்கும் தெரியும். ஏன் இல்லை என்பதை ஆராய்வதில் தவறில்லை. ஓரவஞ்சனை செய்வதை விமர்சிக்கலாம். வளர்ச்சிக்கான கோரிக்கையை விமர்சனங்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் முன் வைக்கமுடியும். தனிமாநிலம் கேட்டு வளர்ச்சிக்கான கோரிக்கையை வைக்கமுடியாதல்லவா? தனிமாநிலம் கேட்பதால் சென்னையை தலைநகராகக் கொண்ட மாநிலம் மட்டுமல்ல, புதிய மாநிலமும் நட்டமடைய வேண்டியிருக்கும் என்பது என் கருத்து. நம் ஒட்டுமொத்த வலிமை ஏற்கனவே நம் எதிரிகளை எதிர்கொள்ள போதாதபோது நாமே வலிந்து நம் வலிமையை குறைத்துக்கொள்வது தவறாய் முடியுமல்லவா?
///உதாரணத்திற்கு - தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர வேறெங்கும் சர்வதேச க்ரிக்கெட் போட்டிகள் நடந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா??////
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் தெரிந்துள்ள நிலையில் இதையும் நாம் புரிந்துகொள்ள முடியும். நீங்களே அதை கோடிட்டு காட்டிவிட்டீர்கள்.
////அண்ணன் மோகன் கந்தசாமி அவர்கள் வேணும்னே என் பின்னூட்டத்தை ஒரு நன்றி கூட சொல்லாமே புறக்கணித்துவிட்டதாக "எப்.பி.ஐ" சொல்கிறது...அதற்கான அத்தனை ஆதாரமும் இருக்கிறது. அதனால அடுத்த மாசம் கருணாநிதி ஆட்சி குளோஸ் , நான் அடுத்த வாரம் காப்ப்பி பார்ட்டி நடத்துறேன்.. ஜெயலலிதாதான் பிரதமர்....அதுக்கான அத்துணை எவிடென்ஸும் எங்கிட்ட இருக்கு.....யாரும் தப்ப முடியாது..
நோட் திஸ் பாயிண்ட்.
சும்மா லுல்லுலாயிக்கு , சுப்பிரமணியம் சுவாமி ஸ்டைல்ல.../////
ஆகா, மதிபாலா, நான் புறக்கணிக்க வில்லை. :-)))
அந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன் என்பது உங்களுக்கும் தெரியும். அதுவும் உங்கள் பின்னூட்டத்தை நான் புறக்கணிப்பது என்பது என் மனநிலை பிறழ்ந்த பிறகே நடக்கும்.
தென்மாவட்டங்களின் வளர்ச்சி குறித்த சில தரவுகளை தயார் செய்யவே சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டேன். அந்த தரவுகள் இன்னும் கைக்கு வராத நிலையில் வளர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளை தற்போது ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
///டெஸ்ட்///
டெஸ்ட் பாஸ்??!!?
//////மேற்கு மாவட்டங்களை இணைத்து கோவையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைக்கவேண்டும் சில அமைப்புகள் கோருகின்றன.///
///தென்பகுதியில் போதிய வளர்ச்சி இல்லை அதனால தனி மாநிலம்,///
////நம்ம மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி கேட்ட வடக்கு மாவட்டங்களை பிரித்து ஒரு மாநிலம்.////
அய்யய்யோ! இத்தனை மாநிலங்களா?
ஓட்டு பொறுக்கி சார், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒருமாநிலமாக்கிவிடுதல் தீர்வாகுமா, ஒருவேளை?
////நல்ல கேக்குறாங்கப்பா கேள்வி.. ஒரு வேலை இந்த 2011 முதல்வர் போட்டியில பிரச்சனை எதுவும் வரகூடாதுன்னு இருக்குமோ ?///
ஜோக்கில்லை நண்பரே, இருந்தாலும் இருக்கும்.
////ஒரு நன்றி கூட சொல்லாமே புறக்கணித்துவிட்டதாக "எப்.பி.ஐ" சொல்கிறது.///
நண்பருக்கு நன்றிகள். I really mean it.
நிச்சயம் முடியும் என்பது நமக்கும் தெரியும். ஏன் இல்லை என்பதை ஆராய்வதில் தவறில்லை. ஓரவஞ்சனை செய்வதை விமர்சிக்கலாம். வளர்ச்சிக்கான கோரிக்கையை விமர்சனங்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் முன் வைக்கமுடியும். தனிமாநிலம் கேட்டு வளர்ச்சிக்கான கோரிக்கையை வைக்கமுடியாதல்லவா? தனிமாநிலம் கேட்பதால் சென்னையை தலைநகராகக் கொண்ட மாநிலம் மட்டுமல்ல, புதிய மாநிலமும் நட்டமடைய வேண்டியிருக்கும் என்பது என் கருத்து. நம் ஒட்டுமொத்த வலிமை ஏற்கனவே நம் எதிரிகளை எதிர்கொள்ள போதாதபோது நாமே வலிந்து நம் வலிமையை குறைத்துக்கொள்வது தவறாய் முடியுமல்லவா?///
கண்டிப்பாக போராடினால் முடியும்...யார் போராடுவது? எம்முறையில் போராடுவது...யாரெப்படி போராடினாலும் அப்போராட்டம் பிரிவினையிலேயே வந்து நிற்கும் என்பது தெளிவு.
இன்னொன்று - கொஞ்ச நாளைக்குமுன் தோழர் சுப வீ அவர்கள் சிங்கப்பூர் , மலேசியா பற்றி விரிவாக கலைஞர் டீவியில் உரையாற்றினார்...
சின்ன நாடுகளோ , சின்ன மாநிலங்களோ தான் விரைவாக முன்னேற முடியும் என்று. அதைத்தான் பஞ்சாபும் , ஹரியானாவும் , நமக்கு உணர்த்துகின்றன.
பெரிய மாநிலங்கள் ஒரு சுமையென்பதையே உத்திரப்பிரதேசமும் , மத்தியப்பிரதேசமும் , பீகாரும் உணர்த்துகின்றன....அதனால்தான் ஜார்க்கண்ட் , உத்தராஞ்சல் மாநிலங்கள் உணர்த்துகின்றன...
ஆனால் தற்போதைய சூழலில் தமிழகத்தில் மாநிலப்பிரிவினை தேவையென்று நான் சொல்ல மாட்டேன்...ஆனால் தென் மாவட்டங்களை ( நான் தென்மாவட்டத்தைச் சாராதவன் எனினும் ) புறக்கணிப்பது தொடரக்கூடாது என்றுதான் சொல்ல விளைகிறேன்....
///உதாரணத்திற்கு - தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர வேறெங்கும் சர்வதேச க்ரிக்கெட் போட்டிகள் நடந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா??////
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் தெரிந்துள்ள நிலையில் இதையும் நாம் புரிந்துகொள்ள முடியும். நீங்களே அதை கோடிட்டு காட்டிவிட்டீர்கள்.
கிரிக்கெட் வாரியம் மட்டும் காரணமல்ல நண்பரே...
ஆகா, மதிபாலா, நான் புறக்கணிக்க வில்லை. :-)))
அந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன் என்பது உங்களுக்கும் தெரியும். அதுவும் உங்கள் பின்னூட்டத்தை நான் புறக்கணிப்பது என்பது என் மனநிலை பிறழ்ந்த பிறகே நடக்கும்.
//
ச்சேச்சே . நான் சும்மாதான் சொன்னேன் தல....!!!
ச்ச்சும்மா ட்மாஸுல் ச்சும்மா சொல்லக்கூடாதா???
no serious thala.
நண்பருக்கு நன்றிகள். I really mean it.///
நன்றிகள்....எப்.பிஐ விசாரணைக்கு பயந்து சொல்லவில்லை என்றதற்கு தனிப்பட்ட நன்றிகள்..
ஹிஹிஹிஹி.
நான் குடுகுடுப்பையாரோட பதிவைப் படிக்கலை. மூனு நாள் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள அல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு. அதை விடுங்க, விசயத்துக்கு வருவோம்.
இன்றைய தேவை, தமிழனுக்கு ஒற்றுமை. ஏராளமான சவால்கள், எங்கும் வியாபிச்சு இருக்கு. முடிஞ்சா, அந்த அமைப்புகள் பெயரச் சொல்லுங்க. சும்மா, ஒரு அமைப்பு, ஒரு அமைப்புன்னு மொட்டையா சொன்னா எப்பிடி? பேரைத் தெரிஞ்சுகிட்டா, அதை நம்மால் முடிஞ்ச அளவுக்கு ஒதுக்கத்தான்.
/டெஸ்ட்///
டெஸ்ட் பாஸ்??!!///
அவ்வுன ண்ட்டி , டெஸ்டு பாஸூ ஆயிப் போயிந்தி!!!
இன்றைய தேவை, தமிழனுக்கு ஒற்றுமை. ஏராளமான சவால்கள், எங்கும் வியாபிச்சு இருக்கு. முடிஞ்சா, அந்த அமைப்புகள் பெயரச் சொல்லுங்க. சும்மா, ஒரு அமைப்பு, ஒரு அமைப்புன்னு மொட்டையா சொன்னா எப்பிடி? பேரைத் தெரிஞ்சுகிட்டா, அதை நம்மால் முடிஞ்ச அளவுக்கு ஒதுக்கத்தான்.///
என்னங்க புரியலயே?
//இன்றைய தேவை, தமிழனுக்கு ஒற்றுமை. ///
ஆம் பழமை பேசி சார், இது ஒரு சர்வதேச உண்மை!!!
///முடிஞ்சா, அந்த அமைப்புகள் பெயரச் சொல்லுங்க. சும்மா, ஒரு அமைப்பு, ஒரு அமைப்புன்னு மொட்டையா சொன்னா எப்பிடி?///
தெரிந்தால் அவர்கள் கோரிக்கைகளை தெரிந்து கொள்ளலாமே, குறைந்தபட்சம்!
///அவ்வுன ண்ட்டி , டெஸ்டு பாஸூ ஆயிப் போயிந்தி!!!///
"ஆமாங்க, டெஸ்ட் பாசாயிடுச்சு!" மொழி பெயர்ப்பு சரியா?, ஆந்திர நண்பர்கள் எனக்கு அதிகம், தெலுங்கும் சிறிது புரியும்.
///என்னங்க புரியலயே?///
மதிபாலா,
///சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி இது
மத்திய மேற்கு மாவட்டங்களை இணைத்து கோவையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைக்கவேண்டும் சில அமைப்புகள் கோருகின்றன.///
ஓட்டு பொறுக்கி அவர்கள் இட்ட பின்னூட்டத்தில் சொன்னா அமைப்புகள் எவையென்று பழைமைபேசி கேட்கிறார்!!
ஏன்னா பழைமைபேசி, இப்படி என்னைய பழைய புத்தகத்தை தேட விட்டுடீங்களே இது நியாயமா?
கொங்கே முழங்கு! என்ற தலைப்பில் 26-10-08 அன்று ஜூவியில் வெளியான செய்தி அது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் வசிக்கும்கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ்க் கொண்டுவந்து 'மேற்கு தமிழக முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் தனிக்கட்சி... தனி மாநிலம்!
//ஓட்டு பொறுக்கி said... December 24, 2008 11:55 AM
ஏன்னா பழைமைபேசி, இப்படி என்னைய பழைய புத்தகத்தை தேட விட்டுடீங்களே இது நியாயமா?
கொங்கே முழங்கு! என்ற தலைப்பில் 26-10-08 அன்று ஜூவியில் வெளியான செய்தி அது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் வசிக்கும்கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ்க் கொண்டுவந்து 'மேற்கு தமிழக முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் தனிக்கட்சி... தனி மாநிலம்!
//
நொம்ப நன்றிங்க அண்ணா! விசயத்தை தெரிஞ்சிக்கத்தான்.... நல்ல தகவல் குடுத்தீங்க...
http://mathilukal.blogspot.com/2009/01/blog-post_02.html
plese read
/////அப்ப எனக்கு தென் மாநில முதல்வர் பதவி கிடைக்காதா ?///
விடுங்க நசரேயன், நியூ ஜெர்சி முதல்வராயிடலாம்!//
ச ச!!!!!!!!!!!!! நாங்க தனி நகரம் உருவாகுறோம். எசுவடியன் நகர்னு. இப்பதான் புளியன்குடிய எசுவடியன் நகர்னு மதி முடிசிருகோம். மத்தத அப்புறமா மாதிருவோம்ல
பழமைபேசி said...
//இன்றைய தேவை, தமிழனுக்கு ஒற்றுமை.//
முடியாது. எத்தனநாளா இந்த ஜெயலலிதாவையும் கருணாநிதியயுமே அரசியல் பண்ண விடுறது.
நசரேயன் எப்ப கட்சி ஆரம்பிக்கிறது? எப்படி முதல்வர் ஆறது? எங்களுக்கும் காசு பணம் பாக்க ஆசை இருக்காதா?
ஒரு மாற்றம் தேவை. அதற்க்கு தனி நாடு தேவை. வாழ்க ஜனநாயகம். வாழ்க வருங்கால தென்னாட்டு முதல்வர், வீர சிங்கம் நசரேயன்.
நசரேயன்
சொன்ன மாதிரி செஞ்சிட்டேன். காசு கொடுத்துருங்க. தேர்தல் வக்குர்ருதி ஆக்கிடாதிங்க
Post a Comment