Sunday, May 17, 2009

"ரொம்ப ஆடாதீங்கடா!" அல்லது "படுத்திக்கொண்டே கெலித்த கொலைஞர்"

·

இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி அதன் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி, அல்லாது அது தொடர்ந்து செய்து வரும் தமிழின துரோகத்துக்கு கிடைத்த அங்கீகாரமல்ல என்பதை கருணாநிதி அறிந்திருப்பார். ஆனால் இந்த அல்லக்கைகள் அதை புரிந்துகொள்ளாது அடிக்கும் கூத்திருக்கிறதே! அது சல்பேட்டா அடித்துவிட்டு பாடைமுன் போடும் டப்பாங்குத்திற்கு சமானம்.

அறிவாலயம் வாசலில் வேர்கடலை விற்பவன், பேங்க் லோனுக்கு கமிசன் வாங்கித்தருபவன், சத்துணவு முட்டையை திருடித் தின்பவன், டாஸ்மார்க் கணக்கை செட்டில் பண்றவன், கள்ள ஓட்டுக்கு ஆள் புடிப்பவன், கவர்ல அமவுண்ட் போட்டு வீட்டுக்கு வீடு டெலிவரி பண்றவன், ரோட் காண்ட்ராக்ட்டில் எடுபிடி வேலை செய்றவன், முற்போக்கு அடையாளத்திற்கு அண்டிப்பிழைப்பவன், ரொம்ப யோசித்து தோல் தடிச்சவன் என்று ஆங்காங்கே களியாட்டம் போடும் கலகக் கண்மணிகள் எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பு அல் இல்லாமல் அரண்டு போய் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், விடிந்தால் ஒரு நாடகம், போசாய அதற்கு ஒரு சப்பை கட்டு என்று கட்சித்தலைமை செய்து வந்த தத்துபித்துகளுக்காக இவர்கள் இணையம் எங்கும் அடிவாங்கிக் கொண்டிருந்தார்களல்லவா? இன்று இவர்கள் போடும் எக்காளம் வெற்றி கொண்டாட்டமல்ல! தலை தப்பியதற்கான ஆட்டம்.


(தொடரும்)

43 comments:

அபி அப்பா said...
May 17, 2009 at 11:27 PM  

ஆட்டம் ஆடியது நீங்கதான்!

வெற்றிக்கு பின்னும் அமைதியா இருப்பது நாங்க தான்!

எப்படியோ உங்க அரிப்புக்கு மருந்தா பதிவு போட்டு தாக்குங்க தல!

கோவி.கண்ணன் said...
May 17, 2009 at 11:33 PM  

"படுத்துக் கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்" திமுகவினரை ரொம்பவே படுத்தி இருக்கும் போல. அதே போல் பெருமை எங்களுக்கும் என்கிறார்களோ. :)

தேர்தல் நேரத்தில் படுத்து இருந்தவர் இப்ப தெம்பாக டெல்லிப் போறாராம்.

Muthu said...
May 17, 2009 at 11:39 PM  

வாங்க மோகன்,

எழுதுங்க...உங்களுக்கு இல்லாத உரிமையா? அந்த பழைய பதிவுல என் பதிவு லிங்க் கொடுக்காம விட்டுட்டீங்க..இதுலயாவது கொடுங்க

மோகன் கந்தசாமி said...
May 17, 2009 at 11:45 PM  

///ஆட்டம் ஆடியது நீங்கதான்!
வெற்றிக்கு பின்னும் அமைதியா இருப்பது நாங்க தான்!
எப்படியோ உங்க அரிப்புக்கு மருந்தா பதிவு போட்டு தாக்குங்க தல!///

அது ஆட்டமல்ல, அபி அப்பா!! வெறுப்பின் உச்சம், இப்போ நீங்கள் போடுவதுதான் ஆட்டம்! சாவு வீட்டில் போடும் ஆட்டம்.

மோகன் கந்தசாமி said...
May 17, 2009 at 11:52 PM  

////"படுத்துக் கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்" திமுகவினரை ரொம்பவே படுத்தி இருக்கும் போல. அதே போல் பெருமை எங்களுக்கும் என்கிறார்களோ. :)///

அந்த வனவாசத்தை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், இண்டன்சிட்டி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கடைசியில் பியூசாகிவிடும். இப்போதைக்கு போதையில் நியாபகம் வராது.

///தேர்தல் நேரத்தில் படுத்து இருந்தவர் இப்ப தெம்பாக டெல்லிப் போறாராம்.///

வீட்டு பிள்ளைகளுக்கு துணி மணி வாங்கப் போயிருக்கிறாராம் கோவி. அப்பறம், எல்லாத்துக்கும் ஈக்குவலா பண்ணலன்னா முடியை பிய்த்துக் கொண்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்களே! முதலில் அவர்கள் பிரச்சினையை சால்வ் பன்றதுதான் தமிழ் நாட்டுக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் அடித்துக் கொண்டு நம்மேல் விழுந்து புடுங்கக்கூடும்.

மோகன் கந்தசாமி said...
May 17, 2009 at 11:57 PM  

////வாங்க மோகன்,
எழுதுங்க...உங்களுக்கு இல்லாத உரிமையா? அந்த பழைய பதிவுல என் பதிவு லிங்க் கொடுக்காம விட்டுட்டீங்க..இதுலயாவது கொடுங்க///

:-))) என் பதிவுக்கு என்னையே ஸ்மையிலி போட வச்சிட்டீங்க! (என்ன பதில் சொல்றதுன்னே தெரியலையே!)

Muthu said...
May 18, 2009 at 12:06 AM  

மோகன்,

ஊக அடிப்படையில் மரண அடி நீங்க கடந்த மாதம் கொடுத்தபோது இப்போது கடைசி ரிசல்ட் பார்த்துட்டு நாங்க கொலைவெறி பதிவு போடக்கூடாதா என்ன?

ஆமா ரிசல்ட் வந்து ரெண்டு நாள் ஆச்சே! இப்ப வந்து கும்முறீங்க எங்கள....அப்செட்டா என்ன?

நாங்கதான் அறிவாலயம் வாசல்ல சுண்டல் விக்கிறோம். விடுமுறை நாளில் இணையத்திற்கு வரமுடியாது.

நீங்க ஏன் சரியாக ஆபிசு டைமில் ( அ) நாள்ல வர்றீங்க :))


விடுங்க நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினைக்கு நாம சேர்ந்து குரல் கொடுக்க வேண்டி வரலாம்.

Anonymous said...
May 18, 2009 at 12:32 AM  

அய்யோ பாவம். முத்திப் போச்சி. :(

Thamizhan said...
May 18, 2009 at 12:37 AM  

Evanda athu abi appa... Venna... sentiment'a peru muta payalukku.. aadungada aadunga,.... abi appa mathiri mutal madayangal irukum varai aada than siveergal...
Gobi kannan sari sonnar...
Mohan sariyana nethi adi,....

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 12:50 AM  

///ஊக அடிப்படையில் மரண அடி நீங்க கடந்த மாதம் கொடுத்தபோது ///

உங்கள் கூட்டணி தோற்கும் என்று ஆணித்தரமாக நாங்கள் கூறவில்லை. அரசியல் அறியாமை எங்களுக்கு இல்லை. ஆனால் தோற்க வேண்டும் என்ற கொலை வெறி இருந்தது. அதற்காக ஏனையோரைப்போலவே நானும் சிறியதாக முயற்சித்தேன். கடந்த இரு மாதங்களில் ஒரு முப்பதுக்கும் மேற்பட்ட திமுக அனுதாபிகளுக்கு கருணாநிதி வெறுப்பை ஊட்டியிருக்கிறேன். நாங்கள் கொடுத்தது மரண அடி அல்ல, மரண பீதி மட்டுமே! எங்களுக்கும் சூழ்ச்சியும், அரசியல் தொழில் நுட்பமும், பணமும், ஆள்பலமும், அதிகாரமும் இருந்திருந்தால்....

///இப்போது கடைசி ரிசல்ட் பார்த்துட்டு நாங்க கொலைவெறி பதிவு போடக்கூடாதா என்ன?///

நான் சொல்லியா நிறுத்த போகிறீர்கள். இதோ அங்கெ போராளிகள் பற்றி துயர செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கும் ஒரு கவிதைபாடி மற்றொரு சாபத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.

////ஆமா ரிசல்ட் வந்து ரெண்டு நாள் ஆச்சே! இப்ப வந்து கும்முறீங்க எங்கள....அப்செட்டா என்ன?////
பலரைப் போலவே நானும் அப்செட் தான். இரண்டு நாட்களாக அல்ல. சில மாதங்களாக.

///நீங்க ஏன் சரியாக ஆபிசு டைமில் ( அ) நாள்ல வர்றீங்க :))///
சும்மா தான். :-))

////விடுங்க நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினைக்கு நாம சேர்ந்து குரல் கொடுக்க வேண்டி வரலாம்.////
எதற்கு? "பாப்பானை கும்முறது" -தானே!

மதிபாலா said...
May 18, 2009 at 12:53 AM  

நண்பர் மோகன் கந்தசாமி

இது திமுகவின் துரோகத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கலைஞர் கூட நினைத்திருக்க மாட்டார். அதனால் தான் தேர்தல் முடிநத பிறகும் கூட ஈழத்துக்கு அரசியல் தீர்வு என்று அவர் குரல் கொடுத்தார்.

கலைஞர் இனியாவது தன் தவறை சரி செய்வார் என்ற நம்பிக்கை எம் போன்ற உடன்பிறப்புக்களுக்கு உண்டு.

பார்ப்போம் ,
காலம் பதில் சொல்லும்!

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 12:54 AM  

////Evanda athu abi appa... Venna... sentiment'a peru muta payalukku.. aadungada aadunga,.... abi appa mathiri mutal madayangal irukum varai aada than siveergal...
Gobi kannan sari sonnar...
Mohan sariyana nethi adi,....////

அனானி தெய்வமே! பேரச்சொல்லி கும்மறதா இருந்தா உங்க பதிவில் கும்முங்க!

இல்ல, கோத்து வுடற வேலை செய்கிறவரா இருந்தா, உங்கள் அடுத்த பின்னூட்டத்தில் தெரிந்துவிடும். பிறகு மட்டுறுத்தப் படும்.

உதயசூரியன் said...
May 18, 2009 at 12:59 AM  

ஆட்டம் ஆடியது நீங்கதான்!

வெற்றிக்கு பின்னும் அமைதியா இருப்பது நாங்க தான்!

எப்படியோ உங்க அரிப்புக்கு மருந்தா பதிவு போட்டு தாக்குங்க தல!

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 1:00 AM  

///இது திமுகவின் துரோகத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கலைஞர் கூட நினைத்திருக்க மாட்டார். அதனால் தான் தேர்தல் முடிநத பிறகும் கூட ஈழத்துக்கு அரசியல் தீர்வு என்று அவர் குரல் கொடுத்தார்.///

அந்த குரலை கொடுக்காமல் கொஞ்ச நாளைக்கு இருக்கச் சொல்லுங்கள் மதி.!!!

///கலைஞர் இனியாவது தன் தவறை சரி செய்வார் என்ற நம்பிக்கை எம் போன்ற உடன்பிறப்புக்களுக்கு உண்டு.

பார்ப்போம் ,
காலம் பதில் சொல்லும்!////

என்னமோ போங்க மதிபாலா!

எம்.எம்.அப்துல்லா said...
May 18, 2009 at 1:26 AM  

மோகன் அண்ணே மலையாளிகள் சிலர் செய்யும் துரோகம் பற்றி நான் பதிவு போட்டபொது என்னைப் பலரும் பெண்டு நிமித்தினார்கள்.நீங்கள் வந்து என்னைக் காப்பாத்துவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.ஆனா நீங்க அந்த நேரத்தில் ஆளையே காணோம். அதுக்காக உங்களுக்கு என் மேல் வெறுப்பென்றோ, அல்லது நீங்க என் எதிரி என்றோ அர்த்தமா? அதேதான் தலைவர் கலைஞர் நிலையும்.

SUBBU said...
May 18, 2009 at 1:33 AM  

//அபி அப்பா said... May 17, 2009 11:27 PM
ஆட்டம் ஆடியது நீங்கதான்!

வெற்றிக்கு பின்னும் அமைதியா இருப்பது நாங்க தான்!

எப்படியோ உங்க அரிப்புக்கு மருந்தா பதிவு போட்டு தாக்குங்க தல!
//

ஒரு இனத்தை அழிப்பதில் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள் :((


//தேர்தல் நேரத்தில் படுத்து இருந்தவர் இப்ப தெம்பாக டெல்லிப் போறாராம்.//

100% சரியான் கேள்வி.

லக்கிலுக் said...
May 18, 2009 at 1:38 AM  

நல்லா காமெடியா இருக்கே? :-)

இப்படியே இண்ணும் ரெண்டரை வருஷத்துக்கு கண்டினியூ பண்ணுங்க!

Muthu said...
May 18, 2009 at 2:02 AM  

hmm..ok..சில விஷயங்களை இப்போ நான் பேச விரும்பாதனால மீ த எஸ்கேப் :)

யாரை கும்முறதுன்னு அப்பப்ப முடிவு எடுப்போம்.ஏன் பாப்பானை கும்ம கூடாதா என்ன? கும்முறதுக்கு நான் சாதி பாக்கறதில்லை. டாக்குடரை கேளுங்க சொல்லுவாரு.

கடைசி பதிவையும் பார்க்கவும்.நன்றி

Anonymous said...
May 18, 2009 at 4:24 AM  

Namma thalaivar thiruma..

Sonia helicoptarai parthu "Annai Sonir" "Annai Sonia" nnu 5 murai sonnarame...

Chinna pasanga plane patha aaaiiii plane poguthu paar nnu solluvangale andha madhiri..

Athai pathi oru pathivu ezuthi thalaivarukku perumai serkka kudatha..Thalaivar vera win pannittar...

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 10:39 AM  

///ஆட்டம் ஆடியது நீங்கதான்!
வெற்றிக்கு பின்னும் அமைதியா இருப்பது நாங்க தான்!
எப்படியோ உங்க அரிப்புக்கு மருந்தா பதிவு போட்டு தாக்குங்க தல!////

சரிங்க அபி அப்பா!(?!!),
அடுத்த முறை "ஒதைய சொறியன்" -க்கே ஒட்டு போட்டுறலாம்.

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 10:54 AM  

////மோகன் அண்ணே மலையாளிகள் சிலர் செய்யும் துரோகம் பற்றி நான் பதிவு போட்டபொது என்னைப் பலரும் பெண்டு நிமித்தினார்கள்.///

ரொம்ப டீசண்டா பதிவுகள் எழுதினால் அப்படித்தான் பின்னூட்டம் வரும் அப்து அண்ணே!. விமர்சனம் என்று வந்துவிட்டால் கருணையே காட்டக்கூடாது. உங்கள் பதிவை பார்த்தேன். பின்னூட்டம் இட முடியாமைக்கு வருந்துகிறேன். ஆனால் பதிவை மிஸ் செய்யவில்லை அண்ணாச்சி.

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 11:08 AM  

///ஒரு இனத்தை அழிப்பதில் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள் :((///

என்ன சுப்பு இது, புரியாம பேசுறிங்க! தமிழினம் எங்கே அழிகிறது? நல்லாத்தானே இருக்கு. கருணாநிதி, தயாளு, ராஜாத்தி, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி, கயல்விழி, துரை, அஞ்சுக செல்வி, செந்தாமரை, உதயநிதி, இன்பநிதி, ஆதித்யா, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அன்புக்கரசி, எழிலரசி, முரசொலி செல்வம் மற்றும் அவர்கள் உறவினர்களும், நண்பர்களும், பந்துக்களும் நலமோடு தான் இருக்கிறார்கள். இவர்கள்தானே தமிழினம்!!!

//தேர்தல் நேரத்தில் படுத்து இருந்தவர் இப்ப தெம்பாக டெல்லிப் போறாராம்.//
100% சரியான் கேள்வி.////

ஆமாம், மேலே சொன்ன தமிழினத்திர்காகத்தான் டெல்லி போயிருக்கார். எப்படியும் போராடி தமிழினத்தை காப்பாற்றி விடுவார். கவலையை விடுங்கள்.!!!

மோகன் கந்தசாமி said...
May 18, 2009 at 11:16 AM  

////நல்லா காமெடியா இருக்கே? :-)
இப்படியே இண்ணும் ரெண்டரை வருஷத்துக்கு கண்டினியூ பண்ணுங்க!////

தேர்தல் கமிஷனும், அழகிரி அன் கோ வும் இருக்கும் வரை உங்களுக்கு என்ன கவலை, என்ஜாய்!!!

Anonymous said...
May 18, 2009 at 11:20 AM  

///ஒரு இனத்தை அழிப்பதில் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள் :((///

என்ன சுப்பு இது, புரியாம பேசுறிங்க! தமிழினம் எங்கே அழிகிறது? நல்லாத்தானே இருக்கு. கருணாநிதி, தயாளு, ராஜாத்தி, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி, கயல்விழி, துரை, அஞ்சுக செல்வி, செந்தாமரை, உதயநிதி, இன்பநிதி, ஆதித்யா, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அன்புக்கரசி, எழிலரசி, முரசொலி செல்வம் மற்றும் அவர்கள் உறவினர்களும், நண்பர்களும், பந்துக்களும் நலமோடு தான் இருக்கிறார்கள். இவர்கள்தானே தமிழினம்!!!

//தேர்தல் நேரத்தில் படுத்து இருந்தவர் இப்ப தெம்பாக டெல்லிப் போறாராம்.//
100% சரியான் கேள்வி.////

ஆமாம், மேலே சொன்ன தமிழினத்திர்காகத்தான் டெல்லி போயிருக்கார். எப்படியும் போராடி தமிழினத்தை காப்பாற்றி விடுவார். கவலையை விடுங்கள்.!!!//


Mohan,

They are not Tamilians, Telugu and Pappan koottam.

Jothi Bharathi.

வெற்றி said...
May 18, 2009 at 12:17 PM  

சே...
உங்களமாதி ஆளுகளுக்காவது ஜெயா ஜெயிச்சிருக்கனும்.
காங்கிரஸ் மெஜாரிட்டி இல்லாமப் போயிருக்கனும்.

ஜெயா, காங்கிரஸ் மினிஸ்ட்ரியில சேர்ந்திருக்கனும்.

நீங்கெல்லாம் மண்டக் காஞ்சிருக்கனும்.

நாங்களும் இந்தமாதி சல்பேட்டா பதிவப் போட்டு உங்களக் காச்சிருக்கனும்.

என்னத்தப் பண்ண. என்னத்தப் பண்ண?

கொடுத்த வைக்கலயே மோகன், கொடுத்து வைக்கிலயே.

பழமைபேசி said...
May 18, 2009 at 12:35 PM  

//இணையம் எங்கும் //

நண்பா, ”வெகுசனங்களுக்கு அப்பாற்பட்டு, அவர்களினின்று அந்நியப்பட்டு இருக்கு வலையுலகம்!”ங்ற கவலை உங்களுக்கு இல்லையா?

வர வர தமிழ் வலையுலகின் நம்பகத்தன்மை குறைஞ்சிட்டே இருக்கு.... அதுக்காக, பதிவர்களோட மனநிலைய வெளிப்படுத்துறது தப்புன்னு ஆயிடாது.

அதே நேரத்துல, நாட்டு நடப்பையும் பிரதிபலிக்கணும்....

I guess, either bloggers are not evenly distributted or some are suppressing others....

மதிபாலா said...
May 19, 2009 at 1:23 AM  

I guess, either bloggers are not evenly distributted or some are suppressing others..../

நியாயமான கவலை.

வலைப்பூவில் எழுதுபவரகள் எல்லோரும் ஓட்டுப் போடுவது இல்லை என்பது ஒரு புறம்.

வெகுவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் , களநிலையை புரிந்து கொள்ளாதவர்கள் அதிகமாக பதிவுலகில் அதிகரித்துவிட்டார்கள் என்றும் கொள்ளலாம்.

இன்னொன்று , ஒரு ரூபாய் அரசி வாங்கிச் சாப்பிடாதவர்கள் பெரும்பாலும் வலையுலகில் இருக்கலாம்.

எனக்கென்னமோ கடேசி மேட்டருதான் கரெக்டுன்னு தோணுது.

எம்.எம்.அப்துல்லா said...
May 19, 2009 at 3:47 AM  

//I guess, either bloggers are not evenly distributted or some are suppressing others....//

101 % true.

Unknown said...
May 19, 2009 at 2:26 PM  

I wanted the Congress to be defeated in this election. But, I never wanted Jaya to win as Jaya is worser than DMK. One thing is sure, whoever voted for the Congress will not die peacefully.

Anonymous said...
May 19, 2009 at 10:19 PM  

இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.

---Dinamani--

மோகன் கந்தசாமி said...
May 25, 2009 at 11:52 PM  

///சே...
உங்களமாதி ஆளுகளுக்காவது ஜெயா ஜெயிச்சிருக்கனும்.
காங்கிரஸ் மெஜாரிட்டி இல்லாமப் போயிருக்கனும்.

ஜெயா, காங்கிரஸ் மினிஸ்ட்ரியில சேர்ந்திருக்கனும்.

நீங்கெல்லாம் மண்டக் காஞ்சிருக்கனும்.

நாங்களும் இந்தமாதி சல்பேட்டா பதிவப் போட்டு உங்களக் காச்சிருக்கனும்.

என்னத்தப் பண்ண. என்னத்தப் பண்ண?

கொடுத்த வைக்கலயே மோகன், கொடுத்து வைக்கிலயே.///

நல்லவேளை கொடுத்து வைக்கவில்லை.
நன்றி, விஜயராஜா.

மோகன் கந்தசாமி said...
May 25, 2009 at 11:55 PM  

///நண்பா, ”வெகுசனங்களுக்கு அப்பாற்பட்டு, அவர்களினின்று அந்நியப்பட்டு இருக்கு வலையுலகம்!”ங்ற கவலை உங்களுக்கு இல்லையா?///

ஆம். உண்மைதான். அதனாலென்ன பழைமைபேசி அண்ணே! வலைப்பதிவுகளில் இவர்கள் போடும் எக்காளம் சுரனையற்றது என்று விமர்சிக்கிறேன். அவ்வளவே!

மோகன் கந்தசாமி said...
May 25, 2009 at 11:57 PM  

///எனக்கென்னமோ கடேசி மேட்டருதான் கரெக்டுன்னு தோணுது.///

மதி,

கடைசி மேட்டரும் சரி. என் எதிர்வினையும் சரி. அதில் உள்ள சூடும் அதன் தேவையும் நியாமே!

மோகன் கந்தசாமி said...
May 25, 2009 at 11:58 PM  

//I guess, either bloggers are not evenly distributted or some are suppressing others....//

101 % true.///

:-))

மோகன் கந்தசாமி said...
May 25, 2009 at 11:59 PM  

////I wanted the Congress to be defeated in this election. But, I never wanted Jaya to win as Jaya is worser than DMK. One thing is sure, whoever voted for the Congress will not die peacefully.///

ரொம்ப நச்சின்னு சொல்லிட்டீங்க! நன்றி

மோகன் கந்தசாமி said...
May 26, 2009 at 12:07 AM  

தமிழினி,
பாப்பானைத்தான் கும்முங்க, அல்லது பாமகா -வைத்தான் கும்முங்க. ஆனால் அதற்கெல்லாம் இப்போது முழுத்தகுதி இருக்கான்னு ஒருமுறை யோசிக்கலாம். நம்ம தொலைவர் இன்னும் ஒரு இருபதுவருடம் உயிரோடு இருந்தாரென்றால் பூணூல் போட்டுக்கொள்ளும் அளவிற்குகூட பரிணாம வளர்ச்சி பெறுவார் என்பது என் எண்ணம். ஒரு சிலர் அதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். பூணூலுக்கு அல்ல. இன்னும் இருபது வருட இம்சைக்கு. :-)))

மோகன் கந்தசாமி said...
May 26, 2009 at 12:07 AM  

அனானிக்கும் தினமணிக்கும் நன்றி.

Muthu said...
June 8, 2009 at 6:52 AM  

//ஒரு சிலர் அதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். பூணூலுக்கு அல்ல. இன்னும் இருபது வருட இம்சைக்கு. :-)))//

இது என் பிரச்சினை அல்ல நண்பா. பேயா பிசாசா என்பதோடு என் பார்வை முடிந்தது..

புரியாத மாதிரி நடிப்பவங்களுக்கு வெளாவாரியா வெளக்குவதும் என் வேலை கிடையாது.

Movies4U said...
June 8, 2009 at 7:22 AM  

indha vetri nyaayamaana vetri alla!

Melum..Vijaykanth katchiyin vottu pirippum DMKukke nanmai seidhadhu!

Thamizh inathukku 'nalla' thlaivar kalaignaraa enbathu en kelvi!? Tamizh ina padukolaikku kaditham ezhuthiyavar..mu ka azhakiriyin padhavi sandaikkaga mattum delhi payanam seidharey!!? suyanalaththin uchcha kattam! varalaatril kalaignarukkum ...aadharavaai manasaatchi illaamal vakkalitha thamizharukkum...karum pulli vaikkum! idhu unmai...urudhi! and FYKI enakku Indhiyaavin endha arasiyal katchiyaiyum...thalaivaraiyum pidikkaaadhu ! ellorum nammai yemaatrukiraarkal!

ராம கிருஷ்ணன் said...
June 8, 2009 at 2:28 PM  

ஒடன்பிறப்பு எளுதிய ஒரு பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம்....

/// ஆனால் ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழர்ளை வெளி மாநிலத்தவர் எவரும் தாக்கவில்லை. நம் சக தமிழனே புலிகளுக்கு நீ தானே ஆதரவளித்தாய் என்று உடன்பிறப்புகளை தாக்கினார்கள்///

அதற்காகத்தான் எவன் அடித்தானோ அவனிடமே வட்டியும் முதலுமாக போன ஐந்தாண்டில் எட்டு மந்திரிகளும் இந்த ஐந்தாண்டுக்கு ஏழு மந்திகளும் பெற்றுள்ளோமே... உடன்பிறப்பே....? இந்த பரிசுகள்கூட அந்த தமிழனால்தானே கிடைத்தது..! தலைவரை போல ஊதிவிட்டுவிட்டு போகாமல் இதை போய் பெருசா எடுத்துகிட்டு....! ஹிஹி....!

//// இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து முகாம்களில் இருப்பவர்களும் சிலர் வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்கள். இவர்கள் நெடுங்காலமாகவே எம்முடன் வாழ்ந்து வருபவர்கள். இவர்களை நாங்கள் பிரித்து பார்த்ததில்லை.////

ஆமாமாம்....அப்புறம் நம்ப தலைவர் கூட ஒரு ஈழ அகதி சிறுவனை தத்தெடுத்து வளர்ப்பதாக பத்து இருபது வருடங்களுக்கு முன் அறிவித்தாரே...? அந்த சிறுவன் இப்போ எந்த தொகுதியில் எம்பி யாக இருக்கிறார் அல்லது எந்த துறை மந்திரியாக இருக்கிறார் உடன்பிறப்பே...நம் தலைவர் குடும்ப வழக்கப்படி....?

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:37 PM  

///இது என் பிரச்சினை அல்ல நண்பா. பேயா பிசாசா என்பதோடு என் பார்வை முடிந்தது..///

சரி அதை விடுங்க தமிழினி!

புரியாத மாதிரி நடிப்பவங்களுக்கு வெளாவாரியா வெளக்குவதும் என் வேலை கிடையாது.///

சீரியசாகவே சில கேள்விகள் இருக்கின்றன! பதில் அளிக்க விரும்புகிறீர்களா? தனி மடலில் அனுப்பட்டுமா?! அல்லது உங்கள் பதிவில் கேட்கட்டுமா?!! புரியாத மாதிரி நான் நடிக்கவில்லை. கும்முதல் குறித்து நீங்கள் கூறியதை ஏற்கிறேன். ஆனால் கருணாநிதி குறித்து எனது கருத்துகள் (எனது கிண்டலைச் சொல்லவில்லை, சில உள்மன வெறுப்புகளை குறிப்பிடுகிறேன்) தவறு என்று உங்களில் ஒருவராவது விளக்கமுடியுமா? ஏற்கத் தகுந்தவற்றை நான் பிடிவாதமாக மறுக்கப் போவதில்லை. வசவுகளோ, நக்கல்களோ, திசை திருப்பல்களோ இன்றி வாதிட நான் தயார். பதிலை வெளிப்படையாக எனக்கு தருவீர்களா? 'வேறு வழியில்லை', 'வேறு நாதியில்லை', 'நம்மால் முடிந்தது இதுதான்' என்ற பதில்களை இங்கு யாரும் ஏற்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.

உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். எனினும் என் மின்னஞ்சல் முகவரியைத்தருகிறேன் mohankandasami@gmail.com

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:42 PM  

//indha vetri nyaayamaana vetri alla!

Melum..Vijaykanth katchiyin vottu pirippum DMKukke nanmai seidhadhu!

Thamizh inathukku 'nalla' thlaivar kalaignaraa enbathu en kelvi!? Tamizh ina padukolaikku kaditham ezhuthiyavar..mu ka azhakiriyin padhavi sandaikkaga mattum delhi payanam seidharey!!? suyanalaththin uchcha kattam! varalaatril kalaignarukkum ...aadharavaai manasaatchi illaamal vakkalitha thamizharukkum...karum pulli vaikkum! idhu unmai...urudhi! and FYKI enakku Indhiyaavin endha arasiyal katchiyaiyum...thalaivaraiyum pidikkaaadhu ! ellorum nammai yemaatrukiraarkal!///

உண்மையற்ற வெற்றியைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால் வாய் காது வரை கிழியும். உண்மையைச் சொல்லி விமர்சித்தால் முகத்தை பச்ச புள்ள மாதிரி பாவமாக வைத்துக் கொள்வார்கள்! என்னத்த சொல்ல!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:51 PM  

///ஒடன்பிறப்பு எளுதிய ஒரு பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம்....

/// ஆனால் ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழர்ளை வெளி மாநிலத்தவர் எவரும் தாக்கவில்லை. நம் சக தமிழனே புலிகளுக்கு நீ தானே ஆதரவளித்தாய் என்று உடன்பிறப்புகளை தாக்கினார்கள்///

அதற்காகத்தான் எவன் அடித்தானோ அவனிடமே வட்டியும் முதலுமாக போன ஐந்தாண்டில் எட்டு மந்திரிகளும் இந்த ஐந்தாண்டுக்கு ஏழு மந்திகளும் பெற்றுள்ளோமே... உடன்பிறப்பே....? இந்த பரிசுகள்கூட அந்த தமிழனால்தானே கிடைத்தது..! தலைவரை போல ஊதிவிட்டுவிட்டு போகாமல் இதை போய் பெருசா எடுத்துகிட்டு....! ஹிஹி....!

//// இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து முகாம்களில் இருப்பவர்களும் சிலர் வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்கள். இவர்கள் நெடுங்காலமாகவே எம்முடன் வாழ்ந்து வருபவர்கள். இவர்களை நாங்கள் பிரித்து பார்த்ததில்லை.////

ஆமாமாம்....அப்புறம் நம்ப தலைவர் கூட ஒரு ஈழ அகதி சிறுவனை தத்தெடுத்து வளர்ப்பதாக பத்து இருபது வருடங்களுக்கு முன் அறிவித்தாரே...? அந்த சிறுவன் இப்போ எந்த தொகுதியில் எம்பி யாக இருக்கிறார் அல்லது எந்த துறை மந்திரியாக இருக்கிறார் உடன்பிறப்பே...நம் தலைவர் குடும்ப வழக்கப்படி....?////

ராம கிருஷ்ணன்! முதலில் நாம் ஒன்றை தெளிவாக உணர்ந்து கொள்வோம். உடன்பிறப்பு போன்றவர்கள் தீர்மானமாக முடிவெடுத்து விட்டவர்கள். கருணாநிதியே தவறை ஒப்புக்கொண்டாலும் இவர்கள் ஒப்ப மாட்டார்கள். நமக்கு அது பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் உண்மையில் கடமையை சரியாக செய்தவர்கள் என்றும், அவதூறு கூடாது என்றும் பொருள்பட பரப்புரைகளை செய்து வருவது நமக்கு உறுத்தலாக இருக்கிறது. நம் எதிர்வினைகளை பதிவுகளாகவும் பின்னூட்டங்களாகவும் தொடர்ந்து இடுவோம், அவர்கள் பதிலளித்தாலும், மறுத்தாலும்!!!. அவர்கள் கருத்துடன் ஏனையோர் உடன்படுவதை தடுப்போம்.