பிரபலமான இலக்கிய வடிவங்களான கதை, கவிதை போன்றவற்றை போல தளபோட்சுத்ரி -யையும் ஒரு இலக்கிய வடிவமாக நான் பார்க்கிறேன். மொழி என்பது மோட் ஆப் கம்மூனிக்கேசன் என்றால் இலக்கியம் மீன்ஸ் ஆப் எக்ஸ்ப்ரஸன் எனலாம். வேறு அர்த்தம் இருக்குமானால் அது பற்றி எனக்கேதும் தெரியாது.
தளபோட்சுத்ரி என்பது யாது?
தளபோட்சுத்ரி என்பது ஒன்றுக்கொன்று தொடர்பான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை அடுத்தடுத்து அமைத்து சங்கிலித்தொடரின் இறுதியில் சற்றும் தொடர்பில்லாத வார்த்தையை அடைவது ஆகும்.
(உ-ம்)
.....கமலகாசன்....தசாவதாரம்....ஜாக்கிசான்....குங்பூ...கராத்தே...கராத்தே தியாகராஜன்....மாநகராட்சி...சட்டசபை...முதல்வர்...கழுத்துவலி...கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம்....ஹாரி பெஞ்சமின் சிண்ட்ரோம்....மூன்றாம் பாலினம்....சட்ட அங்கீகாரம்....நல வாரியம்....கிரிக்கெட் வாரியம்.....டுவென்டி20....
இந்த தளபோட்சுத்ரி கமலகாசனில் தொடங்கி டுவென்டி20 யில் முடிகிறது. உண்மையில் டுவென்டி20 தாண்டியும் இதை நீட்டிக்க முடியும்.
அடுத்தடுத்த உருப்படிகள் ஒன்றோடொன்று தொடர்பிலிருந்தாலும் முதலும் இறுதியும் தொடர்பற்றவை.
ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வருவதும் ஏற்புடையதே.
தளபோட்சுத்ரி எவ்வாறு இலக்கிய வடிவமாக கொள்ளப்படுகிறது?
மேற்கண்ட உதாரணத்தில் நாம் சினிமா சம்பந்தப்பட்ட வார்த்தைகளில் தொடங்கி விளையாட்டில் முடிக்கிறோம். இடையில் அரசியல், மருத்துவம் மற்றும் நடப்பு செய்திகள் என சிலவற்றை தொட்டு செல்கிறோம். பொதுவாக நாம் அறிந்த விசயத்தை ஓரிரு வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட்டு அடுத்தவிசயத்திற்கு நகர்கிறோம். இவ்வாறான வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தலைப்பாக வைத்து ஒரு பதிவே எழுத முடியும். ஆனால் மொத்தத் செய்தியையும் ஓரிரு வார்த்தையில் குறிப்பால் உணர்த்திவிட தளபோட்சுத்ரி -யில் முடிகிறது.
மேலும் நமது சொந்த கருத்துக்களை இடையில் சேர்க்கவும் முடியும். உதாரணமாக கீழ்கண்ட தளபோட்சுத்ரி -யை எடுத்துக்கொள்வோம்.
....மோகன் கந்தசாமி....கருத்து கந்தசாமி....விவேக்....அப்துல் கலாம்....பூணூல் போட்ட முஸ்லீம்....ஹிந்து முஸ்லீம் பாய் பாய்....தலைப்பாகட்டு பிரியாணி கடை..பெரம்பூர் இட்லிகடை...பெரம்பூர் MLA...கந்து வட்டி...வட்டி பிசினசு....
இது எனது பெயரில் தொடங்கி 'வட்டி பிசினசு' வழியாக தொடரும் ஒரு தளபோஸ்த்ரி.
மோகன் கந்தசாமி....கருத்து கந்தசாமி: இரு சொற்றோடரிலும் இரண்டாம் வார்த்தை ஒன்றே என்ற வகையில் ஒன்றுக்கொன்று தொடர்பானவை.
கருத்து கந்தசாமி....விவேக்: தமிழ் சினிமாவில் கருத்து கந்தசாமி -யாக வலம் வருபவர் விவேக்.
விவேக்....அப்துல் கலாம்: அப்துல் கலாம் பற்றி அதிகம் பிரசிகிப்பவர் விவேக்.
அப்துல் கலாம்....பூணூல் போட்ட முஸ்லீம்: அப்துல் கலாம் ஒரு முஸ்லிமாக இருப்பினும் ஒரு ஹார்டு கோர் பிராமினருக்கு நிகராக, பா.ஜா.க. -வுக்கு ஆதரவாக அவர் கருத்துகள் இருப்பதாக நான் கருதுகிறேன். போது சிவில் சட்டம், பிராந்திய கட்சிகளுக்கு எதிரான நிலை, வெளிநாட்டுக்காரர்கள் உயர் பதவி வகிப்பதில் பா.ஜா.க. -வுக்கு உள்ள சங்கடங்களை தானும் பகிர்ந்துகொள்வது போன்றவை சில உதாரணங்கள்.
இவ்வாறாக நமது கருத்துகளை தளபோட்சுத்ரி -யில் இணைக்கவும் முடியும். பெரம்பூர் -ஐ சேர்ந்த புரசைவாக்கம் எம்.எல்.ஏ கந்து வட்டி பிசினஸ் செய்தவர் என்பதையும் என் கருத்தாக கூறியிருக்கிறேன்.
தளபோட்சுத்ரி -எவ்வகையில் சுவாரசியமானது?
வார்த்தைகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தும் விதத்தில் தளபோட்சுத்ரி -யை சுவாரசியமாக்கலாம். சில குசும்புகளை இடையில் செருகலாம். நக்கல் நையாண்டிகள் போன்றவைக்கும் நிறைய இடமுண்டு. சூட்சமங்களை இடையில் தைத்து வாசகரை யோசிக்க வைக்கலாம். இன்னபிற...
தளபோட்சுத்ரி -பெயர்க்காரணம் தருக.
தளபோட்சுத்ரி -க்கு லிட்டரல் அர்த்தம் 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு எகத்தாளமாய் பதில் தருவது' என்று பொருள் கொள்ளலாம். மைக்கேல் மதன காமராஜனில் தீயணைப்பு வீரரான கமல் ஆறு லட்சத்தை லவட்டி விட்ட அவினாசியின் செயலை 'தளபோட்சுத்ரி' என்பார். முழு அர்த்தத்தையும் ஓரிரு வார்த்தைகளில் மறைமுக சொன்னாலும் எல்லாம் தெளிவாகவே விளங்கும். ஆனாலும் எழுத்து ஒற்றுமையை காரணம் காட்டி சப்பை கட்டலாம். இவ்வாறாக தளபோஸ்த்ரி பெயர்க்காரணம் கொள்ளப்படுகிறது.
இந்த வார தளபோட்சுத்ரி
......டுவென்டி20....நைட் ரைடர்ஸ்....சவ்ரவ் கங்குலி....ஏ கே கங்குலி....உயர் நீதி மன்றம்....உச்ச நீதிமன்றம்....நாடாளு மன்றம்....பிரதமர் பதவி.....ஜெயலலிதா...ஆச யார வுட்டுது....முதல்வர் பதவி.....பா.ம.க....மதுவிலக்கு.....கள்ளச்சாராயம்.....ஓசூர்...ஹோகனக்கள்.....வாட்டாள்...ரஜினிகாந்த்....பரட்டை.....பரட்டை அரசியல்....மருத்துவர் ராமதாஸ்......அன்புமணி ராமதாஸ்....AIIMS வேனுக்கோபால்.....பாப்பார பசங்கோ...சு.சாமி....டாக்டர் பூங்கோதை...ஆலடி அருணா....S. A. ராஜா...வடக்கன் குளம்....சாத்தான் குளம்...அப்துல் ஜப்பார்...கிரிக்கெட் கமெண்டரி....டுவென்டி20....
கொஞ்சம் பழைய தளபோட்சுத்ரி
இன்னொரு தளபோட்சுத்ரி
ஜ்யோவ்ராம் சுந்தர்
செந்தழல் ரவி
லக்கிலுக்
(இணைப்பு - மே 21, 2008)
தளபோட்சுத்ரி -யின் வரலாறு என்ன?
இன்றைய தேதியில் தளபோட்சுத்ரி ஒரு புதிய இலக்கிய வடிவமாக கொள்ள நேர்ந்தாலும் இதன் வரலாறு சங்க இலக்கியங்களில் தொடங்குகிறது. அந்தாதி வகை பாடல்கள் இவ்வாறனவை. அந்தாதியில் ஒவ்வொரு உருப்படியும் ஒரு பாடலாக அமையப்பெற்றிருக்கும். முந்தய பாடலின் கடைசிச்சொல்லும் அடுத்த பாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பாடுபொருளை கொண்டிருக்கும். முதல் கடைப்பாடல்கள் தமது மையக்கருத்தில் பெருத்த வேறுபாடுகளை கொண்டிராது. இதுவே தளபோட்சுத்ரி -யை அந்தாதியில் இருந்து வேறுபடுத்தி காட்டும்.
நிற்க, சூலை 2005 -ல் பதிவர் நாராயணன் தனது 'உருப்படாதது' என்ற வலைப்பூ -வில் 'கடை நவீனத்துவம்' என்னும் தலைப்பில் தளபோட்சுத்ரி -யை ஒத்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் உருப்படிகள் யாவும் வெறும் சொற்கள் அல்லது சொற்றொடர்களாக இல்லாமல் பத்திகளாக அமைந்த்திருக்கும். முந்தய பத்தியின் கடைசி வாக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் வேர்ச்சொல்லும் அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் வேர்ச்சொல்லும் ஒன்றாக இருக்கும். முதல் மற்றும் கடைசி பத்திகள் மட்டுமின்றி அடுத்தடுத்த பத்திகளும் வெவ்வேறு விசயங்களை பேசுவனவாகும்.
தளபோட்சுத்ரி -யின் இன்றைய வடிவத்தை பெரும்பான்மையாக ஒத்த ஒரு குறிப்பு ஒன்று மேலே குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டத்தில் காணக்கிடைக்கின்றது. பினாத்தல் சுரேஷ் என்ற பதிவர் இட்ட அந்த பின்னூட்டம் தளபோட்சுத்ரி -யின் இலக்கணங்களை ஒருவாறாக கொண்டிருக்கிறது.
....டிவி தொடர் மெட்டி ஒலியைப்பற்றியும், மெட்டி வாங்கிய வெள்ளி விலை பற்றியும், விலைவாசி ஏற்றத்தைப்பற்றியும், கிராம எற்றங்கள்.....
இவ்வாறாக தளபோட்சுத்ரி போதிய வரலாற்று பின்னணியை கொண்டிருப்பினும் எஞ்சிய வரலாற்றை வலைத்தளங்களை முறையாக ஆய்வதன் மூலம் கண்டெடுக்க முடியும்.
நன்றி: நாராயணன், பினாத்தல் சுரேஷ்
23 comments:
படிக்க புத்தகம் எடுத்துட்டு உட்கார்ந்தா, இப்படி எண்ணங்கள் சங்கிலிப் போல் தறிக்கெட்டு ஓடும். எங்கே ஆரம்பித்தோம், எங்கே நிற்கிறோம் என்று ஆச்சர்யமாக இருக்கும்.
புச்சா பேர் வைச்சா, நல்ல தமிழ் எழுத்து மட்டும் இருக்கிற மாதிரி வைக்கக்கூடாதா...
TBCD அவர்களே,
///இப்படி எண்ணங்கள் சங்கிலிப் போல் தறிக்கெட்டு ஓடும். எங்கே ஆரம்பித்தோம், எங்கே நிற்கிறோம் என்று ஆச்சர்யமாக இருக்கும்.////
சரி தான், நீகுழாயில்(youtube) ஒரு சாவி தேடலில்(key search) தொடங்கி இறுதியில் சம்பந்தமே இல்லாத சலனப்படத்தை அடைவது போல.
/////புச்சா பேர் வைச்சா, நல்ல தமிழ் எழுத்து மட்டும் இருக்கிற மாதிரி வைக்கக்கூடாதா...////
தமிழ் ஆர்வம் இருக்கும் அளவிற்கு தனித் தமிழில் ஆர்வம் அவ்வளவாக எனக்கு இல்லை. இது சும்மா தமாஷுக்கு...நிலைமை விரைவில் மாறலாம்.
மோகன் கந்தசாமி.
...புதுமையான வடிவம்...உயர்ரக இலக்கியத்திற்கு போட்டி...இலக்கிய பண்டிதர்கள்...இலக்கிய பண்டிதர்களை கேள்வி கேட்கும் டீக்கடை பார்ட்டிகள்...டாஸ்மாக் கடைகள்...யாரோ ஓர் எழுத்தாளனுக்காக சண்டை...இலக்கிய வார்டு...நர்ஸுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை...கணவனின் கோபம்...மன விரக்தி...கவிதை...பழசு போர்...தேவை புது வடிவம்...
ஹாய் sai ram,
பின்னூட்டமே ஒரு தளபோட்சுத்ரி -யா? அருமை அருமை!
மோகன், நல்ல ஆரம்பம். 2005-லியே இதற்கு முதலில் பிள்ளையார்சுழி போட்டவன் நான். வார்த்தைகளாக இல்லாமல், வாக்கியங்களாக நீளும். http://urpudathathu.blogspot.com/2005/07/blog-post.html
திரு நாராயன்,
பின்னூட்டத்திற்கும் செய்திக்கும் நன்றி. பதிவில் மாற்றம் செய்துள்ளேன்.
மீண்டும் வருக.
மோகன் தளபோட்சுத்ரி பற்றி மிக அழகாகவும் எளிமையாகவும்
நச்னு விளக்கியுள்ளீர்கள்
இது போன்ற பதிவுகளை நிறைய தொடர்ந்தால் என்னை போன்ற தற்குறி பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
///மோகன் தளபோட்சுத்ரி பற்றி மிக அழகாகவும் எளிமையாகவும்
நச்னு விளக்கியுள்ளீர்கள்////
நக்கல் தான!
//இது போன்ற பதிவுகளை நிறைய தொடர்ந்தால் என்னை போன்ற தற்குறி பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கும்///
என்ன கொடுமை இது அதிஷா? :-)
பின்னூட்டத்திற்கு நன்றி அதிஷா!
\\நக்கல் தான!\\
நண்பா ரொம்ப சீரியஸா சொன்னா ....
எனக்கு சத்தியமா இது போன்ற ஒரு விஷயம் இருக்குறதே இப்பதான் தெரியும்
இந்த மாதிரிலாம் புதிய இலக்கியத்த பத்தி யாரு எழுதறாங்க
அப்படியே எழுதிட்டாலும் யாருக்கு விளங்குது :(
எதோ உங்களாட்டம் சராசரி ஆளுங்க ( கொஞ்சம் நார்மலான ) சொன்னாதான் புரியுது. தயவு செஞ்சு இத கேலியா நினைக்காம இது மாதிரி மேட்டர்லாம் பதிவுல போடுங்க
////நக்கல் தான!//
நண்பா ரொம்ப சீரியஸா சொன்னா ....///
நான் friendly -யாத்தான் சொன்னேன் அதிஷா!, ஸ்மைலி போட மறந்துட்டேன். மன்னியுங்கள்.
பிறகு, நலமா?
;-)
சூப்பராகீறேன்
//பிரபலமான இலக்கிய வடிவங்களான கதை, கவிதை போன்றவற்றை போல தளபோட்சுத்ரி -யையும் ஒரு இலக்கிய வடிவமாக நான் பார்க்கிறேன். //
அழகாக விளக்கி இருக்கிறீர்கள். இப்பதிவை படிச்சவுடன் தான் தெரிகிறது,
"சாராயம்... துண்டுபீடி... குடிசை ...குப்பத்தொட்டி... பக்கத்துல டீக்கடை ...ரிக்ஷா ..மாஞ்சா" காதலன் படப்பாட்டு. ஷங்கரே எழுதினாராம் அந்தப் பாட்டை
புதிய செய்தி.நன்று.
மேலும் அறிய ஏதும் தொடர்புத் தரவுகள் தர முடியுமா?
காதலன் படத்தில் பேட்ட ராப் அப்படீன்னு ஒரு பாட்டு வரும். அதன் வரிகள் கொஞ்சம் இது மாதிரி இருக்கும்ன்னு நினைக்கறேன். மேற்கத்திய hip hop மாதிரி முயற்சி செய்யப்பட்ட பாட்டு அது :)
////அழகாக விளக்கி இருக்கிறீர்கள். இப்பதிவை படிச்சவுடன் தான் தெரிகிறது///
நன்றி திரு கோவி.கண்ணன்
///சாராயம்... துண்டுபீடி... குடிசை ...குப்பத்தொட்டி... பக்கத்துல டீக்கடை ...ரிக்ஷா ..மாஞ்சா" காதலன் படப்பாட்டு. ஷங்கரே எழுதினாராம் அந்தப் பாட்டை///
"அடித்தட்டு நகர மக்களின் வாழ்க்கைச் சூழல்" என்ற தீம் கொண்ட தளபோட்சுத்ரி இது என நீங்கள் கூறுவதை வழிமொழிகிறேன்.
/////புதிய செய்தி.நன்று.////
நன்றி திரு அறிவன்
////மேலும் அறிய ஏதும் தொடர்புத் தரவுகள் தர முடியுமா?////
தளபோட்சுத்ரி பல வடிவங்கங்களில் வெகு காலமாகவே இருந்துவருகிறது. இவ்வகை இலக்கியங்களுக்கு இருக்கும் பல பெயர்களில் "தளபோட்சுத்ரி" யும் ஒரு பெயர். "தளபோட்சுத்ரி" -யின் லிட்டரல் அர்த்தத்திற்கும் இவ்வகை இலக்கியங்களுக்கும் ஒற்றுமையிருப்பதாக நான் கருதியதால் இவற்றை அப்பெயரில் அழைக்கலானேன். எனினும் இப்பெயரையே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சொல்லிலக்கனத்தில் வெகுவாகவே காம்பரமைஸ் செய்துகொண்டுள்ள இவ்விலக்கியம் எழுதுவோருக்கு எக்கச் சக்க சுதந்திரம் தருகிறது. வாசகருக்கு பன்முக வாசிப்பு அனுபவத்தையும் இது தருகிறது (நன்றி: ஜ்யோவ்ராம் சுந்தர்). எனக்கு தெரிந்தவரையில் தளபோச்த்ரியை பதிவுகளில் பயன்படுத்தியோர் நாராயன், பினாத்தல் சுரேஷ், ஜ்யோவ்ராம் சுந்தர், செந்தழல் ரவி, லக்கிலுக் ஆகியோர் ஆவர். இவர்கள் தளபோச்த்ரியின் வலிமையையும் சுதந்தரத்தையும் உணர்ந்து முழுமையாக பயன்படுத்தியிருந்தாலும் முன்னமே "தளபோட்சுத்ரி" என்ற பெயரை இவ்விலக்கியத்துடன் இவர்கள் எவரும் இணைத்து பார்த்திருக்கவில்லை. "தளபோட்சுத்ரி - ஒரு புதிய இலக்கிய வடிவம்" என்ற எனது கட்டுரை பற்றி அவர்களுக்கு ஏதும் அப்போது தெரியாது. அவ்வகையில் இக்கட்டுரை பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று. அவ்வளவே. இந்நிலையில் தளபோட்சுத்ரி பற்றி மேலதிக தகவல் வேண்டுமானால் நானும் தேடித்தான் பார்க்கவேண்டும். எங்கேனும் தென்பட்டால் அவை எந்த பெயரில் அழைக்கப்பட்டது அதன் வடிவம் எவ்வாறு தளபோட்சுத்ரியுடன் ஒத்துப்போகிறது அல்லது மாறுபடுகிறது என அறிய முயல்வேன்.
தமிழை வளர்த்தவர்களைப்பற்றிய வரலாற்றில் தனியிடம் பிடித்துவிட்டீர்கள் மோகன் கந்தசாமி :) :)
வருகைக்கு நன்றி "வாய்ஸ் ஆன் விங்க்ஸ்"
////காதலன் படத்தில் பேட்ட ராப் அப்படீன்னு ஒரு பாட்டு வரும். அதன் வரிகள் கொஞ்சம் இது மாதிரி இருக்கும்ன்னு நினைக்கறேன். மேற்கத்திய hip hop மாதிரி முயற்சி செய்யப்பட்ட பாட்டு அது :)////
இவை ஒரு குறிப்பிட்ட பாடுபொருளை அல்லது தீம் -ஐ பற்றிய சொல்லாடல்கள், சொற்கள், சொற்றொடர்களை கொண்டுள்ள தளபோட்சுத்ரி -கள் என இப்போது உணர்கிறேன். அவ்வகையில், இவற்றில் பயன்படுத்தப்படுகின்ற எல்லா சொற்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவைதான். தளபோட்சுத்ரியில் ஏதேனும் இரு உருப்படிகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அளவைப்பொறுத்து ஒற்றுமையின் அளவு வேறுபடும். The less the distance between two items, the more the consistancy among them.
////தமிழை வளர்த்தவர்களைப்பற்றிய வரலாற்றில் தனியிடம் பிடித்துவிட்டீர்கள் மோகன் கந்தசாமி :) :)////
அய்யயோ! என்ன வுட்ருங்கோ! இனிமே இந்த தப்பெல்லாம் பண்ணமாட்டேன்! :-))))
நன்றி கயல்விழி
தள நாமக்கல் சிபி சிபிராஜ் ராஜ்குமார் வீரப்பன் சந்தனம் கேரளா போட் நதி சுழல் சுத்து கத்து பாடு சரிகம கமகம வாசம் சாப்பாடு அரிசி அவல் பொரி மொக்கை எகொஇச!
///தள நாமக்கல் சிபி சிபிராஜ் ராஜ்குமார் வீரப்பன் சந்தனம் கேரளா போட் நதி சுழல் சுத்து கத்து பாடு சரிகம கமகம வாசம் சாப்பாடு அரிசி அவல் பொரி மொக்கை எகொஇச!///
வாவ், புதிய டெக்னிக் ஒன்றை சேர்த்து (தள போட் சுத் ரி ) இன்ஸ்டன்ட்டா தந்த தளபோட்சுத்ரி -க்கு நன்றி இலவசம் சார்.
கலக்கிட்டீங்க நிறைய படிக்கனும் போலருக்கு.இதுக்கும் மொழிக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதாக தெரியவில்லை.என் நினைப்பு சரியா? ஏன்னா சங்கர் பாட்டு எதுனா கரீபீயன்ல சுட்டுருப்பாரோன்னு ஒரு கேள்வி வருது
////கலக்கிட்டீங்க நிறைய படிக்கனும் போலருக்கு.இதுக்கும் மொழிக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதாக தெரியவில்லை.என் நினைப்பு சரியா? ஏன்னா சங்கர் பாட்டு எதுனா கரீபீயன்ல சுட்டுருப்பாரோன்னு ஒரு கேள்வி வருது//
குடுகுடுப்பை சார்,
நலமா?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
Post a Comment