"ச்சும்மா ட்டமாஷ்" மின்னிதழின் சென்னை நிருபர் மாலினி பார்த்தசாரதிக்கு திராவிட திலகம், பதிவர் திரு புதுகை அப்துல்லா அளித்த பேட்டி பதிவுலக நண்பர்களுக்காக இப்பதிவில் வெளியாகிறது.
மாலினி: வணக்கம், திரு புதுகை அப்துல்லா, உங்க பெயரே வித்தியாசமா இருக்கு, பெயர் காரணம் சொல்லுங்க!
புதுகை: வணக்கம் மாலினி அண்ணே! என் இயற்பெயர் கூட என் ஊர் பெயரையும் சேர்த்திருக்கேன் அண்ணே! அதான் என் பெயர் அப்படி இருக்கு.மாலினி: அப்படியா? அப்துல்லா என்ற ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லையே! எந்த மாவட்டத்தில் இருக்கு?
புதுகை: அண்ணே! இந்த நக்கல் எல்லாம் 'ச்சும்மா ட்டமாஷோ' -ட நிறுத்திக்கணும், புரிஞ்சிதா! புதுகை ஊரு, அப்துல்லா பேரு!...ம் அடுத்த கேள்வி!மாலினி: நீங்க ஏன்! எல்லோரையும் அண்ணே! அண்ணே! என அழைக்கிறீர்கள்?
புதுகை: தமிழ்மனத்தில் இருக்கிற எல்லாருக்கும் அது ஏன்னு தெரியும், உங்களுக்கு தெரியாதா?மாலினி: அது தெரியும்! ஆனா என்னையும் அண்ணே -ன்னு கூப்பிடுறீங்களே! அது கொஞ்சம் ஓவரா தெரியலையா?
புதுகை: உங்கள மட்டும் இல்ல, பாரிஸ் பதிவர் ராப் -ஐ கூட அண்ணேன்னு தான் கூப்பிடுவேன், அவரும் என்னை தங்கச்சி -ன்னுதான் கூப்பிடுவார்.மாலினி: !!!!!!!
புதுகை: என்னாண்ணே! பேஸ்த்தடிச்சு போய்ட்டிங்க! பயப்படாம அடுத்த கேள்விய கேளுங்க!மாலினி: ஈழம் பிரச்சினைக்கு என்ன காரணம் -னு நீங்க நினைக்கிறீங்க?
புதுகை: தங்களை எப்போதும் சுத்த சுயம்புக்களாக நினைத்துக் கொள்வதால் எந்த இடத்தில்,எந்த நிலையில் இருந்தோம், இப்போது இருக்கின்றோம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் உணர்வதே இல்லை. இதுதான் பிரச்சினை!மாலினி: புதுகை சார்! உங்க பதில் எனக்கு புரியலைன்னாலும் பரவாயில்ல, படிக்கறவங்களுக்காவது புரிய வேணாமா? குழப்பாம சொல்லுங்க, ஈழப்பிரச்சினைக்கு என்ன காரணம்?
புதுகை: ஓட்டு அரசியலுக்கு வந்தாச்சு. கம்முன்னு ஈழம், தமிழ் -ன்னு வாய்ச்சவடால் விட்டு ஓட்டு பொறுக்காம எதுக்கு கம்யூநிஸ்ட்டுகள் உண்ணாவிரதம் இருக்கணும்? அதனால வந்த பிரச்சினை தான் இது. எப்படியோ பிரச்சினை ஒரு வழியா தீர்ந்தது. நிம்மதியா இருக்கு அண்ணே!மாலினி: என்னது பிரச்சினை தீர்ந்ததா? என்ன சொல்றீங்க!
புதுகை: அதான்! பாசில் வந்துட்டு போனாரே! பிரச்சினை தீர்ந்த மாதிரிதான! என்னண்ணே, இல்லன்றிங்களா? (முறைக்கிறார்)மாலினி: சரி என்னமோ போங்க! பிரச்சினையை யார் தீர்த்தது -ன்னு நினைக்கிறீங்க?
புதுகை: வேற யாரு? எல்லாம், எங்க பாஸ் தான் காரணம்.மாலினி: (உண்மையில் கடுப்பாகிறார்) இந்த ஒரு தரம் மன்னிச்சிடுங்க புதுகை, இனி உங்கள பேட்டி எடுக்கவே வர மாட்டேன். தயவு செய்து, உங்க பாஸ் எப்படி காரணம் -னு விளக்குறீங்களா?
புதுகை: சரி சரி அழாதீங்க அண்ணே! சொல்றேன். எங்க பாஸ் எனக்கு ஒரு வாரம் லீவு கொடுக்காம இருந்திருந்தா நான் பாசில் -லோட படகு வீட்டுக்கு போய் டேரா போட்டிருக்க மாட்டேன். போகாம இருந்திருந்தா பாசில் அலறி அடிச்சிட்டு டெல்லி வந்திருக்க மாட்டார். ஈழம் பிரச்சினை தீர்ந்திருக்காது அல்லவா?மாலினி: அண்ணே! உங்க கால காட்டுங்க!!! (மவுன மாகிறார்)
புதுகை: என்னண்ணே! கேள்வி அவ்வளவு தானா?மாலினி: இன்னும் ஒரு கேள்வி இருக்குண்ணே!
புதுகை: என்ன! "அந்த பாசில் வேற, இந்த பாசில் வேற, அப்பறம் எப்படி உங்க பாஸால பிரச்சினை தீர்ந்தது?" அப்படின்னு கேட்க போறிங்களா?மாலினி: ச்சே ச்சே! நான் ஏன் அப்படியெல்லாம் கேட்கப்போறேன்! ஏதாவது மொக்கை பதில் இல்லாமையா இருக்கும் உங்க கிட்ட?
புதுகை: புரிஞ்சா சரி! கேளுங்கண்ணே உங்க கடைசி கேள்விய.மாலினி: "ச்சும்மா ட்டமாஷ்" வலைப்பூ பற்றி உங்கள் கருத்து.
புதுகை: பதிவு தலைப்புல எவன் பேரையாவது போட்டு வம்பிழுக்கறது, எவன் பதிவிலாவது போய் சண்டை வாங்கிட்டு வர்றது -இதெல்லாம் பண்ணாம பதிவு எழுதினா உங்க வலைப்பூ -வை படிக்கிறத பத்தி யோசிக்கலாம்.
26 comments:
டமாசா ஒரு பெரிய பிரச்சினைய தீத்துட்டாரே.
வருங்கால முதல்வர் ஜி,
அமெரிக்க முதல்வர் யாருன்னு மாலும் ஹை ஆர் மாலும் நஹி ஹை?
/மாலும் ஹை ஆர் மாலும் நஹி ஹை?/
மேல இருக்கது என்னங்க ஆட்சி பாசையா.இத இலங்கை தமிழர் ஏன் கத்துக்கல.அதான் பிரச்சினையோ
இந்த முறை இலங்கையின் உண்மை நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிற்கு எடுத்து செல்ல ஏதாவது செய்யவேண்டும்.
குடுகுடுப்பை ஜி
/////மாலும் ஹை ஆர் மாலும் நஹி ஹை?
மேல இருக்கது என்னங்க ஆட்சி பாசையா.இத இலங்கை தமிழர் ஏன் கத்துக்கல.அதான் பிரச்சினையோ///
அது வந்துங்க, சிங்களவர்கள் தமிழர் மீது இந்திய திணிச்சாங்க, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ன்னு கூச்சல் போட்டாங்க!, அப்பறம்....ஆங்.. இந்த பிராமண சதி வேற! இன்னும் வேற என்னமோ இருக்குமே!....ஆங்..பகுத்தறிவு மேட்டர் ...
இப்படி பல காரணிகள்...உண்டு சார்..
எவ்வளவு பெரிய பிரச்சனைய எவ்வளவு சுலபமா தீத்தாச்சு
இனிமேல கொண்டாட்டம் தான்
ஆஹா.. அப்துல்லா வெளிநாட்டு இணைய இதழுக்கெல்லாம் பேட்டி குடுக்க ஆரம்பிச்சிட்டாரா?
//
ச்சே ச்சே! நான் ஏன் அப்படியெல்லாம் கேட்கப்போறேன்! ஏதாவது மொக்கை பதில் இல்லாமையா இருக்கும் உங்க கிட்ட?
//
கலக்கல்
தம்பி அப்துல்லாவை விமர்சிக்கும் இந்தப் பதிவை கண்டிக்கிறேன்.
(யாருக்கும் சொல்லாதீங்க. சூப்பராவே இருந்தது உங்க கற்பனை பேட்டி.:) )
யோவ் அண்ணே உன்னைய தெரியாம கந்தசாமிக்குறதுக்குப் பதிலா சண்டைசாமின்னு சொல்லிட்டேன். அதுக்காக ஏய்யா என்னைய கூப்புட்டு வச்சு வம்பிழுக்குற???
சரி...சரி..அப்புறம் அந்த பேட்டி கருமம் நல்லாத்தான் இருந்துச்சு :))
ஹா ஹா ஹா சூப்பர்:):):)
பசிலையும் பாசிலையும் கலந்துக் கட்டி காமடியா உங்களுக்கு:):):)
//அப்படியா? அப்துல்லா என்ற ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லையே! எந்த மாவட்டத்தில் இருக்கு//
சரியாத்தான் கேட்டிருக்காங்க. இவர் வாயத் தொறந்தாலும் இப்டித்தான் கடி சொல்ற கொலவெறியோடவே திரிவார்:):):)
இங்க உக்காந்து எலக்ஷன் ரிசல்டப் பத்தி சேட்டிங்கா:):):)
//எவன் பதிவிலாவது போய் சண்டை வாங்கிட்டு வர்றது//
இது சூப்பர். இந்த மாசக் கோட்டா எப்போ எங்கே துவங்கப்படும்?:):):)
//அப்புறம் அந்த பேட்டி கருமம் நல்லாத்தான் இருந்துச்சு//
அண்ணன் தன்னடக்கமா நன்னி சொல்றாராமா:):):)
me the 15th:):):)
///எவ்வளவு பெரிய பிரச்சனைய எவ்வளவு சுலபமா தீத்தாச்சு
இனிமேல கொண்டாட்டம் தான்////
ஆமாங்ணா! இல்லையா பின்ன!
////ஆஹா.. அப்துல்லா வெளிநாட்டு இணைய இதழுக்கெல்லாம் பேட்டி குடுக்க ஆரம்பிச்சிட்டாரா?////
அவர் எங்க கொடுத்தாரு! எல்லாம் நாமலே தான்! பின்ன மயிலே மயிலே -ன்னா இறகு போடுமா?
அப்பரம் வெண்பூ, உங்க சம்பந்தி பதிவு நிலவரம் எப்படி?
///தம்பி அப்துல்லாவை விமர்சிக்கும் இந்தப் பதிவை கண்டிக்கிறேன்.///
என்னங்க இது பாசமலர் பார்ட் டூ - வா? :-)))))))
///(யாருக்கும் சொல்லாதீங்க. சூப்பராவே இருந்தது உங்க கற்பனை பேட்டி.:) )///
நன்றிங்க புதுகை தென்றல் அவர்களே! உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன்! அடிக்கடி வாங்க!
////யோவ் அண்ணே உன்னைய தெரியாம கந்தசாமிக்குறதுக்குப் பதிலா சண்டைசாமின்னு சொல்லிட்டேன். அதுக்காக ஏய்யா என்னைய கூப்புட்டு வச்சு வம்பிழுக்குற???////
எல்லாம் அப்படித்தான்! இதுக்கு விளக்கம் எல்லாம் கொடுக்க முடியாது! :-)))))
///சரி...சரி..அப்புறம் அந்த பேட்டி கருமம் நல்லாத்தான் இருந்துச்சு :))///
கருமம், நல்லா வேற இருந்துச்சா? :-)))) (நன்றி அப்துல்லா அண்ணே!)
////பசிலையும் பாசிலையும் கலந்துக் கட்டி காமடியா உங்களுக்கு:):):)////
வாங்க ராப்! அந்த இத்துப்போனவன் பேரு பசிலா? நான் பாசில் -ன்னு தப்பா புரிஞ்சிகிட்டேனே! :-)))
////சரியாத்தான் கேட்டிருக்காங்க. இவர் வாயத் தொறந்தாலும் இப்டித்தான் கடி சொல்ற கொலவெறியோடவே திரிவார்:):):)///
அவர் பிட்ட எடுத்து அவருக்கே போட்டாச்சு இல்ல! (இந்த வசனத்த எங்கயோ கேட்ட மாதிரி இருக்குங்களா?)
///இங்க உக்காந்து எலக்ஷன் ரிசல்டப் பத்தி சேட்டிங்கா:):):)///
!??!!???!!
////இது சூப்பர். இந்த மாசக் கோட்டா எப்போ எங்கே துவங்கப்படும்?:):):)////
இதோ இப்பவே! உங்க பதிவுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்!
////me the 15th:):):)/////
மீ த இருவத்தினாலு! ங்கக்ங்கா!
me the 25TH:):):)
கந்த சாமி அண்ணே,
நீங்க காமெடிக்குன்னு எழுதியிருக்கீங்க, ஆனா நிறையப் பேருக்கு ஈழப்பிரச்சனையின்னா என்னான்னு கூடத் தெரியல, சரி தெரியலன்ன சும்மா இருக்கலாம்ல, அதுவும் இல்ல, இவனுங்க இலவச ஆலோசனை வேற சொல்லுறாய்ங்க.
உங்கப் பதிவ படிக்கிறப்ப உண்மையிலயே இப்டித்தான் நிறைய பேரு இருக்கிறதலா இது காமெடியாத் தோணல. ஆனா அதுக்கு அப்துல்லா அண்ணண் பெயர பயன்படுத்தியிருக்கதுதான் புரியல. அவரு வெறும் மொக்கையா எழுதுறவரு இல்ல எல்லாம் தெரிஞ்சவருன்னு நிருபிக்க உங்கப் பதிவுல எழுதுன திராவிடமும் கம்யூனிசமும் கட்டுரை ஒன்னு போதாது?
Post a Comment