Friday, January 16, 2009

தமிழா!... வளவா!... எம் தலைவா!

·

மிழினத்திற்கு தலைவன் இல்லையடா, இனி தலைமகன் தான் உண்டு. நம் சகம் இனி அவன்தான். சந்தர்ப்பம் தகவமைக்க முடியாதவன் அவன். தமிழ்ப்பார் ஆளத் தகுந்தவன் அவனே!

ண்ணாவிரதம் ஒரு பூச்சாண்டி ஆயுதம். அது ஒரு ஊரை ஏமாற்றும் வேலை. வலிவாயுதம் என்று பித்தலாட்ட பிரச்சாரம் செய்துவந்தோரை நோக்கியே அதை எய்த போதுதான் அது ஒரு டம்மி வெடி என்று உலகம் அறிந்தது. பிறகு, திலீபனும் செத்துப் போனான். நம் ஆயுதம் அதுவல்ல.

ம் ஆயுதம் வேறொரு இடத்தில் இருக்கிறது. வேறொரு கையில் இருக்கிறது. அவ்வாயுதத்திற்கு அடிபணியாதவன் இந்தத் தமிழவனியில் எவனும் இல்லை. தவறான இடத்திலிருந்து அதை பறி. அதைக்கொண்டு நேரடியாக தமிழனை கைப்பற்று.

க்களாட்சியின் எஜமானர்களாயிற்றே நாம். ஆணையிட்டோம். பணிந்து கேட்டோம். கெஞ்சிப்பார்த்தோம். காரியும் உமிழ்ந்தாயிற்று. இதிலெல்லாம் அரங்கேறாத அம்பலமா நம் உண்ணா நிலை அரங்கேற்றும். நீ செத்தால் அவனுக்கென்ன! இது நமக்கு வேண்டாத வேலை.


ழத்தை காக்க முடியாது...
ஏண்டா?...
அவன் வேறு நாடு...
சரி, சிங்களனுக்கு உதவாதே!...
அதுவும் முடியாது!...
அது ஏண்டா?
நாம் நிறுத்தினாலும் சீனாக்காரன் நிறுத்தமாட்டான்...
சரி நீயாவது நிறுத்து...
அதெல்லாம் முடியவே முடியாது...
இது ஏண்டா முடியாது?
அவன் சிங்களனை நெருங்கினால் இந்தியாவையும் நெருங்குவான்!...
அட பயந்தான்கொள்ளி கருமாந்திரமே!

தெற்காசிய வல்லரசு தன் கூட்டாளியை பிடிக்கும் தந்திரத்தை பார்த்தாயா? இவனா போரை நிறுத்தப் போகிறான். ஜனநாயகம் தோற்ற இடம் ஈழமாக மட்டும் இருக்கட்டும். அதை இங்கேயும் தோற்கடிக்காதே! ஜனநாயக மாயை மீது வெளிச்சத்தை தெளிக்காதே! அதை தெளிவித்தால் இங்கு பலருக்கு தோள் துண்டு இருக்காது. ஏற்கனவே வேட்டியின்றிதான் ஆசனம் அமர்கின்றனர். இன்னும், பலர் அம்மணமாக அமர்வது வேறு விஷயம்.

மிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!

36 comments:

பழமைபேசி said...
January 16, 2009 at 9:06 PM  

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும்,

இளஞ்செம்மலே வந்திடுக‌! படைப்புகள் படைத்திடுக‌!! இனமானம் காத்திடுக!!!

மோகன் கந்தசாமி said...
January 16, 2009 at 9:09 PM  

பழமைபேசி,

வாருங்கள் நண்பரே! இருப்பை உறுதி செய்தாயிற்று. வலையிலும், வாழிடத்திலும்.

நன்றி.

பிருந்தன் said...
January 16, 2009 at 9:10 PM  

அண்ணா திருமா நீ எமக்கு வேண்டும், எழுந்து வா.
அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!

நாமக்கல் சிபி said...
January 16, 2009 at 9:12 PM  

நல்ல வேகத்தோட வந்திருக்கீங்க!

பழமைபேசி said...
January 16, 2009 at 9:20 PM  

// மோகன் கந்தசாமி said...
பழமைபேசி,

வாருங்கள் நண்பரே! இருப்பை உறுதி செய்தாயிற்று. வலையிலும், வாழிடத்திலும்
//

வாழ்த்துகள்! நல்ல செய்தி!!

மோகன் கந்தசாமி said...
January 16, 2009 at 9:24 PM  

////அண்ணா திருமா நீ எமக்கு வேண்டும், எழுந்து வா.
அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!///

நன்றி திரு பிருந்தன்

மோகன் கந்தசாமி said...
January 16, 2009 at 9:26 PM  

///நல்ல வேகத்தோட வந்திருக்கீங்க!///

:-)) நன்றி திரு சிபி அவர்களே!

மோகன் கந்தசாமி said...
January 16, 2009 at 9:26 PM  

///வாழ்த்துகள்! நல்ல செய்தி!!///

நன்றிகள் நண்பரே!

Anonymous said...
January 16, 2009 at 10:01 PM  

Well said Mr.Mohan Kandasamy !

மோகன் கந்தசாமி said...
January 16, 2009 at 10:09 PM  

//Well said Mr.Mohan Kandasamy !//

நன்றி நவீன்!

குடுகுடுப்பை said...
January 16, 2009 at 10:45 PM  

வாருங்கள் நண்பரே.திருமா உண்ணாவிரதத்தை முடித்து இலங்கை தமிழ் இன்னல்களை உலகெங்கும் கொண்டு செல்ல ஒரு காரணியாக இருக்க விழைகிறேன்.மற்றவர்கள் மேல் நம்பிக்கை போயாச்சு. அமெரிக்க ஆதரவை பெறுவது மிக முக்கியம் என கருதுகிறேன்.அதற்கான வழியை யாராவது செய்யுங்கள்

Unknown said...
January 16, 2009 at 11:45 PM  

தமிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!

ரவி said...
January 17, 2009 at 7:09 AM  

அற்புதம்...!!!!!!

நசரேயன் said...
January 17, 2009 at 12:43 PM  

என்னடா ஆளையை கானுமுன்னு பார்த்த இளம் புலி, பாயத்தான் பதுங்கி இருக்கா?
அருமை

Anonymous said...
January 17, 2009 at 1:26 PM  

//தமிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!//

இது நறுக்குன்னு இருக்கு தோழா!!

இங்க வந்த மக்களை நாம் நம்மைப் போல நடத்தினாலே போதும்.அவர்களுக்கு நம்மைப் போலவே அனைத்தும் கிடைக்க நமது அரசாங்கம் செய்தாலே அவர்களுக்கு நாம் செய்யும் நன்மை அங்கே எப்போ போர் முடிகிறதோ அப்போது அவர்கள் செல்லட்டும்.

நமது மீனவர்களில் 300க்கும் பேருக்கும் மேலாக கொன்று உள்ள ஸ்ரீ லங்கா அரசாங்கத்தை கேட்க வக்கிலாத நமது முதல்வரை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..இதை ஏன் சொல்கிறேன் என்றால் நமது பாரம்பரிய தி.மு.க பற்றி நீங்கள் எழுதினீர்கள் அடுத்த தலைவர் இந்த பொம்புள பொறுக்கி ஸ்டாலின் என்று, கால மாற்றம் அனைத்தையும் மறைக்கடிக்கும் என்று நினைத்து விட்டீர்கள்..

தயவு செய்து மீண்டும் அந்த வரலாற்றை படியுங்கள் வை.கோ என்ற ஒரு தலைவரை (காலத்தால் வஞ்சிக்கப்பட்டவர்) மறந்து விட்டீர்கள்..இன்னும் நிறைய எழுதலாமுன்னு நினைக்கிறேன் வேண்டாம்...

உங்க பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

தோழமையுடன்

முகமது பாருக்

Thamizhan said...
January 17, 2009 at 1:37 PM  

ஆம்! இதயம் இல்லாதவர்களிடம் கருணை எதிர் பார்க்கலாமா?
உண்ணாவிரதம் வேண்டாம்.
அவர்களுக்குப் புரியாது.
இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்.அன்று இந்தியை எதிர்த்தோம்.இன்று காங்கிரசின் கயவாளித் தனத்தை எதிர்ப்போம்.அம்மையார் மண்டியிட வேண்டும்.

Anonymous said...
January 17, 2009 at 2:26 PM  

இத்தாலியிடம் தமிழகம் உயிர்ப்பிச்சை கேட்கின்றது.

இதுதான் கலியுகமோ?

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 8:56 PM  

வாருங்கள் நண்பர் குடுகுடுப்பை,

///உலகெங்கும் கொண்டு செல்ல ஒரு காரணியாக இருக்க விழைகிறேன்.மற்றவர்கள் மேல் நம்பிக்கை போயாச்சு.///

நம்பியுள்ள ஒருவரும் தன்னிச்சையாக இயங்க இயலாத சூழலில் உண்ணாவிரதம் அவருக்கும் எமக்கும் வலியைத்தான் தருகின்றன.

///அமெரிக்க ஆதரவை பெறுவது மிக முக்கியம் என கருதுகிறேன்.அதற்கான வழியை யாராவது செய்யுங்கள்////

:-))

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 8:57 PM  

////தமிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!///

நன்றி சேவியர்

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 8:58 PM  

///அற்புதம்...!!!!!!///

வாங்க செந்தழல். நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 8:59 PM  

////என்னடா ஆளையை கானுமுன்னு பார்த்த இளம் புலி, பாயத்தான் பதுங்கி இருக்கா?
அருமை////

கருத்துக்களுக்கு நன்றி நசரேயன் அண்ணாச்சி!

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 9:06 PM  

////
//தமிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!//

இது நறுக்குன்னு இருக்கு தோழா!!//////

நன்றி பரூக் அவர்களே!

திமுக பற்றி நீங்கள் கொடுக்கம் விளக்கம் எல்லாம் சரியே. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல அந்த இயக்கம்.

////தயவு செய்து மீண்டும் அந்த வரலாற்றை படியுங்கள் வை.கோ என்ற ஒரு தலைவரை (காலத்தால் வஞ்சிக்கப்பட்டவர்) மறந்து விட்டீர்கள்////

இதுநாள் வரையில் அவரது ஆதரவு நன்றியுடன் நினைவு கூறப்பட்டே வருகிறது. அவரது குரல் ஓங்கி ஒழிக்க வேண்டிய தருணத்தில் சன்னமாகிப்போனது வேதனை அய்யா!

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 9:10 PM  

////ஆம்! இதயம் இல்லாதவர்களிடம் கருணை எதிர் பார்க்கலாமா?//
இதயமா? வெறும் பிணங்கள்!!

///உண்ணாவிரதம் வேண்டாம். அவர்களுக்குப் புரியாது.//
கல்லுளி மங்கங்கலாயிற்றே!

///இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்.அன்று இந்தியை எதிர்த்தோம்.இன்று காங்கிரசின் கயவாளித் தனத்தை எதிர்ப்போம்.அம்மையார் மண்டியிட வேண்டும்.////

ஆம், போராட்டம் தான் சிறந்த வழி!

நன்றி தமிழன்

மோகன் கந்தசாமி said...
January 17, 2009 at 9:13 PM  

/////இத்தாலியிடம் தமிழகம் உயிர்ப்பிச்சை கேட்கின்றது.

இதுதான் கலியுகமோ?////

கைபர் போலன் போன்ற சொல்லாடல்களும் பொருத்தமானதே!

Anonymous said...
January 18, 2009 at 4:15 AM  

The latest news says that Israel has declared unilateral ceasefire in GAZA.
western countries and UN were the reason behind this ceasefire.
If India is willing, they can bring the ceasefire in Srilanka within an hour.
But, india doesn't want to do it.
That is the fact.
I would urge Thiruma to stop his fasting and discuss the ways of dealing the eelam issue with not just tamil loyalists in India,but also with tamil diaspora all over the world.
South African ANC leaders are sympathetic towards eelam cause,probably tamil nadu leaders including Thiruma should have discussions with them about the next move to stop the war against tamils and to bring a just political solution to eelam tamils.

காத்து said...
January 18, 2009 at 7:49 AM  

திருமாவின் உடல் நிலை என்பது ஈழத்தமிழனுக்கு முக்கியம்.

கருமாந்திர போர் நிறுத்தம் வராவிட்டாலும் பற்றவாய் இல்லை. எங்கள் மீது அளவிலா அன்பு கொண்ட திருமா எங்களுக்கு உயிருடன் ஆரோக்கியமாக வேண்டும்.

நிறுத்த சொல்லுங்கப்பா அந்த பட்டினி போராட்டத்தை.

Anonymous said...
January 18, 2009 at 7:15 PM  

தமிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!

தேவன் மாயம் said...
January 19, 2009 at 10:52 AM  

நம் ஆயுதம் வேறொரு இடத்தில் இருக்கிறது. வேறொரு கையில் இருக்கிறது. அவ்வாயுதத்திற்கு அடிபணியாதவன் இந்தத் தமிழவனியில் எவனும் இல்லை. தவறான இடத்திலிருந்து அதை பறி. அதைக்கொண்டு நேரடியாக தமிழனை கைப்பற்று.///

சரியான விளக்கங்கள்
தந்துள்ளீர்கள்..
தேவா..

மோகன் கந்தசாமி said...
January 20, 2009 at 3:52 PM  

வானதி,

ஆதரவு வேண்டி நாம் தமிழகம் தாண்டியும் செல்வதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் சொல்வது மிகச்சரி.

மோகன் கந்தசாமி said...
January 20, 2009 at 3:54 PM  

////நிறுத்த சொல்லுங்கப்பா அந்த பட்டினி போராட்டத்தை.///

நிறுத்தி விட்டார். இனி போராட்டம் தொம்சு கெலப்பனும்.

-Thanks

மோகன் கந்தசாமி said...
January 20, 2009 at 3:55 PM  

///தமிழ்த்தாயின் தலைமகனே! எம் அண்ணனே! வேண்டாம் இந்த வேலை. உண்ணா விரதத்தை கைவிடு, எழுந்துவா! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!///

நன்றி சபேஷ்

மோகன் கந்தசாமி said...
January 20, 2009 at 3:56 PM  

////சரியான விளக்கங்கள்
தந்துள்ளீர்கள்..
தேவா..///

நன்றி தேவா.

-அதற்கான வேலைகள் இனிதே தொடங்க வேண்டும். திருமாவுக்கு வாழ்த்துக்கள்.

Ramanan N said...
January 20, 2009 at 5:31 PM  

திருமா என்பது ஒரு உயிர் மட்டுமல்ல..
ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிர்.

இந்திய அரசே போரை நிறுத்து !
அமைதி பேச்சுவார்த்தை நடத்து !

இந்த முழகங்கள் இனி தமிழன் இருக்கும் இடமெல்லாம் கேட்கும்..

போர் நிறுத்தம் வருமா?
அதை பெற்றுதருவர் திருமா!

தமிழன் நலம் வாழ தன்னையே வருத்தி கொள்ளும் தலைவா.





இந்த போராட்டம் ஒரு வரலாற்றை பதிவு செய்யும் என்பதில் சிறு சந்தேகமும்மில்லை இனியும் இந்திய அரசு மௌனம் சாதித்தால் இந்திய அரசின் துரோகத்தை தமிழினம் மன்னிக்காது..




போரை நிறுத்த வற்புறுத்தி...
உண்ணாநிலையில் நம் தலைவன்,
தன்னையே வருத்தி.

உயிரை பணையம் வைத்து போராட்டம்,
இதை நிச்சயம் தமிழுலகம் பாராட்டும்..,

www.tholthiruma.blogspot.com

Nandri Mohan

ஸ்ரீதர்கண்ணன் said...
January 21, 2009 at 8:56 PM  

ஈழத்தை காக்க முடியாது...
ஏண்டா?...
அவன் வேறு நாடு...
சரி, சிங்களனுக்கு உதவாதே!...
அதுவும் முடியாது!...
அது ஏண்டா?
நாம் நிறுத்தினாலும் சீனாக்காரன் நிறுத்தமாட்டான்...
சரி நீயாவது நிறுத்து...
அதெல்லாம் முடியவே முடியாது...
இது ஏண்டா முடியாது?
அவன் சிங்களனை நெருங்கினால் இந்தியாவையும் நெருங்குவான்!...
அட பயந்தான்கொள்ளி கருமாந்திரமே!


நெத்தியடி. அருமையான எழுத்துநடை...

மோகன் கந்தசாமி said...
January 21, 2009 at 9:01 PM  

வாருங்கள் ஸ்ரீதர் கண்ணன். முதல் வருகைக்கு நன்றி!

மோகன் கந்தசாமி said...
January 21, 2009 at 9:07 PM  

////இந்த போராட்டம் ஒரு வரலாற்றை பதிவு செய்யும் என்பதில் சிறு சந்தேகமும்மில்லை இனியும் இந்திய அரசு மௌனம் சாதித்தால் இந்திய அரசின் துரோகத்தை தமிழினம் மன்னிக்காது..////

இப்போதே அதற்கான முகாந்திரம் தொன்றத்தொடங்கி விட்டது


///இந்திய அரசே போரை நிறுத்து !
அமைதி பேச்சுவார்த்தை நடத்து !

இந்த முழகங்கள் இனி தமிழன் இருக்கும் இடமெல்லாம் கேட்கும்..///

தொடர்ந்து கேட்கும்.

///உயிரை பணையம் வைத்து போராட்டம்,
இதை நிச்சயம் தமிழுலகம் பாராட்டும்..,///

உயர்ந்தோர் உறுத்து வந்து ஏற்றுவர். திருமா -வுக்கு வாழ்த்துக்கள். நாளை தமிழகம் அவர் கையில் பாதுகாப்பானது

நன்றி ரமணன்