Wednesday, July 2, 2008

இலைக்காரன்: எதிரிகளின் எக்காளம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?

·

அம்மாவின் புகழ் பாடும் நல்ல நோக்கில் தொடங்கப்பட்ட "அம்மாவின் வலைஞர் பாசறை" இன்று தனி மனிதர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து வருகிறது. அம்மாவின் உண்மைத்தொண்டன் "இலைக்காரன்" அவர்கள் எழுதிய கட்டுரையை பாசறை வலைப்பூ நிர்வாகம் நிராகரித்து அவமானம் செய்துள்ளது. இதனால் "ச்சும்மா ட்டமாஷ்" வலைப்பூவிற்கு தனது கட்டுரையை அனுப்பி பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இலைக்காரனுடன் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், சக பதிவர் என்ற முறையில் அந்த தன் மானச் சிங்கத்தின் கட்டுரையை வெளியிடுகிறேன்.

எச்சரிக்கை: உடன் பிறப்புகளின் பின்னூட்டங்கள் கடுமையாக மட்டுறுத்தப்படும்.இதய தெய்வம் அம்மாவின் ஆசியுடன் எனது முதல் கட்டுரையை இவ்வலைப்பூவில் தொடங்குகிறேன். இன்றைய தேதியில் இந்திய தேசத்தை பிடித்தாட்டும் பேய்களென விளிக்கத்தக்கன மூன்று. அவற்றுள், அறிவாலயத்தில் வேரூன்றி திராவிட தேசமெங்கும் விழுதுவிட்டு சமூக நீதியின் பேரால் அனுதினமும் அக்கிரமங்கள் செய்துவரும் கிழட்டு ஆலமரம் தி.மு.க. முதன்மையானது. அடுத்தது தொட்டதற்கெல்லாம் தொனதொனக்கும் பத்தாம் பசலிகளான பொதுவுடமைப் பிசாசுகள். மூன்றாவதும் முக்கியமானதும் ஆன குட்டிச்சாத்தான்கள், நம் வலைப்பூவெங்கும் தேசபேதமில்லாமல் வியாபித்திருக்கும் திராவிட திம்மிகள். இவை வேறுயாருமல்ல, நம்மிடமிருந்தே இழிவான சொல்லாடல்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றை நம்மைநோக்கியே எய்யும் தீயசக்க்திகள். சுருங்கச்சொன்னால் நம்ம பிட்ட எடுத்து நமக்கே போடும் பயல்கள்.

இவற்றில் முதல் பிசாசை ஓட்டும் சூட்சமம் அம்மாவுக்கு அத்துபடி. டெல்லியில் அதிகாரத்தை பிடித்தவுடன் பொதுவுடமைப் பிசாசுகளும் ஆணி அடிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த மூன்றாம் வகை சாத்தான்களை ஓட்டுவது மட்டும் நம்மைப்போன்ற தொண்டர்களிடம் காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. தயாராவோம், விருட்டெனவெழுந்து வாருங்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டுவரும் பிராமிணர் அனைவரையும் திரட்டுவோம். நம் சமூக மேன்மையை மீட்டு, திராவிட திம்மிகளை மீண்டும் அடக்கி, 1967 -க்கு முந்தய அந்த பொற்கால சூழலை மறுபடியும் கட்டமைப்போம். அணிதிரண்டு வாரீர்.

இந்த ஆதிக்க மீட்புப்போரில், நம் வியூகங்களை செயல்படுத்த பெருத்த அளவில் உடலுழைப்பு வேண்டுமே! இது எவ்வாறு நம்மில் சாத்தியம்? ஆசிட் வீச்சுகளுக்கும், ஆட்டோக்களுக்கும் மேலிட அனுமதி இனி எளிதாக கிடைக்கும் என்றாலும், செயல் படுத்தப் போவது யார்? பொருட்செலவுகளுக்கு நிதி எப்படி வரும்? எல்லாம் நியாமான கேள்விகள் தான்.

இதற்கு திராவிட திம்மிகளிலேயே ஆள் சேர்ப்பதுதான் சரியான வழி. புரட்சித்தலைவர் என்ற ட்ரம்ப் கார்டு இருக்கும் வரை இதற்கு கவலையில்லை. எனவே, மக்கள் திலகத்தின் படங்களை தூசுதட்டி எடுப்போம். தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி ஆட்களையும் பொருளையும் சேர்ப்போம். அம்மா ஓய்விலிருக்கும் இந்த ஆறு மாத காலமும் நாம் பம்பரமாய் சுழல்வோம். அடுத்த ஓய்விற்கு அம்மா தயாராகுமுன், இடைப்பட்ட காலத்தில் அம்மா தரிசனம் பெற்று, அவர் வகுத்துத்தரும் திட்டங்களை செவ்வனே செய்து முடிப்போம்.

வியூகங்களிலிருந்து சற்றும் மாறாமல் உழைத்தோமென்றால் இந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே டெல்லியையும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகமும் நம் வசமாகிவிடும். பிறகு காஞ்சிபுரம் முதல் காசிவரை நாம்தான், செங்கல்பட்டு முதல் நாகர்கோயில் வரை எல்லாம் நமக்கு கீழ்தான்.

அண்ணாவுக்கு இட்ட நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -ருக்கு இட்ட நாமம் வாழ்க.

ஜெய் பஜ்ரங்கு பலி!

18 comments:

Anonymous said...
July 2, 2008 at 2:48 PM  

அம்மா நடமாடும் தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாதம் பட்டால் பாவம் நீங்கும். தனக்குச் சொத்துச் சுகம், பட்டம் பதவி எதுவும் விரும்பாத தேவதை. லஞ்சமா? அதை அறியாதவர் உலகில் அவர் மாத்திரமே.

PULLIRAJA

இலைக்காரன் said...
July 2, 2008 at 3:01 PM  

////தனக்குச் சொத்துச் சுகம், பட்டம் பதவி எதுவும் விரும்பாத தேவதை. ///
அவருக்கு சொத்து ஏதும் தேவை இல்லை என்பது நான் அறிவோம் புள்ளி ராஜா! திம்மிகள் அறிவதில்லை. கலகக் கண்மணிகள் நாம் தான் அவருக்கு சொத்து.

rapp said...
July 2, 2008 at 3:16 PM  

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

rapp said...
July 2, 2008 at 3:18 PM  

//நம்மிடமிருந்தே இழிவான சொல்லாடல்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றை நம்மைநோக்கியே எய்யும் தீயசக்க்திகள். சுருங்கச்சொன்னால் நம்ம பிட்ட எடுத்து நமக்கே போடும் பயல்கள்//
சான்சே இல்ல, மோகன்/இலைக்காரன். பயங்கரமா ரசிச்சி சிரிச்சேன்.

rapp said...
July 2, 2008 at 3:21 PM  

//அண்ணாவுக்கு இட்ட நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -ருக்கு இட்ட நாமம் வாழ்க//
எப்படிங்க உங்களால இப்படி யோசிக்க முடியுது. ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறையாவது இலைக்காரன் கடிதம் பிரசுரிங்க.

rapp said...
July 2, 2008 at 3:23 PM  

//எச்சரிக்கை: உடன் பிறப்புகளின் பின்னூட்டங்கள் கடுமையாக மட்டுறுத்தப்படும்//
இலைக்காரனே பயங்கரமான உடன்பிறப்பா இருப்பாருப் போல:):):)

இலைக்காரன் said...
July 2, 2008 at 4:23 PM  

////சான்சே இல்ல, மோகன்/இலைக்காரன். பயங்கரமா ரசிச்சி சிரிச்சேன்.///

நன்றி திருமதி. வெட்டி ஆபிசர்,
அகில உலக அம்மா தி.மு.க (அஉஅதிமுக) சார்பாக பாரிஸ் மாநகர மேயர் தேர்தலில் உங்களை நிற்க வைப்பது பற்றி பொதுக்குழுவில் விவாதங்களை முன்னெடுக்க இருக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 4:25 PM  

////இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறையாவது இலைக்காரன் கடிதம் பிரசுரிங்க.////

நிச்சயம் இந்த கோரிக்கையை இலைக்காரனிடம் வலியுறுத்துவேன் வெட்டி ஆபிசர்.

இலைக்காரன் said...
July 2, 2008 at 4:28 PM  

///இலைக்காரனே பயங்கரமான உடன்பிறப்பா இருப்பாருப் போல:):):)////

அம்மா வலைஞர் பாசறையை சேர்ந்தவர்கள் இவ்வாறுதான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நீங்களுமா ராப்?

rapp said...
July 2, 2008 at 4:34 PM  

//நன்றி திருமதி. வெட்டி ஆபிசர்,
அகில உலக அம்மா தி.மு.க (அஉஅதிமுக) சார்பாக பாரிஸ் மாநகர மேயர் தேர்தலில் உங்களை நிற்க வைப்பது பற்றி பொதுக்குழுவில் விவாதங்களை முன்னெடுக்க இருக்கிறேன்//
ஆஹா கெளம்பிட்டீங்களா? ரொம்ப நல்லா இருங்க.
இதக் கேட்டா எங்கப்பா குடும்பத்த விட்டே தள்ளி வெச்சிடுவாருங்க. தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னுமே தெரியாத என் கணவரையே உடன்பிறப்பாக்கினவங்க நாங்க. எங்க கிட்டயேவா:):):)

rapp said...
July 2, 2008 at 4:36 PM  

//நிச்சயம் இந்த கோரிக்கையை இலைக்காரனிடம் வலியுறுத்துவேன் வெட்டி ஆபிசர்//
கோரிக்கைகள அம்மாவைக்காட்டிலும் திறம்பட விரைந்து நிறைவேற்றுவதில், அம்மாவுக்கு போட்டி மோகன்தான்:):):)

இலைக்காரன் said...
July 2, 2008 at 9:37 PM  

////தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னுமே தெரியாத என் கணவரையே உடன்பிறப்பாக்கினவங்க நாங்க. எங்க கிட்டயேவா:):):)/////

இதை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது, உங்களையும் சேர்த்து "ரத்தத்தின் ரத்தங்கள்" ஆக்குவது தான் எம்பணி.

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 9:42 PM  

/////கோரிக்கைகள அம்மாவைக்காட்டிலும் திறம்பட விரைந்து நிறைவேற்றுவதில், அம்மாவுக்கு போட்டி மோகன்தான்:):):)////
ரொம்ப மேல தூக்கறீங்க! தொபுக்கடீர்னு போட்டுராதீங்கக்கோவ்! :-))) :-)))

jaisankar jaganathan said...
July 3, 2008 at 5:52 AM  

//டெல்லியில் அதிகாரத்தை பிடித்தவுடன் //

ஆனாலும் உங்கலளுக்கு இவ்வளவு குறும்பு ஆகாது

இலைக்காரன் said...
July 3, 2008 at 5:56 AM  

////ஆனாலும் உங்கலளுக்கு இவ்வளவு குறும்பு ஆகாது////
என்ன ஜெய் பிரதமர் பதவிக்கு அம்மா வுக்கு தகுதி இல்லையா?

jaisankar jaganathan said...
July 3, 2008 at 6:03 AM  

//என்ன ஜெய் பிரதமர் பதவிக்கு அம்மா வுக்கு தகுதி இல்லையா?//

அம்மா அமெரிக்காவுக்கே தலைவரா வருவார் இலை. (அப்படி ஆனா தமிழ்நாட்டை பிடித்த ஒன்று ஒழியும்.என்ன அமெரிக்கா பிச்சைகார நாடா போய்விடும்

இலைக்காரன் said...
July 3, 2008 at 6:10 AM  

ஆசிட் வீச்சா அல்லது ஆட்டோவா என முடிவு செய்து அதன்படி உங்கள் இருப்பிடம் நோக்கி ஆட்கள் அனுப்பப்படும்!

jaisankar jaganathan said...
July 3, 2008 at 6:14 AM  

//ஆசிட் வீச்சா அல்லது ஆட்டோவா //

விடு ஜூட். அண்ணா அறியாம பண்ணிட்டேன்