ஹாலிவுட் நடிகர் அல் பச்சீனோ தொன்னூறுகளில் நடித்த ஒரு திரைப்படத்தில் நமது தற்போதைய தமிழக முதல்வருக்கு அறிவுரை கூறும் வகையில் வசனம் பேசியிருக்கிறார். ஆனால் அந்த அறிவுரை அப்படத்தின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு கூறுவதுபோல் அமைந்துள்ளது. எனினும், திமுக தலைவரை பற்றி நம்மைவிட ஒரு அமெரிக்க நடிகர் இவ்வளவு அழகாக அறிந்து வைத்துள்ளதும், முன்னுனர்ந்துள்ளதும் ஆச்சர்யமளிக்கிறது. அந்த வசனத்தை நம் வசனகர்த்தாவுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் மொழிபெயர்த்துள்ளேன்.
அந்த வசனம் "சென்ட் ஆப் எ உமன்" என்ற படத்தில் வருகிறது. ஒரு பள்ளி மாணவன், ஒரு குறும்புத்தனமான செய்கைக்காக குற்றம் சாட்டப்பட்ட தனது சக மாணவ நண்பர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல கோரப்படுகிறான். பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் தனது நண்பர்களை காட்டி கொடுக்க மறுக்கிறான். முதல்வரின் ஸ்காலர்ஷிப் என்ற ஆசை வார்த்தையும் அவன் மனதை அசைக்க வில்லை. அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கும் முடிவை குழுவுக்கு பரிந்துரைக்கிறார் பள்ளி முதல்வர். அதை எதிர்த்து அந்த மாணவனின் சார்பில் அல் பச்சீனோ பேசும் அந்த புகழ் பெற்ற வசனத்தில் நமது தமிழின தலைவருக்கும் சேர்த்து அறிவுரை கூறுகிறார்.
முதல்வர் - டிராஸ்க்
அல் பச்சீனோ - சிலேய்ட்
மாணவன் - சிம்ஸ் சார்லி.
முதல்வர்: திரு. சிம்ஸ், நீர் ஒரு நாடகக்காரர் மற்றும் பொய்யர்.
அல் பச்சீனோ: ஆனால், துரோகி இல்லை.
முதல்வர்: எக்ஸ் கியூஸ் மீ!
அல் பச்சீனோ: நோ. உங்களுக்கு தயவில்லை. இது ஒரு பீச்சட்டி வாதம்.
முதல்வர்: திரு. சிலேய்ட், உங்கள் வார்த்தையை அளந்து பேசுங்கள், நீங்கள் இருப்பது "பெயர்டு" பள்ளி. உங்கள் ராணுவ முகாம் இல்லை. திரு. சிம்ஸ், நீங்கள் பேச ஒரு இறுதி வாய்ப்பை தருகிறேன்.
அல் பச்சீனோ: திரு. சிம்ஸ் அதை விரும்பவில்லை. அவருக்கு எந்த பட்ட பெயரும் வேண்டாம். "பெயர்டு மாணவன்" -ஆக இருப்பதே போதும்.
என்ன கொடுமை இது? உங்கள் பள்ளியின் லட்சிய வாசகம் என்ன? "மாணவர்களே! உங்கள் நண்பர்களுக்கெல்லாம் தெரிவியுங்கள், உங்கள் உடம்புத் தோலை காப்பாற்றிக்கொள்ளுங்களென்று!, இல்லாவிட்டால் பொசுக்கி விடுவோம்" -இதுதானே நீங்கள் எச்சரிக்க விரும்புவது?
ரகசியம் வெளியாகி மலமாக நாறும்போது, சிலர் ஓட்டமெடுப்பார்கள், சிலர் எதிர்கொள்வார்கள். இங்கே சார்லி நெருப்பை நேருக்கு நேர் சந்திக்கிறான். அங்கே ஜார்ஜ் (மற்றொரு மாணவன்) அவனது அப்பாவின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொள்கிறான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஜார்ஜை பாராட்டுகிறோம். சார்லியை அரற்டுகிறோம்.
முதல்வர்: பேசி முடித்துவிட்டீர்களா சிலேய்ட்?
அல் பச்சீனோ: இல்லை, இப்போதுதான் தொடங்கியுள்ளேன்.
இங்கு யாரெல்லாம் படித்தார்கள் என்று தெரியவில்லை!! வில்லியம் ஹோவார்ட் டார்ஃப்ட், வில்லியம் ஜென்னிங், வில்லியம் டேல்... இன்னும் யாராரோவெல்லாம் படித்திருக்கட்டும். அந்த துடிப்பு இப்போது போய்விட்டது. இங்கே நீங்கள் கட்டிவருவது எலிகள் அண்டிய கப்பலைத்தான். காட்டிகொடுக்கும் பெருச்சாளிகள் பயணிக்கும் கப்பல் தான் அது. இந்த பிள்ளைகளுக்கு மனிதத்தை கற்றுத்தருகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அந்த என்னத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பள்ளி போதிப்பதாக கூறிக்கொள்ளும் அந்த அதிமுக்கிய நீதியையே நீங்கள் கொல்லுகிறீர்கள். என்ன சிறுமை அய்யா இது? என்ன மாதிரியான நாடகத்தை இன்று நடத்துகிறீர்கள்? இந்த நாடகத்தின் ஒரே சோக பாத்திரம், இதோ என்னருகில் அமர்ந்திருக்கிறது. இந்த சிறுவனின் ஆண்மை ஒர்மமானது. சமரசத்தை ஏற்காது. எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இங்கே ஒருவர் சார்லியை விலைக்கு வாங்க முயன்றார், அது யாரென்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சார்லி தன்னை விற்க மறுத்துவிட்டார்.
முதல்வர்: சார், நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்.
அல் பச்சீனோ: வரம்பு மீறலா? வரம்பு மீறலென்றால் என்ன வென்று உங்களுக்கு தெரியவில்லை மிஸ்டர் டிராஸ்க், அது என்னவென்று என்னால் காட்டமுடியும். ஆனால் எனக்கோ வயதாகிவிட்டது. ஓய்ந்துவிட்டேன். நான் இப்போது குருடன் வேறு. நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போதும் இருந்திருந்தால் இந்நேரம் இவ்விடத்தில் அனல் பறந்திருக்கும். இது வரம்பு மீறலாம்! யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர் தெரியுமா? எனக்கும் ஒருகாலத்தில் பார்வை இருந்தது. நானும் பார்த்திருக்கிறேன். இந்த சிறுவர்களைப் போல, இதைவிடவும் சிறிய பிள்ளைகள் சதைகள் தொங்க, தோள்கள் சாய்ந்து, கால்கள் ஓய்ந்து தண்டிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் உறுதி முடமாகிபோகவில்லை.
இந்த அற்புதமான ராணுவ சிறுவனின் வாலை சுருட்டி அவனது "ஆரிகன்" வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இல்லை, உண்மையில் இவனது ஆன்மாவை சிதைக்கிறீர்கள்.
முதல்வர்: நிறுத்துங்கள் திரு. சிலேய்ட்?
அல் பச்சீனோ: நான் இன்னும் முடிக்கவில்லை. நான் அரங்கில் நுழையும்போது, என் காதில் விழுந்தது, "தலைமைத்துவத்தின் தொட்டில்". எல்லாம் சரி, ஆனால் தொட்டிலின் மைய நான் முறிந்தால் தொட்டில் வீழும். இங்கே விழுந்தே விட்டது. மனிதர்களை வார்ப்பவர்களே, தலைவர்களை உருவாக்குபவர்களே! எந்த மாதிரியான தலைவர்களை இங்கே உருவாக்குகிறீர்கள் என சிந்தியுங்கள்.
இன்று காட்டிகொடுக்க மறுக்கும் சார்லியின் மவுனம் சரியா தவறா என்று எனக்கு தெரியாது. நான் நீதிமான் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரியும். தன் சுயநலத்திற்காக இவன் யாரையும் விற்க மாட்டான். அதற்குப் பெயர்தான் ஓர்மம். அதுதான் வீரம். அதுதான் தலைவர்களை உருவாக்கும்.
எனது வாழ்க்கையில் மிக குழப்பமான நெருக்கடிகளை சந்தித்துளேன். அப்போதெல்லாம் நான் தேர்ந்தெடுக்கவேண்டிய பாதை எதுவென்று எனக்கு நன்றாகவே தெரியும். சந்தேகமில்லாமில்லாமல் தெரியும். ஆனால் நான் அப்பாதையை தேர்ந்தெடுக்க வில்லை. ஏன் தெரியுமா? அப்பாதை மிகக் கடினமானது. இப்போது சார்லியும் நெருக்கடியில்தான் இருக்கிறான். இவனும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளான். மிகச்சரியான பாதை. கொள்கைகளால் ஆன பாதை. நடத்தையான பாதை. அவனது பயணம் தொடர வேண்டும். இவனது எதிகாலம் உங்கள் கையில் உள்ளது. விலைமதிப்பற்ற எதிர்காலம் அது. நம்புங்கள்!. அதை அழித்துவிடாதீர்கள். அதை காப்பாற்றுங்கள்! ஆதரவளியுங்கள்! ஒருநாள் உங்களுக்கு அது பெருமை சேர்க்கும். நான் உறுதியாகச் சொல்கிறேன்.
இந்த உரைக்குப் பின், பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில், நல்ல முடிவை ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிக்கிறது.
இது முழுக்கவும் தற்போது வாளாவிருக்கும் தமிழக முதல்வருக்கு அல் பச்சீனோ தரும் அறிவுரையாக கொள்ள முடியும்.