Wednesday, May 21, 2008

ஐம் சாரி, ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி அன்பார்சுநேட்லி!

·

நான் புலம் வந்த பிறகு இதுவரை தினமும் இதை இரு முறையாவது சொல்ல நேர்ந்திருக்கிறது. பெரும்பாலும் வட இந்திய 'தேசி' நண்பர்கள் எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் என்னிடம் இந்தியில் பேசதொடங்கும்போது எனக்கு எரிச்சல் தான் வரும். நாக்கின் நுனிவரை வரும் 'அன்பார்லிமேண்டரி' வார்த்தைகளை இடது புறம் திரும்பி லோ டெசிபலில் உமிழ்ந்துவிட்டு மீண்டும் ஒரு முறை சொல்வேன்,

"ஐம் சாரி, ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி, ஐ கஸ் யு நோ தட்". (ங்கோத்தா... )

"தட்ஸ் ஓகே, டோன்ட் வொறி"

(யாருக்குடா இப்ப 'வொறி', வென்று!) "...................."

"பட் ஸ்டில், யு ஆர் ஹியர் டூ இயர்ஸ் நவ் ரைட்"

(அதுக்கென்னடா இப்ப!) "யா, பட் ஐ நெவெர் பீல் லைக் ஐ ஹாவ் டு"

"வொய்?"

(வொய்யா, இதென்ன காசியாபாத் கடைவீதி -ன்னு நெனைச்சியாடா, பர்கர் மண்டையா?) "ஐ டோன்ட் நோ"

"ஐம் சாரி மென்..பெட்டர் லேர்ன் ஹிந்தி"

(யான்டா, இல்லன்னா சாமி கண்ணா குத்திடுமா?) "....................."

"யு நோ ஹிந்தி இஸ் அவர் நேசனல் லாங்குவேஜ்"

(சரி அதை அப்புறம் பாக்கலாம், இப்ப உனக்கு என்ன வேணும்?) "ஓகே, ஸீ ய லேட்டவ்"

இதன் பிறகு தமிழ் பற்றிய அவர்களின் வழக்கமான கிண்டல் எனக்கு புரியாத பக்கிரி பாஷையில்(அதாங்க ஹிந்தி...) அவர்களுக்குள் தொடரும். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளைக் காரன்களுடன் அமர்ந்து அந்த டோமர் பசங்களை அவர்கள் காது படவே, அவர்களும் புரிந்து கொள்ளும் மொழியில் விமர்சிப்பதுண்டு. ஒரு தமிழன் புதிதாக கிடைத்துவிட்டால் போதும், தேன் சொரியும் சென்னைத்தமிழில் கிளப்பி வைத்துவிடுவேன் அவர்கள் .....யில். காத்திருக்கிறேன், லெட்ஸ் ஸீ!.

9 comments:

ILA said...
May 21, 2008 at 3:35 PM  

:)

Mohan Kandasamy said...
May 21, 2008 at 4:13 PM  

Hi ila!,

{^|^}
`)^(`

Anonymous said...
May 21, 2008 at 6:27 PM  

இவனுக்கு ஆங்கிலமே தெரிந்தாலும் அதையும் இந்தி போலவே பேசுவான் ஆனா நாம இந்தி தெரியாததால ஆங்கிலத்துல பேசினால் இந்தியில் பதில் சொல்வான். இதுல அது நாட்டின் மொழி என்ற அடைமொழி வேற. இப்படி பட்டவர்களிடம் முதலில் ஆங்கிலத்தில் துவங்கி அவன் இந்திக்கு தாவும் போது தமிழில் பதில் சொல்ல அனைவரும் கத்துக்கொள்ளனும். அப்பதான் தெரியும் நம் நிலை அவனுக்கு.

பனிமலர்.

Mohan Kandasamy said...
May 21, 2008 at 6:41 PM  

நீங்க சொல்வது சரிதான் பனிமலர்,

இந்தி கத்துக்கணும்னு நினைச்சாக்கூட இவனுங்க பண்ற லோலாயால, அது வேணாம்னு தோனுது. ஸ்பானிஷ் கத்துக்கிட்டாலும் சத்யமா இந்தி கத்துக்க மாட்டேன்.

TBCD said...
May 21, 2008 at 8:35 PM  

குறைந்த பட்சம் இந்தி தேசிய மொழி இல்லை என்றாவது அவங்களிடம் சொல்லுங்க...

Mohan Kandasamy said...
May 21, 2008 at 8:54 PM  

Hi TBCD,

இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் தேசிய மொழி எனக்கூறுவதில்லை என்றும், அரசாங்கம் கூட பாலிசி என்ற அளவில் இந்தியை தேசிய மொழி என்கிறது என்றும் நான் அறிகிறேன். சட்டம் சொல்வதை மறுப்பதே குற்றம், அரசாங்கம் சொல்வதனைத்தையும் ஏற்க வேண்டியதில்லை. கான்ஷ்டிடூஷன் தந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சொறி நாய்கள் அரசாங்கம் சொல்வதை நாம் ஏற்பதில்லை என்றதும் நம் மீது விழுந்து புடுங்குகின்றன. விந்தைதான்.

Anonymous said...
May 22, 2008 at 5:29 AM  

-:). I had the same experience few years back. One day, when they asked something in Hindi, I replied in Tamil and then on they never spoke to me Hindi :)

Mohan Kandasamy said...
May 22, 2008 at 11:01 AM  

அனானிமஸ்,
ஒரு முறை முலாயம்சிங் யாதவின் ஹிந்தி கடிதத்திற்கு மலையாளத்தில் பதிலளித்திருந்தார் கேரள முதல்வர். சரியான பதிலடி, அல்லவா?
நன்றி.

rapp said...
May 22, 2008 at 2:54 PM  

மோகன் நீங்க சொன்னது 100% சரி. இங்கே(பாரிஸ்) நம்ம ஆளுங்கதான் ஜாஸ்தி. இங்கயே அவங்க வேலைய காமிப்பாங்க. உங்க பதிவிலயும் என் பதிவிலயும் விஷயம் வேறன்னாலும், ஹிந்தி கடுப்புதான் மேட்டர். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க.
http://vettiaapiser.blogspot.com/