Saturday, January 24, 2009

எங்கய்யா போனார் டகுல் பாட்சா உடன் பிறப்பு!!!

·

எவராவது திமுக -வை விமர்சனம் செய்தால் கரைவேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு வரும் அண்ணன் "உடன்பிறப்பு", திமுக அனுதாபிகள் விமர்சனம் செய்தால் அவர்களை எதிர்(ரி)நிலையில் வைத்து ரவுண்டு கட்டுவது வழக்கம். ஈழப்பிரச்சினையில் கலைஞரின் டகுல்பாட்சா -வால் வலையுலகின் பல அரசியல் நிலைப்பாடுகள் யூ -டார்ன் அடித்துவிட்ட நிலையில் நமது உடன்பிறப்பு ஒரு வழக்கமான "அய்யகோ!!!" அறிக்கையுடன் வந்து உடனடியாக ஆஜராகும் படி "தெர்ர்ர்ர்ராவிட சமூகம்" கேட்டுக்கொள்கிறது.

ஈழம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடுகளில் ரொம்ப ஃபேமஸான ஒன்று "தமிழர் வேறு, புலிகள் வேறு" -என்பதாகும். இரண்டும் ஒன்றுதான் என்று கூறும் தரப்பினர் மட்டும்தான் இன்று இன்னல் படும் தமிழர் நிலை குறித்து கவலை கொள்கின்றனர். "வேறு-வேறு" -என்ற கொள்கைக்கார அண்ணாத்தைகள் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் அல்லது டமாஷ் அறிக்கை வெளியிட்டு தங்கள் டவுசரை அவுத்துக்கொள்கிறார்கள். தமிழன் செத்தால் அவர்கள் புலிகள் செத்த கணக்கில் சேர்க்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்டுகள் மற்றும் திமுக போன்றோருக்கு ஈழத்தில் விழும் ஒவ்வொரு பிணத்திலும் தமிழர்-புலிகள் வித்தியாசம் தெரிவதில்லை. அவர்களை பொறுத்த வரை எல்லாம் புலிகளே!. உயிரோடு இருக்கும் போது இவர்களுக்கு அப்பாவியாக தோன்றும் தமிழன், இறக்கும்போது புலியாக தோன்றுவது விந்தைதான்.


சமீபத்தில் உருவாகி, குறுகிய காலத்திலேயே சூப்பர் ஹிட்டாகியுள்ள ஒரு நிலைப்பாடு "ராஜீவ் கொலைக்கு முன் - அதற்குப் பின்" என்ற நிலைப்பாடாகும். திமுகவின் பாசறையில் கருப்பெற்று உடன்பிறப்புகளால் மார்க்கெட் செய்யப்பட்டு வரும் இந்த சரக்கு சற்று மஜாவான சரக்கு. ஈழம் தொடர்பில் முன்பு துடிப்பாக இருந்துவிட்டு, பிறகு இத்தனை நாளாக வாளாவிருந்த உணர்வாளர்கள் எல்லாம் இந்த சரக்கை அடித்துவிட்டுத்தான் தொடர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த சரக்கை காய்ச்சும் திமுக -வோ எப்போதும் கொட்டாவி தான் விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது யாராவது உண்ணாவிரதம், போராட்டம் என்று பட்டக்ஸில் ஒரு எத்து விடும்போது தலையை சிலுப்பிக் கொண்டு எழுந்துவிடும். உடனே, ஒரு "அய்யகோ" அறிக்கையோ, அல்லது "இறுதி எச்சரிக்கையோ" வெளியிட்டு விட்டு இழுத்து போர்த்திக் கொள்ளும்.

இவைதவிர இன்னொரு நிலைப்பாடு ஒன்றும் உள்ளது. அது ஒரு அறிவிக்கப்படாத, ஆனால் உறுதியான நிலைப்பாடாகும். "கலைஞரின் உயிருக்கு புலிகளால் ஆபத்து என்ற ரா -வின் அறிக்கைக்கு முன் - அதற்குப் பின்" என்பதுதான் அது. இதில் நம்பகத்தன்மை இருக்கிறதோ இல்லையோ, இதை நம்புவதால் திமுக -விற்கு பலன் இருந்தது. இப்போதும் இருக்கிறது. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதுவதன் மூலம் அந்த அறிக்கையை நான் நம்பவில்லை என்று கலைஞர் பம்மாத்து செய்தாலும் உண்மையில் அவர் நம்புகிறார் என்றே தோன்றுகிறது. எந்த அளவுக்கு நம்புகிறார் என்றால் போரில் சாகும் ஈழத்தமிழனுக்கும் வீரமரணம் எய்தும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனம் மரத்துப் போகும் அளவுக்கு நம்புகிறார்.


புலி ஆதரவாளர்கள் எல்லாம் புலிகளுக்காக கவலைபடுவதுபோல் தெரியவில்லை. எந்த இக்கட்டான நிலையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று புலிகளுக்கு தெரியும். அதுபற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை. அப்பாவிகள் பற்றிய கவலையுடன் சேர்ந்து இப்போது "தமிழினத் தொலைவர்" பற்றிய கவலைதான் மிகவும் வாட்டுகிறது. "எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்" -என்ற வசனம் நியாபகத்திற்கு வருகிறதா?!!?!


நெருக்கடி சமயங்களில் அவ்வப்போது வரும் கலைஞரின் அறிக்கைகள் எல்லாம் சுப்பிரமணியன் சாமியின் அறிக்கைகள் போல டமாஷ் ஆகிவிட்டதால், மிக சீரியஸாக பதிவெழுதும் உடன்பிறப்பின் டண்டனக்கா அறிக்கை வந்தால் கும்மியடித்து பொழுதை போக்க வசதியாக இருக்கும். அவர்கிட்ட யாராவது சொல்லுங்கப்பு!!!!

11 comments:

Anonymous said...
January 24, 2009 at 5:31 PM  

:))))))))

ravi

Anonymous said...
January 24, 2009 at 6:13 PM  

Hei.. Tamashu!

//"ராஜீவ் கொலைக்கு முன் - அதற்குப் பின்"//

What is your take on Rajiv Gandhi assasination? Was Sivarasan member of LTTE? Do you approve the action of LTTE or not? Why LTTE has not issued any public denial about the same? What about Andan Balasingam's infamous comment about Rajiv Gandhi assasination before Balasingam's death?

ஸ்ரீதர்கண்ணன் said...
January 24, 2009 at 7:01 PM  

Ayyo Ayyo Mudiyala :))))

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 7:55 PM  

///:))))))))

ravi///

thanks ravi

Anonymous said...
January 24, 2009 at 8:19 PM  

//What is your take on Rajiv Gandhi assasination? Was Sivarasan member of LTTE? Do you approve the action of LTTE or not? Why LTTE has not issued any public denial about the same? What about Andan Balasingam's infamous comment about Rajiv Gandhi assasination before Balasingam's death?//

repeat

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 8:31 PM  

///What is your take on Rajiv Gandhi assasination? ///

என்னாது!!! ராஜிவ் காந்திய கொன்னுட்டாங்களா?!!!

////Was Sivarasan member of LTTE?///

இல்லை, அவர் எங்க ஏரியா நியுஸ் பேப்பர் ஏஜன்ட்.

////Do you approve the action of LTTE or not?////

LTTE -க்கு ஆக்ஷன் நல்லா வருது. அடுத்த படத்திலும் இதே மாதிரி பெர்பாமன்ஸ் காட்டனும்.

////Why LTTE has not issued any public denial about the same?///

LTTE பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. கிசு கிசு பற்றி விளக்கம் கொடுப்பதில்லை.

////What about Andan Balasingam's infamous comment about Rajiv Gandhi assasination before Balasingam's death?////

அவர் இறக்கும்போது நான் பக்கத்தில் இல்லை.

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 8:32 PM  

///Ayyo Ayyo Mudiyala :))))///

Thanks Sreethar Kannan.

குழலி / Kuzhali said...
January 24, 2009 at 9:29 PM  

நீங்கள் தற்போது எடுத்திருக்கும்பார்ப்பனிய அடிவருடி படத்தின் நியூஜெர்சியில் உங்களுக்கே விநியோக உரிமை வழங்க போகும் அண்ணன் உடன்பிறப்பே உன் கடிதத்தை எதிர்பார்க்கிறோம்...

//அப்பாவிகள் பற்றிய கவலையுடன் சேர்ந்து இப்போது "தமிழினத் தொலைவர்" பற்றிய கவலைதான் மிகவும் வாட்டுகிறது.
//
நிஜம்...

மோகன் கந்தசாமி said...
January 24, 2009 at 9:51 PM  

///தற்போது எடுத்திருக்கும்பார்ப்பனிய அடிவருடி படத்தின் நியூஜெர்சியில் உங்களுக்கே விநியோக உரிமை வழங்க போகும் அண்ணன்///

ஏற்கனவே குசேலன் விநியோக உரிமையால் நட்டமடைந்து தவிக்கும் எனக்கு ஒரு ஜம்போ ஜாக்பாட் அடிக்கும் என எதிர் பார்க்கிறேன்.

savuccu said...
January 25, 2009 at 12:55 AM  

சிரீதர் கண்ணன் "ஐயோ, ஐயோ முடியலை" என்று உங்கள் பதிவு குறித்து எழுதியிருக்கிறார்.

அதையே தான் நான் கூறுகிறேன்!
பதிவு குறித்தன்று!
அடையாள மில்லாக் குரலுக்கு நீங்கள் அளித்த விடைகளைப் படித்து!

மோகன் கந்தசாமி said...
January 25, 2009 at 1:55 AM  

////சிரீதர் கண்ணன் "ஐயோ, ஐயோ முடியலை" என்று உங்கள் பதிவு குறித்து எழுதியிருக்கிறார்.

அதையே தான் நான் கூறுகிறேன்!
பதிவு குறித்தன்று!
அடையாள மில்லாக் குரலுக்கு நீங்கள் அளித்த விடைகளைப் படித்து!////

நண்பர் சவுக்கு,

நீங்கள் பாராட்டுகிறீர்களா அல்லது விமர்சிக்கிறீர்களா என்று புரியவில்லை. பாராட்டி இருந்தால் அதற்கு நன்றி. விமர்சித்திருந்தால் பின்னூட்டத்திற்கு நன்றி. :-)))