Monday, May 25, 2009

புனுகைத் தெளித்து ஒப்பேற்றி...

· 4 comments

எருமை மாட்டின் மீது மழை பேய்ந்தாற்போல் சுரணையின்றி சுகித்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா? இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா? எதுவும் இல்லையென்றால் உங்களை ஆள்வோரையும் அவர்தம் அடிவருடிகளையும் கேட்டுப்பாருங்கள்; தம் அனுபவத்தை சிலாகித்துக் கூறி உம்மை மெய் சிலிர்கச்செய்வார்கள்...

தொடர்ந்து படிக்க...

Read More......

Sunday, May 17, 2009

"ரொம்ப ஆடாதீங்கடா!" அல்லது "படுத்திக்கொண்டே கெலித்த கொலைஞர்"

· 43 comments

இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி அதன் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி, அல்லாது அது தொடர்ந்து செய்து வரும் தமிழின துரோகத்துக்கு கிடைத்த அங்கீகாரமல்ல என்பதை கருணாநிதி அறிந்திருப்பார். ஆனால் இந்த அல்லக்கைகள் அதை புரிந்துகொள்ளாது அடிக்கும் கூத்திருக்கிறதே! அது சல்பேட்டா அடித்துவிட்டு பாடைமுன் போடும் டப்பாங்குத்திற்கு சமானம்.

அறிவாலயம் வாசலில் வேர்கடலை விற்பவன், பேங்க் லோனுக்கு கமிசன் வாங்கித்தருபவன், சத்துணவு முட்டையை திருடித் தின்பவன், டாஸ்மார்க் கணக்கை செட்டில் பண்றவன், கள்ள ஓட்டுக்கு ஆள் புடிப்பவன், கவர்ல அமவுண்ட் போட்டு வீட்டுக்கு வீடு டெலிவரி பண்றவன், ரோட் காண்ட்ராக்ட்டில் எடுபிடி வேலை செய்றவன், முற்போக்கு அடையாளத்திற்கு அண்டிப்பிழைப்பவன், ரொம்ப யோசித்து தோல் தடிச்சவன் என்று ஆங்காங்கே களியாட்டம் போடும் கலகக் கண்மணிகள் எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பு அல் இல்லாமல் அரண்டு போய் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், விடிந்தால் ஒரு நாடகம், போசாய அதற்கு ஒரு சப்பை கட்டு என்று கட்சித்தலைமை செய்து வந்த தத்துபித்துகளுக்காக இவர்கள் இணையம் எங்கும் அடிவாங்கிக் கொண்டிருந்தார்களல்லவா? இன்று இவர்கள் போடும் எக்காளம் வெற்றி கொண்டாட்டமல்ல! தலை தப்பியதற்கான ஆட்டம்.


(தொடரும்)

Read More......