ஒரு கையில் பார்சல், மறு கையில் ஆபிஸ் பேக், காதுக்கும் தோளுக்கும் நடுவே செல்போனில் மிச்சமிருந்த அன்றைய பிசினஸ். முழங்காலால் கதவை முட்டித்தள்ளிய பார்த்தி திடுமென ஒருவினாடி சிலிர்த்தான்.
"அடச்சே! பயந்தே போயிட்டேன்டி!, இருட்டுல ஏண்டி உட்கார்ந்திருக்க, லைட்ட போட வேண்டியத்தான?"
"அத தேடிப்பாத்துட்டுதான் தாண்டா இருட்டுல உட்கார்ந்திருக்கேன் வெண்ண!"
லைட்டை போட்டவன் நபிஷாவை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான். "இன்னைக்குத்தான் உன்ன முழுசா பாக்கறேன்! எப்படித்தான் அந்த கருப்பு கவுன நாள் பூரா மாட்டிகிட்டு திரியிற?
"ம்கும், கட்டிக்க போறவன் நீ பாக்கும்போதே எனக்கு கூசுது, மத்தவங்க பார்த்தா?" பர்தா விஷயத்தில் பலமுறை இவளிடம் பேசி தோற்றவன் அப்பேச்சை அத்தோடு விட்டான்.
"சரி வீடு புடிச்சிருக்கா? இனி நாம இங்கதான்"
"முதல்ல மேரேஜ் ஒழுங்கா முடியுதா பாக்கலாம், நாளைக்கு கையெழுத்து போடும்போது உங்கம்மா வந்து நின்னா நீ ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ்ல எங்கியும் ஒளிஞ்சிக்க முடியாது, என் பர்தா தான்"
"அடச்சே! நாளைக்கும் அந்த கப்பு அங்கிய போட்டுகிட்டுதான் வரப்போறியா?"
சட்டென கடுப்பான நபிஸா, முதுகின் பின்புறம் இருந்த தலையணையை எடுத்து முழு பலத்துடன் வீசுவதுபோல் கவனமாக அவன் அருகில் எறிந்துவிட்டு, இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள். அவள் எறிந்த தலையணையை கைப்பற்றிக்கொண்டு வந்தவன் அவளது இருக்கையின் முன்னிருந்த டீப்பாயை அவளருகே இழுத்து போட்டு அமர்ந்தான்.
"டே.....ய் வேணா....ம்., இன்னும் ஒருநாள் இருக்கு, கிட்ட வந்த சத்தம் போட்டு கத்திடுவேன்" என போலியாக எச்சரித்தவள் கால்களை எடுத்து இருக்கையின் விளிம்பில் வைத்துக்கொண்டு, கைகளால் முழங்கால்களை கட்டிக்கொண்டாள்.
"அய்யயே! இன்னும் தொடவே இல்ல அதுக்குள்ள இப்படி சுருங்கி உட்காந்துட்ட, கல்யானத்துகப்பரம், நைட்டு பூராவும் கெஞ்சரதுலே கழிஞ்சிரும் போலருக்கே!"
"அதை நாளைக்கு நைட்டு பாத்துக்கலாம், இப்ப நீ கொஞ்சம் தள்ளி உட்காரு"
ஆவலுடன் அவளருகே நகர்ந்த பார்த்தி அவள் முறைத்ததும் "ஓ! பின்னாடி தள்ளி உட்கார சொன்னியா? சாரி" என்றான். அவன் குறும்பை ரசித்தவள் அவளையறியாமல் மெலிதாக புன்னகைத்தாள். சற்றே தைரியம் பெற்றவன் அவள் கணுக்கால்கள் இரண்டையும் இருகைகளால் பற்றி அவளது முழங்கால்களை நீட்டியநிலையில் டீப்பாய் மீது வைத்தான்.
இருக்கையின் விளிம்புக்கே வந்து விட்ட நபிஸா, பேலன்ஸ் தவறியவள் போல அவன் மீது சரிந்தாள். அவளது முழங்கை இரண்டையும் அவனது தோள்களில் ஊண்றி நெற்றியோடு நெற்றி இடித்தாள். கடந்த இரண்டுவருட பழக்கத்தில் இருவரும் ஒருவரையொருவர் இவ்வளவு அருகில் நெருங்கியதில்லை. சில வினாடி மவுனத்திற்குப்பின் தலையை ஒருபுறமாக சாய்த்து அவன் வலது காதில் கிசுகிசுத்தாள். "நாளைக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்குமாடா?"
"அறிவுகெட்டத்தனமா பேசாதடி அர லூசு!" என்று அவளது இடது காதை மென்மையாக கடித்தான் பார்த்தி. வலியை இன்பமாக உணர்ந்த நபிஸா அவன் கழுத்தை மாலையாக சூழ்ந்தவாறே தன் இடதுகையால் அவன் பின்னந்தலை முடியை பற்றினாள். அவளது மூச்சின் ஏற்ற இறக்கங்களுக்கு தக்கவாறு அவனது தலையும் அவள் மார்போடு சேர்ந்து அசைந்தது.
திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவன் தோளில் இருந்து விடுபட்டு அவன் கண்களை வெகு அருகில் பார்த்து கேட்டால் "நீ எந்த சூழ்நிலையிலும் மாறிடமாட்ட இல்ல?".
நொடியில் அவனது முகபாவனை மாறியது. "நீ ரொம்ப பேசற, கொஞ்சம் அடங்கு!" - விரலைச்சுண்டி அவள் மேலுதட்டை தட்டினான். வலிதாளாமல் அவள் உதட்டை உள்மடிக்க அவளது கீழுதட்டை அதே கணத்தில் கவ்வினான் கமலஹாசனின் வழமைபோல. இரண்டு வினாடிகள் பொறுத்தவள் மூன்றாவது நொடியில் அவனை அவனது பின்புறமாகவும் இருக்கையை அவளது பின்புறமாகவும் தள்ளிவிட்டு எழுந்தொடினாள். இதை சற்றும் எதிர்பாராத பார்த்தி அவள் ஓடிய திசையில் தனது இடது கையை வீசினான். அவள் மேலுடையின் பின்பாகம் அவன் கையேடு வருமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.
முதுகை சாய்த்து சுவரில் தஞ்சம் புகுந்த நபிஸா கோபம் கொப்பளிக்க அவனை முறைத்தாள். எஞ்சிய அவளது உடை வியர்வையால் நனைந்து தொப்பலாகிப்போனது. தான் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டத்தை தாமதமாக உணர்ந்தவன் தலைகுனிந்தவாறே "சாரி டா" என்றான்.
சிறிது நேர மவுனத்திற்கு பிறகு,
"இப்ப எப்படிடா வீட்டுக்கு போறது நான்?, இன்னைக்கு வீட்டுக்கு போனாதான் நான் நாளைக்கு ரெஜிஸ்ட்ரார் ஆபிசுக்கு வரமுடியும்?" -பொறுமையாகவே கேட்டாள்.
"நான் வேணா போய் இதே போல ட்ரஸ் வாங்கிட்டு வந்திடட்டுமா?"
"நீ இதே ட்ரஸ்ஸ வாங்கிட்டு வந்தாலும் நான் வீட்ல கண்டிப்பா மாட்டுவேன், ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் நான் வீட்டை விட்டு வெளில வர முடியாது நாளைக்கு"
"சரி இப்ப ஒன்னும் பண்ண முடியாது, பேசாம இங்கவே தங்கிடு"
"ம்க்கும், ரெஜிஸ்டர் பண்ணப்பரம் கூட நம்மள நிம்மதியா உடமாட்டாரு உங்க மாமனாரு, இதுல இன்னைக்கு நைட்டே அவர அலர்ட் பண்ணிடலாம் -ன்றையா?, சுத்தம்"
"என்னதான் பன்னலான்ற நபிஸ்?"
"வேற என்னபன்றது! உசிர கைல புடிச்சிகிட்டு இன்னிக்கு ராத்திரிய ஓட்டவேண்டியதுதான், பர்தாவ அழுக்கு அங்கி, கப்பு துணின்னு கிண்டல் பண்ணியே, இன்னைக்கு அது இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!"
பார்த்திக்கு எதுவும் பேசத்தோன்றவில்லை. முதலிரவுக்கு முந்தய இரவு இப்படி திகிலாகிப்போகும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்கக்கூடும்?
டிஸ்கி: எம்மதத்தையும் சேர்ந்த உடை பழக்க வழக்கங்களையும் சிறுமை படுத்தும் நோக்கில் இக்கதையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மதங்களை துச்சமென நினைக்கின்ற, இருவேறு மதத்தைச்சேர்ந்த காதலர்களிடையேயான உரையாடலில் இயல்புத்தன்மை வேண்டி சில பெயர்ச்சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
23 comments:
க்யூட் கதை :):):)
நன்றி ராப்!
Super....:-)
நன்றி திரு சின்னப்பய்யன்.
சார் கல்யாணம் ஆச்சா இல்லையானு சொல்லுங்க சார்... :-)
"முதலிரவுக்கு முந்தய இரவு"//
ஹை!தலைப்பே தில்லாலங்கடியா இருக்கு!
ஆயிடுச்சு ஷ்யாம், ஆனா ஒருத்தர ஒருத்தர் கல்யாணம் பண்ணாங்களா இல்ல ஒவ்வொருத்தரும் வேறு ஒருத்தர கல்யாணம் பண்ணாங்களான்னு தெரியல!
புதுகை,
இப்படி மொள்ளமாரித்தனம் பண்ணியே பொழப்ப ஓட்டிகிட்டு இருந்தா தமிழ்மணம் ஒருநாளைக்கு என்னையும் தூக்கிடும் -னு நெனைக்கிறேன்.
பதிவின் தலைப்பும் படமும் அருமையாக உள்ளது !
கதையா இருங்க படிச்சிட்டு வரேன்
:))))))
வாங்க நட்சத்திரமே!
கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்
:):):)
//பதிவின் தலைப்பும் படமும் அருமையாக உள்ளது !
கதையா இருங்க படிச்சிட்டு வரேன்//
:):):)
ஆகஸ்ட் எட்டுவரைக்கும் பதிவு ஏதும் கிடையாதுன்னேளே அம்பி ?
படம் சூப்பர்...கதையும்...
இஸ்லாமியர்களை புண்படுத்திடாத வகையில் ஒரு டிஸ்கி போடுதல் நலம்.
///ஆகஸ்ட் எட்டுவரைக்கும் பதிவு ஏதும் கிடையாதுன்னேளே அம்பி ?
///
வேலைப்பளு எதிர் பார்த்ததை விட குறைவாகவே இருந்ததே காரணம் ரவி.
///படம் சூப்பர்...கதையும்...///
நன்றி
/////இஸ்லாமியர்களை புண்படுத்திடாத வகையில் ஒரு டிஸ்கி போடுதல் நலம்.////
போட்டாயிற்று நண்பா!, அறிவுரைக்கு மற்றுமொரு நன்றி.
இந்த கதை தொடருமா?
ரொம்ப அழகான கதை இது மோகன் கந்தசாமி.
////இந்த கதை தொடருமா?////
முதல் கதைக்கே உரிய குறைகள் இதில் நிறைய உள்ளன. இதை எழுதவே எனக்கு மிக்க சிரமமாக இருந்தது. எனவே வேறு எவரேனும் இதைத் தொடர்ந்தால் அங்கீகாரமாகக் கருதுவேன். இன்றேல், வேறொரு சமயத்தில் நானே தொடர்கிறேன்.
///ரொம்ப அழகான கதை இது மோகன் கந்தசாமி.///
நன்றி கயல்விழி
//முதல் கதைக்கே உரிய குறைகள் இதில் நிறைய உள்ளன. இதை எழுதவே எனக்கு மிக்க சிரமமாக இருந்தது. எனவே வேறு எவரேனும் இதைத் தொடர்ந்தால் அங்கீகாரமாகக் கருதுவேன். இன்றேல், வேறொரு சமயத்தில் நானே தொடர்கிறேன்.
//
அது உங்கள் விருப்பம். தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
அருமையான கதை. தொடர முயலுங்கள். நன்றாக வரும் என்று பட்சி சொல்லுது :)
யட்சன் என்பவரது பதிவில் மீண்டும் எழும் இந்த பிரச்சினைக்காக அங்கே எழுதிய பின்னூட்டத்தை இங்கே மீண்டும் அளிக்கிறேன்...
என்னுடைய விளக்கம் இந்த இரண்டு விடயத்துக்கு தான்...
டோண்டுவோ மற்றவர்களோ என்னை "போலி டோண்டு" வை கண்டறியும்படி ஆரம்பத்தில் சொல்லவில்லை....நான் எடுத்த முயற்சிகளை சொல்லியபோது ஆதரவு தெரிவித்தார்கள்...
போலி டோண்டு பதிவோ அல்லது எந்த ஆபாசப்பதிவோ என்னால் துவக்கப்படவில்லை, இதுவரை எந்தவிடத்திலும் ஆபாசமாக எழுதியதில்லை...
மேலும் இந்த பின்னூட்டத்தில் இன்னும் ஒரு விடயத்தையும் சேர்த்திருக்கிறேன்...
////அப்படி டோண்டு ரவியை ஊக்குவித்ததாக தான் செந்தழல் ரவி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.
டோண்டுவின் மனைவி, பெண்ணை பற்றி ஆபாசமாக எழுதி போலியின் நம்பிக்கையை பெற முயற்சித்தாராம் செந்தழல் ரவி.
////
இந்த பின்னூட்டத்தை மூர்த்தியை தவிர வேறு யாராலும் போட முடியாது :)))
டோண்டு அவர்களின் மனைவி மகள் புகைப்படம் டூண்டு தளத்தில் வெளியானது...
அந்த தளத்தின் ஆக்ஸஸ் மூர்த்தியை தவிர யாருக்கும் கிடையாது...
ஸ்பெஷல் ஆப்பு என்பதும் மூர்த்தியின் தளம்...
இதை மூர்த்தியே காவல் துறையினரிடம் எழுதி கொடுத்துள்ளான்.
அதிலும், டூண்டு தளம் உலகின் எந்த எந்த ஐ.பி முகவரியில் இருந்து ஆக்ஸஸ் செய்யப்பட்டது / எங்கே இருந்து திறக்கப்பட்டது / எந்த எந்த தேதியில் போஸ்ட் போடப்பட்டது என்று கூகிள் நிறுவனம் பி.டி.எப் கோப்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி உள்ளது....
அதில் எந்த இடத்திலும் என்னுடைய ஐ.பி கிடையாது.
இதில் இருந்தே, டோண்டு, நான் மிகவும் மதிக்கும் துளசி டீச்சர் போன்றவர்கள் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை (இதை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க, அவ்ளோ கேவலமா எழுத - என்னால சத்தியமா முடியாது)
அப்படி நினைப்பவர்கள் போலீசில் புகார் தரட்டும், நான் அதனை எழுதி இருந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும்...
மூர்த்தி தனக்கு வேலை போய்விட்டதாகவும், நான்கு மாதமாக தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும் போலீஸில் சொல்வது பொய். இரண்டு வாரங்களுக்கு முன்புவரை மூர்த்தியின் ஐபியில் இருந்து எனக்கு ஹிட் வந்துகொண்டுள்ளது...
மேலும் சிம்பத்திக்காக மூர்த்தி சொல்லும் விஷயங்களையும் நம்ப முடியாது. அதெல்லாம் மலேசிய மானேஜர்கள் லீவு தருவதற்கு வேண்டுமானால் நம்பட்டும். நான் நம்ப முடியாது.
மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்த டேப் ஆதாரங்கள் உள்ளது. நான் இதன் மூலம் கிரிமினல் வழக்கு தொடரமுடியும். இன்றுவரை செய்யும் எண்ணம் இல்லை, இனி வரலாம்...
ஆகஸ்ட் இரண்டாம் தேதி மீண்டும் காவல் துறையினர் வரச்சொல்லியுள்ளார்கள் ( என்னுடைய தந்தையாரும் மூர்த்தியை சந்திக்க ஆவலாக உள்ளார். என்னுடைய பிறப்பை சந்தேகித்து மூர்த்தி எழுதிய விடயங்கள் குறித்து மூர்த்தியிடம் நேரடியாக விளக்கிவிடுவார் என்று நினைக்கிறேன்)
மேலும் மூர்த்தியால் பாதிக்கப்பட்ட பதிவர்கள் பலர் வர காத்திருக்கிறார்கள்...
என்னைப்போன்ற ஒரு சிலர் அவனை மன்னித்துவிட்டுவிடும் மன நிலையில் இருந்தாலும், சில பதிவர்கள், மூர்த்தி செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற நிலை எடுத்துள்ளனர்.
வழக்கறிஞர் நன்பரிடம் கொடுத்த - மூர்த்தியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் இருக்கும் சிங்கைப்பதிவரும், மற்றொரு பதிவரும் விரைவில் அங்கே வந்து நிற்கவேண்டும் என்று நினைக்கிறேன்...
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...அது ஆரியப்போலியாக இருந்தாலும் திராவிடப்போலியாக இருந்தாலும்...
ஆகஸ்ட் இரண்டாம் தேதி எழும்பூர் குற்றப்பிரிவு , சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்திக்கலாம் வாருங்கள்....
அருமையான கதை. தொடர முயலுங்கள்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
நல்லா இருக்குங்க
நைஸ் ஸ்டோரி ( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
நன்றி உமா பிரியன்,
நன்றி விஜய்,
நன்றி முரளிகண்ணன்,
நன்றி அருவை பாஸ்கர்.
Post a Comment