எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரை அவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். இதன் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிட்டுள்ளேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!
ஒன்பது பதினொன்றல்ல;
நவம்பர் செப்டம்பரல்ல! - பகுதி 2
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 45,000 கிளைகளையும், பெரும் எண்ணிக்கையில் தான அமைப்புகளையும், இந்தியாவெங்கும் வெறுப்புத்தத்துவத்தை போதிக்கும் எழுபது லட்சம் ஆர்வலர்களையும் கொண்டுள்ளது. இதில் நரேந்திர மோடியும் ஒருவர். கூடவே, முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய், தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பல மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் என பலரும் இதில் உறுப்பினர்களாவர்.
மதச்சார்பற்ற ஜனநாயகத்தை குழப்ப இவர்கள் போதாதென்றால் குறுகிய வைராக்கியங்களை போதிக்கும் எண்ணற்ற முஸ்லீம் அமைப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆக, இந்தச்சமனில், பிரிவு-அ, பிரிவு-ஆ இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்த்டுத்தாக வேண்டும். நான் பிரிவு-ஆ வை தேர்ந்தேடுத்துக்கொள்கிறேன். அடுத்து, நமக்கு ஒரு களம் வேண்டுமல்லவா, எப்போதும்?
இந்த அணுஆயுத துணைக்கண்டத்தில் "பிரிவினை"தான் அந்தக்களம் . இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் அந்த "ராட்கிலிஃப்" எல்லைக்கோடு மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், வயல்கள், இனங்கள், நீரமைப்புகள், வீடுகள், குடும்பங்கள் ஆகியவற்றின் ஊடாக கிழித்துச் செல்லுமாறு ஒரே இரவில் வரையப்பட்டது. கிளம்பும் தருவாயில் இறுதியாக பிரிட்டன் நமக்கு விட்ட ஒரு எத்துதான் அது. பத்துலட்சம் மக்களின் படுகொலைக்கும், கற்கால வரலாற்றின் மிகப்பெரிய மனித இடப்பெயர்வுக்கும் காரணமானது அப்பிரிவினை. என்பது லட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு, உடுத்திய ஆடையோடு வெறுங்கையுடன் (முஸ்லீம்கள் புதிய இந்தியாவை விட்டும், இந்துக்கள் புதிய பாகிஸ்தானை விட்டும்) வெளியேறினர். அவர்கள் ஒவ்வொருவரும் விவரிக்க முடியாத வலியையும், வெறுப்பையும், திகிலையும், ஏக்கத்தையும் தம்முள் சுமந்து சென்றனர். அறுபடாமல் மிச்சமிருக்கும் தசைகளில் உள்ள புண், அந்த ரத்தம், நொறுங்கிய எலும்புகள் இவையாவும் நம்மை இன்னமும் குறுகிய வெறுப்பு, பழகிப்போன திகில், கூடவே சிறிது அன்பு இவற்றால் நம்மை இணைக்கின்றன. இவைதான் மீண்டுவர எந்த முகாந்திரமும் இதுவரை தென்படாத ஒரு அபாயத்தில் காஷ்மீரை தள்ளியுள்ளன. அது இதுவரை அறுபதாயிரம் பேரை கொன்றுள்ளது. "தூய்மை தேசமாகிய"(Land of Pure) பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசானது; விரைவில் அது ஊழல் நிறைந்த ஒன்றாக, கொடூர ராணுவ தேசமாக, வேற்று நம்பிக்கைகளை வெளிப்படையாக வெறுக்கும் நாடாக மாறிப்போனது. ஆனால், மறுபுறத்தில் விஷயம் அற்புதமாக கையாளப்பட்டது. இந்தியா பிறக்கும் முன்பிருந்தே, 1920 -களில் தொடக்கி, இந்தியாவின் ரத்த ஓட்டத்தில் பஜ்ரங்கியின் முன்னோர்கள் நஞ்சை கலந்து வந்தனர். 1990 -வாக்கில் அதிகாரத்தை கைப்பற்ற தயாரானார்கள். 1992 -இல் எல்.கே.அத்வானி தலைமையில் இந்துக்கும்பல் பாபர் மசூதியில் புகுந்து அதை இடித்தது. 1998 -இல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டது. அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான" போரால் காற்று இவர்கள் பக்கம் வீசத்தொடங்கியது. அது இவர்களை தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதித்தது. மேலும் படுகொலைகளை நிகழ்த்தவும் பாசிசத்தை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக நடைமுறையாக முன்வைக்கவும் வழிவகை செய்தது. இவையாவும் சர்வதேச நிதியத்திற்கு இந்தியா தனது சந்தையை திறந்துவிட்டிருந்த சமயத்தில் நிகழ்ந்தன. இவை சர்வதேச நிறுவனங்களின் நலன்சார்ந்த நடவடிக்கைகளேயாகும். அந்நிறுவனங்கள் கைக்கொண்டிருந்த ஊடகங்கள் இந்த தேசத்தை தவறே செய்யாத நாடாக சித்தரித்தன. இவை இந்து தேசியவாதிகளுக்கு ஊக்கத்தை கொடுத்ததுடன், தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக்கின. இதுதான் துணைக்கண்ட பயங்கரவாதத்தை உலாகலாவிய பயங்கரவாதத்துடன் இணைக்கச்செய்தது; ஒரு சரித்திர பின்புலத்தையும் கொடுத்தது. இப்போது மும்பைத்தாக்குதலையும் அதனுடன் இணைத்துவிட்டது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த எல்.கே. அத்வானி பாகிஸ்தானின் சிந்த் பகுதியிலிருந்தும் ஹபிஸ் சயீத் இந்தியாவின் சிம்லாவிலிருந்தும் வந்தவர்கள் என்பது உண்மையில் நமக்கு ஆச்சர்யத்தை தரக்கூடாது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியுடன் லஷ்கர்-இ-தோய்பா செய்துள்ளதற்கான திடமான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக, 2001 பாராளுமன்ற தாகுதளுக்குப்பின்னும், 2002 சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பின்போதும், 2006 சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பின்போதும், இந்திய அரசு அறிவித்தது போலவே மும்பை தாக்குதலுக்குப்பிறகும் அறிவித்தது. லஷ்கர் இதை மறுத்துள்ளபோதும் அதுதான் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் உளவுத்துறையினரின் கூற்றுப்படி "இந்திய முஜாகிதீன்" என்ற அமைப்பின் மூலம் லஷ்கர் இந்தியாவில் இயங்குகிறது. ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரியான ஷேக் முக்தார் அகமது, கொல்கத்தா வாசியான தௌசிப் ரகுமான் ஆகிய இரு இந்திய பிரஜைகள் மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, ஏற்கனவே பாகிஸ்தானை முழுப் பொறுப்பாக்கி வைக்கப்பட்ட தெளிவான குற்றச்சாட்டு லேசாக கலங்கியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி மட்டுமின்றி உலகின் பலநாடுகளில் பரவியுள்ள செயல் வீரர்கள், பயிற்சியாளர்கள், பயிற்சி ஏற்பாட்டாளர்கள், நிழலுலகினர், உளவு எதிர்ப்பு பிரிவினர் என ஒரு உலகளாவிய சிக்கலான வலையமைப்பு இச்சமயங்களில் முடிச்சவிழ்வது வழக்கம். இன்றைய உலகில், தீவிரவாத செயல்களின் சங்கிலித்தொடர்பை ஒரு குறிப்பிட்ட தேசத்தின் எல்லைகளுக்குள் சுருக்கி அதை மடக்குவதென்பது, கார்பரேட் நிறுவனமொன்றின் சொத்தை ஒரு குறிப்பிட்ட நாட்டு எல்லைக்குள் கைக்கொள்ள முயல்வதற்குச்சமம். இரண்டுமே சாத்தியமல்ல.
இம்மாதிரியான சூழ்நிலைகளில் வான் தாக்குதல் தீவிரவாத முகாம்களை அழிக்க உதவுமே ஒழிய, தீவிரவாதிகளை அல்ல. நிச்சயம் போரும் நலம்பயக்காது. (மேலும் நமது நேர்மையை ஒருமுறை உரசிப்பார்த்துக்கொள்வோம்; உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ இந்தியாவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்று).
ஆப்கன் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக முதலிலும் பிறகு எதிராகவும் நடைபெற்ற அமெரிக்க போர்களில் நிர்பந்த கூட்டாளியாக்கப்பட்ட பாகிஸ்தான் இத்தகு முரண்பாடுகளால் இன்று ஒரு உள்நாட்டுப்போரை நோக்கி தள்ளாட்டத்துடன் நகர்கிறது. சோவியத்துக்கு எதிரான புனிதப்போரில் அமெரிக்காவிற்கு பயிற்சித் தரகர்களாக செயல்பட்ட பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நிதி ஆதாரங்களை உருவாக்கி பெருக்கச்செய்தன. இவ்விதமாக பிராங்கைஸ்டீன் பிசாசுகளை முடைந்து உலக புழக்கத்தில் விட்டு தாம் வேண்டும்போது அவற்றை கட்டுக்குள் வைக்க அமேரிக்கா விரும்பியது. ஆனால் செப்டம்பர் 11 -இல் இப்பிசாசுகள் தம் சொந்த வீட்டில் நுழையும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. எனவே, ஆப்கானிஸ்தான் மீண்டும் புதிதாக கட்டமைக்கப்பட வேண்டியாதயுள்ளது. இப்போது மீண்டும் சீரழிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலிருந்து சிதிலங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் வழிந்தோடுகின்றன. வெடித்துச் சிதறவிருக்கும் ஒரு நாட்டை தான் ஆள்வதை பாகிஸ்தான் அரசாங்கம் கூட மறுக்கப்போவதில்லை. தீவிரவாத பயிற்சி முகாம்கள், நெருப்பை சுவாசிக்கும் முல்லாக்கள், இஸ்லாம் இவ்வுலகை ஆளவேண்டும்/ஆளும் என நம்பும் மனம்பிறழ்தோர் யாவரும் இரு ஆப்கானிய போர்களின் தீய விளைவுகளே. இந்தக் குரோதம் பாகிஸ்தான் அரசுமீதும், மக்கள் மீதும் மழையை பொழிவது போதாதென்று இந்தியாவிலும் கசிந்தோடுகிறது. இந்த சந்தர்பத்தில் இந்தியா போரை முடிவுசெய்தால் இந்த பிராந்தியம் எங்கும் அந்த மழை பொழிவு முழுமை பெற்றுவிடும். பாகிஸ்தான் திவாலாகி அழிந்துபட்டு அதன் கசடுகள் இந்திய கடற்கரைகளுக்கு அடித்துச்செல்லப்படும்; முன்னெப்போதுமில்லாத ஒரு அபாயத்தில் நம்மை பொருத்திவிடும். பாகிஸ்தான் வீழ்ந்தால் லட்சக்கணக்கான தேசம்சாராத அணுஆயுததாரிகளை நம் அக்கம்பக்கத்தவர்களாகப் பெறவேண்டும். மிகவும் சிக்கலான நம்மூர் மதவாதிகளின் விஷயத்தை மேலும் மோசமாக்கும்படியாக அதனுள் அமெரிக்க சாபக்கேட்டை அனுமதித்து, பாகிஸ்தான் செய்த அதே தவறை ஏன் இந்திய ஆட்சியாளர்களும் செய்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒரு வல்லரசு எப்போதும் கூட்டாளிகளை கொண்டிராது. இடைத்தரகர்கள் மட்டுமே அதற்கு உண்டு.
போரினால் விளையும் ஒரே நன்மை, அது நம் உள்நாட்டில் பெருகிவரும் பிரச்சினைகளை தவிர்க்க உதவும் ஒரு சிறந்த உபகரணம் என்பதே!
மும்பை தாக்குதல் நேரலையாக (மற்றும் சிறப்பு ஒளிபரப்பு) நமது அறுபத்தேழு 24-மணிநேர செய்தி ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டது; சர்வதேச ஊடகங்கள் எத்தனை என்று கடவுளுக்குத்தான் தெரியும். தொகுப்பாளர்கள் செய்தி அரங்கிலும், நிருபர்கள் சம்பவ இடத்திலும் முடிவில்லாத ஒரு உற்சாக வர்ணனையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தன்னை பலவானாக கருதிக்கொள்ளும் இந்த அணுஆயுத நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் காவல் துறை போன்றோரின் வீச்சின்மையை ஒரு சிறுவயதினரின் ஆயுததாரிக்குழு அம்பலப்படுத்தியதை அவநம்பிக்கையுடன் மூன்று இரவுகள் மூன்று பகல்களாக நாம் பார்த்துவந்தோம். இதை இவர்கள் ஒளிபரப்பும்போதே தீவிரவாதிகள் ஜாதி, மத, இன, தேச பேதமின்றி அப்பாவிகளை ரயில் நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், விடுதிகளிலும் கண்மூடித்தனமாக கொன்று குவித்தனர்.
5 comments:
///உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ //
அருந்ததி ராய் இப்படி வெள்ளந்தியாய் இருப்பாரென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. அவர் நர்மதா டேம் விவகாரத்திற்கு வெளியேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்!
///உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ //
அருந்ததி ராய் இப்படி வெள்ளந்தியாய் இருப்பாரென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. அவர் நர்மதா டேம் விவகாரத்திற்கு வெளியேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்!//
அருந்ததி ராய் மட்டுமல்ல நண்பரே , அனேக வட இந்தியர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் , அல்லது அப்படித்தான் வட இந்திய ஊடகங்கள் சொல்கின்றன.
என்ன செய்வது அவர்கள் ஹிந்தியர்கள் , நாம் தமிழர்கள்.
நம்மைப் பற்றி அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
"NALLA PATHIVU"....HIGHLY DIFFICULT IDEOLOGIES,FOR COMMON PUBLIC LIKE ME....HIGHLY INFORMATIVE FOR INTELLIGENT PEOPLE....!!!!
///அருந்ததி ராய் மட்டுமல்ல நண்பரே , அனேக வட இந்தியர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் , அல்லது அப்படித்தான் வட இந்திய ஊடகங்கள் சொல்கின்றன.///
வாருங்கள் நண்பரே! எங்கே போய்விட்டீர்கள் இவ்வளவு வருடங்களாய்? :-))))
நீங்கள் சொல்வது மிகவும் சரி, மற்றும் நாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்!
///NALLA PATHIVU"....HIGHLY DIFFICULT IDEOLOGIES,FOR COMMON PUBLIC LIKE ME....HIGHLY INFORMATIVE FOR INTELLIGENT PEOPLE....!!!!//
Thanks Sharma!
Post a Comment