இப்போதெல்லாம் சென்னையில் இன்டர்நெட் ஸ்பீட் சொம்மா தூசு கெளப்புதாமே! அதை நம்பி இந்த பதிவை வலையேற்றுகிறேன். வீடியோக்களை பார்த்து பிபீ எக்கச்சக்கமா ஏறும் சமயத்தில் யூ டியூப் திக்குச்சுன்னா அமிஞ்ச பீடி கணக்கா ஆர்வம் அடங்கிப்புடும் அல்லவா?
வேற்று மொழி பாடல்கள் பாஷை புரியலைன்னாலும் சில சமயங்கள் ஈர்ப்பதுண்டு. இதோ, என் நெஞ்சை நக்கிய ஒரு சில மாற்றான் வீட்டு கில்மாகள் உங்கள் பார்வைக்கு! கதற கதற கண்டு ரசியுங்கள்!
வீடியோவில் பாடி தோன்றும் கில்மா ஒரு ஜமைக்கா பிரஜை. சென்ற ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து போனதாக கூகுள் கூறுகிறது. இப்பாடல் ஸ்பானிய மொழியில் வெளியாகி பிறகு ஆங்கில ரீமிக்சுடன் ஹோபோக்கன் பார்களில் பட்டையை கிளப்பி வந்தது.இந்த இணைப்பில் உள்ள ஒரு பின்னூட்டத்தில் வரிகள் ஆங்கிலத்தில் உள்ளன. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் எனக்கொரு காப்பி அனுப்பவும்.
இந்த வீடியோவில், மிஸ்டர் மைக், தனது ஸ்பானிய ஒன் சைட் காதலிக்காக ஸ்பானிஷ் கற்றுக்கொண்டு அதை அவரிடமே பரிட்சித்து பார்கின்றார். அரை குறை ஸ்பானிஷ் -ல் அவர் பாடும் இந்த பாடல் மிக வேடிக்கையாக இருப்பதாக மொழி அறிந்த நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த இணைப்பில் அவரது பேட்டியையும் பார்த்துவிடுங்கள்.
இதுபோல் ப்ரீ லான்ஸ் யூ டியூப் சென்ஸ்சேசனஸ் நிறைய உண்டு. உதாரணத்திற்கு இந்த பிலிப்பினோ அமெரிக்கன் நர்சின் கைவண்ணத்தை பாருங்கள். அவரது வலைப்பூ இங்கே
ஒரு திருமண வீட்டில் நடைபெறும் இசை கச்சேரி இது. ஆடும் பெண்கள், அந்நிகழ்ச்சிக்கு வந்த திருமணமான பெண்கள். 'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம். ஆண்ட்டிகளை ரசிப்பதில் ஆட்சேபனை உள்ளவர்கள் அடுத்த வீடியோவிற்கு போகலாம்.
சம்பா நடனத்தையும் மேற்கத்திய நடனத்தையும் கலந்துகட்டி அடிக்கும் இந்த கோழிகள் எல்லாம் லத்தீன் அமெரிக்கர்கள். பிரேசில் மொழிப்பாடல் புரியாவிட்டாலும் மெட்டு நம்மூர் சினிமா பாடல்களை ஒத்துள்ளது. பிரேசிலுக்கே உரிய முக்கால் நிர்வாண நடனங்கள் இதில் குறைவு என்றாலும், தொடர்புடைய வீடியோக்களில் நிறைய உண்டு. அட! நிறைய என்று சம்பா நடனத்தை சொன்னேங்க!
என்ன, இந்த பாடலை எங்கோ கேட்டது போல் உள்ளதா? உங்கள் விஸ்டா ஆபரேட்டிங் சிஷ்டத்துடன் சாம்பிள் மியூசிக் சில வந்திருக்குமல்லவா, அவற்றை மறுமுறை கேட்டுப்பாருங்கள், அவற்றில் இது இருக்கும். மாலி இசைக்கலைஞரான ஹபிப் கொய்ட்டி கிட்டார் வாசிப்பதில் ஒரு விற்பன்னர். சாம்பிளுக்கு இந்த இணைப்பில் உள்ளதை கேளுங்கள்.
என்ரிக் இக்லெஸியஸை பற்றி அறிமுகம் தேவை இல்லை. இவர் 2002 -லிருந்தே இந்தியாவில் ரொம்ப பேமஸ். ஸ்பானிய மொழியிலமைந்த ஒரிஜினல் பாடலின் ஆங்கில வடிவத்திற்கு மூன்று விதமான பாடல் சூழல் உள்ளன. இந்த வீடியோவில் உள்ள சூழல் ஒரு மெக்சிகோ நாட்டு கிராமப்புறம். மெக்சிகன் நடிகை சல்மா ஹயாக், அக்கால நெவேடா போலீஸ்காரர் போன்ற ஷெரீப் போன்றோர் வருவதும் மெக்சிகன் சூழலுக்கு வலு சேர்ப்பவையாயிற்றே! வரிகள்
அறுபதுகளின் இசைக் கலைஞர் ரே சார்லிஸ் ஒரு பார்வையற்ற பியானிஸ்ட். ஹிட் த ரோட் ஜாக் (Hit the Road Jack) என்ற இந்த பாடல் மிகச்சிறந்த ஐந்நூறு பாடல்களில் ஒன்றாக வரிசைபடுத்தப் பட்டுள்ளது. வரிகளை இங்கே பாருங்கள்
இருவரும் ரட்கர்ஸ் பல்கலை கழக மாணவிகள் என கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்தது இல்லை. தொன்னூறுகளில் இந்தியாவில் சக்கை போடு போட்ட 'தீ தீ' என்ற அரபு பாடல் வரிகளும் மெட்டும் லேசாக இப்பாடலில் தென்படுகின்றதா? வரிகளை இங்கே பாருங்கள்
சீனா வியட்நாம் எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்த உய்கூர் இனத்தவர். இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முழுக்கவும் வேறான தேசிய இனம் சீன வல்லரசில் எம்மாதிரியாக காலம் தள்ளுகிறது என்ற தகவல் இணையத்தில் கிடைக்கலாம். இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி வேண்டாம்.
இப்பாடலில் சீன பாதிப்பு தெரிந்தாலும் இது தனித்தன்மை வாய்ந்த பாரசீக நடனமாக கூறுகிறார்கள்.
பாகிஸ்தானின் மிகப்பிரபலமான பாடகர். இது ஒரு சாமி பாட்டு மாதிரி தெரியுது, மொழி தெரிந்தவர்கள் கண்டறிந்து சொன்னா தேவலை
தாலேர் மெகந்தி பற்றி நான் எது சொன்னாலும் அது புதிய செய்தியாக இருக்காது, எனவே அடுத்த வீடியோவுக்கு அப்பீட்டு!
இது ஒரு ஹிந்தி பாட்டு.(அப்படியா!)
திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் குழுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய்,
முழங்கு சங்கே!!!
5 comments:
திருமணக் கச்சேரி நல்லா இருக்கு....மிச்சம் இருக்குறதை இனிதான் கேட்கணும்! நன்றி!!
பழமைபேசி said...
//'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம்//
இதெல்லாம் ஒன்னுமே இல்ல. நான் சைப்ரஸ்ல அவிங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு போயிருக்குறேன். பட்டையக் கெளப்புவாங்க.... அதைவிட, டொரண்டோவில எங்ககூடப் படிச்ச சிரியப் பொடியன் கலயாணத்துக்குப் போயிருந்தோம். முழுக்க முழுக்க ஆடலும் பாடலுந்தான்...
இந்தக் காணொளியில வர்ற பாடகிதான் ரொம்பப் பிரபலம் அப்ப...
http://www.youtube.com/watch?v=5UjRoWpHAE8
////இதெல்லாம் ஒன்னுமே இல்ல. நான் சைப்ரஸ்ல அவிங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு போயிருக்குறேன். பட்டையக் கெளப்புவாங்க.... அதைவிட, டொரண்டோவில எங்ககூடப் படிச்ச சிரியப் பொடியன் கலயாணத்துக்குப் போயிருந்தோம். முழுக்க முழுக்க ஆடலும் பாடலுந்தான்...////
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பொதுவான எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது.
அராபிய மெட்டுக்கள் எப்போதும் ஈர்ப்பனவாகவே உள்ளன. ஏ. ஆர். ரகுமானின் சில பாடல்கள் இவற்றின் தாக்கத்தால் வந்ததாக சொல்லக்கேள்வி. யூ டியூப் -ல் உள்ள ஜனரஞ்சக அரபிப் பாடல்களே இப்படி என்றால் கமர்சியல் பாடகர்களது இசை எப்படி இனிமையோ!!!
ஜனரஞ்சக அரபிப் பாடல்களே இப்படி என்றால் கமர்சியல் பாடகர்களது இசை எப்படி இனிமையோ!!!
//
நம்ப சிற்பி போட்ட பாட்டெல்லாம் பெரும்பாலும் அவிங்க பாட்ட சுட்டு போட்டதுதான்.
அப்புறம் பாட்டைவிட அந்த ஃபிகர்களை மிகவும் இரசித்தேன் என்பதை அடிப்படை நேர்மையோடு ஒத்துக்கொள்கிறேன் :)))
////அப்புறம் பாட்டைவிட அந்த ஃபிகர்களை மிகவும் இரசித்தேன் என்பதை அடிப்படை நேர்மையோடு ஒத்துக்கொள்கிறேன் :)))///
அப்துல்லா ஜி,
கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் அலர்ஜி ஆகிடனும் புரியுதுங்களா!
Post a Comment